எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 30, 2007

"அதியமான்" பெயர்க்காரணம் தெரியணுமா?

வல்லி சிம்ஹனுக்குச் சந்தேகம். "கைப்புள்ள"யும், "அதியமானும்" ஒருத்தர்தானான்னு. ஏற்கெனவே அதியமான்ங்கிற பேரிலே ஒருத்தர் பொருளாதாரத்தைப் பத்தி எழுதறாராமே! எனக்குத் தெரிஞ்சு $செல்வன் தான் பொருளாதார மேதை! ஹிஹிஹி, செல்வன், இது வஞ்சப் புகழ்ச்சி எல்லாம் இல்லை. நல்ல புகழ்ச்சிதான். சந்தர்ப்பம் கிடைக்கும்போது யார் மாட்டிக்கிறாங்களோ அவங்களையும் கொஞ்சம் கவனிக்கணும் இல்லை. இன்னிக்கு நீங்க. அப்புறம் இந்த அதியமானைக் கவனிப்போம்.

முதல்லே எல்லாம் நானும் "கைப்புள்ள"னு தான் கூப்பிட்டுட்டு இருந்தேன். எல்லாம் அந்தப் போட்டியில் வந்தது. அப்போத் தான் தெரிஞ்சது, இவர் ஒரு அதியமான்னு. என்ன போட்டியா? எல்லாம் போன வருஷம் என்னோட பிறந்த நாளில் கைப்புள்ள வச்ச போட்டி தான். எனக்கு என்ன வயசுன்னு கண்டுபிடிக்கப் போட்டி. எனக்குத் தான் தெரியுமே என்னோட வயசு! நியாயமாப் பார்த்தால் என் கிட்டே கேட்டுட்டுப் பரிசையும் எனக்குத் தான் கொடுத்திருக்கணும். இவர் பாட்டுக்குப் போட்டி வச்சுப் பரிசை யாருக்கும் கொடுக்காமல் அவரே சாப்பிட்டும் விட்டார். என்ன தான் பல்லி மிட்டாய்னாலும் அதைக் கூட "ஏதடா, நம்ம தலைவி ஆச்சே! இவங்களுக்கும் கொடுப்போம்"னு தோணாமல் அவரே சாப்பிட்டார் இல்லை, அப்போது தான் எனக்கு உறைச்சது. ஆஹா! இவ்வளவு பெரிய மனசு உள்ள இவர் போன ஜென்மத்தில் "கடையெழு வள்ளல்"களில் ஒருத்தர் தான் அப்படின்னு தோணிச்சு.

என்னோட தமிழறிவை(ஹிஹிஹி, சும்மச் சொல்லிக்கக் கூச்சமா இருக்கு)யும் இவர் அடிக்கடி பாராட்டினாரா? அப்போத் தான் தெரிஞ்சது இவர் ஒரு அதியமான் அப்படின்னு. அந்த அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்தார். இந்த அதியமானோ ஒரு பல்லி மிட்டாய் கூடக் கொடுக்கவில்லை இந்த ஒளவைக்கு. அதான் அன்னியிலே இருந்து இந்தப் பேர் வச்சுட்டேன் இவருக்கு. இந்த ரகசியம் இதுவரை யாருக்கும் சொல்லலை. இப்போச் சந்தேகம் தீர்ந்ததா வல்லி? :))))))))))))))))))))))))))) அதான் அதியமானுக்குக் கல்யாணம்னு போஸ்ட் போட்டிருக்கேன். சங்கத்துச் சிங்கங்கள் எல்லாம் நல்லா கவனிச்சுக்குங்க என் சார்பாவும் அதியமானை!

13 comments:

  1. ஞாயித்துக்கிழமை கல்யாணத்துக்கு இப்பவே போயிரலாமுன்னு
    சொல்றீங்களா? தோ... ........கிளம்பிட்டேன்:-)

    ReplyDelete
  2. பல்லி மிட்டாய் கூட கொடுக்காத அதியமானை வன்மையாக கண்டிக்கிறோம்.இன்னும் அந்த மிட்டாய் பாக்கெட்டில் வைத்திருந்தால்.. உடனடியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    :-))

    ReplyDelete
  3. கீதா சாம்பசிவம் அக்கா

    என் மேல ஏதேனும் கோபம்ன்னா ரெண்டு அடி வேணும்னாலும் அடிச்சிடுங்க..ஆனா மேதை, அது இதுன்னு கிளப்பிவிட்டு மாட்டிவிட்டுடாதிங்க:-)

    கைப்பு பொருளாதார மேதை என்பதை ஒத்துக்கறேன். ஏன்னா அவர் மா.சி நடத்துன பொருளாதார போட்டியில் பரிசெல்லாம் வாங்கிருக்கார்

    ReplyDelete
  4. தலை(வ)லி யின் பேரை சொல்லி பந்தியில் பல்லி மிட்டாய் போடப்படும் என்பதை அதியமான் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்:-))

    ReplyDelete
  5. Anonymous30 May, 2007

    //இந்த அதியமானோ ஒரு பல்லி மிட்டாய் கூடக் கொடுக்கவில்லை இந்த ஒளவைக்கு//

    அப்படினா நான் படத்துல பார்த்த ஓளவையார் மாதிரிதான் நீங்களும் இருப்பீங்களா...??????????

    ReplyDelete
  6. ஆஹா.. ஔவைக்கு நெல்லிக்காய் தந்த அதியமானை பற்றியோன்னு தரையில் விழுந்தடித்து ஓடி வந்தேன்.. பாத்தா இது நம்ம கைபுள்ள மேட்டர்.. மேடம்..உங்களை....க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  7. கைபுள்ளைக்கு உங்க பதிவு மூலமா கல்யாண வாழ்த்தை சொல்லிக்கிறேன்.. நமக்கும் அழைப்பிதழ் அனுப்பிச்சிருந்தார் அவர்.. நம்மால போக முடியாதே

    ReplyDelete
  8. சங்கத்தில புதுசா நுழஞ்ஜிருக்கும் நானும் கைபுள்ளைக்கு என் வாழ்துக்ககளை சொல்லிக்கறேன். எனக்கு கண்ணிணியில் தமிழ் சொல்லிக்கொடுத்த உங்களுக்கு நன்றி.மற்ற நண்பர்களிடம் என் வலையைப்பற்றி சொல்லவும்.

    ReplyDelete
  9. அது எப்படிங்க கரக்ட்டா நான் திரும்பி வரும்போது இப்படி ஒரு உங்க டிரேட் மார்க் மொக்கை போஸ்ட் போடறீங்க? :)

    இத தான் ஹெட் லெட்டர்னு சொல்லுவாங்களா? :p

    வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் தலை சாய்க்கிறேன். (இன்னும் மொய் வந்து சேரலை. அதான்!) :p

    ReplyDelete
  10. //கீதா சாம்பசிவம் அக்கா
    //

    @selvan, என்ன அக்கா! சொக்கானுட்டு? அதான் அவ்வை!னு சொல்லியாச்சே, பாட்டினே கூப்டுங்க.

    //அப்படினா நான் படத்துல பார்த்த ஓளவையார் மாதிரிதான் நீங்களும் இருப்பீங்களா//
    @மணி,
    உனக்கு இன்னுமா சந்தேகம்..?

    ReplyDelete
  11. ஹிஹிஹி, தனித் தனியா எல்லாருக்கும் பதில் போட முடியலை, மன்னிச்சுக்குங்க! மணிப்பயல், இன்னும் எழுத்துத் திருந்தணும்,
    @அம்பி, கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?

    ReplyDelete
  12. //@அம்பி, கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?//

    கீதாம்மா...
    திருமண விழாவில் அம்பி, அருகில் இருப்பவரை விட்டு விட்டு,
    பலவாறாக ஜொள்ளியதை, சாரி....சொல்லியதைப்
    படமா அனுப்பி வைச்சாரே! கிடைச்சுச்சா? :-))

    ReplyDelete
  13. //@selvan, என்ன அக்கா! சொக்கானுட்டு? அதான் அவ்வை!னு சொல்லியாச்சே, பாட்டினே கூப்டுங்க//

    இதுக்கு நீங்க இன்னுமா பதில் சொல்லவில்லை? ஆகா...தமிழ் ஆய்ந்த ஒளவையை முருகன் மடக்கலாம்...அம்பி மடக்கலாமா??

    ஒளவைக்கு வயசுக் குறைவு தான். அவங்க பதினாறு வயதினிலே, தோற்றத்தை மட்டும் மாத்திக்கிட்டாங்க...இப்ப அவங்களுக்கு முப்பத்தஞ்சி தான் ஆகுது-ன்னு விதம் விதமா சொல்லப் போறீஙக-ன்னு நினைச்சி வந்தேன்!

    நீங்க என்னடான்னா...அம்பியின் முன்னர் அமைதி காக்கறீங்க! :-)

    ReplyDelete