சில தேதிகளின் நிச்சயத்துக்கு கூகிளைத் தோண்டியபோது விக்கிபீடியாவில் இந்தப் புரட்சியைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் இவை. சுருக்கமாய்த் தருகிறேன்.
இங்கிலாந்துப் பிரதமரிடம் இருந்து உத்தரவு பிறந்ததும் அட்மிரல் காட்ஃப்ரே என்பவர் ஃப்ளாக் ஆஃபீஸர், கமான்டிங் தி ராயல் நேவியின் தலைமையில் உத்தரவுகள் பறந்தன மாலுமிகளுக்குச் சரணடையும்படி. ஆனால் அதற்குள் புரட்சி மக்களின் கவனத்தையும் அனுதாபத்தையும் பெற்று நாடு தழுவிய போராட்டமாக மாற ஆரம்பித்துவிட்டது. குழப்பமான் சூழ்நிலை நாடு முழுதும் உருவாக புரட்சிக்காரர்களை அடக்கத் தெரியாத இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசு புரட்சி வீரர்களைப் பயமுறுத்தி அடக்க நினைத்தது. வதந்தியை உருவாக்கியது. கனடா, ஆஸ்ட்ரேலியா, சிலோன், போன்ற இடங்களில் இருந்த படை கப்பல்களிலும், விமானத்திலும் கிளம்பி புரட்சியை ஒடுக்க வருவதாய் வதந்தி கிளப்பி விடப் பட்டது. புரட்சி ஆரம்பித்த மூன்றாவது நாள் நிபந்தனை அற்ற சரண் அடையும்படி புரட்சிக் காரர்கள் வற்புறுத்தப் பட்டார்கள். முதலில் அவர்கள் நிபந்தனை ஏற்றுக் கொள்வதாய்ச் சொல்லி வந்த அரசு இப்படித் திடீரென மாறி விட்டது.
காங்கிரஸ் மேலிடத்தில் இருந்தோ அல்லது ஜின்னாவிடம் இருந்தோ ஆதரவு கிட்டவில்லை. இதற்குள் கராச்சித் துறைமுகத்துக்குப் பக்கத்தில் இருந்த "மனோரா" தீவில் இருந்த "ஹிந்துஸ்தான் என்ற கப்பலைப் புரட்சிக்காரர்கள் பிடித்து வைத்திருந்தனர். கப்பலுடன் அவர்களைப் பிடிக்க ப்ளாக் வாட்சின் வீரர்கள் அனுப்பப்பட்டனர் மிக ரகசியமாய். வீரர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டப் பட்டனர். புரட்சிக்காரர்கள் மெளனம்சாதித்தனர். அடங்கவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை. துப்பாக்கிச் சூடு ஆரம்பித்தது ஆங்கில அரசின் படை. தற்காப்புக்காகப் போர் நடத்தினர் புரட்சிக் காரர்கள் மிக கவனத்துடன். ஆகவே எதிர்த் தரப்பில் சேதம் இல்லை. ஆனால் புரட்சிக் காரர்கள் தரப்பிலோ சேதம் ஏராளம். புரட்சிக்காரர்களின் மென்மையான அணுகுமுறையைச் சாதகாமாய்ப் பயன்படுத்திக் கொண்டது ஆங்கில அரசு. பெரும்பாலான காயமடைந்த வீரர்கள் இளைஞர்கள். சிலர் மிகக் குறைந்த பருவ வயது இளைஞர்கள். கப்பலில் வெள்ளைக் கொடி கட்டாயமாய்ப் பறக்கவிடப் பட்டது. மற்றக் கப்பல்கள்? நாளை பார்ப்போம்.
கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteதி.ஜானகிராமன் எழுதிய "உயிர்த்தீ" பற்றிய விமரிசனமோன்னு நினைத்தேன். நீங்க கவிதைன்னு சொன்னாலும், இதை உரைநடைக் கவிதைனே சொல்லலாம்னு நினைக்கிறேன்.
இதன் விபரம் தர முடியுமா?
e. mail id
nalayiny@hotmail.com
பிறகு?.....
ReplyDeleteche! kesari just missu! :)
வரலாறுனு சொன்னா எனக்கு தூக்கம் வரும் அதனால அடிக்கடி வரமுடியல..:)
ReplyDelete@minnal, அதாவது, பாட்டி தூக்கம் வர மாதிரி வரலாறு எழுதறாங்கனு சொல்ல வறீங்க, அதானே! :p
ReplyDeleteambi, ethanai naal kesari keppinga?? oru changeku badaam paal kelunga ;)
ReplyDelete@அம்பி, விளக்கெண்ணெய்க் கேசரிக்கே இவ்வளவு பறக்கணுமா?
ReplyDelete@போர்க்கொடி, உங்க அண்ணனுக்கு ஒண்ணுமே தெரியாதா? சொல்லிக்கொடுக்கவே வேணாமே, ஓ.சி.சாப்பாட்டுக்கு இரண்டு பேருக்கும்! :P