எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 20, 2007

ஒரு பாராட்டும், ஒரு நன்றி அறிவிப்பும்

நேற்றுச் சாயங்காலம் தொலைக்காட்சியில் ஒரு ஆடம்பரம் இல்லாத விழாவைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. தொலைக்காட்சிப் "பொதிகை" ஒளிபரப்பை அதிகமாய்ப் பார்த்தாலும், அதுவும் தினமும் சில சமயம் பார்க்கிறேன் (அதிகாலை என்பதாலோ என்னவோ) அப்படியும் இந்த அறிவிப்பைப் பார்க்க முடியவில்லை. அது தான் குறிப்பிட்ட சில துறைகளைத் தேர்ந்தெடுத்து அதில் பிரசித்தி பெற்றவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவும், நினைவுப் பரிசும் கொடுத்தது "பொதிகைத்" தொலைக்காட்சி. அதிலே "மஹாநதி ஷோபனா" வின் கச்சேரியும் இடம் பெற்றது. நேர்முக ஒளிபரப்பான இதில் மஹாநதி ஷோபனா தேர்ந்தெடுத்தப் பாடிய பாடல்கள் சிறப்பா? அல்லது பொதிகைத் தொலைக்காட்சியின் பரிசுக்குரிய நபர்களின் தேர்ந்தெடுப்பு சிறப்பா என்று சொல்ல முடியாத வண்ணம் எல்லாமே சிறப்பாக அமைந்தது. முற்றிலும் தமிழ்ப்பாடல்களாய்த் தேர்ந்தெடுத்துப் பாடிய திருமதி ஷோபனாவின் கச்சேரியில் சிகரமாய் அமைந்தது, "பிரும்மம், பரபிரும்மத்தைப்" பற்றிய "தந்தனானா ஹரே, தந்தனானா பலே, தந்தனானா" பாடலும், பாரதியின், "சுட்டும் விழிச் சுடர்" பாடலும். சற்றும் அலட்டிக் கொள்ளாமல் உச்சஸ்தாயியில் "தந்தனானா" பாடும்போது கூட மிக லாகவமாயும், வெகு எளிதாகவும் பாடினார்.

அதை விடச் சிறப்பு வாய்ந்தது பொதிகைத் தொலைக்காட்சித் தேர்ந்தெடுத்திருந்த நபர்கள்.சமூக சேவகியும், "விஸ்ராந்தி" அமைப்பின் நிறுவனருமான சாவித்திரி வைத்தி, கூத்துப்பட்டறை முத்துசாமி,நாட்டுப் பாடல்களுக்காகப் புரிசைத் தம்பிரான், கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர்கள் சுஜாதா மற்றும் ஜெயகாந்தன், பத்திரிகையாளர் ஹிந்து ராம், கர்நாடக இசைப் பாடகி திருமதி டி.கே. பட்டம்மாள் அம்மாள், மகளிர் சுய உதவிக்குழுவின் சின்னப்பிள்ளை, நாட்டியக் கலைஞர் கே.ஜே. சரசா, டென்னிஸில் ராமநாதன் கிருஷ்ணன், டைரக்டர் ஸ்ரீதர் ஆகியோருக்கு வழங்கப் பட்டது. எல்லாவற்றையும் விட மனதை உருக்கிய நிகழ்ச்சி டைரக்டர் ஸ்ரீதருக்குத் தொலைக்காட்சி நிலையம் வர முடியாத காரணத்தால் அவர் வீட்டுக்கே செய்தித் துறை இயக்குனர் நேரில் சென்றுப் பரிசு கொடுப்பதை நேரடி ஒளிபரப்புச் செய்தார்கள். அப்போ ஸ்ரீதர் பேச முயன்றதும், அவரால் தெளிவாய்ப் பேச முடியாததையும், அப்படியும் விடாமுயற்சியுடன் நன்றி தெரிவித்த அவர், "புரியுதா?" என்று கேட்டதையும் பார்த்த எனக்குக் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஸ்ரீதரால் தான் தமிழ் சினிமா தலை நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது என்பது என்னோட கருத்து. ஆனால் அவரால் தொடர்ந்து பணி ஆற்ற முடியாமல் நோய்வாய்ப் பட்டு விட்டதால் அவரோட கலைப்பணி பாதியில் நிற்கிறது. இன்னொரு ஸ்ரீதர் தான் பிறந்து வரவேண்டும்.

இம்மாதிரி மிக அற்புதமான நிகழ்ச்சிகளைக் கொடுக்கும் பொதிகைத் தொலைக்காட்சி தன்னுடைய இசை சம்மந்தப் பட்ட நிகழ்ச்சிகளை இரவு 11 மணிக்கும் 12 மணிக்கும் போட வேண்டாம் என சுஜாதா கேட்டுக் கொண்டார். ஏதோ ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர, மற்ற படி காலை 5 மணிக்குப் போட்டால் பொதிகையில் நல்ல கச்சேரிகள், நாதஸ்வர இசை போன்றவற்றைக் கேட்கலாம். அநேகமாய் வாரம் ஒரு நாள் தருமபுரம் ஸ்வாமிநாதனின், தேவாரத் திருவாசகப் பாடல்களும் மாலைகளில் ஒளிபரப்பாகிறது. சனி, ஞாயிறுகளில் பக்திப் பாடல்கள் ஒளிபரப்புச் செய்யப் படுகிறது. ஆகவே நாம் நேரம் அறிந்து பார்த்தோமானால் வேண்டாத மெகா சீரியல்களின் இறப்புக் குறித்த விரிவான காட்சிகளில் இருந்து மனதை மாற்றிக் கொள்ளலாம். நம் கையில் தானே இருக்கிறது ரிமோட்.
************************************************************************************

இப்போ நன்றி அறிவிப்பு:

என்னோட ஆனையை மிதிச்சு, சீச்சீ, ஆணையை மதிச்சு என்னுடைய அண்ணன் மகனை ஊக்கால் குத்தியவர்களுக்கு, சீச்சீ, மறுபடி மறுபடி இப்படியே வருது, ஊக்கு விற்றவர்களுக்கு, திரும்பவும் தப்பு, ஹிஹிஹி, அவனை ஊக்குவித்தவர்கள் எல்லாருக்கும் தலைமைக் கழகம் சார்பில் வெகு விரைவில் நன்றி அறிவிப்பு விழா எடுக்கப் படும். எல்லாத் தொண்டர்களும் அவங்க அவங்களால் முடிஞ்ச வசூல் செய்து தலைவிக்கு டாலரிலோ, யென்னாகவோ, யூரோவாகவோ, ரூபாயாகவோ, யுவானாகவோ எந்த நாட்டுப் பணமாக இருந்தாலும் தலைவிக்கு ஏற்கும், அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

6 comments:

  1. கீதா,
    ஹிந்துவில் படித்தேன் இந்த செய்தியை.
    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
    அதுவும் முத்துக்கள் போல கலைஞர்கள்.அவர்களுக்குத் தகுந்த பாராட்டு.
    பொதிகையால் தான் எளிமையாகச் செய்யமுடியும்.
    நன்றி கீதா.

    ReplyDelete
  2. மேடம், என்ன இது.. மடமடன்னு பதிவா போடுறீங்க.. நம்ம பதிவுப்பக்கம் வர்றதே இல்லை.. ஏன்..ஏன்..ஏன் மேடம்..ஏன்?

    ReplyDelete
  3. கார்த்திக், நான் தான் திரும்பத் திரும்ப உங்க வலைப்பதிவு குறிப்பிட்ட பதிவுக்கு அப்புறம் திறக்கவே மாட்டேங்குதுன்னு சொல்றேனே? ஏன் இப்படின்னும் புரியலை. அம்பி, தி.ரா.ச., வேதா, நாகை சிவா, எஸ்.கே.எம்., கைப்புள்ள, ராம், ஹரிஹரன், சிபி,கண்ணபிரான் கே.ஆர்.எஸ். இவங்க பதிவெல்லாம் வரவே மாட்டேங்குது. இன்னும் இருக்கு சிலது லிஸ்ட்லே, உங்க பதிவும் தி.ரா.ச. சார் பதிவும் ஒரு குறிப்பிட்ட பதிவு மட்டும் தான் திருமபத் திரும்ப வருது.

    ReplyDelete
  4. உண்மையிலேயே பொதிகையைப் பாராட்டணும் வல்லி, நிகழ்ச்சிகள் எல்லாமே ரொம்பவே நல்லா இருக்கும். விளம்பரங்கள் இல்லாமல் ஒரு நல்ல முயற்சி.

    ReplyDelete
  5. //உங்க பதிவும் தி.ரா.ச. சார் பதிவும் ஒரு குறிப்பிட்ட பதிவு மட்டும் தான் திருமபத் திரும்ப வருது.//
    Page refresh saidhum partheengala?

    I have watched some pothigai programs through youtube.ஒவ்வொன்றும் அருமை.--SKM

    ReplyDelete
  6. ஆமாங்க நானும் கேள்விப்பட்டேன்.பல நல்ல நிகழ்ச்சிகள், இங்கு வலைப்பூவில் வரும் நல்ல பதிவுகள் போல் விரைவில் பார்க்காமல்/காணாமல் போய்விடுகிறதாம்.
    நீங்க சொல்கிற மாதிரி "ரிமோட்" நம்ம கைல தானே இருக்கு.

    ReplyDelete