சரித்திரத்தில் இடம் பெறாத உண்மைகள் இவை. எனக்குப் பள்ளி நாட்களிலேயே என் ஆசிரியர் மூலமாய் ஓரளவு தெரியவந்தது. அதற்குப் பின் பல புத்தகங்கள் மூலமும், அந்தச் சமயம் பிறந்து சுதந்திரப் போராட்டத்தை நேரில் கண்டு உணர்ந்தவர்கள் மூலமும் தெரிய வந்தது. என்றாலும் நானாக முடிவு எடுத்துக் கொண்டது முதன் முதல் "நரசையா" இதைப் பற்றி எழுதியதைப் படித்ததும் தான். தற்சமயம் "திரு ஸ்டாலின் குணசேகரன்" இம்மாதிரி மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி எழுதிய ஒரு புத்தகத்தில் இந்தப் புரட்சியையும் குறித்து ஒரு அத்தியாயம் எழுதி உள்ளார். இத்தனை விவரங்கள் கொடுத்திருக்காரான்னு தெரியலை. நான் விமரிசனம் மட்டும் தான் படிக்க முடிந்தது. இனி, இந்தப் போராட்டம் பற்றி!
*************************************************************************************
பொது வேலை நிறுத்தமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் சீக்கிரமாகவே வலுவடைந்தது. போராட்டம் ஆரம்பித்தவர்கள் இந்தியர்கள், போராட்டம் நடத்துவதோ இந்திய மக்களுக்காக. படையோ இந்தியப் படை. இந்தியக் கப்பல் படை இது எனச் சொல்லி முற்றிலும் திரு நேதாஜிக்கும் அவர் சார்ந்த இயக்கத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் சுவரொட்டிகள். நேதாஜியின் படம் அனைவர் கையிலும். அவர் சாகசங்கள் அனைவர் மனதிலும். இந்த விஷயம் மெதுவாக மற்ற நகரங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. சின்னப் பொறியாக இருந்தது மாபெரும் எரிமலைபோல் வெடிக்கக் காத்திருந்தது. உள்ளூர் காவல் படையும் நேரடியாகவே இதற்கு ஆதரவு தந்தது. மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய அனைவரும் மறுத்தனர். ஆங்கிலேய மேலதிகாரிகள் திகைத்தனர். செய்வதறியாமல் தலைநகரைத் தொடர்பு கொள்ள விஷயம் லண்டனுக்கும் போனது.
கராச்சி, சென்னை, கல்கத்தா போன்ற துறைமுகங்களுக்கும் விஷயம் பரவி அங்கேயும் இதற்கு ஆதரவு பெருகியது. சென்னையிலும், புனே நகரிலும் இருந்த பெரும்பான்மையான தரைப்படை வீரர்களும் இதற்கு முழு ஆதரவு தந்தனர்.விமானப் படையும் மறைமுகமாக ஆதரித்தது. போஸ் எதிர்பார்த்த ஆதரவு இது தான். ஆனால் அப்போதும் ஆங்கிலேய அரசு இந்த ஆதரவு அவருக்குக் கிடைக்காமல் செய்தது. இப்போதும் இதை அடக்கப் பார்த்தது. உள்ளூரில் இருந்த காங்கிரஸின் தலைவியும், "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தை வெற்றிகரமாய் பம்பாய் நகரில் நடத்தி முடித்தவருமான அருணா அசஃப் அலியின் முழு ஆதரவு இதற்குக் கிடைத்ததாய்ச் சொல்லப் படுகிறது. எல்லாக் கப்பல்களிலும் மூன்று கொடிகள் முதல்முறையாகவும், கடைசிமுறையாகவும் சேர்ந்து பறந்தன. அவை காங்கிரஸின் மூவர்ணக் கொடி, முஸ்லீம் லீகின் பச்சை வண்ணக் கொடி, கம்யூனிஸ்டின் செங்கொடி. அதிலும் மூவர்ணக் கொடியும், பச்சைக் கொடியும் சேர்ந்து பறந்தது அதுவே முதல் முறை ஆகும்.இவ்வாறு ஆரம்பித்த போராட்டத்தைக் கண்டு ஆங்கில அரசு கதி கலங்கியது என்றே சொல்ல வேண்டும். லண்டனில் உள்ள அரசு, இந்தியாவில் உள்ள அரசைக் கடிந்து கொள்ள இந்தியாவில் உள்ள அப்போதைய வைஸ்ராய் காங்கிரஸ் மேலிடத்தை நேருவின் மூலம் அணுகினார்.
ஏனெனில் காங்கிரஸ் மேலிடம் இதை முற்றிலும் ஆதரிக்கவில்லை. அரசுக்கு ராணுவ வீரர்கள் செய்யும் துரோகமாக காந்தியால் வர்ணிக்கப் பட்டது. அருணா ஆசஃப் அலியைக் கடிந்தும் கொண்டார். பேச்சு வார்த்தைக்கு நேரம் குறித்தனர். ஆனால் வீரர்களும், அதிகாரிகளும் ஒப்புக் கொள்ள மறுத்தனர். இருந்தாலும் பேச்சு வார்த்தைக்கு ஒருவர் வந்தார். அவர் தான் இரும்பு மனிதர் என்று எல்லாராலும் வர்ணிக்கப் படும் "சர்தார் வல்லபபாய் படேல்"! பின்?
ஒ இவ்வுளவு நடந்து இருக்கா. காந்தியும் சராசரி அரசியல்வாதி என்று பல இடங்களில் நிருபித்து இருக்கிறார். தன்னை தவிர வேறு ஒருவரும் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காரணமாக இருக்க கூடாது என்பதில் கவனமாக இருந்து இருக்கிறார் :((.. இப்படி கவுத்திடிங்களே தாத்தா.
ReplyDelete//பேச்சு வார்த்தைக்கு ஒருவர் வந்தார். அவர் தான் இரும்பு மனிதர் என்று எல்லாராலும் வர்ணிக்கப் படும் "சர்தார் வல்லபபாய் படேல்"!//
ReplyDeleteபோச்சுடா, பட்டேலுமா!
யூ டூ படேல்?
கீதாம்மா...
இந்த அருணா ஆசப் அலி தானே பின்னாளில் டில்லி மேயர் எல்லாம் ஆகி, பொது பேருந்தில் எல்லாம் பயணம் செய்து பிரபலம் ஆனாங்க?
இவங்க எப்படி இந்திரா காந்திக்கும் க்ளோஸ் ஆனாங்க?
நல்ல பதிவு. யாரும் அவ்வளவாக எடுத்தாளாத விஷயத்தை பற்றி அழகாய் பதிந்து வருகிறீர்கள்.
ReplyDeleteஇந்த போராட்டத்தை பற்றி கி.ராஜநாராயணன் தனது அந்தமான் நாயக்கர் நாவலில் எழுதியிருந்ததாய் நினைவு. பின் அது கோபல்ல கிராமத்து மக்கள் நூலின் மூன்றாம் பாகமாய் பதிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஒருவர் தன் நினைவுகளை பகிர்ந்துகொள்வது போல போகும் அந்த புத்தகத்தில். கிடைத்தால் படித்து பாருங்கள்.
சந்தோஷ், தெரிந்த விஷயங்களை, அதுவும் சரித்திரத்தில் மறைக்கப்பட்டவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் ஒரு சிறு முயற்சிதான் இது. முடிவு எடுக்க வேண்டியவர்கள் நீங்கதான்.
ReplyDelete@கண்ணன், படேல்தான் காந்தி சொன்னதன் பேரில் தன்னுடைய பிரதம மந்திரி பதவியையே விட்டுக் கொடுத்தாரே! காந்திக்காக அவர் செய்தவற்றில் இதுவும் ஒன்று.
@லட்சுமி, நீங்க சொன்ன புத்தகம் படிச்சிருக்கேன். என் கிட்டே இருந்தது. பின்னாலே தொலைந்த பொக்கிஷங்களில் அதுவும் ஒன்று. ரொம்ப நன்றி உங்க கருத்துக்கு.
//படேல்தான் காந்தி சொன்னதன் பேரில் தன்னுடைய பிரதம மந்திரி பதவியையே விட்டுக் கொடுத்தாரே! காந்திக்காக அவர் செய்தவற்றில் இதுவும் ஒன்று//
ReplyDeleteஉண்மை தான், காந்தியின் பலமே அவரை கண்மூடித்தனமாக நம்பிய அவரின் சிஷ்யர்கள். அதில் முதன்மையான சீடர்களில் ஒருவர் படேல்.
//"துரோகம் என்று இதைச் சொல்லலாமா? :(((((((((" //
ReplyDeleteதுரோகம் என்பது சற்றே கடுமையான சொல். வேண்டுமானல் தன்நலம், சுயநலம் என்று சொல்லாம். (தான் பெயர் எடுக்க வேண்டும்)
நாங்க வந்து கமென்டினால் தான் நீங்க கமென்டுவீங்களாக்கும்? :P அப்புறம் துரோகம்னு நான் குறிப்பிட்டிருப்பது காந்தி இந்தியக் கப்பல் படையின் ஒத்துழையாமை இயக்கத்தைச் சொன்னதை. அவர்களின் ஒத்துழையாமை இயக்கத்தை அவர் "அரசுக்குச் செய்யும் துரோகம், இதை நான் ஒத்துக்கொள்ள முடியாது, உடனடியாக அனைவரும் வேலைக்குத் திரும்ப வேண்டும்." என்று பொது அறிக்கை விட்டார். காந்தி சொன்னது அவர்கள் செய்தது துரோகம் என்று. அதை அப்படி துரோகம்னு சொல்லலாமா?
ReplyDeleteகாந்தி செய்தது "பச்சைத் துரோகம்". இதில் சந்தேகமே இல்லை என்னைப் பொறுத்தவரை! :((((((((((((((((((((
ReplyDelete//நாங்க வந்து கமென்டினால் தான் நீங்க கமென்டுவீங்களாக்கும்?//
ReplyDeleteஇதுக்கு விளக்கம் குடுத்தாச்சு.
//அப்புறம் துரோகம்னு நான் குறிப்பிட்டிருப்பது காந்தி இந்தியக் கப்பல் படையின் ஒத்துழையாமை இயக்கத்தைச் சொன்னதை. அவர்களின் ஒத்துழையாமை இயக்கத்தை அவர் "அரசுக்குச் செய்யும் துரோகம், இதை நான் ஒத்துக்கொள்ள முடியாது, உடனடியாக அனைவரும் வேலைக்குத் திரும்ப வேண்டும்." என்று பொது அறிக்கை விட்டார். //
அவர் இடத்தில் இருந்து பார்த்தா இது சரியோ என்று தோன்றலாம்.
//காந்தி சொன்னது அவர்கள் செய்தது துரோகம் என்று. அதை அப்படி துரோகம்னு சொல்லலாமா? //
இந்த வார்த்தையை அவர் உபயோகப்படுத்தி இருக்க கூடாது தான்.
//காந்தி செய்தது "பச்சைத் துரோகம்". இதில் சந்தேகமே இல்லை என்னைப் பொறுத்தவரை! :(((((((((((((((((((( //
ReplyDeleteபச்சை துரோகம்.... அப்படி எல்லாம் ஒரேடியாக காந்தியை சாடி விட முடியாது. மகாத்மா என்று கூறும் அளவுக்கு காந்தி என்றுமே நடந்துக் கொண்டது இல்லை என்பது என் கருத்து. அதில் எந்த மாறுதலும் இல்லை. அதற்காக அவர் துரோகம் செய்து விட்டார் என்று கூறுக் கூடாது. நடந்த துரோகங்களை அவர் தடுக்க தவறினார் அல்லது நடுக்க விரும்பவில்லை என்று சொல்லலாம் (சுபாஷ், பகத்சிங் போன்ற விசயங்களில்)
சரி இப்ப உங்க இதுக்கு வருவோம்.
இந்த சிப்பாய்கள் சிப்பாய்கள் என்று சொல்லுறீங்களே, இவர்கள் எல்லாம் ஆங்கிலேயர்களுக்கு சேவகம் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தானே, ஏதோ ஒரு காலக்கட்டத்தில் தான் அவர்களுக்கு சுயமரியாதை ஏற்பட்டு இந்த போராட்டம் நடந்து இருக்கு. நீங்க சொன்ன மாதிரியே இந்த போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் இந்தியர்கள், போராட்டம் நடத்தியது இந்திய மக்களுக்காக, படையோ இந்திய படை. ஆனால் இந்தப்படை இதற்கு முன்பு வரை ஆங்கிலேயருக்கு தானே சேவகம் செய்தது. இது தவறு இல்லையா? நம் நாட்டை அடிமைப்படுத்திய அந்நியர்களிடம் வேலை பார்த்தது எந்த விதத்தில் நியாயம். அப்படி அவர்களுக்கு சேவகம் செய்ய சேர்ந்து விட்டு அங்கு இருந்து என்ன போராட்டம் வேண்டி கிடக்கு சொல்லுங்க.அவர்கள் மனதில் நேதாஜி இருந்து இருந்தால் (கண்டிப்பாக இருந்து இருப்பார், ஆனால் காந்திக்கு அடுத்த்ப்படியாக தான்) வேலை விட்டு விலகி அவர் பின் அணி வகுத்து இருக்கலாம்.
இப்ப காந்திக்கு வருவோம். ஆங்கிலயே அரசு இப்பொழுது தான் நெருங்கி, இறங்கி வந்து கொண்டு இருக்கின்றது, இந்த நேரத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள்(காந்தி பார்வையில், என் பார்வையில்லை) நடப்பது நாட்டின் விடுதலை முயற்சிக்கு தடைக்கல்லாக இருக்கலாம் என்று நினைத்து இது போன்று அறிக்கை விட்டு இருக்கலாம். அதில் ஒரளவு உண்மையும் உள்ளது. அவர் கருத்துப்படி அஹிம்சையின் மூலம் மட்டுமே சுகந்திரம் பெற வேண்டும் என்ற நிலையில் அவரு உறுதியாக இருந்தார். அதனின் ஒரு படி தான் இதுவும்.
இதே காரணம் தான் பகத்சிங் தூக்கிற்கு எந்த கருத்தும் கூறாமல் இருந்ததும்...
இது என் பார்வை மட்டுமே... மற்றவை அவர்கள் பார்வையில்.
உங்களோட விவாதம் நல்லாத் தான் இருக்கு. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களைப் போல அந்தப் படை வீரர்களும் ஒடுக்கப்பட்டுத் தான் வந்தார்கள். ஆங்கில அரசு படை வீரர்கள் விழிப்புணர்ச்சியைத் தடுக்கத் தன்னால் ஆன முயற்சியைச் செய்தும் வந்தது, தலைவர்களின் உதவியுடன். அவர்களின் எழுச்சிக்கும் ஒரு நேரம் வேண்டாமா? இன்னும் சொல்லப் போனால் ஆங்கில அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் செய்யச் சொன்ன காந்தியே தனக்கு வேண்டாம்னு வரப்போ அதை எதிர்க்கிறார் என்றால் என்னன்னு சொல்றது? இதிலே இன்னும் நிறைய எழுத வேண்டி இருப்பதால் இத்தோடு நிறுத்திக்கிறேன்.
ReplyDeleteநீங்க சொல்லியிருப்பது உண்மைதானா ?? சுபாஷுக்கு எதிரா காந்தி சில 'அரசியல்' செய்ததாக என்னோட வரலாற்று ஆசிரியரும் சொன்னதுண்டு. ஆனா, நம்ப கஷ்டமா இருக்குது :-(
ReplyDeleteகதிரவன், சுபாஷுக்கு எதிரா மட்டும் இல்லை, படேல்தான் பிரதம மந்திரி என்று ஒட்டு மொத்தக் காங்கிரஸ் தலைவர்களும் ஏகமனதாய் முடிவெடுத்தபின்னும், காந்தி தான் படேலைப் பின் வாங்கச் செய்தது. இதுவும் சத்தியமான உண்மைதான். :(((((((((
ReplyDeleteபுலிக்கும் தலைவிக்கும் வாக்கு வாதம் நல்லா இருக்கே...
ReplyDeleteபோராட்டம் அப்படினு டைரக்டா ஆரம்பிச்ச உடனே
படிக்கிறப்ப கொஞ்சம் குழம்பிட்டேன்...
நிறைய விசயங்கள் அறிந்தேன் தொடர்கிறேன்...
ReplyDeleteநன்றி கீதாமா.
ReplyDeleteஇட்நப் பதிவை நான் படிக்கவில்லையோ,
இல்லை பயணத்தில் இருந்தேனோ.
மிகச் சரியான கணிப்பு.
மனம் மிக சங்கடப் படுகிறது.
நானும் திரு ராச நாராயணன் புத்தகங்களில் அரசாங்கத்தின்
பல மீறல்களையும், பகத் சிங்க் விஷயத்தையும்
படித்திருக்கிறேன்.
அவற்றில்தான் இந்த செய்திகளை
அறிந்திருக்க வேண்டும்.