No New Years Day //stevie wonder's music/
I just call to sayyyyy how much I care for you//
நேத்திலேருந்து இதுவே சுத்திட்டு இருக்கு! எப்படி நிறுத்தலாம்?? எங்கேயோ யாரோ போட்டுக் கேட்டுட்டு இருந்திருக்காங்க. பல வருஷங்கள் கழிச்சு மீள்பதிவு மாதிரி, மீள் நினைவுகள். எங்க பொண்ணோடயும், பையரோடயும் போட்டி போட்டுட்டுக் கேட்டது, பிரனாய் ராயின் The World This Week ல் அறிமுகம் ஆன Khaled arabic song didi didi னு எல்லாம் நினைவில் வந்தது. உடனேயே தேடிப் பிடிச்சு நெட் வொர்க் சார்ட்டில் இருந்த பழைய பாடல்களை எல்லாம் மறுபடி கேட்கணும்போல இருந்தது. எங்கே வச்சிருக்கோம்னு நினைவிலே இல்லை. நோ நியூ இயர்ஸ் டே பாட்டை எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வரும். மனதை உருக்கும் குரல். இது மாதிரி சில தமிழ்ப்பாடல்களும் உண்டு. அதிலே சிட்டுக்குருவி பாடுது, தன் பெட்டைத்துணையைத் தேடுது பாடலை நேத்திக்கு யாரோ சத்தமா ஒலிபரப்பிட்டு இருந்தாங்க. அதிலே வரும் ஹம்மிங், ம்ஹும் என்ன ஒரு இனிமையான அர்த்தம் பொதிந்த குரல்!
இந்த அவசரத்திலே போன மாசம் கடலைமிட்டாய் கடன்வாங்கின என்னோட ரங்க்ஸ் அதைச் சிதம்பரத்திலேயே திருப்பிக் கொடுத்ததைக் கூட மறந்துட்டேன்னா பாருங்களேன்! ஹிஹிஹி, கடலை மிட்டாய் கடன் கொடுத்திருக்கீங்க?? நாங்க கொடுத்துப்போம்! ம்ம்ம்ம்ம்ம் காக்காய்க் கடின்னா என்னனு தெரியுமோ? சின்ன வயசிலே ஆரம்பப் பள்ளிக்கூடம் படிக்கும்போது வாசல்லே விற்கும் சுக்கு மிட்டாய்த் தாத்தா கிட்டே வாங்கின காலணாவுக்கு மூணு சுக்கு மிட்டாயை பத்துப் பேர் பங்கு போட்டுக்கும்போது பாவாடையால் மிட்டாயை மூடிக்கொண்டோ அல்லது கைக்குட்டையில் வைச்சு மூடிக்கொண்டே பற்கள் நேரடியாய்ப் படாமல் மிட்டாயைக் கடித்துப் பங்கு போட்டுப்போம். நேரடியாய்ப் பற்கள் பட்டால் எச்சல், ஒருத்தரோடது இன்னொருத்தருக்கு ஒத்துக்காதுனு இப்படிப் பண்ணி இருக்கோம். ம்ம்ம்ம்ம் அதெல்லாம் அந்தக் காலம். என்னவோ எழுத வந்துட்டு என்னவோ எழுதிட்டேனோ?? எல்லாம் கொசுவத்தி வச்சாரா? அந்த நினைவு! நானும் கன்னாபின்னானு சுத்திட்டேன். வரேன் அப்புறமா. நேத்திக்குப் பதிவே போகலை. இப்போ இந்த மொக்கை போகும் பாருங்க!
அதானே, நல்லா உடனே போயிடுச்சு! என்ன அநியாயமா இருக்கு? :P
ReplyDeleteஇரண்டு நாளா பதிவுகள் பிரச்சனை இன்னிக்குதான் சரி ஆகி இருக்கு...
ReplyDeleteகாக்கா கடிலாம் அந்தகாலம் . இப்ப நினச்சு பார்த்து பெருமூச்சு விட்டுக்கலாம் அவ்ளோதான் பண்ண முடியும்
ReplyDeleteஅப்படியா எல்கே? அது எனக்குத் தெரியாது. எங்கே ஒரு மாசமா சரியாவே இணையத்திலே உட்கார முடியலை, அதுவும் இரண்டு நாளாக வேலையும் அதிகம்! :(
ReplyDeleteஆனாலும் ஜிமெயிலின் மூலம் கமெண்ட்ஸ் பப்ளிஷ் ஆகலை. வலைப்பக்கத்துக்குள்ளே வந்து தான் பப்ளிஷ் பண்ண வேண்டி இருக்கு! :(
ReplyDeleteம்ம்ம்ம் இப்போக் குழந்தைங்களுக்குக் காக்காய்னாலே என்னனு தெரியுமா சந்தேகம்! படம் பார்த்துத் தான் தெரிஞ்சுக்கணும்! :(
ReplyDeleteஏர்டெல் கனெக்சன் வைத்து இருந்தவாளுக்கு இந்தப் பிரச்சனை இருந்தது. நேத்து மாலையில் இருந்து சரி ஆகி விட்டது ஆனால் நீங்கள் டாட்டாதானே ??
ReplyDeleteஎல்கே, நான் உஜாலாவுக்கு மாறி (பி எஸ் என் எல்)மூணு மாசம் ஆகிறதே? அதிலே தான் அன்லிமிடட் ப்ளான் மாத்தினேன். ஒரே தலைவேதனையா இருக்கு. இந்த மாசம் மறுபடி பழைய ப்ளானுக்கே போகணும். 20 தேதிக்கு அப்புறமா வரச் சொல்லி இருக்காங்க.
ReplyDeleteகாக்காக் கடி - இப்பவே ஏதாவது ஆவணப் படம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான்
ReplyDeleteவாங்க கோபி ராமமூர்த்தி, எவ்வளவு பெரிய பேருங்க? ஆவணம் எடுத்து வச்சிருக்காங்கனு நினைக்கிறேன். ஏதோ ஒரு படத்திலே பார்த்த நினைப்பு இருக்கு! :)
ReplyDeleteடீ புவி! இங்கே வாயேன் ! ஒரு - - - நாடகம் காக்காகடி என்ற பேர்ல நடந்து இருக்கு ............ ஹ ஹா (கீதாம்மா புவி வந்து நம்ம ஆளு ;ATM வந்து எதிர் கட்சி ஆளு ! டைரில குறித்து வைத்துக்கோங்க)
ReplyDeleteகீதாம்மா ! எங்க ஊரல நாங்க கல்கோனா மிட்டாயை தோழிகளோடு காக்கா கடி கடித்து சாப்பிட்டு இருக்கோமாக்கும்!
'தென்னங்கீற்று ஊஞ்சலிலே'னு பாட்டு தொடக்கத்தை ஒழுங்கா சொல்லக் கூடாதோ? ஒரு வாரமா 'சிட்டுக்குருவி பாடுதே' வரியை போட்டுப் போட்டு குழம்பி இன்னிக்கு காலைல சட்னு ஞாபகம் வந்தது - நியாயமா? என்னமோ didi didi பாட்டு போங்க!
ReplyDeleteகாக்கா கடிக்கு மேலயும் போனதுண்டு. கையில் ஒரே ஒரு சாக்லேட் துண்டோ கமர்கட்டோ கடலை உருண்டையோ இருக்கும் - பிரண்ட் வந்துட்டா அப்படியே வாயில அடைச்சுப்போம். விடமாட்டாங்க, 'டேய் எடுறா வாயிலந்துனு போட்டு பிடுங்கி எடுத்துடுவாங்க'னு ஒரே ஓட்டமா மென்னுகிட்டே ஓடுவோம். அப்படியும் விடாம சில சமயம் பிடிச்சு கீழே தள்ளி வாயில் அரைகுறை கடிபட்ட கடலை உருண்டையை (அப்பல்லாம் மூணு பைசா உருண்டை குட்டி க்ளோப் சைஸ்ல இருக்கும்) எடுத்து அலம்பி பகிர்ந்து கொண்டதும் உண்டு!
நல்ல கொசுவத்தி கீதாம்மா.. ஒரு காலத்துல காக்கா கடின்னா அப்புறம், ஒரு டிபன் பாக்சுக்குள்ள பத்து கை போகும் காலம்.. ஒண்ணையும் விட்டுவெச்சதில்ல :-))))
ReplyDelete