ஹிஹிஹி, திவாவோட பதிவிலே இருந்து சுட்டுட்டு வந்தது தான் இன்னிக்குத் தலைப்பு. இப்போ என்னோட மனசு எப்படி இருக்குன்னா என்னத்தைச் சொல்றது? கொஞ்சம் ஆறுதல், கொலு வைச்சு முடிச்சாச்சு! மூன்று நாளா வேலை செய்ய வேண்டி இருந்தது, கொலு வைக்க. போன வருஷம் தான் படி புதிசா வாங்கினோம். போன வருஷம் அதனால் கடையிலே இருந்தே ஆள் வந்து படிகளைக் கோர்த்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். ஆனால் அதுக்கே அவருக்கு 3 மணி நேரம் ஆச்சு. அப்புறமா அதை ரொம்ப சுலபமா நம்ம வீட்டு எஞ்சினியர் (ஹிஹிஹி, எல்லாம் ம.பா. தான், நேரத்துக்கு ஒரு பெயர் வரும்) அதை புத்தக ஷெல்பாக மாற்றவும் அதில் இடமில்லாத அளவுக்குப் புத்தகங்கள் வழிய ஆரம்பித்ததும், இதை ஏன் வாங்கினோம் என்று அவர் நொந்து நூலாகிப் போனதும் தனிக்கதை. புத்தகங்களை வைத்ததும், என்னுடைய துணிமணிகள் வாரி இறையறதைப் பார்த்துட்டு அதை எடுத்து இரண்டு தட்டு ஒழிச்சு வச்சுக்கோ, புத்தகங்களைக் குறைனு சொல்லிட்டார். 144 தடை உத்தரவைக் கூட மீறலாம். இதை மீற முடியாது. ஆனால் புத்தகங்களை எங்கே குறைக்கிறது? அது என்னோட எடை மாதிரி! குறையாமல் நிறைவாகவே இருக்கும் ஒரு வஸ்து.
புத்தகங்களை வேண்டியது, வேண்டாதது பார்த்து உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே தள்ளி விட்டு முக்கியமானதை மட்டும் வச்சுக்கலாம்னா அதுவே 3 அலமாரிக்கும் மேலே வந்தது. இத்தனைக்கும் ஆனந்த விகடன், குமுதம் எல்லாம் வாங்கறதே இல்லை. இதிலே போகிற இடத்திலே கொடுக்கிற புத்தகங்கள், வாங்கற புத்தகங்கள், தமிழ், ஆங்கில, ஹிந்தி, சம்ஸ்கிருத அகராதிகள் என்று எல்லாம் குண்டு, குண்டாக இடத்தை அடைக்கத் துணிகளை ஒரு மாதிரி அடைச்சுத் தான் வைக்க வேண்டி இருந்தது. என்ன ஒரு புடவையை எடுத்தால் மொத்தமும் கீழே விழும். திரும்ப அடைக்கணும். அதுக்கு ஒரு நிமிஷம் தானே பிடிக்கும். ஆகவே அந்த அலமாரி பக்கமே வரதுக்கு வெறுத்துப் போய் அவர் விலகிக் கொள்ள நம்ம ராஜ்யம் தான் அங்கே ஒரு வருஷமாய். இப்போ கொலுவுக்கு அந்த அலமாரி வேண்டும்னு சொல்லவும் முந்தாநாள் சனிக்கிழமையிலே இருந்து ஆரம்பிச்சு ஒருவழியா நேத்திக்குத் தான் ஒழிச்சு முடிச்சேன். இந்த அழகிலே இ.கொ. cryptics போட உங்களை விட்டால் வேறே ஆளே இல்லைனு மெயில் அனுப்பிட்டு இருக்கார். எதைனு பார்க்கிறது. அதிலே ஒரு கண், இதிலே ஒரு கண்ணுனு முடிச்சுட்டுப் பார்த்தால் இ.கொ. அதுக்குள்ளே பப்ளிஷ் பண்ணிட்டார். மார்க் பரிட்சை பேப்பரிலே இருக்காமே, அங்கே போய்ப் பார்க்க பயமா இருக்கு. போகலை.
இந்த அழகிலே நேத்திக்குப் பெண்ணோட பிறந்த நாள். அவங்களைக் கூப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லவே மறந்து போயாச்சு. நேத்திக்குப் பாவம் அவங்களே கூப்பிட்டபோதும் முதல்லே நினைப்பு வரலை. அப்புறம் தான் நினைப்பு வந்தது. ஒருமாதிரி, ஒருமாதிரிதான், சமாளிச்சாச்சு. அப்புறம் க்ரீட்டிங்ஸ் அனுப்பலாம்னு இணையம் பக்கம் வந்தால் டாடா இண்டிகாம் இணையம் வராது உனக்கு இப்போனு முன் ஜாக்கிரதையாக தொலைபேசித் தெரிவிக்க ஒருவழியாக் காலம்பர வந்திருக்கானு பார்த்துட்டு belated greetings அனுப்பி வச்சேன். நல்லவேளையா இதைப் படிக்கிற அளவுக்குப் பெண்ணுக்குத் தமிழ் தெரியாது. இருந்தாலும் இந்த வருஷ கொலு ரொம்பவே ஆட்டி வச்சிருக்கு. எப்போவும் படி கட்ட இவ்வளவு சிரமம் பட்டதே இல்லை. இந்தப் படிகள் கட்ட ஒரு டீம் வொர்க் தேவைப்படுது. என்றாலும் எங்க டீம் மானேஜரின் சாமர்த்தியத்தினால் நாங்க இரண்டு பேருமாய்க் கட்டி பொம்மையும் வச்சாச்சு. நாளையில் இருந்து கொலு ஆரம்பம். தினமும் சுண்டலும் உண்டு. பதிவும் உண்டு. எல்லாரும் வந்து இருந்து கொலுபார்த்துட்டுச் சுண்டல் (பாடறவங்களுக்கு மட்டும்) வாங்கிட்டுப் போங்க.
அப்புறமா கொஞ்ச நாளைக்கு நவராத்திரி முடியறவரைக்கும் திருநாங்கூர் பதிவுகளை நிறுத்தி வச்சுக்கறேன். சுண்டல் வேணும்னா எல்லாரும் பேசாமல் நவராத்திரிப் பதிவுக்கு வந்துட்டுப் போங்க!நவராத்திரி என்னமோ நாளைக்குத் தான் ஆரம்பம். ஆனால் கொலு வச்சுட்டு நைவேத்தியம் பண்ணாமல் எப்படி அதனாலே இன்னிக்கு மைதா, ரவை, கோதுமை மாவு, சர்க்கரை, வெண்ணைய், ஏலக்காய் சேர்த்த பொரித்த பிஸ்கட்டுகள். சீக்கிரமாய் வந்ததாலே அம்பிக்கு, (ஹையா ஜாலி!!, ரொம்பவே சந்தோஷமா இருக்கே!) கவிநயாவுக்கு (பாவம்) கிடையாது. மத்தவங்க எவ்வளவு வேணுமோ எடுத்துக்கலாம்.
முதல் சுண்டல் எனக்கே தான். இந்த கொலு எங்க வீட்டு கொலு இல்லை. கூகிளார் தயவு.
ReplyDeleteமறந்துட்டேனே, ஒரு 4 நாளைக்கு வேண்டியதை scheduled post போட்டு வச்சாச்சு, யாரையும் விடறதாயில்லை, அதனால் எனக்கு இணையம் இருந்தாலும், இல்லாட்டியும் பதிவுகள் வரும். எல்லாரும் வந்துட்டுப் போங்க!
ReplyDelete//அது என்னோட எடை மாதிரி! குறையாமல் நிறைவாகவே இருக்கும் ஒரு வஸ்து.//
ReplyDelete:)))
மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
//முதல் சுண்டல் எனக்கே தான்.//
ReplyDeleteஅதுவும் நல்லதுக்கு தான் உப்பு காரம் எல்லாம் சரியா இருக்கா?னு அடுத்தவங்களை வெச்சு டெஸ்ட் பண்ர வேலை மிச்சம். :))
நவராத்திரி வாழ்த்துக்கள் கீதாம்மா.
ReplyDeleteசுண்டல் மட்டுமில்லாது, ரவா லாடு போன்றவையும் செய்வீங்க இல்லையா?
அம்மாதிரி ஐடங்கள் பார்சல் ப்ளிஸ். :)
ம்ம்ம்...ரைட்டு ;)
ReplyDeleteஉங்க மேலயே பஜனை பாட்டு எட்டுக் கட்டியதால், எனக்கு சுண்டல் கட்டாயம் வேணும்!!
ReplyDeleteகொலுப்படிக்கட்டுகள் . இதை கொலு முடிந்தவுடன் புத்தக அலமாரியாகப் பயன்படுத்தலாமுன்னு ஒரு சமயம் எதோ ஒரு (மங்கையர் மலர்?)புத்தகத்தில் பார்த்த நினைவு. அதைபத்தியாச் சொல்லி இருக்கீங்க?
ReplyDeleteஅதுதான்னா....... போச்சு. அதை அடுத்தமுறை இந்தியா பயணத்தில் ஒன்னு வாங்கிவரணுமுன்னு இவரை விரட்டிக்கிட்டு இருக்கேன்.
விழாக்காலத்துக்கும், மகளுக்கும் வாழ்த்து(க்)கள்.
அப்படியே நம்ம கொலுவுக்கும் வந்துட்டுப் போங்கப்பா.
மெளலி, நாக்கைத் தீட்டிட்டு வராதீங்க, சுண்டல் மட்டுமே தான் கிடைக்கும், அதுவும் கூகிளார் தயவிலே! என்ன படம் கிடைக்குதோ யாருக்குத் தெரியும்??
ReplyDelete@கோபிநாத், எங்கே ஆளையே காணோம்???
@கெக்கே, என்னத்தைப் பாட்டுக் கட்டினீங்க போங்க, பிரபலமாகவே ஆகலையே??? சுண்டல் கொடுத்துடறேன். வாங்கிக்குங்க
ஆமாம் துளசி, அதே தான், ஆனால் அந்த வெயிட் உங்களுக்கு அனுமதி கிட்டுமா தெரியலை! பயங்கர வெயிட்.
ReplyDeleteஅடக் கடவுளே.......
ReplyDeleteவிரட்டலையும் மிரட்டலையும் நிறுத்தத்தான் வேணும்போல!!!!
போகட்டும்.
இன்னிக்கு என்ன சுண்டல்?
இன்னுமொரு ஐயம் இருக்கு.
தினம்தினம் சுண்டல் செஞ்சே தீரணுமா?
வயித்துக்கு ஆபத்தில்லாத வகைகள் என்னென்ன?
>>அது என்னோட எடை மாதிரி! குறையாமல் நிறைவாகவே இருக்கும் ஒரு வஸ்து.
ReplyDelete>>
படிச்சு படிச்சு எடை கூடிட்டிங்களோ?
:))))))
தினம் தினம் சுண்டல்ங்கறது எப்போ, யார் ஆரம்பிச்சாங்கனு தெரியலை துளசி, ஆனால் தினமும் ஒரு நைவேத்தியம் காலையிலேயே செய்யணும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு நைவேத்தியம் இருக்கு. அந்த அந்த நாட்களிலே தேவி என்ன உருவில் இருக்கின்றாளோ அந்த தேவிக்குப் பிடித்த உணவு. நாளைக்கு அதாவது புதன்கிழமைக்கு தேவியின் நைவேத்தியம் தயிர்சாதம். இப்படி ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு கலந்த சாதம் வரும். மாலையில் வரவங்களுக்குக் கொடுக்கிறதுக்காக சுண்டல் பண்ண ஆரம்பிச்சிருக்கலாமோ என்னமோ! தெரியலை, பொதுவாய் மட்டைத் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், ஒரு ரூபாய்க் காசு, முடிந்தால் ரவிக்கைத் துணி, வசதி உள்ளவர்கள் புடவை என்று கொடுப்பார்கள். இப்போ எல்லாம் கொஞ்சம் ஃபாஷனா மாறி பாத்திரம், பண்டம், கைப்பை, ப்ளாஸ்டிக் கூடைகள் என்று மாறி இருக்கு.
ReplyDeleteஅட, அறிவன், உ.கு.??? அதெல்லாம் இல்லைங்க, என்னமோ தெரியலை எடை குறையலை! :))))))) அதுவும் நல்லது தானே!
ReplyDeleteஅறிவன், பருமனாய் இருப்பவங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம்னு சொல்லுவாங்க, அதுக்காகச் சொன்னேன்.
ReplyDeleteஉடனடி பதிலுக்கு நன்றிப்பா.
ReplyDeleteஇங்கெல்லாம் யாரும் வர்றதில்லை. அப்படியேத் தப்பித்தவறி வரும் தோழிகளுக்கு (இதுலே பலர் வெள்ளைக்காரர்கள்) ஹெல்த் கான்ஷியஸ். அதான் பழங்களை வச்சுக் கொடுத்துடறேன். சாதவகைகள் ஓக்கே.
அதையே பகல் சாப்பாட்டுக்கு வச்சுக்கறேன்.
இதுக்கெல்லாம் சேர்த்துத்தான் விஜயதசமிக்கு கொஞ்சம் பெரிய விழாவா நண்பர்களைக் குடும்பத்துடன் கூப்பிட்டு பூஜை, பிரசாதம், டின்னர் என்று கொண்டாடிடறோம்.
வச்சுக் கொடுப்பதில்லை.
>>அதுவும் நல்லது தானே!>>
ReplyDeleteஇப்படி வேற சமாதானமா?
முயற்சி பண்ணிக் குறைங்க,அதுதான் நல்லது.
மதுரையிலருந்து பக்கம்தான் நாங்க..வந்துடறோம்.கொலுவு(சுண்டலு)க்கு...
//வச்சுக் கொடுப்பதில்லை.//
ReplyDeleteஎனக்குத் தெரிஞ்சு வச்சுக் கொடுக்கிறது எல்லாம் ஊடகங்களின் தயவாலேனு தோணுது. ஒரு பத்து வருஷம் முந்திக் கூட இத்தனை இல்லை. இப்போ வச்சுக் கொடுக்கிறது தான் பிரதானமாய் உள்ளது. :((((((( என்னவோ போங்க, துளசி! எல்லாமே மாறிட்டுத் தான் வருது..
இன்னிக்கு இணையம் சமத்தா இருக்கிறதாலே உடனடி பதில்!! இல்லைனா சில சமயம் நாள் கணக்கா பதிலே இருக்காது! :)))))))
அறிவன், நான் என்ன முயற்சி செய்யாமலா இருக்கேன்! சரியாப் போச்சு போங்க, அது என்னமோ விடாப்பிடியா அப்படியே தான் இருக்கு. சாப்பாடு என்னமோ பார்க்கிறது தான். எனக்கும், அவருக்கும் சண்டையே வரும், சாப்பிடறதில்லைனு, ஆனாலும் இப்படி!! :)))) போகட்டும், எப்போ வேண்டுமானாலும் வாங்க, சாப்பாடே போடுவோமில்ல!!
ReplyDeleteநான் இங்கயே வந்தாச்சு எனக்கு சுண்டலை இங்கயே தந்திடுங்க.
ReplyDeleteகீதா வந்துட்டேன் பா. அது என்ன பிஸ்கட் மைதாமாவு,சர்க்கரை தெரியும் எல்லாம் கலந்து செய்ததுன்னு வேற போட்டு இருக்கீங்க.
ReplyDeleteம்ம். கொலு நல்லா வே இருக்கு. பதிவும் அர்த்தமுள்ளதா இருக்கு.
இந்த நவராத்திரி போதுதான் எங்க வீடு அல்லோல கல்லோலப்படும்.
ஆராதனை செய்பவர் வருவதற்கு முன்னால் சுண்டல், ஒரு ஸ்வீட், கலந்த சாதம் எல்லாம்ம் ரெடியா இருக்கணும்.
கடவுளே !!!நினைக்கவே நடுக்கமா இருக்கு.
அது 25 வருடத்துக்கு முன்னால்:)
இப்ப வெறும் சுண்டலே.
உள்ள ஈருக்கிறபெருமாளுக்கு ஒன்று, வெளில இருக்கிற கொலு பொம்மைகளுக்குத் தனியா:)
அற்புதமான பதிவுக்கு நன்றி கீதா.
இது மஹாராஷ்டிராவில் பிரசித்தி, சங்கர் பாலி, சக்கர் பேடா என்று சொல்லலாம். மைதா, ரவை(நைஸாக இருக்கணும்),கோதுமை மாவு சமமாய் எடுத்துக் கொண்டு கலந்து வச்சுக்கணும், வெண்ணை 50 கிராமில் உப்பு, சர்க்கரை போட்டுத் தேய்த்து மாவையும் கொஞ்சம், கொஞ்சமாய்க் கலந்து கொள்ள வேண்டும். எல்லாம் நன்றாய்க் கலந்ததும், ஒரு கரண்டி பால் விட்டுப் பிசைந்து ஊற வைக்கவேண்டும் ஒரு 2 மணி நேரம். அப்புறமாய் பெரிய சப்பாத்திகளாக இட்டுக் கொண்டு டிசைன் கட்டரால் கத்திரித்து எண்ணை, நெய், வனஸ்பதியில் போட்டுப் பொரித்து எடுக்கவேண்டும். அவ்வளவு தான். வாசனைக்கு ஏலக்காயோ, எசென்ஸோ ஏதோ ஒன்று. எசென்ஸ் என்றால் ரோஸ் எஸென்ஸ் தான் நல்லா இருக்கும்.
ReplyDeleteவல்லி,
ReplyDeleteஇதுக்கு பிஸ்கெட்டாக் கட் பண்ணன்னே தனியா லாட்னா(பூரிக்குழவிக்கட்டை) இருக்குப்பா. நானும் ஒன்னு வச்சுருக்கேன்.