முதல்முறையாகவும், ஒருவேளை கடைசிமுறையாகவுமோ தெரியவில்லை, மூன்று கொடிகளும் சேர்ந்து பறந்ததோடல்லாமல் மூன்று கட்சித் தலைவர்களின் ஆதரவையும் சிப்பாய்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். பம்பாயில் வி.டி. ஸ்டேஷனுக்கு அருகே இருந்த அப்போதைய ஹார்ன்பை ரோடு ஸ்தம்பித்தது. தற்சமயம் அது டி.என்.ரோடு(சி.எஸ்.டி.) அழைக்கப் படுகிறது. அப்போது பழக்கத்தில் இருந்த கம்பியில்லாத் தந்தி முறையில் அனைத்துக் கப்பல்கள், மற்றும் புனே நகரில் இருந்த தரைப்படைத் தலைமை, சென்னைத் துறைமுகம், மற்றும் சென்னையில் இருந்த ராணுவம், கல்கத்தத் துறைமுகம், ராணுவம் போன்றவற்றின் முக்கியமானவர்களுக்குத் தகவல்கள் பறந்தன. அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற ஆரம்பித்தனர். பிரிட்டிஷ் அரசு விழித்துக் கொண்டது.
உள்ளூர் போலீஸின் உதவியையும் நாடமுடியவில்லை. உள்ளூர் போலீஸும் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து வீரர்களைக் கைது செய்ய மறுத்தது. வழியோடு போன ஆங்கிலேய மக்களும், அவர்களின் குடும்பங்களும் வண்டியில் இருந்து இறக்கி விடப்பட்டனர். தபால்கள் போகும் வண்டிகள் கூட நிறுத்தப்பட்டுக் கிட்டத் தட்ட 2 மணி நெரத்துக்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. ஆங்கிலேய அரசு முக்கியமான இடங்களில் ஆயுதப் படை வீரர்களைப் பாதுகாப்புக்கு நியமித்தனர். அப்போது இருந்த "கோர்க்கா ரெஜிமென்ட்" வீரர்களைப் புரட்சிக்காரர்களைச் சுட உத்தரவு பிறப்பித்தும் அவர்கள் சுட மறுத்தனர். சிப்பாய்களின் முக்கியமான கோஷம், "இந்திய தேசீய ராணுவ வீரர்களை விடுதலை செய்! ஜெய்ஹிந்த்! பம்பாய் நமதே! இந்தியா நமதே!" என்பது தான். அவர்கள் உணவு, உடையில் ஏற்றத் தாழ்வு என்பது எல்லாம் ஒரு சாக்கு என்றும் உண்மையான எதிர்பார்ப்பு என்ன என்பதும் அவர்களுக்கு இதுதான் என்பதும் புரிய ஆரம்பித்தது அரசுக்கு. அவமானம் ஏற்பட்டு விட்டதாய்க் கருதினார் அப்போதைய வைஸ்ராய் அவர்கள். லண்டனில் உள்ளவர்களுடன் கலந்து ஆலோசித்தார். 18-ம் தேதி ஆரம்பித்த புரட்சியில் 19-ம் தேதி பெப்ரவரி மாதம் கொடி ஏற்றப்பட்டது. 20-ம் தேதி அன்று அப்போதைய பிரதமர் ஆன "க்ளமென்ட் அட்லி" ஆங்கிலேய அதிகாரிகளுக்கு "ராயல் நேவி"யின் புரட்சியை ஒடுக்க ஆணை இட்டார். பிறகு?
ஆகா அருமை, ஒரு நல்ல டாக்குமெண்டரி படம் பார்த்த உணர்வு. அதேபோல் முடிக்கும் இடங்களில் சீரியல் டைரக்டர்களையும் மிஞ்சிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteபிறகு? பிறகு? பிறகு?
ReplyDeletequick, quick...
paati kadhai sollum azhage azhagu! :p
so today manipayaluku thaan velakennai kesari. ha haaa :)
ReplyDeleteஇதோ வந்துட்டேட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ன்ன். கேசரி வாசனை தூக்குது போங்க.உடம்புல சர்க்கரை already extraவா இருக்கறதாலே 1 spoon சாப்பிட்டுட்டு பாக்கிய அம்பிக்கே குடுத்துடறேன்.
ReplyDeleteகுடுக்கறதுல இருக்கற சுகமே தனிதாங்க
@அம்பி, இன்னிக்கு நல்ல நெய் விட்டுக் கேசரி மணிப்பயலுக்கு மட்டும் தான். மிச்சத்தை வேறே யாருக்காவது கொடுத்துக்கறேன். உங்களுக்கு நேத்திக்குச் செய்த விளக்கெண்ணெய்க் கேசரியே இன்னும் மிச்சம் இருக்கு, அது போதும்! :P
ReplyDelete@மணிப்பயல், கடவுள் புண்ணியத்திலே எங்களுக்கு ஷுகர் எல்லாம் ஒண்ணும் இல்லை. மிச்ச வியாதியைப் பத்தி அப்புறமா டிஸ்கஸ் செய்வோம். இப்போ கேசரி உங்களுக்கு ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து வச்சுட்டு மிச்சத்தைப் பத்திரப் படுத்திட்டேன்.
@ஆப்பு, இது எப்ப்ப்ப்ப்ப்ப்ப்பபபபபபபடிடிடீஈஈஈஇ இருக்கு? :P
என் ப்ளாகிலே நுழைய எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் கமென்ட் இது! :P இது ப்ளாக்கருக்கு!
ReplyDeleteதொடர்கிறேன்.... ஆவலுடன்...
ReplyDeleteவாருங்கள் கில்லர்ஜி, மெதுவாய்ப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Delete