எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 19, 2007

இந்த அநியாயம் எங்கேயானும் உண்டா???

வேதாவின் பதிவுகளுக்கான விமரிசனத்தைத் தனியாக எழுதிக் கொண்டால், பின்னால் எடிட், செய்யறதுக்கும், (இது வரை என் பதிவுலக வரலாற்றிலேயே நான் செய்யாதது), பிழை திருத்தவும் வசதியாக இருக்கும் என்று, நோட்பாட் ஓபன் பண்ணி எழுத ஆரம்பிச்சேன். கொழுப்பு, எனக்குத் தான் வேறே யாருக்கு?வொர்ட்டில் எழுதி இருக்கணும், அது என்னமோ வேண்டாத வேலையாத் தோணிச்சு, நோட்பாடில் எழுதினேன். மறுபடி ஒரு முறை பதிவுகள் எல்லாத்தையும் சரிபார்த்துவிட்டு, எது எது முக்கியமாச் சொல்லணும்னு நினைச்சேனோ, அது எல்லாம் வந்திருக்கானும் பார்த்துக்கிட்டேன், எல்லாம் சரியா வந்திருந்தது. சரினு நோட்பாடிலேயே "ஸேவ்" செய்து விட்டு, வேதாவுக்கு ஜிமெயில் அனுப்புமுன்னர், அதிலே ட்ராப்ட் போட்டு வச்சுக்கலாம், இன்னும் 3,4 பதிவுகள் போடுவதாய்ச் சொல்லி இருக்காளே, அது முடிஞ்சதும், அதைப் பத்தியும் எழுதிட்டுச் சேர்த்து அனுப்பலாம்னு, ஜிமெயிலுக்குப் போய்க் கம்போஸ் ஓபன் பண்ணி, அதிலே ஜி3 பண்ணினால், என்ன ஆச்சரியம்? முதல் பத்தியும், இரண்டாவது பத்தியில் பாதியும், þôôôÊ ÅÕÐÐ, ±ýÉ ¦ºöÂÐÛ Ò̢嬀 ±ÉìÌ! இந்த மாதிரி வந்திருக்கு, என்ன செய்யறதுனு புரியலை எனக்கு. ஒரே ஆச்சரியமாப் போச்சு, நோட்பாடில் சாதாரணத் தமிழில் யூனிகோடில் எழுதினது வந்திருக்கு, இதிலே எப்படி இந்த மாதிரி? இப்படி எல்லாம் கூட ஆச்சரியமா நடக்குமா எல்லாருக்குமே?

மற்றப் பத்திகள் எல்லாம் சரியாக வந்திருந்தன. இது என்ன பேராச்சரியம் என்று வியந்து கொண்டே, சரி, நம்ம ப்ளாகில் ட்ராப்டாகப் போட்டு வச்சுக்கலாம், அப்புறம் அங்கிருந்து ஜி3 பண்ணிக்கலாம்னு ப்ளாகுக்கு வந்து அங்கே ஜி3 செய்தால் அதே, அதே, சபாபதே! மறுபடியும் முதல் பத்தியும், 2வது பத்தியில் கொஞ்சமும் þôÀÊò¾¡ý ÅÕ¦ÅýÛ À¢ÊÅ¡¾õ! ஒரே பிடிவாதம் பிடிக்குதேனு குழம்பிப் போய் மறுபடி மெயிலுக்குப் போய் நோட்பாடை ஓபன் செய்து, முதல், இரண்டாவது பத்திகளை அதைப் பார்த்து மறுபடி தட்டச்சு செய்தேன், எல்லாவற்றையும் முடிச்சு விட்டு, "ஸேவ்" கொடுக்கணும். அதுக்குள்ளே ஜிமெயிலுக்குக் கோபம் வந்து, unable to reach gmail, chats receiving and sending may fail. your request could not be processed. அப்படினு புலம்ப ஆரம்பிச்சுட்டது. என்ன தொந்திரவு இதுனு, கொஞ்சம் கோவத்தோடு, சரியாப் போகுதா பார்ப்போம்னு அழுத்தி ஒரு க்ளிக்கினேன் பாருங்க, போயே போச், ஸேவாவாது, மிக்சராவது! வேதாவுக்கு மாட்டர் போயாச்சு, போயிந்தி! அரைகுறையாய். என்னத்தைச் சொல்ல? நான் அனுப்பற மெயில் எதுவும் இத்தனை வேகமாப் போனதில்லை. இது மின்னல் வேகத்தில் போய்ச் சேர்ந்துடுச்சு!

இந்த ப்ளாக்கரும் இப்படித்தான் சதி பண்ணும், சரியா பப்ளிஷ் பண்ண வேண்டிய நேரத்தில், could not connect to blogger.com. publishing and saving may fail அப்படினு பயமுறுத்திட்டே இருக்கும். சரினு முயற்சி செய்து தான் பார்க்கலாமேனு பப்ளிஷ் அழுத்தினால் ஒண்ணு, பப்ளிஷ் ஆகும், அல்லது மொத்தமும் காணாமல் போகும், காக்கா கொண்டு போயிடும். அதனால் எப்பவுமே நான் பப்ளிஷ் செய்யறதுக்கு முன்னாலே அதை ஒரு ஜி3 பண்ணிக் கொண்டே தான் பப்ளிஷ் செய்யறதுனு வச்சிருக்கேன், இல்லாட்டி மறுபடி, மறுபடி, எழுதினதையே எழுதறாப்பலே ஆகிறதோட இல்லாமல் ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி வந்து தொலைக்கும். அது சரி, இது எல்லாம் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? எல்லாருக்கும் இப்படி நடக்கும்கிறீங்க?

ஒருவேளை ஜி3 மறுபடியும் என் கிட்டே கோவிச்சுக்கிட்டாங்களோ? :P :P ஜி3, ஜி3, நான் உங்களுக்குச் செலவில்லாத விளம்பரம் கொடுத்துட்டு வரேனே, இந்த வ்லை உலகுக்கே உங்கள் பெயரையும், அதன் அர்த்தத்தையும் அறியச் செய்திருக்கேனே, அதுக்கெல்லாம் நன்றி பாராட்டக் கூடாதா? இப்படியா பழி வாங்கறது? :P உங்க குருவின் குரு நான், நீங்க என் சிஷ்யையின் சிஷ்யை! ஆகவே உங்களை நான் எப்போவுமே தாயுள்ளத்தோடு, பெருந்தன்மையுடன் மன்னிச்சுடுவேன். இதைப் புரிஞ்சுக்க வேணாமா?? இப்போ விமரிசனம் பத்தின ஒரு விமரிசனம்.

மத்ததெல்லாம் கூட வேதாவை அவ்வளவு டிஸ்டர்ப் செய்யலை. கடைசி இரண்டு "கவிட்டுரை"க்கும் நான் கொடுத்திருக்கும் விமரிசனம், அதுவும் ஒரு ஆணின் பார்வையில் எழுதின கவிட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் வரிகள்,
"நட்புக்கும், காதலுக்கும் உள்ள மயிரிழை அளவு இடைவெளியில் மிகப் பாதுகாப்புடன் நடக்கச் சம்மதிப்பார்களா? இவ்வளவு மென்மையாக மறுக்கப் பட்ட காதலை ஏற்றுக் கொண்டு செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாய் சந்தோஷப்படவேண்டிய ஒரு விஷயம் தான்."
இவை அவரை மிகவும் தொந்திரவு செய்ததாய் உணர்ந்தேன். என்னைப் பொறுத்த வரை காதல் என்ற உணர்ச்சிக்கு வாழ்க்கையில் இடம் இல்லை என்றாலும், ஓரளவுக்கு சக தோழிகள் மூலம் அறிந்து புரிந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் பார்த்தால் ஒரு பார்வை, ஒரு சின்னப் புன்னகை, ஒரு அதிர்ச்சி, ஓரத்து விழி நீர் இவற்றின் மூலமாய் சிநேகிதியின் நட்பைத் தான் காதலாய் அர்த்தம் செய்து கொண்டதை எண்ணி வெட்கித் தலை குனிந்த அந்த ஆண் உண்மையிலேயே பாராட்டுக்குரியவன். மற்றவர்கள் மாதிரி பீர் பாட்டிலும் கையுமாய், தாடி வளர்த்துக் கொண்டு தேவதாஸ் மாதிரி திரியாமல் இம்மாதிரியான ஒரு நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக் கொண்டு பிரியவும் பிரியாமல், தன் காதலையும் பூட்டி வைக்காமல், தங்கள் போக்கிலே செல்லும், செல்ல வைக்கும் நட்பு எத்தனை உன்னதமானது? ஒவ்வொருவருக்கும் அதை அடையக் கொடுத்து வைக்க வேண்டும்.

என்றாலும் இன்னும் ஏதோ எழுதி முடிக்காமல் குறை வைத்திருக்கிறாப்போல ஒரு எண்ணம் என் மனசில் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. அது என்னனு புரியலை. நான் கொஞ்சம் லேட் இன்னிக்கு. ஆனால் நேற்று வேதா சொல்லும்போதே சந்தேகமாத் தான் இருந்தது. 10-00 மணிக்கெல்லாம் முடியாதேன்னு. இப்போத் தான் வர முடிந்தது. அந்த கவிட்டுரையின் விமரிசனத்துக்கு யார் யாருக்கு என்ன கேட்கணுமோ இங்கே வந்து சொல்லுங்க, கேட்டுக்கறேன். மற்றபடி இது என்னுடைய ஒரு சிறு முயற்சி.

20 comments:

  1. ரொம்பத்தான் போராடியிருக்கீங்க. அப்பவும் விடாம முயற்சி செய்ததை பாராட்டியே ஆகணும்

    ReplyDelete
  2. அந்த பத்து மணி மேட்டரு இது தானா?

    ரைட்... அதுல அவங்க குருவை பற்றியும் பெருமையா சொல்லி இருக்கலாம் :)

    Wordpad ல டைப் பண்ணுங்க, அது தான் சரியா இருக்கும்.

    ReplyDelete
  3. //இன்னும் ஏதோ எழுதி முடிக்காமல் குறை வைத்திருக்கிறாப்போல ஒரு எண்ணம் என் மனசில் இன்னும் இருக்கத் தான் செய்கிறது//

    அதானே! நாம என்னிக்கு சுருக்கமா எழுதி இருக்கோம்? :p

    இப்போ உடம்பு எப்படி இருக்கு? அதாவது தேறியாச்சா?னு கேட்டேன்.

    ReplyDelete
  4. \\இந்த வ்லை உலகுக்கே உங்கள் பெயரையும், அதன் அர்த்தத்தையும் அறியச் செய்திருக்கேனே, அதுக்கெல்லாம் நன்றி பாராட்டக் கூடாதா? இப்படியா பழி வாங்கறது? \\

    ஜி3க்குன்னு ஒரு தனிபதிவு போடுங்க...எல்லாம் சரியாகிடும் :)

    \\மற்றபடி இது என்னுடைய ஒரு சிறு முயற்சி.\\

    தன்னடக்கத்தில் தலைவியை அடிச்சிக்க ஆளே இல்ல :))

    ReplyDelete
  5. //உங்க குருவின் குரு நான், நீங்க என் சிஷ்யையின் சிஷ்யை! ஆகவே உங்களை நான் எப்போவுமே தாயுள்ளத்தோடு, பெருந்தன்மையுடன் மன்னிச்சுடுவேன். இதைப் புரிஞ்சுக்க வேணாமா?? //

    இதெல்லாம் நீங்க சொல்லித்தான் தெரியனுமா? சத்தியமா உங்க பிரச்சனைக்கு நான் காரணமில்ல. இதுல ஏதேனும் வெளிநாட்டு சதி இருக்கோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.


    @கோபி,
    //ஜி3க்குன்னு ஒரு தனிபதிவு போடுங்க...எல்லாம் சரியாகிடும் :)//
    கோபிண்ணே, ஏண்ணே உங்களுக்கு இந்த கொலைவெறி? தங்கச்சி மேல கொஞ்சம் கருணை காட்ட கூடாதா?

    ReplyDelete
  6. கீதா அக்கா... இது செல்லாது.. செல்லாது..
    தோழி வேதாவுக்கு விமர்சனம் வேணுமின்னாக்கா..அவிங்க எங்ககிட்ட கேட்டிருந்தாக்கா..
    நாங்க சொல்லியிருப்போமே.. பத்தி பத்தியா பின்னூட்டத்துல..(வேற என்ன வேல எங்களுக்கு..ஹிஹி..)
    அத விட்டுட்டு.. உடம்பு சரியில்லாம இருக்குற எங்க டீச்சருக்கு திரு நெல்வேலி அல்வாயும்,திருப்பதி லட்டும் வாங்கி குடுத்து தெனமும் போனுல ஜஸ் வைச்சி.. ரொம்ப ஜலதோஷமெல்லாம் புடிக்க வைச்சி வாங்குன விமர்சனம். நா ஒத்துக்கவே மாட்டேன்..

    ReplyDelete
  7. // அப்புறம் அங்கிருந்து ஜி3 பண்ணிக்கலாம்னு ப்ளாகுக்கு வந்து அங்கே ஜி3 செய்தால் அதே, அதே, சபாபதே!//
    என்ன இருந்தாலும் ஜி3 அளவு ஜி3 கச்சிதமா பண்ணமுடியனுமா?..அதானே..

    ReplyDelete
  8. // சிநேகிதியின் நட்பைத் தான் காதலாய் அர்த்தம் செய்து கொண்டதை எண்ணி வெட்கித் தலை குனிந்த அந்த ஆண் உண்மையிலேயே பாராட்டுக்குரியவன். //
    // தன் காதலையும் பூட்டி வைக்காமல், தங்கள் போக்கிலே செல்லும், செல்ல வைக்கும் நட்பு எத்தனை உன்னதமானது? ஒவ்வொருவருக்கும் அதை அடையக் கொடுத்து வைக்க வேண்டும்.//
    ஆஹா..யாரு இது ?நம்ம கீதா அக்காவா?.. இதையெல்லாம் கூட உங்களுக்கு ரசிக்க முடியுமா?.
    நாங்கூட டீச்சர் ரொம்ப பெரியவிங்களாச்சேன்னு நெனச்சேன்..

    ReplyDelete
  9. இப்ப உடம்பு சரியாயிடுச்சுங்களா அக்கா ?..

    ReplyDelete
  10. இப்ப உடம்பு சரியாயிடுச்சுங்களா அக்கா ?..

    ReplyDelete
  11. // அந்த வரிகள் பொதுப்படையாக எல்லா ஆண்களையும் குறித்து விடக்கூடாது என்பதில் தான் என் கவனம் இருந்தது//

    தட்ஸ் மை ஃபிரண்ட் . ஃபிரவுடு ஃஆப் யு.

    ReplyDelete
  12. இந்த மாதிரி என் வயித்தெரிச்சல நெரெய தடவே கொட்டிக்கிட்டு இருக்கு. உணர்ச்சி பொங்க பரவச நிலையில் நீண்ட மறு மொழி போட்டு கிளிக்கினா -புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - என்ன ஆச்சு - யாருக்குத் தெரியும் ? திரும்ப எழுத முடியுமா அதே வரிகளெ ??

    என்ன செய்வது - We have to live with these problems

    கீதா beyond our control

    ReplyDelete
  13. வேதாவுக்கு எழுதின விமர்சனம் அருமைங்க மேடம்.. 150தாவது பதிவுக்கு ஏற்ற விஷயங்கள்.. நிச்சயம் இது வேதவை மேலும் சூப்பரா எழுதத் தூண்டும்..

    ஆமா..நீங்க மட்டும் ஏன் எப்படி எழுதுறீங்க.. பாரதியார், நேதாஜி போன்றவர்களை பற்றி எழுதும் அருமையான பதிவுகள் எங்கே எங்கே எங்கே எங்கே (ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொன்று)

    ReplyDelete
  14. mmmm முதலில் கொடுத்த கமெண்ட்ஸ் எல்லாம் போன இடம் தெரியலை, மறுபடி முயற்சிக்கிறேன்.

    @வேதா, இந்தப் பதிவு கூட திரும்பிப் பார்க்காமல் எழுதினது தான், அதான் ஒழுங்கா வந்திருக்குனு நினைக்கிறேன்.:)))))

    @வேதா, எடிட் செய்யாமலேயே போட்டிருக்கலாம். பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய வரிகள் அவை! :P :P

    கீழே பாருங்க, சீனா, அவருக்கும் இந்த மாதிரித் தான் ஏற்படுதுனு சொல்லி இருக்கார். அப்பாடி, கொஞ்சம் நிம்மதியா இருக்கு!!!!!! :))))))))

    ReplyDelete
  15. வாங்க, மணிப்பயல், பொண்ணு பார்க்கிற அவசரத்திலும் வந்து பாராட்டி இருக்கீங்க, நன்றி.

    @புலி, இது பெரிய விஷயம் இல்லையா உங்களுக்கு? க்ர்ர்ர்ர்ர்ர்., அதெல்லாம் வொர்டிலே டைப் பண்ணினா நல்லா வந்திடுமே, அதான், வணங்காது நமக்கு!!!!!!

    ReplyDelete
  16. @அம்பி, பாத்திரம் தேய்க்கிறதைக் கூட விட்டுட்டு கமெண்டினதுக்கு ரொம்ப நன்றி, உடம்பும் கொஞ்சம் பரவாயில்லை!

    @கோபிநாத், மறுபடி மறுபடி உண்மைத் தொண்டர்னு நிரூபிச்சுட்டே இருக்கீங்க!!!! :))))) ரொம்பவே புகழறீங்களோ???? (ஹிஹிஹி, மனசுக்குள்ளே புகழ்ச்சி தான் கேட்குது, அது சும்மா, உள உளாக்கட்டிக்கு, வேணாம்போல நடிப்பு!!!!)

    ReplyDelete
  17. @ஜி3, வெளிநாட்டுச் சதினு சொல்லிக் கட்சியோட பெருமையை நிலைநாட்டிட்டீங்க!!!!! அந்த ஒரு காரணத்துக்காகவே உங்க பேரிலே இன்னொரு தனி போஸ்ட் போடலை, ஏற்கெனவே போட்டிருக்கேன் அப்படிங்கறதை கோபிநாத் தான் மறந்தார்னா, நீங்க எப்படி மறக்கலாம்????

    @ரசிகரே, என்னை என்ன அல்வாவுக்கும், லட்டுக்கும் மயங்கிப் போற ஆள்னா நினைச்சீங்க? ஹிஹிஹி, அதெல்லாம் பொன்னாடை, எடைக்கு எடை தங்கம்னு தான் வாங்கிக்குவேன், அதுக்குக் குறைந்தால் நம்ம ரேஞ்சுக்குச் சரியா வருமா?????

    ReplyDelete
  18. @ரசிகரே, இதைக் கூட ரசிப்பீங்களானு யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கறீங்க????? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., இனி வரும் நாட்களில் என்னை டீச்சர்னு கூப்பிடக் கூடாதுனு தண்டனை விதிக்கிறேன் உங்களுக்கு!!!!!!!!
    இப்போ உடம்பு பரவாயில்லை ரசிகரே!!!!

    @சீனா, இப்போக் கூட இந்த கமெண்ட்ஸ் எல்லாம் திரும்பித் திரும்பி 2 முறை கொடுத்தும் வராமல் அப்புறம் என்னமோ வருது, என்ன செய்ய?? என்னவோ பிரச்னை!!!! ஒண்ணுமே புரியலை உலகத்திலே!!!!!!!

    ReplyDelete
  19. @கார்த்திக், பாராட்டு வைக்கும் சாக்கில் நைசாக் குட்டும் வச்சிருக்கீங்க, இப்போக் கொஞ்சம் நாளா என்னால் சில விஷயங்களைக் கவனிக்க முடியலை, அதனால் வந்த தொய்வு, கூடிய சீக்கிரம் சரியாகும்னு நம்பறேன். நீங்க மட்டும் என்ன? ஆடிக்கொரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள்னு வரீங்க, போறீங்க, ஆள் இருக்கும் இடமே தெரியலை??? :(((((

    ReplyDelete
  20. // இந்த கமெண்ட்ஸ் எல்லாம் திரும்பித் திரும்பி 2 முறை கொடுத்தும் வராமல் அப்புறம் என்னமோ வருது, என்ன செய்ய?? என்னவோ பிரச்னை!!!! ஒண்ணுமே புரியலை உலகத்திலே!!!!!!!//

    பின்ன.. நம்ம டீச்சரை நாமே வயசாயிடுச்சேன்னு சொல்லக்கூடாதுன்னு (அதுவும் ரொம்ப)பெரியவங்களாச்சேன்னு நாசுக்கா சொன்ன மாணவனுக்கு தண்டனையின்னு சொன்னாக்கா.. அப்பிடித்தேன் ஆவும்.
    இப்பெல்லாம் ஸ்டூடண்ட அடிச்சாக்கா,டீச்சருக்கு பனிஷ்மென்ட் உண்டு தெரியுமோன்னோ?..

    ReplyDelete