
இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள். விநாயகர் அனைத்து விக்கினங்களையும் நீக்கி அருளும்படியும் பிரார்த்திப்போம்.
“மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர்க்கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.”
விநாயகர் இல்லாத கோயில்களே இல்லை. விநாயகருக்கெனத் தனிக் கோயில்களும் உண்டு. அப்படி தலங்கள் தோறும் பலவிதமான மூர்த்தவடிவில் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நீர் கொண்ட தீர்த்தங்களாய்த் திகழ்பவரும், நம்முடைய அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும் கருணையே வடிவானவரும் ஆன கணபதியின் பாதங்களைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.
“செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப் படும் அப்பொருள் யாவன்
ஐயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.”
நாம் செய்யும் அனைத்து வினைகளுக்கும், இங்கே வினை என்பது காரியத்தைக் குறிக்கும் சொல்னு நினைக்கிறேன். காரியங்களுக்கு எல்லாம் முதல் முழுப் பொருளாகவும், செய்யப் படும் அந்தப் பொருளே அவனேயாகவும், அந்தக் காரியத்தின் விளைவினால் உண்டாகும் பயனை நமக்குப் பெறச் செய்பவனும் மூலப் பொருளான கணபதியே ஆகும். அத்தகைய முழுமுதல் பொருளான அனைத்துக்கும் காரணம் ஆன மெய்ப்பொருள் ஆன இறைவன் ஆகிய கணபதியைச் சரண் என அடைக்கலம் அடைகின்றோம்.
“வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேதமுடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.”
வேதங்களால் அறிய முடியாதவன் விநாயகன். வேதத்தின் முடிவான விமலனும் அவனே. உலகெங்கும் பரந்து விளங்கும் பரமாநந்த சொரூபமாய் விளங்கும் நாதமும் அவனே. எண்குணங்களை உடைய அத்தகைய கணபதியைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.
காசியபரின் காரியசித்தி மாலை நாளை நிறைவு பெறும்.
வந்தாச்சா...சூப்பரு...வாழ்த்துக்கள் தலைவி ;)
ReplyDeleteungalukkum ganesh chathurthi wishes! enakku kozhukattai onnuththula thaan interest! :D
ReplyDeleteஏன் படம் ஒரு பக்கமா போயிடுத்து? கால்வாசி காணலை. :-(
ReplyDeleteவாங்க கோபி, நீங்க வந்த பிள்ளையார் சதுர்த்தியை நினைவு கூருகிறோம். :)
ReplyDeleteவாங்க மாதங்கி, கொழுக்கட்டை இத்தனை நேரம் சாப்பிட்டிருப்பீங்க, பாட்டி மாதிரிப் பண்ணி இருந்தாங்களா உங்க அம்மா? :P
ReplyDeleteதிவா, படம் முழுசா நல்லாவே தெரியுதே எனக்கு. மத்தவங்களும் யாரும் ஒண்ணும் சொல்லலையே?? என்னனு புரியலை! :(
ReplyDeleteஸ்ரீ கற்பக விநாயகரின்
ReplyDeleteஅற்புத தரிசனம்! தரிசித்தோம்;
கருணை ஊற்றாய்ப் பெருகும்
அருள் பெற்று
அவன் தாள் பணிந்தோம்.
அடியார் பெருமை சொல்லவும் வேண்டுமோ? மிக்க நன்றி.
பிள்ளையார் தயவிலே வகை வகையாயக் கொழுக்கட்டை, கடலை, பாயசம், அருமையான சாப்பாடுன்னு சாப்பிட்டாச்சு.
ReplyDeleteகாரிய சித்தி மாலை அறிமுகத்துக்குநன்றி.
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!
ReplyDeleteகொழுக்கட்டை நல்லா வந்துச்சா..வந்துச்சா...?
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!
ReplyDeleteகொழுக்கட்டை நல்லா வந்துச்சா..வந்துச்சா...?
Belated happy pillaaar day !கொழுக்கட்டைனு பேப்பர்ல எழுதிவச்சுட்டேன். பால், "தெளி"தேன், முக்கனி இன்க்லுடிங்க் டிண்ட் பலாப்பழம் பொறி, கடலை மிஸ்ரி மதுபர்கம் தான் நைவேத்யம்.கார்த்தாலையில் பிள்ளையார் ஸாலீஸ் க்கு எங்களோட வந்திருந்தார்:)
ReplyDeleteகொழுக்கட்டை நல்லா வந்திச்சா வந்திச்சான்னு எல்லாரும் கேட்கிறாங்க. நல்லா வெந்திச்சா ன்னு லே கேட்கனும்.
ReplyDeleteநல்ல பதிவு விநாயக சதுர்த்தி நன்றாக கொண்டாடினீர்களா-?ஏன்னாகக் அவரு தான் எழுத்தாளர்கள் தலைவர். கே.வீ.விக்னேஷ் சென்னை http://www.astrovighnesh.blogspot.com
கொழுக்கட்டை நல்லா வந்திச்சா வந்திச்சான்னு எல்லாரும் கேட்கிறாங்க. நல்லா வெந்திச்சா ன்னு லே கேட்கனும்.
ReplyDeleteநல்ல பதிவு விநாயக சதுர்த்தி நன்றாக கொண்டாடினீர்களா-?ஏன்னாகக் அவரு தான் எழுத்தாளர்கள் தலைவர். கே.வீ.விக்னேஷ் சென்னை http://www.astrovighnesh.blogspot.com
வாங்க ஜீவி சார், படம் நல்லாத் தெரியுதா?? திவா சரியாத் தெரியலைங்கறாரே?? :(((( நன்றி வரவுக்கும், கருத்துக்கும்.
ReplyDeleteவாங்க விருட்சம், கொழுக்கட்டை ரசிப்புக்கு நன்றி.
ReplyDeleteவாங்க நானானி, ஹாஹா, கொழுக்கட்டை எப்போவுமே நல்லா வந்துரும், வெந்துரும். அது ஏமாத்தினதே இல்லை இது வரைக்கும். நன்றிங்க கொழுக்கட்டை விசாரிப்புக்கு. ஹாப்பி கொழுக்கட்டை தாமதமாய்! :)))))))))))
ReplyDeleteவாங்க விக்னேஷ்ஜி, பிள்ளையார் பேரை வச்சுண்டதாலே கொழுக்கட்டை எல்லாத்தையும் நீங்களே சாப்பிடக் கூடாது, பிரியுதா??? :))))))) பிள்ளையார் எழுத்தாளார்களின் தலைவரா?? சுருக்கெழுத்தாளர்களின் தலைவர்னு நினைச்சேனே! :)))))))) எப்போவும் எனக்கு நல்ல நண்பர், என்ன திட்டினாலும்/சண்டை போட்டாலும் கண்டுக்கவே மாட்டார். :)))))))))))
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, உங்க பின்னூட்டம் என்னமோ ஒளிஞ்சுண்டது முதல்லே. அப்புறம் தானா வந்துடுத்து. கொழுக்கட்டை அரிசி மாவிலே செய்ய முடியாட்டி ரவையிலே செய்யலாம். பொரிச்சு எடுக்க வேண்டியது தானே! சிம்பிள்! என் பெண், மா.பெண் எல்லாரையும் அப்படித் தான் செய்யச் சொல்லிக் கொடுத்திருக்கேன். :)))))))))))))))
ReplyDeleteசாப்பிடலாம் வாங்க ல எழுதவும் . பொரி வேண்டாமே!! வேகறதே சொல்லிதரவும். எங்க அக்கா "பாலும், தெளிதேனும் பாகும் பருப்பும்னு" ஏதோ பாசிபருப்பு, தேன் ,பால், பாகு வைத்து பண்ணினதா FB ல போட்டிருக்கா. ரெஸிபி தெரிந்தா எழுதவும் :)))
ReplyDeleteஏன் comments எல்லாம் 2 தடவ வந்திருக்கு. ஸ்ரீ ஜயந்தி COMMENT ஐ ப்லொக் முழிங்கிடுத்து!!
வாழ்த்துகள். தலைவி.இங்கேயும் வந்தார் விநாயகர்
ReplyDeleteரெண்டாம் முறையா வருகைக்கு நன்றி ஜெயஸ்ரீ, உடம்பு கொஞ்சம் படுத்தறது. அதான் கொஞ்சம் ஸ்லோவாகிட்டேன். :))))))))))) ரெண்டு நாளா உடம்பும் சரியில்லை, நெட்டும் இல்லை. இப்போத் தான் நெட் வந்தது. சரினு மெயில் மட்டும் பார்க்கலாம்னு வந்தேன். ஸ்ரீஜெயந்தி கமெண்டைத் தேடிப் பார்க்கிறேன். :))))))) உங்க அக்கா, பாலில் தேன்பாகு விட்டுப் பாசிப்பருப்புப் போட்டுப் பாயாசம் பண்ணினாங்களோ?? :))))))) பார்க்கிறேன் அந்த ரெசிபியும், face book பக்கம் போறதில்லை. வச்சுக்கவும் இல்லை. நேரம் வேணுமே! :)))))))))
ReplyDeleteவாங்க திராச சார், பிள்ளையார் உங்களையும் இழுத்துண்டு வந்துட்டார் போலிருக்கு. நன்றி. :))))))))
ReplyDelete