எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் என்பது தமிழில்
கவிதை வடிவில் வந்துள்ளது. அதற்குப் பெயர் "லலிதாம்பாள் சோபனம்" என்பது.
இந்த லலிதாம்பாள் சோபனம் ரொம்ப நாள் கிடைக்காமல் இருந்ததாம். பின் சகோதரி
சுப்புலட்சுமி அவர்களால் தேடிக் கண்டெடுக்கப் பட்டு திருத்தங்களும் அவர்களால் செய்யப் பட்டு அவர்களாலேயே வெளியிடப் பட்டிருக்கிறது.சகோதரி சுப்புலட்சுமிக்கு அறிமுகம்
தேவையில்லை என நினைக்கிறேன். அவர் தன் வாழ்நாளில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களையும், இடையூறுகளையும் கடந்து எதிர்த்துப் போராடி தமது
மனோபலத்தினால் தன் வாழ்நாளில் வாழ்ந்து காட்டியவர். எவ்விதக் கல்வி
அறிவும் பெண்களுக்குக் கொடுக்கப் படாமல் இருந்த காலத்தில் தான் கல்வி
கற்றதோடு அல்லாமல் ஒரு பள்ளியில் ஆசிரியராகவும் பணி புரிந்து பெண்களுக்குக் கல்வியும், வேலையும் இருந்தால் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என நிரூபித்தவர். படிப்போடு மட்டும் இல்லாமல் ஆத்மஞானமும், பக்தியும் கூடப் படித்தவர், படிக்காதவர்
எல்லாருக்கும் தேவை எனப் பல நூல்களின் மூலம் சொல்லி இருக்கிறார். அவர் வாழ்வும், சொல்லும் மனித சமுதாயத்துக்கு, முக்கியமாகப் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக
அமைந்துள்ளது என்று சொல்லலாம். அவரால் செப்பனிடப் பட்ட இந்த "லலிதாம்பாள் சோபனம்" படித்தால் எல்லாருக்கும் எல்லா நன்மைகளும் கிட்டும் என்று ஆன்றோர் வாக்கு.
************************************************
லலிதாம்பாள் சோபனம்: ஒரு அறிமுகம்
இந்த லலிதாம்பாள் சோபனம் முதலில் வாய்ப்பாடமாகவே வழங்கப் பட்டிருக்கிறது. பெண்கள் வேலை செய்யும்போது பாட்டுக்களாகப் பாடி வந்திருக்கிறார்கள். இதில் தேவியின்
அவதாரங்களைப் பற்றிக் கூறியுள்ளது. அதாவது பரமேஸ்வரியான தேவியும்,
மஹாவிஷ்ணுவும் ஒருவரே என்ற கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது. ஸ்ரீ என்ற
சொல்லானது மங்களத்தைக் கொடுப்பதோடு அல்லாமல் ஸ்த்ரீ என்று பெண்களைக்
குறிக்கும் சொல்லாகவும் உடையதாய் இருக்கிறது. தேவியின் அம்சம் தான் விஷ்ணு, விஷ்ணுவின் அம்சம்தான் தேவி, அதனால் தான் இருவரும் சகோதரர்கள்
என்று சொல்லப் பட்டாலும் உண்மையில் இருவரும் ஒருவரே. அம்பிகையே தன்
விஷ்ணு அவதாரத்தில் மோகினி ரூபம் எடுத்து ஈஸ்வரனுடன் சேர்ந்து சாஸ்தா
பிறந்தார் என்று சொல்லப் படுவது உண்டு. இந்த இடத்தில் நாம் மனித வாழ்வோடு
சேர்த்துப் பார்த்தாலும், இப்படி எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பிறவியில் ஆணாக இருப்பவர்
அடுத்த பிறவியிலும் ஆணாகத் தான் இருப்பார் என்பது நிச்சயம் இல்லையே?
அதே போல் தான் ஒரு பிறவியில் விஷ்ணுவாக இருந்தவர் மோகினி என்ற
இன்னொரு பிறவியில் பரமேஸ்வரனைக் கல்யாணம் செய்து கொண்டு சாஸ்தா
பிறக்கிறார்.. ஆகவே இதில் எந்தவிதமான குழப்பத்திற்கோ, ஆணும், ஆணும் சேர்ந்து
பிள்ளை பெற்றார்கள் என்று சொல்வதற்கோ இடமே இல்லை. எதையும் சரியாகப் புரிந்து கொண்டால் சந்தெகத்துக்கே இடம் இல்லை. மேலும் ஈஸ்வரனுக்கே அர்த்தநாரீஸ்வரர் என்றும் ஒரு பெயர் உண்டு. சங்கரநாராயணர் என்றும் ஒரு பெயர் உண்டு. மேலும்
அம்பிகையைத் துதிக்கும் நாமங்களில் "வைஷ்ணவி," "விஷ்ணு ரூபிணி",
"நாராயணி" என்று எல்லாம் துதிப்பது உண்டு. இனி தேவியின் அவதாரங்கள்
பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
இதை இந்தப் பக்கத்தில் போடலாமா வேணாமான்னு ரொம்பவே யோசித்தேன். அப்புறம் போடலாம்னு முடிவெடுத்தேன். ஆன்மீகப் பக்கத்தில் இன்னும் "ஓம் நமச்சிவாயா" தொடர் முடியவில்லை. அதை எல்லாரும் pdf document வடிவில் கேட்டுக் கொண்டிருப்பதால் வசதிக்காக அதில் வேறு ஆன்மீகம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் எழுதவில்லை. அதனாலும், இந்தப்பக்கத்துக்கு வருபவர்கள் அதிகம் என்பதாலும் இதில் போட்டிருக்கிறேன். என்ன, வழக்கம்போல் ச்யாம், "யார் இந்த லலிதா? எனக்குத் தெரியலையே?" என்று கேட்பார். இன்னிக்கு அவர் வீட்டுக்கும் போக முடியலை. நாளைக்குப் பார்க்கலாம், வர்ட்டா? (ஹிஹிஹி, கார்த்திக்கைக் கடுப்பேத்தறதுக்கு ஒரு வழி கிடைச்சிருக்கு.) வர்ட்டா?
ReplyDeleteஹிஹிஹி,பின்னூட்டம் கூடப் பதிவு மாதிரிப் பெரிசா வந்திருக்கே!!!!
ReplyDelete@மொக்கை பதிவு குட்டி போட்டு மொக்கை பின்னுட்டமாகி விட்டது என்று அம்பி சொன்னாலும் சொல்லுவான்.நான் அப்படிச் சொல்லுவேனா?
ReplyDeleteஇந்த சோபனத்தை என் தாயார் குளித்துவிட்டு சமயல் செய்துகொண்டே சொல்லுவார்கள்.நீங்கள் சொல்லும் சுப்பலக்ஷ்மி சிஸ்டெர் சுப்பலக்ஷ்மிதானே
பெண்களை படிக்க அனுமதிக்காத காலத்திலேயே படித்து பல பெண்களை அதுவும் இளம்வயதிலேயே கைபெண்களான பெண்களுக்கு கல்விக் கண்ணைத் திறந்து வைத்து அவ்ர்களது வாழ்க்கையில் ஒரு மறுமல்ர்ச்சியை ஏற்படுத்தியவர்.அவ்ர் பெயரை நினைவு கூர்ந்ததற்கு மிகவும் நன்றி.
சியாம் மட்டுமா. நானும் தான். எனக்கும் தெரியாது..
ReplyDeleteபடிக்கிறேன்..
உங்களது சில பதிவுகளில் பதிவுஎண் வருகிறது..ஆனால் இதற்கும், முந்தையதற்கும் வரவில்லை.. என்ன ஆச்சு?
சின்னதாய் ஒரு வாதம்:
நான் முன் பிறவியில் என்னவாய் இருந்தேன் என்பது எனக்கு தெரியாத போது எப்படி அடுத்த பிறவியினை நம்புவது?
This comment has been removed by a blog administrator.
ReplyDeletethalai(vali)vi nu sollradhu seriya thaan irukku. nethu thaan kaanamal ponavargal patriya arvippu paathen, adhukkulla 3 padhivaa?? idhula neramee illiya? ellam neram thaan :-)
ReplyDeletepinnutam kuda padhivu maadhiri perisa varala, vazhakkam pola mokkaiya irukku nu nan solala, unga ambi thanga kambi solla sonnaru ;-)
ReplyDelete//எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் என்பது தமிழில் கவிதை வடிவில் வந்துள்ளது. அதற்குப் பெயர் "லலிதாம்பாள் சோபனம்" என்பது.//
ReplyDeleteI have been looking for this...so pls contiune...I think your Bhakthi margam is better than MOKKAI margam (to agree with Ambi)....
neenga bhakthi pathi eluthum podhu neeraya modern trends pathi compare panni eluthum style...style thaan. for eg.... like one should not question how two men can get a baby....
I am more eager to read this...hope it will have many episodes!
நல்ல ஆரம்பம் மாமியோவ்....
ReplyDeleteஆமாம் முதன்முதலில் லலிதா சஹஸ்ர நாமம் எங்கு யாரால் பாடப்பட்டதுன்னும் முன்னுரையில் சொல்லியிருக்கலாமே?.....
மொக்கை பதிவு குட்டி போட்டு மொக்கை பின்னுட்டமாகி விட்டது என்று அம்பி சொன்னாலும் சொல்லுவான்.நான் அப்படிச் சொல்லுவேனா?
ReplyDeletenaan ithai vazhi mozhigiren Guruve! :)
apdiye colorfulla pic ellam podarathu! :)
nice post, pls do continue.
திருமெயச்சூர்ன்னு ஒரு ஊர் இருக்கு மயிலாடுதுறை-பூந்தோட்டம் பக்கத்தில். அங்கு கோவிலில் அம்பிகை பெயரே லலிதாம்பிகை தான் (எனக்கு தெரிந்து வேரெங்கும் லலிதா என்ற பெயரில் கோவில் இல்லை)...அங்குதான் சஹஸ்ரநாமம் முதலில் இயற்றப்பட்டதாக கூறுவார்கள்.....
ReplyDeleteஇங்குள்ள அம்பாள் சமிபத்தில் (3-5 வருடங்களூக்குள்) பெங்களூரில் உள்ள யாரோ ஒரு (தவராது தினமும் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யும், பதிவிடும் பக்தை அல்ல)பக்தையின் கனவில் வந்து கால் கோலுசு கேட்டதாகவும், அந்த காட்சியில் கண்ட லலிதா இந்த கோவிலில் உள்ள ரூபம் என்றறீந்த பக்தை தங்க கோலுசு அணிவிக்க எடுத்துச் சென்றாலும் பட்டர்கள் அதற்கேற்ற அமைப்பு (அமர்ந்த கோலம், எனவே மடித்த காலுக்கும் பீடத்திற்க்கும் இடையில் கோலுசு சென்று வர) சிலா ரூபத்தில் இல்லை என்று மறுத்ததாகவும், பின்னர், பலத்த சந்தேகத்துடன் சிறிது முயற்சிக்க, சிலையில் இடைவேளி இருப்பது அறிந்து கொலுசினை அணிவித்ததாக அறிகிறேன்..
(பின்னூட்டத்திலேயே பதிவிடக்கூடிய அளவிற்க்கான செய்தியைசொல்லிவிட்டேன் பாத்தீங்கல்ல...இதுக்கு மேலயாவது என்ன தாக்காம பதிவெழுதுங்க)
மேடம், இது வருகை பதிவு தான்.. படிச்சிட்டு மெல்ல வந்து பின்னூட்டம் போடுறேன் மேடம்..
ReplyDelete//இனி தேவியின் அவதாரங்கள்
ReplyDeleteபற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.//
மற்ற பாகங்களுக்கு வெயிட்டிங்
நாட்டாமை மட்டுமல்ல, நமக்கும் இந்த லலிதா யாருங்கிற கேள்வி தான் மேடம்.. ஆனா அதை எங்களுக்கு சொல்லத்தானே நீங்க இப்படி பதிவு போடுறீங்க.. தொடரட்டும் தொடரட்டும் மேடம்
//இனி தேவியின் அவதாரங்கள்
ReplyDeleteபற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.//
மற்ற பாகங்களுக்கு வெயிட்டிங்
நாட்டாமை மட்டுமல்ல, நமக்கும் இந்த லலிதா யாருங்கிற கேள்வி தான் மேடம்.. ஆனா அதை எங்களுக்கு சொல்லத்தானே நீங்க இப்படி பதிவு போடுறீங்க.. தொடரட்டும் தொடரட்டும் மேடம்
ennada idhu potta orediya padhivu podringa, illana onnume podradu illai??
ReplyDelete//யார் இந்த லலிதா? எனக்குத் தெரியலையே//
ReplyDeleteஅப்படி எல்லாம் சொல்லமாட்டேன்..ஏன்னா எனக்கு இது டோட்டலி அவுட் ஆப் சிலபஸ் :-)
//மொக்கை பதிவு குட்டி போட்டு மொக்கை பின்னுட்டமாகி விட்டது என்று அம்பி சொன்னாலும் சொல்லுவான்.நான் அப்படிச் சொல்லுவேனா//
ReplyDeleteTRC sir....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)
மாமி,இது பற்றி இப்போதுதான் நான் அறிந்து கொண்டேன்.நேரமில்லை எனக் கூறியபடி இத்தனை பதிவுகளா?
ReplyDeleteகன்னடத்தில் லக்ஷிமி சோபனம் உள்ளது.அது போலவேயா?லலிதா சகஸ்ரநாமமே நான் இப்போதான் படிக்க ஆரம்பித்துள்ளேன்.உங்கள் பதிவுகள் படிக்க ஆரம்பித்தப் பின்னர்தான் நிறையத் தெரிந்துக் கொண்டுள்ளேன்.நன்றி.--SKM
தி.ரா.ச. சார், அம்பி சொல்லித் தான் நீங்க இப்படி எழுதி இருப்பீங்கன்னு தெரியும் எனக்கு, இப்போ புதுசா எனக்கு "மொக்கைப் பின்னூட்டாளர்" பட்டமா? ஹிஹிஹி, இதுவும் நல்லாவே இருக்கு. :D
ReplyDeleteஆமாம், சிஸ்டர் சுப்புலட்சுமி தான்.
@மணிப்ரகாஷ்,
விவரமாச் சொல்றேன், படியுங்க. அப்புறம் இந்தப் பிறவி பற்றிய ரகசியம் நமக்கு முன்னாலேயே தெரிந்ததுன்னா நாம் எங்கேயோ போயிருப்போமே? சிருஷ்டியின் ரகசியத்தையே கேட்கறீங்க? கூடிய வரை நீங்க புரிஞ்சுக்கிற மாதிரி பதில் கொடுக்க முயற்சி செய்யறேன். கொஞ்சம் நாள் பிடிக்கும். ஏற்கெனவே ரொம்ப பிசி, ஹிஹிஹி, இதிலே யு.எஸ்ஸிலே இருந்து GEORGE BUSH, PAAN-KI-MUN, VIJAY NAMBIYAR, HILARY CLINTON எல்லார் கிட்டே இருந்தும் அழைப்பு மேலே அழைப்பு வந்துட்டே இருக்கு. ALL INVITATIONS ARE UNDER SCRUTINY. நான் தலைவி இல்லையா? அதான். :D
போர்க்கொடி, ரங்கமணியின் சேவையில் என்னோட நினைப்புக் கூட வருதா? பரவாயில்லையே? நான் தான் தொந்திரவு செய்ய வேண்டாம்னு காணாமல் போனவங்க லிஸ்ட்லே இருந்து பேரை எடுத்தேன், சேர்த்திருக்கலாம் போல் இருக்கு. வருகைக்கு நன்றி.
ReplyDelete@hotcat, நீங்களும் பங்களூரிலே தான் இருக்கீங்களோ? இந்த "மொக்கை"ங்கிற வார்த்தையை அம்பி தான் சொல்லி இருப்பார்னு நினைக்கிறேன். நான் தான் முன்னேயே சொல்லி இருக்கேனே, என்னோட பதிவுகளிலே நவரசமும் சேர்த்துத் தக்காளி, மிளகு ரசமும் கிடைக்கும்னு, கொஞ்சம் பின்னே போய்ப் பாருங்க. அதனாலே மொக்கையும் வரும். மொக்காமலும் வரும்.
மதுரையம்பதி,
ReplyDeleteதிருமீயச்சூர் பத்தி ஆன்மீகப் பயணம் பக்கத்திலே பாருங்க. விவரமா எழுதி இருக்கேன். கோவில் பத்தியும், நீங்க சொல்லி இருக்கிற தகவல்கள் பற்றியும். திருஈங்கோய் மலையில் கூட லலிதா தான். இன்னும் அங்கே போகலை. அகஸ்தியர் ஈ வடிவில் அம்பிகையைப் பூசித்ததாகவும் சொல்வார்கள்.
@அம்பி, என்ன தங்கமணி கிட்டே இருந்து உத்தரவு வாங்கியாச்சா?
@கார்த்திக், வரும், பாருங்க பதில் எல்லாம். முடிந்த வரை எல்லாத்துக்கும் பதில் கொடுக்க முயற்சி செய்யறேன். "நீங்கள் கேட்டவை" நிகழ்ச்சிக்கு இன்னும் ஓரிரு நாளில் பதில். :D
ஹிஹிஹி, ச்யாம், என்ன மறுபடி உங்க வீட்டுக் கதவைப் பூட்டிட்டிங்க, பின்னூட்டத்தைப் பார்த்து நான் கண்ணு போடுவேன்னு பயமா? :D திறக்கவே மாட்டேங்குதே?
ReplyDelete@எஸ்.கே.எம். கன்னடத்தில் உள்ள "லட்சுமி சோபனம்" பத்தி எனக்குத் தெரியாது. முடிஞ்சா எழுதுங்களேன். இது கிட்டத் தட்ட லலிதா சஹஸ்ரநாமத்தின் தமிழாக்கம்னு சொல்லலாம்.
kannada Lakshmi sobanam patri ezhudhara alavukku enakku ghanam yellam illa maami.Aanmeegam Dept ullae ippodhan entry saidhu irukken.
ReplyDelete