எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 26, 2009

பேசாத பெண்ணொன்று கண்டேன்!


இன்னிக்கு கவிநயாஇங்கே வந்தாங்க. கீழே உள்ளது அவங்க வலைப்பக்கத்தில் எழுதி இருப்பது அவங்களைப் பத்தி. எழுதுவேன் அப்பப்ப.....:) அப்படினு கொடுத்திருக்கிறதுக்குப் பதிலா பேசுவேன், எப்போவாவதுனு கொடுத்திருக்கலாமோ? :)))))))))))))))))
தமிழ் பிடிக்கும்! படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)

பேசாமல் இருப்பது என்பது அவ்வளவு சுலபமாக வராது. இவங்களுக்குக் கை வந்திருக்கிறது. வாழ்த்துகள். பேசிட்டு இருந்தது நாங்க மட்டும் தான். அவங்க வாயே திறக்கலை, சாப்பிடக் கூட! எங்க வீட்டுப் பறவைகள் கூட சத்தம் போட்டுத் தான் பேசும். எப்போப் பார்த்தாலும் சத்தமாவே இருக்கும். வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. மறக்க முடியாத மாலை. இனிமையான மறக்க முடியாத பொழுது.

30 comments:

  1. வணக்கம் என்ன ஆச்சரியம் இன்றைய என் பதிவின் தலைப்பும், அதில் உள்ள ரோஜாவும் ..... கொஞம் ஒரே மாதிரியாக

    ReplyDelete
  2. :-))
    அவங்க பேசாம மட்டும் இருக்கலை. யார் என்ன சொல்கிறாங்கன்னு கவனிச்சு கொண்டு இருந்தாங்க!

    இனிய பிற்பகல் பொழுது!

    ReplyDelete
  3. அவங்களுக்கும் சேர்த்து நீங்க பேசி இருப்பீங்க :)

    ReplyDelete
  4. ஆகா...தலைவி சூப்பர் மீட்டிங்க போல!!

    கவிநயா அக்கா தலைவியை புகழ்ந்து கவிதை பாடினாங்களா!?? ;))

    ReplyDelete
  5. ஓ!, அப்படியா?

    வந்தவர்களுக்கும், வரவேற்று உபசரித்தவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  6. வாங்க ஞானசேகரன், வந்து உங்க பதிவைப் பார்க்கிறேன். நன்றிப்பா.

    ReplyDelete
  7. @திவா, ம்ம்ம்ம்ம்?? அப்படியா? நல்லாக் கவனிச்சிருப்பாங்கங்கறீங்க? :))))))))

    ReplyDelete
  8. @திவா, நன்றிங்க, இனிய பிற்பகல் பொழுது னு திருத்தியதுக்கு! :P:P:P:P

    ReplyDelete
  9. @புலி, ஹிஹிஹி, நீங்க தான் கரெக்டா கண்டு பிடிக்கிறீங்க! சரியாச் சொல்லிட்டீங்கனு இங்கே உங்களுக்குப் பாராட்டு மழை!

    ReplyDelete
  10. @கோபிநாத், கவிதையாவது? பாடினாங்களாவது? வாயே திறக்கலை, கிளம்பறவரைக்கும். எனக்கே சந்தேகம் எப்படிச் சாப்பிடுவாங்கனு, மண்டை குடைஞ்சது! :P:P:P:P

    ReplyDelete
  11. @வாங்க மெளலி, சாப்பிட்டவங்க சரி, சாப்பிடாதவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறதுனு யோசிச்சுட்டு இருக்கேன்.:)))))))))))))) ஆகவே நன்றி ஏற்கப் பட மாட்டாது. :((((((((

    ReplyDelete
  12. கவிநயா=நிறைகுடம்.

    அப்படித்தான் இருப்பாங்க:)!

    திவா சொன்ன மாதிரி எல்லோர் பேசுவதையும் கருத்தோடு கவனிச்சிருப்பாங்க:)!

    ReplyDelete
  13. நாகை சிவா சொல்லியிருப்பதை நான் சொன்னதோடு சம்பந்தப் படுத்திக் கொள்ளாதீர்கள் மேடம், ப்ளீஸ் ப்ளீஸ்:)!

    ReplyDelete
  14. @வாங்க ராமலக்ஷ்மி, உங்க சிநேகிதியைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே?? ம்ம்ம்ம்ம்??? உங்களைக் கேட்டிருக்கணுமோ??? :))))))))))))

    நிறைகுடம் கிறது சரியான வார்த்தைதான். உங்க கணிப்பு சரினு சொல்லணும்னு தான் ஆசை, ஆனால் இடிக்குதே கொஞ்சம்! :)))))) கீழே பாருங்க!

    ReplyDelete
  15. //நாகை சிவா சொல்லியிருப்பதை நான் சொன்னதோடு சம்பந்தப் படுத்திக் கொள்ளாதீர்கள் மேடம், ப்ளீஸ் ப்ளீஸ்:)!//

    புலி, சந்தோஷமா??? :)))))))))))))))))))
    YOU TOO BRUTUS??????????? :))))))))))))))))

    ReplyDelete
  16. //நாகை சிவா சொல்லியிருப்பதை நான் சொன்னதோடு சம்பந்தப் படுத்திக் கொள்ளாதீர்கள் மேடம், ப்ளீஸ் ப்ளீஸ்:)!//


    ஹிஹிஹிஹிஹிஹி, ராமலக்ஷ்மி, நம்பிட்டோம்ல!!!!! வேறே வழி???? அ.வ.சி. :))))))))))))

    ReplyDelete
  17. நல்ல மீட்டிங் போலிருக்கு.

    கவிநயாவுக்குப் பேசா மடந்தைன்னு பட்டம் கொடுக்கப் பட்டதாமே:)

    ReplyDelete
  18. @வல்லி, தெரியலை, பட்டம் கொடுத்தவங்களைத் தான் கேட்கணும். :)))))))))))))))))) மெளனசாமியின் சிஷ்யைனு யாரோ சொன்ன ஞாபகம்! :)))))))))))))))))

    ReplyDelete
  19. ஹிஹி, பாவம் அவங்க, ஏன்டா வந்தோம்னு நொந்து போற ரேஞ்சுக்கு நீங்க பிளேடு போட்டு தள்ளி இருப்பீங்க. :)))

    @ராமலக்ஷ்மி அக்கா, சபாஷ், ரொம்பவே தேறிட்டீங்க, இதுக்காகவே உங்களுக்கு தனி ட்ரீட் தரேன், நம்ம பெங்களூர் சந்திப்புல. :))

    ReplyDelete
  20. @அம்பி, நாலு வருஷமா வராம ஏமாத்திட்டு இருக்கிற உங்களை மாதிரி இல்லை கவிநயா. உங்களைப் பார்க்க நான் மடிப்பாக்கம் வந்தேனாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்நறநறநறநறநற
    நறநறநறநறநறநறநற

    ReplyDelete
  21. @ராமலக்ஷ்மி, நாம ஏற்கெனவே பேசிட்ட மாதிரி, அம்பி கிட்டே இருந்து ட்ரீட்டை வாங்கிட்டு, மெதுவா எனக்கு ஒரு கூரியர் பார்சேஏஏஏஏஏஏல்ல்ல்ல்ல்ல், தாங்கீஸ், தாங்கீஸ்!

    அப்புறமா ஒரு ரகசியம், அம்பி கண்ணிலே கேசரினு காட்டிடாதீங்க! :P:P:P

    ReplyDelete
  22. கீதா சாம்பசிவம் said...
    //@ராமலக்ஷ்மி, நாம ஏற்கெனவே பேசிட்ட மாதிரி, அம்பி கிட்டே இருந்து ட்ரீட்டை வாங்கிட்டு, மெதுவா எனக்கு ஒரு கூரியர் பார்சேஏஏஏஏஏஏல்ல்ல்ல்ல்ல், தாங்கீஸ், தாங்கீஸ்!//

    இருங்க மேடம் இருங்க. முதல்ல அவர் என்ன கொடுக்கப் போறாருன்னு பார்ப்போம். எனக்கு ரொம்பப் புடிச்சதா இருந்தா அமுக்கிடுவேன். இல்லேன்னா அப்படியே உங்களுக்கு பார்சேஏஏஏஏஎஏல்தான்:))))))!

    //அப்புறமா ஒரு ரகசியம், அம்பி கண்ணிலே கேசரினு காட்டிடாதீங்க!//

    சமீபத்தில் ஒரு சந்திப்புக்கு ப்ளான் பண்ணப்பட்ட போது ‘கேசரி தாஸ்’ வருவதால் மெனுவில் கண்டிப்பாக யாராவது கேசரி கொண்டே வந்தாக வேண்டும் என்றெல்லாம் பேசப் பட்டது:)))!

    [அந்த சந்திப்பு திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனதெல்லாம் வேற விஷயம்!]

    ReplyDelete
  23. @ராமலக்ஷ்மிமிமிமிமி, சரி, சரி, அப்படிங்கற பேரிலே கூட யாரும் வராதபடிக்குப் பார்த்துக்கலாம். அவர் கொடுக்கிறது உங்களுக்குப் பிடிச்சால் என்ன? அதனால் பரவாயில்லை, தேர்தல் காலச் செலவுக்குனு சொல்லிட்டுத் தலைமைக் கழகத்திலே இருந்து நோட்டிஸ் வந்து பிடுங்கிட்டு வந்துடும் உங்க கிட்டே இருந்து. இதான் நம்ம கட்சி வளமை! :))))))))))))))))

    ReplyDelete
  24. மாமி நான் கூட ரெம்ப பேசமாட்டேனாக்கும் .. சென்னை வரும் போது உங்கள பார்க்க வருவேன் இல்ல அப்ப தெரியும் உங்களுக்கு..

    ReplyDelete
  25. வாங்க டிடி, அதான் சாட்டிங்கிலே கூட அநேகமாய் நான் தான் பேசிட்டு இருக்கேன் போல எல்லாரிட்டேயும், ம்ம்ம்ம்ம்ம் நானும் இனிமேல் ம்ம்ம் தவிர வேறே ஒண்ணும் சொல்லப் போறதில்லை! :P

    ReplyDelete
  26. \\
    ராமலக்ஷ்மி said...
    கவிநயா=நிறைகுடம்.

    அப்படித்தான் இருப்பாங்க:)!


    \\

    பிரண்ட்! ஒரே கல்லில் எத்தனை மாங்காய் அடிச்சிட்டீங்க. முத்துலெஷ்மி, சென்ஷி, கீதாம்மா ஆஹா சூப்பர்.

    இன்னும் எத்தனை மாங்காய் விழுந்துச்சு அப்படின்னு பின்னூட்டத்திலே சொல்லுங்கப்பா:-))

    ReplyDelete
  27. இனிமையாகப் பேசு, மெதுவாகப் பேசு கேட்டுஇருக்கிறேன். ஆனால் நேற்றுதான் என் குருஜி மீனாஜியிடமிருந்து கற்றுக்கொண்டேன் "" பேசாருந்தும் பழகு"" என்று.என்னுடைய கவலைகளை ஒரு 5 மணிநேரம் மறந்து இருக்க வைத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  28. @அபி அப்பா, அந்த மாங்காயாலேயே உங்களை அடிச்சால் என்னனு யோசிச்சுட்டு இருக்கேன் இப்போ! :P:P:P:P

    ReplyDelete
  29. @வாங்க திராச சார், நல்ல குரு தான் கிடைச்சாங்க, மெளன குரு, தக்ஷிணாமூர்த்தி மாதிரி. நல்ல பாடமும் கூட.

    ReplyDelete
  30. (sorry, no tamil font).

    ennamo en punniyaththula ellaarum santhoshama irunga :) inimae no more blogger meetings :)

    ReplyDelete