மழலைகள்.காம்
சும்மா மொக்கை போஸ்ட், மற்றப் பிரயாணங்கள் பத்தின போஸ்டெல்லாம் எழுதறாப்போல் கண்ணன் கதையை எழுத முடியாது. பல புத்தகங்களையும் பார்த்துக்க வேண்டி இருக்கு. சில சமயம் புத்தகங்கள் கிடைக்கலைனாலும் கஷ்டம் தான். (எல்லாமேவா வாங்க முடியும்?) அதோடு முன் கூட்டியே ஒரு நாலைந்து போஸ்டுக்காவது எழுதியும் வச்சுக்கணும். ஆனால் இப்போக் கொஞ்ச நாட்களா அது முடியாமல் போயிடுச்சு. அதனால் வாரம் ஒரு போஸ்ட் கூடச் சரியாப் போடமுடியலை. வரும் வாரத்தில் இருந்து அதைச் சரி செய்துடணும்னு முயற்சிகள் எடுத்துக்கறேன். எதிர்பாராமல் வரும் வேலைகள் தவிர மற்றபடி ஒரு மாதிரி சமாளிச்சுடுவேன்னு நம்பறேன். இப்போ இங்கே ஒரு முக்கியமான தளம் பற்றிய அறிமுகம். ஏற்கெனவே நான் வலைச்சரம் எழுதினப்போக் குறிப்பிட்டிருக்கேன். என்னோட நக்ஷத்திரப் பதிவுகளிலேயும் குறிப்பிட்டிருக்கேன். ஆனாலும் மீண்டும் இப்போக் குறிப்பிடுகிறேன். இரண்டு நாட்கள் முன்னால் திரு ஆகிரா என்னும் ராஜகோபாலன் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தப்போ மழலைகள்.காம் தளத்திற்கு ஏற்கெனவே எழுதின சிலர் கூடத் தொடர்பு கொண்டு மீண்டும் எழுதச் சொல்லுங்கனு கேட்டுக் கொண்டார். அவங்களோட தனித் தொடர்பு கொள்வதற்குப் பதிலாய் ஒரு பதிவாய்ப் போட்டால் தெரிஞ்சுக்காத இன்னும் பலரும் தெரிஞ்சுக்கலாம். அவங்க படைப்புகளையும் தரலாமே? பலருக்கும் பயன்படுமேனு தோன்றியதால் இந்தப் பதிவு.
மழலைகள்.காம். இந்தத் தளம் அநேகமாய் யாருக்கும் தெரிஞ்சிருக்காது. நண்பர் ஆகிரா என்பவரால் ஆரம்பிக்கப் பட்டது. இவர் ஒரு மெகானிகல் எஞ்சினியர், சில காலம் வேலையில் இருந்துவிட்டு, பின்னர் காஞ்சிபுரத்தில் வந்து முழுநேர வெப் டிசைனராகப் பணிபுரிந்து வருகிறார். பல பிரபலமான தளங்களையும் இவரே பராமரிப்புச் செய்து வருகிறார்.Akira மழலைகள்.காம் தளத்தை எப்போ ஆரம்பிச்சார்னு எனக்குத் தெரியாது. ஆனால் நான் 2006-ல் தமிழில் எழுத ஆரம்பிச்சதிலே இருந்து மழலைகள்.காம் தளத்தில் எழுதிட்டு இருக்கேன். இதிலே குழந்தைகளுக்குப் பிடிக்கும் எதையும் நாமும் எழுதலாம். குழந்தைகளையும் எழுத வைக்கலாம். வரைய வைக்கலாம். பாட வைக்கலாம். உங்க குழந்தை செய்யும் முதல் விளையாட்டிலே இருந்து குழந்தையோடு பேச ஆரம்பிச்ச முதல் பேச்சு வரையிலும் அனைத்தையும் பகிர்ந்துக்கலாம். உங்க சின்ன வயசு அநுபவங்கள், பள்ளி அநுபவங்கள்னு எல்லாத்தையும் சொல்லலாம். குழந்தைகளுடைய தனிப்பட்ட சில திறமைகளை இதன் மூலம் வெளிக்கொணரலாம். வெளிநாட்டு வாழ் குழந்தைகள் தமிழ் தெரியலையேனு நினைக்கவேண்டாம். ஆங்கிலத்தில் எழுதி அனுப்பலாம். Mazalais.comஇதோ இங்கே போய்ப் பாருங்க, நம்ம பூஜா எழுதி இருக்கிறதெல்லாம் போட்டிருக்காங்க. அது மாதிரி உங்க குழந்தைகளோட படைப்புக்களும் வரும்.
இப்போ முக்கியமா இதை இங்கே குறிப்பிடறதுக்குக் காரணமே, கொஞ்சம் பிரபலமானவங்களும் இதிலே பங்கெடுத்துக்கணும்னு திரு ஆகிரா ஆசைப்படுவதைச் சொல்லத் தான். ஆசிரியர் குழுனு நாங்க ஒரு பத்துப் பதினைந்து பேர் இருக்கோம் தான். ஆனாலும் கொஞ்சம் பிரபலம் ஆனவங்களும் எழுதினா இன்னும் அதிகம் பேரைச் சென்றடையும் வாய்ப்பு இருக்கே. அதனால் ஏற்கெனவே இந்த ஆசிரியர் குழுவிலே இருக்கிற ஷைலஜா மறுபடியும் இதிலே பங்களிக்க ஆரம்பிக்கணும்னு கேட்டுக்கிறேன். முன்னாலே ஷைலஜா ஓரிரு படைப்புகள் அளித்திருக்கிறார். இனியும் தொடர்ந்து அளிக்கணும் என்று கேட்டுக்கொள்கிறேன். மற்றப் படைப்பாளிகள் யாராக இருந்தாலும் அவங்களும் தொடர்ந்து அளிக்கணும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதை இங்கே போடறதுக்குக் காரணமே பல தரப்புக்களுக்கும் போய்ச் சேரணும் என்ற நோக்கத்திலேயே. தளத்தைச் சென்று பாருங்கள். தமிழ் தெரியாத குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்தலில் இருந்து அனைத்தும் கற்பிக்கும் ஒரு முன் மாதிரியான தளம் இது.
சேவை நோக்கத்தில் இதில் அனைத்து ஆசிரியர்களும் எழுதி வருகின்றனர். திரு ஆகிரா அவர்களும் சேவை நோக்கத்திலேயே இந்தத் தளத்தை நடத்தி வருகின்றார். ஆகவே அனைவரின் ஆதரவையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வருங்காலக் குழந்தைகளின் மன வளத்திற்கு ஒரு உத்தரவாதம் அளிக்கும் தளத்தை அனைவரும் சேர்ந்து முன்னேற்றுவோம். நன்றி.
குழந்தைகளுக்குனு போட்டுருக்கேளே பாட்டி, அப்போ தக்குடு கூட எழுதலாம் இல்லையா??..:))
ReplyDeleteதாக்குடு, போனாப் போறதுனு உன்னை அநுமதிக்கலாம். ஆனா ஒரு கண்டிஷன், என்னை நீ பாட்டினு கூப்பிடக் கூடாது, என்ன சொல்றே?
ReplyDeleteநன்றி கீதாஜி, விரைவில் மழலைகள்.காம் வலைப்பூவிற்கு எனது பங்களிப்பும் இருக்கும். யாத்ரா முடிச்சு வந்தவுடன் உங்களுடன் கலந்தாலோசிச்ச பிறகு துவங்குகிறேன். நன்றி.
ReplyDeleteஅஷ்வின்ஜி
www.frutarians.blogspot.com
nice ji, thanks for sharing
ReplyDeletenice ji, thanks for sharing
ReplyDelete//ஷைலஜா மறுபடியும் இதிலே பங்களிக்க ஆரம்பிக்கணும்னு கேட்டுக்கிறேன். முன்னாலே ஷைலஜா ஓரிரு படைப்புகள் அளித்திருக்கிறார். இனியும் தொடர்ந்து அளிக்கணும் என்று கேட்டுக்கொள்கிறேன்//////
ReplyDeleteமிக்க நன்றி கீதா. பத்திரிகைப்பக்கம் கொஞ்சம் அதிகம் திரும்பிவிட்டதால் இணையப்பக்கம் அதிகம் எழுத இயலாமல்போய்விட்டது. அண்மையில் சில குழுக்களில் அளித்ததும் வலைப்பூவில் அளித்த படைப்புக்கள்தான். மழலைகள். காமிற்கு சற்றே புதுமையாய் ஏதும் செய்ய நினைத்து அதுமுழுமையடையாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது, விரைவில் மழலைகளுக்கான வித்தியாசமான ஒரு களம் என்னிடமிருந்து வர இருப்பதை தெரிவித்துக்கொள்கிறேன் திரு ஆகிராவிற்கும் இதுபற்றி தனிமடல் இடுகிறேன். இந்த பொம்மைக்கு சாவிகொடுத்த பெருமை உஙக்ளைச்சேரும்! நன்றி மறுபடி!
கண்ணன் கதையைப் படிக்கும் பொழுது, இப்பொழுது நீங்கள் சொல்லியிருப்பவை, சொல்லாமலே உணர்ந்தவை தான். எத்தனை ரெப்ரன்ஸ் நூல்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்களேன், அந்த 'சொல்லும் முறை' இருக்கிறதே, அது மிகவும் அழகாக இருக்கிறது. தொடர்ச்சியாக எழுதி அதை நீங்கள் முடித்து விட்டீர்களென்றால், உண்மையிலேயே அது ஒரு இமாலய சாதனை தான். இந்த நேரத்தில் ஒரு விஷயம் சொல்கிறேன். இனி வரும் பகுதிகளை, ஒரு பதிவு ஒரு அத்தியாயம் வருகிற மாதிரி,அச்சில் கிரெளன் சைஸ்ஸில் 8 பக்கம் வருகிற மாதிரி, இன்னும் கொஞ்சமே அதிகமாக எழுதி வாருங்கள். ஒரு stipulated time frame fix பண்ணிக்கங்க. எழுதிவாருங்கள். தெய்வானுகூலத்தில் நிறைவடைந்து விடும். அதற்கு பிறகு அதுவே தன்னைப் பார்த்துக் கொள்ளும்.
ReplyDeleteஇன்றுதான் இந்த தளம் பற்றி அறிகிறேன். நன்றி.
ReplyDeletekandipa nanum panren
ReplyDeleteநல்ல முயற்சி! இப்ப தயாரிக்கப்படர கொழந்தைகள் பாதி நேரம்- net ல தான் இருக்கிறார்கள்! அதுகளுக்கு கொஞ்சம் நல்ல விஷயங்கள அப்ப அப்ப சொல்லுத்தர வசதியா இருக்கும்!
ReplyDeleteKeep it up!
வாங்க ராம்ஜி யாஹூ, நன்றிங்க.
ReplyDeleteவாங்க ஷைலஜா, உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் அனைவரும். வந்ததுக்கும், சீக்கிரமா எழுதறேன்னு உறுதி கொடுத்ததுக்கும் நன்றிங்க.
ReplyDeleteவாங்க ஜீவி சார், பாராட்டுக்கு முதலில் நன்றி. அப்புறம் பெரிசா எழுதறதுனா கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. இதுவே ரொம்பப் பெரிசா இருக்குனு நிறையப் பேர் சொல்றாங்க. வெகு சிலரே குட்டியா இருக்குனு சொல்றாங்க. உண்மையிலேயே தெய்வ அநுகூலம் தான் நிறைய வேணும் இதை எழுதறதுக்கு. அதுக்கு உங்க ஆசிகளும் பிரார்த்தனையும் வேண்டும். நன்றி சார்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், நன்றி, பயனுள்ள தளம்.
ReplyDeleteஎல்கே, பாருங்க சீக்கிரமா, அடுத்த வருஷம் திவ்யாக்குட்டியும் எழுத ஆரம்பிச்சுடுவா, அல்லது வரைய ஆரம்பிப்பா, அதிலே போடலாமே? :D
ReplyDeleteவாங்க மாதங்கி, உண்மைதான் குழந்தைகள் நிறையக் கற்றுக்கொள்ள முடியும்.
ReplyDeleteதளத்தின் அறிமுகத்துக்கு நன்றி தலைவி ;-))
ReplyDeleteippave kirukara nalla.. kandippa podalam
ReplyDeleteவாங்க கோபி, ரொம்பவே பிசி போல, கண்ணன் தொடர்களிலே கூடப்பார்க்க முடியலை?? :))))))
ReplyDeleteவாங்க எல்கே, மறு வரவுக்கு நன்றி. கட்டாயமாய் ஊக்கம் கொடுங்க. நல்லாக் கிறுக்கினாலும் அதிலும் ஏதேனும் செய்தி ஒளிந்திருக்கும். வாழ்த்துகள். குழந்தைக்கு ஆசிகள்.
ReplyDeleteஉய்..யோ !! உங்க ஃபோட்டோ பாத்தேன் அங்க!!பேசற படிக்கற படைப்புக்களை உண்டாக்கியவரின் உருவம் கிடைத்தது!! 26 /28 வயது மிஸஸ் சிவம் தான் போஸ்ட் ல போட்டிருந்தேளே !!
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட பதிவிலே இருக்கும் படம் கல்யாணமாகி ஒரு மாசத்திலே எடுத்தது. :)))) அப்போ எனக்கு வயசு பத்தொன்பது தான். 26,28 வயசு மாதிரி இருக்கேனா என்ன??? :))))))) ஹிஹிஹிஹி, மழலைகள்.காம் பத்தி இத்தனை நாள் எழுதாததன் காரணமே நம்ம படம் அங்கே இருக்கேனு தான். இப்போ எல்லாரும் பார்த்தாச்சு! :P :P
ReplyDelete