முந்திய மடலில் சொல்லப்பட்டது ரிக் வேதம் என்று குறியீடாக சொல்லிக் கொள்வர்.
யோகத்தில் யோகம்:
யோகத்தில் நுண்ணுடலிலேயே (சூக்ஷூமம்) செய்யப்படும் மூன்றாவது நிலை பயிற்சி. சுழுமுனையில் உள்ளிருக்கும் சித்ரா, வஜ்ரா எனப்ப்டும் நாடிகளை பயிற்சி செய்பவன் நேரடியாக அறிகிறான். அவற்றையும் தாண்டி முக்கியமாக இருக்கும் பிரம்ம நாடியை காண்கிறான். தான் உடல் அல்ல. பிராணனால் ஆனவன் என்று ஆணித்தரமாக உணர்கிறான். எல்லாம் அடிப்படையில் ஒளியினால் ஆனவை என்று தெளிவாக அறிந்துக்கொள்கிறான். அப்படி ஒளி மிக்கவனாக தன்னை இவன் உணர்வதால் இவனுக்கு தைஜஸன் என்று பெயர். அதே போல முதன் நிலை பயிற்சியாளருக்கு வைசுவாநரன் என்று பெயர். இரண்டாம் நிலை பயிற்சியாளர் தன்னை வைசுவாநரன் என்றும் உணர மாட்டார்; தைஜஸன் என்றும் அறிந்திருக்க மாட்டார். Transition period.
இங்கு குரு சீடனுக்கு பிரம்மநாடியில் பிரவேசிக்கும் வல்லமையையும், அதில் செய்ய வேண்டியவற்றை செய்யும் வல்லமையையும் அளிப்பதாக சொல்லப்படுகிறது. சீடனிடம் ஞானக்கனல் எழும்புகிறது. முப்புரத்தையும் தீ சுட தொடங்குகிறது. இப்படி அனலெழும்பி ஒடுக்க வேண்டியது ஒடுக்கப்படுவதால் இந்த பயிற்சியின் பலன் பொரியாக குறிப்பிடப்படுகிறது. அந்த பலன் இறைவனுக்கு அளிக்கப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட அச்சம் நீங்கிவிடுகிறது. பாவங்களின் பலன் அழிந்துப்போகிறது. எனவே இதைதான் நெற்பொரி உண்பதால் பாவம் அழிகிறது என்று குறியீடாக சொல்லப்படுவதாக சிவயோகிகள் கூறுகின்றனர்.
இந்த பயிற்சியை அதர்வண வேதம் என்று சங்கேதமாக சொல்லிக் கொள்வர்.
யோகத்தில் ஞானம்:
பிரம்மநாடியில் பிரவேசித்து, ஆதாரங்களை தாண்டி, தன்னுடைய உண்மை நிலையில் சாதகன் நிற்கிறான். இதன் பிறகு இவனை சாதகன் என்று சொல்ல முடியாது. குரு என்றே சொல்ல வேண்டும். இறைவன் நினைப்பதை இவன் செய்வதால், இறைவனின் திருவடியில் ஐக்கியமானவன் என்று கூறப்படுகிறான். இந்நிலையில் இவன் பெறும் பேறை இறைவனுக்கு அளிப்பதை அப்பமாக கூறுகின்றனர். இதை மோதகம் எனும் கொழுக்கட்டையாகவும் கூறுவர். ஜீவன் நன்றாக பக்குவப்பட்டு சமைத்து அளிக்கும் பண்டமாக அது இருப்பதால் இறைவன் அதை மிகவும் விருப்பப்பட்டு ஏற்றுக்கொள்கிறார். மோதகப்ப்ரியன் என்று அவரை அழைப்பதும் அதனால்தான். வெளியே வெள்ளை மாவால் இருந்தாலும், உள்ளே இனிப்பான பூரணம் இருப்பதை போல, பார்ப்பதற்கு சாதாரண மனிதன் போல காணப்படும் அவன் உள்ளே பூரணத்துடன் விளங்குகிறான். எனவே அவனே இறைவனால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். இங்கு சாதகன் தன்னை அனைத்தையும் கடந்தவனாக அறிகிறான். துரியன் என்று கூறப்படுகிறான். இந்த நிலை பயிற்சிக்கு கிருஷ்ண யஜுர்வேதத்தை குறியீடாக சொல்லுவர்.
கப்பிய கரிமுகன்
இப்படி நான்கு விதமாக அன்பனால் அளிக்கப்படுவதை முழுமையாக் இறைவன் ஏற்பதால் சாதகன் இறைவனோடு இறைவனாக கலக்கிறான்.
தனக்கு ஒன்று தேவையில்லாதாதாக் இருப்பினும் தன் அடியவருக்காக பலனை பெற்றுக்கொள்வதில் பெருவிருப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதால், உணவை விரும்பக்கூடிய வேழமாக அவர் சொல்லப்படுகிறார்.
எதனையும் வேண்டாத பரம்பொருள் நம்பொருட்டு பலனை நாடும் தன்மையை பெறுவதால் கரியின் தலையை பெற்றதாக சொல்கின்றனர். முழுமுதற் பொருள் அதனால் மிகவும் கீழே மூலாதாரத்தில் வந்து குடிக்கொண்டது. மூலாதாரத்தில் இறைவனின் நிலையை யானையாக கண்ட சிவயோகிகள் கரிமுகன் என்றனர். யானை மாத்திரமே மூக்கால் நிலத்தை சுவாசிக்க கூடியது. மூலாதாரம் வாசனைக்குரிய செயலுக்கு காரணமான நாடிகளும், வினையும் கொண்ட இடம். மூலாதாரம் பிருத்வி எனப்படும் பூமியின் தன்மையை கொண்டது. எனவே மூக்கும், பூமியும் இணைவதால் அங்கு விநாயகர் எனப்படும் கரிமுகன் தெய்வமாக சிவயோகிகளால் சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment