நம்ம தொண்டர்களிலே சிலரும், குண்டர்களிலே சிலரும் காணவில்லை. ஹிஹிஹி, குண்டர்னு சும்மா எதுகை, மோனைக்காகப் போட்டேன். இப்போக் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு:, கண்டுபிடிச்சுக் குடுக்கிறவங்களுக்கு பரிசும் கொடுக்கப் படும். பரிசுன்னா என்னனு நினைச்சீங்க? எல்லாத் தொண்டர்களும் எல்லார் வீட்டுக்கும் போய் அவங்களாலே முடிஞ்ச பின்னூட்டம் போட்டுட்டு வருவாங்க. வராதவங்களுக்குப் பின்னூட்டம் எதுவும் கிடையாது.
அம்பி: தங்கமணி, தங்கமணி என்றே பிதற்றுவார். இல்லாட்டி ஆங்கில அகராதியை வைத்துக் கொண்டு MS.Congeniality என்ன அர்த்தம்னு திருப்பித் திருப்பிப் பார்த்துட்டே இருப்பார்."மே, மே"ன்னு ஆடு கத்தினாக் கூட எங்கே? எங்கே?ன்னு கேட்டுட்டு இருப்பார். எத்தனை நல்ல பதிவு போட்டாலும் கண்ணுக்குத் தெரியாது. அதை எல்லாம் படிக்கவே மாட்டார். உதாரணமா நானே இன்னொரு பக்கத்தில் "ஆன்மீகப் பயணம்"னு எழுதறேனே அது கண்ணிலேயே படாது அவருக்கு. இந்தப் பதிவுக்குப் பாருங்க, முதல் பின்னூட்டம் கொடுப்பார் மொக்கைப் பதிவுன்னு.
இப்போ என்னடான்னா இந்த "மொக்கை" விஷயம் என்னோட கணவருக்கும் மனசிலே பதிஞ்சு நான் யார் கிட்டேயாவது தொலைபேசிக் கொண்டிருந்தால், "யாரோட மொக்கை போட்டுட்டு இருக்கே?"ன்னு கேட்கிறார். எல்லாம் தலை எழுத்து!
கைப்புள்ள: நான் பார்க்காத சமயம் பச்சை விளக்கு எரியும். பார்த்தால் சிவப்பு விளக்கு எரியும். தொலைபேசியிலே பேசறதுன்னா பயம். தனக்குத் தானே பேசிக்குவார். நம்ம காதிலேயே விழாது. ஏதாவது சந்தேகம் கேட்டால் உடனேயே சார்ஜ் போயிடுச்சுன்னு சொல்லிப் பின் வாங்குவார். இவரோட ஒரே கவலை அம்பியின் fiancee யாருன்னு தான். ஆஃபீஸ் வேலை எல்லாம் இதனாலேயே தப்புத் தப்பா வருதாம். என்ன பண்ணறதுன்னு முழிக்கிறார். அந்தக் கவலையிலேயெ இங்கே வந்து பின்னூட்டம் போடலைன்னு நினைக்கிறேன்.
ராம்: தொழில் நுட்ப நிபுணர். ஜிலேபி சுற்றும் சிறப்புப் பதிவாளர். நாம் சந்தேகம் கேட்டால் மட்டும் புரியாது அவருக்கு, இதனால் தெரிய வந்தது என்னன்னா நாம் அவரை விட மிகச் சிறந்த தொழில் நுட்ப நிபுணின்னு, பின்னே? என்னைப் பத்தி எதுவுமே தெரியாம என்னைப் புது ப்ளாகுக்கு மாறுங்க மேடம்னு சொல்லிட்டிருக்கார். நானாக மாறினால் என்ன நடக்கும்னு தெரியாதா? என்னோட கணினி அறிவைப் பத்திக் குறைவாக மதிப்புப் போட்டு விட்டார். ப்ளாக் பப்ளிஷ் பண்ணும்போது எந்த விதமான சொதப்பல் வேணுமோ அது இங்கே கிடைக்கும்னு தெரியலை.
இன்னிக்குப் பாருங்க வல்லி சிம்ஹன் பின்னூட்டத்துக்குப் பதில் கொடுத்துட்டுப் பப்ளிஷ் பண்ணினா ப்ளாக்கர் ஏத்துக்கவே இல்லை. ப்ளாகாரோட இஞ்சினீருங்க எல்லாம் ரொம்பவே பிசியாம் அப்புறமா வா, உன்னோட ஒரே தொல்லையாப் போச்சு, அப்ப்டினு சொல்லவே திரும்பிட்டேன். இப்போ பார்த்தா அது பப்ளிஷ் ஆயிருக்கு. மத்தவங்க என்ன நினைப்பாங்க, வல்லிக்கு மட்டும் நான் பதில் சொல்லிட்டு , மத்தவங்களை விட்டுட்டேன்னு நினைக்க மாட்டாங்க. இப்படித்தான் your request could not processed. try again.அப்படின்னு வர மெசேஜை நம்பித் திரும்பத் திரும்ப பப்ளிஷ் கொடுத்திருப்பேன். எத்தனை முறை பப்ளிஷ் கொடுக்கிறேனோ எல்லா முறையும் பப்ளிஷ் ஆகித் தொலைச்சிருக்கும். நான் சரியா வந்திருக்கான்னு பார்க்கப் பதிவும் திறக்காது. வெளியே போன்னு மிரட்டும். இந்த லட்சணத்தில் இருக்கிறப்போ புது ப்ளாகுக்கு மாறினா என்னோட இலக்கியங்கள் எல்லாம் என்ன ஆகிறது? ஏற்கெனவே ஒரு தரம் காணாமல் போய்ப் பின் கண்டு பிடிச்சுக் கொடுத்தாங்க. இப்போவும் ரிஸ்க் எடுக்க முடியுமா?
கார்த்திக்: அஜித், அசின்ன்னு சொன்னா மட்டும் திரும்பிப் பார்ப்பார். இல்லாட்டிக் கடமையே கண்ணாக இருப்பார். அதாவது ஆஃபீஸ் நேரத்திலும் பதிவு எழுதும் கடமையே கண்ணாக இருக்கிறதைச் சொன்னேன். பச்சை விளக்கு எரியுதேன்னு இவர் கிட்டே போய்ப் பேச முடியாது. கண்டுக்கவே மாட்டார். சிவப்பு விளக்கை எரிய விட்டுட்டுத் தூங்கப் போறேன்னு மெசேஜும் கொடுத்துட்டுக் கொட்டாவி விட்டுக்கிட்டே வந்து கேட்பார், "எப்படி இருக்கீங்க?" ன்னு. என்னத்தைச் சொல்றது? பின்னூட்ட மழை பொழிந்தவர் ஒரு பின்னூட்டத்துக்கேக் காசு கேட்கிறார்.
வேதா: பாவம், ரொம்பவே பிசி. விட்டுடுவோம்.
எஸ்.கே.எம்: யார் வீடு வழியாவோ கஷ்டப்பட்டு வரவேண்டி இருக்கு. அதனால் இவங்களையும் விட்டுடலாம்.
மணிப்ரகாஷ்: ஹிஹிஹி, கட்-அவுட் வைக்கிறதில் பிசின்னு நினைக்கிறேன். கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம்.
மதுரையம்பதி: எனக்குக் கமெண்ட் கொடுக்கிறதுக்காகவே ப்ளாக் ஆரம்பிச்சேன்னு சொல்லிட்டு, பங்களூரில் கட்-அவுட் வைக்கிறேன்னு சொல்லிட்டுப் போனவர் தான். ஆள் அட்ரஸே இல்லை. எனக்கு என்னமோ அம்பி பேரிலே தான் சந்தேகமா இருக்கு. கடத்தி வச்சிருப்பாரோ? :D
தி.ரா.ச.: அம்பியைக் கேட்டிருப்பார். அம்பி கிட்டே இருந்து பதில் வந்திருக்காது. அதான் வரலைன்னு நினைக்கிறேன். இதென்ன சார், அம்பி எப்போ தன்னோட நினைப்புக்கு வந்து சொல்லப் போறார்? ரொம்பவே கஷ்டம் தான், போங்க. இவரும் அம்பி கூடச் சேர்ந்து இந்தத் தொண்டர் படையை ஒளிச்சு வச்சதிலே கூட்டு, எதுவும் வச்சிருக்காரோன்னு சந்தேகமா இருக்கு. :D
லதா: ஹிஹிஹி எப்போவோ வந்தாலும் வரப்போ எல்லாம் ஒரு 2 வயசாவது குறைச்சுடறாங்க. ரொம்பவே சந்தோஷமா இருக்கு, மெதுவா வரட்டும். வரப்போ இன்னும் ஒரு 2 வயசு குறைச்சாங்கன்னா அப்புறம் அப்படியே எனக்கு வயசு குறைஞ்சு ஒரு கட்டத்திலே நான் இன்னும் பிறக்கவே இல்லைனு வந்துடும். "அந்த நாளும் வந்திடாதோ!"
நாகை சிவா: புலி இப்போ கொஞ்சல்ஸ் ஆஃப் நாகப்பட்டினம்ங்கிறதாலேயும், அப்போ அப்போ வந்து உறுமிட்டு இருக்கிறதாலேயும் விட்டுடலாம். ஆப்ரிக்கக் காட்டுக்குத் திரும்பட்டும் புலி.
ச்யாம்: எங்கே இருந்துட்டு ஃபிகர் பார்த்துட்டு இருக்காரோ தெரியலை. இதிலே முகிலுக்கு வேறே பாடம் இப்போவே பிடிச்சு ஆரம்பம். இல்லாட்டி ஏதாவது கோழி, புறா இதுங்க பின்னாலே போய் வேட்டை ஆடிட்டு இருக்காரோ என்னமோ? இல்லை மாட்ரிமோனியல் காலம் பார்த்துட்டு இருக்காரோ? அவரோட தங்கமணி கிட்டே வத்தி வைக்க வேண்டியது தான்.
கண்ணன்: என் அருமை அண்ணன் மகன். என்னோட பதிவிலே பின்னூட்டம் கொடுக்கிறதுக்காக ப்ளாக ஆரம்பிச்சுட்டு, நண்பனையும் ஆரம்பிக்கச் சொல்லிட்டு, எனக்குக் கோவில் கட்ட இடம் பார்க்கப் போனவன் தான், ஆளே காணோம்.! கோவில் கட்டி அங்கே அவனோ உட்கார்ந்துட்டானோன்னு சந்தேகமா இருக்கு.
இதைத் தவிர, என்னோட ப்ளாகிலே கமெண்ட் போடறதுக்காக ஆரம்பிச்ச நன்மனம் இப்போ ரொம்பவே ஆன்மீக நன்மனமாகி எல்லா ஆன்மீகப் பக்கங்களிலேயும் அப்போ அப்போ தென்படறார். மின்னலோ மழைக்காலம் முடிஞ்சதாலே இப்போ வரதே இல்லை. உமாகோபு என்ன ஆனாங்கன்னு தெரியலை. அவங்க வீடும் திறக்கலை. இப்போ புதுசா ஒருத்தர் hotcatங்கிற பேரிலே அறிமுகம் பண்ணிட்டிருக்கார். முன்னாலே ஒருதரம் வேதா பதிவுலே வந்த "சங்கர்"னு நினைக்கிறேன். அறிந்த அன்னியர் இப்போ பிசி போலிருக்கு, இல்லாட்டியும் அவர் ரெயில் பத்தின பதிவுன்னாத் தான் வரார். இன்னும் யாரையாவது விட்டுட்டேனா தெரியலை. அடிக்கடி வரவங்க மட்டும் தான் குறிப்பிட்டிருக்கேன்.
மேற்கண்ட நபர்களின் பதிவுகளுக்குச் செல்பவர்கள் அனைவரும் என்னுடைய இந்தப் பதிவுலேயும் வந்து பின்னூட்டம் இட வேண்டும் என்பது எழுதப் படாத விதி.
ஹிஹிஹி, மூணு நாளா தூக்கமே வரலை. என்னன்னு யோசிச்சேனா? ரொம்பவே சீரியஸாப் பதிவு போட்டதிலேயும், யாரையுமே வம்புக்கு இழுக்கலைங்கிறதாலேயும் சாப்பாடு ஜீரணம் ஆகலைன்னு தெரிஞ்சது. அதான் மொத்தமா எல்லாரையும் ஒரு வாங்கு வாங்கிட்டாக் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாமே, அம்பிக்கு மட்டும் ஆப்பு கொடுத்துட்டு.அதை நிறுத்த முடியாது பாருங்க.
ஹையா, ஜாலி, இன்னிக்கு ஒரே க்ளிக்கிலேயே பப்ளிஷ் ஆயிடுச்சே?
ReplyDeleteஸாரிங்க. இன்னும் நான் பாகச மயக்கத்துல இருந்து வெளில வரல.
ReplyDelete3 நாள் பொறுங்க...எல்லோரையும் கூப்பிட்டு வர்றேன்
சென்ஷி
//"யாரோட மொக்கை போட்டுட்டு இருக்கே?"ன்னு கேட்கிறார். //
ReplyDelete:) ROTFL. saambu maama correctta thaan solli irukaar.
all r busy. comment ellam neengale pottukonga. :)
//இதைத் தவிர, என்னோட ப்ளாகிலே கமெண்ட் போடறதுக்காக ஆரம்பிச்ச நன்மனம் இப்போ ரொம்பவே ஆன்மீக நன்மனமாகி எல்லா ஆன்மீகப் பக்கங்களிலேயும் அப்போ அப்போ தென்படறார்.//
ReplyDeleteஆகா.... கிளம்பிட்டாங்கயா.... கீதா மேடம் கிளம்பிட்டாங்கய்யா...
"ஆன்மீக நன்மனம்...." நல்லா இருக்கே இதுக்கு காப்புரிமையெல்லாம் கிடையாதே நாங்க யூஸ் பண்ணிக்கலாம் இல்ல...:-)
அது சரி எப்படீங்க என்ன டிராக் வெச்சிகிட்டுவரீங்க....:-))
விளம்பரத்துக்கு நன்றி...
சென்னையில் இருந்து
வணக்கத்துடன்
நானும் இப்படி ஒரு பதிவு எழுதலாம்னு நினச்சுகிட்டு இருந்தேன்.. முந்திகிட்டீங்களே மேடம்
ReplyDelete//கார்த்திக்: அஜித், அசின்ன்னு சொன்னா மட்டும் திரும்பிப் பார்ப்பார். இல்லாட்டிக் கடமையே கண்ணாக இருப்பார். அதாவது ஆஃபீஸ் நேரத்திலும் பதிவு எழுதும் கடமையே கண்ணாக இருக்கிறதைச் சொன்னேன். பச்சை விளக்கு எரியுதேன்னு இவர் கிட்டே போய்ப் பேச முடியாது. கண்டுக்கவே மாட்டார். சிவப்பு விளக்கை எரிய விட்டுட்டுத் தூங்கப் போறேன்னு மெசேஜும் கொடுத்துட்டுக் கொட்டாவி விட்டுக்கிட்டே வந்து கேட்பார், "எப்படி இருக்கீங்க?" ன்னு. என்னத்தைச் சொல்றது? பின்னூட்ட மழை பொழிந்தவர் ஒரு பின்னூட்டத்துக்கேக் காசு கேட்கிறார்///
ReplyDeleteமேடம்.. இதெல்லாம் அடுக்குமா.. உங்க வாசலுக்கு வந்து ஒவ்வொரு பதிவை படிச்சிட்டு போற ஒரே ஆள் நானாகத் தான் இருக்கும்.. எத்தனை பேர் மொக்கை பதிவுன்னு சொன்னாலும் நான் இதுவரைக்கும் தலைவியை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியதுண்டா.. இப்படி ஒரு ரெண்டு பதிவுக்கு வரலைனவுடனே காணாமல் போனவர்கள் லிஸ்ட்ல சேர்த்தது தகாது மேடம்.. தகாது
இதை நான் கடுமையா ஆட்சேபிக்கிறேன் மேடம்
ReplyDelete//அவரோட தங்கமணி கிட்டே வத்தி வைக்க வேண்டியது தான்//
ReplyDeleteநீங்க சொல்றத எல்லாம் கேட்கும் என்ன மாதிரி ஒரு அற்புத தொண்டன் மேல உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி :-)
//யாரோட மொக்கை போட்டுட்டு இருக்கே?"ன்னு கேட்கிறார்//
ReplyDeleteஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொல்லி இருக்கார் :-)
//என்னைப் பத்தி எதுவுமே தெரியாம என்னைப் புது ப்ளாகுக்கு மாறுங்க மேடம்னு சொல்லிட்டிருக்கார்//
ReplyDeleteஉங்கள பத்தி தெறிஞ்சு தான் சொல்லி இருக்கார்....அப்பவாவது உங்களுக்கு இன்னும் கொஞ்சம் சிக்கல் ஆகி கொஞ்சம் மொக்கை குறையுமேனு :-)
193...இன்னும் ஒரு வாரத்திற்குள் டபுள் சென்சுரி அடிக்க போகும் எங்கள் தானை தலைவி வாழ்க வாழ்க...
ReplyDeleteஏம்பா இத பார்த்திட்டு world cup opening batsman க்கு எங்க தலைவிய கூப்பிட கூடாது இப்பவே சொல்லிட்டேன் :-)
maami,present potachu.appuram thirumba varen.
ReplyDeleteமாமி,யாரையும் வம்பிழுக்காம ஜீரணமாவதில்லையா? இப்படி பண்ணறதுனாலே மாமா "மொக்கை" போடறையா நு கேட்கறதுல என்ன தப்பு.வேறு வளையிலிருந்து வரேன் நு வேறே கோவமா?
ReplyDeleteவரேன், படிக்கிறேன். கமெண்டுகிறேன். பாவப்பட்டு மன்னிச்சுடுங்கோ. உங்களிடமிருந்து வந்த ஒரே ஒரு மெயிலுக்கு,பதில் ஈ-மெயில் போட்டேனே,வந்ததா?--SKM
அப்டியே அவிங்கவிங்க லின்கையும் கொடுத்திருந்தீங்கன்னா, நாமளும் அவிங்க கடைக்குப் போய் கதவ தட்டியாவது நாலு கிலோ பின்னூட்டம் வாங்கிட்டு வந்திருப்போம்ல :)
ReplyDeleteஇதுல எனக்குத் தெரிஞ்சவங்க மூணு பேர் தான்னு நினைக்கிறேன்: கைப்புள்ள, மு. கார்த்திகேயன் நாட்டாமை சியாம். அதுலயும் ரெண்டு பேர் ஜம்முன்னு இருக்கவே இருக்காங்க. கைப்புள்ள தான் நெசமாவே காணோம்.
ReplyDeleteநீங்க ஏன் உங்க பதிவுக்கு மறுமொழி நிலவரம் தெரியச் செய்யக்கூடாது? அப்படி இருந்தா எல்லாரும் ரொம்ப எளிதா வந்து எட்டிப் பார்த்து அப்பப்ப உள்ளேன் அம்மா சொல்ல எளிதா இருக்குமே?
ReplyDelete@சென்ஷி, அது என்ன பாகச மயக்கம்? புதுசா இருக்கே? இது வரை கேட்டதில்லையே?
ReplyDelete@அம்பி, உங்களுக்கு "ஆப்பு" வைக்கிறதை மட்டும் நிறுத்த மாட்டேனே! நற நற நற (ஹிஹிஹி, கைப்புள்ள இப்போ சந்தோஷமா?) வத்தி வச்சாச்சு :D
@நன்மனம், புதுசாக் கொடுத்திருக்கிற அடை மொழி பிடிச்சிருக்கு போல் இருக்கு, என்ன இருந்தாலும் நான் தலைவி இல்லையா? ரொம்பவே பெருந்தன்மையோடு கொடுத்திருக்கேன். பெற்றுக் கொண்டு விழாவைச் சிறப்பித்ததற்கு நன்றி.
அதோட இல்லை, நான் உங்களை ட்ராக் வச்சுட்டு வரேனே, வாராமல், இப்போ தெரியுதா? என்னோட பெருந்தன்மை? :D
கார்த்திக், நான் தான் மு.ஜா.முத்தம்மான்னு தெரியுமே? அப்புறம் உங்களோட தொண்டு உள்ளத்தைப் பாராட்டினதாலே தான் போனாப் போகுதுன்னு தாயுள்ளத்தோட விட்டுட்டேன், இப்போ திருப்தியா?
ReplyDelete@ச்யாம், ஹிஹிஹி, அது ஒண்ணும் இல்லை, நமக்குப் பின்னூட்டமே வர மாட்டேங்குதா? அதான் இந்தக் கொலை வெறி! :D
நறநறநற, என்னோட அற்புதமான இலக்கியங்கள் எல்லாம் உங்களுக்கு மொக்கையாத் தெரியுதா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... :-)
அது என்ன? நீங்களும் அம்பியைப் பார்த்துட்டுப் பின்னூட்டம் போட்டிருக்கீங்க போல் இருக்கு,
ஹிஹிஹி, வாழ்த்துக்கு நன்றி. எல்லாம் உங்க மாதிரித் தொண்டர்கள் ஆதரவுதான்.
என்னங்க மலர், திரும்பத் திரும்ப உள்ளேன் அம்மான்னே சொல்றீங்க?
ReplyDelete@எஸ்.கே.எம். ரொம்பவே பிசி நான். பிரதம மந்திரி, குடியரசுத் தலைவர் இவங்களோட ஷெட்யூலை விட ரொம்பவே டைட்டா இருக்கு, அதான் எறும்பு மெயில் அனுப்பலை. கொஞ்சம் பொறுத்துக்குங்க. வேறே வீட்டு வழியாவாவது வரீங்களே, உங்க ஆதரவுக்கு நன்றி,
@ஜி, என்ன ஜி, நீங்க, அஜித் நடிச்ச ஜியா? இங்கே அவங்க அவங்க ஒரு பின்னூட்டத்துக்காக ஒரு மொக்கைப் பதிவே சீச்சீ, என்னை மறந்து உண்மை வந்துடுச்சே, அதை அழிச்சுடுங்க, ஒரு நல்ல பதிவு போட வேண்டி இருக்கு, நான் லிங்க் கொடுத்து அவங்க பதிவிலே நீங்க பின்னூட்டம் போடுவீ ங்க, நான் தலைவீஈஈஈஈஈஈஈனு பேரை வச்சுட்டுப் பார்த்துட்டா இருப்பேன்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............. :D
சேதுக்கரசி, மத்தவங்க எல்லாரும் வலை உலகிலே பழம் தின்னுக் கொட்டையும் போட்டவங்க தான். நீங்க புதுசோ? அப்படியும் தெரியலையே?
ReplyDeleteஅப்புறம் மறுமொழி நிலவரம் எல்லாம் போய்க் கொடுத்துட்டுத் தான் வந்தேன். என்னமோ நம்ம நேரம் சரியா வரலைன்னு நினைக்கிறேன். பார்க்கலாம் இன்னொரு முறை, ஏற்கெனவே பலமுறை ஆயிடுச்சு.
என்னங்க சேதுக்கரசி, உங்க மெளனம் எப்போ கலையும்?
ReplyDeleteமாமி,?"வேறு வளை"ப் பற்றிய அபிப்பிராயத்திற்காக நான் காத்திருக்கிறேன்.நிதானமாவே ஈமெயில் எறும்பு மெயில் அனுப்புங்கோ. எப்பவும் வரவில்லைன்னு சொல்றீங்களேன்னு அதுக்காக வந்ததா எனக் கேட்டேன்.பாருங்க உங்க மொக்கைக்கு 22 கமெண்ட்ஸ்.மத்த அருமையான போஸ்ட்க்கு ஏன் யாரும் ஏதும் சொல்லாம போறாங்க?தலைவி அடிக்கடி மிரட்டல் விட்டுக் கிட்டே இருக்கனுமோ என்னவோ?--SKM
ReplyDelete//மத்தவங்க எல்லாரும் வலை உலகிலே பழம் தின்னுக் கொட்டையும் போட்டவங்க தான். நீங்க புதுசோ? அப்படியும் தெரியலையே?//
ReplyDeleteஆமாங்க, நான் ஊருக்குப் புதுசு தான்.. மே/ஜூன் மாசத்தில் கொஞ்சம் பிளாக்குகள் வாசிச்சேன், மறுபடியும் நவம்பர்/டிசம்பர் முதல் தான் வாசிக்கிறேன். ஆனா உங்களுக்கு ஏன் அப்படித் தெரியலைன்னா சமீபகாலமா அடிக்கடி என் பேரைப் பின்னூட்டங்களில் பார்த்தே பழகிப் போயிருக்கும் உங்களுக்கு :-)
//உங்க மெளனம் எப்போ கலையும்?//
ReplyDeleteஆகா.. நீங்களும் கேட்டுட்டீங்களா? :-) தெரியலீங்க... இப்ப தான் வாசிக்கிற ஆர்வம் வந்திருக்கு. எழுதுற ஆர்வம் எப்போ வருதுன்னு பார்ப்போம். ஆனா நான் வலைப்பூக்களில் தான் எழுதறதில்லையே தவிர கூகுள்குழுமங்களில் முழுமூச்சில் இருக்கேன்... நீங்க கூட இருக்கீங்கன்னு தான் நினைக்கிறேன்.
Geetha Madam
ReplyDeleteI've been reading ur "Bhakthi" blog for long time....now i've started to gear up reading ur other blog!!!
//தொலைபேசியிலே பேசறதுன்னா பயம். தனக்குத் தானே பேசிக்குவார். நம்ம காதிலேயே விழாது. ஏதாவது சந்தேகம் கேட்டால் உடனேயே சார்ஜ் போயிடுச்சுன்னு சொல்லிப் பின் வாங்குவார். இவரோட ஒரே கவலை அம்பியின் fiancee யாருன்னு தான்//
ReplyDeleteபத்த வச்சிட்டீங்களே தலைவி?
:(
இப்போ தான் ஆபீஸ்ல ரிவிட்டு அடிசுருக்கானுங்க....கொஞ்சம் பொருங்கோ ..இப்போ தான் நேரம் கடச்சது கமென்ட்டு போட ...இந்தியா வரத்துக்கு இன்னும் 15 நாளே இருக்கும் போது கொஞ்சம் வேலை செய்யிற மாதிரி நட்டிச்சுட்டு இருக்கேன்
ReplyDeleteதலைவி அவர்களே ,
ReplyDelete//ஹிஹிஹி, கட்-அவுட் வைக்கிறதில் பிசின்னு நினைக்கிறேன். கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம்//
ஆமாம் தலைவி அவர்களே. கட் அவுட் வைக்க போன இந்த டேமேஜர்க தொல்லை தாங்க முடியல. அந்த டாஸ்க முடிச்சுட்டியா, இந்த டாஸ்க முடிச்சுட்டியா னு கேள்வி மேல கேள்வி கேட்கிறாங்க..
அதுக்கு அப்புறம் நீங்க வேற ரகசியான என்னனு தெரியாதனு அப்படினு கேட்டுடீங்களா..
உங்க தொண்டனுக்கு இந்த விசயம் தெரியாமல் இருந்த நல்லா இருக்குமானு அத தெரிஞ்சுக்க முயற்சி வேற பன்னிகிட்டு இருக்கேனா அதுதான் கரக்ட் டைம்கு வரமுடியல...
வேதா, இப்போ ஃப்ரீ ஆயாச்சா? இன்னும் இல்லையா? நானே போய்க் கவிதையை முத்தமிழுக்கு அனுப்பவா? இது மிரட்டல் இல்லை, ஒரு கவிதாயினிக்குக் கிடைக்க வேண்டிய கெளரவத்தைக் கிடைக்கச் செய்யும் சிறு முயற்சி, அவ்வளவுதான். (என்ன இருந்தாலும் நான் தலை(வலி)வி இல்லையா?,அதான் தாயுள்ளத்தோடு கெளரவிக்க ஏற்பாடு செய்யறேன்.)
ReplyDelete@எஸ்.கே.எம். சரியாப் போச்சு, மலரே, மலரே குறிஞ்சி மலரே!
அப்பாடி, சேதுக்கரசி, படிக்கவே நிதானமா ஆறு மாசம் நேரம் எடுத்திருக்கீங்க, அப்போ நல்லா கமெண்ட் மட்டும் இல்லை,நல்ல எழுத்தே எதிர்பார்க்கலாம். நல்ல அஸ்திவாரத்தோட பலமாக் கட்டுங்க உங்க வீட்டை, ஆதரவு கொடுக்கத் தொண்டர் படை திரண்டு வரும், நான் உத்தரவாதம்!
ReplyDeletehotcat,
ReplyDeleteஹிஹிஹி, ரொம்பவே சந்தோஷம், தொண்டர் படையிலே ஒரு புது வரவு,
@அம்பி, ஆப்பு அம்பி, note the point, என்னோட ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது, அதுவும் மொக்கைக்கு, ஹா ஹா ஹா ஹா ஹா ஹா. இது எப்படி இருக்குகுகுகுகுகுகுகுகுகு(ரஜினி ஸ்டைலில் படித்துக் கொள்ளுங்க எல்லாரும்.)
@சென்ஷி,
ReplyDeleteஉங்க "பாகச" மயக்கம் என்னன்னு புரிஞ்சுது, ரொம்ப டாங்ஸு.,
கைப்புள்ள, ஆதரவு தெரிவிக்கக் கொஞ்சம் நேரம் ஆனாலும் இப்படித்தான் நாரதர் வேலை எல்லாம் நடக்கும், புரிஞ்சுதா? அது சரி, உங்க வீட்டுக் கதவு திறக்கறாப்பலே இருக்கா? இன்னிக்காவது வரமுடியுதான்னு பார்க்கணும். என்ன செய்தீங்களோ, இழுத்து மூடிக்கிட்டு இருக்கு. கார்த்திக் வீட்டுக்குத் தினமும் புதுச் சாவி போட வேண்டி இருக்கு.
கண்ணா, யப்பா தங்கமே, அண்ணன் பெற்ற செல்வமே, உன்னோட தமிழைப் பார்த்துட்டுத் தான் பிள்ளைப் பாண்டியனும், சீத்தலைச் சாத்தனாரும் முன்னாடியே போயிட்டாங்கன்னு நினைக்கிறேன். இப்போ எனக்கு சீத்தலைச் சாத்தனார் மாதிரிக் குத்திக்கலாமான்னு தோணுதே! :D
ReplyDeleteவா, வா, சீக்கிரமா வா இந்திய மண்ணுக்கு, உன் வரவை மிக அவலோடு சீச்சீ ஆவலோடு எதிரி சீச்சீ, உன்னோட கமெண்ட் படிச்சேனா, எனக்கும் அப்படியே வருது பார், :D எதிர்பார்க்கிறேன்.
@மணிப்ரகாஷ், நான் வந்து உள்ளேன் ஐயா போட்டதாக நினைப்பு, ஒருவேளை எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து ப்ளாக்கரும் சதி செய்துட்டதோ என்னவோ, இன்னிக்கு வந்து பார்க்கிறேன்.
"ரகசியா"வின் ரகசியம் அறிய சிரமேற்கொண்டு செய்யும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.:D அப்புறம் ஆஃபீஸ் என்னங்க, ஆஃபீஸ், கட்-அவுட் வைக்கிறதே உங்க கடமை, அதிலேயே கருத்தா இருங்க, :D
ஹிஹிஹி, இந்த அம்பி "மொக்கை"னு சொல்ற எல்லாப் பதிவுக்கும் தான் பின்னூட்டம் மழை பெய்யுது! இதுவும் ஒரு டெக்னிக்குன்னு தெரியாமப் போயிடுச்சே, BETTER LATE THAN NEVER
ReplyDeleteஉள்ளேன் மாமி.....கொஞ்சம் உடம்பு சரியில்லை...சளி மற்றும் முதுகு வலியால் முழு ரெஸ்ட்....அதுக்குள்ள இப்படியா?
ReplyDeleteவாங்க, வாங்க, மதுரையம்பதி, காணோம்னதுமே நினைச்சேன், ஒண்ணு உடம்பு சரியில்லாமல் இருக்கணும், இல்லாட்டி ஆஃபீஸில் ப்ளாக் எழுதறதுக்கு நடுவே கொஞ்சம் வேலையும் பாருன்னு சொல்றாங்களாமே அப்படி இருக்கணும்னு நினைச்சேன்.
ReplyDeleteஇப்போ எப்படி இருக்கு? பரவாயில்லையா?
நான் தலைவின்னாலும் பெருந்தன்மையோடும், தாயுள்ளத்தோடும் தொண்டர்களின் வரவையும் அவங்க உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்கிறேன், பாருங்க என்னோட தலைமைப் பதவியின் பெருமையை :D
//
ReplyDeleteலதா: ஹிஹிஹி எப்போவோ வந்தாலும் வரப்போ எல்லாம் ஒரு 2 வயசாவது குறைச்சுடறாங்க. ரொம்பவே சந்தோஷமா இருக்கு, மெதுவா வரட்டும். வரப்போ இன்னும் ஒரு 2 வயசு குறைச்சாங்கன்னா அப்புறம் அப்படியே எனக்கு வயசு குறைஞ்சு ஒரு கட்டத்திலே நான் இன்னும் பிறக்கவே இல்லைனு வந்துடும். "அந்த நாளும் வந்திடாதோ!"
//
இப்படியெல்லாம் ஐஸ் வைத்தால் நாங்கள் மயங்கி, தங்களைக் கலாய்த்தலை விட்டுவிடுவோம் என்று தவறாக எண்ண வேண்டாம்.
மற்றபடி இது இன்னொரு மொ.பதிவு
:-)))
மொக்கை, மொக்கைன்னு சொல்லிட்டே பின்னூட்டம் கொடுக்கிறதிலே குறைச்சல் இல்லை எல்லாரும், இதுக்குத் தான் அதிகப் பின்னூட்டம் வந்திருக்கு. இந்த அழகிலே புதுசா வந்திருக்கிற சூடான பூனையும் ஆரம்பிச்சிருக்கார் மொக்கைனு சொல்றதுக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,
ReplyDelete@லதா, வாங்க, வாங்க, என்ன இன்னிக்கு வயசு அதே தானா? பரவாயில்லை. அடுத்த முறை வரப்போ கொஞ்சம் நிதானமா வந்து சேர்த்து ஒரு 4 வயசு குறைச்சாப் போதும். டாங்ஸு, டாங்ஸு :D