செல்லுவோம், செல்லுவோம், செல்லிக்கொண்டே இருப்போம்! இதான் இன்றைய இந்தியாவின் தாரக மந்திரம்! மக்கள்லாம் அப்படிப் பேசறாங்கப்பா செல்லிலே. அதாவது கைபேசியிலே. அதன் முக்கியத்துவம் என்னமோ வேறே காரணங்களுக்காக வந்தது. ஆனால் இப்போ என்னமோ வேண்டுதல் மாதிரி எல்லாரும் பேசறதைத் தவிர வேறு எதுவும் செய்யறாப்போல் தெரியலை! உண்மையிலேயே ஆச்சரியம் என்னன்னா அப்படி என்னங்க இருக்கும் பேச?? என்னைப் பொறுத்தவரைக்கு இது ரொம்ப ஆச்சரியமான விஷயம் தான். நாங்க ரெண்டு பேரும் வெளி ஊருக்கு ஒருத்தரை ஒருத்தர் விட்டுட்டுப் போனாக்கூடத் தந்தி பாஷைதான் பேசிப்போம். முக்கியமான விஷயம் இருந்தால் ஒழியக் கூப்பிட்டதில்லை. ஆனால் இப்போ என்னடான்னா, செல்லிலே பேசாட்டி கெளரவக் குறைச்சல்ங்கற அளவுக்கு ஆகிப் போச்சு. இதன் விளைவுகளை யாரும் எண்ணிப் பார்க்க மாட்டாங்க போல!
குடும்ப அந்தரங்கங்கள் அனைத்தும் கைபேசி மூலமே பேசப்படுகின்றன. அதுவும் பொது இடத்தில் வைத்துப் பேசறாங்க. அதைக் கேட்பவர்கள் அனைவருமே நல்லவங்கனு சொல்லமுடியுமா?? நமக்குப் பாதகமான விஷயங்களை எடுத்துக் கொண்டு அதன் மூலம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த நாமே காரணம் ஆகின்றோம். மேலும் பள்ளிச் சிறுவர்கள் இதற்கு அடிமையாகிப் படிப்பை விடவும் இம்மாதிரியான செல்போன் விளையாட்டுக்கள், போட்டிகள் இவற்றில் மூழ்கிப் போகின்றார்கள். இதற்குச் சமீபத்தில் ஒரு உதாரணம் படிச்சேன். +2 படிக்கும் மாணவி ஒருத்தி வகுப்பில் திடீரென வயிறு வலிக்கிறது என ஆசிரியரிடம் சொல்ல, அவங்களும் ஓய்வறைக்குப் போய் ஓய்வு எடுக்குமாறு மாணவியை அனுப்பி வைக்கிறாங்க. அந்த வகுப்பு முடிந்து, அதற்கடுத்த வகுப்பு நேரமும் முடிஞ்சதும் அந்த ஆசிரியை ஓய்வறையில் அந்தப் பெண் எப்படி இருக்கானு பார்க்க அங்கே செல்ல, அந்தப் பெண் திடீரென வந்த ஆசிரியையிடம் செல்லும், கையுமாக மாட்டிக்கொள்ள, அதை வாங்கிப் பார்த்த ஆசிரியை கடந்த ஒரு மணி நேரமாய் அந்தப் பெண் வேறொரு பையனிடம் செல் மூலம் காதல்மொழிகள் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு பிடித்தார்.
விஷயம் வீட்டுக்குப் போய்ப் பெற்றோரையும், பெண்ணையும் எச்சரிக்கை செய்து விட்டுட்டாங்க. ஒரு பக்கம் நாம சின்ன வயசிலே கல்யாணம் பண்ணக் கூடாதுனு சொல்லுவோம். இன்னொரு பக்கம் இம்மாதிரியான காதல்களை ஆதரிக்கணும்னும் சொல்லுவோம். படிப்பு முடிஞ்சு வாழ்க்கையில் செட்டில் ஆகும் முன்னே காதல் எதுக்குனு யாருமே யோசிக்கிறதில்லை! இப்போ செல் வைச்சிருக்கிறவங்களிலே நூற்றுக்கு ஒருத்தர் தான் காதலிக்காமல் இருப்பாங்கனு நினைக்கிறேன். பெற்றோர் கண்காணிக்கிறாங்களா? சந்தேகமே! அவங்க வேலைகளுக்கே அவங்களுக்கு நேரம் பத்தலையே! செல்லால் சில நன்மைகளும் இருக்குத் தான்.
ஒரு சில ஆபத்தான நேரங்களில் செல் மூலம் செய்திகளைச் சேகரிக்கலாம். அது உண்மைதான். எனினும் பெரும்பாலோர் செல்லைப் பயன்படுத்துவது வீண் பேச்சுக்கு மட்டுமே. இதற்குப் பல உதாரணங்கள் சொல்ல முடியும் என்றாலும் ஒருமுறை சென்னை நகரப் போக்குவரத்துப் பேருந்துகளிலோ, மின் ரயில் தொடர்களிலோ போய்ப் பார்த்தால் போதும். யார் கையைப் பார்த்தாலும் ஒரு கைபேசி. அதில் வரும் செய்திகள், குறுஞ்செய்திகள். பேச்சு, பேச்சு, எப்போப் பார்த்தாலும் பேச்சு. அவங்க வீட்டிலே அன்னிக்கு என்ன சமையல்னு ஆரம்பிச்சு எல்லாமும் செல் மூலமே பேசப்படுகின்றன. இதில் சிலர் காதில் கேட்கும் கருவியைத் தெரியாத மாதிரிப் பொருத்திக்கொண்டு பேசறதைப் பார்த்தால், தானே பேசிக்கிறாங்களேனு கொஞ்சம் பயமாக் கூட இருக்கு! அப்புறமாத் தான் புரியுது செல்லில் பேசறாங்கனு. இதை எல்லாம் பார்த்தால் இவ்வளவு முன்னேற்றம் தேவையானு கூடத் தோணுது. செல்லில் பேசிக்கொண்டே ரயில் தண்டவாளங்களைக் கடக்கின்றனர். தெருவில் நடந்து செல்லும்போதும் செல்லில் பேசிக்கொண்டே செல்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லில் பேசிக்கொண்டே செல்கின்றனர். எங்கே?? அவங்க போக வேண்டிய இடங்களுக்கா?? இல்லையே?? உயிரை அல்லவோ இழக்கின்றனர்?? இந்த செல்போனால் உயிரிழந்த இளைஞர்கள், இளம்பெண்கள் என எத்தனையோ பேரைச் சொல்ல முடியுமே!
எங்க கிட்டே செல் இருக்குனு பேர்தானே தவிர முக்கால்வாசி வீட்டிலேயே வச்சுட்டுப் போயிடறோம். வெளி ஊர்போனால் தான் கையில் எடுத்துப் போகிறோம். நாங்க ஊருக்குப் போகும்போது எங்களுக்கு வண்டி ஓட்டி வந்த ஓட்டுநர் ஒருத்தர் செல்லில் இருந்து காதை எடுக்காமலேயே வண்டியை ஓட்டினார். நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்லை. அடுத்த முறை அந்த ட்ராவல்ஸ்காரங்க கிட்டேயே வண்டி எடுக்கவில்லை. செல் இல்லாமலே அந்தக்கால கட்டத்தில் இந்தியத் தபால் துறை எக்ஸ்ப்ரஸ் டெலிவரினு ஒரு சேவையை ஞாயிறன்று கூடக் கொடுத்து வந்தது. அப்போதெல்லாம் சென்னையில் போட்ட தபால்கள் ராஜஸ்தான் நசிராபாத்திற்கு நான்காம் நாள் காலை,முதல் டெலிவரியில் வந்துவிடும். சில சமயம் மூன்றாம் நாளே மாலையில் வந்துவிடும். இந்த பிரும்மாநந்த ரெட்டி வந்தார், தபால் சார்ட்டிங்கை மாற்றித் தொலைச்சார். அவ்வளவு தான்! தபால் துறையும் நாசம், கூரியர்கள் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தன. இப்போ தபால்னு பேருக்கு இருக்கிறதோடு, இருக்கிற ஒண்ணு, ரெண்டுக்கும் மூடுவிழா நடத்தறாங்க. கேட்டால் அதான் இ=மெயில், எறும்பு மெயில், செல், தொலைபேசினு வந்தாச்சேனு சொல்றாங்க. ஆஹா, அந்தக் கால கட்டங்களில் உங்களுக்கு யாராவது எழுதின லெட்டர் இருக்கா?? இன்னும் வச்சிருக்கீங்களா?? அநேகமாய் அதை எல்லாம் வச்சு ஒரு கண்காட்சி நடத்தறாப்போல் ஆயிடும் கொஞ்சநாளைல.
கையெழுத்தும் மறந்திருக்கும் எல்லாருக்கும். என்னத்தைச் சொல்றது?? நல்லவேளையா இன்னும் செக்கிலே கையெழுத்தைக் கையால் தான் போடணும்னு வங்கிகளில் வச்சிருக்காங்க. இல்லாட்டி அதுவும் எலக்ட்ரானிக் கையெழுத்தாயிடும். காலம் மாறுது, நீ மாறலைனு என்னை எல்லாரும் சொல்றாங்க. மாறணுமோ?? மாறத் தெரியலை எனக்கு. அம்மி, ஆட்டுக்கல் இன்னும் வச்சிருக்கேன். அப்போப்போ அரைப்பேன், மின்சாரம் இல்லாத நேரங்களில். தினமும் துணி தோய்க்கிற கல்லில்தான் துணி தோய்க்கிறேன். அதனால் கொசுவத்தி ஜாஸ்தி சுத்தறேனோ?? இருமல் வரப் போறது! நிறுத்திக்கறேன். :)))))))) டார்டாய்ஸ் முழுநீளக் கொசுவத்தி சுத்தியாச்சு! கொஞ்சம் தான் எரிஞ்சது! :D
எனக்கு ரெண்டு மூணு மாசத்துக்கு 200 ரூபாதான் ஆறது. என்னதான் பேசுவாங்களோவா? வேண்டாம் தெரியவே வேண்டாம். திருச்சிலேந்து திரும்பும் போது ஒரு முறை காதில விழுந்தது. கண்ராவி! காதுராவியும்தான். :-))
ReplyDelete//உங்களுக்கு யாராவது எழுதின லெட்டர் இருக்கா?? இன்னும் வச்சிருக்கீங்களா?? ///
ReplyDeleteenkitta irukku
எங்களுக்கும் அவ்வளவு தான் ஆகும், ரீ சார்ஜ் 50 ரூக்குள் வரும்படி தான் பண்ணுவோம். காதிலே கண்ணறாவியும், காதராவியும் விழுந்து தொலைச்சதாலேதான் இந்தப் பதிவே.
ReplyDeleteநாங்களும் சில முக்கியமான கடிதங்கள், கல்யாணம் ஆனப்போ வாங்கின மளிகை சாமான் கணக்கு, பால், அரிசி கணக்குனு வச்சிருக்கோம் எல்கே. :))))) விலைவாசிகளையும் ஒப்பிடலாமே!
ReplyDeleteஸேம் பிளட் கீதா மேடம். சிலசமயம் அப்படியே தூக்கி வீசிடலாமான்னு தோணும் செல்லை!! விலையையும், சில சம்யப் பயன்பாட்டையும் நினைச்சு செய்றதில்லை!!
ReplyDelete/ஒரு பக்கம் நாம சின்ன வயசிலே கல்யாணம் பண்ணக் கூடாதுனு சொல்லுவோம். இன்னொரு பக்கம் இம்மாதிரியான காதல்களை ஆதரிக்கணும்னும் சொல்லுவோம்.//
இப்படி நிறைய முரண்கள் சமூகத்துல இப்ப!! :-((
ரொம்ப எரிச்சலான விஷயம், client interview போது இந்த செல்லுல தட்டோ தட்டுனு தட்டி நம்ப முகத்தைபார்து பதில் சொல்லாம யாருக்கு வெச்ச விருந்தோனு தன் girl/ boyfriend க்கு எஸ் எம் எஸ் விட்டுண்டு. பிடுங்கி வச்சுடலாம நு தோனும்.. இதுல அடுத்த பக்கத்துல நல்ல ரெஸ்பொன்ஸ் இல்லைன காது கூச வைக்கற swearing!!இப்ப iphone ipod வேற:(( வெனையே வேண்டாம். போற இடத்துல எல்லாம் wifi னு ஒரு கிம்மிக்ஸ் காஃபி குடிச்சா 40 நிமிஷம் ஃப்ரீ. அதுக்கு 7 டாலர் காஃபிக்கு அழணும்.நம்ப கேஸு கவலையே இல்லை சார்ஜ் பண்ணவே மறந்துடும்:))
ReplyDeleteஒன்னும் சொல்றதுக்குல்ல...ஆனா என்ன செய்யுறதுன்னு தெரியல ;)
ReplyDeleteநானும் இந்த செல் பத்தி இவரிடம் சொல்லிக் கொண்டே வருவேன். எதுக்கு இது. வீட்டுக்குள்ள பேசிக்கவே மாட்டார்களா. வெளியே வந்ததான் பேசுவாங்களான்னு. எங்க ரெண்டு பேரோட மொபைலும் ச்சும்மாதான் இருக்கு. வெளியூருக்குப் பேசறதுக்காக மட்டும்தான். கையும் காதும் ஒரு நாள் ஒட்டிக்கப் போறது .அப்பதான் இந்த மொபைலை விடப் போகிறார்கள்.:)
ReplyDeleteஎன்கிட்ட அநேகமா ஒரு நூறு கடிதங்கள் இருக்குப்பா.:)
வாங்க ஹுஸைனம்மா, நல்வரவு,கருத்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, வங்கியிலே ஏடிஎம்லே பணம் எடுக்காம செக் கொடுத்துட்டீங்கனு வச்சுக்குங்க. அப்போப் பார்த்து அவங்க செல் கூப்பிடும், அவ்வளவு தான், நாம தேவுடு காத்துட்டு இருக்கணும்! :(((((( அதுவும் இந்த விளம்பரங்கள் கொடுக்கிறவங்க, பரிசு கொடுக்கிறவங்க, க்ரெடிட் கார்ட் கொடுக்கிறவங்கனு கூப்பிட்டுத் தொல்லை தாங்கறதே இல்லை! :(((
ReplyDeleteகோபி, அவசியத்துக்கு மட்டுமே செல் பயன்படுத்தணும்னு வச்சுக்கலாமே! :D
ReplyDeleteவாங்க வல்லி, எங்க கிட்டே ரொம்ப வருஷம் வச்சுக்காமயே இருந்தோம். கைலை யாத்திரையிலே கஷ்டப் பட்டதிலே இருந்து எங்க பையரும், பொண்ணும் வெளி ஊர் போறச்சே உங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு சொல்லி வாங்க வச்சுட்டாங்க. இரண்டு வருஷமாத் தான் வச்சிருக்கோம். ஜெயஸ்ரீ சொல்றாப்போல் அதுவும் சார்ஜ் பண்ண மறந்துடுவோம். எப்போ சார்ஜ் பண்ணறோமோ அன்னிக்கிருந்து சார்ஜ் தீரும் வரைக்கும் இந்த க்ரெடிட் கார்ட், பைனான்ஸ்காரங்க தொல்லை தாங்காது. நல்லவேளை ரெகுலரா சார்ஜ் பண்ணறதில்லைனு நினைச்சுப்பேன்! :)))))
ReplyDelete//அந்தக் கால கட்டங்களில் உங்களுக்கு யாராவது எழுதின லெட்டர் இருக்கா?? இன்னும் வச்சிருக்கீங்களா?? அநேகமாய் அதை எல்லாம் வச்சு ஒரு கண்காட்சி நடத்தறாப்போல் ஆயிடும் கொஞ்சநாளைல.//
ReplyDeleteyou are right. yen vayasana Amma ippovum yezhudhum kadidham_irku badhil poda somberithanam yenakku yendral:indha generation_ku kadidham yendralae yenna_nu theriyalai.shorthand SMS bashaiyildhan yezhudhranga. Onnumae puriyalai.
SMS saidhu saidhu kai viral thenjae poidum pola...fast_a vera saivanga. yedhu vendamo adhulae romba talented_a irukanga.
வாங்க எஸ்கேஎம், அதான் போலிருக்கு, மத்தியானம் நீங்க கூப்பிடறச்சே எங்க செல்லுக்குக் கோபம் வந்திருக்கு! ஹிஹிஹி, கடைசியிலே பார்த்தா, நேத்திக்கு நான் சார்ஜ் பண்ணினேன்னு அவரும், அவர் சார்ஜ் பண்ணிட்டார்னு நானும் சார்ஜே பண்ணாமல் இருந்திருக்கோம். அப்புறமா சார்ஜ் பண்ணி வச்சிருக்கேன். இந்த அயோத்திக்காகப் பயந்துண்டு எஸ் எம் எஸ் கூடத்தான் இன்னிக்கு இல்லையே! ஸோ, நோ கால்! :))))))))
ReplyDeleteலெட்டர் சுகம் தனி சுகம் தான் மாமி... இந்த ஈமெயில் சாட்ல அது நிச்சியம் இல்ல... என்கிட்ட பழைய ஸ்கூல் பிரெண்ட்ஸ் லெட்டர்ஸ் சிலது இருக்கு ஊர்ல... அந்த ப்ளூ கலர் இன்லேன்ட் லெட்டர்... உங்க பதிவு படிச்சப்புறம் இந்த வாட்டி ஊருக்கு போறப்ப பரண்ல இருந்து எல்லாத்தையும் எடுத்து பாக்கணும்னு தோணுது...
ReplyDeleteரெம்ப வாஸ்துவம்... செல்போன் அதோட purpose க்கு யாரும் யூஸ் பண்றதில்லை... நான் யாராச்சும் உங்க நம்பர் என்னனு கேக்ககரப்ப landline நம்பர் சொன்னா 'அதில்ல செல்போன் சொல்லு' ங்கறாங்க... நம்பர்னாலே செல்போன்னு தான் ஆகி போச்சு... healthwise நல்லதில்லைன்னு யாரும் புரிஞ்சுக்கரதில்ல... நல்ல பதிவு மாமி
வாங்க ஏடிஎம், எழுதறச்சே கூட யோசனைதான், ம்ம்ம்ம்ம் பரவலா வரவேற்பு இருப்பது பற்றி சந்தோஷம் தான்! நன்றிங்க வரவுக்கும், கருத்துக்கும்.
ReplyDelete