கைகள் நடுங்கின வித்யாவுக்கு. ஆயினும் விடாமல் தைரியத்தை வெளியே காட்டிக்கொண்டாள். "அந்த ஜூசை என் கணவருக்குக் கொடுத்துடறேனே!" என்றாள். பின்னால் திரும்பி ஜூஸ் வைத்திருக்கும் கூடையை எடுக்கவும் முயன்றாள். அவள் கைகளைத் தன் ஒரு கையால் இறுகப் பற்றின அந்தப் புதிய விருந்தாளி, மற்றொரு கைக்குப் பிஸ்டலை இதற்குள் மாற்றி விட்டிருந்தான். அந்தப் பிஸ்டலை ரமேஷின் நெற்றிப் பொட்டில் அழுத்திக் கொண்டே இன்னொரு கையால் வித்யாவின் கைகளை முறுக்கினான். அம்மா! எவ்வளவு பலம்! கைகளை விடுவித்துக்கொள்ள வித்யா போராடினாள். பக்கத்திலேயே இருந்த ரமேஷுக்கு வித்யாவின் கஷ்டம் காணச் சகிக்கவில்லை. தன் மனைவியை, அருமை மனைவியை விடுவிக்கவேண்டும் என நினைத்துக் காரை ஓரமாய் நிறுத்த எண்ணினான்.
அவன் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவன் போல் வந்தவன், "திரு ரமேஷ், அப்படித்தானே உன்னை அழைக்கவேண்டும்?? வண்டியை நடுவில் எங்காவது நிறுத்தி விட்டு உதவிக்கு யாரையானும் கூப்பிட எண்ணினாயெனில்! என்று ஆரம்பிக்க, ரமேஷ் வண்டியை நிறுத்தியே விட்டான். என்னனு பார்த்தால் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறையினர் வண்டியை நிறுத்தி இருந்தார்கள். அந்த வழியாக ஊர்வலம் ஏதோ போவதால் செல்லும் வழியை மாற்றச் சொல்லி அறிவுறுத்தினார்கள். ரமேஷின் மனதில் ஓர் ஓரத்தில் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. வண்டியை அவர்கள் எடுக்கச் சொல்லும்போது எடுக்காமல் இருந்தால் வந்து என்னனு கேட்பார்கள் அல்லவா? அப்போச் சொல்லிடலாம். தனக்குள் முடிவு கட்டிக் கொண்டான். அவன் செல்லவேண்டிய இடத்தைக் கேட்டுக் கொண்டு வண்டியைப் போக அனுமதிக்க, ரமேஷ் வண்டியை எடுக்கவில்லை. பின்னால் இருந்து பிஸ்டல் முதுகில் அழுந்தியது. ஆனாலும் ரமேஷ் பேசாமல் இருக்க வித்யாவோ பதறினாள். "ரமேஷ், ரமேஷ், வண்டியை எடுங்க, சீக்கிரம், அதுக்குள்ளே அவன் சுட்டுடப் போறான்." என்று பதற, பின்னால் இருந்தவனோ பெரிதாய்ச் சிரித்தான். திரு ரமேஷ், உன் மனைவி சொல்வதைக் கேள். இல்லை எனில் உன்னைச் சுட்டுவிட்டு, உன் மனைவியையும் சுட்டுவிட்டு நான் ஜெயிலுக்குப் போகத் தயார். இரண்டு குற்றங்களுக்கும் ஒரே தண்டனைதானே? எனக்கு ஒன்றுமில்லை. நான் தயார்! ஆனால் உன் அருமைக்குழந்தை! நினைத்துப் பார்த்துக்கொள்! அம்மாவும் இல்லாமல், அப்பாவும் இல்லாமல், யார் ஆதரவிலோ வளரும், பரவாயில்லையா??"
**************************************************************************************
குழந்தை பிறந்ததில் இருந்து அன்று வரையிலும் நடந்த சம்பவங்கள் அவன் கண் முன்னே வந்து போயின. அவனும் வித்யாவும் போட்டி வைத்துக்கொண்டார்கள். பையனா, பெண்ணா? என. வித்யா பெண்தான் என்று சொல்ல, அவனுக்கும் உள்ளூறப் பெண் குழந்தைதான் வேண்டும் என இருந்தாலும் வித்யாவைச் சீண்டுவதற்காகப் பையன் என்பான்.
"உங்களை மாதிரி அசடாவா?"
"இல்லை உன்னைப் போல் புத்திசாலியா!"
"ஐயே, பையன் எல்லாருமே அசடு வழிவாங்க!"
"பொண்ணுங்க எதிரேதான்!"
"அது சரி வித்யா, பையன் பிறந்துட்டா?? என்ன செய்வே?"
"பிறந்தால் என்ன?? நல்ல புத்திசாலியா வளர்ப்பேன்." கலகலவெனச் சிரிப்பாள். அவனுக்கும் சிரிப்பு வரும்.
**************************************************************************************
இப்படி இரண்டு பேரும் பேசிக்கொள்ள, கடைசியில் இருவரின் விருப்பப் படியும் பெண் குழந்தையே பிறந்தது. குழந்தைக்குப் பாலூட்டுவதிலிருந்து, அதை எப்படி எல்லாம் வளர்க்கணும், எந்த வயசில் என்ன சொல்லிக் கொடுக்கணும், என்ன படிக்க வைக்கணும், குழந்தையின் விருப்பத்தை எப்படித் தெரிஞ்சுக்கறதுனும், அதை நிறைவேற்றுவது பற்றியும் ஒரு பெரிய திட்டமே போட்டு வைச்சிருக்காங்க. ரமேஷின் தொண்டையை அடைத்துக்கொண்டது. இது எல்லாமும் அவன் நினைவில் வந்து மோத, வேறு வழியில்லாமல் காரைக்கிளப்ப, அருகே வந்த போலீஸ் அதிகாரி, "என்ன பிரச்னை?" என்று கேட்க அவசரம், அவசரமாக, "ஒன்றுமில்லை, கொஞ்சம் ஸ்டார்டிங் பிரச்னை!"என்று சமாளித்தாள் வித்யா.
ரமேஷ் தன்னையுமறியாமல் அவன் போகவேண்டிய பாதையில் போகாமல் எங்கேயோ போய்க் கொண்டிருந்தான். பின்னால் இருந்தவனோ சிரித்த வண்ணம்,"என்ன ரமேஷ், உன் பாஸ் உன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பாரே? அங்கே போகவேண்டாமா?" என்றான். அதற்குள் அவன் தொலைபேசி அழைத்தது. பிஸ்டலால் ரமேஷின் நெற்றிப் பொட்டை அழுத்திக்கொண்டே கைபேசியை எடுத்துப் பார்த்தான் வந்தவன்.
"ஹா,ஹா,ஹா,ஹா,ஹா!" பலமாகச் சிரித்தான்.
வித்யா பயத்தோடு அவனையே பார்க்க, அவன் சிரித்தான் மீண்டும். உன் குழந்தையைப்பார்த்துக்க வந்தாளே, அவள் என்னோட ஆள். அவள் தான் இப்போப் பேசறாள். உன் குழந்தையைக் கூட்டிக் கொண்டு ஒரு இடத்துக்கு வரச் சொல்லி இருக்கேன். அங்கே போய்க் கொண்டிருக்கிறாளாம்." என்றான்.
யூ,யூ,யூ," எனத் தடுமாறினான் ரமேஷ். "என்னபபா, ஆங்கிலம் தடுமாறுதா? பரவாயில்லை, தமிழிலேயே திட்டேன். எனக்குத் தமிழ் நன்றாய்ப் புரியும்." என்ற வண்ணம் கைபேசியில் சிறிது நேரம் பேசினான் அவன். "ஹெல்லோ, 327!" என அழைப்பது கேட்டது. சற்று நேரம் வரை அவன், "சரி, சரி, நல்லது, அப்படியே செய்" என்று கூறியது மட்டுமே கேட்டது. பின்னர் அவன் கைபேசியை மூடப் போனபோது வித்யா கத்தினாள். "என்னிடம் கொடு, என் குழந்தை கிட்டே நான் பேசணும்!" என்றாள். ரமேஷுக்கே ஒரு நிமிஷம் ஆச்சரியம் தான். எங்கேருந்து இவ்வளவு தைரியம் இவளுக்கு வந்தது??
வந்தவனும், "ஓ, அம்மா செண்டிமெண்ட்?? சரி, சரி, உன் பெண் பேசினால் நீயும் பேசு!" என்றான். கைபேசி வித்யாவிடம் கொடுக்கப் பட அவள் பேசினாள். "சுமிக்கண்ணு, சுமிக்கண்ணு, எங்கேம்மா இருக்கே?" என்று அழுதுகொண்டே கேட்க, ரமேஷ் அவளை விட ஆத்திரமாய், "ஸ்பீக்கரை ஆன் செய்!" என்று அவளிடம் கிசு கிசுக்குரலில் சொல்லப் பின்னால் இருந்தவன் வித்யாவின் கைகளில் இருந்த தொலைபேசியைப் பிடுங்கினான்.
"போதும், பேசினது. உங்க பொண்ணு இப்போ தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துட்டு இருப்பா. அடுத்து நீங்க இரண்டு பேரும் நான் சொல்லப் போகும் ஒரு காரியத்தைச் செய்யணும், அதைச் செய்தால் அப்புறமா உங்க பொண்ணை என்ன பண்ணலாம்னு நான் யோசிப்பேன்."
எங்க பொண்ணை எங்க கிட்டேக் கொடுத்துடு1 அவளை ஒன்றும் செய்யாதே!" ரமேஷ் கெஞ்ச, வித்யாவும் அழுகையோடு ஆமோதித்தாள். வந்தவனுக்கு அவர்களின் இந்த நிலைமை மிகவும் சிரிப்புக்கிடமாய் இருந்தது. ரசித்துச் சிரித்தான். "நான் இப்போது சொல்லப் போவதை முதலில் இருவரும் கேளுங்கள். அதை ஒழுங்காய்ப் பண்ணுங்கள். அதுக்கப்புறமாய்ப் பார்க்கலாம்." என்றான்.
சொல்லித் தொலை!" ரமேஷ் குரலில் இருந்த வெறுப்பைக் கவனித்தவன் மீண்டும் சிரித்தான். "உன் பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கு?"
"அப்பாடா, பணத்துக்கா இவ்வளவு?? இந்தா எடுத்துக்கோ, ஐம்பதினாயிரம் வரை இருக்கும்."
"ஹாஹா,ஹா, உன் பெண்ணின் உயிருக்கு வெறும் ஐம்பதாயிரம் தானா?"
பின்னே? இப்போ என் கிட்டே இவ்வளவு தான். வித்யா உன் கிட்டே எவ்வளவு இருக்கு? "
நான் கொஞ்சம் தான் கொண்டு வந்தேன். ஒரு ஐந்தாயிரம் இருக்கும். செக் புத்தகம் கூட இல்லையே?"
அதனால் என்ன? இரண்டு பேருக்கும் எந்த வங்கியில் கணக்கு இருக்கு?"
வங்கியின் பெயரைக் கேட்டுக் கொண்டவன், அவர்கள் செல்லும் வழியிலேயேஅந்த வங்கியின் ஏடி எம் எனப்படும் பணம் எடுக்கும் இயந்திரம் இருக்கும் இடத்துக்குப் போகச் சொன்னான். ரமேஷ், "இவன் என்ன கேட்கப் போகிறான்?" என்ற சிந்தனையில் ஆழ்ந்தான்.
தொடரும்.
மாமி எப்ப கதை எழுத ஆரம்பித்தீங்க. பின்றீங்க ...
ReplyDeleteநல்லவேளை கீதாம்மா ! வன்முறை இல்லாமல் கதை
ReplyDeleteசுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது
நல்ல பகிர்வு !
என்னதான் வேணுமாம் அவனுக்கு...!! ஏதோ பாடம் கத்துக் கொடுத்துட்டு விட்டுடுவானோ...
ReplyDeleteவாங்க எல்கே, கதையோட இரண்டாம் அத்தியாயத்திலே முதல்லே வந்திருக்கீங்க. ஏற்கெனவே ஒரு கதை எழுதி இருக்கேனே! பீகாபூ, ஐ ஸீ யூ என்ற தலைப்பிலே. :))))))))) அதுவும் கொஞ்சம் த்ரில்லிங் டைப்தான். ஆனால் உங்களாட்டமா எழுத வரலை! :( இது நிஜம்!
ReplyDeleteவாங்க ப்ரியா??? வன்முறை?? இருக்காதுனு நினைக்கிறேன், பார்ப்போம், அந்த வில்லர் என்ன நினைக்கிறாரோ? :))))))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், அ.கு.வா இருந்தா எப்படி?? :P
ReplyDeleteகுழந்தையின் அருமையை பணம் சேர்க்கும் பெற்றோருக்கு புரிய வைக்கும் நாடகமோ?
ReplyDeleteஅட??? சாந்தியா இங்கே?? ஆச்சரியமா இருக்கே? முதல் வருகை?? வாங்க, சாந்தி, வருகைக்கு நன்றி. எல்லாரும் அவங்க அவங்க கோணத்திலே யூகிச்சு வைங்க, கடைசிலே பார்க்கலாம், என்ன ஆகப் போகுதுனு! :))))))))))))))
ReplyDeleteAvv.. naan kooda edho chinna kadhainu nenachu aarambichitten nethu.. innikku 2nd partlayum mudiyala :(( Appadina idhu nedunthodaro !!! Thorayama ethana episode plan panni irukeenga??
ReplyDelete[aapisla thamizh font illae.. siramathirkku mannikavum]
ஜி3?? வாங்க, வாங்க வராதவங்க எல்லாம் வரீங்க?? நெடுந்தொடர்னு சொல்ல முடியாட்டியும் தொடர் தான். இன்னும் இரண்டு, மூன்று(???) பதிவுகளில் முடியும்னு நம்பறேன். கதையின் நாயக, நாயகியரும், வில்லரும் என்ன நினைக்கிறாங்களோ தெரியலையே! :))))))))
ReplyDeleteசுவாரஷ்யமா போகுது... என்ன ஆகுமோ?
ReplyDelete