எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 24, 2010

வெகு பொருத்தமான சாம்பாரு, இதுவே எனக்கு ஜோரு!

ரொம்ப நாட்கள் கழித்துத் தாய்மொழியிலே இன்னிக்குத் திரைப்படம் பார்த்தேன். ஹிஹிஹி, இப்போல்லாம் தாய்மொழிப் படங்களே பார்க்கிறதில்லை. இன்னிக்கு என்னமோ அதிசயமா நம்ம வீட்டிலே வேலை செய்யற பொண்ணு காலம்பர ஐந்தரை மணிக்கே வந்து எல்லா வேலைகளையும் முடிச்சுட்டுப்போனாளா?? ஐந்து நாட்களா அவ தினமும் லீவ் போடாமல் வரதுக்கே மழை கொட்டித் தீர்க்குது. இன்னிக்குச் சீக்கிரம் வந்ததுக்குக்கேட்கணுமா? மழை ஆரம்பிச்சுடுச்சு. வேர்ட் டாகுமெண்டில் எழுதி வச்சதை எல்லாம் அப்லோட் பண்ணி ஷெட்யூல் பண்ணவேண்டியதையும் பண்ணியாச்சு. திடீர்னு கணினியிலே உட்கார போரடிச்சது. குழுமங்களிலேயும் யாரையும் காணோம்.

சரினு தொலைக்காட்சியிலே ஏதாவதுபடம் பார்க்கலாம்னு ஒவ்வொரு சானலாத் திருப்பிட்டு வந்தா, "ஆஹா, இன்ப நிலாவினிலே" னு கண்டசாலா பாடிட்டு இருந்தார். என்னடா இது ஆச்ச்ச்சரியம்னு பார்த்தா ஜெமினியும், சாவித்திரியும் படகிலே டூயட் பாடிட்டுப் போனாங்க. நல்லவேளையா அப்போ நான் துள்ளிக் குதிச்சதைப் பார்க்க அங்கே யாருமே இல்லை. ரங்க்ஸுக்கு உண்ட மயக்கம். போய்ப் படுத்துட்டார். நானே தான் ரசிச்சுக்க வேண்டி இருந்தது. நம்ம படமாச்சே. இந்தப் படம் எப்போ வந்ததுனு தெரியாது. ஆனால் இந்தப் படத்துக்கும், "ராம பக்த ஹனுமான்" படத்துக்கும் அப்பா தியேட்டருக்குக் கூட்டிப் போய்க் காட்டியது நினைவில் வந்தது. தம்பி அப்போ குழந்தை???? சரியாத் தெரியலை. ஆனால் அப்புறமா மூன்று மணிக்கு எழுந்து வந்த ரங்க்ஸ் இந்தப் படம் 1955-56-ல் வந்ததாகவும், அவர் சிதம்பரத்திலே படிக்கும்போது பார்த்ததாயும் சொன்னார். ஆனால் நான் விபரம் தெரிஞ்சு தான் பார்த்திருக்கேன்.

அதுக்கப்புறமா இந்தப் படத்தை ஒவ்வொரு வருஷமும் திருப்பாவை வகுப்பு நடத்தி வந்த ராஜம்மாள் சுந்தர ராஜன் குழுவினர் பக்தி கலா நிகழ்ச்சி ஒண்ணும் நடத்துவாங்க, பொங்கலுக்கு முன்னாடி. அப்போ முதல் நாள் ஒரு பக்திப் படம் இலவசமாப் போட்டுக் காட்டுவாங்க. வருஷா வருஷம் அது என்னமோ தெரியாது இந்தப் படம் தான் காட்டுவாங்க. அநேகமா அந்தப் பிரிண்டே கிழிஞ்சு சுக்குச் சுக்காப் போயிருக்கும். அவ்வளவு முறை காட்டி இருக்காங்க. அவ்வளவு முறை நானும் பார்த்திருக்கேன். முதல்லே எல்லாம் தம்பியைக் குழந்தைனு சொல்லிக் கூடவே கூட்டிப் போவேன். அப்புறமா பாய்ஸ் நாட் அலவ்ட் னு சொல்லிட்டாங்க. ஆக நான் தனியாவே நாலைந்து தரம் பார்த்திருப்பேனா?? என்றாலும் கடந்த பல வருஷங்களில் என் குழந்தைகளிடம் இந்தப் படத்தைப் பற்றியும், ரங்காராவ் நடிப்பைப் பற்றியும், "கல்யாண சமையல் சாதம்" பாடலைப் பற்றியும் சொல்லி இருக்கேன். இந்தியாவிலே பார்க்க முடியாத எங்க பையர் அமெரிக்காவிலே போய்ப் பார்த்தேன்னு சொன்னார். :P

படத்தை நல்லா ரசிச்சுப் பார்த்தேன். நல்லதொரு நகைச்சுவைப் படம். அதுவும் அந்த ஜோசியர்கள்/புரோகிதர்களுக்கு வெற்றிலைத் தட்டு நகருவதும், கீழே விரித்திருக்கும் கம்பளம் சுருட்டிக்கறதும், கட்டில் கால் மண்டையிலே அடிக்கிறதும், சுத்தோ சுத்துனு சுத்தறதும் கடோத்கஜனோ ஆட்கள், "ஆஹூ தலைவா, இஹூ தலைவா, ஊஹூ தலைவா" னு சொல்றதும், பார்க்கப் பார்க்க அலுக்கவில்லை. கொஞ்சம் இல்லை நிறைய விட்டலாசார்யா டைப்தான். என்றாலும் மனம் லயித்து, மனம் விட்டுச் சிரிச்சுப் பார்த்தேன். ரங்காராவை விடவும், சாவித்திரி ஆண்மகன் என்று தன்னை வித்தியாசப் படுத்தும் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். மணமகனாக தங்கவேலு. அவருக்கு மணமகள் கருங்குரங்காயும், புலியாயும், ராக்ஷசியாவும் தெரியறதும் நல்லா இருந்தது. குழந்தைகள் படம்னு ரங்க்ஸோட தீர்ப்பு. ஆனாலும் அவரும் உட்கார்ந்து முடிவு வரை பார்த்தார். நானும் குழந்தைதானே? பார்த்தால் என்ன? இது என்னோட தீர்ப்பு! இன்னொரு முறை வந்தாலும் பார்த்துட்டு எழுதறேன். ஓகேயா?

8 comments:

  1. 'மாயா பஜார்' முழுக் குழந்தைகள் படம் என்று சொல்ல முடியாது; இருந்தாலும் குழந்தைகள் டேஸ்ட்டுக்கு எடுத்தப் படம் என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். 'குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு அவர்கள் பெற்றோர்களும் வந்து தான் ஆகவேண்டும்' என்று ஆடியன்ஸ் கணக்கெல்லாம் போட்டு எடுத்த படம்.ஆக, பெரியவர்களும் ரசித்துப் பார்க்க பல விஷயங்களை வைத்திருந்தார்கள். அந்த 'ஆஹா,இன்ப நிலாவினிலே' காட்சி அற்புதம். நல்லவேளை, அந்தப் படல்களில் நபர்கள் மாறி ஏமாற்றும் காட்சியைப் பார்த்துவிட்டீர்கள். இது அந்தக் காலத்தில் எல்லோராலும் தவறாமல் ரசிக்கப்பட்ட காட்சி. மனிதர்கள், புராண இதிகாச கால காதல்களையும், காதலர்களையும் பார்ப்பதும் அதைக் கைகொட்டிச் சிரித்து ரசிப்பதும் ஒரு தனி ரசனை தானே?.. இப்படி ஜனகளின் நாடி பிடித்துப் பார்த்து, பார்த்துப்பார்த்து
    எல்லோரும் ரசித்துக் களிக்கிற மாதிரி எடுத்த மறக்கமுடியாத படம். உண்மையில் ரங்காராவ் தான் ஹீரோ என்று கூடச் சொல்லலாம்.

    'அங்கே' சம(?) உரிமைகளைப் பற்றி படித்து விட்டு வந்த ஜோரில், இங்கே பார்த்தால் அந்நாளைய நினைவுகளு க்குத் தீனி.. ஆமாம், கல்யாண சமையல் சாதம், காய்கறிகள் எல்லாம் பிரமாதம் தான்! முழு நேர எழுத்தாளர் ஆகிவிட்டாற் போலிருக்கு!

    ReplyDelete
  2. எப்பப் பார்த்தாலும் பார்க்கவேண்டும் என்று தூண்டும் படங்கள் அவை!

    ReplyDelete
  3. வாங்க ஜீவி சார், ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி. உண்மைதான், "ஆஹா, இன்ப நிலாவினிலே" பாட்டையும் நபர்கள் மாறுவதையும் ரசிச்சுத் தான் பார்த்தேன்.

    'அங்கே' சம(?) உரிமைகளைப் பற்றி படித்து விட்டு வந்த ஜோரில்//

    ஹிஹிஹிஹி, அ.வ.சி. :)))))))))))))))

    முழு நேர எழுத்தாளர் ஆகிவிட்டாற் போலிருக்கு!//

    அதெல்லாம் இல்லை, ஏற்கெனவே எழுதிட்டுத் தான் இருந்தேன், ஒரு வருஷமா முடியலை, விடாமக் கேட்டுட்டே இருந்தாங்க! ரொம்பவும் பிகுவும் பண்ணினா நல்லா இருக்காதே! அவ்வளவே! :)))))))))

    ReplyDelete
  4. திரு ராமமூர்த்தி, ரொம்ப நன்றிங்க, வரவுக்கும், கருத்துக்கும்.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு .உங்கள் திரை விமர்சனதிற்காகவே இந்த படத்தை பார்க்க போகிறேன் !
    எப்படியோ உங்கள் வயதை ஊகிக்க முடிந்தது கீதாம்மா !
    நானும் இந்த ப்ரும்ம ரகசியத்தை பாது காக்கிறேன்.ஓகே வா

    ReplyDelete
  6. நானும் குழந்தைதானே? பார்த்தால் என்ன? இது என்னோட தீர்ப்பு! //
    கடைசி வரை உக்கார்ந்து பாதத்தாலே ரங்க்ஸ் உம் குழந்தைன்னு தெரிஞ்சு போச்சு!

    ப்ரமாதமான படம். மரண அடி மல்லப்பா ஜோக் நினைவு இருக்கா?

    ReplyDelete
  7. வாங்க ப்ரியா ரவி, ஹிஹிஹி, ரகசியத்தைக் காப்பாத்துவீங்கனு நம்பறேன். :)))) ரசிச்சதுக்கு நன்றிம்மா. இன்னும் இந்தப் படத்தை நீங்க பார்க்கலைங்கறதும் ஆச்சரியமா இருக்கு! ஆனால் உங்க டேஸ்ட் எப்படினு தெரியலை!

    ReplyDelete
  8. கடைசி வரை உக்கார்ந்து பாதத்தாலே ரங்க்ஸ் உம் குழந்தைன்னு தெரிஞ்சு போச்சு//


    @திவா, க்ர்ர்ர்ர்ர்ர் அதானே! இனம் இனத்தோடே சேரும்! :P

    அது என்ன மரண அடி மல்லப்பா ஜோக்??? நினைவிலே இல்லை! நீங்களே சொல்லிடுங்க.

    ReplyDelete