எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 13, 2007

வால்மீகி ராமாயணமும், ஆர்ஷியா சத்தாரும்!





இந்த ராமர் படம் மாதிரியே ஒரு ராமர் படம் எங்க வீட்டிலேயும் உண்டு. இது எனக்குக் கண்ணபிரான், ரவிசங்கர் அனுப்பியது. எங்க வீட்டுக்கு அவர் வந்தப்போ எங்க ராமர் படத்தைப் ஃபோட்டோ எடுக்கச் சொன்னோன். அவர் எங்க பூஜை அலமாரியை ஒரு கோயில் மூலஸ்தானம் மாதிரிக் கருதி எடுக்கவில்லை. அப்புறம் நான் கேட்டப்போத் தான் தெரிந்தது அவர் எடுக்கவில்லை என. அதுக்காக இப்போ இந்தப் படத்தை அனுப்பி வச்சார். இந்த ராமர் ஒரிஜினல் தஞ்சைச் சித்திரக் கலையைச் சேர்ந்தது. என் புகுந்த வீட்டில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எப்போது இருந்து என்று யாருக்கும் தெரியவில்லை. குறைந்தது 300 ஆண்டுகளாவது இருக்கலாம். மேலேயும் இருக்கலாம். ராமர் பட்டாபிஷேஹக் கோலத்தில் உள்ள இந்தப் படத்தில் அவர் தன்னுடைய எல்லாப் பரிவாரங்களுடனும் இருக்கிறார்.

வல்லி அவர்கள் தன்னுடைய வலைப்பக்கத்தில் ராமர் கதையை முடிச்சுப் பட்டாபிஷேகம் நடத்தினப்போ இந்தப் படம் இருந்தால் போட்டிருக்கலாமேன்னு நினைச்சேன். அதற்குப் பின் தான் இந்தப் படம் எனக்கு வந்தது. ராமாயணமோ, மஹா பாரதமோ படிக்கப் படிக்க அலுப்புத் தட்டாத ஒரு புத்தகம். இப்போவும் நான் இங்கே "ஆர்ஷியா சத்தார்" என்பவர் எழுதிய "வால்மீகி ராமாயண"த்தின் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். அவங்களோட உழைப்பு ரொம்பவே பிரமிக்க வைக்கிறது. திரு ராமானுஜம், ஆர்.கே. நாராயாணன், ராஜாஜி, இன்னும் பலரின் புத்தகங்களையும்ம் படித்துப் பார்த்துப் பல ஆண்டுகள் உழைப்பினால் எழுந்த இந்த புத்தகத்தை அவர் வெளியிட்டது 1996-ல் பெங்குவின் வெளியீடாக வெளியிட்டிருக்கிறார். தெற்காசிய மொழியிலும், நாகரீகங்களிலும் ஆராய்ச்சி செய்து "டாக்டர்" பட்டம் வாங்கி உள்ள இவர் இந்தப் புத்த்டகத்தைத் தன் தாய், தந்தைக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். தாய் நஜுரா சத்தாரும், தந்தை ஹமீத சத்தாரும் தனக்கு உணவு, உடை, இருப்பிடம் கொடுத்துக் காப்பாற்றி இருக்கவில்லை என்றால் இந்தப் புத்தகத்தைப் பற்றித் தான் கவலை இல்லாமல் ஆராய்ச்சி செய்திருக்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார். இது வரை நான் படித்ததில் ராமர் ஜனஸ்தானத்துக்குப் போகும் வழியில் ஜடாயுவுடன் ஏற்படும் சந்திப்பைப் பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. மற்றபடி வால்மீகி ராமாயணத்தை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கிறார். மிகவும் எளிமையான ஆங்கிலத்திலும் உள்ளது இந்தப் புத்தகம். நேரமும், விருப்பமும் உள்ளவர்கள் நூலகத்தில் இருந்தாவது வாங்கிப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

3 comments:

  1. Maami,matra padhivugalum padithen indru.

    ramar padam miga miga azhagu.Thanjavoor painting azhagae azhagu.Sure I will try to read that partcular one.Thanks.

    ReplyDelete
  2. வாங்க எஸ்.கே.எம். ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். நாளைக்கு உங்க அருமை ஸ்வீகாரத் தம்பிக்குக் கல்யாணம். நானும் தொலைபேச கடந்த 2 மணி நேரமா முயற்சி செய்தும் உங்க தம்பியை அது போய் ரீச் ஆகலைன்னே மெசேஜ் வருது. எங்கே போய் தங்கமணி கூட அரட்டை அடிச்சிட்டு இருக்காரோ தெரியலை. நறநறந்ற., கட்டாயமா அந்தப் புத்தகத்தைப் படிங்க. ரொம்பவே அருமையான முயற்சி. இன்னும் இருக்கு எனக்கு முடிக்க. ஒரு மணி நேரம் கிடைச்சா அதிகம் படிக்க. 10 அல்லது 15 பக்கம்தான் முடியுது. ஹிஹிஹி, பதிவு மாதிரியே பின்னூட்டமும் பெரிசா இருக்கு! :))))))))

    ReplyDelete
  3. இன்னிக்கு யாரும் வர மாட்டாங்கன்னு தெரியும். ஆனாலும் இப்படியா இருக்கும்? :P

    ReplyDelete