முதலில் "நாகை சிவா" நம் ராணுவம் ஆங்கிலேயர் வசம் இருந்தபோது அந்தச் சிப்பாய்கள் ஆங்கிலேயருக்காக உழைத்தார்கள் என்று சொல்வதை நான் வன்மையாக, (நிஜமான வன்மையுடன்) கண்டிக்கிறேன். ஏனெனில் ஆங்கிலேயர் நம் நாட்டை ஆள வந்தபோது முதலில் அவர்கள் தான் படை வீரர்களையும் கொண்டு வந்தனர். ஆங்கிலேயச் சிப்பாய்கள்தான் முதலில் இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை ஆக்கிரமித்த அவர்கள், நம் நாட்டு அரசர்களிடம் இருந்த உண்மையான படை வீரர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த அந்த அரசுக்குத் தனி திவானும், படையும் இருப்பதாய்ப் பேர். ஆனால் மேலதிகாரிகளாய் ஆங்கிலேயர் ஒருவர் இருப்பார். அரசர் பேருக்குத் தான்,. வெளியே தெரியாது. சிப்பாய்கள் தங்கள் அரசரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நாட்டுக்கு உழைப்பதாயும், அவசர காலங்களில் ஆங்கிலேயருக்கு உதவி செய்வதாயும் பேர். ஆனால் அதிகாரிகளாய் இந்தியர்களும் இருந்தனர். சிப்பாய்கள் என்ன செய்ய முடியும்? எந்த அரசரின் கீழ் அவர்கள் வீரர்களாய் இருந்தனரோ அந்த அரசரே அவர்களை இவ்விதம் கட்டளை இட்டு ஆங்கிலேய அரசின் கீழ் உழைக்கும்படி சொன்னதுக்கு வீரர்கள் எவ்விதத்தில் பொறுப்பு? பொதுவாய்ப் படை வீரர்கள் தங்கள் மேலதிகாரிகளின் கட்டளையை மட்டும் ஏற்றுச் செயல்படும்படி அவர்களைத் தயார்படுத்தி வைப்பது உண்டு. கட்டளைக்குக் கீழ்ப்படிதல் ஒன்றே அவர்களின் முக்கிய வேலையாக இருக்கும். ராணுவத்திடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு இது புரியும். அப்படி இருக்கையில் அவர்கள் தங்கள் மேலதிகாரிகளின் கட்டளையைத் தான் ஏற்க முடியும். இதில் அவர்கள் தவறு ஏதும் இல்லை. அப்படியும் சிலர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராய்ச் செயல்பட மறுத்தவர்களும் உண்டு. ஆயுதத்தைத் திருப்பியவர்களும் உண்டு. சிவா சொல்வது எல்லாம் சும்மா ஏதேனும் சொல்லவேண்டுமே என்பதற்குத் தான். உண்மையில் அவர்கள் தங்கள் நாட்டிடம் தேசபக்தியுடன் இருந்து வந்ததே ஆங்கிலேய அதிகாரிகள் விரும்பவில்லை. இப்படி ஆரம்பித்தது தான் இவ்வாறு ஒரு போராட்டமாய் வெடிக்க நேர்ந்தது. சிவா நினைத்தாற்போல் காந்தியும் நினைத்த காரணத்தால் தான் அவர் இதை ஆதரிக்க வில்லை! :P
ஆங்கிலேய அரசு எத்தனை முயன்றாலும் அவர்களால் இந்திய தேசீய ராணுவம் அடைந்த வெற்றிகளையோ, போஸின் சாகஸங்களையோ, இம்பால், பர்மா, அந்தமான் தீவுகள் ஆகியவற்றை முற்றுகை இட்டு இந்திய தேசீய ராணுவம் பிடித்து முன்னேறியதையோ மறைக்க முடியவில்லை. அவர்களால் முடிந்தது ஜப்பான் போஸுக்கு உதவி செய்வது அறிந்து ஜப்பானை மிரட்டிப் பணிய வைத்ததும், ஜப்பானின் உதவி போஸுக்குக் கிடைக்காமல் செய்ததும் தான். வட கிழக்கு இந்தியாவில் மழைக்காலம் வேறே ஆரம்பித்த காரணத்தால் அவ்வளவு மழையை வீரர்களால் சரியான பாதுகாப்பின்றி எதிர்கொள்ள முடியவில்லை. இந்த விஷயங்களும், போஸின் திடீர் மறைவும் வீரர்களைக் கிளர்ச்சியுறச் செய்து இருந்தது. அவர்கள் நினைத்தது:போஸ் எங்கேயோ மறைந்திருக்கிறார். நாம் கிளர்ச்சியை ஆரம்பித்தால் அவருடன் சேர்ந்து கொள்ளலாம். :என்பது தான்.
ஆகவே வீரர்கள் திரு எம்.எஸ்.கான் என்பவர் தலைமையில் முதலில் "ராயல் நேவி"யில் கிளர்ச்சி ஆரம்பித்ததனர். எல்லா வீரர்களும் ஒன்று சேர்ந்தனர். அதில் காங்கிரஸை ஆதரித்தவர்களும் இருந்தனர். முஸ்லீம் லீகை ஆதரித்தவரும் இருந்தனர். கம்யூனிஸ்டை ஆதரித்தவரும் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியோ வெளிப்படையாகவே கிளர்ச்சியை ஆதரித்தது. பல மாலுமிகள், கப்பல் பணியாளர்கள், கப்பலில் போரிடும் வீரர்கள், சமையல்காரர்கள் என்று அனைவரும் ஒன்றுபட்டனர். அந்தச் சமயம் "ராயல் நேவி"க்குச் சொந்தமாய் 78 கப்பல்கள், 20 கரை சார்ந்த நிறுவனங்கள் இருந்தனர். மொத்தமாய் 20,000 மாலுமிகள் இருந்திருக்கலாம் என்று சொல்லப் படுகிறது.
மேலும் அப்போது இந்திய தேசீய ராணுவத்துக்காக உழைத்தவர்கள் பலரும் போர்க்கைதிகள். அனைவரும் ஜெர்மனியாலும், ஜப்பானாலும் சிறைப்பிடிக்கப் பட்டவர்கள். போஸின் வேண்டுகோளால் விடுவிக்கப் பட்டு, போஸ் ராணுவம் திரட்டிய சமயம் இந்தப் போர்க்கைதிகள் தங்களின் தேசபக்தியை வெளிக்காட்டவும், ஆங்கிலேய அரசுக்கு எதிராகவும் போஸின் ராணுவத்தில் சேர்ந்து நாட்டு விடுதலைக்குப் போராடியவர்கள். அவர்கள் துரோகம் செய்தார்கள் எனச் சொல்லி ஆங்கிலேய அரசு அவர்களை போஸின் மறைவுக்கு முன்னரும், பின்னரும் கைது செய்து வந்தது. அவர்களை விடுதலை செய்யச் சொல்லிக் கோஷம் எழுப்பிக் கொண்டும், போஸின் உருவப் படத்தைக் கையில் ஏந்திக் கொண்டும் அனைவரும் கராச்சி துறைமுகத்தில் இருந்து பம்பாய் நோக்கிப் புறப்பட்டனர். ஆங்கிலேய அரசுக்குக் கட்டுப் பட்ட இந்திய அதிகாரிகளால் முதலில் அவர்களைத் தடுக்கச் சொல்லி உத்தரவு வந்தது. அதிகாரிகளால் அடக்க முடியவில்லை,. சில அதிகாரிகள் மனம் மாறிப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்குள் விஷயம் வெளியே பரவி கொச்சி, விசாகப்பட்டினம், சென்னை, கல்கத்தா போன்ற துறைமுகங்களில் இருந்தவரும் ஆதரவுக் குரல் எழுப்பினர். கப்பல்களில் மூன்றுவிதமான கொடிகள் ஏற்றப் பட்டன. ஒன்று காங்கிரஸின் மூவர்ணக் கொடி, 2-வது முஸ்லீம் லீகின் பச்சைக் கொடி, மூன்றாவது கம்யூனிஸ்டின் செங்கொடி. பிரிட்டிஷ் யூனியனின் "யூனியன் ஜாக்" கொடி கீழே இறக்கப் பட்டது. அதிர்ந்தனர் ஆங்கிலேயர். காங்கிரஸ் மேலிடத்துக்குத் தகவல் போனது. பம்பாயிலோ? என்ன நடந்தது? நாளை பார்க்கலாம்.
எவ்ளோ அழகா எழுதறீங்க. ரொம்ப நல்லா இருக்கு. :)
ReplyDeleteஇதுக்கு தான் அந்த காலத்துல இருந்து இந்த விஷயங்களை எல்லாம் நேர்ல பார்த்த உங்கள மாதிரி ஒருத்தர் நம்ம கூட இருக்கனும்னு சொல்றது. :p
சிப்பாய் கலகம் பற்றி இதுவரை எனக்கு தெரியாத பல விஷயங்களை உங்கள் வலை மூலம் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி. இன்னிக்காவது நான் firstஆ?
ReplyDelete//இன்னிக்காவது நான் firstஆ?
ReplyDelete//
@manipayal, ha haaaa today U r second. enakku thaan kesari. :)
@geetha paati, munthiri paruppa pon nirama neyyil varuthu kesariyil podavum. :)
@மணிப்பயல், இன்னிக்கு அம்பி தான் முதலிலே. விளெக்கெண்ணய்க் கேசரி அவருக்கே போகட்டும் விட்டுடுங்க, பாவம். ஆமணக்குக் கொட்டையும் வறுத்துப் போட்டு வச்சிருக்கேன், அம்பிக்காக ஸ்பெஷலாய். நீங்க முதலில் வர அன்னிக்கு நல்ல சுத்தமான உருக்கிய நெய்யில் கேசரி செய்துடுவோம். இது எதுக்கு உங்களுக்கு? இது அம்பி ஸ்பெஷல்!
ReplyDelete@ஆப்பு, கொடுத்தது போதலை, இப்போ தங்கமணி கொடுக்கிற பூரிக்கட்டையும் போதலையா? ஆமாம், நீங்க விடுதலைப் போராட்டத்தை நேரிலே பார்த்ததை எனக்குச் சொன்னதைத் தானே நான் எழுதி இருக்கேன். கட்டாயம் பாராட்டிக்க வேண்டியது தான். :P
Good to know lot of things.
ReplyDeleteIts really interesting that you and ambi are getting along each other .....great!
hot cat! YOU TOO BRUTUS? GRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR
ReplyDelete@அம்பி, உங்க குடுமி என் கையிலே! நினைப்பு இருக்கட்டும்.
ReplyDeleteவிறுவிறுப்பு கூடுகிறது தொடர்கிறேன்...
ReplyDeleteநிதானமாய்ப் படிங்க கில்லர்ஜி!
Delete