எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 07, 2019

திருவள்ளுவரும் திருக்குறளும்!

திருவள்ளுவரும் திருக்குறளும் படும்பாடு நாளாக ஆக அதிகரித்து வருகிறது. வள்ளுவர் குறளை எழுதியதும் தமிழ்ச்சங்கப்புலவர்களிடை அதைக் கொண்டு சேர்க்க அரும்பாடு பட்டார். அவருக்கு ஔவை உதவினார் என்பார்கள். (ஆனால் எனக்கு ஔவை சங்ககாலத்தில் இருந்தாரா என்பதில் கொஞ்சம் சந்தேகம் உண்டு) ஔவை சொல்லியும் சங்கப்புலவர்கள் குறளை அங்கீகரிக்கவில்லை. ஈரடியில் அதுவும் ஒண்ணேமுக்கால் அடியில் என்னத்தைச் சொல்லிவிட முடியும் என்பது அவர்கள் கருத்து.

திருவள்ளுவர் க்கான பட முடிவு

திருக்குறளை மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர்கள் ஏற்கவில்லை. ஒரு நூல் தமிழறிஞர்களிடம் அங்கீகாரம் பெற மதுரைத்தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற வேண்டும். ஆனால் தமிழ்ப்புலவர்கள் அதை எதிர்த்தனர். அது ஓர் இலக்கிய நூலே இல்லை என்று வாதிட்டுப் பொற்றாமரைக்குளத்தில் சுவடிகளைக் கட்டோடு மூழ்கடித்தனர். ஆனால் பொற்றாமரைக்குளத்திலிருந்து பொற்றாமரை வெளியே வந்து சங்கப்பலகையில் குறள் சுவடிகளை இட்டு மலர்மாலை அணிவித்து வெளிவந்ததாகச் சொல்லுவார்கள். இப்படித் தானாக குறள் சுவடிகள் வெளிவந்ததைப் பார்த்த சங்கபுலவர்கள் ஆச்சரியம் அடைந்து இது இறைவன் விருப்பம் என்று உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டதாகவும் அப்போது அசரீரி ஒலித்து ஒரு பாடல் மலர்ந்ததாகவும் சொல்லுவார்கள்.  அது இறைவனின் அங்கீகாரக்குரல் என்றும் கலைவாணியின் அங்கீகாரக்குரல் என்றும் சொல்லுவோர் உண்டு.

அந்தப்பாடலை முன்கொண்டு அடுத்தடுத்து சங்கப்புலவர்கள் அனைவரும் ஆளுக்கொரு பாடல் குறளைச் சிறப்பித்துப் பாட அது 55 பாடல்களைக் கொண்ட திருவள்ளுவமாலையாக இன்றும் நம்மிடையே உலா வருகிறது.

திருவள்ளுவ மாலையில் உள்ள அசரீரி கூறிய பாடல் இது:

"திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு உருத்தகு நற்பலகை ஒக்க – இருக்க உருத்திர சன்மர் என உரைத்து வானில் ஒருக்கஓ என்றதுஓர் சொல்"

கலைமகள் திருக்குறளைப் புகழ்ந்து பாடிய பாடல் இது:

"நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு"

இறையனார் திருக்குறளைப் புகழ்ந்து ஈந்த பாடல் இது:

"என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் நின்றலர்ந்து
தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்"

மதுரைச் சொக்கேசனால் ஏற்கப்பட்ட திருக்குறள் சநாதன தர்மத்தைச் சேர்ந்தது என்பதிலும் அதன் வழிமுறைகளைத் தான் கூறுகிறது என்பதிலும் இனியும் சந்தேகம் தேவையா? மதுரைக்காரர்கள் அனைவருக்கும் இது குறித்து அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. இது தெரியாமல் தமிழே படித்திருக்க முடியாது. இப்போது சொல்லுபவர்கள் யாருமே குறளையோ, தமிழையோ ஆழமாகப் படிக்காமல் அகலமாகப் படிக்கிறார்கள். மேலோட்டமாகப் படிக்கிறார்கள். அதனால் வள்ளுவருக்கும் ஜாதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படிச் சொல்லுபவர்கள் கேரளத்தில் வள்ளுவ மதம் என்றொரு மதம் இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள். அங்கே எவ்விதமான பாகுபாடுமின்றி அனைத்து மக்களும் ஒரே மாதிரி நடத்தப்படுவதையும் வள்ளுவருக்குக் கோயில் கட்டி இருப்பதையும் அறிய மாட்டார்கள்.

மயிலையில் உள்ள வள்ளுவர் கோயிலிலும் முக்கிய தெய்வங்கள் ஏகாம்பரரும், காமாட்சியும் தான்! இதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்?

முகநூல் நண்பர் ஒருவரும் கிட்டத்தட்ட இதே கருத்தைப் பகிர்ந்திருந்தார். நடப்பதெல்லாம் பார்த்தால் சிரிப்புத் தான் வருகுது!

34 comments:

 1. பொற்றாமரைக்குளக் கதை போல பல கதைகள் இப்போது உலா வருகின்றன...

  // திருக்குறள் சநாதன தர்மத்தைச் சேர்ந்தது // வடக்கு திசையும் தெற்கு திசையும் ஒன்று தான் என்பதுபோல தான் இது...! மீதம் எழுதிக் கொண்டிருக்கும் என் வலைப்பதிவில் பேசுவோம்...

  நன்றி அம்மா...

  ReplyDelete
  Replies
  1. டிடி, தம்பி, பள்ளி நாட்களில் படித்த/கேட்டவற்றையே சொல்கிறேன். அதுவும் கூட முகநூலில் நண்பர் ஒருவரின் பதிவைப் பார்த்த பின்னர். உங்கள் வயது என் அனுபவம். என் வயதுக்காரர்கள் யாரிடமேனும் கேட்டுப் பாருங்கள்.

   Delete
  2. அறிந்து தெரிந்து புரிந்து கொள்வதற்கு வயது ஒரு தடை அல்ல... எனக்கு வயது 52+ ஆணவம் உங்கள் கண்களை மறைக்க ஆரம்பித்து உள்ளது... கவனிக்கவும்... நன்றி அம்மா...

   நாளை என் பதிவில் உங்களைப் போல பல பேருக்கும் ஒரு காணொலியை இணைத்துள்ளேன்... வந்துவிடுங்கள் மறந்துவிடாதீர்கள்... அங்கே பேசுவோம்...

   Delete
  3. என்னைப் பொறுத்தவரை எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கவோ புரிந்து வைத்திருக்கவோ முடியாது. ஆனால் நீங்கள் உங்கள் வயது என் அனுபவம் எனச் சொன்னதைச் சரியானபடி புரிஞ்சுக்கலை. மேலும் ஆணவம் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். ஆகவே இனி இந்த விஷயமாக எவ்விதக் கருத்துப் பரிமாற்றத்தையும் உங்களிடம் செய்யப் போவதில்லை எனத் தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்கு என் நன்றி.

   Delete
 2. ஈரடியில் நல்வாழ்கையை கற்பிக்கிறதே.

  ReplyDelete
 3. மீஈஈ 4 த்தூஊஊஊஊ:) சும்மா ஒரு கணக்குத்தான்:)... பொறுங்கோ வள்ளுவர் தாத்தாவை என்ன பண்ணியிருக்கிறா கீசாக்கா எனப் படிச்சிட்டு வறேன் பாவம் மனிசன்:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா வள்ளுவரின் சரித்திரம்/வாழ்க்கைக்குறிப்பு என் அம்மா சொல்லுவார். அவர் சொல்லுவதன்படி வள்ளுவரும், ஔவையாரும் உடன்பிறந்தவர்கள். இன்னும் இவர்களில் எட்டுப் பேர் இருக்கிறார்கள். அனைவரும் ஒரே பெற்றோருக்குப் பிறந்தவர்கள். வாசுகி என்னும் வள்ளுவரின் மனைவி பெயர் அந்நியப் பெயரெல்லாம் இல்லை. வாசுகிப் பாம்பின் பெயர். :)))))

   Delete
  2. பெற்றதும் குழந்தைகளை அப்படியே விட்டு விட்டுப் போகிறார்கள் பெற்றோர். அப்போ ஔவையைப் பெற்றதும் விட்டுவிட்டுப் போக மனமின்றித் தாய் கலங்குகையில் அப்போவே ஔவை பாட்டாய்ப் பாடினார் எனவும் சொல்லுவார்கள். அந்தப் பாடல், "இட்டமுடன் என் தலையில் எழுதிவிட்ட பிரமனும் செத்துவிட்டானோ!" என ஆரம்பிக்கும்.

   Delete
  3. இதனை நான் படித்திருக்கிறேன் கீசா மேடம். நீங்க எழுதினபிறகுதான் நினைவுக்கு வருகிறது.

   Delete
  4. நிறைய இதெல்லாம் தெரிந்திராதது கீதாக்கா.!!!

   கீதா

   Delete
  5. எங்களுக்கு இந்தத் திருவள்ளுவர், ஔவை கதையை அம்மா சொல்லி இருக்கிறார் நெ.த./தி/கீதா, தகப்பன் பிராமணர், மனைவி புலைச்சி! அவர்கள் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தது, அப்போது கணவன் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை அப்படியே விட்டு விட்டுத் தன்னுடன் மனைவி வரவேண்டும் என்று சொல்லுவான். அவர்களுக்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் அப்படியே விட்டு விட்டு வரும் மனைவி ஔவையை விட்டு வர மனம் கலங்குகையில் ஔவை இவ்வாறு பாடியதாய்ச் சொல்லுவார்கள். என் தாத்தா வீட்டில் வள்ளுவர் சரித்திரம் பற்றிய மிகப் பழைய புத்தகம் ஒன்று இருந்ததாயும் அம்மா சொல்லுவார். நான் பார்த்தவரையில் கிட்டியதில்லை. ஆனால் அவரிடம் ஆனந்தரங்கம் பிள்ளை டைரி முதல் தமிழின் முதல் புத்தகம் வரை பல புத்தகங்கள் அடங்கிய மிகப் பெரிய நூலகம் இருந்தது.

   Delete
 4. ////ஆனால் எனக்கு ஔவை சங்ககாலத்தில் இருந்தாரா என்பதில் கொஞ்சம் சந்தேகம் உண்டு)////
  அப்பாவு அதிராக்க, கீசாக்கா எழுதியிருப்பதெல்லாம் உண்மைதானா எனும் சந்தேகம் உண்டு:)..

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, இது ஓர் தன்னை மீறிய எழுச்சியால் எழுதப்பட்டது. நமக்குத் தெரிந்ததைச் சொல்லுவோம் என்னும் எண்ணத்தால் வந்தது. ஆகவே நீங்க நம்பணும்னு கட்டாயம் எல்லாம் இல்லை. :)))))

   Delete
 5. ரசனையான பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. நடப்பதை எல்லாம் ஏன் பார்க்கறீங்க...    பொழுது போகாதவர்கள் ஏதோ சொல்லி பொழுது போக்குகிறார்கள்.

  ReplyDelete
 7. வணக்கம் சகோதரி

  திருவள்ளுவர், அவருக்கான கோவில்கள் எல்லாம் பற்றி தெரிந்து கொண்டேன். சுவையான செய்திகள்.. சுவாரஸ்யமான பதிவு. அனைத்தும் விபரமாக அறிந்து கொண்டேன். இவ்விதம் எதையும் சீராக அலசி சுவை கெடாமல் தர தங்களால்தான் முடியும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கமலா. திடீரென ஏற்பட்ட ஓர் உந்துதல்.

   Delete
 8. இந்தப் பிரச்சனை பற்றிப் பேசுபவர்கள் யாருக்கும் திருவள்ளுவர்னா யார்னு தெரியாது. 'பிறன் மனை நோக்காப் பேராண்மை'யோ, 'கள்ளுண்ணாமையோ', 'வாய்மை'யோ, முதல் பத்து குறள்களையோ வாழ்க்கைல படித்துப் பார்த்திருக்க மாட்டாங்க.

  ReplyDelete
  Replies
  1. தமிழே அகத்தியரும், தொல்காப்பியரும் அளித்தது தானே! ஆனால் வள்ளுவர் பற்றிப் பேசுகிறவர்கள் யாருக்கும் இது குறித்த நினைவே இல்லை. சங்கப்புலவர்கள் அனைவருமே அந்தணர்கள் தான்/ அதையும் அறிந்திருப்பார்களா சந்தேகமே! காவி என்பது நம் ஆன்மிகத்தின் குறியீடு என்பதை அறியாமல் இப்போது ஏதோ ஒரு கட்சிக்கு அந்த நிறம் இருப்பதால் காவி என்றாலே பயப்படுகின்றனர். நம் நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வந்த நிறம்.பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக வடக்கே அனைத்துக் கோயில் கோபுரங்களிலும் காவிக்கொடி தான் பறக்கும். நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள், யோகிகள், துறவிகள் காவி தான் அணிந்தனர். காவி ஆன்மிக வாழ்க்கையின் குறியீடு. உயர்ந்ததொரு நிலையைச் சொல்லுவது.

   Delete
  2. >>> பிறன் மனை நோக்காப் பேராண்மை'யோ, 'கள்ளுண்ணாமையோ', 'வாய்மை'யோ, முதல் பத்து குறள்களையோ வாழ்க்கைல படித்துப் பார்த்திருக்க மாட்டாங்க..<<<

   அதெல்லாம் தெரிஞ்சிருந்தாத்தான் நாம அமைதியா இருந்திருப்போமே!..

   அதாவது நிறைகுடமாக ஆகியிருப்போம்!...

   Delete
 9. நீங்க நல்லா எழுதியிருக்கீங்க. ஆனா பாருங்க... தான் பிடித்த முயலுக்கு தும்பிக்கை உண்டு என்று சொல்லி ஏகப்பட்டபேர் வருவாங்க.

  ReplyDelete
  Replies
  1. சொல்லட்டும் நெ.த. ஆனால் நான் இதில் இறங்க வேண்டாம் என்றே ஒதுங்கி இருந்தேன். நேற்று மாமாவுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவரிடம் இது பற்றிச் சொல்ல அவர் உடனே இதை எழுதினாயா என்று கேட்டார். அதான் எழுதினேன். அதுவும் விபரமாக எழுதவெல்லாம் இல்லை. அதற்கே இப்படி! :)))))))))))

   Delete
 10. பொற்றாமரை குளம் விஷயம் எல்லாம் படித்ததுண்டு.

  அது சரி இப்போ என்னாச்சு திருவள்ளுவர் தாத்தாவுக்கு? யார் என்ன சொன்னாங்க? கூகுள்ல போய்ப் பார்க்கணும் இன்னா நியூஸ்னு..நம்ம வீட்டுல பேப்பர் எதுவும் கிடையாதே. டிவி சானலும் கிடையாதே.

  //அப்படிச் சொல்லுபவர்கள் கேரளத்தில் வள்ளுவ மதம் என்றொரு மதம் இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள். அங்கே எவ்விதமான பாகுபாடுமின்றி அனைத்து மக்களும் ஒரே மாதிரி நடத்தப்படுவதையும் வள்ளுவருக்குக் கோயில் கட்டி இருப்பதையும் அறிய மாட்டார்கள்.//

  ஆமாம். இதைப் பத்தி துளசி கூட ஒரு குறும்படத்தில் வசனமாக வைச்சிருக்கார். அவர் கருத்து நாளைக்கு வரும்னு நினைக்கிறேன்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. விஷயம் ஒண்ணுமில்லை.யாரோ/எங்கேயோ/எப்போவோ (முழு விபரம் கிட்டலை) திருவள்ளுவருக்குக் காவி வேஷ்டி கட்டிட்டாங்களாம். அதான் ஒரே களேபரம். விஷயம் என்னனு தெரியாமல் தலையிடக் கூடாதுனே ஒதுங்கி இருந்தேன். ஆனால் அவர் மதம் குறித்தெல்லாம் கன்னாபின்னாவெனப் பதிவுகள். ஆகவே அவர் குறளில் எழுதி இருப்பது முற்றிலும் நம் சநாதன தர்மம் சார்ந்தே என்பதைச் சொல்வதற்காக இந்தப் பதிவு.

   Delete
 11. //பொற்றாமரைக்குளத்திலிருந்து பொற்றாமரை வெளியே வந்து சங்கப்பலகையில் குறள் சுவடிகளை இட்டு மலர்மாலை அணிவித்து வெளிவந்ததாகச் சொல்லுவார்கள்.//

  ஒளவையார் படத்தில் வரும் இந்த காட்சி.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், இல்ல! மறந்துட்டேன் கோமதி! எங்கேயோ பார்த்தோமே என நினைத்துக் கொண்டிருந்தேனே! ரொம்ப நன்றி.

   Delete
 12. என்னமோ நடக்குதுன்னு புரியுது என்னன்னு தான தெரில .ஒளவை பாட்டி கதை இப்போதான் அறிகின்றேன் .

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணும் பெரிசா இல்லை. வள்ளுவர்ங்கற பெயரிலேயே திருவள்ளுவருடைய ஜாதி, மதம் தெரியும்போது எல்லோரும் அடிச்சுக்கறாங்க! அதான்! :))))))

   Delete
  2. ஔவையார் திரைப்படம் பார்த்தது இல்லையா ஏஞ்சல்?

   Delete
  3. இல்லக்கா நான் மிஸ் பண்ணின படம் அது .அதான் தெரியலை ..

   Delete
 13. முன்பே அறிந்திருந்த பல செய்திகளைத் தங்கள் பதிவில் கண்டேன் அக்கா..

  மகிழ்ச்சி... நன்றி...

  ReplyDelete