எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 01, 2019

2 படம் பார்த்து 2 விமரிசனம் வந்திருக்கு! :))))

நேற்றும் இன்றும் இரண்டு படங்கள் பார்த்தேன். ஒன்று அந்தாதுன். இன்னொன்று ராஜி/ சம்மதம் என்னும் அர்த்தத்தில் வருவது. அந்தாதுன் படம் ஓர் பியானோ வாசிக்கும் கலைஞனைப் பற்றியது. இளைஞன். பெயர் ஆகாஷ். வாழ்க்கையில் இசை வாழ்க்கையில் முன்னுக்கு வரத்துடிப்பவன். ஆனால் அவனிடம் ஓர் விசித்திரமான ஆசை! அந்த ஆசையில் அவன் குருடனாக நடிக்கிறான். குருடனாக நடிப்பது எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காகவும், தான் எவ்வாறு நடத்தப்படுகிறோம் என்று தெரிந்து கொள்ளவும் இதைச் செய்கிறான். ஆனால் ஆரம்பத்தில் நாம் அவனை நிஜமாகவே குருடன் என நம்பிவிடுகிறோம். ஏனெனில் பாதியில் தான் நமக்குத் தெரியவரும் அவன் குருடன் இல்லை என்று. எப்படியேனும் தன்னுடைய இசைத்திறமையால் லண்டன் போகவேண்டும் எனத் துடிக்கிறவன். அவன் இருக்கும் அதே குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் ஓர் குட்டிப்பையனுக்கு எப்படியோ இந்த இசைக்கலைஞன் குருடன் அல்ல என்று சந்தேகம். அதை நிரூபிக்கத் துடிக்கிறான்.

இதற்கு நடுவில் இசைக்கலைஞன் ஆகாஷுக்கு சோஃபி என்னும் பெண்ணுடன் பரிச்சயம் நேரிட அவனைக் கண்டும் அவன் இசைத் திறமையைக் கண்டும் தன் தந்தையின் இரவு நேர ஓட்டலின் நிகழ்ச்சிக்கு அவனுக்கு ஏற்பாடுகள் செய்து தந்து அவன் இசையில் மயங்கித் தன்னையே அவனுக்கு ஓர் மழைநாளில் தருகிறாள். அந்த ஓட்டலின் ஓர் நிகழ்ச்சியின் போது கதைப்படி ப்ரமோத் சின் ஹா என்னும்  முன்னாள் நடிகராக வரும் ஓர் நபர் அவனுக்கு அறிமுகம் ஆகிறார். அவர் சிமி என்னும் ஓர் முன்னாள் நடிகையை அவரை விட வயதில் மிகவும் சின்னவளை இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். முதல் மனைவி மூலம் டானி என்னும் பெண் குழந்தை ஹாஸ்டலில் படித்து வருகிறாள். இவர் ஆகாஷின் பியானோ வாசிக்கும் திறமையைப் பார்த்துவிட்டுத் தன்னுடைய திருமண நாளுக்கு ஓர் ஆச்சரியமான இன்ப அதிர்ச்சியாகத் தன் மனைவிக்கு இருக்க வேண்டும் என ஆகாஷை வீட்டில் வந்து சின்னக் கச்சேரி நிகழ்த்தச் சொல்லிச் சொல்லுகிறார். அவனும் சம்மதிக்கிறான்.

andhadhun க்கான பட முடிவு

மறுநாள் அங்கே சென்ற ஆகாஷுக்கு ஏற்படும் விசித்திரமான அனுபவங்களும், அதன் விளைவுகளும் தான் கதை. கடைசிவரை திக், திக்கென்று இருந்தது. என்றாலும் முடிவு கொஞ்சம் வறட்சி! எதிர்பாரா முடிவு. வழக்கமான பாணியில் சோஃபியும் ஆகாஷும் திருமணம் செய்து கொள்வதாக முடித்திருந்தால் வழக்கமான ஃபார்முலாப் படமாக ஆகி இருக்கும். அப்படி இல்லை. ஆனால் குருடனாக நடித்த ஆகாஷுக்குக் கண் நிஜமாகவே போனதுக்கப்புறம் திரும்ப வரவில்லை கடைசி வரை. கண் எப்படிப் போகிறது? ஏன் திரும்பக் கண் வர முயற்சி எடுக்கவில்லை என்பது தான் கதையின் முக்கியக் கருவே! அது தான் மர்மமே!

andhadhun க்கான பட முடிவு

இந்தப்படத்தைக் கதை எழுதி இயக்கியவர் ஸ்ரீராம் ராகவன் என்பவர். ஆயுஷ்மான் குரானா என்னும் தற்போதைய பிரபல நடிகர் ஆகாஷ் ஆக நடித்திருக்கிறார். ராதிகா ஆப்தே அவருக்கு ஜோடியாக சோஃபியாக வருகிறார். தபு தான் ப்ரமோத் சின் ஹாவின் மனைவியாக நடிக்கிறார். தபுவின் நடிப்பு அருமை. வெளுத்து வாங்குகிறார். படத்தில் காதல் காட்சிகள் தேவைக்கு மேல் இல்லை. இசையும், பாடலும் பின்னணியில் படத்துக்கு வலுவைச் சேர்க்கிறது. துல்லியமான ஒளிப்பதிவு, அருமையான லொகேஷன், முழுக்க முழுக்கப் புனே நகரிலேயே 44 நாட்களுக்குள் எடுக்கப்பட்டு உள்ளது.

லாக்கார்டியர் என்னும் கண் தெரியாத ஃப்ரெஞ்ச் பியானோ கலைஞரைப் பற்றிய படத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் மூலத்தன்மை சற்றும் குறையவில்லை. அனைவரும் இயல்பாக நடித்துள்ளார்கள். நல்லவேளையா இந்தப் படங்களெல்லாம் நம்ம தமிழ் இயக்குநர்கள் பார்ப்பதில்லை. பிழைத்தோம். படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் நடிக்கும் முயல்குட்டி அபாரமாக நடித்துள்ளது.

raazi க்கான பட முடிவு

அடுத்துப் பார்த்தது ராஜி. RAAZI   ஒருத்தருக்கொருத்தர் ஒத்துப்போவதுனு அர்த்தம் வந்தாலும் இது தேசபக்திக் கதை. பார்க்கையிலேயே என்னுடைய தேசபக்தி ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சுடுச்சுனாப் பாருங்க. இது பற்றிய விமரிசனத்தைப் படம் வந்தப்போப் படிச்சேன். நிஜமான நிகழ்வு திரைப்படமாக்கப்பட்டிருப்பதாகவும் கேள்விப் பட்டேன். ஹரீந்தர் சின்ஹா என்னும் எழுத்தாளர் ஓர் நாவலும் எழுதி உள்ளார். நாவலின் பின்னணி தான் கதை என்றாலும் இந்திய உளவுத்துறையான "ரா" வில் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்ட ஓர் பெண்ணின் வாழ்க்கைச் சித்திரம். அந்தப் பெண் ராணுவ வீரரான தன் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க  இந்திய உளவாளியாகப் பாகிஸ்தான் செல்கிறாள். அதுவும் எப்படி? தன் தந்தையின் நீண்ட நாள் நண்பரான பாக்கிஸ்தானின் ராணுவ அதிகாரியான ஒருவர்மகனைத் திருமணம் செய்து கொண்டு. அவர் ராணுவத்தில் பிரிகேடியராக இருந்து ராணுவ ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றவர்.   அவர் மூத்த மகன், இரண்டாம் மகன் அனைவரும் ராணுவத்தில் இருப்பவர்கள். இரண்டாம் மகனைத் தன்  பெண்ணுக்கு மணமுடிக்கிறார் செஹமதின் தந்தை.

raazi க்கான பட முடிவு

அவர் பெண்ணிடம் வாங்கிய வாக்குறுதியே தேசத்துக்காக உழைக்க வேண்டும். உயிர்த்தியாகம் செய்யக் கூடத் தயாராக இருக்க வேண்டும் என்பதே! அதற்காகவே பெண்ணைப் பாகிஸ்தானுக்குத் திருமண பந்தம் மூலம் அனுப்பி வைக்கிறார். . அதனால் பாக்கிஸ்தான் செல்லும் அந்தப் பெண் அங்கே தன் வாழ்க்கையைத் தொடங்கும் முன்னர் தாய் நாட்டிற்குச் சேவை செய்வதில் ஈடுபடுகிறாள். ரகசிய உளவாளியாக. அவள் எப்படி எல்லாம் உளவு பார்த்துத் தகவல்கள் சேகரிக்கிறாள் என்பதையும் அதற்கு முன்னர்   இந்த வேலையில் சேரும் முன்னர் அவளுக்கு அளித்த பயிற்சிகளையும் பார்த்தால் எவ்வளவு கடுமையான வாழ்க்கை முறை என்பது புரியும். இத்தனை கடுமையான பயிற்சிகளுக்குப் பின்னரே அவர்கள் வேலையில் சேர்ந்து கொள்ள முடியும், அது ஆணானாலும் பெண்ணானாலும் என்பது படம் பார்க்கிறவர்கள் புரிந்து கொள்ளமுடியும். முக்கியமாய்க் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் நம்மவர்கள்! வெட்டி வீராப்புப் பேசிக்கொண்டு தமிழன் வீரன், அவனை ஒருவராலும் அழிக்க முடியாது எனச் சொல்லிக் கொண்டே தமிழையும் தமிழரையும் அழித்து ஒழிப்பவர்கள் கட்டாயமாய்ப் பார்க்க வேண்டிய படம்.

கடைசியில் உளவாளியாக பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி வீட்டிற்குப் போனவள் தன்னையும் அறியாமல் கணவனையே காதலிக்கத் தொடங்கி அவனுடன் ஒன்று சேருவது இயல்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறிப் பார்க்கும் அவள் உளவால் இந்தியா (கதைக்களம் 1971 ஆம் ஆண்டின் இந்தியா -பாக்கிஸ்தான், வங்காளத்துக்காகப் போரிட்ட போர்) பெறும் வெற்றியும் முக்கியமாக ஐ.என்.எஸ். விக்ராந்த் அடையும் வெற்றி. இந்தக் கதை முழுவதுமே இந்தியக்கப்பல்படைத் தலைவர் ஒருவரால் தன் கீழிருக்கும் ஊழியர்களுக்குச் சொல்லுவது போல் அமைந்துள்ளது. அதில் இந்த உளவாளிப் பெண்ணின் மகனும் ஒரு கப்பல்படை அதிகாரியாக இருந்து கேட்கிறான்.

கதைப்படி ஸெஹமத் ஆக நடிப்பவர் ஆலியா பட்! வாழ்ந்து காட்டியுள்ளார். அவர் மாமனாராக வரும் ஷிஷிர் ஷர்மா, கணவன் இக்பாலாக நடிக்கும் விக்ரம் கௌஷல் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களின் தன்மையை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்கள். கடைசியில் மனைவி என நினைத்துப் பார்க்கும் பெண் தன் மனைவி அல்ல என்பதைத் தெரிந்து கொள்ளாமலே இக்பல் குண்டு வீச்சில் கொல்லப்படுகிறான். அந்த குண்டு உண்மையில் செஹமத் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இந்திய ராணுவ வீரர்களே அங்கே மாறு வேஷத்தில் வந்து குண்டு போடுவதாகக் காட்டுகின்றனர். ஆனால் செஹமத் தப்பி விடுகிறாள். தன் மனைவி இந்திய உளவாளி எனத் தெரிந்து கொண்டதும் இக்பலின் மனக் கலக்கம், கொந்தளிப்பு அவர் நடிப்பில் தென்படுகிறது. அங்கே ராணுவ வண்டிகளில் எல்லாம் "க்ராஷ் இந்தியா" என எழுதப்பட்டிருப்பதைப்பார்க்கையில் எல்லாம் செஹமதின் தேசிய உணர்வு மேலோங்குகிறது. கடைசியில் இந்தியா திரும்பும் செஹமத் இக்பல் மூலம் தனக்குப் பிறக்கும் குழந்தையை வளர்த்து இந்திய ராணுவத்தில் சேர்த்துவிட்டுத் தனிமை வாழ்க்கை வாழ்கிறாள்.

படம் அருமை எனச் சொன்னால் போதாது. தமிழ்நாட்டில் எப்போ இத்தகைய படங்கள் வரும் என்னும் ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது. குல்சாரின் மகள் இயக்கத்தில் ஜோஹரின் மகன்கள் தயாரித்துள்ளனர். நல்லதொரு திரைப்படம் பார்த்த மன நிறைவு.

59 comments:

 1. இனி தினசரிஇரண்டு விமர்சனங்கள் வரும் என்று சொல்லுங்கள்!  நிறைய படங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

  ReplyDelete
  Replies
  1. இஃகி,இஃகி,இஃகி, பையர் வீட்டிலும் பார்க்கலாம். ஆனால் அங்கே தனியாக உட்கார்ந்து பார்க்கணும். அதோடு மத்தியானம் ரங்க்ஸ் தூங்கும்போது நானும் போய்ப் படுத்துடுவேன். மருமகள் தினமும் சொல்லுவாள். நீங்க பாட்டுக்குப் படம் பாருங்க என! :)))))

   Delete
  2. /மருமகள் தினமும் சொல்லுவாள். நீங்க பாட்டுக்குப் படம் பாருங்க என! :// - அவருக்கு எப்படித் தெரியும் எங்க கஷ்டம்? ஹா ஹா. இதான் சாக்கிட்டு ஒரே விமர்சனமா எழுதிக்கிட்டே இருக்காதீங்க. மத்த சப்ஜெக்டும் எழுதுங்க.

   Delete
  3. இன்னும் 2 படம் பார்த்து விமரிசனம் எழுதி வைச்சிருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்களால் தான் வெளியிடலை! :)))))

   Delete
 2. இந்த இரண்டுபடங்கள் பற்றியுமே அறிந்ததில்லை.  கிடைத்தால், நேரமிருந்தால் பார்க்கிறேன்! ஆமாம், எங்கே கிடைக்கும்?

  ReplyDelete
  Replies
  1. நெட்ஃப்ளிக்ஸ்னு நினைக்கிறேன். கேட்டுச் சொல்றேன். ஆனால் நான் "Raazi" பற்றிக் கேட்டிருக்கேன். விமரிசனங்கள் படித்திருக்கேன்.

   Delete
  2. நான் விசாரிச்சிட்டேன், இரண்டுமே பழையபடங்கள்தானாம்.. முதலாவது கொஞ்சம் கூட பழசு.. அதனால சிலசமயம் யூ ரியூப்பிலும் கிடைக்கலாம் தேடிப் பாருங்கோ. நெட்பிளிக்ஸ் இல் நானும் ஒரு ஹிந்திப்படம் பார்க்கத் தொடங்கினேன் சாருகான் நடிச்சது.. பாதியில விட்டிட்டேன்ன், பார்த்து முடிச்சதும் ஹிந்திப்பட விமர்சனம் மீயும் எழுதப்போறேனே:))

   Delete
  3. @சங்கமித்ரா, துங்கபத்ரா அதிரா, ராஜி படம் 2018 ஆம் ஆண்டில் வந்தது. முதலில் ஜெர்மனியில் மே 2018 ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தாதுன் படம் அக்டோபர் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் வந்தது. இது அதிகாரபூர்வமான தகவல்.

   Delete
  4. விக்கி, விக்கியும் பார்த்துட்டேன்.

   Delete
  5. Raazi picture in Amazon prime, the other two are Netflix

   Delete
 3. //கடைசியில் மனைவி என நினைத்துப் பார்க்கும் பெண் தன் மனைவி அல்ல என்பதைத் தெரிந்து கொள்ளாமலே இக்பல் குண்டு வீச்சில் கொல்லப்படுகிறான்.//
  //தன் மனைவி இந்திய உளவாளி எனத் தெரிந்து கொண்டதும் இக்பலின் மனக் கலக்கம், கொந்தளிப்பு அவர் நடிப்பில் தென்படுகிறது.//

  இந்த இரண்டு வரிகளும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதோ...   குழப்புகிறது.

  ReplyDelete
  Replies
  1. //உண்மையில் செஹமத் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இந்திய ராணுவ வீரர்களே அங்கே மாறு வேஷத்தில் வந்து குண்டு போடுவதாகக் காட்டுகின்றனர். ஆனால் செஹமத் தப்பி விடுகிறாள். // படத்தின் முடிவில் செஹமத் உயிருடன் இருப்பது எதிர்பாராத திருப்பம். படத்தைப் பார்த்தால் புரியும். மேற்கண்ட வரிகள் ஓரளவுக்குப் புரிய வைக்கும் என நினைத்தேன். அதோடு இக்பல் வீடு தான் பாகிஸ்தானின் ராணுவ ரகசியங்களைக் கடத்துகிறது என்பது திட்டவட்டமாகத்தெரிந்த பின்னர் அவர் வீட்டில் ராணுவம் சோதனை போடுகிறது. அப்போது தான் இக்பலுக்குத் தன் மனைவி ஓர் உளவாளி எனத் தெரிகிறது. இத்தனை விபரமாக எழுதினால் படத்தின் சுவாரசியம் குறையும் என்பதால் எழுதவில்லை.

   Delete
 4. தமிழில் காபி செய்து கெடுப்பதைவிட ஒரிஜினலில் பார்த்து விட்டுச் சென்று விடலாம்!  அவர்கள் கண்ணில் படாதிருப்ப்பதே நல்லது!

  ReplyDelete
  Replies
  1. அதே! அதே! ராணுவ வீரர்களாக நடிக்க நம்ம நடிகர்களுக்குத் திறமை போதாது! ஏகத்துக்கு உணர்ச்சிவசப்பட்டுக் கெடுத்துடுவாங்க. அதோடு இக்பலும், செஹமதும் வீட்டில் ஒன்றாக இருந்து கழிக்கும் பொழுதுகள் வெகு இயல்பாக ஒரு வீட்டில் எப்படி நடக்குமோ அப்படி நடந்து வருகிறதாகக் காட்டுகிறார்கள். இங்கே அதற்கென ரொம்ப விலை உயர்ந்த செட்டெல்லாம் போட்டு ஏகப்பட்ட நகைகளுடன் காட்சிகளை அமைப்பார்கள். கணவனும், மனைவியும் ஒன்று சேரும் இடத்தில் கொச்சைப்படுத்தி டூயட்டெல்லாம் போட்டுடுவாங்க.

   Delete
  2. //ரொம்ப விலை உயர்ந்த செட்டெல்லாம் போட்டு ஏகப்பட்ட நகைகளுடன் காட்சிகளை அமைப்பார்கள். கணவனும், மனைவியும் ஒன்று சேரும் இடத்தில் கொச்சைப்படுத்தி டூயட்டெல்லாம் போட்டுடுவாங்க// - மொத்தத்துல தமிழ்ப் படம் எடுத்தா, அதை 55+ வயசுக்காரங்கதான் பார்க்கும்படி எடுக்கணும்னு சொல்றீங்க. அதை நம்பி ஒரு தயாரிப்பாளர் எடுத்தாலும், அவங்கள்லாம், எப்போ நெட்ஃப்ளிக்ஸ்ல வருது இல்லை பொதிகைல வருதுன்னு காத்திருப்பாங்க.

   Delete
  3. நெட்ஃப்ளிக்ஸ் பத்தித் தெரியலை. அதில் புத்தம்புதுப்படங்களே அதிகம் வருகின்றன. அதாவது வெளியிட்டு ஒரு வருஷத்துக்குள்ளான படங்கள் என நினைக்கிறேன். ஏனெனில் மே 2019 ஆம் வருஷம் வெளிவந்த படம் நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு. அதே போல் அமேசான் ப்ரைமிலும் முற்றிலும் புதிய படங்களோ என நினைக்கிறேன். இதெல்லாம் பொதிகையில் வர ஒரு மாமாங்கம் ஆயிடும்.

   Delete
  4. புதுப்படங்கள் மட்டும் என்ன வாழ்ந்தது? அதன் உடை அலங்காரங்களே சகிக்க முடியாமல் இருக்கு. அதான் தொலைக்காட்சிகளில் காட்டறாங்களே, ட்ரெயிலர் அது, இதுனு! அதிலேயே பாடல் காட்சிகள் எதுவும் கண்ணால் பார்க்கும்படி இருப்பதில்லை. அதுவே மற்ற மொழிப்படங்களிலே பாடல் பெரும்பாலும் பின்னணியில் மெலிதாக ஒலிக்கும். சமீபத்தில் பார்த்த தீன் (Te3n) படத்திலும், பதலா (Badhla) படத்திலும் அப்படித் தான்!

   Delete
 5. ராஜி/ சம்மதம் தேசபக்தி படம், நன்றாக இருக்கிறது என்று உங்கள் விமர்சனம் மூலம் தெரிகிறது.
  பார்க்கும் ஆவலை தூண்டும் விமர்சனம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, படம் இரண்டுமே நன்றாக உள்ளன. முடிஞ்சால் பாருங்க! ராஜி=ஒத்துப் போவது என்றும் சொல்லலாம்.

   Delete
 6. ராஜி பார்க வேண்டுமென தோன்றுகிறது.முடிந்தால் பார்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி, முடிஞ்சப்போப் பாருங்க!

   Delete
 7. என் பெண் நிறையதடவை ராஸி படம் பார்க்கச் சொல்லிட்டா. நான் இன்னும் பார்க்கலை. அவள் ரெகமண்ட் பண்ணின லயன் என்ற படம் ரொம்ப அட்டஹாசமாக இருந்தது. வாய்ப்பிருந்தால் பார்த்து, விமர்சனம் எழுதுங்கள். ராஸி படத்துக்கான விமர்சனம் நல்லா இருக்கு.

  நீங்க எழுதற வேகத்தைப் பார்த்தால், ஒரு வேளை நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் இவற்றில் விமர்சன வேலைக்காக அப்ளை பண்ணியிருக்கிறீர்களோ என்ற சந்தேகம் வருது.

  ReplyDelete
  Replies
  1. லயன் படம் இங்கே உள்ள பட்டியலில் இருக்கானு பார்க்கச் சொல்றேன். "ஜோஷ்" படம் பார்க்க ஆவல். ஆனால் அது அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் எதிலுமே இல்லையாம். ஹாட் ஸ்டார்னு ஒண்ணு இருப்பதே தெரியாது. நானெல்லாம் இதுக்கெல்லாம் சந்தாக் கட்டிப் படம் பார்க்கும் அளவுக்குத் திரைப்படங்களில் ஆவல் உள்ளவள் இல்லை. இங்கே ஏதோ சமயம் வாய்ப்பதாலும் இலவசமாகப் பார்க்கலாம் என்பதாலும் பார்க்கிறேன். அவ்வளவே! இந்தியா வந்தால் தொலைக்காட்சிகளில் போடும் படங்களைக் கூடப் பார்ப்பதில்லை.

   Delete
  2. லயன் படமெல்லாம் எங்க பெண்ணுக்குக்கிடைக்கும் பட்டியலில் இல்லையாம்.

   Delete
 8. ஆமாம்... ஏன் இப்படி Anti Tamil ஆகிட்டீங்க. தமிழ்ப்படங்கள் பார்ப்பதில்லையா?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, தமிழ்ப்படங்களின் நடிகர்களில் யாருமே இப்போதைக்குப் பிடிச்சவங்களா இல்லை. அதோடு கதையம்சம், படப்பிடிப்பு, நடிப்பு எல்லாம் மிகை. முக்கால்வாசிப் படங்கள் அரசுக்கும் நம்ம நாட்டுக்கும் எதிரான கருத்துக்களைப் பிரதிபலிக்கும் படங்கள்! தமிழ்நாடு தாண்டினால் வடக்கே தேசபக்தி இன்னமும் அதிகமாகவே உள்ளது.

   Delete
 9. அந்தாதுன் போஸ்டரைப் பார்த்தால், அந்தப் படம் பார்க்கும் வயசு எனக்கு இன்னு வரலை. ஹா ஹா

  ReplyDelete
 10. ஆஆஆஆஆஆஆ கீசாக்கா அம்பேரிக்கா போய் இப்போ அதிராவின் வேலையைப் பார்க்கிறா:)) அதாவது விமர்சனம் எழுதுவது ஹா ஹா ஹா.

  ஆனா இம்முறை சூப்பராக எழுதியிருக்கிறீங்க இரண்டு விமர்சனங்களும்.

  படம் பார்க்கோணும் எனும் ஆவலைத்தூண்டும் விதமாக எழுதியிருக்கிறீங்க.. அதுக்காகவே நான் கந்தசஷ்டி பாரணை முடிஞ்சதும் கீசாக்காவுக்கு மரக்கறி ஃபிறைட் ரைஸ் செய்து தரப்போறேன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. வாங்க சங்கமித்திரை, துங்கபத்ரா,அதிரடி அதிரா, நேத்துத் தான் பொண்ணு வெஜிடபுள் ரைஸ் (மரக்கறி உணவு) பண்ணிக் கொடுத்தா! வெங்காயம், பூண்டு இல்லாமல்! அதனால் உங்க மரக்கறி ஃப்ரைட் ரைஸ் எனக்கு வேண்டாம். அது எங்கேயானும் குழை ஜாதமா இருந்துட்டா என்ன செய்யறது? விமரிசனங்களுக்குக் கொடுத்திருக்கும் பாராட்டுகளுக்கு உண்மையாவே நன்னி ஹை!

   Delete
 11. ஆனா கீசாக்கா விமர்சனத்தில ஒரு குறை விட்டிட்டீங்க என்ன தெரியுமோ? கடசிவரைக்கும் அவை என்ன மொழிப்படங்கள் எனச் சொல்லவே இல்லை நீங்க கர்ர்ர்ர்:)).

  //இந்தப்படத்தைக் கதை எழுதி இயக்கியவர் ஸ்ரீராம்//
  இதைப்பார்த்து மீ ஒருகணம் ஆடிப்போயிட்டேன்ன்:)).. ஆனா எங்கட ஸ்ரீராம் எனில் கதாநாயகி அனுக்கா:) எல்லோ.. இது வேறு நபர் என்பதால புரிஞ்சிட்டேன்ன்:) ஹா ஹா ஹா.

  உண்மையில் இன்று அழகிய போஸ்ட் கீசாக்கா, அழகாக அலுப்படிச்சிடாமல் எழுதியிருக்கிறீஇங்க... எனக்குப் பிடிச்சிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. அட! அதிரடி, இவை ஹிந்திப்படங்கள். நீங்க பல்மொழி வித்தகி ஆச்சே, படத்தின் பெயரைப் பார்த்தாலே தெரிஞ்சுடும்னு நினைச்சால்! இஃகி,இஃகி,இஃகி, உங்களுக்கு என்ன மொழினே தெரியலையா? வி.வி.சி. நானும் ஸ்ரீராம் பெயரைப் பார்த்துட்டு ஒரு நிமிஷம் திகைச்சுப் போய்ப் பின்னால் வந்த ராகவன் பெயரைப் பார்த்துட்டு இது வேறே யாரோனு புரிஞ்சுண்டேன்! :))))) மீண்டும், மீண்டும் பாராட்டுகளுக்கு நன்னி, நன்னி, நன்னி!

   Delete
 12. விரிவாக அலசி விமர்சிக்கின்றீர்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி.

   Delete
 13. நல்ல விமர்சனம். பார்க்க வேண்டும் என நினைத்த படங்கள்....

  ReplyDelete
  Replies
  1. முடிஞ்சப்போப் பாருங்க வெங்கட்! இரு படங்களுமே நன்றாக உள்ளன.

   Delete
 14. வணக்கம் சகோதரி

  இரண்டு படங்களுக்கும் நன்றாக விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். பொதுவாக இப்போதெல்லாம் படங்கள் நான் அவ்வளவாக பார்ப்பதில்லை. தங்கள் விமர்சனம் கண்ட பிறகு இந்தப் படங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது. ஆனால் இவர்கள் பார்க்கும் நேரம் எனக்கு ஒத்து வராது. மதியம் சின்ன குழந்தைகள் இருப்பதால் படங்கள் பார்க்க முடியாது. தாங்கள் கூறுய கதைகளே படம் பார்த்த திருப்தியை உண்டாக்கி விட்டது. இது போல் நிறைய விமர்சனங்களை தாருங்கள். கதையை படித்து விடுகிறேன். ஹா. ஹா. ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, நானும் இங்கே யு.எஸ். வந்தால் தான் படங்களே பார்க்கிறேன். முன்னெல்லாம் யப் தொலைக்காட்சி வரும் முன்னர் வீடியோ வாங்கி வந்து பார்ப்போம். ஒரு வாரத்துக்குப் பத்துப் பதினைந்து படங்களெல்லாம் பார்த்திருக்கோம். இப்போ யப் தொலைக்காட்சி வந்ததும் நிதானமாக நேரம் கிடைக்கையில் பார்க்கிறேன். இப்போ அவர் பார்ப்பதில்லை. நான் மட்டும் தான் பார்ப்பேன். நேற்று "பதலா" என்றொரு படம் அமிதாப் நடிச்சது பார்க்க ஆரம்பித்தேன். முடிக்க முடியலை!

   Delete
 15. பெண்ணின் அமேசான் ப்ரைம் காலாவதியாயிருந்தது (சில வாரங்களாக.... படிப்பு). நான் இந்தப் படம் பார்க்க திரும்பவும் சப்ஸ்க்ரைப் செய்தேன். அவள் நிறைய தடவை இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லியிருந்தாள்.

  லயன் படத்தைப் போல (தேவ் படேல், 2016ல் வந்த படம். இந்தியாவிலிருந்து ஒரு அனாதைச் சிறுவன் - ஹோமில் இருப்பதால் அனாதை என நினைக்கிறார்கள், ஆஸ்திரேலியாவில் வளர்ந்து, பிறகு தன் பெற்றோரைத் தேடி வருவது), ராஸி படம் மிக மிக அருமை. படம் பார்த்த பிறகு, எனக்கு விக்ரம் கெளஷில் கேரக்டர் மனதில் நின்றது. எல்லா கேரக்டர்களும் அருமை. இந்தச் சின்னப் பெண்ணா இப்படி நடிக்கிறது? அருமையான படம். நீங்க சரியான விமர்சனம் கொடுத்திருக்கீங்க.

  தமிழகத்தில் இந்த மாதிரியான படங்கள் ஓடாது, எடுக்கவும் மாட்டாங்க.

  ReplyDelete
  Replies
  1. நெ.த. தமிழிலும் ஒரு காலத்தில் "கப்பலோட்டிய தமிழன்" "கட்டபாண்டிய வீர பொம்மன்" :))))) சேச்சே, "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற தேசபக்திப் படங்கள் வந்தன. அது ஒரு காலம். சமீபத்திய ரோஜாவையும் சொல்லலாம். பாம்பே போன்ற படங்களையும் சேர்த்துக்கலாம். (பாம்பே படம் பார்த்ததில்லை என்றாலும்) ஆனால் கடந்த 20 வருஷங்களுக்கும் மேலாகத் தமிழில் அப்படிப்பட்ட படங்கள் வருவதில்லை. அதான் வருத்தம். வரும் படங்களும் பார்க்கும்படியாக இல்லை. ஒரு சில படங்கள் "கோ" "எங்கேயோ எப்படியோ(?)" படம் பெயர் சரியானு தெரியலை. பஸ் விபத்து நடக்கும் படம். அப்புறமா ஒரு படம் கும்பகோணத்தின் ஒரு ஓட்டலை வைத்து எடுக்கப்பட்ட படம். இதெல்லாம் யாரோ சாமானிய நடிகர்கள் எடுத்தது. அதனால் அதிகம் பிரபலம் ஆகலை போல. தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். மற்றபடி யார் கோவிச்சுண்டாலும் தமிழில் திரைப்படம் என்பதன் உண்மையான அர்த்தத்தைச் சொல்லும்படியான படங்கள் வரலை என்பதே உண்மை.

   Delete
 16. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படங்களில் அந்தாதூன் மட்டுமே நான் பார்த்தேன். நீங்கள் சொல்லியிருப்பது போல தபு மிகச்சிறப்பாக நடித்திருந்தார்(அவர் எந்த படத்தில்தான் சிறப்பாக )நடிக்கவில்லை?)  என்றே எனக்கும் தோன்றியது. 

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, தபு, ஷாபனா ஆஸ்மி, ஸ்மிதா படீல், அனுபம் கேர் போன்றவர்கள் எல்லாம் தியேட்டர் கலைஞர்களாக இருந்து திரைப்படத்துக்கு வந்தார்கள். முன்னாட்களில் அமோல் பலேகர் இப்படித் தான் நடித்து வந்தார். பல சிறப்புப் படங்கள் உண்டு அவர் நடித்ததில்! ஓம்புரி, நஸ்ருதீன் ஷா ஆகியோரின் நடிப்பைச் சொல்லவே வேண்டாம். வாழ்ந்து காட்டுவார்கள்.

   Delete
 17. தமிழகத்தில் இந்த மாதிரியான படங்கள் ஓடாது, எடுக்கவும் மாட்டாங்க. ஒரு விஷயத்தை உயர்த்த வேண்டுமென்றால் இன்னொரு விஷயத்தை மட்டப்படுத்த வேண்டுமா? தமிழிலும் சிறந்த படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை நாம் பார்க்காதது அந்தப் படங்களின் தவறு இல்லையே. தவிர ஹிந்தி படங்களுக்கான மார்க்கெட் உலகளாவியது. அதோடு ஒப்பிடும் பொழுது தமிழ் படங்களின் மார்க்கெட் மிகவும் சிறியது. உடனே மலையாள படங்கள் இல்லையா என்று கேட்காதீர்கள். அந்த ரேன்ஜ் வேறு. 
     ReplyDelete
  Replies
  1. மலையாளப்படங்கள் தமிழாக்கம் செய்கையில் எவ்வளவு மோசமாக எடுக்கப்படுகின்றன என்பதற்குச் "சந்திரமுகி" ஒன்று போதும். அடுத்து "பாபநாசம்" மலையாளத்தில் பார்த்துட்டுத் தமிழில் அப்படி ஒன்றும் கவரவில்லை. அதே போல் "த்ருஷ்யம்" படமும் ஹிந்தியில் கொலை என்று பெண் சொன்னாள்.

   Delete
  2. //ஒரு விஷயத்தை உயர்த்த வேண்டுமென்றால் இன்னொரு விஷயத்தை மட்டப்படுத்த வேண்டுமா? தமிழிலும் சிறந்த படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை நாம் பார்க்காதது அந்தப் படங்களின் தவறு இல்லையே. தவிர ஹிந்தி படங்களுக்கான மார்க்கெட் உலகளாவியது. அதோடு ஒப்பிடும் பொழுது தமிழ் படங்களின் மார்க்கெட் மிகவும் சிறியது. //எங்கே மட்டப்படுத்தினேன் என்பதைச் சுட்டிக்காட்டவும். அதோடு தமிழின் படச்சந்தையும் உலகளாவியது தான். அப்படி ஒன்றும் மோசமான சந்தை இல்லை. கோடிக்கணக்கில் போட்டுப் பணம் எடுக்கிறார்கள். ஆகவே வணிக ரீதியான லாபத்தைத் தான் பார்க்கிறார்கள். ஆனால் ரசிகத்தன்மை என்பது வேறு. மற்றமொழிகளில் திரைப்பட நடிகர்களை தெய்வமாக வைத்துக் கும்பிட்டுப் பாலபிஷேஹம் எல்லாம் செய்வதில்லை. ஆனால் தமிழில்? ஏதோ கோயில் கும்பாபிஷேஹம் போல் அல்லவா நடக்கிறது? அப்படியானும் அந்தப் படம் ஏதேனும் சமூக நீதியைச் சொல்லும் கருத்துக்களைச் சொல்லுகிறதா என்றால்? :((((((((

   Delete
 18. இதோ //நல்லவேளையா இந்தப் படங்களெல்லாம் நம்ம தமிழ் இயக்குநர்கள் பார்ப்பதில்லை. பிழைத்தோம்.//படம் அருமை எனச் சொன்னால் போதாது. //தமிழ்நாட்டில் எப்போ இத்தகைய படங்கள் வரும் என்னும் ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது. //

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய ஆதங்கத்தைத் தானே வெளிப்படுத்தி இருக்கேன். இதில் என்ன தப்பு? தமிழ்மொழிப் படங்கள் பேசத்தக்கனவாக மாறணும் என்பது என் விருப்பம் என்பதைத் தான் சொல்கிறேன். அன்றும், இன்றும், என்றும். இது ஒண்ணும் மட்டம் தட்டுவதாக இல்லை. அக்கம்பக்கம் பார்த்தாவது நம் படங்கள் முன்னேறாதா என்னும் தவிப்பு! நீங்க வெங்கட் ஸ்வாமிநாதனின் சினிமா விமரிசனங்களைப் படித்தால் என்ன சொல்லுவீர்களோ? :)))) நல்ல வேளையா அவர் இப்போ இல்லை.

   Delete
 19. உங்களுடைய இந்த ஸ்டேட்மென்ட் என்னவோ ஹிந்தி படங்கள் அத்தனையும் அமர காவியங்கள், தமிழ்ப் படங்கள் அத்தனையும் குப்பைகள் என்பது போல அர்த்தம் கொடுக்கிறது. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்று அகில இந்திய அளவில் தொழில் நுட்பத்தில் முதலிடத்தில் இருப்பது தமிழ்ப் படங்கள்தான். அதைப்போல ஹாலிவுட் படங்களுக்கு அடுத்து தமிழ்ப் படங்களில்தான் நகைச்சுவை சிறப்பாக இருக்கும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. 
  இன்னுமொரு முக்கிய விஷயம், மசாலா படங்களாக இருந்தாலும் தமிழ்ப் படங்களை ஒருமுறையாவது பார்க்க முடியும். ஹிந்தி மசாலா படங்கள் சகிக்காது. 
  செல்வராகவனின் காதல் கொண்டேன்,புதுப்பேட்டை, வெற்றி மாறனின் பொல்லாதவன், ஆடுகளம்(அதிலும் தாப்ஸிதான் ஹீரோயின்), விசாரணை - இதில் பாடல், சண்டை, காதல் காட்சிகள் கிடையாது. ஏன் கதா நாயகியே கிடையாது.  கார்த்திக் சுப்புராஜின் படங்கள், குறிப்பாக இறைவி, விக்னேஷ் சிவனின் நானும் ரௌடிதான் மிக நல்ல பொழுது போக்கு படம். லோகேஷ் கனகராஜின் மாநகரம், பா.ரஞ்சித்தின் மெட்ராஸ்,  தனுஷின் பா.பாண்டி போன்றவை நல்ல படங்கள்தான். இன்னும் நிறைய இருக்கின்றன. நான் எனக்கு நினைவில் வந்தவைகளை குறிப்பிட்டேன். நேரம் கிடைத்தால் இவைகளை பாருங்கள். இப்போது வந்திருக்கும் பார்த்திபனின் ஒத்தை செருப்பு மிகவும் வித்தியாசமான ஒரு முயற்சி என்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை. இவைகளை பார்த்துவிட்டு நீங்கள் இஃகி இஃகி என்று சிரித்தால் என்னால் ஒன்றும் பண்ண முடியாது. 

  ReplyDelete
  Replies
  1. பொல்லாதவன் படம் இத்தாலியப்படத்தின் தழுவல். அதானே சொல்றீங்க? ரஜினி நடிச்ச "பொல்லாதவன்" படத்தின் அதே தலைப்பில் தனுஷும் நடிச்சார்/ நடிக்க வைக்கப்பட்டார்? ஆடுகளம், கோழிச்சண்டை? இந்த இரண்டு படங்களும் கொஞ்சம் கொஞ்சம் பார்த்திருக்கேன்.விசாரணை இங்கே நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு. இன்னும் தமிழ்ப்படம் பார்க்க ஆரம்பிக்கலை. அப்போப் பார்க்கலாம்னு எண்ணம். அது நாவலாக வந்ததுனு நினைவு. லாக்கப்? வடசென்னை படமும் அசுரன் படமும், பார்த்திபனின் ஒற்றைச் செருப்புப் படமும் நன்றாக இருப்பதாக விமரிசனங்களில் படித்தேன். பார்த்திபனின் ஒற்றைச் செருப்புப் படத்தை மாட்டுப்பெண்ணுக்கு சிபாரிசும் செய்திருக்கேன். இதைத் தவிர "மெய்" என்றொரு படமும், சித்தார்த் நடித்த ஒரு படமும், பெயர் நினைவில் இல்லை. பாதிப் பாதி பார்த்தேன். பசங்க 2 படம்? சூர்யா நடிச்சதுனு நினைக்கிறேன். அதுவும் பார்த்தேன். அதெல்லாம் எழுதலை. மற்றபடி ஹிந்தியில் நான் மசாலா படங்கள் பார்க்கிறேன்னு யார் சொன்னது? தேர்ந்தெடுத்துத் தான் பார்க்கிறேன். திரைப்படம் அதற்குரிய தகுதியுடன் இருந்தால் மட்டுமே பார்ப்பேன். அந்த வகையில் இதே அமிதாப் நடித்த ஆரம்ப காலப்படங்களில் குறிப்பிட்ட சில தான் பார்த்திருக்கேன். படம் பார்த்தால் மன நிறைவு வரணும்.

   Delete
  2. தமிழில் மட்டும் இல்லை, ஹிந்தி மற்ற எந்த மொழியிலும் மசாலாப் படங்களை நான் பார்ப்பதே இல்லை. அவ்வளவுக்குப் பொறுமை இல்லை. ரஜினியோ கமலோ நடித்த எந்தப் படமும் பார்க்கிறதே இல்லை. அதே போல் விஜய் நடித்தது ஃப்ரண்ட்ஸ், கில்லி, சூரியாவுடன் நடித்த ஒரு படம், ரகுவரனும், ரோஹிணியும் அதில் இருப்பாங்கனு நினைக்கிறேன். இப்படித் தேர்வு செய்து தான் பார்க்கிறேன்.

   Delete
  3. //அதைப்போல ஹாலிவுட் படங்களுக்கு அடுத்து தமிழ்ப் படங்களில்தான் நகைச்சுவை சிறப்பாக இருக்கும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. // இது நல்ல நகைச்சுவை தான். தொடர்ந்து படம் பார்க்கும் பலரும் சொல்லுவது (ஏனெனில் எனக்கு அவ்வளவாகத் தெரியாது) வடிவேலு நடிப்பது நின்றவுடன் தமிழ்ப்படங்களின் நகைச்சுவைக்காட்சிகள் தரம் குறைந்து விட்டது என்று சொல்லுவதே! என்னால் எப்போவுமே கவுண்டமணி-- செந்திலை ரசிக்க முடிந்ததில்லை. விவேக் சில சமயங்கள் பரவாயில்லை ரகம். சந்தானம் பேசுவதே எரிச்சலைத் தரும்! :))))) உயர்ந்த நகைச்சுவை என்பதே தற்போதைய தமிழ்த் திரைப்படங்களில் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. அதெல்லாம் நாகேஷோடு போச்சு! "மகளிர் மட்டும்" படத்தில் பிணமாக நடித்தே சிரிப்பைக் கொண்டு வருவாரே! அதை விடவா?

   Delete
  4. பொல்லாதவன் --- Bicycle Thieves Italiyan picture between 1940s 1950s. Sathyajith Ray was impressed by this picture. Read this sometime ago while reading about Ray!

   Delete
 20. தமிழில் தேசபக்தி படங்கள் வருவதில்லை என்பது உண்மைதான். ரோஜாவையும், பாம்பேயையும் தேசபக்தி படங்கள் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அவை இரண்டும் காதல் மற்றும் பேமிலி ட்ராமா. தேச பக்தி அவைகளில் ஊறுகாய். 

  ReplyDelete
  Replies
  1. அந்த ஊறுகாய் கூட இப்போ வைப்பதில்லை. மசாலா போதும்னு விட்டுட்டாங்க போல! ரோஜா, பாம்பே தேசபக்திப்படங்கள் இல்லை என்றாலும் அதன் மூலம் தேசபக்தி தூண்டிவிடப்பட்டது. அதுவும் ஓர் சமகால நிகழ்வை ஒட்டி எடுத்த படம் தான். பாம்பேயும் அப்படித்தான். அதே மணி ரத்னம் பின்னால் எப்படி மாறிப் போனார்? :(

   Delete
 21. //மற்றமொழிகளில் திரைப்பட நடிகர்களை தெய்வமாக வைத்துக் கும்பிட்டுப் பாலபிஷேஹம் எல்லாம் செய்வதில்லை. ஆனால் தமிழில்? ஏதோ கோயில் கும்பாபிஷேஹம் போல் அல்லவா நடக்கிறது? அப்படியானும் அந்தப் படம் ஏதேனும் சமூக நீதியைச் சொல்லும் கருத்துக்களைச் சொல்லுகிறதா என்றால்? :(((((((( // I think this is irrelevant to the topic.  

  ReplyDelete
  Replies
  1. உங்க கருத்து உங்களுக்கு. என் கருத்து எனக்கு. இதை விடக் கடுமையாக எல்லாம் எங்க வீட்டிலேயே சொல்லுவாங்க. அதுக்காகச் சும்மாவானும் பாடாவதிப் படங்களைப் பார்த்து நேரத்தை வீணடிக்க முடியுமா? அதோடு நான் திரைப்படங்களைப்பார்த்தே ஆகணும் என்று விரும்பும் திரைப்பட ரசிகையும் அல்ல. எப்போவோ பார்க்கும் ஒன்றிரண்டு படங்களை நல்லவையாகத் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் ரகம்.

   Delete
 22. அக்கா உங்களை பேசி ஜெயிக்க முடியுமா? 
  நான் குறிப்பிட்டிருக்கும் படங்களை பாருங்கள். அசுரன் முதல் பாதி ஓகே. இரண்டாம் பாதியில் ஒரே வன்முறை. கார்த்திக் சுப்புராஜின் படங்கள் பாருங்கள். முக்கியமாக இறைவி. 

  ReplyDelete
  Replies
  1. நேற்றுத் தான் முகநூலில் ஸ்ரீராம், "அசுரன்" படத்தை எதிர்பார்ப்புக்களோடு பார்க்காதீர்கள் என எச்சரிக்கை கொடுத்திருந்தார்! :))))))) முடிஞ்சால் பார்க்கிறேன். ஆனால் தனுஷ் நடித்த/எடுத்த படங்களில் எனக்குப் பிடித்தது ராஜ்கிரண், ரேவதி நடிச்சிருந்த ஒரு படம்! இருவருமே பால்ய சிநேகிதர்கள். திருமணம் செய்துக்க ஆசையும் பட்டாங்கனு நினைக்கிறேன். பின்னர் பிரிந்து போய் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து ஐம்பதுகளின் இறுதியில் ஒருவரை ஒருவர் சந்திக்க ஆசைப்பட்டு (முகநூல் மூலம் நட்பு?) சந்திக்கும் காட்சிகள். இதெல்லாம் அருமை.

   Delete