எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 22, 2011

நியூசிலாந்தில் மீண்டும் பூகம்பம்,

அடுக்கு மாடி வேற வயத்த கல்க்கினது . என்ன செய்ய ? வேலைல மனசை செலுத்திண்டு இருந்தேன்
patients ஐ விட்டுட்டு வெளீயவும் நாங்க யாரும் வரமுடியாது. shallowquake .அப்பா ஆட்டிடுத்து.Patients எல்லாம் post operative. ஓவ்வொருத்தரும் ஹெல்ப் லெஸ்ஸா நடுங்கினதை பார்க்க கஷ்ட்டமா இருந்தது. இயற்க்கைக்கு இப்படி ஒரு கோவமா. என்ன உக்கிரம் vicious:(( life - how fragile it is . How much we strive for it
. May God Bless
Sai Ram
Jayashree//

இது ஜெயஸ்ரீ அவர்கள் எனக்குக் கொடுத்த தனி மடலின் ஒரு பகுதி. அங்கே எல்லாரும் ரொம்பவே கஷ்டப் படறதா ஏற்கெனவே பின்னூட்டம் வேறே கொடுத்திருக்காங்க. ரொம்ப வருத்தமா இருக்கு. திரும்பத் திரும்ப நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் நகரம் பாதிக்கப் படுகிறது. எங்கே வந்தாலும் கஷ்டம் தான். இயற்கையின் சீற்றம் எங்கேயும் வரவேண்டாம். ஆனால் மனதுக்கு அண்மையானவர்களுக்கு ஒரு துன்பம் என்னும்போது தாங்கிக்கொள்ளக் கூடிய பக்குவம் இன்னும் வரவில்லை. ஜெயஸ்ரீ குடும்பம் மட்டுமல்லாமல் நம்மோட துளசியின் மகளும் அங்கே இருந்தார். அவங்களுக்கும் பாதிப்பு இருக்காது என நம்புகிறோம். அனைவரின் நலத்துக்கும் இயற்கை அன்னையின் கோபம் குறைந்து சாந்தம் அடையவும் பிரார்த்தனைகள்.

சற்று நேரம் முன் தொலைக்காட்சியில் பார்க்கும்போதே குலை நடுங்கியது. துளசியின் மகள் நலம் என்று மடல் கொடுத்திருக்கார். அனைவரின் சுகத்திற்கும் பிரார்த்திப்போம்.

10 comments:

  1. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்கள். மீண்டும் இப்படி ஒன்று நடக்கக் கூடாது என்ற பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  2. எல்லோர் நலத்துக்கும் இயற்கை அன்னையின் கோபம் குறைந்து சாந்தம் அடையவும் பிரார்த்தனைகளில் எல்லோரும் பங்கு பெறுகிறோம்.

    நியூசிலாந்தில் மீண்டும் பூகம்பம் ஏற்படாமல் இருக்க இறைவனையும் இயற்கையையும் வேண்டிக் கொள்வோம்.

    துளசி அவர்கள் மகள் நலமாக இருக்க வாழ்த்துவோம்.

    ReplyDelete
  3. அன்பு கீதா உலகமே இந்த மாதிரி இயற்கை சீற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறது.
    இதில் நமக்குத் தெரிந்தவர்கள் அங்கே இருக்கிறார்கள் என்றால் இன்னும் கவலை. ஜயஷ்ரீ குடும்பமும் துளசி கோபாலின் மகளும் நலமாக இருப்பது நிம்மதி.
    இன்னும் பொருட்களையும் பந்துக்களையும் இழந்தவர்களுக்கு நம் பிரார்த்தனைகளை அனுப்புவோம்.

    ReplyDelete
  4. நேற்றே நீங்க ரெண்டு பேரும் எழுதியதை படித்தேன்.,எந்த ஊர் என்று அனுமானிக்க முடியவில்லை
    இன்று தினமலர் பேப்பர் லில் முதல் பக்கம் நியூ சிலாந்து கிரிச்ஸ்ட் நகரத்தில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில்
    பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து விட்டன என்று படித்த போது தான் அது நினைவுக்கு வந்தது
    சென்ற வருடமும் நடந்ததாக பத்திரிகையில் போடப்பட்டு இருக்கிறது

    இனி வராமல் இருக்க இயற்கை அன்னையை வேண்டி கொள்வோம்

    ReplyDelete
  5. ஜெயஸ்ரீ மேடம் .,
    கவலை வேண்டாம் ;நாங்களும் இறைநிலையிடம்
    பிராத்தனை செய்து கொள்கிறாம்

    ReplyDelete
  6. காட்சிகள் மிகப் பயங்கரமாக இருந்தன; துளசியக்கா பற்றிச் எண்ணினேன்; அவர்கள் குடும்பத்தார் நலமறிந்து மகிழ்வே! அனைவர் நலத்துக்கும் பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  7. பிரார்த்தனைகளில் நானும் கலந்து கொள்கிறேன் கீதாம்மா.

    ReplyDelete
  8. மனசு கிடந்து அடிச்சுக்கறது கீதா.

    என்ன கஷ்டகாலம்! அஞ்சு மாசத்துலே இது ரெண்டாந்தடவை:(


    இதுவரை 113 உடல்கள் மீட்கப்பட்டன.

    சின்ன நாட்டுக்கு இது பெரிய இழப்பு:(

    ReplyDelete
  9. இங்கே வருத்தம் தெரிவிச்ச அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி.

    வாங்க துளசி, மகள் நலம் தானே? என்னவோ போங்க, அடுத்தடுத்துப் பட்ட காலிலேயே அடி பட்டுட்டு இருக்கு. தொலைக்காட்சியிலே பார்க்கையிலேயே மனம் நடுங்குது/ :(

    ReplyDelete