ஏற்கெனவே எழுதினேன் கழுத்து வலியோடு. சேமிப்பில் போட்டுட்டுச் சாப்பிட்டு வந்து பார்த்தால் எங்கேயோ ஓடிப் போச்சு. திரும்பவும் எழுதறேன். இதைக் கூடச் சேமிக்கத் தெரியலியான்னு என் கணவர் சிரிக்கிறார். இப்போ நிஜமாவே சில ஜோக்ஸ்: முதலில் புதுக் கல்யாண மாப்பிள்ளையாகப் போகும் அம்பிக்கு ஒண்ணு: இப்போல்லாம் இங்கே வரதில்லை. தங்கமணி ஆர்டரோ என்னவோ? இருந்தாலும் யாராவது படிச்சவங்க போய்ச் சொல்லுங்களேன்.
*************************************************************************************மனைவி கணவனிடம்: எதிர் வீட்டு மாலாவுக்கு யாரோ வேண்டப்பட்டவங்க ரூ.8,500ல் பட்டுப் புடவை எடுத்துக் குடுத்து இருக்காங்களாம். தம்பட்டம் அடிக்கிறா!!!!!
கணவன்(ரொம்ப அப்பாவி "லுக்"குடன்):8,500/-ன்னா சொன்னாள்? இல்லியே? தள்ளுபடி போக5,375 தானே? !!!!!!!!!!!
ஹிஹிஹி, அம்பியோட தங்கமணி, ஜாக்கிரதை! அம்பி இந்த பஞ்சாப் குதிரையைப் பார்க்கிற பார்வையே சரி இல்லை. எங்காவது எடுத்துக் குடுத்து இருக்கப் போறார். அப்புறம் தங்கமணிக்குச் சில யோசனைகள்: அப்போ அப்போ வெளி வரும். முதல் யோசனை:(படிக்கிறவங்க போய்த் தங்கமணிகிட்டச் சொல்லுங்கப்பா). அவங்க இங்கே எல்லாம் வர மாட்டாங்க.
உடம்பு தேற நல்லாச் சாப்பிடும்படி உங்க "அவரும்" அவரோட "அப்பா, அம்மாவும்" சொல்லி இருக்காங்க இல்லை? அதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான். கத்திரிக்காய்க் கறி, கத்திரிக்காய்ச் சாதம், கத்திரிக்காய்க் கூட்டு, கத்திரிக்காய்ப் பிட்லை, கத்திரிக்காய்த் துவையல்,, கத்திரிக்காய்க் கொத்சு, கத்திரிக்காய்ப் பச்சடி, கத்திரிக்காய் பர்த்தா(வட இந்திய முறையில்) செய்து சாப்பிட்டு விட்டு அம்பிக்கும் கொடுங்க. ரொம்பப் பிடிக்கும் அவருக்கு உங்களையும், கத்திரிக்காயையும். நல்லப்பிஞ்சுக் கத்திரிக்காயா நான் வாங்கி அனுப்பறேன். கவலை வேண்டாம்.
*********************************************************************************
இப்போ மன்னா, மன்னா, என்னா, என்னா?
மன்னர்: (கோபமாக), யாரங்கே?
சேவகன்: என்ன இப்போ? இந்தப் பந்தாக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. 6 மாசமாச் சம்பளம் பாக்கி.
சேவகன்: மன்னா, அடிக்கடி "யாரங்கே"ன்னு கூப்பிடாதீங்க!
மன்னன்: ஏன்?
சேவகன்:மன்னருக்குக் கண்ணு சுத்தமாத் தெரியலைன்னு வெளியே எல்லாரும் பேசிக்கிறாங்க!
மந்திரி: எப்படியோ, ஒரு வழியாகப் புறமுதுகிட்டு ஓடி வந்து தப்பித்து விட்டீர்கள் மன்னா!
மன்னன்: அது சரி, நான் அசந்து தூங்கிட்டு இருந்தப்போ என்னைப் போர்க்களத்துக்குத் தூக்கிப் போனது யார்?
சேவகன்1: நம்ம போரில் எதிரி மன்னர் தான் வின்னராம்.
சேவகன்2: நம்ம மன்னர்?
சேவகன்1: ரன்னர்!!!!!!
கார்த்திக்குக்காக ஒரு சினிமா ஜோக்: கொஞ்சம் சுமாராத் தான் இருக்கு. நல்லதாய்த் தேடுகிறேன் கார்த்திக்.
ஒருத்தர்: மக்குப் பசங்களை மையமா வச்சி டைரக்டர் ஷங்கர் படம் தயாரிச்சா, என்ன பேர் வைப்பார்?
மற்றவர்: "பெயில்"!!!!!!!!!!!!
*************************************************************************************
எல்லாம் இந்த "டாட்டா இண்டிகாம்" பிரச்னை தான். ரொம்பவே படுத்திட்டாங்க 20 நாளாக. தினமும் ஒரு புகார் எண் கொடுப்பதோடு வாடிக்கையாளர் சேவை மையத்தின் பணி சரியாப் போச்சு. இந்தக் களப்பணிப் பொறியாளர்கள் நம்ம நம்பரைத் தொலைபேசியில் பார்த்ததுமே "ஸ்விட்ச் ஆஃப்", "எங்கேஜ்மெண்ட் மோட்", அல்லது எட்ட முடியாத தூரத்தில் இருக்கிறார் என்று டேப் செய்யப் பட்ட செய்திகளைப் போட்டுடுவாங்க. குறைந்த பட்சமாக வாடிக்கையாளரிடம் "வேலை நடக்கிறது, இன்னும் 2 அல்லது மூணு நாள் பொறுத்துக்குங்க!" என்ற அளவில் கூடச் செய்தி கொடுக்க மாட்டார்கள். இந்த மாதிரிப் பணியாளர்களைப் பார்த்ததே இல்லை. டெக்னிகல் விஷயமாகக் கஷ்டப் பட்டாங்க என்றால் அதை ஒத்துக் கொண்டு இவ்வளவு நாள் சேவை கொடுக்க முடியாது, மன்னிக்கவும் என்று கேட்கிற குறைந்த பட்ச மரியாதை கூடவா இல்லை? சேவை மையத்தில் 24 மணி நேரம் என்று சொல்வதால் அவங்க வேலை முடிஞ்சுட்டதாக் கணக்கு வச்சுக் கொண்டு புதுப் புகார் எண் கொடுக்கிறாங்க. இதை எப்படி ஏற்க முடியும்? ஜனவரி 4 தேதிக்கு அப்புறம் கொடுத்த புகார் எண்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் புகார் எண்ணையே வைத்துக் கொள்வேன் என்று சொல்லி விட்டேன். ஆனாலும் அவங்க சொல்லும்போது புதுப் புகார் எண்ணையும், தேதியையும் தான் குறிப்பிடுகிறார்கள். எய்தவன் இருக்க அம்பை எப்படி நோவது? மொத்தத்தில் இது ஒரு அனுபவம். ஹிஹிஹி, என் கணவர் சொன்னது இந்த ஜோக்: "நீ எழுதறதைச் சகிச்சுக்கு முடியாத யாரோ தான் வி.எஸ்.என்.எல். கிட்டேயும், டாட்டா இண்டிகாமிடமும் சொல்லிக் கட் பண்ணச் சொல்லிட்டாங்க!" பல்லைக் கடித்தேன். வேறே என்ன செய்யறது? நம்ம அதிர்ஷ்டம், பல்லைக் காட்ட பல் டாக்டரிடம் போனால் அவங்க மூணு நாளா கிளினிக்கே திறக்கலை.
நான் கடந்து வந்த பாதை கல்லும், முள்ளுமாக இருந்ததாகக் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார். நான் என்னோட அனுபவங்களை எல்லாம் எழுதினால் என்ன சொல்வாரோ? தெரியவில்லை. ரொம்பக் கொஞ்சம் மட்டும், அதுவும் முக்கால் வாசி ரயில் பயணங்களில் பட்டது மட்டும் சொல்லி இருக்கேன். மத்தது ஏதும் இன்னும் சொல்லலை. இருந்தாலும் என்னைச் சரியாகக் கணித்தவர்களில் அவரும் ஒருத்தர். நான் எழுதுகிற நோக்கம் வீணாகி விடக்கூடாது என்ற எண்ணம் இருந்து வந்தது. சரியாப் புரிஞ்சுக்கிற ஒருத்தர் இரண்டு பேர் இருந்தாலும் போதும். எனக்குக் கதை, கவிதை எல்லாம் எழுத ஆசை இல்லை. வேதாவோடயோ, கார்த்திக்கோடயோ மற்ற தமிழ்க் கவிஞர்களோடயோ போட்டிப் போடப் போறதில்லை. ஏதோ எழுதுகிறேன். அதையும் 4 பேர் படிக்கிறாங்க. இப்போ நிஜமாவே 4 பேருக்கு மேல் வரதில்லை. ஏன் தெரியலை. ம்ம்ம்ம்ம்ம், முன்னால் எழுதினதில் நிறையவே எழுதி இருந்தேன். அது தேடிப் பார்த்துக் கிடைத்தால் போடுகிறேன். இப்போ இது மட்டும் தான். இந்த வேதா கூட ஏன் வரலை? பொங்கலுக்கு இப்போவே பிசியா? வேதா, பொங்கல் ரெடியா?
முதல் பின்னூட்டம்.. ஏதேனும் பார்சல் அனுப்புவீங்களா மேடம்
ReplyDelete//பொங்கலுக்கு இப்போவே பிசியா? வேதா, பொங்கல் ரெடியா? //
ReplyDeleteமேடம், நெய் வழிய வழிய பொங்கலை சாப்பிட்டே விட்டார்கள் வேதா..
//என்னைச் சரியாகக் கணித்தவர்களில் அவரும் ஒருத்தர்//
நன்றி மேடம்..
ஏன் இன்னும் பயண கட்டுரை எல்லாம் நீங்கள் எழுதக்கூடாது
//கத்திரிக்காய்க் கறி, கத்திரிக்காய்ச் சாதம், கத்திரிக்காய்க் கூட்டு, கத்திரிக்காய்ப் பிட்லை, கத்திரிக்காய்த் துவையல்,, கத்திரிக்காய்க் கொத்சு, கத்திரிக்காய்ப் பச்சடி, கத்திரிக்காய் பர்த்தா(வட இந்திய முறையில்) செய்து சாப்பிட்டு விட்டு அம்பிக்கும் கொடுங்க.//
ReplyDeleteThis idea didn't strike me at all.idhukkudhan neenga thalaivi.
--SKM
நீங்க எழுதியது உங்கள் அனுபவங்களின் 1%,ஆனால் அதில் நான் கற்றது ஏராளம்.உங்கள் தனித்துவம்தான் உங்களைத்
ReplyDeleteதலை(வலி)வியாக்கியுள்ளது.
நீங்க எதுக்கு போட்டிப் போடனும்?
நம்ம ஊர் ஜனங்க எப்போதுங்க மாறுவாங்க? காசு வாங்காம ஒன்றும் செய்வதில்லை.வாங்குகிற காசுக்கும் சரி,அதைக் கொடுக்கிற customersக்கும் மரியாதைக் கொடுத்து Sincere service செய்ற புத்தி என்று வருமோ.திருந்தவே மாட்டோம்னு அடம் பிடிக்கிற ஜனங்க நம்ம ஜனங்கதான்.--SKM
ஆயிரம் கை மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை, நாலு பேர் மட்டுமே பின்னூட்டம் இட்டாலும் கெத்து குறையவில்லை.
ReplyDeleteஇதுக்கு மேல புது அப்டசண்டி எப்பிடி பிகேவ் செய்ய முடியும்..
:)
//மன்னிக்கவும் என்று கேட்கிற குறைந்த பட்ச மரியாதை கூடவா இல்லை? //
ReplyDeleteஇந்த விசயத்தில் அமெரிக்காவின் சேவை நன்றாகவே இருக்கிறது..நான் அமெரிக்காவில் வியந்த ,பொறாமை படும் விசயங்களில் இதுவும் ஒன்று..
முதலாய் அமெரிக்கா வந்து ,அடுத்த நாளே அபீஸ் போகனும் சொன்னதால் மனமில்லாமல் திட்டிக் கொண்டே ,மெட்ரோபேருந்தில் ஏறினேன்..
ஏறியதும் ஆச்சர்யம். ஓட்டுனர்(அப்ப இந்த கண்டக்டரே இல்லப்பா) Hi,GudMorning,how are u னு கேட்க
நான் பின்னால் திரும்பி பார்த்தேன்..ஆகா நமக்குதான்னு நினைச்ச உடனே சந்தோசம் தாங்கல.
அப்புறம் வேறொருநாள் இதே இண்டர்னட் கனேக்சனுக்காக டைம்வார்னர் கேபிள் அனுக 10 நிமிட தாமத வருகைக்காக தொலைபேசி வருந்தியதை கண்டு ஆகா இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களேனு வியந்தேன்....
உங்க கதைய படித்த உடன் நியாபகம் வந்தது,..
எப்ப நம்ம ஊருல இது மாதிரி எல்லாம் நடக்குமோ..?
@கார்த்திக், சர்க்கரைப் பொங்கலை எனக்கும் கொடுக்கலை வேதா. அவங்களே சாப்பிட்டுட்டாங்க போலிருக்கு. அப்புறம், இந்த மணிப்ரகாஷுக்குக் கட்-அவுட் வைக்கவும், போஸ்டர் அடிக்கவும், அலங்கார வளைவுகள் வைக்கவும் சொல்லிக் கொடுங்க. இது தலைவியின் ஆனை! சீச்சீ, தலைவியின் ஆணை!!!!!
ReplyDelete@எஸ்.கே.எம். இதுக்குத் தான் அம்பி என் கிட்டே இருந்து மறைச்சார். தங்கமணியும் ஒரு ப்ளாகர்னு. இருந்தாலும் நான் விடுவேனா? ஒரு கை இல்லை இரண்டு கையாலும் டைப் பண்ணி ஒரு வழி பண்ணிட மாட்டேன்?
ம்ம்ம்ம், இந்த ப்ராட்பேண்ட் தொல்லை பற்றி 8-ம் தேதி ஹிந்து பத்திரிகையில் கூட வந்துள்ளது. போன வாரம் "துக்ளக்" பத்திரிகையிலும் ஒரு கட்டுரையாகவே வந்துள்ளது. அதில் "சிஃபி"யைப் பத்தி ஹிந்துவிலும், பி.எஸ்.என்.எல். பத்தித் துக்ளக்கிலும் இதே போல் தான் வந்திருக்கிறது. ஆகவே எங்கே போனாலும் இதே கதைதான்னு ஒரு ஆறுதல்.
ஸ்ரீகாந்த், நீங்க புதுசுங்கறதாலே தாயுள்ளத்தோடு மன்னிச்சு, மணிப்ரகாஷுக்குக் கட்-அவுட் வைக்கிறதில் உதவுமாறு கட்டளையிடுகிறேன்.
ReplyDelete@மணிப்ரகாஷ்,
இந்தியாவிலே எந்த ப்ராட்பேண்ட் சேவை என்றாலும் இந்தக் கதை தான். மாறாதது. .
ஸ்ரீகாந்த், நீங்க புதுசுங்கறதாலே தாயுள்ளத்தோடு மன்னிச்சு, மணிப்ரகாஷுக்குக் கட்-அவுட் வைக்கிறதில் உதவுமாறு கட்டளையிடுகிறேன்.
ReplyDelete@மணிப்ரகாஷ்,
இந்தியாவிலே எந்த ப்ராட்பேண்ட் சேவை என்றாலும் இந்தக் கதை தான். மாறாதது. .
தங்க தலைவி பேரவைக்கு பெங்களுர் கிளை அலுவலகம் இருக்கிறதா?....இருக்கிறதென்றால் அட்ரஸ் தரவும்....இல்லை என்றால் திறக்க அனுமதி தரவும்....
ReplyDeleteஹிஹிஹி, மதுரையம்பதி, பங்களூரு என்ன எந்த ஊரிலே வேணும்னாலும் திறந்துக்கலாம். காசா? பணமா? இத்தனை ஆதரவு இருக்குன்னு தெரியாமப் போச்சே? தெரிஞ்சிருந்தால் கார்த்திக்கை முதல் மந்திரி ஆகவே விட்டிருக்க மாட்டேன். போகட்டும், எப்படியும் நான் தானே ஒரே தலை(வலி), அது வரை சந்தோஷம்தான்.
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம், வேதா, நாங்க முயற்சி செய்தது என்னவோ பி.எஸ்.என்.எல்-லுக்குத் தான். நடுவிலே யாரோ வந்து இதைச் சொல்லவே "டாட்டா" பேரில் ஏமாந்து இதை எடுத்தோம். இப்போத் தான் கனெக்ஷன் புதுப்பிச்சு இருக்கேன். கரெக்டா டிசம்பர் 25-ம் தேதியன்னிக்கு. அதுவும் மூணு மாசத்துக்கு. பணம் திருப்பிக் கொடுப்பீங்களான்னு கேட்டால் பதிலும் வரலை. தவிர, இப்போ பி.எஸ்.என்.எல்-க்குக் க்யூ ஜாஸ்தியா இருக்குன்னு வேறே சொல்றாங்க. எல்லாம் விசாரிக்காமல் இருப்பேனா? களப்பணி ஆற்றத் தேவையான விஷயங்களைச் சேகரிக்கலைன்னா நான் என்ன தலைவி?
ReplyDelete//முதலில் புதுக் கல்யாண மாப்பிள்ளையாகப் போகும் அம்பிக்கு ஒண்ணு: இப்போல்லாம் இங்கே வரதில்லை. //
ReplyDeleteஏங்க இப்போ எதிர்பார்க்கறது கூட நியாயமா? விடுங்க. இன்னும் கொஞ்ச நாள்தானே. ப்ரீயா இருக்கட்டும். என்ன நான் சொல்லறது.
அது சரி, இ.கொ. உங்க ஊர்க்காரர் ஆச்சே? விட்டுக் கொடுப்பீங்களா என்ன? சும்மா ஒரு கமெண்ட் போடக் கூடவா வர முடியாமப் பேசிட்டே இருக்கார்? அதுவும் ISDயிலே. :D
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம்,என்னவோ எங்கே இருந்தாலும் வாழ்க! வளர்க! இல்லையா?
ஹிஹிஹி, அம்பியோட தங்கமணி, ஜாக்கிரதை! அம்பி இந்த பஞ்சாப் குதிரையைப் பார்க்கிற பார்வையே சரி இல்லை. எங்காவது எடுத்துக் குடுத்து இருக்கப் போறார்
ReplyDeleteஅதானே பார்த்தேன் என்னாடா இன்னும் கலகம் வரலையேன்னு. வந்தாச்சு அம்பி ஜாக்கிரதை.