அப்பாவி தங்கமணி என்ற, என்னால் ஏடிஎம்னு செல்லமா :P அழைக்கப் படும் ஏடிஎம் அவர்கள், கடவுளும், நானும் என்ற தலைப்பில் எழுதச் சொல்லி இருக்காங்க. ஏற்கெனவே சாமியைப் பத்தி மட்டும் தான் எழுதிட்டிருக்கேன். ஆசாமிகளைப் பத்தி எழுதறதில்லை. இதிலே இன்னும் சாமியைப் பத்தி என்ன எழுதறதுனு யோசிச்சுட்டே அவங்க பதிவைப் பார்த்தேனா?சின்ன வயசிலே இருந்து ஆரம்பிச்சு எழுதி இருக்காங்க. அந்தச் சின்ன வயசிலே கோயிலில் வாங்கின பிரசாதம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் எல்லாம் விட்டுட்டாங்கனு புரிஞ்சது. நாம இருக்கோமே! அதை எல்லாம் கவர் பண்ண. வேறே என்ன வேலை?
எப்போனு தெரியாது, நினைவு தெரிஞ்சதிலே இருந்து பிள்ளையார் தான் பிரண்டை எனக்கு. அவரோட சண்டையெல்லாம் போடுவேன். இப்போக் கூட முந்தாநாள் கூகிள் தடை போட்டப்போ, பிள்ளையாரே நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. என்னாலே முடிஞ்ச வரைக்கும் பார்த்துட்டேன், இனிமேலே நீதான் எனக்கு எல்லாத்தையும் திரும்பத் தரணும்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டேன். நிஜம்மாவே பொறுப்பைப் பிள்ளையாரிட்டக் கொடுத்ததாலோ என்னமோ அன்னிக்கு ரொம்பவே சீக்கிரமாயும், நல்லாவும் தூங்கினேன். மனசிலே இருந்த கலக்கம் தெளிந்து போயிருந்தது. சுபாஷிணி கிட்டேயும் அதைச் சொன்னேன். கவலையாயே இல்லை எனக்கு, எல்லாம் சரியாயிடும்னு தோணுதுனு சொன்னேன். காலையிலேயும் உடனே செக் பண்ண முடியலை. வீட்டில் வேலை இருந்தது. எல்லாம் முடிச்சுட்டு பதினோரு மணிக்குத்தான் பார்த்தேன். ஒன்பதரை மணிக்கே சுபாஷிணி(அம்பியோட சிநேகிதி)யும், தமிழ்ப்பயணியும் எல்லாம் சரியாயிடுத்துனு மெயில் போட்டிருந்தாங்க.அது வரைக்கும் நான் பாட்டுக்கு வேலையைப் பார்த்துட்டு இருந்தேன். பிள்ளையார் கைவிட மாட்டார்னு உறுதியாத் தெரியும்.
அம்மா எப்போவும் சொல்றது ஈஸ்வரி என்ற வார்த்தைதான். அப்பாவோ வெங்கடாசலதி, நீ தான்ப்பா னு சொல்லுவார். அண்ணாவுக்கும், தம்பிக்கும் அப்போ எந்த சாமி பிரியம்னு சரியாத் தெரியலை. ஆனால் மூணு பேரும் சேர்ந்தே வடக்கு மாசிவீதி, மேல மாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு பிள்ளையார் கோயிலுக்குப் போவோம். நாங்கல்லாம் போன காலகட்டத்திலே பிள்ளையார் இப்போ இருக்காப்போல் ஜெயில் சிறையில் இல்லை. தன்னந்தனியா காத்து வாங்கிட்டு இருப்பார். ஆல மரம் அப்போ இருந்தது. இப்போ தெரியலை. வேம்பும், அரசும் கூட இருந்தது. பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் மரம் எல்லாமும். மர நிழல் வெகு தூரத்துக்கு வெகு தூரம் இருக்கும். அந்த நிழலில் பிள்ளையாரைச் சுத்தறதே ஒரு சுகம். நாங்க யாரானும் சாப்பிடலைன்னா, உடனே அம்மா ஒரு கிண்ணத்தில் சாதத்தைப் போட்டு நெய் ஊத்தி, பிள்ளையார் கோயில் பூசாரிகிட்டே மந்திரிச்சுண்டு வரச் சொல்லுவா. நாங்களும் மந்திரிச்சுக் கொண்டு வருவோம். பிள்ளையார் மகிமையா, மந்திர மகிமையா தெரியாது, அப்புறமாச் சாப்பிட ஆரம்பிப்போம்.
சரியா விபரம் புரியாத அந்த வயசிலே பிள்ளையார் கொழுக்கட்டையை நிறையச் சாப்பிட்டுத் தான் தொந்தி பெரிசா இருக்குனு நினைச்சுப்பேன். நாமளும் பிள்ளையார் மாதிரிக் கொழுக்கட்டை சாப்பிட்டால்னு தோணும்? எங்கே? அதெல்லாம் கணக்காய்த் தானே கொடுப்பாங்க! :P ஆடி வெள்ளி, தை வெள்ளிக்கிழமைகளில் அம்மா அரிசி மாவில் வெல்லம் சேர்த்துக் கிளறிச் சின்னச் சின்ன உருண்டைக் கொழுக்கட்டை பண்ணிப் பிள்ளையாருக்கு நிவேதனம் பண்ணிட்டு அங்கேயே விநியோகம் பண்ணிட்டு வரச் சொல்லுவா. வடக்கு மாசி வீதியிலேயே இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயிலுக்கும் போவோம். அது ஒரு மாடக் கோயில்னு அப்போத் தெரியாது. அதனோட படிகளில் ஏறிப் போறச்சேயே நடுவில் செதுக்கி இருக்கும் கல் யானையின் மீது உட்கார்ந்து விளையாடறது ஒரு ஆநந்தம். காலை வேளையிலேயே அங்கே நடக்கும் கோஷ்டியில் சுடச் சுடக் கிடைக்கும் பிரசாதத்தின் ருசியோ ருசி!
அது தவிரப் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெரியப்பாவும், அவரோட வக்கீல் நண்பர்களும் சேர்ந்து நடத்தும் பஜனைகள், ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் ஒவ்வொருத்தர் வீடு என முறை வைத்துக்கொண்டு அப்பா, பெரியப்பா வீடுகளில் நடத்தும் வெங்கடாசலபதி சமாராதனைகள், சமாராதனை என்றால் தெருவே வந்து சாப்பிடுவாங்க. மிகப் பெரிய அளவில் நடக்கும். கார்த்திகை மாதம் லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரத்தில் பெரியம்மா/பெரியப்பா குடி இருந்த ஸ்டோரில் நடக்கும் வைக்கத்து மஹாதேவ அஷ்டமி சமாராதனை, (பெரிய அண்டாக்களின் சாதம், சாம்பார், பாயாசம் ஒரே ஆள் ஒரு அண்டாவைத் தூக்கிட்டு வருவார், ஆச்சரியமா இருக்கும். இலைகளும் முதல் பந்தியில் எண்ணிப் போடுவாங்க, ஆனால் ஒண்ணு கூடுதலா வரும்னு சொல்வாங்க) , இந்த வைக்கத்தஷ்டமியிலே மஹாதேவருக்கு மாவிளக்குப் போடும் வழக்கமும் உண்டு. அந்த மாவிளக்கை வீட்டில் சுவாமி அலமாரியிலேயே வைச்சு யாருக்கானும் வயிற்றுத் தொந்திரவுன்னா எடுத்து வாயிலே போடுவாங்க. மாவிளக்கைச் சாப்பிடறதுக்குன்னே வயிற்று வலினு சொன்னதும் உண்டு!
நடு நடுவே ஆடிவீதிகளில் நவராத்திரிக் கச்சேரிகள், சிருங்கேரி ஸ்வாமிகளின் சொற்பொழிவுகள், கிருபாநந்த வாரியார், புலவர் கீரன், சேங்காலிபுரம் அநந்தராம தீக்ஷிதர், சந்தான கோபாலாசாரியார் போன்றவர்களின் உபந்நியாசங்கள், வாஞ்சியம் ஸ்ரீராமச்சந்திர பாகவதரின் அஷ்டபதி நிகழ்ச்சிகள், கிரிதாரி பிரசாத் அவர்களின் ஆன்மீகச் சொற்பொழிவுகள், திருப்புகழ் மணி அவர்களின் திருப்புகழ் பஜனை நிகழ்ச்சிகள்,ஸ்வாமி ஹரிதாஸ்கிரி அவர்களின் பஜனைகள், சொற்பொழிவுகள் என ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல? அதோடு கூட மார்கழி மாதங்களில் பெண் குழந்தைகளுக்கு என்றே திருமதி ராஜம்மாள் சுந்தரராஜனால் தானப்ப முதலி அக்ரஹாரம் கண் ஆஸ்பத்திரி என அழைக்கப்பட்ட மங்கள நிவாஸில் நடக்கும் திருப்பாவை வகுப்புகள், அதிலே நடக்கும் பக்தி கலா நிகழ்ச்சி எனப்படும் நாட்டிய நாடக நிகழ்ச்சிகள், வீதிகளில் உலா வந்து அதிகாலையில் செய்யப் படும் பஜனைகள், வக்கீல் ஐயாசாமி அவர்களும், வக்கீல் ராமாராவ் அவர்களும் மார்கழி மாதங்களில் நடத்தும் ஐயப்பன் பஜனைகள், சமாராதனைகள், (அப்போல்லாம் மலைக்குப் போறதுக்கு முந்தி அன்னதானம்னு பண்ணிட்டுப் போவாங்க. போயிட்டு வந்து சமாராதனை பெரிய அளவில் நடக்கும்)
இது தவிர இருக்கவே இருக்கு மதுரைக்கே உரிய சித்திரைத் திருநாள், வைகாசி வசந்தோற்சவம், ஆவணி மூலத் திருவிழா, நவராத்திரி வைபவம், அழகர் ஆற்றில் இறங்குவது, தை, ஆடி மாதங்களில் காலம்பர சீக்கிரமாய் எழுந்து சமைச்சு வைச்சுட்டு, வண்டியூருக்கு நடந்தே போய் அம்மா மாவிளக்குப் போட நாங்களும் கூடவே போயிட்டு வருவோம். அங்கே தெப்பக்குளத்துக்கு எதிரே இருந்த தியாகராஜா கல்லூரியின் அடர்ந்த மரங்கள், முக்கியமாய் நாகலிங்க மரமும், அதன் பூக்களும், பொறுக்கவே போவேன். இதை விட வேறே என்ன வேண்டும்?? அந்த மாதிரியான நாட்களை என் குழந்தைகளுக்குக் கிடைக்கச் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இன்றைக்கும் உண்டு. இப்படி அங்கே இருந்த ஒவ்வொரு நாளும் இப்படியே பக்திபூர்வமாயும், வேறே அநாவசியமான நினைப்புகளுக்கு இடம் கொடுக்காமலும் போயிட்டு இருந்ததுனு சொல்லலாம்.
இப்போவும் கூடிய வரைக்கும் பாரம்பரியப் பண்டிகைகள், விரதங்கள் என்று விடாமல் செய்யறோம். இதைக் குடும்பத்தினர் அனைவருமே அவங்களால் இயன்ற அளவுக்குச் செய்து வருகிறோம். காலம்பர எழுந்து முதல் அடி எடுத்து வைக்கும்போது சொல்ல ஆரம்பிக்கும் ஸ்ரீராமஜயம் அப்போ அப்போ மனசிலே ஓடிட்டே இருக்கும். நழுவ ஆரம்பிக்கும்போது தூக்கிவாரிப் போட்டு முழிச்சுட்டு அதைப் பிடிப்பேன். இவ்வளவே என் ஆன்மீகம்/பக்தி எல்லாம். கடந்த பத்து வருஷங்களாக யோகாசனப் பயிற்சி தினமும் உண்டு. இரவு தூங்க நேரம் ஆனால், அல்லது இரவுத் தூக்கம் சரியில்லைனால், முதல்நாள் பிரயாணம் செய்திருந்தால் மறுநாள் யோகாசனப் பயிற்சி வைச்சுக்கறதில்லை.
தலைவி பதிவு நல்லாயிருக்கு...;)
ReplyDeleteஆனா ஏடிஎம் கடவுள்னா? புரியல.
அப்படியே கண் முன்னாடி அந்த பிள்ளயார் கோவிலும் ஆல மரமும் .... கிருஷ்ணர் கோவில் கல் யானை தூண்களும் கண் முன் வந்து சென்றது....
ReplyDeleteமாசி வீதிகளில் கலரா நடந்து சென்று வந்த ஓர் சுகம்......
மிக்க நன்றி....
எங்க போனாலும் ஒரு பிள்ளையாரைப் பிடிச்சுக்கற வழக்கம்தான். அதென்னவோ அவருக்கு இருக்கிற உடனே உதவும் குணம் பார்க்கிறது சிரமம். அவ்வளோ இளகின மனசு.மதுரையைப் பார்க்க ஆசைதான். ம்ம்ம்!!
ReplyDeleteகோபி, இப்போப் புரியும், பாருங்க மாத்திட்டேன், மத்தவங்களுக்கு அப்புறமா பதில்! :D
ReplyDeleteATM yarunu gopiku teriyala . anaivuarkum istamaanavar pillayar
ReplyDeleteபிள்ளையார் கைவிட மாட்டார்னு உறுதியாத் தெரியும்.//
ReplyDeleteஆழ்ந்த நம்பிக்கை.
குழந்தைகளுக்குக் கிடைக்கச் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம்..//
வலி புரியுது; அடுத்த தலைமுறைக்கு இன் டர் நெட் நிழல் கூட இருக்குமானு சந்தேகம் தான்.
மாவிளக்கு பெரிய கூத்துங்க; சகிக்காது; இருந்தாலும் பிரசாதம்னு வீட்டில ரொம்ப தொந்திரவு பண்ணினது ஞாபகம் வருது. உங்க பதிவைப் படிச்சதும் கொழுக்கட்டை சாப்பிட ஆசை வந்தாச்சு - இருடா பூரணமாவே தின்னு தீத்துடாதேனு அம்மாவுடைய குரல் கேக்குது - என்னை முப்பது வருச நோஸ்டேல்ஜிக் பயணம் செய்ய வைச்சுதுக்கு நன்றி.
"க்ளிக்" செய்து படியுங்கள்.
ReplyDelete. மதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.
//காலம்பர எழுந்து முதல் அடி எடுத்து வைக்கும்போது சொல்ல ஆரம்பிக்கும் ஸ்ரீராமஜயம் அப்போ அப்போ மனசிலே ஓடிட்டே இருக்கும். நழுவ ஆரம்பிக்கும்போது தூக்கிவாரிப் போட்டு முழிச்சுட்டு அதைப் பிடிப்பேன். இவ்வளவே என் ஆன்மீகம்/பக்தி எல்லாம். //
ReplyDeleteஎவ்வளொ பெஇய விஷயம்! என்னமோ சர்வ சாதாரணமா சொல்லறீங்க? கடை தேத்த இதுவே போதுமே!
அருமையா இருந்தது பதிவு, இது தேன், சுவைத்தேன்!
ReplyDeleteபிள்ளையார் அனைவருக்கும் பிடித்தவர் . அனைத்து பாவங்களில் இருந்தும் நம்மை காப்பாத்த கூடிய மந்திரம் ஸ்ரீ ராம ஜெயம்
ReplyDeleteம்... திரும்ப போகமுடியுமா மிஸஸ் ஷிவம்??:(( சின்ன வயசு ஞ்யாபகங்கள் !! திருப்பாவை திருவம்பாவை படிக்காம, போட்டி அன்னிக்கு, கோவில்ல சாமிகிட்ட போய் அனுக்கும் ப்ரசாதுக்குமே prize குடுத்துடு நான் படிக்கலனு வேண்டிண்டது,ஐயப்ப ஸாஸ்தா சமாராதனை கஞ்சி மோருஞ்ச்சாதம், தொந்திமணல்ல ஆடிப்பெருக்கு,வாழப்பூ மடல்ல சாப்பாடு, அமாவாசை சோமவாரத்து ப்ரதக்ஷிணத்துக்கு காலங்காலையில் பெரிய பாட்டியோட போய் பேரிச்சம்பழம் போட்டுண்டு 108 வில்வமரம் சுத்தறது, மறஞ்சு நின்னு ஓதுவார் சொல்லிக்கொடுக்கற சிவபுராணம் சீராளன் கதை கேட்டது, ராவுத்தர் ஓதறத தொழறத பாரத்து அப்படியே பண்ணறது, தவறாம மழைலையும் வைக்கத்தப்ப சமாராதனைக்கு போய், ஸ்ரீ ராம சௌமித்ரி ஜடாயுவேத சொல்லிட்டு சாப்பிட்டுட்டு, ரகஸியமா சாமிகிட்ட எச்சல் எலையிலெல்லாம் உருள முடியாது வயத்துவலிஎல்லாம் வராம காப்பாத்துனு வேண்டிக்கறது மருகேலரா பாடி சுண்டல் வாங்கறது வேற பாட்டு பாடினாத்தான் இன்னிக்கு சுண்டல் நு சொல்லற நாட்டமைக்காரர் மாமியிடம் innocent ஆ ஸ்ரீ ராம பாஹிமாம் சுண்டல் வடை வேணுமாம் நு பாடினது எல்லாமே ஞ்யாபகத்துக்கு வரது!:))) எவ்வளவு PRECIOUS எத்தனை SPIRIYUAL CULTURE நம்பளோடது!!இப்பவும் இருக்கோ?
ReplyDeleteSubha shini தனி மெயிலில் கொடுத்த கமெண்ட்:
ReplyDeleteமாமி பதிவு சூப்பர்.
நானும் பிள்ளையாரோடு சண்டை எல்லாம் போடுவேன். நல்ல மலரும் நினைவுகள். அருமையான பதிவு.
As usual office system is not co operating to post a comment. So sent a separate mail to you.
Subha.
P.S. ஹி ஹி என்னை பத்தியெல்லாம் கூட எழுதி இருக்கேளே
கோபி, நீங்க கேட்டதுக்கு விளக்கம் கொடுத்துட்டேன். பாருங்க! :D
ReplyDeleteபாலாஜி அங்கிள், மேலாவணி மூல வீதியிலே எத்தனாம் நம்பர் வீடு?? அதைச் சொல்ல எத்தனை நாள் எடுத்துக்கறீங்க? :P
ReplyDeleteபாலாஜி அங்கிள், முதல் வருகைக்கு நன்னி ஹை! :)))))
ReplyDeleteவாங்க வல்லி, சீக்கிரம் நட்புப் பாராட்டக் கூடியவர் பிள்ளையார், அநேகமா எல்லாருக்குமே நண்பரா இருக்கார்! நன்றிங்க. நானும் மதுரையைப் பார்த்து 3 வருஷம் ஆச்சு! :(
ReplyDeleteவாங்க எல்கே, இந்தப் பின்னூட்டத்தைத் தான் சொன்னீங்களா? வேறே எதுவும் வரலை!
ReplyDeleteமாவிளக்கு பெரிய கூத்துங்க; சகிக்காது; இருந்தாலும் பிரசாதம்னு வீட்டில ரொம்ப தொந்திரவு பண்ணினது ஞாபகம் வருது. //
ReplyDeleteவாங்க அப்பாதுரை, எனக்குத் தெரிஞ்சு பல ஆண்களுக்கும் இந்த மாவிளக்குப் போடறதைச் சகிக்கலைனே சொல்றாங்க. காரணம் என்னனு புரியலை. ஆனால் எங்க வீட்டிலே அம்மாவும் சரி, இப்போ நான் போடறச்சேயும் சரி அதிகமாய் அமர்க்களம் இல்லாமல் அலட்டிக்காமல் போட்டுடுவோம். மேலும் இந்த ஊற வைச்சு இடிச்ச அரிசிமாவிலே வெல்லம், நெய், தேங்காய் சேர்த்துச் சாப்பிடறது உடல்நலத்துக்கும் நல்லது. மாவை குளிர்சாதனப் பெட்டியிலே வைச்சால் இரண்டு மாசமானாலும் கெட்டும் போகாது. பல சமயங்களில் மாவிளக்குப் போடும் அன்னிக்கு என்னோட மொத்த உணவே இதுதான்! மற்றபடி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
நன்றி ராஜ், பலமுறை படிச்சுட்டேன். ரொம்ப நன்றி வருகைக்கும், சுட்டிக்கும்.
ReplyDeleteஎவ்வளொ பெஇய விஷயம்! என்னமோ சர்வ சாதாரணமா சொல்லறீங்க? கடை தேத்த இதுவே போதுமே!//
ReplyDeleteதெரியலை திவா. ஆனால் தினமும் நழுவலும், திரும்ப இழுக்கும் போட்டியும் நடந்துட்டே இருக்கு. ஒருநாளாவது நான் தோத்துப் போய் அதிலேயே நிக்கணும்னு ஆசை.
வாங்க ஜீவா, பல மாதங்களுக்குப் பின்னர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க. உங்க பதிவுகள் அப்டேட் ஆகாததால் நான் பார்க்கலை! :)))))))))))
ReplyDeleteவாங்க எல்கே, பிள்ளையாரைப் பிடிக்காதவங்க யாரு??
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, வாழைப்பூ மடலிலே எங்க பாட்டி(அம்மாவோட அம்மா) பழைய சாதம் பிசைஞ்சு போடுவா. அந்த மணமே தனி. தொட்டுக்க முதல்நாள் குழம்பும், ரசத்தோட அடி மண்டியும் சேர்த்துச் சுட வைச்சிருப்பா. மாங்காய் ஊறுகாயும் இருக்கும். நானும் இதுவரைக்கு எவ்வளவோ பேர் போட்ட ஊறுகாய்கள் சாப்பிட்டிருக்கேன். என்னோட பாட்டி மாதிரி ஊறுகாய் எங்க அம்மா கூடப் போட்டதில்லை. அவ்வளவு ருசி, கெட்டுப் போகாது. வீட்டிலேயே கண் மை, சாந்துனு கூட்டி எங்களுக்கெல்லாம் சிவப்புச் சாந்துக்குக் கலர் சேர்த்து வாசனைக்கு ஏதோ சேர்த்துத் தருவா. அதோட குங்குமம் வீட்டிலே தயார் பண்ணறது தான். விபூதி தாத்தா/பெரியப்பா(அப்பாவோட அண்ணா) இரண்டு பேருமே மூட்டம் போட்டுத் தயார் பண்ணுவாங்க . அதெல்லாம் ஒரு காலம்! என் தாத்தாவும், என் பெரியப்பாவும் கல்லூரித் தோழர்களும் கூட.
ReplyDeleteசுபாஷிணிக்கு பதில் மெயில் கொடுத்துட்டேன், சரியா??? :))))))))
ReplyDelete//அந்தச் சின்ன வயசிலே கோயிலில் வாங்கின பிரசாதம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் எல்லாம் விட்டுட்டாங்கனு புரிஞ்சது//
ReplyDeleteஹி ஹி ஹி... ரகசியம் எல்லாம் சபைல சொல்லலாமோ...
//மாவிளக்கைச் சாப்பிடறதுக்குன்னே வயிற்று வலினு சொன்னதும் உண்டு//
இப்போ தான் உண்மை ஒண்ணொண்ணா வெளிய வருது போல... ஹா ஹா ஹா
// கடந்த பத்து வருஷங்களாக யோகாசனப் பயிற்சி தினமும் உண்டு//
ரெம்ப நல்ல விசயம் மாமி... சூப்பர்...
ரெம்ப அருமையான பதிவு மாமி... அப்படியே அந்த காலம் அந்த எடத்துக்கே கூட்டிட்டு போய்டீங்க... மூல முதல்வர் பிள்ளையார் பத்தின நினைவுகள பகிர்ந்து கிட்டது ரெம்ப சந்தோஷம்... நான் அழைத்த தொடர் பதிவு எழுதினதுக்கு ரெம்ப ரெம்ப நன்றி...
நேரு விநாயகர்...ஆலால சுந்தர விநாயகர்? மதுரை வீதிகளில் நடந்த சந்தோஷம்.
ReplyDeleteவாங்க ஏடிஎம், ஒரு வழியா உங்களைப் பிரபலமாக்கிட்டேன். அதுக்கு என்ன தரப் போறீங்க?? எடைக்கு எடை ஏதாவது கொடுத்தால் போதும்! :P
ReplyDeleteஹிஹிஹி, பல விஷயங்களில் உண்மை மெதுவாத் தானே வெளியே வரும்?? :)))))))
வாங்க ஸ்ரீராம், நீங்களும் அம்மூருதானா?? ஹை, ஜாலி, ஆமாம் நேரு ஆலாலசுந்தர விநாயகரே தான். அவரை மாதிரி ஒரு பிரண்ட்லியான பிள்ளையார் வேறே யாரும் இல்லை. மதுரையிலே இல்லாட்டி என்ன?? இங்கே இருந்தே நினைச்சுப்பேன்! :D
ReplyDelete// வீட்டிலேயே கண் மை, சாந்துனு கூட்டி //
ReplyDeleteகொட்டாங்கச்சிலேன்னு உங்க அனுமதியோட சேர்த்துப் படிச்சிக்கறேன்.
Very Nice and interesting Topics which brought me my olden days
ReplyDeletesukumar
9925104016
வாங்க ஜீவி சார், ஆமாம், கொட்டாங்கச்சியிலே தான் கண்மை, சாந்து கூட்டுவாங்க. அதுவும் பேச மாட்டாங்க. பேசினால் கூடாதுனும் சொல்வாங்க. அதை விட்டுட்டேனா? :))))))))
ReplyDeleteவாங்க கவி சுகு, ஜாம்நகரிலே இருக்கீங்க??? நாங்களும் அங்கே இருந்தோமே ஆறு வருஷம். இப்போவும் சில நண்பர்களோட தொடர்பு உண்டு. உங்க பதிவுகள் இனிமேல் தான் ஆரம்பிக்கணுமா? My Thoughts ங்கற பேரிலே தான் முதல்லே எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் தான் எண்ணங்கள்னு மாத்தினேன். நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.
ReplyDeleteஹரே கிருஷ்ணா
ReplyDeleteமுதலில் சிறப்பாக கண்ணன் கதைகள் எழுதி கொண்டு இருப்பதற்கு எனது வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன் மேடம் .
நல்ல பதிவு ;ரொம்ப நல்லா இருக்குங்க மேடம் .,
சிறு வயது சம்பவங்களை நினைவு ஊட்டியதற்கு நன்றிகள் மேடம்.,
பிள்ளையாரின் நினைவாக தான் யானை படமா மேடம் !
தங்களின் ஆன்மிக எழுத்து பணி தொடர எனது மனபூர்வமான வாழ்த்துக்கள்
ஹரே கிருஷ்ணா
ReplyDeleteமதிப்பிற்குரிய கீதா மேடம்;
தாங்கள் என்னை விட வயதில் மூத்தவர் என்பதை வலைதோழி புவனா மூலம் தெரிந்து கொண்டேன்.
முதல் முதலாக பின்னூட்டம் போட வந்திருக்கும் என்னையும் மற்றும் எனது குடும்பத்தினரையும் ஆசிர்வதிக்கும் படி பணிவன்புடன்
கேட்டு கொள்கிறேன் மேடம் .
பிரியாரவி
வாங்க ப்ரியா ரவி, பிள்ளையாரின் நினைவா மட்டுமில்லை, யானை எனக்குப் பிடிச்ச பிராணி. அதையும் ஒரு நண்பராகவே பார்ப்பேன். எந்தக் கோயிலுக்குப் போனாலும், தொலைக்காட்சியில் யானை வந்தாலும் எங்க வீட்டிலே எல்லாருமே சீக்கிரமா வானு என்னைக் கூப்பிடுவாங்க. அந்த அளவுக்கு யானைப் பைத்தியம்! :)))))
ReplyDeleteபுவனா சொன்னாங்களா?? ஆமாம், எப்படி இருந்தாலும் நான் உங்களை விட வயதில் மூத்தவளே. :)))))) எங்கள் அன்பும், ஆசிகளும் உங்கள் குடும்பத்துக்கு மட்டுமின்றி அனைத்து இளம் நண்பர்களுக்கும் உண்டு. நன்றிம்மா, வரவுக்கும், கருத்துக்கும்.
கண்ணன் போர்க்களத்தை விட்டு மட்டும் ஓடலை, ரன்சோட்ராய் இல்லையா அவன்? இந்த வலைப்பக்கத்தில் இருந்தும் மாத்திட்டேன் அவனை. உங்க மெயில் ஐடி கொடுங்க, அல்லது என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்க, அங்கே கண்ணனைக் காணலாம். நன்றி.
ஹரே கிருஷ்ணா .
ReplyDeleteதங்களை போல ஆன்மிக பணி புரிபவர்களின் எழுத்துகளை படிப்பதை
எனது பாக்கியமாக கருதுகிறேன் .
1 .யானை அதுவும் குட்டி யானை என்றால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் பிரியம் தான்மா.
முடிந்தவரை உங்களுக்கு யானை படங்களை சமர்ப்பித்தும் உள்ளேன்மா
2.ஆமாம் ! தாங்கள் தான் தங்கள் வயதை பிரம்ம ரகசியமாக பேணி காப்பதால் ,எங்களுக்கும் அதை பற்றி ஆவல் கூடி கொண்டு தான் போகிறதுமா
3 .தங்களின் அன்பு கட்டளையாக எனது ஈமெயில் id இ தங்களுக்கு மெயிலிட்டு உள்ளேன்மா
கண்ணனை காணும் பேற்றையும் அளிக்குமாறு
பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் .
நன்றிம்மா
பிரியா ரவி
//அந்தச் சின்ன வயசிலே கோயிலில் வாங்கின பிரசாதம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் எல்லாம் விட்டுட்டாங்கனு புரிஞ்சது. நாம இருக்கோமே! அதை எல்லாம் கவர் பண்ண. வேறே என்ன வேலை?//
ReplyDelete:))))
ப்ரியா ரவி, ரொம்ப நன்றி யானைகளுக்கும், பாராட்டுகளுக்கும். எனக்கு இன்னமும் பொறுப்புக் கூடுகிறது. அப்புறம் என்னோட வயசு ஒரு பிரம்ம ரகசியம் தான்! :))))))))) எல்லாரும் மண்டையை உடைச்சுக்கறாங்கப்பா! :P நன்றிம்மா கண்ணனைப் படிச்சதுக்கு. உங்க குழந்தைகளுக்கும் கண்ணனை அறிமுகம் செய்து வைங்க. வளரும் தலைமுறைக்கு அவசியம் தேவை என்பது என் கருத்து. :))))))
ReplyDeleteவாங்க ரசிகன், என்ன அடிக்கடி இந்தப் பக்கம் பார்க்க முடியுதே?? நன்றிப்பா, வருகைக்கும், கருத்துக்கும்.
ReplyDeleteபிள்ளையாரை யாருக்குத் தான் பிடிக்காது? சின்ன குழந்தைகளுக்குக் கூட பிள்ளையார்னா ரொம்ப இஷ்டம்!!!
ReplyDeleteவாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களே, பெயரே அமர்க்களமா காட்டுக்குள்ளே இருக்கற உணர்வோட இருக்கு. ஆரண்யமும் அப்படியே இருக்கும்னு நம்பறேன். நன்றி முதல்வருகைக்கும், கருத்துக்கும்.
ReplyDeleteஎன்னோட ’நிகழ்வுகள்’ படிச்சுப் பாருங்க..இளமைக்கால நினவுகளைப் பதிவு பண்ணியிருக்கேன்.
ReplyDeleteமீண்டும் எனது நன்றி அம்மா .,
ReplyDeleteநீங்கள் எவ்வளவு சிரமப்பட்டு கண்ணன் கதைகளை எழுத்து வடிவில் கொண்டு வந்து நாங்கள் படித்து இன்புற நற்பணி ஆற்றி கொண்டு இருக்குறீர்கள் .இதனை நாள் உங்கள் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் போயிற்றே என்ற சின்ன குறை மட்டும் தான் அம்மா.
அவசியம் குழந்தைகளுக்கு கண்ணனை பற்றி சொல்கிறேன்
எங்கே கீதாம்மா ; குறும்புகள் தான் ரொம்ப அதிகமா செய்கிறார்கள்
அதை குறைக்க எதாவது வழி சொல்லுங்க கீதாம்மா
பணிவன்புடன்
அயித்தானுக்கு பிள்ளையார் தான். அதுவும் நம்ம பிள்ளையார்பட்டி திருவீசரை ஒரு வாட்டியாவது தரிசிக்காட்டி சரிபடாது. பாண்டி போனா மணக்குள விநாயகர்.
ReplyDelete