எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Wednesday, October 31, 2007
நான் அவளில்லை!
இந்த மாசம் மங்கையர் மலரின் முதல் புத்தகத்தில் 104-ம் பக்கத்தில் ஒரு செய்தித் துணுக்கும், கீழே எழுதியவர் பெயர் என "கீதா சாம்பசிவம், சென்னை -97" அப்படினு போட்டிருக்கு, நான் அவள் இல்லை, அவள் இல்லை, அவள் இல்லை, அவள் இல்லவே இல்லை! அது எழுதினது நான் இல்லை, என் நேரம், அவங்களுக்கு ஒரு இலவச விளம்பரம் கொடுத்துட்டு இருக்கேன் அவ்வளவு தான், மற்றபடி அதைப் பார்த்துட்டு ஏற்கெனவே ஷைலஜா கேட்டுட்டாங்க, நீங்களான்னு, நாம எழுதினது தான் என்றால் ஒரு கிறுக்குத் தனமான முத்திரை கட்டாயம் வைப்போமே, அது இல்லை, அதிலே, அதனாலே சிஷ்ய கோடிகள் ஏமாற வேணாம்னு கேட்டுக்கிறேன். நான் தான் உங்க ஒரே தனிப்பெரும் தலைவி, வேறே யாராவது என் பேரிலே வந்தால் ஏமாந்துடாதீங்க! என்னைப் பார்த்த சாட்சிகளான திரு திராச, திரு பாலராஜன்கீதா, திருமதி கீதா, திரு கண்ணபிரான்,முதல்லே பார்த்ததாய்ப் பெருமை அடிச்சுட்டு இருக்கும் அம்பி, பல முறை பார்த்தும் அடக்கத்தின் அவதாரமான வேதா(ள்), சூடான் புலி இத்தனை பேரு இருக்காங்க! அதனாலே பயமில்லைனாலும் நல்லா வச்சாங்கப்பா ஒர் ஆப்பு எனக்கு! யார் வேலை இதுனு தெரியலையே? ம்ம்ம்ம்ம்ம்., ரொம்ப பயமா இருக்கே! :P :P :P
Subscribe to:
Post Comments (Atom)
// அதனாலே சிஷ்ய கோடிகள் ஏமாற வேணாம்னு கேட்டுக்கிறேன//
ReplyDeleteகுருவோட எழுத்து எங்களுக்கு தெரியாதா..?... நாங்க தா சிஷ்ய "கேடி"களாச்சே...ஹிஹி..
// நான் தான் உங்க ஒரே தனிப்பெரும் தலைவி, வேறே யாராவது என் பேரிலே வந்தால் ஏமாந்துடாதீங்க!//
ReplyDeleteகீதா அக்கா புது கட்சி ஆரம்பிக்கும் உத்தேசம் ஏதாவது இருக்குதா?...ஹா..ஹா..
// பல முறை பார்த்தும் அடக்கத்தின் அவதாரமான வேதா(ள்)//
ReplyDeleteநெசமாலுமா?....( எது நெசமா?..பலமுறை பார்த்ததா? இல்லை அடக்கத்தின் அவதாரமா? ன்னெல்லாம் கேக்கப்டாது.).
// மற்றபடி அதைப் பார்த்துட்டு ஏற்கெனவே ஷைலஜா கேட்டுட்டாங்க, நீங்களான்னு //
ReplyDeleteஆமான்னு சொல்லியிருந்தாக்கா உண்மையிலேயே எழுதனவங்க சண்டைக்கு வரும்போது "நானில்லைன்னு" ஃபுருப் கெடச்சியிருக்குமில்ல...
ஹலோ தனித் தலைவி ,
ReplyDeleteஆஹா, உங்களுக்கு இப்படில்லாம் வேற ஆப்படிக்கலாமா? தெரியாம போச்சே.. இன்னும் டைம் இருக்குல்ல. ஹி ஹி ஹி ஹி ...
நல்ல பதிவு
ReplyDeleteஅந்த ஹீரோயின் டயலாக் சூப்பர். ஆனா பாதிலயே சாகடிச்சிடறீங்களே, ஏன்??
:))
ReplyDelete\\அதனாலே சிஷ்ய கோடிகள் ஏமாற வேணாம்னு கேட்டுக்கிறேன்.\\
ReplyDeleteஎங்க தலைவியை பற்றி எங்களுக்கு தெரியாதா என்ன!? :))
என்னைப் பார்த்த சாட்சிகளான திரு திராச, திரு பாலராஜன்கீதா, திருமதி கீதா, திரு கண்ணபிரான்,முதல்லே பார்த்ததாய்ப் பெருமை அடிச்சுட்டு இருக்கும் அம்பி,
ReplyDeleteஎனக்கு என்னவோ பாங்களுர்பக்கம்தான் சந்தேகம் வருது
ரசிகரே, ஹிஹிஹி, உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு நன்னி, நன்னி, நன்னி! :P
ReplyDeleteபுதுக்கட்சியா, ஏற்கெனவே கட்சி ஆரம்பிச்சு நடந்துட்டு இருக்கு? என்ன சிஷ்யன், தொண்டன் நீங்க? போய் நல்லாப் படிச்சுப் பார்த்துட்டுத் திரும்ப வந்து கட்சியில் உங்களை இணைச்சுட்டு ஜோதியில் ஐக்கியம் ஆகுங்க! :P
ரசிகரே, வேதா(ள்) பத்தி நான் எழுதினது உண்மை, உண்மை, உண்மை! அம்பி ஒரே அலட்டல், என்னமோ அவர் தான் என்னைப் பார்த்தாப்பலே பீத்தல்! :P
ReplyDeleteசுமதீஈஈஈஈஈஈஈஈஈஈ, தனித் தலைவியா, தனிபெரும் தலைவியா? போகட்டும், முதல் முறைங்கிறதாலே , அதுவும் தலைவினு ஏத்துக்கிட்டதாலேயும் தாயுள்ளத்தோட மன்னிச்சு விடறேன், ம்ம்ம்ம், நீங்க சொல்றதைப் பார்த்தால் நானே சொ.செ.சூ. வச்சுக்கிட்டேனோ? சந்தேகமா இருக்கே? :)))))))
ReplyDelete@மங்களூர், என்ன இதிலே உ.கு. புரியலை, நிதானமா வந்து பார்க்கிறேன்,
@புலி, என்ன கிண்டலா இருக்கு போலிருக்கு? இருக்கட்டும், பார்த்துக்கிறேன்! :P
ReplyDelete@கோபிநாத், நீங்கதான் உண்மைத் தொண்டர்னு நிரூபிச்சுட்டே இருக்கீங்க, புல்லரிக்குது போங்க, கொஞ்சம் சொறிஞ்சுட்டே வரேனே! :))))))))
திராச. சார், முதல் முறையா அம்பிக்கு எதிராப் பேசி இருக்கீங்களே, அது!!!!!!!! ரொம்ப நன்றி சார்,:P
ReplyDelete//
ReplyDelete@மங்களூர், என்ன இதிலே உ.கு. புரியலை, நிதானமா வந்து பார்க்கிறேன்,
//
மெட்ராஸ்ல மழை பெஞ்சா ரோடுல தண்ணி நிக்குதுன்னு ஒரு பதிவு எழுதியிருக்கீங்களே சூப்பர், அதோட விமர்சனம்தான் அது.
எனக்கு தெரிஞ்சு 1995 - 1996 லயே 15 நிமிசம் மழை பெஞ்சா தி.நகர் போக் ரோட்ல முழங்கால் அளவு தண்ணி நிக்கும்.
நல்ல வேளை அன்கிருந்து கிளம்பி 7 - 8 வருசம் ஆச்சு. ஆனாலும் அப்பப்ப வரவேண்டியிருக்கு :-(
//அதனாலே பயமில்லைனாலும் நல்லா வச்சாங்கப்பா ஒர் ஆப்பு எனக்கு! யார் வேலை இதுனு தெரியலையே?//
ReplyDeleteஹஹா, கேக்கவே காதுல தேன் பாஞ்ச மாதிரி இருக்கு. :p
இதற்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இங்கு நான் சொல்லி கொள்ள ஆசைப்பட்டாலும், இது கூட நல்ல ஐடியாவா இருக்கே! என உள்மனது சொல்கிறது. ஹிஹி. :)))
@அம்பி, ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடியாச்சா? வீட்டிலே பால்பாயாசம் செய்ய ஏற்பாடு செய்தாச்சா? வருது பாருங்க, எனக்குனு விசித்திர விசித்திரமான தொல்லை எல்லாம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P
ReplyDelete@வேதா(ள்), ஹிஹிஹி, வேதா(ள்), நல்லா என்னோட நாடியைப் பிடிச்சுப் பார்த்துட்டு இல்லை சொல்றீங்க? ஹிஹிஹி, அ.வ.சி. :)))))))
அது நீங்க இல்லைன்னு நாங்க எப்படி நம்புறது பாட்டி? :-)
ReplyDeleteமை ஃபிரண்டு, கொ.பா. அது நானா இருந்தால் வேதா(ள்) சொல்றாப்பலே அது பத்தி ஒரு பதிவு எழுதி உங்களை எல்லாம் கலக்கி இருக்க மாட்டேன்? ஹிஹிஹி இது தெரியலை, அ.ச.டு! :))))))))))
ReplyDeleteஎழுதுனது நான் இல்லே இல்லே இல்லேன்னு கதறினாலும் இங்கே யாருமே நம்ப மாட்டெங்கறாங்களே !! ஏன் ?? கீதா உங்க சிஷ்ய கேடி ரசிகன் உங்க பதிவுலே பின்னூட்டம் போடுறதெயே தொழிலா வைச்சிருக்காரா என்ன ??
ReplyDeleteஆமா - அப்பிடி என்ன தான் அந்தப் பதிவிலே இருந்துச்சு ?? ஒரு நகல் எடுத்துப் போட வேண்டியது தானே ?
//நல்லா வச்சாங்கப்பா ஒர் ஆப்பு எனக்கு! யார் வேலை இதுனு தெரியலையே? ம்ம்ம்ம்ம்ம்., ரொம்ப பயமா இருக்கே! :P :P :P//
ReplyDeleteஅட ரசிகன் மாம்ஸ்.. ஒரு நாள் சாட் பண்ணிட்டிருக்கும் போது " நாங்கள்லாம் கீதா அக்காவுக்கே ஆப்பு வச்சவங்க..எங்க கிட்டயேவா"னு சொன்னிங்களே .. அது இது தானா? :P
நான் அப்பவே நெனச்சேன்! அந்த துணுக்கு நல்லா இருந்துச்சு:-))
ReplyDeleteநல்லவேளை.. மங்கையர் மலர் புஸ்தகத்தையெல்லாம் நான் படிக்கிறதில்ல.. தப்பிச்சேன்..
ReplyDeleteஎன்னாது..? நம் தானைத் தலைவிக்கு வந்த தானைத் தலைவலி!!!
ReplyDeleteநல்லாருந்தா..நான் அவளேதான்! அல்லாங்காட்டி..நான் அவளில்லை!!
கீதா!
ReplyDelete104-ம் பக்கத்தில் 'வீட்டு வாசலில் உள்ள போர்டில் எழுதியுள்ள வாசகம்' என்று BEWARE OF DOG
AWARE OF GOD என்ற துணுக்குதான் வேறு பெயரில் இருக்கிறது. அதில் எது நீங்கள்? ஹி..ஹி..
கடிச்சு குதறணும் போலிருக்கா? கர்.கர்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.