எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 23, 2007

சிப்பாய்க் கலகம் -இரண்டாம் பகுதி

கொஞ்ச நாளைக்கு போஸை விட்டு வைப்போம். இப்போ நாம் 1946-க்குப் போறோம். இடம் பம்பாய்த் துறைமுகம். மாதம் பெப்ரவரி 18-ம் தேதி. திடீரென துறைமுகத்தில் இருந்த ஆங்கில அரசால் நிர்வாகம் செய்யப் பட்டு வந்த இந்திய அரசின் ராணுவக் கப்பல்களில் வேலை செய்து வந்த சிப்பாய்களும், மாலுமிகளும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். வேலை நிறுத்தம் மெதுவாய்ப் பரவுகிறது. வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது. பம்பாயின் மக்கள் மட்டும் இல்லாமல் அங்கே இருந்த தரைப்படை, விமானப் படையும் ஆதரிக்கும் நிலை. பம்பாயில் இருந்து முக்கியக் கேந்திரங்களான சென்னை ராஜதானிக்கும், கல்கத்தாவுக்கும், கராச்சித் துறைமுகத்துக்கும் விஷயம் போகிறது. ஆதரவு பெருகுகிறது இந்தியாவைச் சேர்ந்த மாலுமிகளின் வேலை நிறுத்தத்துக்கு. மூன்று கொடிகள் சேர்ந்து பறக்கின்றன. பிரிட்டிஷ் அரசு செய்வதறியாது திகைக்கிறது. லண்டனில் இருந்த ஆங்கிலேய அரசுக்கு விஷயம் தெரிய வருகிறது. படைகளை அடக்கக் கட்டளை இடுகிறார்கள்.

இந்தியச் சிப்பாய்களோ இந்திய ராணுவ அதிகாரிகளைத் தவிர மற்றவர்களை அதாவது ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளை வணங்க மறுக்கிறார்கள். ஆங்கிலேய அதிகாரிகள் இடது கையால் "ஸல்யூட்" வைக்கும் இந்தியச் சிப்பாய்களையும், அதிகாரிகளையும் பார்த்துத் திகைக்கிறார்கள். உள்ளூரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித்தலைவியான அருணா அசஃப் அலியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கிறது. உள்ளூர் போலீஸும் ஆதரவு தருகிறது. மொத்த நிர்வாகமும் ஸ்தம்பிக்கும் நிலை! அடுத்து என்ன? காத்திருங்கள் சில நாள். இன்னொரு சிப்பாய்க் கலகம் என்றழைக்கப் பட்ட இதன் நிலைமையைப் பார்ப்போம்.

10 comments:

 1. //கொஞ்ச நாளைக்கு போஸை விட்டு வைப்போம். //

  :(


  /அடுத்து என்ன? காத்திருங்கள் சில நாள். இன்னொரு சிப்பாய்க் கலகம் என்றழைக்கப் பட்ட இதன் நிலைமையைப் பார்ப்போம்.
  //

  தலைவி என்னது சில நாட்களா?

  அவ்வளவு ஆணி பிடுங்குரீங்களா.. நம்ம்ப முடியவில்லை....நம்ப முடியவில்லை...

  கொடி,நீங்க என்னனு கேட்க மாட்டீங்களா...

  ReplyDelete
 2. Avalutan Waiting .............

  ReplyDelete
 3. என்ன இது மெகா சீரியல் மாதிரி சஸ்பென்ஸ் வைக்கறீங்க ?:)

  ReplyDelete
 4. இங்க என்னடானா கழகத்தால் கலகம் நடந்துக்கிட்டு இருக்கு, அதுக்கு டைம்ங்கா இருக்குற மாதிரி நீங்களும் கலகத்தை பற்றி பதிவு போடுறீங்க...

  அசத்துங்க....

  ReplyDelete
 5. //என்ன இது மெகா சீரியல் மாதிரி சஸ்பென்ஸ் வைக்கறீங்க ?:) //

  மெகா சீரியலா சஸ்பென்ஸ் வேற எல்லாம் இருக்குமா என்ன? ஒரு வருசம் கழித்து பார்த்தக் கூட கதை புரியும், அப்புறம் அதுல என்ன சஸ்பென்ஸ்....

  ReplyDelete
 6. //கொடி,நீங்க என்னனு கேட்க மாட்டீங்களா... //

  இதுக்கு கூடவா கொடி வரனும்.. இன்னிக்கு வேற அவங்களுக்கு பிறந்தநாள் பிஸியா இருப்பாங்க...

  உங்களுக்காக நானே கேட்குறேன்

  என்ன?

  ReplyDelete
 7. நீங்கள் எழுதும் தோரணையே நல்லா இருக்குங்க மேடம்.. சிப்பாய் கலகங்கள் தான் மெல்ல சுதந்திர போராட்டத் தீயிற்கு, பாரதி சொன்ன அக்னி குஞ்சாய் இருந்திருக்கின்றன, என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது..

  அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங் மேடம்

  ReplyDelete
 8. பெரிய பெரிய ஆணிகள். ரொம்பக் கஷ்டப் பட்டு எடுத்துட்டு இருக்கேன். தினமும் குத்துது. அதனால் 2 நாளைக்கு ஒரு முறை தான் பதிவே போட முடியும். எல்லாருக்கும் இதான் பதில். தனித் தனியாச் சொல்ல முடியலை. மன்னிக்கவும்.

  ReplyDelete
 9. என்னோட பக்கத்திலே போட்டிருக்கிற தமிழ் நாட்காட்டி மாதிரி யாருக்கும் போட விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.

  ReplyDelete