எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 16, 2007

மே மாதம் என்ன விசேஷம்?

போன முறை மே மாதம் 17-ம் தேதி இந்தியாவில் இருந்தோம். இம்முறை மெம்பிஸில்.சிகாகோவில் இருந்து மெம்பிஸ் வரதுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் வந்தோம். யு.எஸ்ஸுக்கு 2-ம் முறை என்றாலும் சிகாகோவுக்கு முதல் முறை. அங்கே விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த நேரம் வெளியே ஒரு கட்டிடத்தின் வாயிலில் எல்லா நாட்டுக் கொடிகளும் பற்ந்து கொண்டிருந்தன. இந்திய தேசீயக் கொடியைப் பார்த்ததும் மனம் பரபரத்தது. இன்னும் கொஞ்ச நாள் இங்கே தான் என்னும் உண்மை அந்தக் குளிர் காற்றைப்போல் முகத்தில் மட்டுமல்லாமல் நெஞ்சிலும் அறைந்தது. போன வருஷம் இந்தியாவில் இருந்தோம். மே 17-ம் தேதி. வழக்கம் போல் பையனும், பெண்ணும் தொலைபேசி வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

என்னுடைய குணங்களும் சரி, என் கணவருடைய குணங்களும் சரி நேர்மாறானது. திருமணம் ஆகிவந்த புதிதில் என் புகுந்த வீட்டில் மின் விளக்கு வசதி கூடக் கிடையாது. பல வருடங்களுக்குப் பின் தான் வந்தது. மதுரையில் இருந்து அங்கே முதல் முதல் போகும்போது ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆகவே மாட்டு வண்டி ஆற்றில் இறங்கியது எனக்கு ஒரு அதிசயமாக இருந்தது. எங்கள் மதுரைப் பக்கம் கிராமங்களில் எப்போவில் இருந்து என்று தெரியாது, பல வருஷங்களாக மின்சார வசதியும் உண்டு, ஆற்றில் பாலங்களும் உண்டு, குழாய் வசதி எல்லாம் இருந்தது. என் சித்தி இருந்த கிராமம் ஆன சின்னமனூர் செல்லும்போது இரண்டு பக்கமும் மரங்கள் சூழ்ந்த அடர்ந்த சாலையில் செல்லும்போது மிகுந்த உற்சாகமாய் இருக்கும். கிராமமும் கிராமம் போல் எல்லாம் இல்லை. சினிமா தியேட்டர் எல்லாம் உண்டு. இங்கே வந்து பார்த்தால் வீடுகளே மிகக் குறைச்சல். அதுவும் ரொம்பவே பழைய வீடு. ஆச்சரியம் எல்லாமே. பேச்சு, பழக்கம் என்று ஒவ்வொன்றும். முன்பின் தெரியாத அந்த வீட்டில் என்னை மாமியார், மாமனார், நாத்தனார், மைத்துனர்கள் ஆகியோருடன் இருக்கவிட்டு விட்டு என் கணவர் புனே சென்று விட்டார். அதுக்கு அப்புறம் அவருக்குத் திடீரென சென்னை மாற்றல் ஆனதும் நாங்கள் தனிக் குடித்தனம் வந்ததும் தனிக் கதை!

இத்தனை ஊர்கள் போனாலும் நாங்கள் மாற்றல் வரும்போதெல்லாம் கூடச் சேர்ந்தே தான் போயிருக்கிறோம். அவர் முன்னால் போய் வீடு பார்ப்பது, பின் நாங்கள் போவது என்றெல்லாம் இல்லை. 4 பேரும் சேர்ந்தே போவோம். இப்போது பையன், பெண் யு.எஸ். வந்ததும் ஊட்டி மாற்றல் ஆனபோது மட்டும் அவர் தனியாகப் போகும்படி நேர்ந்தது. அப்பவும் சிலநாட்கள் நான் அங்கேயும், சில நாட்கள் அவர் சென்னையிலுமாக இருந்தோம். என்றாலும் 2 பேரும் எப்போவும் கிழக்கும், மேற்கும் தான். அவர் சொல்வதை நான் ஏற்றுக் கொண்டதில்லை. நான் சொல்வதை அவர் ஏற்றதில்லை. அதனால் பெரிய விஷயங்களில் மட்டும் நான் முடிவு சொல்வேன். அதான் தெரிஞ்சிருக்குமே! இந்த ஐ.நா.விஷயம், ஹிலாரி கிளின்டன் விஷயம், புஷ் நீடிக்கலாமா, கலாம் மறுமுறை வரலாமா? சிதம்பரம் பட்ஜெட் நல்லா இருக்குமா, வேறே யார் போட்டால் நல்லா இருக்கும், இப்போ லேட்டஸ்டா தயாநிதி மாறன் விஷயம் இதில் எல்லாம் என்னோட முடிவு தான். மறு பேச்சே கிடையாது. மற்றச் சின்னச் சின்ன விஷயங்கள், வீட்டு நிர்வாகம், எப்போ யு.எஸ்ஸில் இருந்து கிளம்பலாம்? அவங்க அம்மா, அக்கா, தம்பி, தங்கைகள் விஷயம், பொண்ணு, பையன் பத்தி எல்லாம் அவர்தான் முடிவு எடுப்பார். நான் சும்மா தலை ஆட்டறதோடு சரி. :D

இப்போது நினைத்துப் பார்த்தால் இத்தனை வருடங்களாக எத்தனை ஊர்கள்! எத்தனை மனிதர்கள்! எத்தனை நண்பர்கள்! எத்தனை பழக்கங்கள்! எத்தனை சாப்பாட்டு வகைகள்! அதிலும் கடந்த ஒரு வருஷமாய்க் கணினி மூலம் மட்டும் எத்தனை நண்பர்கள்? நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. எங்கோ பிறந்தோம், வளர்ந்தோம், கணவன், மனைவி ஆனோம், அதன் மூலம் நட்பு வட்டம் பெரிசானது என்றால் இப்போ கணினி மூலம் உலகம் விரிவடைந்து விட்டது. இதற்கு முன்னால் எங்கள் இருவரைத் தவிர பையனும் பெண்ணும் மட்டுமே நினைவு வைத்திருக்கும் ஒரு நாள் இன்று. இப்போ என்னங்கறீங்களா? ஒண்ணும் இல்லை மே மாதம் 17-ம் தேதி திருமணநாள். அதான். வேறே ஒண்ணும் இல்லை.

48 comments:

  1. ரொம்பவே நல்ல பதிவு:D ஹிஹிஹி, லதா, வேதா,அம்பி(சீச்சீ, இவர் எங்கே இப்போ வருவார், மறந்து போச்சு) கார்த்திக், ச்யாம், மணிப்ரகாஷ் எல்லாருக்கும். இது ரொம்ப நல்ல பதிவுன்னு ப்ளாக்கரே ஒத்துக்கிச்சு. :)))))))))))))))))))))))))

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் கீதாம்மா. எங்க அப்பா அம்மா திருமண நாள் மே 16. அவங்களுக்கு கல்யாணம் ஆன அதே நாள்தான் தங்கமணி அம்மா பிறந்த நாள். அவங்க பேரும் கீதாதான்!! :)

    ReplyDelete
  3. Congrats. ethanaiyavathunnu sollaliye? vayasu therinjutumnu bayama? :-)

    ReplyDelete
  4. நன்றி இ.கொ. எப்படியோ வீட்டுக்கு ஒரு கீதா இருக்காங்கன்னு நினைக்கிறேன். உங்க அப்பா, அம்மாவிற்கு எங்களோட வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கிறோம்.

    ஹிஹிஹி, சத்யா, என்னோட பழைய பதிவுகளைப் படிச்சுப் பார்த்தா என்னோட வயசு என்னன்னு தெரிஞ்சிருக்குமே! :D

    குறைகுடம்: வாங்க நிறை குடமாத் தான் வாழ்த்தி இருக்கீங்க, நன்றி.

    ReplyDelete
  5. Thirumana Naal Vazhthukkal

    ReplyDelete
  6. Congratulations!!
    wish you and samba mama many more happy returns of the day.

    ReplyDelete
  7. தலைவியையும் சாம்பு மாமாவையும் வாழ்த்த வயதில்லை. வணங்கி ஆசிகள் வேண்டுகிறோம்.

    ReplyDelete
  8. வாழ்த்துவதா?ஆசீர்வதியுங்கள் என்று சொல்வதா? என்ற குழப்பத்தில்...
    இன்று போல் என்றும் சந்தோஷமாக இருங்கள்.

    ReplyDelete
  9. இங்கே வந்து கமென்ட் கொடுத்தால் தான் ப்ளாக்கர் திறக்குது. இது என்ன டெக்னிக்குன்னே புரியலையே! :P

    ReplyDelete
  10. @பாலராஜன் கீதா, மானத்தை வாங்கறீங்களே! :D

    @குமார், நன்றிகள் பல.

    @ஹாட்காட், இது என்னங்க பேரு, பேசாமல் சங்கர்னே கூப்பிடறேனே! வாழ்த்துக்களுக்கு நன்றி.

    @வடுவூர் குமார், ஹிஹிஹி, குழப்பங்களுக்கு நன்றி. வாழ்த்துக்களுக்கும் தான்.

    ReplyDelete
  11. இது என்ன ஒவ்வொரு முறையும் ப்ளாக் திறக்க இவ்வளவு கமென்ட் நானே கொடுக்க வேண்டி இருக்கு? எல்லாம் ஹெட் லெட்டர்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் கீதாம்மா&சாம்பசிவம் சார்!!! நான் இதை தான் எதிர்பார்த்தேன். கோபிகிட்டே கூட சொன்னேன்! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  13. அபிஅம்மா,அபிபாப்பா சார்பாகவும் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்கிறேன்!!

    ReplyDelete
  14. ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய...... ;)))))

    வாழ்த்துக்கள் கீதாம்மா ;)

    ரொம்ப சந்தோஷமாக இருக்கு.....உங்கள் ஆசிகள் தான் எங்களுக்கு வேண்டும் ;))

    ReplyDelete
  15. இனிய திருமண தின வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  16. ஹிஹிஹி, வாங்க வேதா, வாழ்த்துக்களுக்கு நன்றி.

    அபி அப்பா, அபி அம்மா, அபி பாப்பா, அபி பாப்பா தம்பி எல்லாருக்கும் ஆசிகள்! :D

    கோபி, நன்றிகளும் ஆசிகளும். ஆனால் இது மட்டும் இல்லை இன்னும் இருக்கே!

    வாங்க மதுரையம்பதி, வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  17. வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்...அப்புறம் இன்னிக்கு என்ன ஸ்பெஷல்..?

    ReplyDelete
  18. Anonymous17 May, 2007

    தலைவிக்கும்,சாம்பசிவம் சாருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. Anonymous17 May, 2007

    //ரொம்பவே நல்ல பதிவு:D ஹிஹிஹி, லதா, வேதா,அம்பி(சீச்சீ, இவர் எங்கே இப்போ வருவார், மறந்து போச்சு) கார்த்திக், ச்யாம், மணிப்ரகாஷ் எல்லாருக்கும். இது ரொம்ப நல்ல பதிவுன்னு ப்ளாக்கரே ஒத்துக்கிச்சு//


    ஆமாம்,நல்ல பதிவுதான். நான் ஒத்துக்கிறேன்...

    பிளாக்கர் என்ன சொல்லனும்?

    இவ்வளவு சின்ன்ன்ன்ன்ன்னனனனனனனனத,இனிமையான நாளை பத்தி,நான் புரிஞ்சிக்கிற மாதிரி ஒரு பதிவு வந்தா நல்ல பதிவுதான்...

    ReplyDelete
  20. Anonymous17 May, 2007

    மே மாதம்-17ல இன்னுமொரு முக்கியமான நிகழ்வு இருக்கு... அது என்ன அப்படினா.......

    ReplyDelete
  21. Anonymous17 May, 2007

    இந்த சொக்கதங்கம்,திண்டுக்கல் மண்ணின் மைந்தன்,இனியவன்,புதியவன்,அழகன்
    மணிப்ரகாஷின் பிறந்த நாளும் இந்நாளே...

    மே-17 ன் உண்மையான முக்கியத்துவமே இந்த நிகழ்வுதான்ன்ன்ன்ன்ன்ன்ன்..

    ReplyDelete
  22. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மணிப்ரகாஷ், சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  23. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மணிப்ரகாஷ், சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  24. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மணிப்ரகாஷ், சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  25. மூன்று முறை சொல்லிட்டேன். போதுமா? இன்னும் ஒரு விசேஷம் இருக்கு ஆனால். அது இப்போ இல்லை! :D

    ReplyDelete
  26. Anonymous17 May, 2007

    இன்னைக்கு என்ன இனிப்பு செய்தீங்க? எனக்கு ?????

    ReplyDelete
  27. வாங்க டுபுக்கு, கரெக்டா வரீங்க. போன திருமணநாளுக்கும் வந்து வாழ்த்துச் சொன்னீங்க, என்னோட நினைவு சரியா இருந்தா அதான் நீங்க என்னோட பதிவுக்கு முதல் முறையா வந்தீங்கன்னு நினைக்கிறேன். உங்க தம்பி மாதிரி உங்களுக்கும் கேசரி தான் பிடிக்குமா? என்ன ஸ்பெஷல்னு சொல்ல மாட்டேனே! :P

    ReplyDelete
  28. நீங்க லேட்டா வந்ததாலே நானே சாப்பிட்டுட்டேன். உங்களுக்கு வைக்கலை! :D

    ReplyDelete
  29. Anonymous17 May, 2007

    //ஆனால். அது இப்போ இல்லை! :D //

    அது எனக்கு தெரியும்..கண்டுபிடிச்சுட்டேன்..


    ஆனா இப்ப சொல்ல மாட்டேன்.24ஆம் தேதி சொல்றேன்...

    ஹி..ஹி..

    அப்புறம் மூண்று முறை சொன்னதுக்கு நன்றி..

    //நீங்க லேட்டா வந்ததாலே நானே சாப்பிட்டுட்டேன். உங்களுக்கு வைக்கலை! :D

    //

    அம்மா வைக்கிற பாயசத்தான் சாப்பிட முடியல..நீங்களவது தருவீங்க அப்படினு நினைச்சேன்... :(((((

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் கீதா & சாம்பசிவம் தம்பதியருக்கு!

    ReplyDelete
  31. மணிப்ரகாஷ், ரொம்பவே சென்டிமென்டலா "டச்" பண்ணிட்டீங்க, நிஜமாவே. வாழ்த்துக்களும், சின்சினாட்டி இந்தியா க்ரோசரியிலே இருந்து இனிப்பும் வாங்கி என் பேரையும் சொல்லிச் சாப்பிடுங்க.

    ReplyDelete
  32. அட, ஜெ.ச. வாங்க, வாங்க, உங்க உழவாரப் படை பத்தி 2 நாள் முந்தி கூடப் பேசிட்டு இருந்தோம். அடிக்கடி பார்க்கமுடியலை உங்களை. ரொம்பவே பிசி போலிருக்கு. வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  33. திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.

    என் பெற்றோர் கல்யாணநாளும் இதே.
    எங்க வீட்டில ஒருத்தரும் கீதா.

    ரொம்ப சந்தோஷம்

    ReplyDelete
  34. ரொம்பவே நன்றி வல்லி, ஸ்விட்ஸர்லாந்து குளிரும், ஆல்ப்ஸ் மலையும் எப்படி இருக்கு? ஸ்விஸ் சாக்லேட் ரொம்பவே பிரசித்தி. வாங்கிச் சாப்பிடுங்க, ஷுகர் பத்திக் கவலைப் படாமல். :D

    ReplyDelete
  35. //இது ரொம்ப நல்ல பதிவுன்னு ப்ளாக்கரே ஒத்துக்கிச்சு. :))))))))))))))))))))))))) //

    unga Label parthadhum kaetka thonichu.adhukulla neengalae badhil pottuteenga.Maaminna summava!!:)

    ReplyDelete
  36. sambu mamavoda ennam enna nu theriyaliye! avar paadu konjam solli irundha nalla irundhurkum ;-)

    wish you many more returns of the same!! :-)

    ReplyDelete
  37. aahaa!thirumana Naala? Netru pesum bodhu solli irukalam illaiya? Anyways, Vazhththukkal.Namaskarikirom.

    ReplyDelete
  38. enna ipo 24th porandhinga avlo thaane? adhuku enna ennavo oorla yaarume porakkadha madhiri indha build up kudukringa?! :-) paati analum porandha naal kondadama irukka mudiuma nu kekringla? adhuvum seri thaan :-)

    ReplyDelete
  39. //@பாலராஜன் கீதா, மானத்தை வாங்கறீங்களே! :D
    //

    idhellam vera irukka???? apo edhukku blog unionla odd man outa irukinga? hehehe enga yaarukum adhellam kidaiyadhu, so ungalukkumm illainu othukonga illai union padhaviya raajinama seiyunga ;-)

    ReplyDelete
  40. seri kalaichu mudichachu, aasirvadhinga paati ennaiyum ranguvaiyum! naangalum idhu pola oru postu 2056 la poda venaama? :-)

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் கீதா.இப்பதான் உங்க சிதம்பர ரகசியம் பதிவெல்லாம் படிச்சேன்.அருமை.

    ReplyDelete
  42. வாங்க, பத்மா, உங்க பதிவுகளை எல்லாம் நிறையப் படிச்சிருக்கேன். உங்க மாதிரி எல்லாம் என்னால் எழுதவோ, சேவை செய்யவோ முடியாது. அப்படி இருந்தும் பெரிய மனதோடு வந்து பாராட்டியதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  43. திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. ரொம்பவே நன்றி டெல்ஃபைன், திருச்சி காவேரி பற்றிய பதிவுக்கு அப்புறம் இப்போத் தான் வரீங்க, ஆனால் நீங்க ரொம்ப பிசியான மருத்துவர். வந்ததே பெரிசு. ரொம்ப நன்றி மறுபடியும்.

    ReplyDelete
  45. கீதாம்மா!
    வாழ்த்துக்கள்!உங்களுக்கும் உங்கள் எதிர் பாதிக்கும்!
    கிட்டத்தட்ட நாங்களும் அதே போல் தான். சிகாகோ அழகான ஊர்! அனுபவியுங்கள்(enjoy).
    ப்ளாக் உலகில் பிறந்து மூன்று மாதமாகிறது. அத்ற்குள் எத்தனை
    நட்புகள்! மகிழ்ச்சியாயிருக்கிறது.

    ReplyDelete
  46. வாங்க நானானி, வந்து மூன்று மாதத்துக்குள் நிறைய நண்பர்கள்னு சொல்றீங்க, வாழ்த்துக்கள். அப்புறம்ம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து வாழ்த்தினதுக்கு நன்றி. போஸ்டை நல்லாப் படிங்க. நான் சிகாகோவில் வந்து இறங்கினதாய்த் தான் சொல்லி இருக்கேன். இருக்கிறது வேறே ஊரில். ஹிஹிஹி, நமக்கு இதெல்லாம் தான் நல்லாக் கண்ணில் படும். :D

    ReplyDelete
  47. நான் வருவது வேணா லேட்டா இருக்கலாம் ஆனா லேட்டஸ்டா இருக்குனும் இல்ல... அதான் 50 வது பின்னூட்டம். வாழ்த்துக்கள்.

    உங்களுக்கு இது எத்தனையாவது திருமண நாள்.. அதை சொல்லயே நீங்க....

    உண்மை தாங்க, வயதில் மூத்தவர்களிடம் பழக்கம் இருந்தாலும் இது போல நட்புறவை ஏற்படுத்தி கொடுத்தது பதிவுலகம் தான்.

    ReplyDelete