கிருஷ்ணசாமி ஐயர் நம்முடைய நாட்டின் பெருமையை அமைத்து எளிய நடையில் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் பாடும் வண்ணம் சில பாட்டுக்கள் இயற்ற வேண்டுமென்று விரும்பினார். பலரிடம் தம் கருத்தை எடுத்து உரைத்து வந்தார். அந்தக் காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் அவருடைய பழக்கத்தைப் பெற்றிருந்தார். கிருஷ்ணசாமி ஐயர் பாரதியாரிடம் தம் கருத்தைத் தெரிவித்தார். பாரதியாருடைய காதில் கிருஷ்ணசாமி ஐயருடைய பழைய பிரசங்கம் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவர் தமிழ்ப் பாஷையைப் பற்றிச் சொன்னதைத் தழுவி பாரதியார் நாட்டைப் பற்றிப் பாடத் தொடங்கினார்.
"செந்தமிழ்நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!" என்பது ஒரு செய்யுள்.
"கம்பன் ராமாயணம் செய்த பாஷை! திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை!" என்று அன்று கூறியதைப் பாரதியார் சிறிது மாற்றி,
"கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பலவிதமாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு!" என்றும்,
"வள்ளுவன்றன்னை யுலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு -நெஞ்சை
அள்ளுஞ் சிலப்பதிகாரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ் நாடு!" என்றும் பாடினார்.
இந்தப் பாட்டைக் கேட்டு இதில் தம்முடைய கருத்து அமைந்திருப்பதை அறிந்து கிருஷ்ணசாமி ஐயர் பெரு மகிழ்ச்சியை அடைந்தார். பாரதியாரைப் பின்னும் பல பாடல்களைப் பாடச் செய்து அவற்றைச் சேர்த்து ஆயிரக் கணக்கில் அச்சிடுவித்து இலவசமாக வழங்கச் செய்தார். சுப்பிரமணிய பாரதியாரை அக்காலத்திலே அறிந்து அவருடைய கவித்துவத்தைப் பாராட்டி ஆதரித்தவர்களுல் கிருஷ்ணசாமி ஐயர் முக்கியமானவர். பாரதியாருடைய கொள்கைகளில் பலவற்றைக் கிருஷ்ணசாமி ஐயர் விரும்பாவிடினும் அவருடைய கவித்துவத்தில் ஈடுபட்டார்.
******************************************************************************
மேற்குறிப்பிட்ட சம்பவம் நடந்த சரியான தேதிகள் இந்தப் புத்தகத்தில் இல்லை. ஆனால் தமிழ்த் தாத்தா தன் வாழ்நாளின் முடிவு வரை பாரதியாரை ஒரு கவிஞர் என்று ஒப்புக்கொள்ளவே இல்லை என்பதும் உண்மைதான். அது பற்றிப் பின்னர் ஒரு முறை. இந்தப் பாட்டு எழுதிய சமயம் பற்றி வேறு சில கருத்துக்களும் இருக்கின்றன. ஒரு போட்டிக்கு பாரதி இந்தப் பாடலைப் பாடியதாகவும் 2வதோ அல்லது 3வதோ பரிசு பெற்றதாயும் சொல்வார்கள். இந்த நிகழ்ச்சி தமிழ்த் தாத்தா உயிருடன் இருக்கையிலேயே அவரே எழுதிக் "கலைமகள்" பத்திரிகையில் வெளிவந்தது.
இந்தக் கிருஷ்ணசுவாமி ஐய்யர் சென்னை மக்களுக்கு பல நல்ல காரியங்களைச் செய்தவர். 1907 இல் விதேசி வங்கியான அர்பத்நாட் வங்கி இந்திய மக்களை ஏமாற்றி இன்சால்வென்ட் ஆன போது நமக்காக இந்த வ்ருடம் தன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்தியன் வங்கியை தோற்றுவித்தார்.
ReplyDeleteஏழ்ஹை மக்களுக்குகாக் வெங்கடரமணா ஆயுர்வேத வைத்தியசாலையை நிறுவினார்
நடுத்தர மக்கள் படிப்பதற்காக பி.ஸ் ஸ்கூலை மேம்பட்ச்செய்தார். அவரை நினைவு கூர்ந்ததற்கு நன்றி
நீங்கள் சொன்ன ஆஸ்பத்திரியில் தான் என் பெரியப்பா சென்னையில் இருந்தவரை தனக்கு வேண்டிய வைத்தியம் செய்து கொண்டார். நல்லாத் தெரியும், அந்த ஆஸ்பத்திரி பத்தி! கிருஷ்ணசாமி ஐயர் பத்தியும் ஓரளவுக்குப் படிச்சேன்.
ReplyDelete