அடுத்தடுத்து நீதிமன்றத்தின் எச்சரிக்கைகள் தொடர்ந்ததும், ஒரு வழியாக சென்னை மாநர(கர)கக் (எ.பி.இல்லை) காவல்துறை, கல்லூரி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடுவதைத் தடை செய்துள்ளது. எல்லாக் கல்லூரி மாணவர்களும் அவங்க இஷ்டத்துக்கு நினைச்ச நாள், நினைச்ச நேரம்னு கொண்டாடிட்டு இருந்தாங்க. கடந்த பதினைந்து நாட்களாய் இது தொடர் துன்பமாய் இருந்தது. இப்போ விவேகாநந்தா கல்லூரி மாணவர்களும் இதிலே சேர்ந்ததை நினைக்கையில் வருத்தமாய் இருந்தது. விவேகாநந்தரின் பெயரையே கெடுக்கிற மாதிரிச் செய்யறாங்களேனு வருந்தினோம். விவேகாநந்தா கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களையும், அவங்க பெற்றோரையும் கூப்பிட்டுப் பேசி இருக்காங்க. எல்லாக் கல்லூரிகளும் இப்படிச் செய்தால் நல்லா இருக்கும். இளம் வயது, இப்போத் தான் அன்பான பேச்சும், கனிவான நடவடிக்கையும் காட்டி நம் இஷ்டத்துக்கு அவங்களை வளைக்கலாம். கொஞ்சம் விட்டால் கடினமான எஃகு போல் ஆகிடுவாங்க. வளரும் தலைமுறை நம் கையில்.
விவேகாநந்தா கல்லூரி நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்.
நல்ல பதிவு
ReplyDeleteஎங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்
இதை ஒரு முன் மாதிரியாக சென்னையில் உள்ள மற்ற கல்லூரி நிர்வாகங்களும் மேற்கொள்ளலாமே
வாங்க ப்ரியா, மற்றக் கல்லூரிகளும் பின்பற்றலாம், ஆனால் என்ன செய்யறது? எல்லாக் கல்லூரிகளுக்கும் தைரியம் வரதில்லை. :(
ReplyDeleteவிவேகாநந்தா கல்லூரி நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteகல்லூரி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள். ஆனால் மற்ற கல்லூரிகளில் சங்கங்கள் உண்டு. இங்கு இல்லை என்று எண்ணுகிறேன். சங்கம் மூலமாக அரசியல்வாதிகள் பிரச்சனை பண்ணுவார்கள்
ReplyDeleteமுன்னாள் விவேகா மாணவன் என்ற முறையில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி
ReplyDelete