இந்தப் படத்தைப் பற்றி எழுதிச் சேர்த்திருந்தேன், அது என்னமோ பப்ளிஷ் கொடுக்கும்போது வரலை, திரும்பவும் எழுதறேன். எங்க வீட்டிலே பிள்ளையார் சதுர்த்தி அன்று பூஜை செய்த பிள்ளையார் இவர். கோபி அன்று வந்தபோது எடுத்தார் இந்தப் படத்தை. அவர் எடுத்த படங்களில் இது எனக்கு ரொம்பப் பிடிச்சது. பக்கத்தில் இருக்கும் வெள்ளைப் பிள்ளையார் பரிசாய்க் கிடைத்தது. பிள்ளையாருக்குக் குடை வைக்கும் வழக்கம் சென்னை வந்துதான் எனக்குத் தெரியும், மதுரையில் அந்தப் பழக்கம் நான் இருந்தவரையில் இல்லை, இப்போ வைக்கிறாங்களா தெரியலை!
*************************************************************************************
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே.
அந்த குறமகளான வள்ளியுடன் இணைய முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு, துயரத்தோடு இருக்கும் சுப்ரஹ்மண்யனானவர் நுழைந்த அந்த தினை வனத்திலே
யானையாகி, வள்ளியை பயமுறுத்தி அக்கணமே முருகனோடு திருமணம் முடித்த பெருமாளே!
வள்ளி, நிலத்திற்கு சற்று கீழே வள்ளிக்கொடியில் இருந்தவள். அதாவது நிலத்திற்குரிய ஆதாரமான மூலாதாரத்திற்கு கீழே குலம் எனப்படும் இடத்தில் கொடி போல் சுற்றிக் கொண்டிருக்கக்கூடிய வள்ளி எனும் குண்டலினி. அவள் தன் தெய்வதன்மையை இழந்து குறவப் பெண்ணாய் வாழ்கிறாள். அதாவது குண்டலினி அன்னை இறைவனிடம் நம்மை சேர்க்கும் வேலையை செய்யாமல் உலக செயல்களை நாம் செய்ய உதவிக் கொண்டிருக்கிறாள். இதையே குறப்பெண் என்னும் குறியீட்டால் சிவயோகம் சொல்கிறது.
சஹஸ்ராரத்தில் இருக்கும் இறைவனோ அவளுடன் கூட ஏங்குகிறார். வள்ளி வளருகிறாள். அதாவது ஆறு ஆதாரங்களை தாண்டி புருவ மத்திக்கு வருகிறாள். ஒவ்வொரு ஆதாரத்திலும் ஒவ்வொரு தாமரையிலும் ஒவ்வொரு குழந்தையாக இருக்கும் முருகன், புருவமத்தியிலே ஆறு ஆதார வடிவத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு ஆறுமுகனாய் விளங்குகிறான். அங்கே அவன் பேரெழிலுடன் இருப்பதனால், முருகன் என்ற பெயர் பெறுகிறான்.புருவமத்தியிலே நினைப்பு நிற்க பெற்றவர்கள் அந்த பேரெழிலால் ஈர்க்கப்பட்டு அதன் பின் உலக ஈர்ப்புகளால் பாதிக்கப்படுவதில்லை. அதுவரை ஒரு வரைக்குள் இருந்த தெய்வீக சக்தி முழுமையாவதால், அங்கே அது சுப்ரஹ்மணியன் என்ற பெயர் பெற்றது. ப்ரஹ்ம என்றால் அளவிற்குட்படாத, எண்ண முடியாத, அறிந்துக்கொள்ள முடியாத என்று பொருள் விரியும். சுப்ரஹ்மண்ய என்றால் இன்னும் அழுத்தி சொல்வது அவ்வளவுதான். நல்லவன் என்றாலே நல்லவன் என்றுதான் பொருள். ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவன் என்பது போல.
அந்த வள்ளியாகிய குண்டலினி புருவமத்தி வரை வந்துவிட்டு அதன் மேல் ஏனோ நகராமல் நின்றுவிடுகிறாள். அவள் இனத்தை சேர்ந்த வேடனாய் வந்து அவள் மயங்கவில்லை. அவனோடு சேரவில்லை. இதன் பொருள். இறைவன் இத்தகையவன் என்னும் எண்ணத்தோடு புருவமத்தி வரை வரும் ஆன்மா, கண்ணெதிரே இறை இருந்தும் அறியாமல் திகைத்து நிற்கும். மிட்டாய் கடையில் இனிப்பை தொட முடியாமல் கண்ணாடியை தடவும் குழந்தையை போல.
அடுத்து கிழவனாய் வருகிறார். அதன் பொருள் மிக பழையவன் என்பதாகும். ஆதிபரம்பொருள் என்று தன்னை காட்டியும் குண்டலினி மேலே நகராது. அந்த இடத்தில் சாதனைகள் செல்லாது. பயிற்சிகள் ஏதும் இல்லை. அவ்விடமே அருளுக்காய் காத்திருக்கும் இடம். தேனும் தினைமாவும் முருகன் ஏற்பது என்பது முன்பு சொன்னதே தான். தினைமாவு என்பது மூலாதாரத்தை சுட்டும் பூமித்தத்துவம். தேன் என்பது அமுதம்.
புருவமத்தியில் வாயுவையும், அமுதத்தையும் இறைவன் வலிந்து ஏற்கிறான்.
இறைவனும், இறைவியும் கூட முடியாமல் தவிக்கும் அவ்விடத்தில் திடீரென ஓர் அருட்சத்தி குண்டலினியை வெகுவேகமாக தள்ளி கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சஹஸ்ராரத்தில் சேர்த்துவிடும். அந்த பலத்தோடு கூடிய சக்திக்கு இபம் என்று பெயர். யானை என்று பொருள்.
அச்சிறுமுருகன் என்பதற்கு என்ன பொருள் என்றால்,ஆதிபரம்பொருளாக காட்சியளித்தது எவ்வித குண தோஷமுமில்லாமல் சிறுவனை போல் இருப்பதால்!
ஆக மூலாதாரத்தில் வழி விடுபவராகவும், நடுவே சுமப்பவராகவும், புருவமத்தியில் பரஞ்சோதியாகவும், அதன்பின்னும் இணைப்பிற்கு காரணராகவும் இருப்பது பிள்ளையார் என்னும் அனைவருடைய செல்லப்பிள்ளை என்பது சிவயோகிகள் கூற்று!
அனைவரது திருவடிகளையும் பணிந்து, விடைப்பெற்றுக் கொள்கிறேன்
நன்றி தலைவி ;)
ReplyDelete//பிள்ளையாருக்குக் குடை வைக்கும் வழக்கம் சென்னை வந்துதான் எனக்குத் தெரியும், மதுரையில் அந்தப் பழக்கம் நான் இருந்தவரையில் இல்லை//
ReplyDeleteஎனக்கு நினைவுக்குத் தெரிந்த வகையில் பிள்ளையாருக்கு சங்கட ஹர சதுர்த்தி அன்று குடை வைக்கும் சம்பிரதாயம் 1950 லிருந்தே பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
ஒருவேளை அரச மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் பிள்ளையார் நிழலில் இருப்பாரே !
அவருக்கு நிழல் தரும் குடை ஒன்று நம் வீட்டுக்கு வரும்போதும் வைத்து அழகு
பார்த்தால், அடடா ! அந்தப் பிள்ளையார் சான்னித்யம் எவ்வளவு பொலிவு பெறுகிறது எனும் எண்ணத்தில் துவங்கி இருக்குமோ என்னவோ ! உபசாரங்களில்
சத்ரம், சாமரம் காண்பிக்கச் சொல்லி உள்ளது. சத்ரம் பூஜை துவங்குமுன்னேயே
வைத்துவிட்டால் மறந்துபோகாமல் இருக்கவும் உதவும்.
சுப்பு தாத்தா.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com
http://menakasury.blogspot.com
//மதுரையில் அந்தப் பழக்கம் நான் இருந்தவரையில் இல்லை, இப்போ வைக்கிறாங்களா தெரியலை! //
ReplyDeleteஇப்போதும் மதுரையில் குடையெல்லாம் இல்லீங்க கீதாம்மா :)
Can you give porul vilakkam for "Tharaniyil araniya iraniyan udalthanai naga nuthi kodu sAdOngu Nedunthiri....." song by Arunagirinathar
ReplyDelete@கோபி, நான் இல்லை நன்றி சொல்லணும்?? :)))
ReplyDeleteவாங்க சூரி சார், பல மாதங்களுக்குப் பின்னர் முதல் வருகை??? இந்தக் குடை உபசாரங்களில் வருதுனு தெரியும், என்றாலும் என்னமோ தெரியலை, மதுரையில் வைக்கிறதில்லை, கீழே மெளலியும் சொல்லறார். என்னனு புரியலை! ஒருவேளை இந்தப் பிள்ளையார் யாருக்கும் குடை பிடிக்கமாட்டாரோ என்னமோ?? :))))))))))))
ஹிஹிஹி, 1950??? குடை வைக்கிற பழக்கம்?? சான்ஸே இல்லை, எனக்குத் தெரிய! :)))))))))))
ReplyDeleteசிவஞானம், மேற்கண்ட பொருள் விளக்கங்கள் எங்க நண்பரும் யோகியுமான ஒருவர் அளித்தவை. ஆகவே நீங்கள் கேட்ட திருப்புகழின் பொருள் விளக்கம் முழுதும்அளிக்க என்னால் இயலாது. ஒருவேளை அவர் இந்தத் திருப்புகழுக்கு விளக்கம் அளித்தால் அதை அவரை அனுமதி கேட்டு இங்கே இடுகின்றேன். திருப்புகழின் உண்மையான விளக்கங்கள் மிக மிக அரிதாகவே சொல்லப் படுகின்றது.
ReplyDelete