இன்று குடியரசு நாள். நாமெல்லாம் இருப்பது குடியரசில். அதன் பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த நாளில் அதற்காகப் பாடுபட்ட மாவீரர்களை நாம் நினைத்து அவர்களுக்கு அஞ்சலி செய்வது தான் உண்மையான குடியரசில் நாம் இருப்பதற்கு அர்த்தமாகும்.
யாராலும் நினைக்கப் படாத வீரர்கள் நம் நாட்டில் எத்தனையோ பேர் சுதந்திரத்துக்காகப் போராடி இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் இந்த நாளில் நினைவு கூர்வோம்.
விளம்பரம் இல்லாமல் நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட பூலித் தேவன், விவேகானந்தர், வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளி அம்மை, கட்ட பொம்மன், மருது பாண்டியர்கள், சுப்பிரமணிய பாரதியார், வ.வே.சு.ஐயர், சுப்பிரமணிய சிவா, வீர சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், பகத் சிங், விஸ்வநாத தாஸ், திருப்பூர் குமரம், வீர வாஞ்சி, செண்பக ராமன், வ.உ.சிதம்பரனார், தோழர் ஜீவானந்தம், பகத் சிங்கும் அவருடைய தோழர்களும், ராயல் இந்தியக் கடற்படையின் வீரர்கள் இவர்கள் ஆற்றிய தொண்டும், பணியும் மற்றவர்களின் தொண்டிற்குச் சற்றும் குறையாதது. அதிலும் சிலர் உயிரிழந்திருக்கின்றனர். ஆகவே கத்தியின்றியோ, ரத்தம் சிந்தாமலோ நமக்குச் சுதந்திரம் கிடைத்து விடவில்லை. கிடைத்த சுதந்திரத்தைக் குடியரசாக மாற்றுவதற்குப் பெரிதும் பாடுபட்ட சர்தார் வல்லபாய் படேல் இல்லையென்றால் இன்று இந்த ஒருங்கிணைந்த குடியரசு நமக்குக் கிடைத்திருக்காது. அந்தத் தியாகிகள் எல்லாரையும் இன்னும் நாம் விட்டு விட்ட எல்லாருக்கும் நம் வணக்கங்களைச் செலுத்துவோம். நன்றியுடன் அவர்கள் தியாகங்களை நினைப்போம்.
குடியரசுதின வாழ்த்துக்கள்.--SKM
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள் மேடம்
ReplyDeleteஎல்லோரையும் நினைக்க வைத்த அருமையான பதிவுங்க மேடம்
Good post -:)
ReplyDeletereplied back.Thanks.--skm
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇப்படியாவது பதிவர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் விலை நினைப்பூட்டப்பட்டால் நன்றே,
குடியரசுதின வாழ்த்துக்கள்,
ஜெய் ஹிந்த்!
சுதந்திர தினத்தைப் போல் நாம் குடியரசு தினத்தை கொண்டாடுவது கிடையாது.தாங்கள் நினைவு கூர்ந்ததற்கு நன்றி.அதுவும் சர்தார் வல்லபாய் படேலின் பெயரை குறிப்பாக சொன்னதற்கு மிகவும் நன்றி.அம்பி சொல்லாமலே அவர் வருவதற்குள் வந்து விட்டேன்.
ReplyDeleteஅரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில் சட்டங்களை மதித்து ,வழி நடந்து இந்தியாவை சுடர்மிகு செய்வோம்...
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
ReplyDelete@தி.ரா.ச. சார், அம்பியைக் கேட்காமல் வந்தீங்களே? ஒருவேளை அம்பி ஊரில் இல்லையோ? :D
குடியரசு தினத்துக்கு எல்லோரயும் நினைக்கும் படி நல்ல பதிவு....மொக்கைக்கு நடுவுல அப்போ அப்போ இப்படியும் பதிவு போடுறீங்க :-)
ReplyDeletebelated குடியரசு தின வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteBelated குடியரசுதின வாழ்த்துக்கள். :D
ReplyDelete//அம்பி சொல்லாமலே அவர் வருவதற்குள் வந்து விட்டேன்.
//
@TRC sir, ahaa, *narayana velaiya kaatrengale sir! :)
//அம்பியைக் கேட்காமல் வந்தீங்களே? ஒருவேளை அம்பி ஊரில் இல்லையோ? //
@geetha madam, yes, went kallidai-and madurai to see my hospital admitted Grandpa! :(
ச்யாம், நறநறநறநற, நீங்க போடற TBI Newsஐ விட நான் போடற பதிவு எல்லாம் நல்லாவே இருக்கு, பாருங்க, புதுசு புதுசா இதுக்காகவே ப்ளாக் திறந்துட்டு வந்து பின்னூட்டம் கொடுக்கிறாங்க, எல்லாம் நூத்துக் கணக்கில் பின்னூட்டம் வருதில்லை, அதான், இங்கே அப்புறம் எரிமலையே வெடிக்கப் போகுது போங்க! :D சும்மா புகை மட்டும் வராது :D
ReplyDeleteஅம்பி, அதான் சார் வந்ததுமே தெரிஞ்சு போச்சே, நீங்க ஊரில் இல்லைங்கற விஷயம், இல்லாட்டி, "அம்பி, என்னடா செய்யறது? போகட்டுமா? வேணாமா"ன்னு கேட்டுட்டு இருப்பார். நீங்க யோசிச்சு பதில் சொல்றதுக்குள்ளே நான் (இப்போ கண் பட்டுடுச்சுன்னு நினைக்கிறேன்) பத்துப் பதிவு போட்டுடுவேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்ன குரு? என்ன சிஷ்யன்? யார் குரு? யார் சிஷ்யன்? ஒண்ணுமே புரியலை, உலகத்திலே! :D
ReplyDelete@அம்பி, உங்க தாத்தா உடல்நலம் தேறி வரப் பிரார்த்தனை செய்கிறோம்.
inru kudiyarasu thinamnu innaikku thamizmanamla varuthu... naan oru nimisam arande poyitten... ennada naama indiala illatha intha rendu maasathula kudiyarasu thinathaiye thalli vatchitaangalaannu...
ReplyDeleteappuramthaan theriyuthu... ithu annaikke potta pathivunnu...
kudiyarasu thina vaazthukkal...
ஹிஹிஹி, ஜி, நம்ம பதிவோட சிறப்பே எல்லாரையும் அரண்டு போக வைக்கிறது தான். பின்னூட்டங்களிலே பார்க்கிறீங்க இல்லை? அதான் நம்ம தனிச் சிறப்பு FYI
ReplyDelete