எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் என்பது தமிழில்
கவிதை வடிவில் வந்துள்ளது. அதற்குப் பெயர் "லலிதாம்பாள் சோபனம்" என்பது.
இந்த லலிதாம்பாள் சோபனம் ரொம்ப நாள் கிடைக்காமல் இருந்ததாம். பின் சகோதரி
சுப்புலட்சுமி அவர்களால் தேடிக் கண்டெடுக்கப் பட்டு திருத்தங்களும் அவர்களால் செய்யப் பட்டு அவர்களாலேயே வெளியிடப் பட்டிருக்கிறது.சகோதரி சுப்புலட்சுமிக்கு அறிமுகம்
தேவையில்லை என நினைக்கிறேன். அவர் தன் வாழ்நாளில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களையும், இடையூறுகளையும் கடந்து எதிர்த்துப் போராடி தமது
மனோபலத்தினால் தன் வாழ்நாளில் வாழ்ந்து காட்டியவர். எவ்விதக் கல்வி
அறிவும் பெண்களுக்குக் கொடுக்கப் படாமல் இருந்த காலத்தில் தான் கல்வி
கற்றதோடு அல்லாமல் ஒரு பள்ளியில் ஆசிரியராகவும் பணி புரிந்து பெண்களுக்குக் கல்வியும், வேலையும் இருந்தால் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என நிரூபித்தவர். படிப்போடு மட்டும் இல்லாமல் ஆத்மஞானமும், பக்தியும் கூடப் படித்தவர், படிக்காதவர்
எல்லாருக்கும் தேவை எனப் பல நூல்களின் மூலம் சொல்லி இருக்கிறார். அவர் வாழ்வும், சொல்லும் மனித சமுதாயத்துக்கு, முக்கியமாகப் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக
அமைந்துள்ளது என்று சொல்லலாம். அவரால் செப்பனிடப் பட்ட இந்த "லலிதாம்பாள் சோபனம்" படித்தால் எல்லாருக்கும் எல்லா நன்மைகளும் கிட்டும் என்று ஆன்றோர் வாக்கு.
************************************************
லலிதாம்பாள் சோபனம்: ஒரு அறிமுகம்
இந்த லலிதாம்பாள் சோபனம் முதலில் வாய்ப்பாடமாகவே வழங்கப் பட்டிருக்கிறது. பெண்கள் வேலை செய்யும்போது பாட்டுக்களாகப் பாடி வந்திருக்கிறார்கள். இதில் தேவியின்
அவதாரங்களைப் பற்றிக் கூறியுள்ளது. அதாவது பரமேஸ்வரியான தேவியும்,
மஹாவிஷ்ணுவும் ஒருவரே என்ற கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது. ஸ்ரீ என்ற
சொல்லானது மங்களத்தைக் கொடுப்பதோடு அல்லாமல் ஸ்த்ரீ என்று பெண்களைக்
குறிக்கும் சொல்லாகவும் உடையதாய் இருக்கிறது. தேவியின் அம்சம் தான் விஷ்ணு, விஷ்ணுவின் அம்சம்தான் தேவி, அதனால் தான் இருவரும் சகோதரர்கள்
என்று சொல்லப் பட்டாலும் உண்மையில் இருவரும் ஒருவரே. அம்பிகையே தன்
விஷ்ணு அவதாரத்தில் மோகினி ரூபம் எடுத்து ஈஸ்வரனுடன் சேர்ந்து சாஸ்தா
பிறந்தார் என்று சொல்லப் படுவது உண்டு. இந்த இடத்தில் நாம் மனித வாழ்வோடு
சேர்த்துப் பார்த்தாலும், இப்படி எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பிறவியில் ஆணாக இருப்பவர்
அடுத்த பிறவியிலும் ஆணாகத் தான் இருப்பார் என்பது நிச்சயம் இல்லையே?
அதே போல் தான் ஒரு பிறவியில் விஷ்ணுவாக இருந்தவர் மோகினி என்ற
இன்னொரு பிறவியில் பரமேஸ்வரனைக் கல்யாணம் செய்து கொண்டு சாஸ்தா
பிறக்கிறார்.. ஆகவே இதில் எந்தவிதமான குழப்பத்திற்கோ, ஆணும், ஆணும் சேர்ந்து
பிள்ளை பெற்றார்கள் என்று சொல்வதற்கோ இடமே இல்லை. எதையும் சரியாகப் புரிந்து கொண்டால் சந்தெகத்துக்கே இடம் இல்லை. மேலும் ஈஸ்வரனுக்கே அர்த்தநாரீஸ்வரர் என்றும் ஒரு பெயர் உண்டு. சங்கரநாராயணர் என்றும் ஒரு பெயர் உண்டு. மேலும்
அம்பிகையைத் துதிக்கும் நாமங்களில் "வைஷ்ணவி," "விஷ்ணு ரூபிணி",
"நாராயணி" என்று எல்லாம் துதிப்பது உண்டு. இனி தேவியின் அவதாரங்கள்
பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Tuesday, January 30, 2007
பதிவைக் காணோம்!!!!!!!!
நேத்து ஒரு பதிவு எழுதி சேமிப்பில் போட்டேன். எந்தக் கணக்கிலே போச்சோ, காணவே காணோம், இந்த அழகிலே இந்த ராம் வந்து புது ப்ளாகுக்கு மாறுங்க, மாறுங்க அப்படின்னு தொந்திரவு செய்யறார்.அப்புறம் என்னோட ப்ளாகையே தேடிக் கண்டு பிடிக்கிறாப்பல ஆயிடும். அப்புறம் என்னோட இலக்கியத் தொகுப்பு என்ன ஆகிறது? ராமுக்கு இந்த ப்ளாக்கர் ஏதாவது சம்திங் கொடுத்திருப்பாங்களோ என்னமோ தெரியலை. அப்புறம் நிறையப் பேர் இப்போ ஒண்ணும் எழுத முடியலைன்னு சொல்லி இருக்காங்க. அம்பி தான் தங்கமணி கிட்டே பேசவே நேரம் பத்தலைன்னு சொல்லிட்டார். இதிலே கார்த்திக் மட்டும் கொஞ்சம் பிசி. அவர் இப்போ ரொம்பவே நிறைய இடத்தில் எழுத ஆரம்பிச்சிருக்கார். நல்லா எழுதட்டும். அந்தக் கிராமத்து மண் வாசனை நிஜமாவே எழுத்தில் வருது. அதான் பாராட்டும், புகழும் தேடி வந்திருக்கு. வாழ்த்துக்கள். வேதா(ள்) பிசின்னு சொல்லிட்டு,என் ப்ளாகைத் தவிர மத்த எல்லாருக்கும் பின்னூட்டம் கொடுத்துட்டு இருக்காங்க, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இதுக்கு இருக்கு உங்களுக்குத் தனி ஆப்பு. அப்புறம் எஸ்.கே.எம்., புலி இவங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா எழுதலை. புலிதான் இந்தியாவிலே இருக்கு. ஹிஹிஹி, என்னைக் கூட வந்து பார்த்து உறுமிட்டுப் போயிடுச்சு. அப்புறம் சூடான் போய்த் தான் எழுதணும்னு சொல்லிட்டார். எஸ்.கே.எம்.சீக்கிரம் எழுத ஆரம்பிச்சா நல்லா இருக்கும்.
இந்தச் சென்னை மாமி அல்லது உமாகோபுவையும் காணோம். ச்யாம் வழக்கம்போல் 4 வரி எழுதிட்டு நூத்துக்கணக்கில் பின்னூட்டம் வாங்கிட்டு இருக்கார். அது எப்படி? பெரிய "சிதம்பர ரகசியம்" மாதிரி இருக்கே? மணிப்ரகாஷ் நான் பின்னூட்டம் போட்டதைக் கூடப் பார்க்காமல் ஏன் வரலைன்னு கேட்டுட்டுப் போறார். அவ்வளவு பிசி. மத்தவங்க சில பேர் எழுதறதே இல்லை, பின்னூட்டத்துக்காக ப்ளாக் வச்சுட்டு இருக்காங்க. விஷயம் நிறைய இருந்தும் என்னாலயும் எழுத முடியலை. 2 மாசமாவே ரொம்பப் பிரச்னைகளுக்கு நடுவில் ஏதோ ஒப்பேத்திட்டிருக்கேன். இப்போக் கூடச் "சிதம்பர ரகசியம்" பத்தித் தான் எழுதணும்னு ஆரம்பிச்சேன். ஆனால் எங்கேயோ போயிடுச்சு. சனிக்கிழமை சிதம்பரம் போயிருந்தேன். அப்போ எங்க நண்பரான தீட்சிதர் அவரோட ஆராய்ச்சி பற்றியும், சிதம்பரம் பற்றியும் புதுத் தகவல்கள் கொடுத்தார். இன்னும் கடலூரில் ஸ்ரீநடேசன் அவர்கள் சில கோயில்கள் அழைத்துப் போனார். அது பற்றியும் எழுதணும். ஆனால் என்னமோ நேரமே கிடைக்கிறதில்லை. நேத்து எழுதி அதை நோட்பேடிலேயாவது போட்டு வச்சிருக்கணும், இதிலேயே சேமிப்போம்னு சேமித்தால் "சேமிப்பா அப்படின்னா?" னு கேட்குது ப்ளாகர். என்னத்தைச் சொல்றது? அப்புறம் நிறையப் பேர் என்னைப் பார்க்கவும் நேரம் கேட்டிருக்காங்க. ஹிஹிஹி, இதிலிருந்தே தெரியுது இல்லையா? நான் தலைவின்னு? (மனசாட்சி: ஆனால் பார்க்கிறவங்க ஏமாந்து தான் போவாங்க, அப்படி ஒண்ணும் பார்க்க ஒரு தலைவி மாதிரி இருக்க மாட்டாங்க, எல்லாம் உங்க பக்கத்து வீட்டு ஆண்டி மாதிரி தான் இருப்பாங்க) இது ஒண்ணு குறுக்கே, குறுக்கே நேரம் காலம் தெரியாமல் வரும். இந்தப் பக்கத்து வீட்டு ஆண்டின்னு சொன்னது கைப்புள்ள தான். அதனாலே பார்க்க வரவங்க உங்க பக்கத்து வீட்டு ஆண்டியை நினைவு வச்சுட்டு வந்துடுங்க. அப்புறம் வந்து ஏமாந்து போனால் (அம்பி என்னை மாடர்ன் கெட்-அப்பில் எதிர்பார்த்து ஏமாந்தாப்பல) நான் பொறுப்பு இல்லை. இந்த மாடர்ன் கெட்-அப் எல்லாம் எனக்கு ஒத்து வராது எந்த விதத்திலேயும், அதான் அந்தப் பக்கமே போகிறது இல்லை.
இப்போ கொஞ்சம் வெளியே போகணும். போயிட்டு அப்புறமா வந்து மிச்சம் எழுதறேன். பாதியிலே விடறதுக்குக் கஷ்டமாத் தான் இருக்கு. ஆனால் வந்திருக்கிறது ஒரு பெரிய ஆள். ஹிஹிஹி, என்னை விடப் பெரிய ஆள் யாருன்னு பார்க்கிறீங்களா? என்னோட மாமியார் வந்திருக்காங்களாம். நாங்க இங்கே இல்லாததால் என்னோட நாத்தனார் வீட்டிலே இருக்காங்க. போய்க் கூட்டிட்டு வரணும். வரேன் அப்புறமா, வர்ட்டா?

Monday, January 29, 2007
நான் யார்,நான் யார்,நான் யார்?
நான் யாரு, எப்படி இருப்பேன்னு எல்லாருக்கும் மண்டையைக் குடையுது. பார்த்தவங்க ரொம்பக் கம்மி. இந்த வலை உலகிலே முதன் முதல் என்னைப் பார்த்த பெருமை இருக்கிறதாலே அம்பி ரொம்பவேத் தம்பட்டம் அடிச்சுக்கிறார். அதுக்கு அப்புறம் வேதா வந்துட்டுப் போயாச்சு. அப்புறம் முத்தமிழிலே இருந்து காழியூராரும், பாசிட்டிவ் ராமாவும் வந்தாங்க. இப்போ புலி வந்து உறுமிட்டுப் போயிடுச்சு. புலி வருது, வருதுன்னு சொல்லிட்டே இருந்தது, நிஜமாவே வந்துட்டுப் போயிடுச்சு. நேத்திக்கு நாங்களே கடலூர் போய் நடேசனைப்பார்த்தோம். இன்னும் சில பேர் வரேன்னும் சொல்லிட்டிருக்காங்க. நீங்க பார்க்கிறப்போ கொஞ்சம் ஏமாற்றம் ஏற்படலாம். ஏனெனில் நீங்கள் தினம் தினம் பார்க்கும் ஒரு சாதாரணப் பெண்மணி போல் தான் நான் இருப்பேன். இன்னும் சொல்லப் போனால் கைப்புள்ள சொல்வார், "எங்க பக்கத்து வீட்டு ஆண்டி போல் எனக்குத் தோணும்"னு அப்படித்தான் நான் இருப்பேன். அதனால் ரொம்பவே எதிர்பார்த்துட்டு வந்து ஏமாறாதீங்க அம்பி, ரொம்பவே ஏமாந்துட்டார் என்னைப் பத்திக் கற்பனை பண்ணி. நானும்தான் ஒரு மதுரை வீரன் ஸ்டைலில் எதிர்பார்த்துப் போனால் பார்க்க ரொம்பவே அப்பாவியா, பார்க்கத் தான், ஒரு பையர் வந்திருக்கார். என்னத்தைச் சொல்ல? ஹிஹிஹி, பையன்னு சொன்னா மரியாதை இல்லைங்கிறதாலே விகுதியை மாத்தி இருக்கேன்.
அப்புறம் எழுதற அளவு பேசறது கொஞ்சம் கம்மி தான். பேச ஆரம்பித்தால் நல்லாப் பேசுவேன். ஆனால் பேசக் கொஞ்சம் நேரம் பிடிக்கும். அப்புறம் வந்தவங்களோட நானே பேசிட்டு இருந்தால் என் கணவர் முழிச்சுட்டு உட்கார்ந்திருக்கணுமே,அதனாலும் கொஞ்சம் கம்மியாத் தான் பேசுவேன். வர்ரவங்க வந்து ஏமாந்துட்டுப் போங்கப்பா! இன்னும் இந்த வலைப்பதிவர் மீட்டிங் எல்லாம் நான் போகிறதில்லை. போனால் போக ஒரு 2 மணி நேரம் ஆகும். அப்புறம் திரும்பி வர 2 மணி நேரம் ஆகும். இது சாதாரணமாக ஆகும் நேரம். போக்குவரத்து அதிகம் இருந்து ட்ராஃபிக் ஜாம்னால் கேட்கவே வேணாம். அதனால்தான் நான் இதெல்லாம் போகிறதே இல்லை. நான் போய் உட்கார்ந்து பேச ஆரம்பிக்கிறதுக்குள்ளே (அதுக்குள்ளே அவங்க வடையோ, போண்டாவோ, சமோசாவோ ஆர்டர் கொடுத்திருப்பாங்க) டிஃபன் வரும். அதைச் சாப்பிடக்கூட முடியாது. திரும்பிப் போக நேரம் ஆயிடும். நான் போய்ட்டு உட்கார்ந்து சாப்பிடாமல் வர முடியுமா? போண்டாவும், வடையும், சமோசாவும் அழாதா? அதற்காக வீட்டுக்கும் எடுத்து வர முடியுமா? அப்படி இருந்தால் போய் எடுத்துட்டு வந்துடுவேன். கல்யாணத்துக்குப் போனால் அப்படித்தான். அங்கே ஒண்ணுமே சாப்பிடாமல் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடலாம் போல் இருக்கும். போகாமல் இருக்கவும் முடியாது. அதனாலேயே வலைப்பதிவர் மீட்டிங் எல்லாம் போறதில்லை.

Friday, January 26, 2007
194. தாயின் மணிக்கொடி பாரீர்!
இன்று குடியரசு நாள். நாமெல்லாம் இருப்பது குடியரசில். அதன் பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த நாளில் அதற்காகப் பாடுபட்ட மாவீரர்களை நாம் நினைத்து அவர்களுக்கு அஞ்சலி செய்வது தான் உண்மையான குடியரசில் நாம் இருப்பதற்கு அர்த்தமாகும்.
யாராலும் நினைக்கப் படாத வீரர்கள் நம் நாட்டில் எத்தனையோ பேர் சுதந்திரத்துக்காகப் போராடி இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் இந்த நாளில் நினைவு கூர்வோம்.
விளம்பரம் இல்லாமல் நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட பூலித் தேவன், விவேகானந்தர், வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளி அம்மை, கட்ட பொம்மன், மருது பாண்டியர்கள், சுப்பிரமணிய பாரதியார், வ.வே.சு.ஐயர், சுப்பிரமணிய சிவா, வீர சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், பகத் சிங், விஸ்வநாத தாஸ், திருப்பூர் குமரம், வீர வாஞ்சி, செண்பக ராமன், வ.உ.சிதம்பரனார், தோழர் ஜீவானந்தம், பகத் சிங்கும் அவருடைய தோழர்களும், ராயல் இந்தியக் கடற்படையின் வீரர்கள் இவர்கள் ஆற்றிய தொண்டும், பணியும் மற்றவர்களின் தொண்டிற்குச் சற்றும் குறையாதது. அதிலும் சிலர் உயிரிழந்திருக்கின்றனர். ஆகவே கத்தியின்றியோ, ரத்தம் சிந்தாமலோ நமக்குச் சுதந்திரம் கிடைத்து விடவில்லை. கிடைத்த சுதந்திரத்தைக் குடியரசாக மாற்றுவதற்குப் பெரிதும் பாடுபட்ட சர்தார் வல்லபாய் படேல் இல்லையென்றால் இன்று இந்த ஒருங்கிணைந்த குடியரசு நமக்குக் கிடைத்திருக்காது. அந்தத் தியாகிகள் எல்லாரையும் இன்னும் நாம் விட்டு விட்ட எல்லாருக்கும் நம் வணக்கங்களைச் செலுத்துவோம். நன்றியுடன் அவர்கள் தியாகங்களை நினைப்போம்.

Thursday, January 25, 2007
193. காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
நம்ம தொண்டர்களிலே சிலரும், குண்டர்களிலே சிலரும் காணவில்லை. ஹிஹிஹி, குண்டர்னு சும்மா எதுகை, மோனைக்காகப் போட்டேன். இப்போக் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு:, கண்டுபிடிச்சுக் குடுக்கிறவங்களுக்கு பரிசும் கொடுக்கப் படும். பரிசுன்னா என்னனு நினைச்சீங்க? எல்லாத் தொண்டர்களும் எல்லார் வீட்டுக்கும் போய் அவங்களாலே முடிஞ்ச பின்னூட்டம் போட்டுட்டு வருவாங்க. வராதவங்களுக்குப் பின்னூட்டம் எதுவும் கிடையாது.
அம்பி: தங்கமணி, தங்கமணி என்றே பிதற்றுவார். இல்லாட்டி ஆங்கில அகராதியை வைத்துக் கொண்டு MS.Congeniality என்ன அர்த்தம்னு திருப்பித் திருப்பிப் பார்த்துட்டே இருப்பார்."மே, மே"ன்னு ஆடு கத்தினாக் கூட எங்கே? எங்கே?ன்னு கேட்டுட்டு இருப்பார். எத்தனை நல்ல பதிவு போட்டாலும் கண்ணுக்குத் தெரியாது. அதை எல்லாம் படிக்கவே மாட்டார். உதாரணமா நானே இன்னொரு பக்கத்தில் "ஆன்மீகப் பயணம்"னு எழுதறேனே அது கண்ணிலேயே படாது அவருக்கு. இந்தப் பதிவுக்குப் பாருங்க, முதல் பின்னூட்டம் கொடுப்பார் மொக்கைப் பதிவுன்னு.
இப்போ என்னடான்னா இந்த "மொக்கை" விஷயம் என்னோட கணவருக்கும் மனசிலே பதிஞ்சு நான் யார் கிட்டேயாவது தொலைபேசிக் கொண்டிருந்தால், "யாரோட மொக்கை போட்டுட்டு இருக்கே?"ன்னு கேட்கிறார். எல்லாம் தலை எழுத்து!
கைப்புள்ள: நான் பார்க்காத சமயம் பச்சை விளக்கு எரியும். பார்த்தால் சிவப்பு விளக்கு எரியும். தொலைபேசியிலே பேசறதுன்னா பயம். தனக்குத் தானே பேசிக்குவார். நம்ம காதிலேயே விழாது. ஏதாவது சந்தேகம் கேட்டால் உடனேயே சார்ஜ் போயிடுச்சுன்னு சொல்லிப் பின் வாங்குவார். இவரோட ஒரே கவலை அம்பியின் fiancee யாருன்னு தான். ஆஃபீஸ் வேலை எல்லாம் இதனாலேயே தப்புத் தப்பா வருதாம். என்ன பண்ணறதுன்னு முழிக்கிறார். அந்தக் கவலையிலேயெ இங்கே வந்து பின்னூட்டம் போடலைன்னு நினைக்கிறேன்.
ராம்: தொழில் நுட்ப நிபுணர். ஜிலேபி சுற்றும் சிறப்புப் பதிவாளர். நாம் சந்தேகம் கேட்டால் மட்டும் புரியாது அவருக்கு, இதனால் தெரிய வந்தது என்னன்னா நாம் அவரை விட மிகச் சிறந்த தொழில் நுட்ப நிபுணின்னு, பின்னே? என்னைப் பத்தி எதுவுமே தெரியாம என்னைப் புது ப்ளாகுக்கு மாறுங்க மேடம்னு சொல்லிட்டிருக்கார். நானாக மாறினால் என்ன நடக்கும்னு தெரியாதா? என்னோட கணினி அறிவைப் பத்திக் குறைவாக மதிப்புப் போட்டு விட்டார். ப்ளாக் பப்ளிஷ் பண்ணும்போது எந்த விதமான சொதப்பல் வேணுமோ அது இங்கே கிடைக்கும்னு தெரியலை.
இன்னிக்குப் பாருங்க வல்லி சிம்ஹன் பின்னூட்டத்துக்குப் பதில் கொடுத்துட்டுப் பப்ளிஷ் பண்ணினா ப்ளாக்கர் ஏத்துக்கவே இல்லை. ப்ளாகாரோட இஞ்சினீருங்க எல்லாம் ரொம்பவே பிசியாம் அப்புறமா வா, உன்னோட ஒரே தொல்லையாப் போச்சு, அப்ப்டினு சொல்லவே திரும்பிட்டேன். இப்போ பார்த்தா அது பப்ளிஷ் ஆயிருக்கு. மத்தவங்க என்ன நினைப்பாங்க, வல்லிக்கு மட்டும் நான் பதில் சொல்லிட்டு , மத்தவங்களை விட்டுட்டேன்னு நினைக்க மாட்டாங்க. இப்படித்தான் your request could not processed. try again.அப்படின்னு வர மெசேஜை நம்பித் திரும்பத் திரும்ப பப்ளிஷ் கொடுத்திருப்பேன். எத்தனை முறை பப்ளிஷ் கொடுக்கிறேனோ எல்லா முறையும் பப்ளிஷ் ஆகித் தொலைச்சிருக்கும். நான் சரியா வந்திருக்கான்னு பார்க்கப் பதிவும் திறக்காது. வெளியே போன்னு மிரட்டும். இந்த லட்சணத்தில் இருக்கிறப்போ புது ப்ளாகுக்கு மாறினா என்னோட இலக்கியங்கள் எல்லாம் என்ன ஆகிறது? ஏற்கெனவே ஒரு தரம் காணாமல் போய்ப் பின் கண்டு பிடிச்சுக் கொடுத்தாங்க. இப்போவும் ரிஸ்க் எடுக்க முடியுமா?
கார்த்திக்: அஜித், அசின்ன்னு சொன்னா மட்டும் திரும்பிப் பார்ப்பார். இல்லாட்டிக் கடமையே கண்ணாக இருப்பார். அதாவது ஆஃபீஸ் நேரத்திலும் பதிவு எழுதும் கடமையே கண்ணாக இருக்கிறதைச் சொன்னேன். பச்சை விளக்கு எரியுதேன்னு இவர் கிட்டே போய்ப் பேச முடியாது. கண்டுக்கவே மாட்டார். சிவப்பு விளக்கை எரிய விட்டுட்டுத் தூங்கப் போறேன்னு மெசேஜும் கொடுத்துட்டுக் கொட்டாவி விட்டுக்கிட்டே வந்து கேட்பார், "எப்படி இருக்கீங்க?" ன்னு. என்னத்தைச் சொல்றது? பின்னூட்ட மழை பொழிந்தவர் ஒரு பின்னூட்டத்துக்கேக் காசு கேட்கிறார்.
வேதா: பாவம், ரொம்பவே பிசி. விட்டுடுவோம்.
எஸ்.கே.எம்: யார் வீடு வழியாவோ கஷ்டப்பட்டு வரவேண்டி இருக்கு. அதனால் இவங்களையும் விட்டுடலாம்.
மணிப்ரகாஷ்: ஹிஹிஹி, கட்-அவுட் வைக்கிறதில் பிசின்னு நினைக்கிறேன். கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம்.
மதுரையம்பதி: எனக்குக் கமெண்ட் கொடுக்கிறதுக்காகவே ப்ளாக் ஆரம்பிச்சேன்னு சொல்லிட்டு, பங்களூரில் கட்-அவுட் வைக்கிறேன்னு சொல்லிட்டுப் போனவர் தான். ஆள் அட்ரஸே இல்லை. எனக்கு என்னமோ அம்பி பேரிலே தான் சந்தேகமா இருக்கு. கடத்தி வச்சிருப்பாரோ? :D
தி.ரா.ச.: அம்பியைக் கேட்டிருப்பார். அம்பி கிட்டே இருந்து பதில் வந்திருக்காது. அதான் வரலைன்னு நினைக்கிறேன். இதென்ன சார், அம்பி எப்போ தன்னோட நினைப்புக்கு வந்து சொல்லப் போறார்? ரொம்பவே கஷ்டம் தான், போங்க. இவரும் அம்பி கூடச் சேர்ந்து இந்தத் தொண்டர் படையை ஒளிச்சு வச்சதிலே கூட்டு, எதுவும் வச்சிருக்காரோன்னு சந்தேகமா இருக்கு. :D
லதா: ஹிஹிஹி எப்போவோ வந்தாலும் வரப்போ எல்லாம் ஒரு 2 வயசாவது குறைச்சுடறாங்க. ரொம்பவே சந்தோஷமா இருக்கு, மெதுவா வரட்டும். வரப்போ இன்னும் ஒரு 2 வயசு குறைச்சாங்கன்னா அப்புறம் அப்படியே எனக்கு வயசு குறைஞ்சு ஒரு கட்டத்திலே நான் இன்னும் பிறக்கவே இல்லைனு வந்துடும். "அந்த நாளும் வந்திடாதோ!"
நாகை சிவா: புலி இப்போ கொஞ்சல்ஸ் ஆஃப் நாகப்பட்டினம்ங்கிறதாலேயும், அப்போ அப்போ வந்து உறுமிட்டு இருக்கிறதாலேயும் விட்டுடலாம். ஆப்ரிக்கக் காட்டுக்குத் திரும்பட்டும் புலி.
ச்யாம்: எங்கே இருந்துட்டு ஃபிகர் பார்த்துட்டு இருக்காரோ தெரியலை. இதிலே முகிலுக்கு வேறே பாடம் இப்போவே பிடிச்சு ஆரம்பம். இல்லாட்டி ஏதாவது கோழி, புறா இதுங்க பின்னாலே போய் வேட்டை ஆடிட்டு இருக்காரோ என்னமோ? இல்லை மாட்ரிமோனியல் காலம் பார்த்துட்டு இருக்காரோ? அவரோட தங்கமணி கிட்டே வத்தி வைக்க வேண்டியது தான்.
கண்ணன்: என் அருமை அண்ணன் மகன். என்னோட பதிவிலே பின்னூட்டம் கொடுக்கிறதுக்காக ப்ளாக ஆரம்பிச்சுட்டு, நண்பனையும் ஆரம்பிக்கச் சொல்லிட்டு, எனக்குக் கோவில் கட்ட இடம் பார்க்கப் போனவன் தான், ஆளே காணோம்.! கோவில் கட்டி அங்கே அவனோ உட்கார்ந்துட்டானோன்னு சந்தேகமா இருக்கு.
இதைத் தவிர, என்னோட ப்ளாகிலே கமெண்ட் போடறதுக்காக ஆரம்பிச்ச நன்மனம் இப்போ ரொம்பவே ஆன்மீக நன்மனமாகி எல்லா ஆன்மீகப் பக்கங்களிலேயும் அப்போ அப்போ தென்படறார். மின்னலோ மழைக்காலம் முடிஞ்சதாலே இப்போ வரதே இல்லை. உமாகோபு என்ன ஆனாங்கன்னு தெரியலை. அவங்க வீடும் திறக்கலை. இப்போ புதுசா ஒருத்தர் hotcatங்கிற பேரிலே அறிமுகம் பண்ணிட்டிருக்கார். முன்னாலே ஒருதரம் வேதா பதிவுலே வந்த "சங்கர்"னு நினைக்கிறேன். அறிந்த அன்னியர் இப்போ பிசி போலிருக்கு, இல்லாட்டியும் அவர் ரெயில் பத்தின பதிவுன்னாத் தான் வரார். இன்னும் யாரையாவது விட்டுட்டேனா தெரியலை. அடிக்கடி வரவங்க மட்டும் தான் குறிப்பிட்டிருக்கேன்.
மேற்கண்ட நபர்களின் பதிவுகளுக்குச் செல்பவர்கள் அனைவரும் என்னுடைய இந்தப் பதிவுலேயும் வந்து பின்னூட்டம் இட வேண்டும் என்பது எழுதப் படாத விதி.
ஹிஹிஹி, மூணு நாளா தூக்கமே வரலை. என்னன்னு யோசிச்சேனா? ரொம்பவே சீரியஸாப் பதிவு போட்டதிலேயும், யாரையுமே வம்புக்கு இழுக்கலைங்கிறதாலேயும் சாப்பாடு ஜீரணம் ஆகலைன்னு தெரிஞ்சது. அதான் மொத்தமா எல்லாரையும் ஒரு வாங்கு வாங்கிட்டாக் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாமே, அம்பிக்கு மட்டும் ஆப்பு கொடுத்துட்டு.அதை நிறுத்த முடியாது பாருங்க.

Tuesday, January 23, 2007
நானும் தமிழ் எழுதறேன் - 3
இந்தப்பதிவோட இரண்டாம் தொடரில் சில ஆசிரியர்கள் பேர் விட்டுப் போயிருந்தது. ஹிஹிஹி, லதா அதைச் சேர்த்துட்டாங்க, இருந்தாலும் இன்னும் சில பேரை விட்டிருப்பேன்.எத்தனை இருந்தாலும் வெறும் புத்தகப் படிப்போடு இல்லாமல் என்னோட பள்ளி ஆசிரியர்களையும் குறிப்பிட்டால் தான் இந்தப் பகுதி நிறைவு பெறும். என்னோட ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர்கள் எல்லாருமே பாரதி பக்தர்களாய் இருந்தார்கள். அவர்கள் சொல்லிக் கொடுத்த "கணபதி ராயன்" பாட்டில் இருந்து பக்தி உணர்வு வந்தது என்று சொன்னால், "அச்சமில்லை, அச்சமில்லை" பாட்டினால் மனதில் தைரியம் மிகுந்தது. அதுவும் ஈஸ்வர வாத்தியார் என்பவர் மிகவும் உரத்த குரலில் இந்தப் பாட்டை எங்களுக்கு வீராவேசம் குரலில் தொனிக்கப் பாடிக் காட்டிப் பாடச் சொல்லுவார். "ஆடுவோம், பள்ளு பாடுவோம்" பாடல் போதோ நிஜமாவே ஆடலும், பாடலுமாகச் செய்து காட்டுவார். இன்றளவும் மனதில் இவை நிற்பதற்கு அவர்களின் இந்தக் கற்றுக் கொடுக்கும் திறனும் காரணம். இன்று ஓரளவாவது தமிழ் எனக்கு எழுத வருகிறது என்றால் அதுக்கு இந்த மாதிரியான அடிப்படைதான் காரணம்.
நான் இலக்கியம் படைக்கவில்லை. நான் எழுதுவது எல்லாம் கற்பனையும் இல்லை. ஏன் என்றால் எனக்குக் கற்பனை வறட்சி இருக்கோ என்று எனக்கே சந்தேகம் உண்டு. என்னோட சொந்த அனுபவங்கள் தான் அதிகம் எழுதறேன். நான் கண்டு, கேட்டு, உணர்ந்தவற்றை அல்லாமல் வேறு எழுதுவது இல்லை. கவிதை எழுதும் முயற்சி எல்லாம் பள்ளி நாட்களோடு முடிந்து விட்டது. அப்புறம் கவிதைப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இலக்கண, இலக்கியங்களோடு கவிதைகள் படைப்போரைக் கண்டால் நமக்கு எழுத முடியவில்லையே என்ற வருத்தம் உண்டு. என்றாலும் படித்த சில பழைய நூல்கள் பற்றி ஓரளவாவது தெரிகிறது என்றால் அதற்கு உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியை தான் காரணம். நான் படித்தது முழுக்க கிறித்துவப் பள்ளியில் தான். ஆசிரியைகளும் கிறித்துவர்கள் தான். ஆனாலும் அவர்கள் தமிழ் சொல்லிக் கொடுக்கும் போதும், மற்ற மொழிப்பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் போதும் ஒரே மாதிரியான சீரான மனநிலையில் கற்பித்தார்கள். அது ராமாயணமாக இருந்தாலும் சரி, பெரிய புராணமாக இருந்தாலும் சரி, சீறாப் புராணமாக இருந்தாலும் சரி, பெத்லகேம் குறவஞ்சியாக இருந்தாலும் சரி, ஒரே மாதிரியாக நாங்கள் நன்கு கற்றுத் தேற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே கற்பித்தார்கள். அதுவும் எல்லாம் எங்களுக்கு நடிப்பு முறையிலும் கற்பிக்கப் பட்டது. ஆங்கில ஆசிரியை ஆங்கிலக் கவிதைகளையும், பாடங்களையும் அப்படியே நடித்துக் காட்டுவார். ஓரளவாவது ஆங்கில அறிவும் எனக்கு இருக்கிறதென்றால் அதற்கு இம்மாதிரியான ஆசிரியைகள் தான் காரணம்.
மேலும் நான் வலைப்பதிவுகளில் எழுதுவதோ, முத்தமிழ்க் குழுமத்தில் எழுதுவதோ எங்க சொந்தக்காரர்களில் மிகச் சிலருக்குத் தான் தெரியும். என்னோட எழுத்தாளச் சித்தப்பாவுக்கு(அசோக மித்திரன்) நான் நேரடியாகச் சொன்னதில்லை என்றாலும் ஏதோ கிறுக்குகிறேன் என்ற அளவில் தெரியும். அவர் என்னிடம் எல்லா விதமான விமரிசனங்களுக்கும் மனதைத் தயார் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று மட்டும் சொன்னார். மற்றபடி அவர் படிக்கிறாரா என்பது கூட எனக்குத் தெரியாது. இருந்தாலும் உறவினரிலும் சிலர் படிக்கிறார்கள் என்பது எனக்கு வரும் பின்னூட்டங்களில் இருந்து தெரிகிறது. நம் எழுத்தையும் படித்துப் பாராட்டவும் சிலர் இருக்கிறார்கள் என்பது மனதுக்கு உற்சாகம் அளிப்பதாகவே உள்ளது. இதில் எழுதுவதற்காகவே நிறையப் புத்தகங்கள் படிக்கிறேன். நிறையத் தெரிந்து கொள்ள முயலுகிறேன். உண்மையில் சொல்லப் போனால் இப்போது தான் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். எழுத ஆரம்பித்த போது இருந்ததை விட இப்போது எழுத்தில் மெருகு ஏறி இருக்கிறது என்று மஞ்சூர் ராஜா கூறுகிறார். எனக்குத் தெரியாது. படிக்கிறவர்களுக்குத் தான் தெரியும். தவிர, அப்போது சற்று பயமும், தயக்கமும் இருந்தது. நாம் எழுதுவதை ஏற்றுக் கொள்ளுவார்களா என்ற சந்தேகமும் இருந்தது. இப்போது சிலராவது ஏற்றுக் கொள்வதால் உற்சாகம் வருகிறது. உண்மையில் என்னோட எழுத்தையும் இவ்வாறு பாராட்டுவதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இப்படியாக ஒருவாறு நானும் தமிழ் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.

ஜெய்ஹிந்த்
இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள். இந்த நாடு மறந்து போன தலைவர்களுள் மிகவும் முக்கியமானவர். இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட இவர் முதலில் காங்கிரஸ் மஹா இயக்கத்தில் தான் இருந்தார். இவரின் வேகமும், துடிதுடிப்பும் இவரை மிக உயர்ந்த நிலைக்கும், முக்கியமானவராகவும் மாற்றியது. இவரின் தீவிரமான கொள்கைகளில் பற்றுக் கொண்ட மக்களும், தலைவர்களும் நிறைய இருந்தார்கள். காந்தியின் மிதவாதக் கொள்கையை இவர் ஏற்கவில்லை. இருந்தாலும் காங்கிரஸில் தொடர்ந்து பணியாற்றிய இவர்,
"இந்திய தேசியக் காங்கிரஸின்" தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது காந்தி ஆதரித்தது பட்டாபி சீதா ராம ஐயா அவர்களை என்று நினைக்கிறேன். அதையும் மீறி உடல் நலம் குன்றிய நிலையிலும் போட்டி இட்டு வாகை சூடிய இவரின் வெற்றியை காந்தி அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மாறாக "பட்டாபி சீதாராம ஐயாவின் தோல்வி, நானே தோற்றது போல்" என்று சொன்னார். ஆகவே இவர் காங்கிரஸில் இருந்து அதன் பின் விலகித் தனியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். இவர் தொடங்கிய் "இந்திய விடுதலைப் படை" இயக்கத்திற்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்தது கன்னியாகுமரியைச் சேர்ந்த தியாகி செண்பகராமனின் INDIAN NATIONALS VOLUNTEERS CODE என்னும் அமைப்புத் தான் என்றும் சொல்வார்கள்.
திரு செண்பகராமன் ஜெர்மனியில் இருந்த போது அவர் வீட்டில்தான் சுபாஷ் சந்திர போஸ் தங்கி இருந்தார் என்றும் சொல்வார்கள். இவரின் இந்திய தேசியப் படை பர்மா வழியாக டெல்லிக்கு (2-ம் உலகப் போர் சமயம்) வந்து கொண்டிருந்த சமயம் திடீரென இவர் மறைவினால் ஏற்பட்ட குழப்பம் படையை முன்னின்று நடத்த யாருமே இல்லாத காரணத்தாலும் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியால் என்ன செய்வது என்ற தடுமாற்றத்தாலும் நிலை குலைந்து போயிற்று. இன்றளவும் இவர் மறைந்தது பற்றிய சர்ச்சைகள் இருந்தாலும் இவரின் சுதந்திரப் போராட்டப் போர் மறக்கப் பட்டு விட்டது அல்லது மறைக்கப் பட்டு விட்டது. மற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் வரலாற்றில் இடம் பெற்ற அளவு இவரோ, பகத்சிங்கோ, செண்பகராமனோ, பம்பாயில் இருந்த "ராயல் இந்தியக் கப்பற்படை" வீரர்களோ சேர்க்கப் படவும் இல்லை. நினைக்கப் படுவதும் இல்லை. மிகச் சிறந்த தேசீய வாதியான இவரை இன்று சிறிது நேரமாவது நினைப்பதின் மூலம் நாம் அவருக்குச் சிறந்த அஞ்சலி செய்வோமாக!
வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!

Monday, January 22, 2007
ஒரு முக்கிய அறிவிப்பு
முத்தமிழ்க் குழுமம் கூகிளில் ஆரம்பிக்கப் பட்டு இந்த ஜனவரி 20 தேதியோடு ஒரு ஆண்டு நிறைவடைகிறது. ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் முத்தமிழ்க் குழுமம் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது. தமிழில் சிறந்த கதைகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ அனுப்பி வைப்பவர்களுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. 400 வார்த்தைகளுக்கு மேல் மிகைப் படாமல் எழுதப் படும் படைப்புக்கள் தமிழையும், தமிழ் நாட்டையும் சார்ந்ததாய் இருத்தல் நல்லது. போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். தமிழ் மணம் நண்பர்களும் அதைச் சாராத மற்ற நண்பர்களும் கலந்து கொள்ளலாம். ஆனால் தமிழில் தான் எழுத வேண்டும். படைப்புக்களை அனுப்ப வேண்டிய முகவரி; muththamiz@gmail.com.
அனுப்ப வேண்டிய கடைசித் தேதி 10-2-2007.
இதைத் தவிர முத்தமிழ்க் குழுமம் தமிழ் நாட்டில் சில கிராமங்களைச் சேர்ந்த பள்ளி நூலகங்களுக்கு, அல்லது பொது நூலகம் இல்லாத கிராமங்களில் பொது நூலகம் ஏற்படுத்தியோ புத்தகங்களாக வாங்கிக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. இதற்குப் புத்தகங்கள் சேர்க்க வேண்டிய பொறுப்பை "உமாநாத்" என்ற "விழியன்" ஏற்றிருக்கிறார். தங்களிடம் இருக்கும் தேவையில்லாத நல்ல புத்தகங்களோ அல்லது புத்தகங்கள் கொடுக்க முடியாதவர்கள் பணமாகவும் அனுப்பலாம்.
உமாநாத்தின் முகவரி:
SRI. S. UMANATH,
Blue Star Info-Tech., Limited,
7, 18th Main Road,
7th Block,
KORAMANGALA- BANGALORE-560095.
The cheques or D/D should be sent to Umanath to his CITIBANK A/C. No. 563700084, or contact him through phone in these numbers.
09886217301
09894110534 (TN Number).
நன்றி, வணக்கம்.

Saturday, January 20, 2007
ஒரு பாராட்டும், ஒரு நன்றி அறிவிப்பும்
நேற்றுச் சாயங்காலம் தொலைக்காட்சியில் ஒரு ஆடம்பரம் இல்லாத விழாவைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. தொலைக்காட்சிப் "பொதிகை" ஒளிபரப்பை அதிகமாய்ப் பார்த்தாலும், அதுவும் தினமும் சில சமயம் பார்க்கிறேன் (அதிகாலை என்பதாலோ என்னவோ) அப்படியும் இந்த அறிவிப்பைப் பார்க்க முடியவில்லை. அது தான் குறிப்பிட்ட சில துறைகளைத் தேர்ந்தெடுத்து அதில் பிரசித்தி பெற்றவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவும், நினைவுப் பரிசும் கொடுத்தது "பொதிகைத்" தொலைக்காட்சி. அதிலே "மஹாநதி ஷோபனா" வின் கச்சேரியும் இடம் பெற்றது. நேர்முக ஒளிபரப்பான இதில் மஹாநதி ஷோபனா தேர்ந்தெடுத்தப் பாடிய பாடல்கள் சிறப்பா? அல்லது பொதிகைத் தொலைக்காட்சியின் பரிசுக்குரிய நபர்களின் தேர்ந்தெடுப்பு சிறப்பா என்று சொல்ல முடியாத வண்ணம் எல்லாமே சிறப்பாக அமைந்தது. முற்றிலும் தமிழ்ப்பாடல்களாய்த் தேர்ந்தெடுத்துப் பாடிய திருமதி ஷோபனாவின் கச்சேரியில் சிகரமாய் அமைந்தது, "பிரும்மம், பரபிரும்மத்தைப்" பற்றிய "தந்தனானா ஹரே, தந்தனானா பலே, தந்தனானா" பாடலும், பாரதியின், "சுட்டும் விழிச் சுடர்" பாடலும். சற்றும் அலட்டிக் கொள்ளாமல் உச்சஸ்தாயியில் "தந்தனானா" பாடும்போது கூட மிக லாகவமாயும், வெகு எளிதாகவும் பாடினார்.
அதை விடச் சிறப்பு வாய்ந்தது பொதிகைத் தொலைக்காட்சித் தேர்ந்தெடுத்திருந்த நபர்கள்.சமூக சேவகியும், "விஸ்ராந்தி" அமைப்பின் நிறுவனருமான சாவித்திரி வைத்தி, கூத்துப்பட்டறை முத்துசாமி,நாட்டுப் பாடல்களுக்காகப் புரிசைத் தம்பிரான், கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர்கள் சுஜாதா மற்றும் ஜெயகாந்தன், பத்திரிகையாளர் ஹிந்து ராம், கர்நாடக இசைப் பாடகி திருமதி டி.கே. பட்டம்மாள் அம்மாள், மகளிர் சுய உதவிக்குழுவின் சின்னப்பிள்ளை, நாட்டியக் கலைஞர் கே.ஜே. சரசா, டென்னிஸில் ராமநாதன் கிருஷ்ணன், டைரக்டர் ஸ்ரீதர் ஆகியோருக்கு வழங்கப் பட்டது. எல்லாவற்றையும் விட மனதை உருக்கிய நிகழ்ச்சி டைரக்டர் ஸ்ரீதருக்குத் தொலைக்காட்சி நிலையம் வர முடியாத காரணத்தால் அவர் வீட்டுக்கே செய்தித் துறை இயக்குனர் நேரில் சென்றுப் பரிசு கொடுப்பதை நேரடி ஒளிபரப்புச் செய்தார்கள். அப்போ ஸ்ரீதர் பேச முயன்றதும், அவரால் தெளிவாய்ப் பேச முடியாததையும், அப்படியும் விடாமுயற்சியுடன் நன்றி தெரிவித்த அவர், "புரியுதா?" என்று கேட்டதையும் பார்த்த எனக்குக் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஸ்ரீதரால் தான் தமிழ் சினிமா தலை நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது என்பது என்னோட கருத்து. ஆனால் அவரால் தொடர்ந்து பணி ஆற்ற முடியாமல் நோய்வாய்ப் பட்டு விட்டதால் அவரோட கலைப்பணி பாதியில் நிற்கிறது. இன்னொரு ஸ்ரீதர் தான் பிறந்து வரவேண்டும்.
இம்மாதிரி மிக அற்புதமான நிகழ்ச்சிகளைக் கொடுக்கும் பொதிகைத் தொலைக்காட்சி தன்னுடைய இசை சம்மந்தப் பட்ட நிகழ்ச்சிகளை இரவு 11 மணிக்கும் 12 மணிக்கும் போட வேண்டாம் என சுஜாதா கேட்டுக் கொண்டார். ஏதோ ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர, மற்ற படி காலை 5 மணிக்குப் போட்டால் பொதிகையில் நல்ல கச்சேரிகள், நாதஸ்வர இசை போன்றவற்றைக் கேட்கலாம். அநேகமாய் வாரம் ஒரு நாள் தருமபுரம் ஸ்வாமிநாதனின், தேவாரத் திருவாசகப் பாடல்களும் மாலைகளில் ஒளிபரப்பாகிறது. சனி, ஞாயிறுகளில் பக்திப் பாடல்கள் ஒளிபரப்புச் செய்யப் படுகிறது. ஆகவே நாம் நேரம் அறிந்து பார்த்தோமானால் வேண்டாத மெகா சீரியல்களின் இறப்புக் குறித்த விரிவான காட்சிகளில் இருந்து மனதை மாற்றிக் கொள்ளலாம். நம் கையில் தானே இருக்கிறது ரிமோட்.
************************************************************************************
இப்போ நன்றி அறிவிப்பு:
என்னோட ஆனையை மிதிச்சு, சீச்சீ, ஆணையை மதிச்சு என்னுடைய அண்ணன் மகனை ஊக்கால் குத்தியவர்களுக்கு, சீச்சீ, மறுபடி மறுபடி இப்படியே வருது, ஊக்கு விற்றவர்களுக்கு, திரும்பவும் தப்பு, ஹிஹிஹி, அவனை ஊக்குவித்தவர்கள் எல்லாருக்கும் தலைமைக் கழகம் சார்பில் வெகு விரைவில் நன்றி அறிவிப்பு விழா எடுக்கப் படும். எல்லாத் தொண்டர்களும் அவங்க அவங்களால் முடிஞ்ச வசூல் செய்து தலைவிக்கு டாலரிலோ, யென்னாகவோ, யூரோவாகவோ, ரூபாயாகவோ, யுவானாகவோ எந்த நாட்டுப் பணமாக இருந்தாலும் தலைவிக்கு ஏற்கும், அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, January 19, 2007
நானும் தமிழ் எழுதறேன்.
இன்னிக்கு எழுதினதிலே இன்னும் சில பேர் விட்டுப் போயிடுச்சு. அதிலே சிட்டி, நரசையா, லா.ச.ராமாமிர்தம், மஹரிஷி, எழுத்து செல்லப்பா, சுந்தர ராமசாமி, ஹெப்ஸிபா ஜேசுதாஸன் போன்றவர்களும் உண்டு. இதில் சிட்டி அவர்கள் தி.ஜானகிராமனுடன் சேர்ந்து எழுதிய "நடந்தாய் வாழி காவேரி" புத்தகத்தை எத்தனை முறை படித்திருப்பேன் சொல்ல முடியாது. நரசையாவைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் புத்தகங்கள் மூலம் தான் எனக்குச் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய உண்மையான தரிசனம் கிடைத்தது. லா.ச.ரா. சொல்லவே வேணாம். மஹரிஷி பேரை அறியாதவர்கள் கூட "புவனா, ஒரு கேள்விக்குறி" என்ற படத்தை மறந்திருக்க மாட்டார்கள். மஹரிஷியின் கதை தான் அது. அப்புறம் ர.சு. நல்லபெருமாள். இன்னொரு அற்புதமான வரலாற்றுக் கதாசிரியர். இவர் எழுதின "கல்லுக்குள் ஈரம்" "போராட்டங்கள்" எல்லாம் இன்னும் நினைவில் இருக்கிறது. இத்தனை புத்தகங்களும், பேர்களும் நான் சொல்றதைப் பார்த்து எங்க வீட்டிலே ஒரு பெரிய புத்தக நூலகம் இருக்குன்னு நினைச்சா நீங்க நினைக்கிறது தப்பு. எல்லாம் ஓசி வாங்கிப் படிச்சது. இன்னும் சொல்லப் போனால் நான் புத்தகம் படிக்கிறதுக்கு அடிச்சுக் கிட்ட மாதிரி வேறே எதுக்கும் இல்லை. அப்படிப் போய்க் கெஞ்சிக் கெஞ்சிப் புத்தகங்கள் வாங்கி வருவேன்.
இதிலே அப்பா சில புத்தகங்களை சென்சார் செய்வதுண்டு. மேலும் படிக்கிற போது புத்தகம் படிக்கக் கூடாது என்று கறாராக உத்தரவு போடுவார். எல்லாத்தையும் மீறிக் கொண்டுதான் நான் புத்தகம் படிப்பேன். அதுவும் எப்படி? என்னுடைய பாடப் புத்தகங்களுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு அப்பாவுக்குத் தெரியாமல் படிப்பேன். மாட்டிக் கொண்டதும் உண்டு. ஹிஹிஹி, அதெல்லாம் ஒரு அனுபவம். இப்போவும் என் கணவர் என்னைப் புத்தகக் கண்காட்சிக்கு மட்டும் கூட்டிப் போகவே மாட்டார். திரும்ப வீடு வர நேரம் ஆகுமோ அல்லது அங்கேயே தங்கிக் கண்காட்சி முடிஞ்சதும் தான் வருவேன்னு சொல்லுவேன்னோ என்னவோ தெரியலை. எத்தனையோ முறை கூப்பிட்டும் வரலை. எனக்குத் தனியாப் போகவும் பிடிக்கலை. அதனால் டி.வி.யில் வரும் புத்தகக் கண்காட்சிக் காட்சிகளை மட்டும் பார்த்துச் சந்தோஷப் படுவேன். சில புத்தகங்களுடன் என்னோட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஆசை. இது இங்கே நிற்க.
*************************************************************************************
இப்போ எனக்கு ஒரு சந்தேகம். நான் யாஹூவில் இருந்தோ அல்லது ஜி-மெயிலில் இருந்தோ மெயில் கொடுத்தால் சில சமயம் போகுது. பல சமயம் போக மாட்டேங்குது. இதுக்கு என்னோட இணைய இணைப்புத் தான் காரணமா தெரியலை. பதிவுகளே சில சமயம் பப்ளிஷ் ஆக மாட்டேங்குது. சில சமயம் பப்ளிஷ் ஆகலைன்னு நினைச்சிட்டிருப்பேன். திரும்பத் திரும்ப வந்திருக்கும். யாஹூவில் எனக்கு மெயில், மயில், புறா விடு தூது அனுப்பிச்சவங்க எல்லாம் கொஞ்ச நாள் பொறுக்கவும். நான் எஸ்.கெ.எம்முக்கு அனுப்பிய எறும்பு மெயில் எதுவுமே அவங்களுக்குக் கிடைக்கலைன்னு புரியுது. கொஞ்ச நாளில் சரியானதும் மெயில், மயில் எல்லாம் அனுப்பறேன். அப்புறம் ஜி-மெயில் திறந்ததுமே எனக்கு மானிட்டரில் தெரிவது "ரின் சுப்ரீம் வெள்ளை" தான். சில சமயம் யாராவது "சாட்"டுக்கு வந்தால் அது வரும். அது மட்டும் தான். மற்ற படி மெயில், குயில் எதுவும் தெரியாது. இது பத்தி ஒரு நாளைக்கு "ராமு"டன் "சாட்" செய்யும்போதுக் கேட்டேன். அதுக்கு அப்புறம் அவர் என் ப்ளாகுக்கு வரதை நிறுத்தினதோடு அல்லாமல், என்னோட தலையை ஜி-மெயிலில் பார்த்தாலே சிவப்பு விளக்கை எரிய விட்டுடுவார். சரின்னு நம்ம கோபெருஞ்சோழனைக் கேட்டால் (ஹிஹிஹி, கைப்புள்ள தான்) அவர் அதுக்கு மேலே, "மேடம், என்னோட லாப்-டாப்பே சார்ஜ் இல்லை, அப்புறமா வரென்"னு கழட்டிக்கிறார். எல்லாரும் ஏதோ புது ப்ளாக்குக்கு மாறுங்கனு கூவிட்டிருக்காங்களே, தமிழ்மணத்திலே, அதனாலே தானாக்கும்னு நினைச்சுக் கைப்புள்ள கிட்டே, "நானும் புது ப்ளாகுக்கு மாறவா?"னு கேட்டால் அவர், "ஏன், உங்களுக்கு ஜிலேபி சுத்த வராதா?"னு கேட்டார். என்னனு பார்த்தா நம்ம ராம் இல்லை, அவர் புது ப்ளாகுக்கு மாறினதும் நல்லா ஜிலேபி சுத்தி இருக்கார். அங்கே போய்ப் பாருங்கன்னு சொன்னதும், பார்த்துட்டு வந்தேன். சரி, இது வேலைக்கு ஆகாதுன்னு விட்டுட்டேன். என்ன கஷ்டம்னா நீங்க எல்லாம் எழுதற புதுப் பதிவு எதுவும் எனக்குத் தெரிய மாட்டேங்குது. இன்னும் சொல்லப் போனால் அட்ரஸ் கொடுத்தாலே எல்லா ப்ளாகும் திறக்கும். இப்போ எந்த ப்ளாகும் சரியாவும் திறக்கறதில்லை. யாரும் தப்பா நினைக்காதீங்க. இதை மட்டும் ஒரு பத்து முறை literally saying முயற்சி செய்து கொடுக்கிறேன். வருதா பார்ப்போம். .சில சமயம் வந்துடுச்சுன்னு மெசேஜ் வராமல் ரொம்பவே ஸ்டைலாக Internet Ezplorer cannot display this webpage அப்படின்னு வரும். இப்போ என்ன செய்யுதோ பார்க்கலாம். பிள்ளையாரே காப்பாத்து.!!!!!

187. நானும் தமிழ் எழுதறேன்.
முதலில் அம்பிக்காக ஒரு ஜோக்: என்னடா அம்பி வரதே இல்லை, ஜோக் எழுதறேன்னு நினைக்கிறவங்களுக்கு. நேத்து அம்பி (நேத்தா? தெரியலை,நான் பார்த்தது நேத்துத் தான்) மெயில், மயில் எல்லாம் அனுப்பி வச்சிருந்தார். என்னடா இது, இந்த மதுரைக்கு வந்த சோதனை, இம்மாதிரி அவரா மெயில் எல்லாம் அனுப்பமாட்டாரே? ஒருவேளை திருமண அழைப்பைத் தான் மெயிலில் மயில் கிட்டக் கொடுத்திருப்பார் போல் இருக்குன்னு, மெயிலைத் திறந்தால் ஒரே புகழ்மாலை. ஹிஹிஹி,எனக்குத் தான். என்னோட போஸ்ட் எல்லாம் படிக்கிறாராம். ஆனால் பின்னூட்டம் கொடுக்க முடியலையாம். தங்கமணியோட போஸ்ட்டுக்கு மட்டும் பின்னூட்டம் கொடுக்கிறதுக்கும், அப்புறம் தொலைபேசற நேரம் போக மிச்ச நேரம் ஏதோ ஆஃபீஸாமே, அதிலே வேலை எல்லாம் செய்யணுமாமே, அதுக்கே நேரம் பத்தலையாம். மொக்கைப் போஸ்ட்டுனு சும்மாத் தான் சொல்றேன். உங்களை எரிச்சல் படுத்தலாம்னு பார்க்கிறேன். வேறே ஒண்ணும் தப்பா நினைக்காதீங்கன்னு சொல்லிட்டு நல்லா எழுதறீங்கன்னு ஒரே புகழ் மாலை போங்க! ஒரே ஆச்சரியமாப் போச்சு எனக்கு. அப்பவும் எப்போ கல்யாணம்னு எல்லாம் சொல்லவே இல்லை. சரி, போகட்டும், பலாப் பழம் பழுத்தால் தானே வெடிக்கும்னு விட்டுட்டேன். எங்கே கல்யாணத்துக்கு வந்துடுவேனோன்னு ஒரே பயம். பின்னே? நான் எங்கே தங்கமணிக்கும் "ஆப்பு" வைக்கச் சொல்லிக் கொடுத்துடுவேனோன்னு பயத்திலே தானே தங்கமணி ஒரு ப்ளாக்கர்னு என் கிட்டே சொல்லலை. அப்படியும் நான் கண்டு பிடிக்கலையா? அது மாதிரி இதுவும் கண்டு பிடிச்சாச்சுன்னு வைங்க. இருந்தாலும் சொல்ல மாட்டேன்.
*************************************************************************************
ஒரு தோழி மற்றவளை பார்த்து: என்னடி இது, நீ ஒரு மவுஸ்-வைஃப்னு சொல்லறே? அப்படின்னா என்ன அர்த்தம்.
மற்றவள் தோழியிடம்: பின்னே என் கணவர் தான் வீட்டிலே எலி ஆச்சே? அதான் சொன்னேன்.!!!!!!

எல்லாரும் தமிழ் எழுதறதைப் பார்த்துட்டுத் தான் நானும் எழுத ஆசைப் பட்டேன். ஆனால் அப்படி ஒண்ணும் இலக்கியம் படைக்கலைன்னு நல்லாத் தெரியும் இருந்தாலும் என்னோட தமிழ் நடையையும் ரசிக்கிற சிலர் இருக்கிறாங்க என்பது எனக்குக் கைப்பிள்ள மூலமாத் தெரிஞ்சது. அவர் என்னமோ ஆரம்பத்திலே இருந்தே என்னை ஒரு தமிழ்ப் புலவர்னு நினைச்சிட்டிருப்பார்னு நினைக்கிறேன். அதனாலோ என்னமோ நான் என்னை ஒரு "ஒளவை"னு எல்லாம் சொல்லிக் கொண்டாலும் நான் எழுதறது என்னமோ சுமார் ரகம் தான். வேதா மாதிரிக் கவிதையோ, கார்த்திக் மாதிரிக் கதைகளையோ, அனுபவச் சிதறல்களையோ எழுதறது இல்லை. இந்த அளவு எனக்குத் தமிழ் வந்ததுக்கே என்னைச் சுத்தி இருந்த சூழ்நிலை தான் காரணம். என்னோட அப்பா ஒரு ஹிந்தி ஆசிரியராக இருந்தாலும் அவர் படித்த கல்கி, தேவன், அகிலன், ஜெகசிற்பியன், நா.பார்த்தசாரதி, அரு.ராமநாதன், துமிலன், எஸ்.வி.வி., போன்ற எழுத்தாளர்கள் எழுதின கதைகளையும், முக்கியமாக சரித்திரத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்படுத்தியதும் அவரால் தான். அப்புறம் என்னோட அம்மா படிச்சது ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா, சரோஜா ராமமூர்த்தி, ஆர்வி, ஜோதிர்லதா கிரிஜா. பி.எஸ்.ராமையா, புதுமைப் பித்தன், கு.ப.ராஜகோபாலன், லக்ஷ்மி போன்ற எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள்.
நாங்கள் லீவுக்குத் தாத்தா வீட்டுக்குப் (அம்மா வழி) போகையிலே எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் அங்கே படிக்கக் கட்டுப்பாடு கிடையாது. எதை வேணுமானாலும், எத்தனை நேரம் வேணுமானாலும் (இரவில் கூட) படிக்கலாம். தாத்தாவோ என்றால் அவரின் சேமிப்பான விநோத ரஸ மஞ்சரி, ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், வை.மூ. கோதை நாயகி அம்மாள், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்களின் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுவார். என்னுடைய மாமாக்களுடன் போட்டி போட்டுக் கொண்டு அகிலன், மு.வ., தமிழ்வாணன், டபிள்யூ.ஆர்.ஸ்வர்ணலதா, கொத்தமங்கலம் சுப்பு போன்றவர்களுடன் குமுதத்தில் எழுதி வந்த சாண்டில்யன், ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், அவரே பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் எழுதும் அப்புசாமிக் கதைகள்,ராஜேந்திர குமார், எஸ்.ஏ.பி. போன்றவர்களின் கதைகளைப் படிக்க முடிந்தது.
நானாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தெரிந்ததும் மணியன், சாவி, கெளதம நீலாம்பரன், பி.வி.ஆர்., கல்கி ராஜேந்திரன்,சேவற்கொடியோன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், சா.கந்தசாமி, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், சுஜாதா, (ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பேரில் எழுதி வந்தப்போவில் இருந்தேபடிக்க ஆரம்பித்து விட்டேன்.), அசோகமித்திரன், கஸ்தூரி ரங்கன், ஆதவன், நீல.பத்மநாபன், (இவருடைய "தலைமுறைகள்" நாவல் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை வைத்து ஒரு மூன்று பதிவு எழுதலாம்.)சிவசங்கரி, இந்துமதி, திலகவதி, கீதா பென்னெட், சுஜாதா விஜயராகவன், நாஞ்சில் நாடன் இப்போ சமீப காலங்களில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஞானியின் சில எழுத்துக்கள், பிரபஞ்சனின் சில எழுத்துக்கள், முதல் எல்லாவற்றையும் படிக்கிறேன். இதில் பட்டுக் கோட்டை பிரபாகர் முதல் ராஜேஷ் குமார் வரையும், சுபா முதல் அனுராதா ரமணன் வரையும் இருக்கிறது. விட்டுப் போனதில் நிறையப் பேர்கள் இருந்தாலும் என்னளவில் பாதிப்பை ஏற்படுத்திய எழுத்தாளர்கள் பெயர் மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். இதில் எனக்கு இன்றும் பாதிப்பை ஏற்படுத்திய கதைகள் என்றால் அவை கல்கியின் "அமரதாரா" நாவலும், நீல. பத்மநாபனின் "தலைமுறைகள்" நாவலும் தான். எனக்குக் கொஞ்சமாவது கதை சொல்லும் திறமையும், தமிழில் எழுதும் திறமையும் இருந்தால் அது எல்லாம் இந்த எழுத்தாளர்களைச் சேருமே அல்லாது எனக்கு ஒரு பெருமையும் இல்லை. இதைச் சொல்ல எனக்கு வெட்கமும் இல்லை. ஏனெனில் சொந்தச் சரக்கு ஏதும் இல்லைனு எனக்கு நல்லாத் தெரியும். இந்தக் கதைகளில் இருந்து நான் தெரிந்து கொண்டவை அப்போ அப்போ முடிஞ்சப்போ எழுதறேன்.
இதைத் தவிரப் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம், கந்த புராணம், ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து என்றும் நிறையப் படித்திருக்கிறேன். ஆனால் இப்போ அம்மாதிரிப் புத்தகங்களில் தனியாக வெளியிடுவது இல்லை. கதைகளே, முக்கியமாகச் சிறுகதைகளே அழிய ஆரம்பித்து விட்டது. எல்லாம் ஒரு நிமிடக் கதைகள், கவிதைகள் போய் ஹைக்கூ வந்து விட்டது. இன்னும் சில கவிதைகள் வருவதில் இருந்து கவிதை இன்னும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலும் சிறுகதை என்ற பெயரே போய் விடும் கூடிய சீக்கிரம். முன்னால் எல்லாம் தீபாவளி மலர் என்றால் நிறையச் சிறுகதைகள், ஒரு பெரிய கதை இருக்கும். சில சமயம் அந்தப் பெரிய கதை 2 வாரத்துக்காவது வரும். இப்போ ஒரு பத்து வருஷமாகக் கதைகள் மெல்ல அழிந்து வருகிறது. கதை சொல்லும் யுக்தியும் குறைந்து வருகிறது. இது நல்லதா? கெட்டதா? தெரியவில்லை! ஆனாலும் புத்தகங்கள், முக்கியமாக வாரப் புத்தகங்கள் சினிமா, அரசியல் வம்பு, கிசுகிசுவை விட்டால் வேறு ஒண்ணும் எழுதுவது இல்லை. கலாச்சாரம் சீரழிந்து வருவது இதனாலா? அல்லது மெகா சீரியல்களினாலா? நிச்சயமாய் விவாதத்துக்கு உரிய கேள்வி. அப்படியே கதைகள் வந்தாலும் படிக்கிறாப் போல் இருப்பதில்லை. தமிழில் கற்பனாசக்தி வறண்டு விட்டதா? இல்லை என்கின்றன மெகா சீரியல்கள். ஆனால் அவையும் வன்முறையையும், முறைகெட்ட உறவையும் தவிர வேறு எதுவும் காட்டுவது இல்லை. இதற்கு முடிவு என்ன?

Thursday, January 18, 2007
ஒரு விளம்பரம்
KANNAN-IN-KANAVU- பதிவுலகிற்கு ஒரு புதிய வரவு! கண்ணனின் துபாய், மதுரை, சென்னை அனுபவங்களைக் காண உடனே விஜயம் செய்யுங்கள்.
kannan-in-kanavu.blogspot.com. உங்கள் அனைவரையும் அங்கே செல்க, செல்க என தலைவியின் ஆனை சீச்சீ, ஆணை! உடனே சென்று பின்னூட்டம் கொடுக்கவும். (என் மானத்தைக் காப்பாத்துங்க.) ஹிஹிஹி, இன்னிக்கு இது தான். அப்புறமா நாளைக்குப் பார்க்கலாம். வர்ட்டா?

Wednesday, January 17, 2007
185. என்ன நடந்தது?
முதலில் சில ஜோக்குகள்: அப்புறமா வழக்கம்போல் நம்ம புலம்பல்கள்:
அம்பி&தங்கமணி ஸ்பெஷல்: (அம்பிக்கு இப்போவே பயமா இருக்காமே? நிஜமா? :D)
கணவன்: என் மனைவியை நினைச்சாத் தான் ரொம்பக் கவலையா இருக்கு!
டாக்டர்: ஏன் ஏதாவது உடம்பு சரியில்லையா?
கணவன்: இல்லே.....கொஞ்ச நாளா கோவை சரளா-வடிவேலுவைப் போட்டு அடிக்கிற வீடியோக்களைத் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்க்கிறா, டாக்டர்.
*********************************************************************************
அநேகமாத் தினம் ஒண்ணு கொடுக்கணும்னுதான் ஆசை. ஆனால் அம்பி தங்கமணியோட பேசற மும்முரத்திலே இங்கே வரதில்லை. அதனால் அவர் வர ஆரம்பிச்சாத் தினமும் ஒண்ணு "அம்பி ஸ்பெஷல்" ஜோக்ஸ் கொடுக்கலாம். பார்க்கலாம். அவருக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கோ? அப்புறம் இந்த இணையம் சரியா இல்லைன்னதும் சில பேர் எனக்குச் சில யோசனைகள் கொடுத்திருக்காங்க. அதைச் செயல் படுத்த முடியாது. ஏன்னா இதுக்குப் பணம் மூணு மாசத்துக்குத் தண்டம் அழுதாச்சு. அதைத் திருப்பிக் கொடுங்கன்னு கேட்டால் பதிலே வரலை. எழுதிக் கேட்டிருக்கேன். அதுக்கப்புறம் தான் முடிவு செய்யணும்.
அப்புறம் தொண்டர்கள் கூட்டம் பெருகிட்டே போகுது. எதிர்க்கட்சியிலே அவங்க மூணு பேரைத் தவிர யாருமே இல்லை. ஹிஹிஹி. என்னோட அண்ணா பையனைப் பத்திச் சொன்னேனே, துபாயிலே எனக்குக் கோயில் கட்ட ரெடியா இருக்கான்னு, அவன் எனக்கு யாஹூ மூலம் ஆஃப் லைன் மெசேஜ் கொடுத்திருக்கான். அவங்க டீம் மானேஜர் "சோனால்"(ஏண்டா, கண்ணா, இது ஆணா, பெண்ணா?, அதை நீ சொல்லவே இல்லையே? :D) என்னையும், என்னோட பதிவுகளையும் (தமிழ் தெரியாமலேயே) படிக்கச் சொல்லிக் கேட்டு? என்னை ஹரிவன்ஷ்ராய் பச்சன் ரேஞ்சுக்குப் புகழ்ந்தாராம். ஹிஹிஹி, அடுத்து அமிதாப் வீட்டுக் கல்யாணத்துக்கு அழைப்பு வரும்னு நினைக்கிறேன். போதாதுக்கு "விப்ரோவிலே" ஒரெ அமர்க்களமாப் போயிடுச்சாம். அவனோட கூட வேலை செய்யற பொண்ணுங்க எல்லாம் கும்பாபிஷேஹத்துக்குத் தயார் ஆகி இந்தியா வரணும்னு ரகளை செஞ்சிருப்பாங்க போல் இருக்கு. ஹிஹிஹி, எங்கே எல்லாம் நம்ம புகழ் பரவுது பாருங்க.
இது எல்லாம் சொல்லிட்டுக் கடைசியிலே ஒண்ணு சொல்லி இருக்கான் பாருங்க, ஒரு வார்த்தைன்னாலும் திருவார்த்தையாப் போயிடுச்சு. அதாங்க, ரொம்பக் கஷ்டமா இருக்கு. இந்த லதா ரொம்ப நாள் கழிச்சு வந்ததாலேயும், வருஷம் புதுசாப் பிறந்திருக்கிறதாலேயும், நம்ம வயசை சும்மா, சும்மாத் தான் ஒரு 2 குறைச்சாங்களா? அதுக்குக் கேட்கிறான் பாருங்க ஒரு கேள்வி, "என்ன அத்தை? உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை?"னு. பாருங்க! :D ஹிஹிஹி, நான் இதுக்கெல்லாம் அசந்து போயிடுவேனா என்ன? இப்படி எல்லாம் எதிர்ப்பு வரக்கூடாத இடத்திலே இருந்து எல்லாம் வரும்னு அப்போவே தெரியும். அதனால் தான் என்னிக்கும் மாத்தாம வச்சிருக்கேன் என்னோட வயசை. மாத்தினாத் தானே பிரச்னை. இப்போக் கூட நான் மாத்தலையே? லதா தானே மாத்தினாங்க. அதனாலே அவங்க வந்து பதில் சொல்லட்டும். எனக்கு நிம்மதி! :D இதைப் படிக்கிறப்போ அம்பிக்குக் கோபம் வரும். மொக்கை போஸ்ட்னு சொல்லுவார். நல்லாச் சொல்லட்டும். சும்மாச் சும்மாத் தங்கமணியோட பேசிட்டே இருந்தா இப்படித்தான். சும்மாத் தான் தலைப்பு இப்படிக் கொடுத்தேன். தலைப்புக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை.

Tuesday, January 16, 2007
திரெளபதி பதிவிரதையா-2
திரெளபதியைப் பத்தி எழுதும்போதே இது ரொம்பவே நெருடலான விஷயம் என்றும் இது ஒரு விவாதத்துக்கு வழி வகுக்கும் எனவும் தெரியும். இருந்தாலும் ரொம்ப நாளாகத் தெரிந்து கொண்ட விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளும் நினைப்புடன் தான் எழுதினேன். ஈஸ்வர் அவர்கள் திரெளபதி 5 பேரை மணந்து கொண்டதை வியாசர் எப்படி நியாயப் படுத்தினார் என்று சொல்லும்படி கேட்டிருந்தார். அன்று சாயங்காலம் "நடைப் பயிற்சி"யின் போது நானும், என் கணவரும் இதைப் பத்தி விவாதித்துக் கொண்டே போனோம். அப்போது சில தெளிவுகள் பிறந்தன. இருந்தாலும் இதுவும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ள முடியுமா தெரியாது. எனெனில் இறை உணர்வு என்பதோடு சம்மந்தப் பட்ட இந்த விஷயத்தை அப்படியே உணர்வு பூர்வமாக அணுகுபவர்களுக்கு மட்டுமே ஏற்புடையதாய் இருக்கும். என்னைப் பொறுத்த வரையில் பகுத்தறிவு வாதிகளும் சரி, நாத்தீகம் என்பவர்களும் சரி, இறைவனை நினைக்காத நாட்களே இல்லை. உண்மையாகப் பக்தி கொண்டிருப்பவர்களை விட அவர்களே எப்போதும் இறைவனை நினைக்கிறார்கள். ஆராய்ச்சியும் செய்கிறார்கள். அந்த ஆராய்ச்சியின் விளைவும் அதன் எல்லையும் கட்டாயம் மெய்ஞ்ஞானமாய்த் தான் இருக்கும். இதை அவங்க ஒத்துக்காமல் போனாலும் உண்மை அது தான். அளவற்ற விஞ்ஞானத்தின் எல்லை மெய்ஞ்ஞானமே ஆகும். மிகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் எல்லாருமே ஆன்மீகவாதிகளாய்த் தான் இருக்கிறார்கள். மிகச் சிறந்த உதாரணம் நம் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் ஆவார்கள். இது இங்கே நிற்கட்டும்.
இவ்வுலகில் ஐம்பூதங்கள் மட்டுமில்லாமல் மனிதனுக்கும் ஐம்புலன்கள் இருக்கின்றன. நம்மையெல்லாம் படைக்கும் இறைவனுக்கும் ஐந்தொழில்கள் இருக்கின்றன. அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவை ஆகும். படைப்பன எல்லாவற்றையும் காப்பதோடு அல்லாமல் உரிய நேரம் வரும்போது அதை அழித்து, அதாவது வேறு இடத்திற்கு மாற்றி,அதை மாறுவதை மறைத்துப் பின் உரிய நேரம் வரும்போது முக்தி என்னும் அருள் செய்து, இத்தனையும் செய்யும் இறைவனின் லீலையை என்னென்பது? அவனுக்கு ஐந்து முகம். ஐந்து வித குணங்களால் ஆனவன். ;உண்மையில் பார்க்கப் போனால் இந்த சிவம் என்பது "சிவமாக" இருக்கும்போது நிர்க்குணப் பரப்பிரும்மமாக இருக்கிறது. இதற்கு உருவம் இல்லை. அதுவே "சிவனாக" அல்லது ஜீவனாக மாறும்போது அதனுள் "சக்தி" பாய்ந்து ஆட்டுவிக்கிறது. சிவம் வேறு. சிவன் வேறு. சிவா வேறு. சிவம் நிர்க்குணப் பிரம்மம் என்றால் சிவன் சக்தியுடன் சேர்ந்த பரம்பொருள். சிவா என்றால் அந்தச் சக்தி. சிவனை ஆட்டுவிப்பவள். இப்படி எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று ஐக்கியம்.ஒருத்தரைச் சும்மா இரு என்கிறதற்குச் "சிவனே"ன்னு இருன்னு சொல்றோம். சக்தி இல்லாத சிவன் என்று அர்த்தம். அதே நாம் கடவுளைக் குறிக்கும்போதோ "சிவ சிவா"ன்னு கூப்பிடறோம். சக்தியுடன் சேர்ந்த சிவன் இது. ஒன்றையொன்று பிரிக்க முடியாதது. பிரித்தால் வெறும் சிவன் தான். ஜீவன் இல்லை. சக்தி சேர்ந்தால் தான் எல்லாமே. புரியுதா என்று தெரியவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்த வரை புரிந்த வரை சொல்கிறேன்.
இந்த ஐந்து தொழில்களைச் செய்யக் கூடிய இறைவனின் ஐந்து முகங்களும், ஐந்து குணங்களும் தான் சேர்ந்து பஞ்ச பாண்டவரின் அம்சமாக உருவெடுத்ததாக ஐதீகம். பஞ்ச பாண்டவர் சிவாம்சம் என்றால் அவர்களை இயங்கச் செய்யும் சக்திதான் திரெளபதி. சக்தியின் அம்சமே அவள். அதனால் தான் ஐவரையும் மணக்கும்படி நேர்ந்தது. மானிட உறவையும், இதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கட்டாயம் மனதில் நெருடல் வரும். ஆனால் இதில் உள்ள தாத்பர்யத்தைப் புரிந்து கொண்டோமானால் ஒன்றுக்கொன்று சம்மந்தம் இருப்பதையும், எந்தக் காரியமும் காரணம் இல்லாம் ஏற்படவில்லை என்றும் தெரிந்து கொள்ளலாம். மஹாபாரதத்தைக் கதை என்று நினைத்தாலும், தெய்வீகக் கதைகளின் தாத்பர்யம் இதுன்னு புரிந்து கொள்ள வேண்டும். வெறும் கதைன்னு நினைக்கிறவங்களுக்கு ரொம்பவே கஷ்டம் புரிந்து கொள்ளுதல். கண்ணகியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாயும் நினைக்கவில்லை. வடநாடு, தென்னாடு என்ற வித்தியாசமும் பார்க்கத் தேவை இல்லை. திரெளபதியின் காலம் வேறே. கண்ணகியின் காலம் வேறே. நம்மைப் பொறுத்த வரை இருவரையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்த திரெளபதியின் துணிச்சல் கண்ணகிக்கு இருந்ததா என்றால் இல்லைனு தான் சொல்லவேண்டும். மஹாபாரதம் கதை என்றால் சிலப்பதிகாரமும் கதை தான். நமக்கு அதைப் பற்றி இளங்கோவடிகள் மூலம் தான் தெரியும். நடந்ததா என நாம் யாரும் அறிய மாட்டோம். ஆனால் "அனல் கொண்ட மதுரை"யும், "கடல் கொண்ட புகாரும்", "மணல் கொண்ட வஞ்சி"யும் இருந்ததை சான்றுகள் மூலம் அறிகிறோம். அது போல் மஹாபாரதம் நடந்தது என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன.
பத்ரிநாத் போகிறவர்கள் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரமே மேலே உள்ள "மானா" என்ற ஊருக்குப் போனால் சில சான்றுகள் கிடைக்கும். பத்ரியில் இருந்து ஒரு 4,5 கிலோ மீட்டர் காரில் போய் விட்டுப் பின் அங்கிருந்து ஒரு 3,4 கிலோ மீட்டர் தூரம் மலையில் ஏறிப் போனோமானால் மானா" என்ற சிறு ஊர் வருகிறது. தற்சமயம் திபெத்திய அகதிகள் அதிகம் இருக்கிறார்கள்.. அங்கே இருந்து சற்று மேலே ஏறினால் மஹாபாரதம் எழுதிய "வேத வியாசர்" இருந்த குகை வரும். அதற்குச் சற்று முன்னால் ஒரு குகை போன்ற இடத்தில் ஒரு விநாயகர் ஆலயம் இருக்கிறது. அங்கே தான் வியாசர் சொல்லச் சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கிப் பிள்ளையார் மஹா பாரதத்தை எழுதியதாகச் சொல்கிறார்கள். இன்னும் சற்று மேலே போனால் பஞ்ச பாண்டவரில் 2-வதான பீமன் திரெளபதி மேலுலகம் செல்லக் கட்டிய பாலம், "பீமன் பாலம்" என்ற பெயரில் உள்ளது. எல்லாரும் சரஸ்வதி நதியை அந்த இடத்தில் கடந்து போனதாகவும், திரெளபதிக்காக பீமன் பாலம் கட்டியதாயும், சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானம் அதுதான் என்றும் சொல்கிறார்கள். அதை நாங்கள் நேரில் போய்ப் பார்த்து விட்டு வந்தோம். அங்கே உற்பத்தி ஆகும் சரஸ்வதி அதற்கு அப்புறம் "அந்தர்யாமி" ஆகி "அலக்நந்தா"வுடன் சேர்ந்து கண்ணுக்குத் தெரியாமல் போய் அரபிக்கடலில் கலக்கிறாள். சமீப காலத்தில் 5 வருஷத்துக்கு முன்னால் "ஸ்ரீஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள்" அங்கே தான் ஜலசமாதி அடைந்ததாகவும் கூறுகிறார்கள். அதற்கு மேல் 2 கி.மீட்டரில் சீன எல்லை ஆரம்பம்.

Friday, January 12, 2007
183. திரெளபதி பதிவிரதையா?
உலகின் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்: ஸ்ரீகிருஷ்ணன்.
உலகின் முதல் தொலைக்காட்சித் தொடர்: குருக்ஷேத்திர யுத்தம்.
உலகின் முதல் தொலைக்காட்சிப் பார்வையாளர்: சஞ்சயன்
உலகின் முதல் தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர்: சஞ்சயன்
உலகின் முதல் உடல் உறுப்பு தானம் செய்தவர்: ததீசி முனிவர். இந்திரனின் வஜ்ராயுதத்துக்குத் தன் முதுகெலும்பைத் தானம் செய்தவர்.
உலகின் முதல் கண் தானம் செய்தவர்: கண்ணப்ப நாயனார்.
உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை: அகஸ்திய மஹரிஷி. குடத்துக்குள் இடப்பட்டு வளர்ந்தவர்.
முதல் முதல் ஆராய்ச்சி செய்யும் எல்லாமே சற்றுக் கோணலாகவோ, அல்லது வளர்ச்சியின்மை இல்லாமலோ குறைபாட்டுடன் தான் பிறக்கும். அதனால் தானோ என்னவோ அகஸ்தியர் உருவம் சற்றுக் குட்டையாக இருந்திருக்குமோ என
எண்ணுகிறேன். இது மாதிரி நிறைய முதல் விஷயங்கள் நம்முடைய இதிகாசத்திலும்,
புராணங்களிலும் கொட்டிக் கிடக்கிறது.
************************************************
திரெளபதி மஹாபாரதத்தின் கதா நாயகி. 5 மஹா பதிவிரதைகளுள் ஒருத்தியாகப்
போற்றப் படுபவள். அவளுடைய பதிவிரதைத் தன்மை குறித்துக் கேள்விகள்
எல்லாருக்கும் உண்டு. இது புராணத்திலும், இதிகாசத்திலும் நம்பிக்கை
வைத்திருப்பவர்களுக்கும் இருக்கிறது. 5 கணவன்மார்களுடன் வாழ்ந்த ஒருத்தி
எப்படிப் பத்தினியருள் ஒருவராக ஆனாள்?அதற்கான விளக்கம் எனக்குத்
தெரிந்த வரையில், நான் கேட்டுத் தெரிந்து கொண்டதைத் தருகிறேன்.
5 கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. 5 கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம்
என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் "அக்னிப் பிரவேசம்" செய்து
தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.
இன்றைக்கும் கணவனைப் பிரிந்த மனைவியரும் சரி, இல்வாழ்க்கை நன்கு அமைய வேண்டுபவரும் சரி. திரெளபதி அம்மன் கோவிலில் "தீ மிதி" என்னும் பூக்குழியில் இறங்கித் தங்களைப் புனிதப் படுத்திக் கொள்வதைப் பார்க்க முடியும்.

ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். அன்று திரெளபதி பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அமைந்தது. பீமனுக்கு ஏற்கெனவே சந்தேகம். இந்தப் பெண்மணி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள்.என்று. அதுவும் இப்போது
கிருஷ்ணர் வேறு வந்திருக்கிறார். திரெளபதிக்கு அண்ணன் முறை. அவர் முன்னால். பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் ஒருவாறு ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள்.
பீமனுக்குக் கோபம் வந்தது. என்றாலும் தனிமைக்காகப் பொறுமையுடன் இருந்து,
தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து,. "கிருஷ்ணா, உனக்கே இது நியாயமா?
இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள், எனக்குத் தாய் ஸ்தானத்தில்
இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி, என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும்? நீயானால் சிரிக்கிறாய்! திரெளபதியும் சிரிக்கிறாளே!" என்று கேட்டான். கிருஷ்ணர்
சொன்னார்:"பீமா, நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று சொல்லி இருப்பது தான் நடக்கிறது. இதில் நீ வருந்த ஒரு காரணமும் இல்லை. இருந்தாலும் உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், கேள்! இன்றிரவு திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் அல்லவா?" என்று கேட்டார். "ஆம், பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும்
வெளியே சென்று விட்டுப் பின் உதயத்தில் திரும்பி வருவாள்." என பீமன் சொல்ல,
"அப்போது திரெளபதி எப்படி இருப்பாள்?" என்று கிருஷ்ணர் கேட்க, பீமனோ,"புடம்
போடப் பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்." என்று சொல்கிறான். "பீமா, இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார்." என்று கிருஷ்ணர் சொல்கிறார். அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும், கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல்
தொடர்ந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி, தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்கத் தடுக்கிறார், பரந்தாமன். "அங்கே பார்!" என்கிறார். என்ன
ஆச்சரியம்! தீக்குள் திரெளபதியா தெரிந்தாள்? சாட்சாத் அந்த அகிலாண்டேஸ்வரி, சர்வ உலகத்தையும் காத்து அருளும் மஹா சக்தி, அன்னை தன் சுய உருவில் காட்சி அளிக்கிறாள். அவளைத் தீயும் சுடுமோ? அவளே தீ, அவளே, நீர், அவளே வாயு, அவளே
ஆகாயம், அவளே நிலம். சகலமும் அவளே அல்லவா? திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைக்கிறார் அந்த வாசுதேவன்.
"பீமா, நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி ஆவாள். அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ,
அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே! நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால்
உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா
எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள். உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ, அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. அனைத்தும் இவளே! இந்த உண்மைதான்
உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப் படும் காட்சி. இதன் உள்ளே உள்ள இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய்." என்கிறார்.
மேற்குறிப்பிட்ட தத்துவம் நான் சின்ன வயசிலே கதை கேட்ட போது கேட்டது. இப்போ சமீப காலத்தில் ஒரு திரைப்படம் கூட சம்ஸ்கிருதத்தில் வந்தது,. அதிலும் இந்தத் தத்துவம் குறிப்பிடப் பட்டிருக்கிறது. "நீனா குப்தா" திரெளபதி என்று நினைக்கிறேன். படம் பார்க்கவில்லை. மற்றும் சிலத் தொலக்காட்சித் தொடர்களிலும் வந்தது. எத்தனை பேர் பார்த்தார்கள் தெரியவில்லை. இப்போது இதை எழுதக் காரணம் குருக்ஷேத்திரப் போர் நடந்தது ஒரு மார்கழி மாசம் தான். 2 நாள் முன்னாலே ஒரு புத்தகம் படிக்கும்போது
இது நினைவு வந்தது. இன்றைய தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக எழுதி இருக்கிறேன்.
"தேவர்கள் பூச்சொரிந்தார்-ஓம்
ஜெய ஜெய பாரத சக்தி என்றே"
ஓமென்றுரைத்தனர் தேவர்,
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்
பூமியதிர்ச்சி உண்டாச்சு-விண்ணை
பூழிப் படுத்தியதாம் சுழல் காற்று
சாமி தருமன் புவிக்கே-என்று
சாட்சியுரைத்தன பஞ்ச பூதங்கள் ஐந்தும்,
நாமும் கதையை முடித்தோம்- இந்த
நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க!"
மஹா கவி சுப்பிரமணிய பாரதியின் "பாஞ்சாலி சபதம்" கவிதையில் இருந்து கடைசியில் வரும் சில வரிகள்.

182. ஒளி படைத்த கண்ணினாய் வா, வா, வா!!!!
ஒளி படைத்த கண்ணினாய் வா, வா, வா!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா, வா, வா!
"எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ, அவனையே நான் "மகாத்மா" என்பேன். மற்றவர்கள் துராத்மாக்களேயாவர்.
ஆண்டவனைத் தேடி நீங்கள் எங்கே போகிறீர்கள்? துன்பப் பட்டவர்கள்,ஏழைகள், பலவீரக்ள் இவர்கள் எல்லாரும் அத்தனி தெய்வ வடிவங்களே அல்லவா? ஏன் முதலில் இவர்களை ஆராதிக்கக் கூடாது? கங்கைக் கரையில் கிணறு வெட்டப் போவது உண்டா? இந்த ஏழைகளையே உங்கள் கடவுளாய்க் கொள்ளுங்கள், அவர்களைப் பற்றிச் சிந்தியுங்கள், அவர்களுக்கு ஊழியம் புரியுங்கள், அவர்களுக்காக இடைவிடாது பிரார்த்தனை செய்யுங்கள், அப்போது ஆண்டவன் உங்களுக்கு வழி காட்டுவார்.
நம்புங்கள், உறுதியாக நம்புங்கள், இந்தியர் கண்விழித்து எழுந்திருக்கும் வேளை வந்து விட்டதென்று ஆண்டவன் கட்டளை பிறந்து விட்டது.
எழுங்கள், எழுங்கள் நீளிரவு கழிந்தது. பொழுது புலர்ந்தது, கடல் புரண்டு வருகிறது. அதன் உத்வேகத்தைத் தடுக்க எவராலும் இயலாது."
மேற்குறிப்பிட்டவை "ஸ்வாமி விவேகானந்தர்" அன்றைய இளைஞர்களுக்குக் கூறியவை, இன்றும் இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்து கிறது. இன்றைய இளைஞர்கள் இன்னும் அறிவாற்றலிலும், தெளிவான முடிவெடுப்பதிலும் சிறந்து விளங்குகிறார்கள். எல்லாச் சக்தியும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டையும், அதன் பாரம்பரியத்தையும் காப்பாற்ற எல்லாம் வல்ல அந்த ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். விவேகானந்தர் சொன்னதுக்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
இன்று "ஸ்வாமி விவேகானந்தர்"இன் பிறந்த நாள். எல்லா இளைஞர்களுக்கும் இளைஞர் தின வாழ்த்துக்களையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, January 11, 2007
181. திரும்பிப் பார்க்கிறேன்(கழுத்து வலியோடு)
ஏற்கெனவே எழுதினேன் கழுத்து வலியோடு. சேமிப்பில் போட்டுட்டுச் சாப்பிட்டு வந்து பார்த்தால் எங்கேயோ ஓடிப் போச்சு. திரும்பவும் எழுதறேன். இதைக் கூடச் சேமிக்கத் தெரியலியான்னு என் கணவர் சிரிக்கிறார். இப்போ நிஜமாவே சில ஜோக்ஸ்: முதலில் புதுக் கல்யாண மாப்பிள்ளையாகப் போகும் அம்பிக்கு ஒண்ணு: இப்போல்லாம் இங்கே வரதில்லை. தங்கமணி ஆர்டரோ என்னவோ? இருந்தாலும் யாராவது படிச்சவங்க போய்ச் சொல்லுங்களேன்.
*************************************************************************************மனைவி கணவனிடம்: எதிர் வீட்டு மாலாவுக்கு யாரோ வேண்டப்பட்டவங்க ரூ.8,500ல் பட்டுப் புடவை எடுத்துக் குடுத்து இருக்காங்களாம். தம்பட்டம் அடிக்கிறா!!!!!
கணவன்(ரொம்ப அப்பாவி "லுக்"குடன்):8,500/-ன்னா சொன்னாள்? இல்லியே? தள்ளுபடி போக5,375 தானே? !!!!!!!!!!!
ஹிஹிஹி, அம்பியோட தங்கமணி, ஜாக்கிரதை! அம்பி இந்த பஞ்சாப் குதிரையைப் பார்க்கிற பார்வையே சரி இல்லை. எங்காவது எடுத்துக் குடுத்து இருக்கப் போறார். அப்புறம் தங்கமணிக்குச் சில யோசனைகள்: அப்போ அப்போ வெளி வரும். முதல் யோசனை:(படிக்கிறவங்க போய்த் தங்கமணிகிட்டச் சொல்லுங்கப்பா). அவங்க இங்கே எல்லாம் வர மாட்டாங்க.
உடம்பு தேற நல்லாச் சாப்பிடும்படி உங்க "அவரும்" அவரோட "அப்பா, அம்மாவும்" சொல்லி இருக்காங்க இல்லை? அதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான். கத்திரிக்காய்க் கறி, கத்திரிக்காய்ச் சாதம், கத்திரிக்காய்க் கூட்டு, கத்திரிக்காய்ப் பிட்லை, கத்திரிக்காய்த் துவையல்,, கத்திரிக்காய்க் கொத்சு, கத்திரிக்காய்ப் பச்சடி, கத்திரிக்காய் பர்த்தா(வட இந்திய முறையில்) செய்து சாப்பிட்டு விட்டு அம்பிக்கும் கொடுங்க. ரொம்பப் பிடிக்கும் அவருக்கு உங்களையும், கத்திரிக்காயையும். நல்லப்பிஞ்சுக் கத்திரிக்காயா நான் வாங்கி அனுப்பறேன். கவலை வேண்டாம்.
*********************************************************************************
இப்போ மன்னா, மன்னா, என்னா, என்னா?
மன்னர்: (கோபமாக), யாரங்கே?
சேவகன்: என்ன இப்போ? இந்தப் பந்தாக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. 6 மாசமாச் சம்பளம் பாக்கி.
சேவகன்: மன்னா, அடிக்கடி "யாரங்கே"ன்னு கூப்பிடாதீங்க!
மன்னன்: ஏன்?
சேவகன்:மன்னருக்குக் கண்ணு சுத்தமாத் தெரியலைன்னு வெளியே எல்லாரும் பேசிக்கிறாங்க!
மந்திரி: எப்படியோ, ஒரு வழியாகப் புறமுதுகிட்டு ஓடி வந்து தப்பித்து விட்டீர்கள் மன்னா!
மன்னன்: அது சரி, நான் அசந்து தூங்கிட்டு இருந்தப்போ என்னைப் போர்க்களத்துக்குத் தூக்கிப் போனது யார்?
சேவகன்1: நம்ம போரில் எதிரி மன்னர் தான் வின்னராம்.
சேவகன்2: நம்ம மன்னர்?
சேவகன்1: ரன்னர்!!!!!!
கார்த்திக்குக்காக ஒரு சினிமா ஜோக்: கொஞ்சம் சுமாராத் தான் இருக்கு. நல்லதாய்த் தேடுகிறேன் கார்த்திக்.
ஒருத்தர்: மக்குப் பசங்களை மையமா வச்சி டைரக்டர் ஷங்கர் படம் தயாரிச்சா, என்ன பேர் வைப்பார்?
மற்றவர்: "பெயில்"!!!!!!!!!!!!
*************************************************************************************
எல்லாம் இந்த "டாட்டா இண்டிகாம்" பிரச்னை தான். ரொம்பவே படுத்திட்டாங்க 20 நாளாக. தினமும் ஒரு புகார் எண் கொடுப்பதோடு வாடிக்கையாளர் சேவை மையத்தின் பணி சரியாப் போச்சு. இந்தக் களப்பணிப் பொறியாளர்கள் நம்ம நம்பரைத் தொலைபேசியில் பார்த்ததுமே "ஸ்விட்ச் ஆஃப்", "எங்கேஜ்மெண்ட் மோட்", அல்லது எட்ட முடியாத தூரத்தில் இருக்கிறார் என்று டேப் செய்யப் பட்ட செய்திகளைப் போட்டுடுவாங்க. குறைந்த பட்சமாக வாடிக்கையாளரிடம் "வேலை நடக்கிறது, இன்னும் 2 அல்லது மூணு நாள் பொறுத்துக்குங்க!" என்ற அளவில் கூடச் செய்தி கொடுக்க மாட்டார்கள். இந்த மாதிரிப் பணியாளர்களைப் பார்த்ததே இல்லை. டெக்னிகல் விஷயமாகக் கஷ்டப் பட்டாங்க என்றால் அதை ஒத்துக் கொண்டு இவ்வளவு நாள் சேவை கொடுக்க முடியாது, மன்னிக்கவும் என்று கேட்கிற குறைந்த பட்ச மரியாதை கூடவா இல்லை? சேவை மையத்தில் 24 மணி நேரம் என்று சொல்வதால் அவங்க வேலை முடிஞ்சுட்டதாக் கணக்கு வச்சுக் கொண்டு புதுப் புகார் எண் கொடுக்கிறாங்க. இதை எப்படி ஏற்க முடியும்? ஜனவரி 4 தேதிக்கு அப்புறம் கொடுத்த புகார் எண்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் புகார் எண்ணையே வைத்துக் கொள்வேன் என்று சொல்லி விட்டேன். ஆனாலும் அவங்க சொல்லும்போது புதுப் புகார் எண்ணையும், தேதியையும் தான் குறிப்பிடுகிறார்கள். எய்தவன் இருக்க அம்பை எப்படி நோவது? மொத்தத்தில் இது ஒரு அனுபவம். ஹிஹிஹி, என் கணவர் சொன்னது இந்த ஜோக்: "நீ எழுதறதைச் சகிச்சுக்கு முடியாத யாரோ தான் வி.எஸ்.என்.எல். கிட்டேயும், டாட்டா இண்டிகாமிடமும் சொல்லிக் கட் பண்ணச் சொல்லிட்டாங்க!" பல்லைக் கடித்தேன். வேறே என்ன செய்யறது? நம்ம அதிர்ஷ்டம், பல்லைக் காட்ட பல் டாக்டரிடம் போனால் அவங்க மூணு நாளா கிளினிக்கே திறக்கலை.
நான் கடந்து வந்த பாதை கல்லும், முள்ளுமாக இருந்ததாகக் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார். நான் என்னோட அனுபவங்களை எல்லாம் எழுதினால் என்ன சொல்வாரோ? தெரியவில்லை. ரொம்பக் கொஞ்சம் மட்டும், அதுவும் முக்கால் வாசி ரயில் பயணங்களில் பட்டது மட்டும் சொல்லி இருக்கேன். மத்தது ஏதும் இன்னும் சொல்லலை. இருந்தாலும் என்னைச் சரியாகக் கணித்தவர்களில் அவரும் ஒருத்தர். நான் எழுதுகிற நோக்கம் வீணாகி விடக்கூடாது என்ற எண்ணம் இருந்து வந்தது. சரியாப் புரிஞ்சுக்கிற ஒருத்தர் இரண்டு பேர் இருந்தாலும் போதும். எனக்குக் கதை, கவிதை எல்லாம் எழுத ஆசை இல்லை. வேதாவோடயோ, கார்த்திக்கோடயோ மற்ற தமிழ்க் கவிஞர்களோடயோ போட்டிப் போடப் போறதில்லை. ஏதோ எழுதுகிறேன். அதையும் 4 பேர் படிக்கிறாங்க. இப்போ நிஜமாவே 4 பேருக்கு மேல் வரதில்லை. ஏன் தெரியலை. ம்ம்ம்ம்ம்ம், முன்னால் எழுதினதில் நிறையவே எழுதி இருந்தேன். அது தேடிப் பார்த்துக் கிடைத்தால் போடுகிறேன். இப்போ இது மட்டும் தான். இந்த வேதா கூட ஏன் வரலை? பொங்கலுக்கு இப்போவே பிசியா? வேதா, பொங்கல் ரெடியா?

Wednesday, January 10, 2007
180. திரும்பிப் பார்க்கிறேன்!!!!!!
கொஞ்சம் தாமதமா திரும்பிப் பார்க்கிறேன். ஏற்கெனவே கழுத்தெல்லாம் ஒரே வலி. இத்தனை நாளாத் திரும்பிப் பார்த்தது வேறே சேர்ந்துடுச்சு. முதலில் எனக்குப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிச்ச எல்லாருக்கும் நன்றி. தனிப்பட்ட முறையில் வாழ்த்துத் தெரிவிச்ச தி.ரா.ச.அவர்கள், எஸ்.கே.எம்., கார்த்திக், கைப்புள்ள, ராம், வேதா, ராமநாதன், வைஷ்ணவ்(known stranger), ச்யாம் எல்லாருக்கும் என்னோட நன்றிகளும், வாழ்த்துக்களும்.
******************************************
2005-ம் வருஷம் நவம்பரிலேயே நான் என்னோட வலைப்பக்கத்தை ஆரம்பிச்சிருந்தாலும் பெரிசா ஒண்ணும் எழுதிக் கிழிக்கலை. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தான் எழுதிட்டிருந்தேன். அப்போவே தமிழ் வலைப்பக்கங்களுக்கு எல்லாம் போய் என்னோட ஆங்கிலத் திறமையைக் காட்டிப் பின்னூட்டமும் கொடுப்பேன். அப்புறம் கொஞ்ச நாளுக்கு உடல்நிலை ரொம்பவே மோசமாகப் போகவே கணினி பக்கமே வரலை. அப்புறம் என்னோட நுரையீரலின் நிலையைப் பார்த்துப் பயந்த எங்கள் குடும்ப மருத்துவர், இதயத்தின் நிலையைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டி ஒரு இருதய நோய் மருத்துவரிடம் அனுப்பித்தது 2006-ம் ஆண்டு ஜனவரியில். ஒருவேளை பை-பாஸ் சர்ஜரி செய்ய வேண்டி இருக்குமோ என்ற சந்தேகம் அங்கே எடுக்கப் பட்ட சோதனைகளில் மறுக்கப் பட்டு என்னோட இருதயம் இருக்கிற இடத்திலே நான் சந்தோஷமாத் தான் இருக்கேன். சென்னை மாநரகப் பேருந்துகளில் எல்லாம் ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டு எல்லாரும் போகலியா? அதுமாதிரி நான் தொங்கிட்டிருந்தாலும் என்ன, நல்லாத் தான் இருக்கேன் என்று கண்டிப்பாகச் சொல்லவே நான் அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றப்பட்டாலும், வாழ்நாள் பூரா மருந்துகளே உணவாக எடுத்துக் கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப் பட்டேன். நாம தான் "சவாலே, சமாளி" ரகமாச்சே? ஆகவே எது வந்தாலும் எதிர் கொள்ள ஆரம்பித்தேன்.
இருந்தாலும் என்னுடைய 3-வது நாத்தனார் கணவர் இறந்தது எங்கள் எல்லாருக்கும் இன்றளவும் ஆறாத வடுவானது. இருதய நோயினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருந்த அவர் ஜனவரி ஆரம்பத்திலேயே நோய்வாய்ப்பட்டு 31-.ம் தேதி இறந்து போனார். அதுக்கு அப்புறம் நாங்கள் ஒரு வழியாகத் தேறி வந்த சமயம் திரு டோண்டு அவர்களின் பதிவில் நான் கொடுத்த ஆங்கிலப் பின்னூட்டத்தைப் பார்த்து விட்டு, அவரும் வெ.பா.வ. ஜீவாவும் எனக்குத் தமிழ் எழுத உதவினார்கள். நான் ஆங்கிலத்தில் எழுதுவதைப் பார்த்துவிட்டுத் திரு தருமி அவர்கள் தலையில் அடித்துக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன். அதான் ஆங்கில விரிவுரையாளர் பதவியைக் கூட விட்டு விட்டதாய்க் கேள்விப்பட்டேன்.ஹிஹிஹி!!!!!! இதற்குள் ஓரளவு நான் பிரபலம் அடைந்து வர (ஹிஹ்ஹி, கொஞ்சம் தன்னடக்கத்தோடு சொல்லி இருக்கேன்) எனக்கு வலைப்பதிவர் மாநாட்டிற்கு அழைப்புத் தனிப்பட்ட முறையில் திரு டோண்டு அவர்கள் அனுப்பி வைத்தார். ஏற்கெனவே திடீரென ஏற்பட்ட முக்கியத்துவத்தால் திகைத்துப் போயிருந்த நான் இந்த அழைப்பால் உச்சி குளிர்ந்து போனேன். அப்போ நல்ல கோடை வேறே. அப்புறம் இந்த வலைப்பதிவர் மாநாட்டிற்கு வரதெல்லாம் என்னால் முடியாத காரியம் என்று அவருக்கு விளக்கி விட்டு, என்னோட களப்பணிக்கும், தமிழுக்கும் கைங்கரியம் ஆற்றத் தொடங்கினேன். என்னோட தமிழறிவைப் பார்த்து பிரமித்தது நான் தமிழ் எழுத ஆரம்பித்ததில் இருந்து என்னை நன்றாய்க் கவனித்து வரும் "கைப்புள்ள" அவர்கள். அவருக்கு என்னமோ நான் பெரிய தமிழறிஞர்னு நினைப்பு, பாவம், கைப்புள்ள தானே. இல்லைனு சொன்னால் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிப்பார். சரினு ஒத்துக்கறதிலே எனக்குத் தானே லாபம். இந்தச் சமயத்தில் தான் அம்பி, வல்லி சிம்ஹன் அறிமுகமானார்கள். அவங்களும் வரவே, நான் அம்பியின் வலைப்பக்கத்துக்குப் போனதின் மூலம் வேதா அறிமுகம் ஆனார். வேதா மூலம் Known Stranger என்னோட வலைப் பதிவுக்கு வர ஆரம்பித்தார். கார்த்திக்கை நான் பதிவு எழுத ஆரம்பித்ததில் இருந்து கவனித்து வருகிறேன். அவரும் முதலில் ஆங்கிலத்தில் எழுதிவிட்டுப் பின் தமிழில் எழுத ஆரம்பித்தார்.
கார்த்திக்கின் எழுத்து இப்போது மிகவும் பண்பட்டுத் தங்கம் போல் ஒளிர்கிறது. அதுவும் உள் ஆழத்தில் இருந்து வரும் சத்தியமான வார்த்தைகள் என்பதால் மிக மிக அருமையாக எழுத ஆரம்பித்து விட்டார். மேன்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகிறேன். இந்தச் சமயம் நாகை சிவா பரிச்சயமாக அவர் மூலம் ச்யாமும் வர ஆரம்பித்தார். என்னோட வலைப் பதிவுகள் காணாமல் போய் நான் உதவி கேட்டு எழுத இருவரும் வலுவில் வந்து உதவி செய்வதாய்த் தெரிவித்தார்கள். ச்யாமின் அமெரிக்க நேரமும் நான் இணையத்தில் இருக்கும் நேரமும் ஒத்துக் கொள்ளாது என்பதாலும்,(ஆன்லைனில் சாட் செய்யறது கஷ்டம்) இதில் சிவா சூடானில் இருப்பதாலும் நேரம் அதுதான் ஒத்துக் கொள்ளும் என்பதால் நான் அவரின் உதவியால் என் பதிவுகளைச் செம்மைப் படுத்திக் கொண்டேன். இப்படியாக என்னோட பதிவுகள் ஓரளவுக்குப் பிரபலமாக திரு தி.ரா.ச.அவர்கள், லதா, எஸ்.கே.எம்., உமாகோபு, பொற்கொடி, சின்னக்குட்டி போன்றோரும் வந்தார்கள். இதில் லதா எப்போதாவது தலையைக் காட்டி நானும் இருக்கிறேன் என்பார். பொற்கொடி புதுக் கல்யாணப் பொண்ணு,அதனால் இப்போ இதெல்லாம் நினைப்பு இருக்காது. சின்னக்குட்டி என்னைப் பார்க்கவேண்டும் என்று தன்னோட வலைப் பதிவில் எழுதி விட்டுப் பின் காணாமல் போய் இப்போ தி.ரா.ச. அவர்களின் வலைப் பதிவுக்கு மட்டும் வந்து பின்னூட்டம் கொடுக்கிறார் என நினைக்கிறேன்.இப்போ சமீப காலத்தில் மண்ணின் மைந்தர் திரு ராமும், எனக்குக் கட்-அவுட் வைக்கிற அளவுக்குத் தொண்டராகி விட்ட மணி ப்ரகாஷும் சேர்ந்திருக்கிறார்கள். ஹிஹிஹி, கடல் கடந்தும் நம்ம புகழ் பரவுது பாருங்க!
அப்படி ஒண்ணும் பெரிசா எழுதிக் கிழிக்கலைன்னாலும் எழுத முடிஞ்ச விஷயங்களையே இன்னும் பூரணமா எழுத முடியலை. நடு நடுவே வீட்டில் பிரச்னைகள், போதாதக் குறைக்கு இணையம் இணைப்பில் பிரச்னை. ஊர் சுற்றியதில் எழுத முடியாமல் போனது, இப்படி எவ்வளவோ இருக்கு. இப்படியே நான் எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சு. இந்த அளவு நான் எழுதறதே பெரிய சாதனை தான். ஆனால் என்னை விட என் கணவர் தான் இணைய இணைப்பு வராமல் நான் எழுத முடியாமல் போனதுக்கு வருத்தப் படுகிறார். அதனாலேயே என் அண்ணா வீட்டிற்குப் போய்ப் பார்த்துவிட்டு வான்னும் சொல்லுவார். அதுவும் கடந்த 15 நாளாக இணையம் இல்லாமல் நான் சிரமப் பட்ட மாதிரி முன் எப்போதும் நடக்கவில்லை. DNS Serverமாற்றினார்கள். அதுக்கு அப்புறம் இணையமே வரலை. அவங்க கொடுத்த DNS server number -ஐக் command-ல் போட்டுப் பின் ping கொடுத்தால் கேட்வே பிரச்னை இல்லைனு தெரியும். ஆனால் இணைப்பு வராது.(ஹிஹிஹி, தொழில் நுட்ப அறிவிலும் தேர்ந்துட்டேன்.) Refer DNS server error அப்படின்னே செய்தி வரும். டாட்டா இண்டிகாம் காரங்களுக்கு மானம், ரோஷம் இருந்தால் நான் கத்தினதுக்குத் திரும்பச் சண்டை போட்டிருக்கணும், ஆனால் அவங்களுக்குக் குழையக் குழையப் பேசத் தானே சம்பளம். கடைசியில் டைரக்டர், வி.எஸ்.என்.எல்.-க்கு ஒரு கையால் எழுதப் பட்ட புகார், மேலும் தொலைபேசிப் புகார் எல்லாம் கொடுத்தும் நேற்று வரை வரவில்லை. என்ன ஒரு ஆறுதல் என்றால் இங்கே ஆடிட்டர் ஒருத்தருக்கு அவர் வீடு, அலுவலகம் இரண்டிலும் டாட்டா இண்டிகாம் இணைப்புக் கொடுத்து விட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் கிடைத்ததால் அவரை விட நம் நிலைமை பரவாயில்லை எனத் தேற்றிக் கொண்டேன். இன்று மறுபடி முயற்சி செய்து விட்டு இன்றைய பாட்டுப் பாட ஆயத்தம் ஆகலாம் என்று கணினியைத் திறந்தால் என்ன ஆச்சரியம்? இணையம் இணைந்தது, இந்தக் குளிரிலும் (இதெல்லாம் என்ன குளிர்?) என் மனம் குளிர்ந்தது. இன்னும் எத்தனை நாளுக்குன்னு தெரியலை, பார்க்கலாம். அப்புறம் உ.பி.ச. நான் வர முடியலைன்னா தகவல் வரும். அப்போ கமெண்ட் மட்டும் பப்ளிஷ் செய்துடுங்க, வழக்கம்போல், என்ன? எல்லாரும் மண்டையை உடைச்சுக்கட்டும், என்ன நடக்குதுன்னு!!!! ஹிஹிஹி.

Thursday, January 04, 2007
178. அணி மாற்றமா? தெரியாதே!!!!!!!!!!!
முதலில் சில ஜோக்குகள்:
மன்னா, மன்னா, என்னா, என்னா
அரசி: யாரங்கே, இந்தச் சிம்மாசனத்தைக் கொஞ்சம் சுத்தம் செய்யுங்கள்.
மந்திரி:ஏன் மஹாராணி,
அரசி: போர்ப்பறை ஒலித்ததும் மன்னர் பயத்தில் "உச்சா" போய்விட்டார்!!!!!!!!!
&&&&&&&&&&&&&&&
மந்திரி: என்ன? மன்னர் முல்லைக்குத் தேர் கொடுத்ததுக்கு மஹாராணிக்குக் கோவமா?
தளபதி: மன்னர் தேர் கொடுத்தது மஹாராணியின் அந்தப்புர வேலைக்காரி முல்லைக்கு.
&&&&&&&&&&&&&&&
நம்ம "ச்யாம்"க்காக ஒரு மன்னர் ஜோக்: இது ச்யாம் ஸ்பெஷல்
மன்னன்: ஏன் அமைச்சரே, எதிரி நாட்டுலே இருந்து தூது விடுறதுக்கு மயில், வான்கோழி எல்லாம் பயன்படுத்த மாட்டாங்களா?
அமைச்சர்: ஏன் மன்னா?
மன்னன்: புறா ஒரு நேரத்துக்கே பத்த மாட்டேங்குதே....!!!!!!!!!
&&&&&&&&&&&&&&&&&
இப்போ ஒரு கணவன், மனைவி ஜோக். அது இல்லாமல் பூர்த்தி ஆகாது.
கணவன்: ஏண்டி, நான் ரொம்ப நேரமாக் கழுதை மாதிரிக் கத்திட்டிருக்கேன். நீ என்ன செய்யறே உள்ளே?
மனைவி: உங்களுக்குத் தான் "மசாலா பேப்பர் ரோஸ்ட்" செய்துட்டிருக்கேன்.
குமுதம், ஆனந்த விகடன், ஒருவேளை கல்கி? எதிலோ இருந்து நினைவு வந்ததை எழுதி இருக்கேன். அர்த்தம் இது தான். வார்த்தைகள் மாறலாம். குமுதம், விகடன், கல்கி வாசகர்கள் மன்னிக்கவும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஒரு வரவேற்பு விழா அறிவிப்பு
வேதா(ள்) என்று தலைவியால் அருமையாகப் பெயர் வைக்கப் பட்டு அங்கீகாரமும் பெற்ற நம்ம வேதா(ள்), தன் தென் மாவட்ட, மற்றும் தென் மாநிலச் சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாய் முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அவரின் தென் மாநிலச் சுற்றுப் பயணத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் "முல்லைப் பெரியாறு" பிரச்னை பற்றி விவாதிக்கப் பட்டதாய் அவரே தெரிவித்திருக்கிறார். அதனால் இப்போ அணைச் சுவர் உடைந்ததுக்கும் அதற்கும் சம்மந்தம் இருக்கிறதாய் யாரும் நினைக்க வேண்டாம் :D. வேதா(ள்)வின் வரவேற்பு விழா இந்திய நேரப் படி இரவு 00-00 மணிக்கும், மற்ற உறுப்பினர்கள் இருக்கும் நாடுகளில் அவரவர் நாட்டின் நேரப்படி இரவு 00-00 மணிக்கும் நடக்கும். அப்போது எல்லா உறுப்பினர்களும் நன்கு குறட்டை விட்டுத் தூங்கி தங்கள் மேலான ஆதரவை வேதா(ள்)வுக்குத் தெரிவிக்கும்படித் தலைவியின் ஆணை.
*************************************************************************************
அணி மாற்றமா? தெரியாதே....!
கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாய்த் தெரிகிறது. ஹிஹிஹி, அரசியல் கூட்டணின்னு நினைச்சு வந்தவங்களுக்கு ரொம்ப சாரி, நான் சொல்றது வலை உலகக் கூட்டணி. அம்பி தன்னோட தங்கமணியின் வரவுக்குப் பின் கூட்டணியில் இருந்து விலகித் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டதோடு அல்லாமல், தன்னோடு கூட்டணியில் சேரத் திரு தி.ரா.ச., போர்க்கொடி போன்றவர்களை அழைத்ததாய்த் தெரிய வந்துள்ளது. இந்தக் கூட்டணியில் தற்சமயம் உறுப்பினர்கள் கம்மி என்பதாலும், எதிர்க்கட்சியினர் பதவி தருவதாய்ச் சொல்லி இருப்பதாலும் பதவிக்கு ஆசைபட்டு இந்தக் கூட்டணி மாற்றம் என்பது தலைவிக்குப் புரிந்து விட்டது. இதற்கு ஆதாரம், திரு தி.ரா.ச. அவர்கள் கூட்டணி மாறி விட்டது என்பதை அம்பிக்குக் கொடுத்த பின்னூட்டப் பதில்களில் அவரே ஒத்துக் கொண்டதோடு அல்லாமல், தலைமைப் பதவியை அம்பி தன் மனதுக்குப் பிடித்தவருக்குக் கொடுக்கலாம் என்றும் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார்.
இதில் நடுநிலைமை வகிப்பவர்களில் வேதா(ள்), கார்த்திக், எஸ்.கே.எம், உமாகோபு போன்றோர்.
திரு கைப்புள்ள தலைவிக்குத் தான் தன் ஆதரவு என்று தெரிவித்துக் கொண்டே இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
திரு மணிப்ரகாஷோ கார்த்திக், சிவா போன்றவர்களையும் நாட்டாமை என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் (இங்கே மட்டும் என்ன வாழுது? உங்களுக்குத் தலைவி பட்டம் நீங்களே வச்சிக்கிட்டது தானே?) (யார் அது முணுமுணுப்பு? ஹிஹிஹி, வேறே யாருமில்லை, என்னோட மனசாட்சி தான், வழக்கம்போல் கழுத்தறுக்க வந்துடுச்சு.) ச்யாம் என்பவர்கள் ஆதரிக்கும் நபரைத் தான் தான் ஆதரிப்பதாய்ச் சொல்லுகிறார். இது மறு பரிசீலனைக்கு உட்பட்டது. அவர் தன் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கட்டளைக் கலித்துறை. சீச்சீ, கட்டளை.
கொஞ்சல்ஸ் ஆஃப் நாகப்பட்டினம் (courtesy:Ram)நாகை சிவா இன்னும் பதுங்குமிடத்தில் இருந்தே வெளி வரலை. திரு ராமோ என்றால் இன்னும் சேரலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார். இந்நிலையில் தலைவி தான் தான் திரும்பத் திரும்ப தலைவி என்று உறுதிபடத் தெரிவிக்கிறார். இதில் மாற்றம் ஏதும் இல்லை.

Wednesday, January 03, 2007
Tuesday, January 02, 2007
177. ஓங்கார தத்துவம்
"ஓம்" என்னும் ஓங்கார தத்துவம் பத்தி நான் புதுசா ஒண்ணும் சொல்லப் போறதில்லை. சும்மா ஏற்கெனவே இருக்கிற விஷயத்தை நினைவுக்குத் தான் கொண்டு வரப் போறேன். இந்தப் பிரபஞ்சம் பூராவுமே "ஓம்" என்ற ஒலியினால் வியாபித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். இது அழிவற்றது என்பார்கள். எங்கும் வியாபித்திருப்பதால் இதைத் தான் "பிரம்மம்" என்று சொல்வதாயும் எடுத்துக் கொள்ளலாம். "ஓம், பூர், புவர், சுவர்" என்று கூறப்படும் பூலோகம், புவனலோகம், சுவர்கலோகம் இந்த மூன்றும் இந்த ஓங்காரத்தினுள் அடங்கியது என்பது தத்துவம். இது பிரிக்க முடியாதது. சாட்சாத அந்த வாஸுதேவனின் ஸ்வரூபம் இந்த ஓங்காரம் என்பார்கள். இது "அகார, உகார, மகார" எழுத்தைக் கொண்டு அ+உ+ம்=ஓம் என்று கூறப்படுகிறது என்பதையும் நாம் அறிவோம். இது வேத மயமானது. இதில் இருந்து தான் 4 வேதங்களும் வந்ததாயும் கூறுவார்கள்.
இந்த "அகாரம்" என்பது பிரம்மாவையும், "உகாரம்" திருமாலையும், "மகாரம்" ருத்திரரையும் குறிக்கும். முறையே படைத்துக் காத்து அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் குறிக்கிறது. "நாத பிந்து கலாதி" என்பதில் உள்ள நாதமானது அகாரம் ஆகும். பிந்து உகாரத்தைக் குறிக்கும். கலை அதாவது கலாதி என்பது மகாரம் ஆகும். அதாவது அகாரம் "கிரியா" சக்தியாகவும், உகாரம் "இச்சா" சக்தியாகவும், மகாரம் "ஞானசக்தி"யாகவும் இருக்கிறது. நம்முள் இருக்கும் உணர்வுகளைத் தூண்டிவிடும் சக்தி இந்த "ஓம்" என்னும் சொல்லுக்கு இருக்கிறது. அடிவயிற்றில் இருந்து ஓங்கார நாதம் எழுப்பி "ஓம்" என்று கூறினோமானால் இதை நாமே நன்கு உணர்கிறோம். அதனால் தான் தெய்வத்தின் நாமங்கள் எல்லாம் "ஓம்" என்ற சொல்லுடனேயே தொடங்குகிறது. இதை நாம் இடைவிடாமல் உச்சரித்தால் நமக்குள் உள்ளே உறையும் அந்த அருட்பேரொளியையும் உணர்வோம்.

Subscribe to:
Posts (Atom)