இவன் தான் மோதி! மோதி பற்றி இங்கே படிக்கலாம்.
இவன் தான் மோதி! கொஞ்ச நாட்களாகச் செல்லங்கள் பற்றியும், அவற்றை வளர்த்தவர்களின் அனுபவங்களும் அதன் பிரிவுகளுமான பதிவுகளை ஃபேஸ்புக்கில் நிறையப் பார்க்க முடிந்தது. அதற்கேற்றார்போல் மதுரைத் தமிழர் எங்க பொண்ணு நாய் வளர்ப்பதைப் பற்றித் தெரிந்ததும் கருத்துச் சொல்லி இருந்தார். அப்போ நாங்க வளர்த்த கடைசி நாயான மோதி பற்றி எழுதியதன் சுட்டி அவருக்குக் கொடுத்திருந்தேன். இன்று ஃபேஸ் புக்கில் ஒருவர் 13 வருஷம் அவர் வளர்த்த நாய் பற்றியும் அது இறந்தது குறித்தும் எழுதி இருந்தார். உடனே எனக்கும் மோதி நினைவு வந்தது. அநேகமாய் ஒவ்வொரு டிசம்பரிலும் மோதி நினைவு வரும். 98 டிசம்பர் 16 ஆம் தேதி தான் (மார்கழி ஒன்றாம் தேதி) அதிகாலை நாலரை மணி அளவில் மோதி தன் உயிரின் கடைசி மூச்சை விட்டது.
எல்லாம் பழங்கதை! என்ன செய்ய முடியும். அதன் பின்னர் இன்னொரு குட்டியைக் கொண்டு வந்து அதுவும் என்னை விட்டுப் பிரிய அடம் பிடிக்கவே எல்லோருக்கும் பயம் வந்து அதைக் கொண்டு விட்டு விட்டோம். அதன் பின்னர் செல்லமே வேண்டாம்னு விட்டுட்டோம். இப்போப் பொண்ணு நாய் வளர்க்கிறாள். அதன் படங்கள் கீழே போடுகிறேன். நல்ல உயரம். எட்டு மாதங்களோ, பத்து மாதங்களோ ஆவதாய்ச் சொன்னாள். பக்கத்திலேயே அதற்கான டே கேர் இருப்பதால் கொஞ்சம் பிரச்னை என்றாலும் அங்கே அழைத்துச் செல்கிறாள். எல்லோருமாய் வெளியே செல்லும்போது அந்த டே கேரில் விட்டுவிட்டுச் செல்கிறாள். இன்னைக்கும் வெளியே போனோம். நாயின் பெயர் ஷேன். அதைக் காலையிலேயே டே கேரில் விட்டாச்சு. இங்குள்ள நாய் என்பதால் அதற்கு இதெல்லாம் பழகி விட்டது போலும். அதிகம் கத்தவில்லை. மற்றபடி அதைச் சமாளிப்பது ஓர் சவால் தான்.
அதிகம் பழகாததால் கொஞ்சம் தள்ளி நின்றே படங்கள் எடுத்திருக்கேன். ஆனாலும் அது வந்து கொஞ்சுகிறது.
அதனுடைய கூண்டுக்குள் தூங்குகையில் எடுத்த படம். அவிழ்த்து விடும்போது போய் எடுக்கும் அளவுக்கு இன்னமும் பழகவில்லை. :)))))
இன்னைக்கு வெளியே போனப்போ விண்ணில் தெரிந்த மேகக் கூட்டங்கள். அதையே படம் எடுக்கப் பொண்ணு தடை விதிக்கிறாள். கடைக்கு உள்ளே எல்லாம் எடுக்கக் கூடாதுனு சொல்லி விட்டாள். வால் மார்ட்டில் ஒன்றிரண்டு படங்கள் எடுக்க நினைச்சேன். கூடாதுனு தடுத்து விட்டாள். அடுத்த படமும் மேகக் கூட்டங்கள் தான். வேறொரு கோணத்தில்.
படம் மாறி வந்துடுச்சு போல! அந்தப் படம் காக்கா ஊஷ் போயிடுச்சுனு நினைக்கிறேன். :(
ReplyDeleteஅட உங்க பொண்ணுதான் எனக்கு நெருங்கிய சொந்தம் என்றால் இந்த பதிவை படித்த பின் நீங்க் ரொம்ப ரொம்ப நெருங்கிய சொந்தமாகிவிட்டீர்களே.
தமிழரே, இணையத்தில் அனைவருமே ஒருவருக்கொருவர் சொந்தம் தானே!
Deleteநமக்கு பொறந்த புள்ளைங்களை கூட மற்ந்துவிடுவோம் ஆனால் மறக்கவே முடியாதது ஒன்று உண்டென்றால் அது நாம் வழக்கும் நாய் குட்டிதான்
ReplyDeleteஇந்த மாதிரி உணர்வு எப்படி வரும், எப்படி இருக்கும்னு எனக்குப் புரியலை. ஒருவேளை பசங்கள்போல இல்லாமல் ரோபோட் மாதிரி நாம சொல்வதை நாய் கடைபிடிக்கும் என்பதாலா?
Deleteஉண்மை தமிழரே, இப்போக் கூட மோதியை நினைக்கும்போதும், அவன் குறித்த பேச்சு வரும்போதும் எனக்குக் கண்ணீர் தன்னையும் அறியாமல் வந்து விடும். எதிர்பார்ப்பு இல்லாத அன்பை வைத்து விடுகின்றன இந்த ஜீவன்கள்.
Deleteஎந்த மிருகமும் "ரோபோ" மாதிரி எல்லாம் இல்லை நெல்லைத் தமிழரே, அவற்றுக்கும் உணர்வுகள் உண்டு. அவற்றின் வெளிப்பாடு தான் நாம் வெளியே போகும்போதும், திரும்பி வரும்போதும் அவை நடந்து கொள்ளும் முறைகளில் தெரியும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteஅவற்றுக்கும் கோபம் வரும், வருத்தம் வரும், நாம் தண்டனை தருவதைப் புரிந்து கொண்டு தன் வருத்தத்தைத் தெரிவிக்கும். இனி இப்படிச் செய்ய மாட்டேன் என்று நமக்கு உணர்த்தும். வாய் திறந்து பேசத்தான் வராது!
Delete//வருத்தத்தைத் தெரிவிக்கும். இனி இப்படிச் செய்ய மாட்டேன் என்று நமக்கு உணர்த்தும்// - இப்படீல்லாம் இருக்குமானால், அதனுடன் ரொம்பவும் ஒட்டுதல் வந்துவிடுமே. ஆச்சர்யம்தான்.
Deleteஅதிலும் சந்தேகமா நெல்லைத் தமிழரே, தெருவில் திரியும் நாய்களுக்குக் கூடத் தொடர்ந்து உணவு அளித்து வந்தீர்கள் எனில் அவை சொல்லுவதை உங்களால் புரிந்து கொண்டிருக்க முடியும். எங்க வீட்டில் (அம்பத்தூர்) பல தெருநாய்கள்/பூனைகள் குட்டி போட்டு அவற்றுக்கு நாங்க உணவு அளித்துக் காப்பாற்றி இருக்கோம். குட்டிகளைப் பாதுகாத்துப் பின்னர் வெளியே கொண்டு விடுவோம். http://sivamgss.blogspot.com/2008/02/p.html// go and read this old post. :D
Deleteகீதாம்மா நெட்பிலீக்ஸில் hachi a dog's tale படம் இருந்தால் கண்டிப்பாக பார்க்கவும் . இந்த படத்தை பார்த்தவர்கள் கண்ணிர்விட்டு அழுக்மால் இருந்தால் அவர்களுக்கு இதயம் என்பது இல்லவே எனலாம்
ReplyDeleteபெண்ணிடம் சொல்கிறேன் தமிழரே.
Deleteஎங்க பொண்ணு, மாப்பிள்ளை இருவரும் முயன்று பார்த்தார்கள். நெட்ஃப்ளிக்ஸில் வரலை மதுரைத் தமிழரே! ஆனால் யூ ட்யூபில் இருக்கு போல! முயற்சி செய்கிறேன்.
Deleteநாங்கள் பார்த்தது நெட்பிலிக்ஸிதான் ஆனால் இப்ப அதை அதில் இருந்து எடுத்துவிட்டார்களாம்....
DeleteOh! OK! :(
Deleteஅவ்வளவு பயமா? பயமில்லை, எச்சரிக்கை உணர்வு இல்லையா? கதவுக்கு வெளியே இருக்கும்போது ரகசியமாக எடுத்திருக்கிறீர்கள்!
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருக்கணும் இல்லையா? அதுவும் வந்த இடத்திலே! யாருக்கும் தொந்திரவு இருக்கக் கூடாதுனு ஜாக்கிரதையாக இருக்கோம். ரகசியமா எல்லாம் எடுக்கலை. பெண் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
Deleteஅதுதான் அவ்வளவு ரகசியமாக பயத்துடன், எச்சரிக்கையுடன் எடுத்திருக்கிறீர்கள். அப்புவின் அவார்டை தைரியமாக எடுக்கலாமே! செல்லத்துக்கு ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்பின்னரின் பெயரா?!!
ReplyDeleteதோட்டத்துக்குப் போகும் பேடியோ (P ) கதவின் பக்கம் அப்புவின் அவார்ட் இடம் பெற்றிருக்கும் மேஜை/சின்ன டீபாய் உள்ளது. அந்தக் கதவை எடுத்தால் அதுவும் சேர்த்துத் தான் படத்தில் வரும். எதையும் ரகசியமாக எடுக்கலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteஆமா இல்ல? ஷேன் வார்னே ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வீரர் ஆச்சே! ஆனால் இங்கே அது பிறந்த இடத்தில் அதுக்கு ஷேன் என்னும் பெயர் வைத்திருக்கிறார்கள். பொண்ணு மட்டும் அதைக் "கிட்டு" (kittu ) என்று கூப்பிடுவாள்.
(Patio) within brackets. somehow it was deleted. :(
Deleteகிட்டு னு ஒரு பூனையார் விசிட் பண்ணுவார் என்னை :) நானே வச்ச பிறக்கும் பூனையாருக்கு :)
Deleteஇங்கே அதிகம் பூனைகள் பார்க்கலை. பொண்ணு வீட்டுக்குப் பின்னர் ஒரு வீட்டிலும் நாயார் தான் இருக்கார். எங்க பொண்ணோட செல்லம் தோட்டத்திலே விளையாடினால் அவர் ஒரே கத்து கத்திட்டு இருப்பார். :)
Deleteநானும் செல்லங்கள் வளர்ப்பதை நிறுத்தி விட்டேன். சமீபத்தில் ஒரு பூனை இழந்ததும் மறுபடியும் வந்த ஆசை மறுபடியும் போய்விட்டது. இப்போது கூட ஒரு உயர்சாதி செல்லம் இலவசமாகக் கிடைத்தது. அதைப் போஷாக்கு செய்யும் பொறுமை, இடம் கிடையாது. எனவே வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.
ReplyDeleteஅட... நாய்களுக்குள்ளும் சாதியா? இதப் பார்றா..... ஹா ஹா ஹா
Deleteஇங்க பக்கத்துல ஒருத்தர் பூனை சைசுல நாயை வாக்கிங் கூட்டிட்டுப் போறார் (மூஞ்சி சுமாரா இருக்கும் சிறிய நாய் வகை). பில்டிங்ல ஒரு வயசான நாய் ஓநாய் செசுக்கு பெருசா இருக்கு. அது சில சமயம் என்னை நோக்கி அவங்க கயிறை இழுத்துக்கிட்டு வரப் பாக்கும்போது எனக்கு கோபம்தான் வரும். அவங்க, நாய் கடிக்காதும்பாங்க. ஆனாலும் பிடிப்பதில்லை.
பெண், நாய் வளக்கணும்னு ஆசை என்றாள். நான் கர்ர்ர்ர்ர் முகத்தைக் காண்பித்தேன். ஹா ஹா
என் அப்பா பக்கம், அம்மா பக்கம் இப்படி யாருக்கும் நாய் வளர்ப்பதெல்லாம் பிடிக்காது. இங்கே நம்ம ரங்க்ஸுக்கு மட்டும் பிடிக்கும். அவர் சகோதர, சகோதரிகள் யாருக்கும் பிடிக்காது.
Deleteநெல்லைத்தமிழரே, அவை கேட்பது வெறும் அன்பு மட்டும் தான்.
செல்லங்களை வளர்த்து பிரிவது மிகவும் கஷ்டம்.
ReplyDeleteவான் மேகம் படங்கள் நன்றாக இருக்கிறது.
செல்லம் அந்த கூண்டில் தான் படுக்கவேண்டுமா தினம் .
குளிர் காலத்தில் எங்கு படுக்கும்?
அப்பு அவார்ட் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அப்புக்கு.
வாங்க கோமதி, நாயைக் கொடுக்கும்போதே அந்தக் கூண்டுடன் தான் கொடுத்தார்கள். அதுவும் அந்தக் கூண்டில் தான் இருக்கிறது. வெளியே தோட்டத்தில் அவிழ்த்துவிட்டுப் பின்னர் அதன் கழிவுகளைப் பெண்ணோ, மாப்பிள்ளையோ சுத்தம் செய்வார்கள். இரவு நேரங்களில் கூண்டில் தான் படுக்கிறது. காலையில் அவங்க யாரானும் எழுந்து வந்து வெளியே தோட்டத்துக்கு அழைத்துச் செல்வார்கள்.
Deleteமோதி என்று பெயர் வைக்க காரணம் ?
ReplyDeleteகுஜராத்தில் இருந்ததாலா ?
இது நடந்தது அம்பத்தூர்தானே ? (சென்னை)
வாங்க கில்லர்ஜி, மோதி என்பது பொதுவான பெயர். அப்போ எங்களுக்கு நரேந்திர மோதியைப் பற்றியே தெரியாது! :))))) அதன் பின்னரே அவர் குஜராத்தின் முதல்வர் ஆனால். ஜாக்கி ஷெராஃப் நடிச்ச ஒரு படத்தில் நடித்த ஒரு நாயின் பெயர் "மோதி" கிட்டத்தட்ட எங்க நாயைப் போலவே இருந்ததுனு நினைக்கிறேன். அந்த நினைவில் வைச்சது. அதோடு முன்னர் இருந்தவற்றுக்கெல்லாம் ஆங்கிலப் பெயர்கள் ப்ரவுனி, டாமி, என்றெல்லாம் இருந்தது. இதுக்கானும் இந்தியப் பெயரா இருக்கட்டும்னு வைச்சோம்
Deleteஆமாம் கில்லர்ஜி, இது நடந்தது அம்பத்தூரில் தான். மோதி 95 செப்டெம்பரில் பிறந்தான். 98 டிசம்பரில் போயாச்சு
Deleteவால்மார்ட்ல படங்கள் எடுத்தால் என்னவாம்? நான் எல்லா சூப்பர், ஹைபர் மார்கெட்லயும் படங்கள் எடுத்திருக்கேன்.
ReplyDeleteதெரியாது நெ.த. பெண் எடுக்காதே என்றாள். எடுக்கலை! அவ்வளவே!
Deleteசெல்லம் விரைவில் பழகிவிடும்...
ReplyDeleteஆமாம் DD, வந்ததுக்கு இப்போப் பரவாயில்லை. ஆனால் கிட்டே வந்து நக்கும் போது தான் கொஞ்சம் தூக்கிவாரிப் போடும்! :))))
Deleteசெல்லங்கள் ... மோதி பதிவு ஏற்கனவே படித்திருக்கிறேன்.
ReplyDeleteநான் செல்லங்கள் வளர்த்ததில்லை.
வாங்க வெங்கட், படிச்சிருப்பீங்க! எல்லோருக்கும் செல்லம் வளர்க்க முடியாது. சூழ்நிலையும் அமைய வேண்டும்.
Deleteநாய் வளர்த்தவன்என்னும் முறையில் கூறுகிறேன் அன்பால் கட்டுண்ட பின் பிரிவு என்பது துயர்
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஅழகான செல்லம்.
ReplyDeleteநாங்களும் நிறுத்திவிட்டோம். நாங்கள் சில வருடங்களுக்கு முன் இடம்மாறி வந்ததில் இங்கு வளர்கும் வசதி இல்லை .எங்களிடம் இருந்த அல்சேசன்,பொமரியன் இருவரையும் நண்பர்களிடம் கையளிக்கும் நிலை அதுவே தாங்காத பிரிவுதான்.
வாங்க மாதேவி, செல்லங்கள் வளர்ப்பது ஒரு குழந்தையை வளர்ப்பதற்குச் சமம். அதைப் பிரிவது அதைவிடக் கொடுமை!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்கள் பெண் வீட்டு செல்லம் நன்றாக உள்ளது. தங்கள் பேத்தி வாங்கிய அவார்ட் நன்றாக உள்ளது. மென்மேலும் பல துறைகளில் ஈடுபாடு செலுத்தி, அதிலெல்லாம் நிறைய விருதுகள் பெற தங்கள் பேத்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அதற்கு முன் தங்கள் மோதியைப் பற்றியும் படித்தேன். பதிவு ஸ்வாரஸ்யமாக இருந்தது. ஆனால் பாதியில் நிறுத்தி பின் தொடர்வதாய் சொல்லி உள்ளீர்கள். அந்த பதிவையும் கொடுத்தால் படிக்கலாம்.
இந்த செல்லங்கள் வளர்க்க எனக்கும், என் சின்ன பையனுக்கும்தான் மிகவும் ஆசை. ஆனால் அதிலுள்ள சிரமங்கள் என் நாத்தனார் பெண் சொல்லிச் சொல்லி அந்த ஆசையை "ஆசை மூட்டையில்" கட்டி வைத்து விட்டோம்.
சிதறிக் கிடக்கும் வான் மேகங்கள் படங்கள் நன்றாக உள்ளது. பெரிதாக்கி பார்க்கும் போது மிகவும் சின்னப்புள்ளிகள் பெரிதாகி அழகாகவும் தெரிகிறது. இங்கேயும் உங்களுக்கு சில "தடா"க்களா? "சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்டிற்கிடாகுமா?" பாடல் நினைவுக்கு வருகிறது. ஹா. ஹா. பதிவு நன்றாக இருந்தது பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, அந்தப்பதிவுகள் தொடராக வந்து முடிச்சேன். அவற்றின் லிங்க் உங்களுக்குத் தருகிறேன். நாய் வளர்ப்பதில் பல சிரமங்கள் உண்டு. நிறையத் தியாகம் செய்யணும். அதே போல் உறவுகளின் மூஞ்சி தூக்கலைப் பொறுத்துக்கணும். தடானு இல்லை. வால் மார்ட் போன்ற பெரிய மால்களில் அதிகம் அமெரிக்கர்கள் இருப்பார்கள் அவங்களுக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ என்பதால் எங்க பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டா. அவ்வளவு தான். ஆனாலும் நம்ம நாட்டுக்கு ஈடாகாது என்பது உண்மையே!
Delete///இவன் தான் மோதி! மோதி பற்றி இங்கே படிக்கலாம்.//
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீசாக்கா மோடி அங்கிளை உப்பூடி எல்லாம் மருவாதை இல்லாமல் சொல்லக்கூடா:)..
இதுக்காகத்தான் நான் அவரை மோடி என்கிறேன்:)) நீங்க மோதி எனச் சொல்லி.. செல்லத்தையும் அதே பேரால் அழைக்கிறீங்க:).. இதனை அடுத்த விடுமுறையில் டெல்லி போகும்போது சொல்லிட்டு வரப்போகிறேன்:))
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எத்தனை முறை அப்பாவி ஆவீங்க, எத்தனை முறை புத்திசாலி ஆவீங்க? இந்தத் தரம் சஷ்டி விரதப் புகழ் அதிரானு பெயர் வரும்னு நினைச்சேன். வைச்சுக்கலை போல. இந்தப் பெயர் ஒரு ஹிந்தி சினிமாவின் நாயின் பெயரைப் பார்த்துட்டு வைத்தோம்.
Deleteவிரதக் களைப்பு என்பதால் அப்பாவியாக இருந்திட்டால் ஆரும் அடிக்க மாட்டினமெல்லோ:)
Deleteஅது சரி, விரதம் முடிஞ்சு எத்தனை நாளாச்சு! இன்னமும் களைப்பா? :)
Deleteமத்தியானமே வந்திட்டேன், ஆனா முதல் பரா படிச்சதும், முழுவதும் அதே கதைதானாக்கும், என மனம் கனத்து விட்டது, அதுவும் பாரணை முடிச்ச கையோடு வந்தமையாலோ என்னமோ.. நெஞ்சுக்குள் எல்லாம் என்னமோ செய்து கவலையாகிவிட்டது, அதனால ஓடிட்டேன். இப்போ வந்து முழுவதும் படிச்சால், நல்லவேளை இது ஷேனின் கதை ஹா ஹா ஹா.
ReplyDelete@அப்பாவி அதிரா, மோதிக்குப் பின்னர் தான் நாங்க எந்தச் செல்லமுமே வளர்க்கலை! இது இங்கே ஷேன் பற்றியது. இப்போ ஒன்பது மாதம் ஆகிறதாம். ஆனால் ஆள் உயரம் வளர்ந்திருக்கு. வேட்டை நாய் ரகத்தைச் சேர்ந்ததாம். அதனால் கூட கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு! :))))))
Deleteஎங்களுக்கே பயப்பிடமாட்டேன் என அடம்பிடிக்கிறீங்க ஆனா ஷேனைப் பார்த்து இப்பூடிப் பயப்பிடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா. மாமாவிடம் சொல்லி ஊரிலும் ஒரு ஷேன் வாங்கச் சொல்லோணும்:))
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சஷ்டி விரதப்புகழ் அதிரடி அதிரா, உங்களுக்கு ஏன் பயப்படணும்? அதெல்லாம் முடியாத்! வீட்டில் ஷேன் வாங்கினால் என் கையால் தானே சாப்பாடு கொடுப்பேன். அப்போப் பழகிடுமே! :P :P :P :P
Deleteம்ஹூம்ம்.. இம்முறையும்... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சுன்னு போயிடுச்சா:)) ஓரே இடத்தில இருந்தே ஒம்பேது:)) ஹா ஹா ஹா இருப்பினும் வானம் அழகு... எதையோ தெளிச்சு விட்டதுபோல இருக்கு.
ReplyDeleteஹிஹிஹி, அதிரடி, உங்களுக்கு மட்டும் ரகசியமாச் சொல்றேன். சில, பல படங்கள் எடுத்தது இருக்கு! கொஞ்சம் கொஞ்சமாப் போடலாம்னு உத்தேசம். ஆனால் வால் மார்ட் படங்கள் இல்லை அது! வேறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
Deleteமோதி பற்றி நான் ஏற்கனவே படித்து பின்னூட்டமிட்டிருக்கேன் .மீண்டும்படிச்சென் .செல்லங்கள் வளர்ப்பதில் மிகப்பெரும் பிரச்சினை நாம் அவற்றோடு உணர்வுபூர்வமா அட்டாச் ஆகிறதுதான் .ஊரில் நிறைய பைரவர்கள் இருந்தாங்க எங்க வீட்ல .பழைய நினைவுகள் எனக்கும் வந்தது .ஜெசியையே நான் ரொம்ப மனுஷபிள்ளை மாதிரி ட்ரீட் பன்றேன்னு கணவர் சொல்றார் .நான் இல்லேன்னா சாப்பிடமாட்டா .
ReplyDeleteஆமாம், நீங்க லிங்க் கேட்டு அந்தப் பதிவுக்குப் போய்ப்படிச்சீங்க. நினைவில் இருக்கு. நம்மையும் அறியாமல் உணர்வு பூர்வமாக அதனோடு நாம் பழக ஆரம்பிச்சுட்டுப் பின்னர் திண்டாடுவோம்! ஆனால் என்ன செய்ய முடியும்?
Deleteநெக்ஸ்ட் டைம் ஷேனை க்ளோசப்பில் எடுங்க . வீட்டு அருகில் டே கேர் நல்லது .அதுவும் பழகிடும் ஸ்கூலுக்கு போறாப்ல .அந்த மேகக்கூட்டம் செம அழகு
ReplyDeleteஆமாம் ஏஞ்சல், எடுக்கணும். சமயம் வாய்க்கட்டும். விரைவில் எடுத்துப் போடுகிறேன். இன்னிக்குப் போட்ட படங்களையும் வந்திருக்கும் கருத்துக்களையும் பெண்ணும், பேத்தியும் பார்த்தார்கள். பார்த்தார்கள் எனில் பார்த்தார்கள். இருவருக்கும் படிக்க முடியாது. நான் சொன்னேன். மகளுக்கு ரொம்ப சந்தோஷம் ஷேனுக்கு இத்தனை ரசிகர்களா என!
Deleteஹாஹா :) எனக்கும் ரெண்டு கையையும் பிடிப்பாங்க மகளும் கணவரும் :) போன் பையில் இருந்து மெசேஜ் பார்க்க கூட அனுமதி இல்லை இவர்களால் :)
ReplyDeleteஆமாம், இங்கேயும் அப்படித் தான். படம் எடுக்காதே என ஒரே தடை! :(
Deleteகர்ர்ர்ர் 4 கீதாக்கா .அந்த அவார்டையாவ்து கிட்ட வச்சு எடுத்திருக்கலாம்
ReplyDeleteஅட! அந்த அவார்டு அங்கே இருப்பதைக் கவனிக்காமல் நான் செல்லத்தை மட்டும் தானே படம் எடுத்தேன். படத்தைப் பதிவில் போடறச்சே தான் கவனிச்சேன். பிறகு ஒரு முறை இரண்டையும் க்ளோசப்பில் எடுத்துப் போடுகிறேன்.
DeleteShane ஒரு சீரியஸ் பேர்வழிபோல் தெரிகிறதே..!
ReplyDeleteவாங்க ஏகாந்தன், பெண்ணிடம் நீங்க சொன்னதைச் சொன்னேன். ஷேன் வீடு சுத்தம் செய்யும் ரோபோவிடம் விளையாடிய வீடியோவைக் கொடுத்தாள். அப்லோட் பண்ணினேன். சரியாக வரலை. மறுபடி முயற்சி செய்து பார்க்கணும்.
Deleteஎங்கள் வீட்டிலும் முன்பு இரண்டு செல்லங்கள் இருந்தன அவை போய் இப்போது வேறு ஒன்று. வீட்டிற்குள் விடுவதில்லை. வெளியில் அதன் கூட்டில் இருக்கும்.
ReplyDeleteவானம் படங்கள் நன்றாக இருக்கின்றன.
துளசிதரன்
வாங்க துளசிதரன், உங்க ஊர்ப்பக்கம் மழை எல்லாம் முடிந்து விட்டதா? ஸ்ரீரங்கத்தில் பனி பெய்ய ஆரம்பித்து விட்டதென இன்று முகநூலில் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்த படம் மூலம் தெரிந்தது.
Deleteகீதாக்கா நான் மோதி பற்றி உங்க பதிவு பார்த்திருக்கிறேன் வாசித்தும் இருக்கிறேன். கிச்சன் வாசலில் படுத்திருப்பது எல்லாம்...பாவம்...நாம் வளர்க்கும் செல்லங்களிடம் நாம் மிக மிக ஒட்டிக் கொண்டு விடுகிறோம். எங்க செல்லம் ப்ரௌனி அக்டோபர் 29 அன்று போனது இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இப்போதும் அதன் நினைவு வந்து மனது கஷ்டமாகிவிடும்.
ReplyDeleteஇப்போது இருக்கும் கண்ணழகிக்கு 11 வயதாகிறது.
கீதா
எங்களிடமும் ஒரு ப்ரௌனி இருந்திருக்கு. அதுக்குக் கால் போலியோ வந்து ஒரு முன்னங்கால் நடக்க முடியாது. என்றாலும் நன்றாக விளையாடும். அம்பத்தூர் வீடு கட்டி கிரஹப்ரவேசம் முடிந்து ஒரு மாதத்தில் இறந்து விட்டது. இன்னும் ஜானி, டாமி, மணி என்றெல்லாம் பெயர்களில் இருந்தன.
Deleteஷேன் ஃபோட்டோ இன்னும் கொஞ்சம் க்ளோசப் முடிஞ்சா எடுத்துப் போடுங்க கீதாக்கா..
ReplyDeleteகர்ர்ர் அந்த அவார்ட் கண்ணுக்கெ தெரியலை. ஓரமா இருந்ததை ஃபோட்டொவிலும் ஓரம்கட்டிட்டீங்களே!!!
வானம் செம அழகு. என்ன அழகான டிசைன்!!!
ஷேன் செம மெஜஸ்ட்டிக்கா இருக்கார்!!! நல்ல உயரம் 9 மாதத்திற்கு. க்ளோசப் ப்ளீஸ்! பக்கத்துலயெ டே கேர் இருப்பதும் வசதிதான்...நல்லது.
முடிஞ்சா ஷேன் என்ன செய்கிறார் அவர் குறும்புகள்னு பதிவு போடுங்க கீதாக்கா. என்ன இனம்...குணாதிசயங்கள் எல்லாம்.
கீதா
இன்னிக்கு எடுத்தேன். போடப் பார்க்கிறேன். அவார்டையும் க்ளோஸ் அப்பில் எடுக்கிறேன். இன்னும் மாடியில் வேறே இருக்கு. நான் மாடி ஏறுவதில்லை. அதான் யோசனை!
Deleteஅக்கா என் முந்தைய கமென்ட் வந்ததா தெரியலையெ.....கமென்ட் பொட்டு பப்ளிஷ் பொட்டா அடுத்து உங்க முந்தைய பதிவு வ்னது நிக்குது...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteகீதா
துளசியோடதும் சேர்த்து நாலு கருத்துகள் வந்திருக்கின்றன. வேறே இல்லை.
Deleteநாய்கள் அன்பால் நம்மை குளிப்பாட்டி விடும்.மேகக்கூட்டம் அருமை.
ReplyDelete