ஹிஹிஹி, நந்தா சொன்னாப்பலே சீரியஸ் போஸ்ட் போடறப்போவே "மொக்கை" போடற ஆசை த்விர்க்க முடியலை. அதுவும் இது கட்டாயமாய்ச் சொல்லியே தீரணும். நானும் ஜோதியிலே ஐக்கியமாயிட்டேன். அதான், என்னன்னு கேட்கறீங்களா? "சிவாஜி" பார்த்துட்டேன். நடிகர் திலகம் சிவாஜியை இல்லை. அவரைப் பலமுறை பார்த்தாச்சு. இது லேட்டஸ்ட் சிவாஜி, வாஜி, வாஜி, சிவாஜி! தான்! நேத்துத் திடீரென இங்கு தமிழ் அசோசியேஷனில் (அப்படி ஒண்ணு இருக்கு?) சிவாஜி படம் போடறதாய்த் தகவல் வந்தது. வீட்டிலே ஓட்டெடுப்பு நடந்ததிலே என் கணவரும் நானும் தான் ஜெயித்தோம். மத்தவங்களுக்கு அவ்வளவாய் விருப்பம் இல்லாததால் நாங்கள் இருவரும் மட்டும் போனோம். இரவு(எங்கே இரவு? சூரியன் மறையவே 8-00 மணி ஆயிடும், ராஜஸ்தான் தேவலைன்னு ஆயிடுச்சு!) 7- 15 -க்கு ஷோ ஆரம்பம்னு சொன்னாங்க. வசதியாப் போச்சு. 7 மணிக்கு மேலே நடைப்பயிற்சி தவிர வேறே வேலை ஒண்ணும் இருக்காது. "விஜய்" தொலைக்காட்சியில் வர நிகழ்ச்சிகளும் அவ்வளவா சுவாரசியமா இல்லை. சரின்னு 2 பேரும் போனோம். கூட்டம்னு ஒண்ணும் சொல்ல முடியலைன்னு சொன்னாலும் இத்தனை தமிழ்க் காரங்க இருக்காங்களான்னு நேத்துத் தான் தெரிஞ்சது. எத்தனை பாட்டி, தாத்தாக்கள்? "சிவாஜி" பார்க்க? அது தவிரக் குழந்தைகள் தான் அதிகம்.(நான் உள்பட.) எல்லாரும் ஒரு 5 லிட்டர் பக்கெட்டில் பாப்கார்ன், குளிர்பானம், சூடு பானம் சகிதம் வர நாங்க வெறும் கையோடு போய்ப் பேந்தப் பேந்த விழித்தோம். திரை அரங்கில் படம் பார்த்தேப் பல வருஷங்கள் ஆயிடுச்சு. ரஜினி படத்திலேயே நான் பல முறை பார்ப்பது "ஆறு முதல் அறுபது வரை"யும், "எங்கேயோ கேட்ட குரல்"ம் தான். அதுக்கப்புறம் "புவனா ஒரு கேள்விக் குறி" பார்க்க ஆசை, ஆனால் முடியலை. பின்னர் வந்த படங்கள் தொலைக்காட்சியில் போட்டாலும் சரியாக உட்கார்ந்து பார்த்தது இல்லை. "படையப்பா" நான் பார்த்தது இல்லைன்னு சொன்னதும் என்னைக் கேவலமாய்ப் பார்த்த உறவும், நட்பும் உண்டு! :D இப்போ பெருமை அடிச்சுக்கலாம், அமெரிக்கா போய் "சிவாஜி" பார்த்தேன்னு! இனி விமரிசனம்!
*************************************************************************************வழக்கமான சங்கர் பாணிப் படம். "ஜென்டில்மேன்"னில் ஆரம்பித்தாரோ? சரியாத் தெரியலை. அப்போ குஜராத்தில் இருந்தோம். அதுக்குப் பின்னர் வந்த அவர் படங்கள் எல்லாமே நாட்டின் முக்கியமான ஊழல் பத்தித் தான் வருது! "இந்தியன்" (இன்னும் முழுசாப் பார்த்தது இல்லை), முதல்வன், அந்நியன் - அப்படின்னு எல்லாமே. இதுவும் அப்படியே இருந்தாலும் ரஜினிக்காகச் சில மாற்றங்கள் செய்திருக்கிறார்னு நினைக்கிறேன். என்ன, எல்லாம் வழக்கமான "சின்டரெல்லா"க் கதையாக இருந்தாலும், அதில் வரும் விஷயங்கள் ரஜினி ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினீர் என்பதும் அந்த வேலையிலேயே கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார் என்பதும்தான். எனக்குத் தெரிஞ்சு எங்க வீட்டு கம்ப்யூட்டர் எஞ்சினீர் எல்லாம் அவ்வளவு சம்பாதிக்கக் காணோம்! சரி, விடுங்க, போகட்டும், ரஜினிக்காக சமரசம் செய்துக்கணும். அப்புறமாய் பார்த்தால் தமிழ்நாடு பூராவுக்கும் உதவி செய்ய நினைக்கிறார். பணத்தை வைத்துக்கொண்டு. அதுக்கு நிறையத் தடங்கல்கள் வருகின்றன வழக்கம்போல். வில்லன் இருக்கிறார். அரசாங்கம் வழக்கம்போல் வில்லன் பக்கம். கடைசியில் ரஜினி ஜெயிக்கிறார், புதுவிதமாய் வில்லனை ஏமாற்றிவிட்டு.
இதில் நடுவே காதல், ஊடல், சண்டைக் காட்சிகள் உள்ளன. தேவதைக் கதைகளில் வருவது போல் மாயாஜாலக் காட்சிகள் நிறைந்த சண்டைக் காட்சிகளும், காதலனும், காதலியும் பாடும் பாடல் காட்சிகளும் அதிகப் பொருள் செலவில் எடுக்கப் பட்டிருக்கிறது. இதற்கான செலவை யோசிக்கும் அதே வேளையில் இதற்கான வேலையில் எத்தனை தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்திருப்பார்கள், அவர்களுக்கு வாழ்நாள் பூராவுக்குமான பணம் இல்லாவிட்டாலும் ஓரளவு அந்தச் சமயம் வாழ்க்கை நடத்திச் செல்லும்படியான பணமாவது கிடைத்திருக்கும் என்பது ஆறுதலாக இருக்கிறது. வழக்கம்போல் இந்தப் படத்திலும் சாப்பாட்டைப் பற்றிய ஒரு பாடல் காட்சி, முன்னர் ஒரு படத்தில், "உப்புக் கருவாடு, ஊறவச்ச சோறு!" என்ற பாட்டு வரும்.(முதல்வன்?). அதுபோல் இந்தப் படத்திலும், "காவேரித் தண்ணீரும், கைக்குத்தல் அரிசியும்" பாட்டு. கதாநாயகன் எங்கே போனாலும் தாய்நாட்டை மறக்கவில்லை என்பதற்கு அத்தாட்சி. யாரால் முடியும்?
கதநாயகனுக்கு உதவ தேவதைக் கதைகளில் வரும் பாத்திரம் போல் இதில் விவேக். நல்ல காமெடி. படம் பூராவும் அவர் ஆக்கிரமித்துள்ளார். மனம் விட்டுச் சிரிக்க வைக்கும் வசனங்கள். "சுஜாதா" வசனம். பாடல், வாலியில் இருந்து, பழனி பாரதி வரை எழுதி இருக்கிறார்கள். என் வரை பிடிச்சது திருமணத்திற்குப் பின்னர் ரஜினி தன் மனைவியிடம் சிவாஜி, சரோஜா தேவி, எம்.ஜி.ஆர். லதா போலவும், கமல், சில்க் ஸ்மிதா(இந்தப் படமும் பார்க்கிற புண்ணியம் செய்யலை.) போலவும் நடித்துக் காட்டியது தான். பின்னர் கோவிலில் கதாநாயகியை முதல் தடவை பார்த்துவிட்டு வரும் விவேக், ரஜினி, லிவிங்க்ஸ்டன் காமெடி நல்லா இருந்தது. அது போலவே ரஜினி கதாநாயகி வீட்டிற்கு முதன் முதல் போகும்போது கதாநாயகியைத் தனியாக விவேக், ரஜினியோடு நடனம் ஆடவிட்டு விட்டு அவர்கள் அப்பா, அம்மா கதவைப் பூட்டிக் கொண்டு சென்று போலீஸைக் கூப்பிடுவதும், லிவிங்க்ஸ்டன், "லகலகலகலக"வெனச் சொல்லிக் கொண்டே உள்ளே வருவதும் நல்லா எடுத்திருக்காங்க. ஒரு பெண்ணை முன்பின் தெரியாத இரு ஆடவரிடம் தனியாக விட்டுவிட்டு அப்பா, அம்மா வெளியே போயிடுவாங்களா? கொஞ்ச நேரத்துக்குக் கூட என்ற லாஜிக்கையும் மீறிச் சிரிக்க வைக்கிறது.
இப்படிப் படம் பூராவும் சிரிப்புக்குப் பஞ்சம் இல்லை. மணிவண்ணன் ( ஒரு காலத்தில் அருமையான படங்கள் எடுத்திருக்கிறார்.) வடிவுக்கரசி, விவேக், ரஜினி பழகறதுக்காக கதாநாயகி வீட்டுக்கு வந்து கொட்டம் அடிப்பதும், அவங்க வீட்டுக்கு கூப்பிட்டுக் கொட்டம் அடிப்பதும், தீபாவளி அன்று சாலமன் பாப்பையா இவங்களோடு சேர்ந்து அடிக்கும் கூத்தும் நல்லா நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கிறது. தேவையில்லாமல் ஜோசியத்தைக் கொண்டுவந்து திருமணத்திற்கு வில்லன் ஆக்கி இருப்பதும் அதற்கேற்ப ரஜினி செத்துப் போவதும் கொஞ்சம் 2 மச் இல்லை, 3,4,5, மச்சாக இருக்கு. முடிவு பார்த்தவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதனால் சொல்லலை. பாடல் காட்சிகள் நல்லவேளையாகக் கனவாகப் போயிடுச்சு. எல்லாம் ரொம்பச் செலவில் எடுக்கப் பட்டிருக்கு. கிட்டத் தட்ட "ஷாக்" அடிச்சு இறந்து போன ஒருவரை (4 மணி நேரமாவது இருக்கும்) அதற்குப் பின்னர் பிழைக்க வைக்க முடியுமா? அதுவும் "வென்டிலேஷன்" எதுவும் துணை இல்லாமல்? நம்ம டாக்டர் சங்கர் குமாரும், ராமநாதனும் தான் இதுக்குப் பதில் சொல்லணும்.
பின்னணி இசையில் திரை அரங்கு அதிர்கிறது. படம் பார்க்க வந்தவர்களோ ரஜினியின் ஒவ்வொரு செயலுக்கும், சொல்லுக்கும் சிரித்து மகிழ்கிறார்கள். திரை அரங்கில் படங்கள் பார்க்காத காரணத்தால் இதை நேற்றுத் தான் பார்த்தேன். "பச்சைக் கலர் அட்டை, அந்த ஊரு ரேஷன் கார்டு" என்ற மணிவண்ணனின் பேச்சும், காவல் நிலையத்திலேயே கல்யாணம் பேசும் இயல்பும் அவருக்கே கைவந்த ஒன்று. கூடவே ஒத்துப் பாடுவதைத் தவிர வடிவுக்கரசிக்கு வேலை அதிகம் இல்லை. பிரமிட் நடராஜனும் வக்கீலாக ஒரு காட்சியில் வந்து போகிறார். எல்லாரையும் சொல்லிட்டு "சுமன்"பத்திச் சொல்லாட்டி எப்படி? திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த சுமன் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறார் என்று செய்திகளில் படித்திருந்தேன். அலட்டலே இல்லாத அனாயாசமான நடிப்பால் மனதைக் கவருகிறார். சண்டைக் காட்சியில் கிளைமாக்ஸில் அவ்வளவாய் சோபிக்கவில்லை. ரகுவரனுக்கும் கதாநாயகனைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு மட்டும்தான். ஒரு நல்ல நடிகர் வீணாக்கப் பட்டு விட்டார்.
ஸ்ரேயாவின் இளமைக்கு முன்னால் ரஜினி என்னதான் மேக்கப் போட்டிருந்தாலும் பாடல் காட்சிகளில் நன்றாக வித்தியாசம் தெரியத் தான் செய்கிறது. இவருக்கும் அவ்வளவாய் வேலை இல்லை, சிபிஐயிடம் கணினியை ஒப்படைத்துவிட்டு அழுவதைத் தவிர. ரஜினிக்கு மேக்கப் போட்டவர்களுக்கு ஒரு சபாஷ்! ஸ்ரேயாவின் அப்பாவாக நடித்தவர் யாருனு புரியலை. அம்மா உமா பத்மநாபன். சும்மா வந்து போகிறார். வில்லன் "ரஜினியின் பலகீனம் என்ன"னு கேட்டதும், உடனேயே ஸ்ரேயாவுக்கு ஏதோ ஆகப் போகுதுன்னு நினைச்சேன். ஆனால் கதை வேறே மாதிரிக் கொண்டு போயிட்டாங்க! வில்லன் ஸ்ரேயாவை ஒண்ணுமே செய்யலை. கடத்தக் கூட இல்லை. மாறாக ஸ்ரேயாதான் ரஜினியைக் காப்பாத்தறதுக்காகத் தவறு செய்கிறார். வசனங்கள் தெளிவாகப் புரியும் வண்ணம் டப்பிங் செய்யப் பட்டிருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் ம்யூசிக்குனு நினைக்கிறேன். பேர் போடும் சமயம் கூட்டமாய்ச் சிலர் தாமதமாய் வந்து உட்காரப் போனதில் சரியாகப் பார்க்க முடியலை. படம் பார்க்க வந்திருந்த சிறுவர்களும், சிறுமிகளும் நன்றாய் ரசித்தார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லாமே படத்தில் இருக்கிறதே!
மொத்தத்தில் குழந்தைகளுக்கான படம்! நல்லாப் பொழுது போகும்!
ஹிஹி, நானும் குழந்தை தானே! எனக்கும் பொழுது போச்சு!
டிஸ்கி: "துப்பறவங்க, அடிக்கிறவங்க, கல்லெறிகிறவங்க எல்லாருமே இன்னைக்கு இருக்க மாட்டாங்கன்னு தைரியத்தில் தான் எழுதினேன். மெதுவா "லாங் வீக் என்ட்" முடிஞ்சு வந்து சாவகாசமாத் துப்புங்க, கல்லெறிங்க, அடிங்க! கொஞ்சம் பெரிசாப் போச்சோ? சகிச்சுக்குங்க, வழக்கம்போல்.
ஸ்ரேயா அப்பா... ராஜா, பாப்பையா கூட பட்டிமன்றத்துல பேசுறவரு. நம்ம மதுரை தான் அவரும்.
ReplyDeleteச்சும்மா அதிருதுல்ல....
தலைவியின் தலைவர் படம் விமர்சனம்...ச்சும்மா அதிருதுல்ல..;))
ReplyDeleteவாழ்க தலைவி !!
வாழ்க தலைவி !!
வாழ்க தலைவி !!
ம்ம்ம்ம்ம்ம், மனசு, டாக்டரும் சொன்னார் அவர் பட்டிமன்றப் பேச்சாளர் என. நான் அதிகம் பொதிகைப் பட்டிமன்றங்களையே பார்ப்பதால் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பத்தி அவ்வளவா தெரியாது. டாக்டர் அறிவிளி இருந்தாரென்றால் கட்டாயமாய்ப் பார்ப்பேன்.
ReplyDeleteஅது சரி, என்ன ரொம்ப நாளைக்குப் பின் இந்தப் பக்கம், நயன் தாராவுக்காகவே அந்தப் படம் 10 முறை பார்த்தீங்களாமே! :P
@கோபிநாத், திரும்பியாச்சா? சொர்க்கத்தில் இருந்து அதாவது தாய்நாட்டில் இருந்து!
//அந்த வேலையிலேயே கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார் என்பதும்தான். எனக்குத் தெரிஞ்சு எங்க வீட்டு கம்ப்யூட்டர் எஞ்சினீர் எல்லாம் அவ்வளவு சம்பாதிக்கக் காணோம்!//
ReplyDeleteஎனக்கும் படம் பார்க்கும் பொழுது இது தோன்றியது. ஆனாலும் சரி ஒரு வேளை யாராவது அப்படி உண்மையிலேயே வாங்கினாலும் வாங்குவாங்க போலிருக்குன்னு கம்னு இருந்துட்டேன்;-)
//கிட்டத் தட்ட "ஷாக்" அடிச்சு இறந்து போன ஒருவரை (4 மணி நேரமாவது இருக்கும்) அதற்குப் பின்னர் பிழைக்க வைக்க முடியுமா?//
கீதாக்கா, ஒரு 20 நிமிஷம், மிக அதிகபட்சம் 30 நிமிஷம்தான் இதற்கு Allowed என்று நான் விசாரித்த ஒரு டாக்டர் சொன்னார்.
இன்டெர்வெலுக்கப்புறம் இது ஷங்கர் படமல்ல. ரஜினி படமென்பதை கண்டும்கொண்டிருந்தீர்களென்றால் இப்படி கேனத்தனமாகவெல்லாம்(நான் இதே கேள்வியை கேட்டப்போ இப்படிதான் சொன்னார்கள்!!;-))
கேள்வி கேட்க மாட்டீர்கள்.
//ஏ.ஆர். ரகுமான் ம்யூசிக்குனு நினைக்கிறேன்//
இது கூடத் தெரியாமலா படத்துக்கு போனீர்கள்?
//கொஞ்சம் பெரிசாப் போச்சோ? //
ஆமா;-)
//டாக்டர் அறிவிளி //
ReplyDeleteஅது யாரு அறிவி'ளி'?
அறிவொளியை சொல்றீங்களா?
ஹிஹி, அறிவிளின்னு வந்திருக்கா? அது கூடப் பார்க்கத அறிவிலி நான் தான்! :D
ReplyDeleteஅறிவொளியைத் தான் சொன்னேன்.
உங்க முதல் வரவுக்கு ரொம்ப நன்றி யோசிப்பவரே!, இத்தனை நாள் யோசிச்சுட்டு இப்போ ரஜினி பட விமரிசனத்துக்கு யோசிக்காமலே வந்திருக்கீங்க! :)))))))))
பழகறதுக்காக வந்த தமிழ்ச்செல்வி! :D"
ReplyDelete//
பழக வந்தது தமிழ்செல்வி இல்லை தல..
ஒரு மொக்கை படத்துக்கு இம்புட்டு பில்டப்பு
நான் கூட எனது பதிவுக்கு இம்புட்டு பில்டப்பு குடுத்ததில்ல்லை சாமியோவ்
no comments.
ReplyDeleteசும்மாவே அதுருதுல
@கோபிநாத், திரும்பியாச்சா? சொர்க்கத்தில் இருந்து அதாவது தாய்நாட்டில் இருந்து!
ReplyDelete//
சொர்க்கத்தில குண்டு வெடிக்குமா???
இங்க வெடிக்குதே..
//"ஆறு முதல் அறுபது வரை"யும், "எங்கேயோ கேட்ட குரல்"ம் தான். அதுக்கப்புறம் "புவனா ஒரு கேள்விக் குறி" பார்க்க ஆசை, //
ReplyDeleteஇது கூட முள்ளும் மலரும், தில்லுமுல்லு சேர்த்துக்கோங்க....
6 டூ 60 தான் சூப்பர்....
//ஏ.ஆர். ரகுமான் ம்யூசிக்குனு நினைக்கிறேன். //
ReplyDeleteஇது உங்களுக்கே டூ டூ டூ டூ மச்சா தெரியல?
"சிவா"ஜி பாத்தாச்சு... அந்த படம் பாக்காம இருந்து சரித்திரத்தில் ஒரு அவச்சொல் நேர இருந்ததை தவிர்த்து வீட்டீர்கள். சந்தோஷம்...
ReplyDelete//உங்க முதல் வரவுக்கு ரொம்ப நன்றி யோசிப்பவரே!, //
ReplyDeleteமுதல் வரவெல்லாம் இல்லை. அவ்வப்பொழுது பார்ப்பதுண்டு. இடையில் கொஞ்ச காலம் வலைப்பதிவுகள் எதுவும் படிக்க முடியாதபடி அலுவலகத்தில் டெக்னிகல் இம்சைகள். அப்படியே படிக்க முடிந்தாலும், பின்னூட்டமிட முடியவில்லை. அதனால்தான் உங்கள் சமீபத்திய பதிவுகள் எதுவும் படிக்கவில்லை. இன்று அதிகாலைதான் உங்களது பாரதி பற்றிய பதிவுகளெல்லாம் படித்தேன். தெரியாத சில வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன். இது போன்ற பதிவுகளுக்காகவே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!!!;)
ஒரு பெர்ஸன்ல் கமெண்ட் : உங்களுக்கும் எழுத்துப் பிழைகள் நிறையவே வருகின்றன. சரி செய்ய முயன்றால் இன்னும் நன்றாயிருக்கும்.
ReplyDeleteஇதை பிரசுரிக்க வேண்டாம். செய்து விடுங்கள்!!
;)
எழுத்துப் பிழை இப்போ யு.எஸ்.வந்ததும் தான் யோசிப்பவரே! அதனால் என்ன? நீங்க ஒண்ணும் தப்பாச் சொல்லலை. இ-கலப்பை இல்லாமல் நான் படும் கஷ்டம் எனக்குத் தான் தெரியும், ஏதோ இந்த ஜஃப்னா டூல்ஸ் கிடைச்சதோ ஏதோ ஒப்பேத்தறேன்.
ReplyDeleteமின்னல், அதான் "பில்ட்-அப்" கொடுக்காமலேயே ஒரு வரியும் ஒரு மொக்கைப் படமும் போட்டுட்டுப் பின்னூட்டம் வாங்கலை? ரொம்பவே புகை வாசனை வருதே! :P
ReplyDelete@வரும்போதே அதிருதுல்லே, வாங்க, உங்க பதிவுக்கும் விஜயம் செய்யறேன்.
ஹிஹிஹி, சிவா யாருமே நான் சொன்ன அர்த்தத்தைப் புரிஞ்சுக்கலை, அதான் ரஹ்மான் பத்தித் தான். நீங்க ஒருத்தர் தான் சரியாப் புரிஞ்சிட்டீங்க, அது என்ன வழக்கமா ட்யூப் லைட் மாதிரி எரியும், இப்போ சோடியம் வேப்பரா மாறிடுச்சு? :D
//பழகறதுக்காக வந்த தமிழ்ச்செல்வி//
ReplyDeleteகலாச்சாரமுள்ள ஒரு தமிழ்ப்பெண்ணின் புகழைக்கெடுக்கும் இந்தத்தலைப்பை வன்மையாக கண்டிக்கிறேன் :-)
//ரஜினி கதாநாயகி வீட்டிற்கு முதன் முதல் போகும்போது கதாநாயகியைத் தனியாக விவேக், ரஜினியோடு நடனம் ஆடவிட்டு விட்டு அவர்கள் அப்பா, அம்மா கதவைப் பூட்டிக் கொண்டு சென்று போலீஸைக் கூப்பிடுவதும்,லிவிங்க்ஸ்டன், "லகலகலகலக"வெனச் சொல்லிக் கொண்டே உள்ளே வருவதும் நல்லா எடுத்திருக்காங்க. ஒரு பெண்ணை முன்பின் தெரியாத இரு ஆடவரிடம் தனியாக விட்டுவிட்டு அப்பா, அம்மா வெளியே போயிடுவாங்களா? கொஞ்ச நேரத்துக்குக் கூட என்ற லாஜிக்கையும் மீறிச் சிரிக்க வைக்கிறது.//
இந்த 'மெகா மொக்கை'காமடி உங்களைச் சிரிக்க வச்சதா ! என்ன கொடுமை மேடம்.இருந்தாலும் உங்களுக்கு 'குழந்தை மனசு' கொஞ்சம் அதிகம்னு நினைக்கிறேன் :-)
//மொத்தத்தில் குழந்தைகளுக்கான படம்! நல்லாப் பொழுது போகும்!//
நாட்டுக்கு நல்லது சொல்றதுக்காக பல நாடுகளில் ரூம் போட்டு யோசிச்சு படம் எடுத்தா நீங்க இப்படி சாதாரணாமா இன்சல்ட் பண்ணிட்டீங்களே !! ஷங்கர் கேட்டா ரொம்ப வருத்தப்படுவார் :-(
vanthuttu than irukken rombaaa aanmeegama poitathale appadiye vanthu etti parthutu poidurathu.
ReplyDeleteஅட, கதிரவன், சங்கருக்கு நீங்க என்ன தூரத்துச் சொந்தமா? அதான் நீங்களே ஒத்துக்கிட்டீங்களே எனக்குக் குழந்தை மனசுன்னு, அப்புறம் லிவிங்ஸ்டனின் அந்த என்ட்ரி எதிர்பார்த்த ஒன்று என்றாலும் அவர் "லகலகலக" என்று சொல்லிக் கொண்டே வருவது சற்றுச் சிரிப்பாய்த் தான் வருது. படமே சிரிப்பாய்ச் சிரிக்குதே! :)))))))))))
ReplyDelete@அட, வேதா(ள்), பார்த்தீங்களா, சிவாஜி பட விமரிசனம் எட்டிக் கூடப் பார்க்காத உங்களையும் எட்டிப் பார்க்க வச்சுடுச்சே!
@மனசு, என்னோட இந்தப் பதிவை ஆன்மீகம்னு சொன்ன ஒரே ஆள் நீங்க தான், சரியாப் படிக்க வரலையா? இல்லை அரபு நாட்டில் இருப்பதால்/இருந்ததால் தமிழே மறந்து போச்சா? நல்லாத் தான் நொண்டிச் சாக்கு சொல்றீங்க எல்லாரும்! :P
சிவாஜி - வாணி ஸ்ரீ
ReplyDeleteஎம்.ஜி.ஆர் - மஞ்சுளா
//ஹிஹி, நானும் குழந்தை தானே! எனக்கும் பொழுது போச்சு!
ReplyDelete//
ஒரு தடவை சொன்னீங்க..பொருத்துக்கொண்டேன்.. மறுபடியுமா. முடியல மேடம்..முடியல..
நல்ல அலசல்.. சாதாரண வார்த்தைகளால் நன்றாக படத்தை துவைத்து காயப்போட்டிருக்கீங்க..
ReplyDeleteஸ்ரேயாவின் தந்தை பட்டிமன்றம் ராஜா, மேடம்
ReplyDelete//"சிவா"ஜி பாத்தாச்சு... அந்த படம் பாக்காம இருந்து சரித்திரத்தில் ஒரு அவச்சொல் நேர இருந்ததை தவிர்த்து வீட்டீர்கள். சந்தோஷம்...//
ReplyDeleteகரீக்டா சொன்னப்பா மாப்ஸ்
ipdi vayasavananga ellam poye anga ore naraicha thalai kootama irundhudhu! onnu rendu peru than ilasu engalai pola :-) idhe indiala theatrela poi padam pathurupingla? adhu yen inga mattum ithanai periyavanga varranga? cos you have more free time?
ReplyDelete@வேதா, அதான் இன்னிக்கு எட்டிப் பார்த்திருக்கீங்களே!
ReplyDelete@ராஜகோபால், சிவாஜி, எம்.ஜி.ஆர். படத்திலே எல்லாம் நான் ரொம்ப வீக்! :D
@கார்த்திக், எங்கே ஒரு தரம் சொன்னால் நூறு முறை சொன்னாப்பலேன்னு நான் திரும்பித் திரும்பிச் சொன்னாக் கூடக் கேட்காத சிலவங்களுக்காகச் சொல்லி இருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு வந்து கமென்ட் மழை பொழிந்த வள்ளலே நீவிர் நீடூழி வாழ்க!
@போர்க்கொடி, நீங்க சமையலில் ஏமாத்தறாப்போல நாங்க ஒண்ணும் வேலை செய்யாமல் எல்லாம் போய்ப் பார்க்கலை. ஓய்வாக இருக்கும் நேரத்தைத் தான் படம் பார்த்தோம்! :P
ReplyDeleteவிமர்சனம் அருமை! அதுக்கான பிடப்பு அருமையோ அருமை!நான் 6 தடவ பார்தேன் அது பத்தி ஒரு பதிவே போடலாம்! 1 தடவை கூட முழுசா பார்க்கலை!
ReplyDeleteம்ம்ம்ம், என்னத்தைச் சொல்றது அபி அப்பா? இந்த "இந்தியன்" படமும் இப்படித் தான், பலமுறை பார்த்தேன், துண்டு துண்டாக. இன்னும் முழுசாப் பார்க்கலை! :))))))))))))
ReplyDelete