பொதுவாக நம் நாட்டில் இருக்கும்போது நான் திரைப்படங்களோ அல்லது நெடுந்தொடர்களோ அதிகம் பார்ப்பது இல்லை. சாயங்காலம் ஒரு ஒன்றரை மணி நேரம் அது என்னவாக இருந்தாலும் பார்த்துத் "தொலைப்பதை" (இஃகி,இஃகி) ஒரு கடமையாக ஆற்றி வருகிறேன். ஆனால் இங்கே வந்தால் அரிய படங்கள், அரிய தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பார்ப்பேன். பார்ப்பது மத்தியான நேரங்களில் தான். இங்கே மத்தியானம் அதிகம் வேலை இருக்காது. கிடைக்கும் இரண்டு மணி நேரத்தில் அப்படிப் பார்த்த படங்களில் சிலவற்றுக்குத் தான் விமரிசனம் எழுதினேன். அதைத் தவிரவும் ஸ்பெஷல் 26, ரோமியோ,அக்பர், வால்டர், பர்ஃபி, கேசரி ஆகிய படங்கள். இவற்றில் ஸ்பெஷல் 26 சிபிஐ அதிகாரிகளாக நடித்துக் கொள்ளை அடிக்கும் இரு நண்பர்கள் ஆன அஜய் சிங், பி.கே.ஷர்மா ஆகியோரைப் பற்றியும் அவர்கள் கொள்ளை அடிக்கும் விதமும் பற்றி. அஜய்சிங்காக அக்ஷய் குமாரும், பி.கே.ஷர்மாவாக அனுபம் கேரும் நடித்திருக்கிறார்கள். காஜல் அகர்வால் அஜய்சிங் அக்ஷய் குமாரைக் காதலிக்கும் பெண்ணாக வருகிறார்.
அவரை விளம்பரப் படங்களில் தான் பார்த்திருக்கேனே தவிர்த்து நடித்த படம் எனப் பார்த்தது இது ஒன்று தான். இவர்களைச் சிக்கவைக்கும் சிபிஐ அதிகாரி வாசீம் கானாக வருபவர் மனோஜ் வாஜ்பேய். நன்றாகத் திட்டம் போடுகிறார் தன் கூடவே இருப்பது யார் எனத் தெரியாமல். கடைசியில் அவர் போட்ட திட்டம் எதிராளிகளுக்கு நன்றாகப் பலன் அளிக்க, சிபிஐ குற்றவாளிகளைக் கண்டறியும் வேளையில் பி.கே. ஷர்மாவும், அஜய் சிங்கும் அவரவர் மனைவியுடன் ஷார்ஜாவில் நடக்கும் கிரிக்கெட் விளையாட்டைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர். நடக்கும் விஷயம் தான். சொல்லிப் போயிருக்கும் விதம் அருமை. 2013 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இந்தப் படம் கொஞ்சம் நகைச்சுவைக்காட்சிகளோடு இருக்கிறது. அதிலும் அனுபம் கேர் வரிசையாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வது! இஃகி,இஃகி!
அடுத்து 2019 ஆம் வருஷம் வெளியான ரோமியோ, அக்பர், வால்டர் படம் கிட்டத்தட்ட "ராஜி" மாதிரித் தான். ஆனால் இங்கே உளவு பார்க்கச் செல்லுவது வங்கி ஒன்றில் வேலை பார்த்து "ரா"வால் உளவு பார்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆண்மகன். தந்தை ராணுவ வீரர் ஆனாலும் அவர் தாய்க்கு அவர் ராணுவத்தில் சேர்வது பிடிக்கவில்லை என்பதால் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். தற்செயலாக அவர் வங்கியில் நடக்கும் ஓர் கொள்ளையை அடக்கப் போய், அந்தக் கொள்ளையே ஓர் நாடகம் என்றும் அவர் உளவாளிப் பயிற்சிக்குத் தக்கவாரா எனப் பார்க்க நடந்தது என்றும் பின்னால் தெரிய வருகிறது. தாயிடம் தான் வேலை நிமித்தம் பயிற்சிக்குப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறார். அங்கேயே முழுக்க முழுக்கப் பாகிஸ்தானியாகவே ஆகி விடுகிறார். இதில் ஜான் அப்ரஹாம் ரோமியோவாக வருகிறார். "ரா"வின் தலைமைப் பீடத்தில் ஸ்ரீகாந்த் ராயாக வருபவர் ஜாக்கி ஷெராஃப்.
கதைக்களம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எழுபத்தி ஒன்றாம் ஆண்டு நடந்த போர். கிழக்கு வங்காளம் எனப்படும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தங்களை ஆண்ட மேற்கு பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற நடத்திய போராட்டத்தின் அடிப்படையில். பாகிஸ்தான் எப்படி இந்தியாவைத் திடீர்த் தாக்குதல் நடத்த முயன்றது என்பதில் இருந்து பங்களா தேஷாக ஆகப் போகும் நாட்டின் மக்களை இந்தியா எப்படி விடுவித்தது என்பது வரை அழகாய்த் திட்டம் போட்டு நடத்துவதைக் காட்டுகிறார்கள். நமக்கு தேசபக்தி அதிகமா? ரத்தம் ஒரே கொதி! அடக்கி வைச்சேன். நல்ல படம். கட்டாயமாய்ப் பார்க்கலாம். புத்தம்புதுப்படம்!
அடுத்தது பர்ஃபி. 2012 ஆம் ஆண்டில் வந்திருக்கிறது. இதில் வாய் பேசமுடியாத காது கேட்காத இளைஞனுக்கும், ஆடிஸம் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் நேசம். மகத்தானதொரு காவியம். ஆடிஸம் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக வருபவர் (ஜில்மில் என்னும் பெயர்) ப்ரியங்கா சோப்ரா. ரிஷி கபூரின் பிள்ளை ரன்பீர் கபூர் காது கேட்காத வாய் பேச முடியாத பர்ஃபி. இருவரும் கடைசி வரை ஒன்றாக இருந்து கடைசி நிமிடங்களில் கூடப் பிரியாமல் இருப்பது தான் முக்கியக் கரு. நடுவில் பர்ஃபியைக் காதலிக்கும் (ஒருதலைப்பட்சமாக என்றாலும் பர்ஃபி அந்தக் காதலை அங்கீகரிக்கிறான்.)பெண்ணாக வரும் இலியான டீ க்ரூஸ். அவரும் வங்காளப் பெண்ணாக நன்றாகவே நடிக்கிறார். பணத்துக்காக (ஜில்மில்) மனநிலை சரியில்லாத பெண்ணைக் கடத்தி ஒளித்து வைத்துவிட்டு இறந்து விட்டதாகப் பொய் சொல்லும் பெண்ணின் தந்தையாக வருபவர் ஆஷீஷ் வித்யார்த்தி. எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். ரன்பீர் கபூருக்கு ராஜ்கபூரின் உடல் மொழி நன்றாக வசப்பட்டிருக்கிறது. படம் பார்க்கலாம்.
அடுத்து கேசரி. இஃகி,இஃகி, சாப்பிடற கேசரியை நினைச்சால் அதை நிறுத்துங்க. இந்தப் படமும் 2019 ஆம் ஆண்டில் தான் வந்துள்ளது. சீக்கியர்களின் பகடி(தலைப்பாகை) கேசரி நிறத்தில் இருக்கும். அந்தப் பகடியை மற்றொருவர் தொட விட மாட்டார்கள். இந்தக் கதை ஆரம்பக் கால பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ராணுவத்தில் இருந்த சிக் ரெஜிமென்டில் இருந்த சீக்கியர்கள் சிலரைக் குறித்தும் அவர்கள் தலைவன் ஹவில்தார் (இஷார்சிங்காய் நடிக்கும் அக்ஷய் குமார்) பற்றியும் கதை. இந்திய ஆஃப்கன் எல்லைப் பகுதியில் நடக்கும் கதை. ஆஃப்கன் பதான்கள் கூட்டமாக வந்து இவர்களைத் தாக்குவதையும் கோட்டையை எரித்து அழித்து நாசமாக்குவதையும் பார்த்தால் மனம் பதறுகிறது. பதான்கள் எல்லோரையும் கொன்று விட்டாலும் இஷார்சிங்குக்குக் கொடுத்த வாக்கின்படி எந்த சர்தாரின் பகடியையும் தொடவில்லை. பகடியோடேயே அவர்களை விட்டு விடுகிறான். இவர்களின் வீரத்தைக்கேலி செய்யும் ஆங்கிலேய ராணுவ அதிகாரி பின்னால் இவர்களின் வீரத்தை உணர்கிறான். இவர்கள் தியாகத்தால் அருகே இருக்கும் மற்ற இரு கோட்டைகள் காப்பாற்றப்படுகிறது. பிரிட்டிஷ் அரசு பாரளுமன்றத்தில் இவர்களுக்காக2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியதாகவும் இவர்களுக்கு Indian Order of Merit (equal to விக்டோரியா க்ராஸ்) பட்டம் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இது சரித்திரம்.
படங்களுக்கு நன்றி கூகிளார்
இப்போது தினம் கொஞ்சம் கொஞ்சமாகப்பார்ப்பது தி க்ரவுன் என்னும் நெடுந்தொடர். தற்போதைய ராணி எலிசபத்தின் கதை! அவர் உயிருடன் இருக்கும்போதே படமாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் உண்மை நிகழ்வுகள். ராணியின் திருமணம், கணவர் ஃபிலிப்புடனான வாழ்க்கை, இருவருக்கும் எற்படும் மனத்தாங்கல்கள், ராணியாவதற்கு முன் ஏற்படும் பிரச்னைகள், குடும்பத்தில் ஏற்படும் கோளாறுகள், தங்கை மார்கரெட்டால் அவள் காதலால் ஏற்படும் சிக்கல்கள் என அணு அணுவாக விவரித்திருக்கிறார்கள். ராணியின் முடி சூட்டு விழாவில் ராணியின் கணவர் ஃபிலிப் ராணிக்கு எதிரே மண்டியிட வேண்டும் என்று சொல்லுவதும் முதலில் மறுக்கும் எடின்பரோ கோமகன் பின்னர் எலிசபெத் மனைவியாக இல்லை, இப்போது இது ராணியின் உத்தரவு எனச் சொன்னதும் மண்டி இட்டு வணங்குவதும் அருமை. ஒரு ராணியாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதும் நிர்வாகம் சுலபம் அல்ல என்பதும், பிரபுக்கள் சபையிலும், சாமானியர்கள் தலைவர்களுக்கும் ஏற்படும் மோதலும் சர்ச்சிலின் மேல் நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வர அப்போது லண்டனில் ஏற்பட்ட பனியையும் அதன் மூலம் ஏற்பட்ட குழப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகளும்! அருமை என்று சொன்னால் போதாது. என்ன இருந்தாலும் அவங்கல்லாம் இயல்பாகவும் துணிச்சலாகவும் உள்ளதை உள்ளபடிச் சொல்லிப் படம் எடுப்பது போல் நமக்கு வராது! "பொன்னியின் செல்வன்" எல்லாம் நல்லவேளையா எடுக்கலை. பிழைச்சோம். இங்கே உடையிலிருந்து ஆபரணங்கள் வரை எல்லாவற்றையும் நுணுக்கமாகக் கவனித்து எடுத்திருக்கிறார்கள்.
வெஸ்ட் மினிஸ்டர் அபே, பக்கிங்காம் அரண்மனை எல்லாம் உண்மையானது போலவே அமைப்பு! பிரமிப்பாக இருக்கிறது. நடிப்பும் இயல்பாக வந்திருக்கிறது. அனைவரும் அவரவர் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அரண்மனையின் ஒரு பகுதியில் வசிக்கும் இளவரசி மார்கரெட் இன்னொரு பகுதியில் வசிக்கும் தன் அக்கா ராணி எலிசபெத்தைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வது அந்தக் காலங்களில் தொலைபேசி இணைப்பை எப்படிக் கொடுத்திருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவருகிறது. ராணியின் முடிசூட்டு விழா தொலைக்காட்சியில் (அங்கே அப்போவே வந்திருக்கு) ஒளி பரப்பலாமா என்பதற்கான சர்ச்சை!
பின்னர் தன் பெரியப்பா வின்ட்சர் கோமகன், (பட்டத்தைக் காதலுக்காகத் துறந்தவர்) எட்வர்ட் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆர்ச் பிஷப்பிடம் சொல்லி அனுமதி வாங்கும் இடம், தன் பெரியப்பாவுக்கு மட்டும் முடிசூட்டு விழாவுக்கு அழைப்பு அனுப்புவதும், அவர் மனைவிக்கு அழைப்பு அனுப்பாமல் இருப்பதும் கண்டு வருந்துவது, ஆனால் தன்னால் ஏதும் செய்ய முடியாமல் இருப்பது. கடைசியில் வின்ட்சர் கோமகன் தன் மனைவியை மதிக்காத இடத்தில் தனக்கும் வேலை இல்லை என்று சொல்லி முடிசூட்டு விழாவுக்கு வர மறுப்பது! வின்ஸ்டன் சர்ச்சில் லார்ட் மவுன்ட்பேட்டனைச் செய்யும் கிண்டல், "இந்தியாவைக் கொடுக்கும்போது மனைவியையும் சேர்த்துக் கொடுத்துவிட்டான்" என்று சொல்கிறார். எதைச் சொல்லுவது! எதை விடுவது! சரித்திரமே அங்கே படமாகிக் கொண்டிருக்கிறது.

வணக்கம் சகோதரி
ReplyDeleteஎப்போதுமே நம் வீட்டை விட்டு வேறிடம் சென்று தங்கும் போதுதான் நிறைய படங்கள் பார்க்கும் எண்ணமும் வரும் போலிருக்கிறது. நானும் எந்த படங்களும், தொ(ல்)லை காட்சி தொடர்களும் பார்ப்பதேயில்லை. ஆறேழு வருடங்களுக்கு முன்பு கூட ஒரே ஒரு தொடர் பார்த்து வந்தேன். அதன் முடிவை வளைத்து, வளைத்து இழுத்துச் சென்ற வெறுப்பில், இனி எந்த தொடரும் பார்ப்பதில்லை என வைராக்கியமே எனக்கு வந்து விட்டது.
இங்கிருக்கும் போது தாங்கள் கடமையாக மாலைப் பொழுதில் பார்த்து "தொலைப்பது" என்னவோ?ஹா.ஹா.. படவிமர்சனங்கள் அழகாக உள்ளது. முதல் படவிமர்சனம் அழகாக தந்துள்ளீர்கள். கதைகளை நினைவில் வைத்துக் கொண்டு அழகாக விமர்சனம் செய்கிறீர்கள்.உங்கள் விமர்சனங்களை படித்தாலே படம் பார்க்கும் திருப்தி எனக்கு வந்து விடுகிறது. நீங்கள் தந்திருக்கும் பாக்கிப் படங்களையும் நிதானமாக படித்து (பார்த்து) விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, எங்களுக்கு முன்னால் கேபிள் இருந்தப்போ வந்த சில சானல்கள் இப்போ செட் டாப் பாக்ஸில் வருவதில்லை. இது எஸ்சிவியின் செட் டாப் பாக்ஸ் வேறே. ஆகவே சன் தொலைக்காட்சி கட்டாயமாய் வரும். ஆனால் பணம் கட்டணும் போல! அதைத் தவிர்த்து இலவசச் சானல்கள் சிலதும் வரும். நம்மவர் சன்னில் வரும் சில தொடர்களை மட்டும் பார்ப்பதால் அப்போது நானும் உட்கார்ந்து பார்ப்பேன். சில தொடர்கள் இழுத்தடிப்பது எரிச்சல் தான் வருகிறது.
Deleteஇதில் எனக்கு பர்ஃபி, கேசரி இரண்டும் பிடிக்கும் சிறுவயதிலிருந்து விரும்பி சாப்பிடுவேன்.
ReplyDelete//அவரை விளம்பரப் படங்களில் தான் பார்த்திருக்கேனே தவிர்த்து நடித்த படம் எனப் பார்த்தது இது ஒன்று தான்//
ஹா... ஹா... இவரை விளம்பர கலைஞர் என்றே சொல்லலாம்.
விமர்சனங்கள் அருமையாக இருக்கிறது. ஓசியில் படம் பார்த்தேன்.
வாங்க கில்லர்ஜி, டூத் பேஸ்ட் விளம்பரம்னாலே காஜல் அகர்வால் தான் நினைவில் வருவார். எனக்கு பர்ஃபி, கேசரி மட்டுமில்லாமல் எல்லா இனிப்புக்களுமே பிடிக்கும். ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
Deleteயாரையும் காணோமே, ஸ்ரீராம் கூடக் காணோம். எல்லோரும் இது பழைய பதிவுனு நினைச்சுட்டாங்களோ?????????????????
ReplyDelete/ஸ்ரீராம் கூடக் காணோம்.//
Deleteஅதிரா ஞாயிறுகளில் எங்கும் வெளிய வருவதில்லை. துரை செல்வராஜூ ஸாருக்கு அவ்வப்போது இணையம் படுத்துகிறது போல. கீதா ரெங்கனுக்கு கணினி சரியாகவில்லை! எனக்கு அலுவலக வேலை நெட்டி வாங்குகிறது. காலை முதல் எழுந்திருக்காமல் வேலை. நடுவில் இந்தப் பக்கம் ஒரு சிறு விஜயம்!
அது உண்மைதான், போஸ்ட் செக்கிங்கூடப் பண்ண மறந்துவிடுகிறேன், எங்காவது ஏதும் கண்ணில் பட்டால் அல்லது ஆராவது சொன்னால்தான் திடுக்கிட்டு ஓடிவருவேன், எங்கள் புளொக்கில் அந்த தொடர்தான் போகும் என்பதால் எதையும் செக் பண்ணுவதில்லை..
Delete@Sriram, வாங்க ஸ்ரீராம், இடிதாங்கிக்கு ஞாயிற்றுக்கிழமை எனில் என்ன பிரச்னையாம்? அன்னிக்கு பதிவுகளுக்கும் விடுமுறையா? கீதா ரெங்கன் சென்னை வந்திருப்பதாகச் சொன்னார். துரைக்குத் தான் இணையம், அலுவல் வேலை எல்லாமே பிரச்னைதானே!
Deleteஎன்ன இடிதாங்கி, ஞாயிற்றுக்கிழமைனால் அன்னிக்கு எல்லாத்துக்கும் ஓய்வா? எஞ்சாய்!
Deleteஅந்த சி பி ஐ படம் போல சூர்யா நடித்து ஏதோ தமிழ்ப்படம் இருக்கிறது போலவே... சூர்யாவா, கார்த்தியா? ஏதோ பார்த்த நினைவு. யாரூரு சீனியர் நடிகையும் கூட நடிப்பார்.
ReplyDeleteசூரியா நடிச்சது நான் பார்த்ததில் நினைவில் இருப்பது "கஜினி"மட்டும், தொலைக்காட்சி தயவில். மற்றபடி அக்னி நக்ஷத்திரம், ஃப்ரண்ட்ஸ், இன்னொரு மணிரத்தினம் படம் ஆகியவை தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். மற்றபடி அத்தனை பார்த்தது இல்லை. எல்லோரும் "காக்க காக்க" ரொம்பச் சொல்லுவாங்க. நாங்க பார்த்தது இல்லை.
Delete"கஜினி"மட்டும்,// கஜினி மற்றும்
Deleteகேசரி, பர்பி என்று பல படங்கள் பார்த்துத்தள்ளி, விமர்சனமும் எழுதி விட்டீர்கள்! இவ்வளவு படங்களின் கதையையும் ஞாபகம் வைத்துக்கொண்டு எழுதி இருப்பதே சிறப்பு.
ReplyDelete@Sriram, எல்லாப்படங்களும் கடந்த வாரங்களில் பார்த்தவை. கேசரி, பர்ஃபி என்றால் சாப்பிடத் தான் நினைவு வருது. ஆனால் பர்ஃபி படத்தில் ஹீரோ ரன்பீர்கபூருக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது எனில் அவர் சின்ன வயசில் (அதாவது திரைப்படத்தில் சின்ன வயசில்) மர்ஃபி குழந்தை மாதிரி இருப்பாராம். மர்ஃபி எனச் சொல்லவராமல் பர்ஃபி என்றே பழகிவிட்டாராம். கேசரி படப் பெயர் அந்த நிறப் பகடிக்காக! காவி நிறப் பகடி சீக்கியர்களின் உயிர்.எதிரி அதைத் தொட்டால் மானமே போய்விட்டாற்போல் நினைப்பார்கள். நம் மூவர்ணக்கொடிக்கும் முதலில் வருவது கேசரி நிறம் தானே!
Deleteபார்த்த படங்களை இரண்டு மூன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். கதையை ஒரு பாட்டிலில் போட்டு நன்கு குலுக்குங்கள். அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டுங்கள். புதிய கதை கிடைத்தால் கேவாபோவுக்கு எழுதி அனுப்புங்கள்!
ReplyDeleteநிறையத் தோன்றியது. ஆனால் குறிப்பெல்லாம் வைச்சுக்கலை. மறுபடி நினைவு வருதானு பார்க்கணும். எனக்குக் கற்பனை வளமே இல்லை.
Deletebarfi ,கேசரின்னு ஒரே ஸ்வீட்ட்டா படம் பார்த்திருக்கீங்க :)ரன்பீரின் saawariya தான் நான் முதலில் பார்த்தது முதல் படத்திலேயே நல்ல நடிப்பு ..barfi பார்க்கணும் ..தி கிரவுன் அப்பப்போ பார்ப்பது .நீங்க மலையாள படங்கள் பார்ப்பதில்லையா ? அதுவும் நல்லா இருக்கும் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க
ReplyDelete@Angel, நான் ரன்பீரின் படங்கள் ஏதும் பார்த்ததில்லை. பர்ஃபி பாருங்க கட்டாயமாய்! பொண்ணு யப் ஃப்ளிக்ஸ் வாங்கி இருப்பதே எங்களுக்காகத் தான். அதிலே தமிழ்ப்படங்கள் பார்க்கனு அவங்க போட்டுப் பார்ப்பதில்லை. ஆகவே எனக்காக நான் கேட்பதில்லை. "மெய்" படம் மட்டும் பாதி பார்த்ததால் போடச் சொல்லிக் கேட்டேன். மலையாளப்படங்கள் பையர் வீட்டில் பார்க்கலாம். அங்கே போனதும் பார்க்க முயற்சி செய்யறேன்.
Delete"காற்றின் மொழி" தமிழில் வந்து இருக்கு, ஆனால் நான் மலையாள மனோராமவில் பார்த்தேன், நன்றாக இருக்கிறது படம்.
Deleteமுடிந்தால் பாருங்கள்.
வாங்க கோமதி, நீங்க சொன்ன படம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் இங்கே அதிகம் தமிழ்ப்படங்கள் பார்க்க முடியறதில்லை.
Deleteஆஆ போஸ்ட் பக்கம் செக் பண்ண மறந்திட்டேன், பழைய போஸ்ட்டிலேயே நின்றிட்டேன்:)..
ReplyDelete//அதிலும் அனுபம் கேர் வரிசையாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வது! இஃகி,இஃகி!
//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
அதுசரி கீசாக்கா நீங்க அந்தக் ஹிந்திப் படத்தை ராஜி என்கிறீங்க.. அது ராசி இல்லையோ?
இடிதாங்கி அதிரா, அதை ஆங்கிலத்தில் எழுதினால் RAAZI இப்படி வரும். ஆகவே ராஜி என்றே சொன்னேன்.
Delete//நமக்கு தேசபக்தி அதிகமா? ரத்தம் ஒரே கொதி! அடக்கி வைச்சேன். //
ReplyDeleteஹா ஹா ஹா கீசாக்கா இந்தியா திரும்பும்வரை அப்பூடியே அடக்க்க்க்க்கி வைங்கோ:))
அடக்கித்தான் வைச்சுட்டு இருக்கேன் இடிதாங்கி!
Delete//இருக்கையிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது//
ReplyDeleteஇந்த இருக்கையிலேயே/ என்பதற்கு ரெண்டு அர்த்தம் இருக்குதெல்லோ.. அதனால ஒருகணம் குழம்பிட்டேன்.. ஹா ஹா ஹா கொண்டினியூ பண்ணுங்கோ உங்கள் தொடரை.
அடக்கித் தான் வைச்சிருக்கேன் இடிதாங்கி, ஆனால் அது அவ்வப்போது நான் இருக்கேன்னு தலை காட்டுது!:))))) "இருக்கையிலேயே" திருத்தி எழுதிட்டேன். நன்னி ஹை!
Deleteஅடடா. இத்தனை படங்கள் பார்த்து விட்டீர்களா. பார்ஃபி எனக்கும் பிடித்தது. நீங்கள் சொல்லி இருக்கும் மற்ற படங்களை ஸ்விஸ் சென்று தான் பார்க்க வேண்டும். ராஸ் என்று ஒரு படம் வந்திருக்கிறது அதையும் பாருங்கள் .நல்ல கதை நல்ல நடிப்பு.
ReplyDeleteநன்றி கீதா மா.
வாங்க வல்லி, ராஸ் "மஹேஷ் பட்" குடும்பத்துப் படம் இல்லையோ? அதிலேயே ராஸ் 1, ராஸ் 2, ராஸ் 3 என இருக்கின்றன போல. பார்ப்போம். ராஸ் 1 பார்க்க முடிகிறதானு!
Deleteநிறைய புதிய படங்கள் (எனக்கு) அறிமுகம் செய்யறீங்க.... பார்க்கவேண்டும். ஹாட்ஸ்டார், அமேசானில் இருக்கும் என்றால் தெரியப்படுத்தவும்.
ReplyDeleteஅமேசானில் தேடிப்பாருங்கள் நெல்லைத்தமிழரே! ஹாட் ஸ்டார் பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது. இங்கே அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், இப்போ எங்களுக்காக யப் ஃப்ளிக்ஸ்
Deleteநிறைய படங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது தேர்ந்து எடுத்து பார்க்கிறீர்கள்.
ReplyDeleteபழைய இந்தி சினிமா கிடைத்தால் பாருங்கள் அதில் பாடல்களும் நன்றாக இருக்கும்.
வாங்க கோமதி, பழைய இந்திப்படங்கள் அநேகமாகப் பார்த்திருப்பேன். போன முறை வந்தப்போவும் நல்ல இந்திப்படங்கள் பலவும் பார்த்தேன். அதோடு முன்னால் எல்லாம் கேபிள் இருந்ததால் சோனியில், ஜீ சினிமாவில் எனத் தேடித் தேடிப் பார்த்திருக்கேன். சில சமயம் ஸ்டாரிலும் பார்க்க முடியும். இப்போ செட் டாப் பாக்ஸில் அதெல்லாம் இல்லை. என்ன சானல் இருக்கு என்றே தெரியறதில்லை. நாங்க பார்ப்பது பொதிகை, சன், பாலிமர், தந்தி மற்றும் ஆங்கில, தமிழ், ஹிந்தி செய்திச் சானல்கள். இங்கே எங்களுக்காக யப் ஃப்ளிக்ஸ் கனெக்ஷன் வாங்கி இருக்காங்க. அதில் தான் சன் மற்ற சானல்கள் வரும் பொதிகை, மக்கள் தவிர்த்து.
Delete