தமிழ்த்தாத்தா உ.வே.ஸ்வாமிநாத ஐயரின் காலத்தவர் பாரதியார் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். சுப்பிரமணிய பாரதியை தாத்தா மதித்தாலும் அவரை ஒரு கவிஞர் என்று ஒப்புக் கொண்டதில்லை எனவும், தமிழ்ப் பண்டிதன் என்பதாக மட்டும் சொன்னதாகவும் திரு பாஸ்கரத் தொண்டைமானும், அவர் தம்பி திரு சிதம்பர ரகுநாதனும் கூறுவார்கள். அது பத்திப் பின்னர் பார்க்கலாம். இப்போது பாரதியார் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு எழுத நேர்ந்த சந்தர்ப்பம் பத்தி தமிழ்த் தாத்தா தனக்குத் தெரிந்ததைக் கூறுகிறார். இந்தச் சம்பவம் நடந்தபோது பாரதியும் சென்னையில் இருந்திருக்கிறார். இது பற்றிக் கலைமகளில் தான் எழுதியதாகத் தாத்தா குறிப்பிடுகிறார். அவரின் நினைவு மஞ்சரி முதல் பாகம் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்:
*************************************************************************************
பெரிய உத்தியோகத்தில் இருந்தால் ஆங்கில நூல்களைப் படிப்பது, ஆங்கிலம் கற்றவர்களை வியப்பது, ஆங்கில நூல்களில் உள்ள கருத்து எந்தப் பாஷையிலும் இல்லையென்று சொல்வது முதலியவற்றைப் பெர்ய்மையாகக் கொள்பவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. ஆனால் இப்போது அத்தகையவர்களது தொகை குறைந்து வருகிறது. கிருஷ்ணசாமி ஐயர் காலத்தில் ஆங்கில மோகம் உச்ச நிலையை அடைந்திருந்தது. (கிருஷ்ணசாமி ஐயரவர்கள் ஒரு வக்கீலாகத் தொழில் செய்து வந்ததோடு அல்லாமல் அப்போதைய ஆங்கிலேய கவர்னரின் நிர்வாக சபை அங்கத்தினராகவும் பதவி வகித்தவர்.) ஆங்கில அறிவிலும், வடமொழியிலும் சிறந்தவர். என்றாலும் தமிழினிடத்தைல் அவருக்கு இருந்து வந்த அபிமானத்தை நான் அனுபவத்தில் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.
"எந்தப் பாஷையாக இருந்தால் என்ன? மனத்தில் படியும்படியான நல்ல விஷயம் எங்கே இருக்கிறதோ அதைத் தேடி அறிந்து கொள்ளவேண்டும்." என்பது கிருஷ்ணசாமி ஐயரவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஒருநாள் சென்னை ராசதானிக் கலாசாலைத் தமிழ் மாணவர் சங்கக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். காலஞ்சென்ற "திரு ஜி.ஏ. வைதியநாத ஐயர்" அன்று "தமிழின் பெருமை" என்னும் விஷயத்தைப் பற்றிப் பேசினார். சிருஷ்ணசாமி ஐயர் தலைமை வகிப்பது அறிந்து பலர் அன்று கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாரும் வந்திருந்தனர். கிருஷ்ணசாமி ஐயர் என்ன பேசுவாரோ என்று யாவரும் ஆவலோடு எதிர் நோக்கி இருந்தனர். சிலர் "இவர் தமிழைப் பற்றி என்ன பேசுவார்? சம்ஸ்கிருதம் பற்றி வேண்டுமானால் பேசக் கூடும்" என்று நினைத்தார்கள். கிருஷ்ணசாமி ஐயர் பேச ஆரம்பித்தார்.
"தமிழில் எத்தனை நூல்கள் இருக்கின்றன! வள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை இது! கம்பன் ராமாயணம் இயற்றியது இந்தப் பாஷையில் தான்! நாயன்மார் தேவாரம் பாடிய பாஷை இது! மாணிக்கவாசகர் திருவாசகம் அருளியதும் இந்தப் பாஷையில் தான்! ஆழ்வார்கள் திவ்யப் பிரபந்தம் பாடியதும் இந்தப் பாஷையில் தான். இந்தப் பாஷையின் பெருமைக்கு அளவே இல்லை." என்று தொடங்கிப் பேசிக் கொண்டே போனார். யாவரும் பிரமித்தனர். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் அன்று அந்தப் பிரசங்கத்தைக் கேட்டுக் குதூகலத்தை அடைந்தார். அந்தப் பேச்சு அவர் உள்ளத்திலே ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது. அதிலிருந்து ஒரு பாட்டுக்குரிய பொருளைக் கிரகித்துக் கொண்டார். தமிழ் நாட்டைப் பற்றி அந்த முறையிலே பாடவேண்டுமென்று அவருக்கு அன்று ஒரு கருத்து உண்டாயிற்றென்று தோன்றுகின்றது.
ஏதோ பாதியில் நின்னுடுச்சோ? தாத்தாவும், பாரதியும் என்ன பேசினாங்க?
ReplyDeleteஅந்த கூட்டத்துக்கு நீங்களும் போயிருந்தீங்களா? :p
ReplyDeleteநேர்ல பார்த்தா தான் இப்படி ஜோரா எழுத முடியும், அதான் கேட்டேன்.
(எந்த உள்குத்தும் இல்லை) :)
இன்னும் முடியலை லட்சுமி! நேத்திக்குப் பூராவும் எழுத முடியலை.
ReplyDeleteமன்னிக்கணும் காட்டாறு! பேரை மாத்திட்டேன்! :D
ReplyDelete//பேரை மாத்திட்டேன்!//
ReplyDelete@Geetha madam, பேரை மட்டும் தானா? :p
நன்றி கீதாம்மா.
ReplyDeleteவந்துட்டேன். இனி படித்துவிட்டு வருகிறேன்..
ReplyDeleteஆகா நேதாஜி முடிந்து மீண்டும் பாரதியா..?
நிறைய பதிவுகள் இருக்கும்..படிக்கணும்..