எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 24, 2011

நியாயமே இல்லாத பஸ் தினம்! :(

எப்போ ஆரம்பம்னு தெரியவில்லை. ஆனால் ஒரு அவசரமான நேரம் இந்த பஸ் டே சமயம் பயணம் செய்தபோது மிகவும் கஷ்டப் பட்டேன் என்பது உண்மை. ஒரு முக்கியமான வேலையை முடிக்க அவசரமாகச் சென்று கொண்டிருந்தேன். அப்போது மாணவர்கள் பஸ்தினம் கொண்டாடுவதாய்ப் பேருந்துகள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. நந்தனம் ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து வர, மாநிலக் கல்லூரி மாணவர்கள் அவங்க கல்லூரியிலிருந்து கிளம்பி வர நடுவில் மாட்டிக்கொண்டது பொதுமக்கள். அவங்க பயணம் செய்யும் பேருந்தை அவங்க இஷ்டப்படி அன்றைக்கு என்ன வேண்டுமானாலும் செய்துக்கலாம் என்பதை யார் எப்போ, எங்கே, எப்படிச் சொல்லிக் கொடுத்தாங்கனு தெரியவில்லை. கேட்டதுக்கு இதெல்லாம் ஒரு ஜாலிதானே மேடம்னு பதில் வந்தது. ஜாலி வேண்டியதே. இல்லைனு சொல்லவில்லை. ஆனால் மற்றவர்களின் துன்பங்களையும் பார்க்கவேண்டுமே. எத்தனை பேருக்கு எத்தனை அவசரமோ! யார் யாருக்கு எங்கே எல்லாம் அவசரமாய்ப் போகவேண்டி இருந்ததோ! இவங்க பாட்டுக்குப் பேருந்தை நிறுத்துவதும், ஓட்டுநரையும் , நடத்துநரையும் தாங்கள் சொல்லும் இடத்துக்கு ஓட்டச் சொல்லுவதும், நிச்சயமாய்ச் சட்டத்துக்குப் புறம்பான செயல்.
கிட்டத் தட்டக் கடத்தல் தானே இது! பயணம் செய்யும் பேருந்துக்கு நன்றி செலுத்த விரும்பினால் குறிப்பிட்ட ஒருநாள் சாக்லேட் வாங்கி அந்தப் பேருந்தில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் வழங்கலாம். அல்லது ரோஜாப் பூ வாங்கி வழங்கலாம். இன்னும் கொஞ்சம் அதிகமாய்ச் செலவு செய்ய நினைத்தால் ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும், பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம். இந்த அழகான சாலைகளிலே ஒருமுறையே நம்மால் பயணிக்க முடியவில்லை. அவங்க ஒரு நாளைக்கு எத்தனை முறை போயிட்டுப் போயிட்டு வர வேண்டி இருக்கு? அவங்களும் நம்மை மாதிரியான மனிதர்கள் தானே! அன்றைய தினம் பயணம் செய்யும் பேருந்தில் இருக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லலாமே!

அதை விட்டு விட்டு, நான் பெரியவன், எங்க கல்லூரி மாணவர்கள் வீரத்தை விட உன் கல்லூரி மாணவர்கள் வீரம் சிறந்ததா என்று போட்டி போடும் முறையில் பேருந்தைக் கடத்துவதும், அதைச் சீர் குலைப்பதும், கல், கட்டை, உருட்டுக் கட்டை போன்றவற்றால் உடைப்பதும், தடுக்க வருபவர்களையும் சேர்த்து அடிப்பதும், காவல் துறையையும் சேர்த்து அடிக்கிற வழக்கம் இப்போது வந்துவிட்டது. நீதிமன்றம் தடுக்கச் சொல்லி உத்தரவு போட்டதைத் தானே காவல் துறை நிறைவேற்றுகிறது. தடையை மீறி பஸ் டே கொண்டாடினால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற உணர்வையும், எண்ணத்தையும் மாணவர்களுக்குக் கொடுத்தது யார்? அவர்கள் மேல் கையை வைக்கவேண்டாம், கண்டிக்கவேண்டாம் என்ற கட்டளையைக் கொடுத்தது யார்? போக்குவரத்தே ஸ்தம்பித்துப் போய்ப் பல மணி நேரம் அனைவரும் காத்திருக்கவேண்டி இருக்கிறது. இத்தகைய மாணவர்களா நம் எதிர்காலத் தூண்கள்? நம் நாட்டை இவர்கள் கையிலா ஒப்படைக்கப் போகிறோம்? கவலையாய் இருக்கிறது. அளவுக்கு மீறிய சுதந்திரம் கொடுத்துவிட்டோமோ? இத்தகைய சுதந்திரத்தைத் தவறாய்ப் பயன்படுத்துகிறோம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் கடமையை யார் மேற்கொள்ளப் போகின்றனர்? சொன்னாலும் கேட்கும் நிலையில் மாண்வர்கள் இருப்பதில்லை. கடுமையான தண்டனை என்றிருந்தால் ஒருவேளை இது நிற்கலாம்.

திருச்செங்கோட்டில் 20,000 மாணவிகள் ஒன்று சேர்ந்து பஸ் தினத்தில் அவர்கள் பயணிக்கும் பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்குப் பரிசுகள் கொடுத்து, பேருந்துகளை மலர்மாலைகளாலும் வண்ணக் காகிதங்களாலும் அலங்கரித்து அமைதியான முறையில் கொண்டாடி இருக்கும் செய்தியும் வந்தது. அப்படிச் செய்திருக்கலாமே! நமக்குப் பிடிச்சவங்க பிறந்த நாள் அன்று அவங்களை நாம் அடிக்கிறோமா? சண்டை போடறோமா? இல்லையே? பரிசுப் பொருட்கள் தானே வாங்கித் தரோம்? அப்படி இருக்கும்போது நம்முடைய அப்பாவும், அம்மாவும் கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தில் நம்மையும் படிக்க வைப்பதோடு, நாட்டுக்கு வரியையும் ஒழுங்காய்ச் செலுத்துகின்றனர். அந்த வரிப்பணத்தில், நம் ரத்தத்தில் வாங்கிய பேருந்தை எரிப்பது என்ன நியாயம்? பொன்னான நேரமும் அல்லவோ வீணாகின்றது?? அந்த ஒருநாளில் எத்தனை பேருக்கு எத்தனை வேலைகள் ஆகாமல் நஷ்டமும், கஷ்டமும் பட்டனரோ! எனக்குத் தெரிந்து சென்னையில் மட்டுமே இத்தகைய அக்கிரமங்கள் நடக்கிறது. மற்ற எங்கும் இருப்பதாய்த் தெரியவில்லை.

20 comments:

  1. you are absolutely right Maami. people don't even think!!!! Govt money is our money...govt properties are all our own properties nu arivu when will they get? Catch them young nu sollvanga. Schools and Parents have to educate them when they were so young. Let us hope for the better tomorrow.

    ReplyDelete
  2. ஒன்னும் பண்றதுக்கு இல்லை மாமி. முக்கியமா, நெறைய மீடியாக்கள் ,போலீச நடவடிக்கை எடுத்தால் போலிசை குற்றம் சொல்லுவாங்க

    ReplyDelete
  3. //திருச்செங்கோட்டில் 20,000 மாணவிகள் ஒன்று சேர்ந்து பஸ் தினத்தில் அவர்கள் பயணிக்கும் பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்குப் பரிசுகள் கொடுத்து, பேருந்துகளை மலர்மாலைகளாலும் வண்ணக் காகிதங்களாலும் அலங்கரித்து அமைதியான முறையில் கொண்டாடி இருக்கும் செய்தியும் வந்தது. //

    இப்படித்தான் கொண்டாடுவார்கள் முன்பெல்லாம்.

    ஆனால் சென்னை மாணவர்கள் நடந்து கொணடது கண்டிக்க தக்கவை. இன்றைய மாணவ சமுதாயம் ஏன் இப்படி இருக்கிறது என்று கவலையாய் உள்ளது.

    ReplyDelete
  4. //ஜாலி வேண்டியதே. இல்லைனு சொல்லவில்லை. ஆனால் மற்றவர்களின் துன்பங்களையும் பார்க்கவேண்டுமே//

    நூத்துல ஒரு வார்த்தை... நல்ல பதிவு... அவசியமான பதிவும் கூட...

    ReplyDelete
  5. எல்லா டேயும் மரணத்தை நோக்கியே உள்ளன...;பகிர்வுக்கு நண்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாங்க எஸ்கே எம், ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள்னு வரீங்க, கேட்டால் பிசினு பதில் வரும். ம்ம்ம்ம்ம்ம் நீங்க எங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னதைத் தன்ணியிலே எழுதி வச்சேனா! இப்போ ரெண்டு நாளாப் பெய்த மழையிலே போயிடுச்சு எல்லாம்! :P

    ReplyDelete
  7. எல்கே, நடவடிக்கை எடுக்கத் தயங்கினால் மேலும், மேலும் இப்படித் தான் செய்வாங்க. இப்போப் பாருங்க கோர்ட் உத்தரவு இருந்தும் மாணவர்களைத் தடுக்க முடியலை. இம்முறை விவேகாநந்தா கல்லூரி மாணவர்கள்! இதுக்கெல்லாம் முறையான நடவடிக்கைகள் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கணும்.

    ReplyDelete
  8. வாங்க கோமதி அரசு, இந்த பஸ் டே என்பதே எனக்குச்சென்னை வந்து தான் தெரியும். மதுரையிலே எல்லாம் பார்த்ததில்லை. வட மாநிலங்களிலும் காண முடியாது.

    ReplyDelete
  9. ஏடிஎம், எல்லாரும் ஓங்கிக் குரல் கொடுக்கணும். அதுக்கு தைரியம் வரணும் முதல்லே.

    ReplyDelete
  10. வாங்க மதுரை சரவணன், நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு சரியே, ஜனவரி முதல் தேதிப் புத்தாண்டுக்கொண்டாட்டங்களில் ஆரம்பிச்சு மாணவர்கள் கொண்டாடும் அனைத்து தினங்களிலும் வன்முறை வெடிக்கிறது. நேற்றுப் பாருங்க சட்டக்கல்லூரி மாணவர்கள் சொந்தக் காரணங்களுக்காக குறளகம் எதிரே வர வண்டியை எல்லாம் மேலே செல்ல விடாமல் தடுத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். போலீசும் அவங்களைக் கெஞ்சிக் கூத்தாடித் தான் போகச் சொன்னதே தவிர, எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ReplyDelete
  11. This is election year, which is just a a few months away.

    If the errant students are lathi-charged, or, in the melee, a student dies, or a few students grievously injured, JJ, VK, VAIKO, Communists, Sarath Kr and others of the 14 party alliance, will come to street and talk:

    கருனானிதியின் அராஜகம். மக்களே இந்த அராஜக ஆட்சி வேண்டுமா ? வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே

    They will take political mileage out of this, like fishing in troubled waters.

    That is the reason, Police could not do anything. Nor the bus crew.

    ReplyDelete
  12. It appears you dont have a son. Or, if you have, you will break his will and turn him to be unnatural.

    There is no comparision between girls and boys in core personality. Let them grow into as men and as women only.

    There is an deep rooted subconsious innate sense of conformity in girls. Not in boys. Boys need to be non conformists.

    Therefore, in civilisation, men make rules; womem follow the rules.

    Our famous woman poet advises you. உங்களுக்குத்தான் அப்படிப்பட்ட சொற்கள் வேத வாக்காச்சே:

    எவ்வழி ஆடவர் அவ்வழி வாழிய நலனே.

    Your suggestion to boy that they follow the example of girls, like offering gifts to the crew, decorating the buses with flags and festoons, WILL ROB THE CELEBRATIONS OF ALL ITS JOY.

    Joy should be raucous and irreverant.

    The joy the girls took is DECENT AND DISCIPLINED.

    Why do you say boys should have that kind of joy ?

    ReplyDelete
  13. I can rebut you word for word but it will fill all space here.

    Nevertheless, I agree with you that such celebrations should be such that no outrageous incidents like misbehaviour with women, injuring the passers-by etc. shoud not be allowed.

    People like you getting caught in traffic jam ?

    Why did nt you complain when political parties disturb traffic under various agitations ? Or, other kinds of processions?

    Why not sacrifice your convenience for a day ?

    Bus days are announced. Take a different route.

    Buses are given by the authroties themselves for students to take. Students did not hijack them.

    ReplyDelete
  14. வாங்க ஜோ, இரண்டாம் முறை வருகைக்கு நன்றி.

    இது தேர்தல் காலம் இல்லைனாலும் அரசு மாணவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது கடந்த நாற்பது வருடங்களாய் அமுலுக்கு வந்துவிட்டது என்பதை அறியாமல் இருக்க மாட்டீர்கள். மாணவர்களை அடிக்க வேண்டாம். ஆனால் நீதிமன்றத்தின் மூலம் இதற்குத் தடை உத்தரவு வாங்கி மீறினால் மாணவர்கள் கைது செய்யப் படுவார்கள் என்று அந்த அந்தக் கல்லூரி முதல்வர்கள் மூலம் எச்சரித்திருக்கலாமோ? கடைசியில் சொன்னது உண்மையே, பொது ஜனங்களும் எதுவும் செய்ய முடியாது. பேருந்து ஓட்டுநரோ, நடத்துநரோ கூட எதுவும் செய்ய முடியாது. அவங்க வைச்சது தான் சட்டம் அன்னிக்கு. :((((((((

    ReplyDelete
  15. It appears you dont have a son. Or, if you have, you will break his will and turn him to be unnatural.//

    ஹாஹாஹா, இதுக்குச் சிரிக்கிறதைத் தவிர வேறே எதுவும் சொல்லப் போறதில்லை. மேலும் நான் மாணவிகளையும், மாணவர்களையும் ஒத்துப் பார்க்கவில்லை. திருச்செங்கோடு மாணவிகள் செய்தது மாதிரியாக மாணவர்களும் அதே திருச்செங்கோட்டில் படிச்சவங்க செய்திருக்காங்க. அதைப் படிக்க இங்கே போகவும். ஆகவே இது ஒண்ணும் மாணவர்கள் தாங்கள் ஆண் என்பதை நிரூபிக்கச் செய்யும் ஒன்றல்ல. எல்லா ஆண்களுமோ அல்லது எல்லா இளைஞர்களுமோ அநுசரித்துச் செல்லமாட்டார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.

    Therefore, in civilisation, men make rules; womem follow the rules.//

    Oh, it is your opinion.


    //Your suggestion to boy that they follow the example of girls, like offering gifts to the crew, decorating the buses with flags and festoons, WILL ROB THE CELEBRATIONS OF ALL ITS JOY.

    Joy should be raucous and irreverant.

    The joy the girls took is DECENT AND DISCIPLINED.

    Why do you say boys should have that kind of joy ?//

    மாணவர்கள் அனைவருமே பேருந்து தினத்தை இவ்வாறுதான் கொண்டாடவேண்டுமெனில் மற்ற மாநிலங்களிலும் இவ்வாறு நடக்கிறதா? அல்லது எதுக்கெடுத்தாலும் மேல்நாட்டு வழிமுறைகளைப் பின்பற்றும் நாம் எந்த வெளிநாட்டிலாவது இப்படி நடக்கிறதாய்க் கேள்விப் பட்டிருக்கோமா? இல்லை பார்க்கிறோமா? நீங்கள் கிண்டலுக்காகச் சொன்னாலும், அல்லது உண்மையாகச் சொன்னாலும் நம் சந்தோஷம் என்பதை மற்றவர்கள் பாதிக்காவண்ணம் வெளிப்படுத்துவதே நல்லது.

    ReplyDelete
  16. I can rebut you word for word but it will fill all space here.//

    Oh, Me also can rebut your every word. But nope! because it is your own opinion and me least bothered. அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களிலும் மாட்டிக்கொண்டு ரயிலையே தவற விட்டிருக்கோம். ஆனால் யாரிடம் போய் மோத முடியும்? அதற்காக தொடர்ந்து அவங்க தப்பு செய்தால் நானும் செய்வேன் என்று வளரும் இளம் சமுதாயம் கெட்டுக் குட்டிச்சுவராவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? மேலும் இந்த மாணவர்கள் பேருந்தைக் கடத்தத் தான் செய்தார்கள். நீங்க தினசரிகளில் பார்த்தால் முழுச் செய்தியும் கிடைக்கும். டெப்போவிலே போய் பேருந்தைக் கேட்டுவிட்டுக் கிடைக்காமல் வழியில் எங்கோ சென்று கொண்டிருந்த பேருந்தை மடக்கித் தங்கள் இஷ்டப்படி போகச் செய்தது விவேகாநந்தா கல்லூரி மாணவர்கள். மற்றக் கல்லூரி மாணவர்களும், பச்சையப்பா, மாநிலக்கல்லூரி, நந்தனம் ஆர்ட்ஸ் போன்றவர்களும் வழியில் போய்க்கொண்டிருந்த பேருந்தைத் தான் கூட்டமாய்ச் சென்று வழி மறித்து ஆக்கிரமிப்புச் செய்து கொண்டார்கள். இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. நன்றி உங்கள் வரவுக்கும், மாணவர்கள் பால் காட்டிய அபரிமிதமான பரிவுக்கும்.

    மேலும் என்னுடைய செளகரியத்தை ஒரு நாள் தியாகம் செய்யச் சொல்கிறீர்கள். நான் வேண்டுமானால் அன்று வெளியே செல்லாமல் வீட்டில் இருக்கலாம் அல்லது மாற்று வழியைத் தேர்ந்தெடுக்கலாம் , ஆனால் அன்று பள்ளிக்கு, அலுவலுக்கு, உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனைகளுக்கு, அல்லது வேறு முக்கியக் காரணங்களுக்காகச் செல்லும் மற்ற லக்ஷோப லக்ஷம் மக்களுக்கும் என்ன பதில் வைச்சிருக்கீங்க? நான் போனதாய்ச் சொன்னது இப்போ சமீபத்தில் இல்லை. சில வருடங்கள் முன்னர். பேருந்தை டெப்போவில் உள்ள எவரும் மாணாக்கர்களுக்குக் கொடுத்து பேருந்தை உடை, நெருப்பு வை, என்னவேண்டுமானாலும் செய்து கொள் என்று சொல்லவும் இல்லை. இந்த அக்கிரமம் சென்னையில் மட்டுமே நடக்கிறது.

    ReplyDelete
  17. நல்ல பதிவு கீதாம்மா ,இன்றைய சூழ்நிலையில் அவசியமான பதிவும் கூட
    பிளஸ் டூ வரை படித்தவர்கள் கல்லூரிக்கு வந்தது முதல் வேறு உலகமாக தெரிய ஆரம்பிப்பதன் தொடக்கமே
    இவ்வளவுக்கும் காரணம்
    அதுவும் கும்பல் சேர்ந்து விட்டால் எதையும் செய்யலாம் என்ற ஒரு தவறான கருத்து தான்
    இவர்களை போன்றோர்க்கு அசட்டு தைரியம் வர முக்கிய காரணம்
    ஒரு நிமிடம் ,நமது குடும்பத்தை சார்ந்த மக்களுக்கு இந்த மாதிரி விழாக்களால் ஏற்படும்
    பிரசனைகளை யோசித்தால் போதும் ;திருந்துவதற்கு ஒரு தொடக்கமாக கூட அமையும்
    இந்த மாதிரி விழாக்கள் வேண்டாம் என்று பெற்றோரின் சார்பாகவும் எனது கருத்தை இங்கே
    பதிவு செய்கிறேன்
    பதிவுக்கு நன்றி கீதாம்மா

    ReplyDelete
  18. இந்த மாதிரி சமுக அக்கறையும் ,சமுக விழிப்புணர்வு உள்ள பதிவுகளையும் நீங்க அதிகமாக எங்களுக்கு தர வேண்டும் என்று
    கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  19. அதைப் படிக்க இங்கே போகவும்.//

    ஜோவுக்குக் கொடுத்த பதிலில் லிங்க் விட்டுப் போயிருக்கு, ஜோ அந்த லிங்க் !இங்கே

    ReplyDelete
  20. வாங்க ப்ரியா, எனக்குத் தெரிஞ்சு பொதுமக்கள் யாரும் இம்மாதிரியான கொண்டாட்டங்களையோ, அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களையோ ஆதரிப்பதில்லை. ஆனாலும் பெரிய அளவில் குற்றம் சொல்லாமல் பொறுத்தே போகின்றனர். இது தப்போனு தோணுது! :(

    போடலாம், ஆனால் நீண்ட விவாதங்களுக்கு வழி செய்யும், இப்போ பெண்கள் தினம் வரப் போகுதே, அதுக்குச் சில பதிவுகள் போட எண்ணம். யோசிச்சிட்டு இருக்கேன். பார்க்கலாம்! :)))))))

    ReplyDelete