மத்தள வயிறனை
சிவயோகத்தில் வாயுவானது மலத்துவாரத்திற்கு சற்று உள்ளே சேர்ந்து பின் சுழுமுனையில் பிரவேசிக்கும். அப்படி வாயு குவிவதை அவரது பெருத்த வயிறாக சொல்கிறார்கள். பின் அவ்வாயு குண்டலினியுடன் சேர்ந்து பிரவேசிக்கும் போது மத்தளம் போன்ற சப்தம் செவியில் கேட்கும். தூலத்திலும் முதுகெலும்பில் சிறிதளவில் கேட்கும்
உத்தமி புதல்வனை
அப்படி அங்கு சேர்ந்து, அங்குள்ள குண்டலினி எனப்படும் விடுவிக்கும் சக்தி எழுப்பப்பட்டவுடன், அக்கணமே அங்கு விநாயகர் தென்படுகிறார். எனவே அவர் புதல்வராகிறார். வாலை எனும் குண்டலினி அதன் பின் கணவனை தவிரவேறு யாரையும் விரும்பாத தன்மையை அடைகிறது. சாதகனுக்கு முழுக்க முழுக்க நன்மையையே செய்ய திருவுளம் கொள்கிறது. அதனால் அவளுக்கு அங்கே உத்தமி என்று பெயர்.
மட்டவிழ் மலர் கொடு பணிவேனே
தேன் வழியும் மலரை கொண்டு பணிந்திடுவேன்.
மலர் என்பது வாசனையோடு கூடியது. மூலதாரத்திலிருந்து கிளம்பும் வாயுவை மலராக கூறுகின்றனர். மூலாதாரம் வாசனை தொழில் நடைப்பெற காரணமான இடம். அதன் வழியாக வந்த வாயு மலராக சொல்லப்படுகிறது. வாயு இல்லாவிடில் மலரின் வாசனையை அறிவது எப்படி?
அப்படி புருவ மத்தி வரும்போது வழியும் அமுதத்தை தேனாக சொல்கின்றனர். அந்த அமுதம் தேனின் சுவையை போல இருப்பதாலும் அந்த குறியீடு பொருந்துகிறது.
வாயுவையும், அதனால் ஏற்படும் பலனான அமுததாரையும் அங்கே வீற்றிருக்கும் இறைவனுக்கே அர்பணிக்கிறார். அதனால் என்ன ஆகிறது என்றால், ஆணவம் மிகவும் குறைந்து இயல்பான பணிவு ஏற்படுகிறது.
புருவமத்தியில் ஆணவ மலம் அழிய ஆரம்பிக்கிறது. இந்த இடத்தில் ஆணவத்திற்கு காரணமான ருத்ர க்ரந்தி எனப்படும் ஆணவ முடிச்சு பலகீனப்பட்டு ஒழிய ஆரம்பிக்கிறது. இங்கே பெறும் பலன்களை நாம் அனுபவிக்காமல் அவருக்கே அர்ப்பணிக்கும் தன்மையால் அது கைகூடுகிறது.
No comments:
Post a Comment