எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Saturday, February 26, 2011
தேநீர் இடைவேளை!
பிஸ்கட், பிஸ்கட்
என்ன பிஸ்கட்,
ஜம் பிஸ்கட்
என்ன ஜம்
ராஆஆஜம்
என்ன ரா
கோ ரா
என்ன கோ
டீ கோ
என்ன டீ???
எத்தனை பேருக்கு இது தெரியும்? சின்ன வயசு விளையாட்டு. கடைசியிலே சில பெரியவங்க பசங்க கிட்டே விளையாட்டுக்கு, "பெண்டாட்டி" னு முடிப்பாங்க. ஆனால் உண்மையில் அப்போது போட்டியில் இருந்த லிப்டன் டீயோ, ப்ரூக்பாண்ட் டீயோ தான் விடையாக வரும். தேநீர் குடிப்பது அப்போதெல்லாம் தென்னிந்தியாவில் அதிலும் மதுரையில் பரவலாக்கப் படவில்லை. அதிலும் என்னை மாதிரி குழந்தைங்களுக்கு, (ஹிஹிஹி, சந்தோஷமா இருக்கு) காப்பியே கண்ணிலே காட்ட மாட்டாங்க. பெரியவங்க குடிச்சதும் அந்தக் கடைசிச் சொட்டுக் கிடைக்கும் சில சமயம். நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு அதுக்காகக் காத்திருப்போம். டீ எங்கேருந்து கொடுப்பாங்க? ஆனாலும் அரசல், புரசலா அதைப் பத்திப் பேச்சு இருந்தது. ம்ம்ம்ம்?? நான் ஒண்ணாவது படிக்கும்போது அப்போதிலிருந்து தான் நல்ல நினைவுகள் இருக்கு எனக்கு. அப்படி ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறச்சே, முதல் முதல் தேநீர் சுவைத்த நினைவு பசுமை. தம்பி கைக்குழந்தை. அண்ணாவும் நானும் தான் பள்ளிக்குப் போவோம். அப்போ ஒரு நாள் அன்னிக்கு விடுமுறையா என்னனு நினைவில் இல்லை. தெருவில் தேயிலைப் பாக்கெட்டுகள் விற்றுக்கொண்டு வருவாங்க. கூடவே ஒரு பெண்ணும் வருவாங்க. ஒரு சைகிள் ரிக்ஷா அல்லது கைவண்டியில் பொருட்கள் இருக்கும். வண்டி இழுக்கிறவர் தவிர ஒருத்தர் பொருட்களுக்குப் பாதுகாப்பாய்க் கூடவே வருவார்.
இந்தப் பெண்மணி வீடு வீடாய்ப் போய்த் தேயிலை பற்றிப் பிரசாரம் செய்து, அவங்க சம்மதித்தால் வீட்டுக்குள் போய் சமையலறையிலேயோ அல்லது, அவங்க காட்டும் அடுப்பிலேயோ, தேநீர் தயாரித்துக் கொடுத்துக் குடிக்கச் சொல்லுவாங்க. எப்படி இருக்குனும் கேட்பாங்க. தேயிலைப் பாக்கெட் வாங்கினால் இலவசம் எல்லாம் கொடுத்த நினைப்பு இல்லை. ஒரு பாக்கெட் வாங்கினாலே ஆறு மாசத்துக்கு வரும்னு நினைக்கிறேன். அப்போதெல்லாம் ப்ரூக் பாண்ட் இரட்டைக்குருவி போட்ட தேயிலைத் தூள் தான் ரொம்பவே பிரபலம். எங்க வீட்டுக்கும் அப்படி ஒரு பெண்மணி வந்து அப்பாவும், அம்மாவும் அநுமதித்ததும் உள்ளே வந்து அடுப்பு மூட்டி, (விறகு அடுப்பு அப்போது) தேநீர் தயாரித்துக் கொடுத்தாங்க. போட்டி போட்டுகொண்டு பாயாசம் குடிக்கிறாப் போல் குடிச்சோம். தம்பிக்குக் கிடைக்கலை. ரொம்பச் சின்னக் குழந்தை! :)
இந்தத் தேயிலை இந்தியாவுக்கு எப்போ வந்ததுனு ஒரு ஆராய்ச்சி பண்ணினால் ராமாயண காலத்திலேயே அநுமன் இமயமலைப் பகுதியிலே தூக்கிட்டு வந்த சஞ்சீவனியே இதுதான்னு சொல்றாங்க. ஆனால் விஞ்ஞான நிரூபணங்கள் இரண்டும் வேறுனு சொல்லுதாம். என்னோட ஆராய்ச்சிக் (:P) குறிப்புகள் கீழே!
ராமாயணத்திலேயே தேநீர் குடிப்பது பற்றிச் சொல்லி இருக்கிறதாய் விக்கி பீடியா கூறுகிறது. புராதன இந்தியாவின் அருணாசலப் பிரதேச மக்களும், பர்மிய மக்களும் பனிரண்டாம் நூற்றாண்டிலிருந்தே தேநீர் அருந்தியதாய்ச் சொல்கின்றனர். ராமாயணத்தில் சஞ்சீவனி என்று கூறி இருப்பது தேயிலைச் செடியைத் தான் என்றும் ஒரு கூற்று இருக்கிறது. ஆனால் சஞ்சீவனி வேறு, தேயிலைச் செடி வேறு என விஞ்ஞான உண்மைகள் கூறுகின்றன. ஆங்கிலேயரால் தேயிலை வளர்ப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பரவலாக்கப் பட்டிருக்கிறது. ஆங்கிலேயர் அறிமுகம் செய்த இந்தியத் தேயிலை இன்று உலகத்தரத்தில் முதன்மையான இடத்திலும் உள்ளது என்பதையும் பெருமையுடன் சொல்லலாம். ரயில்வே துறைக்குப் பின்னர் இந்தியத் தேயிலைத் தொழிலில் தான் அதிக அளவு தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இந்தியத் தேயிலையில் அஸ்ஸாம், டார்ஜிலிங் ஆகிய இடங்களில் உற்பத்தி செய்யப் படும் தேயிலை மிகவும் பிரபலம் என்பதோடு அதன் சுவையும் பிரமாதம். இந்தியாவின் உற்பத்தியில் 75 சதவீதம் இந்திய மக்களாலேயே ஸ்வீகரிக்கப் படுகிறது.
கடைசியா ஒரு வார்த்தை:தேநீர் குடிக்காமல் இருந்தால் மத்தியானம் தலைவலி வரும்னு விடாமல் குடிச்சுட்டு இருந்த நான் தேநீரை நிறுத்திச் சில வருஷங்கள் ஆகின்றன. எங்கேயானும் போனால் அங்கே கொடுத்தால் மறுப்புச் சொல்லாமல் குடிச்சுப்பேன். டீ போட்டுத் தரவானு கேட்டால் சரினுடுவேன். ஆனால் இப்போல்லாம் மத்தியானங்களில் சில சமயம்/ ஏன் பலசமயங்களும் ஒண்ணுமே குடிக்கிறதில்லை. அலைச்சல் இருந்தால் அப்போது வெறும் பால் சர்க்கரை தவிர்த்து. காலைக் காஃபியையும் நிறுத்தணும்.
டிஸ்கி: தலைப்பு இப்படி இருக்கணும்னு தான் கொடுத்தேன். :D
Subscribe to:
Post Comments (Atom)
தேநீர் பற்றிய செய்திகள் பலவிதமாக உள்ளன.
ReplyDeleteதேயிலை நிச்சயமாக சஞ்சீவினி இல்லை. சர்க்கரை சேர்க்காமல் வெறும் பால் சாப்பிடுவதை விட கிரீன் டி (கட்டஞ்சாயா) சாப்பிடலாம். அதில் சிறிதளவு இஞ்சி கலந்த பனை வெல்லம் (ஓலை கருப்பட்டி) சேர்த்துக் கொள்ளுங்கள். பாலை தவிர்த்தால் கப நோய்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடலாம். நன்றி.
தேநீர் பற்றி இத்தனை தகவல்களா?
ReplyDeleteநல்ல பதிவு கீதாம்மா
இதை படித்த போது சமீபத்தில் படித்த ஒரு கட்டுரை நியாபகத்திற்கு வருகிறது கீதாம்மா!
ReplyDeleteமுதன் முதலில் இந்தியாவில் ட்ரெயின் விட்டபோது வெள்ளைக்காரன் சூனியம் வச்சுட்டான்! ஆவி வருது! அப்படின்னு தாயத்து மந்திருச்சி கட்டுவாங்களாம்
நாங்கள் சிறுவயதில் பொண்டாட்டி யில் தான் முடிப்போம். என் பாட்டி எப்போதும் லிப்டன் டி எனத் திருத்துவார்.
ReplyDeleteபாட்டியிடம் அப்போது இரும்பில் ஆன மஞ்சள் லிப்டன் டி சதுர டப்பா இருக்கும்.
நான் வேலைக்குச் சேர்ந்து லண்டன் சென்ற பொழுது உண்மையிலயே லிப்டன் டி டப்பா பார்த்ததும், முதலில் வந்தது பாட்டி ஞாபகம் தான்
இனிமையான பதிவிற்கு நன்றிகள்
பால் சேர்க்காத கிரீன் டீ நல்லது என்கிறார்கள் இப்போது. தேன் சேர்த்து குடிக்கலாம்.
ReplyDeleteபிஸ்கட், பிஸ்கட் பாடல் மலரும் நினைவுகளை கொண்டு வந்தது.
ஐப்பானில் டீ அருந்துவதை தவம் மாதிரி வஜ்ராசனத்தில் அமர்ந்து குடிப்பார்கள் நிதானமாய்.
தலைவி என்றாலே தகவல்கள் தான் ;)
ReplyDeleteடீ க்கள் பலவிதம் .ஹெர்பல், ப்லாக், ஊலாங் , ரெட் புஷ் ஜாஸ்மின் இப்படி பல ரகம் . டீ ல antioxidants – polyphenols க்கு கான்ஸெரை தடுக்கும் ஆற்றல் இருப்பதாக research சொல்லறது . தாய்வான், ஜப்பான், சைனா இங்கெல்லாம் பால் கலக்காத டீ ceremonies ப்ரபலம். அதுக்குன்னு குட்டியூண்டா kettle மூங்கில் பிடி வச்சு, மொட்டையா கப் . டீ யவிட எனக்கு அது பிடிக்கும்))) ஒரு நாளைக்கு 2 கப் டீக்கு 45% ஓவேரியன் கான்ஸெர் வராமதடுக்கும் சக்திஇருக்கறதா ஒரு ரிஸர்ச் சொல்லறது . டீ இலை எத்தனை தூரம் process ஆறதோ அத்தனை dark ஆகும். எங்க ஊரு தில்மா டீ காரர் சொல்லறார்!! ஒரு கப் டீல 40mg கஃபீன் ( காஃபி ல 80mg ) டீல இருக்கற பாலிஃபீனாலை வெளியே கொண்டுவர டீயை 3-5 நிமிஷம் வைக்கணும் . நம்ப சாய் மாதிரி கொதிக்க வைக்க கூடாது. Hubby அதை கஷாயம் என்பார் . எதுவும் நம்ப வழக்கம் படி மிதம் இதம் .
ReplyDeleteடீ பத்தின தகவல்களுக்கு நன்றி அம்மா. எனக்கும் பிஸ்கட் பிஸ்கட் தெரியுமே :)
ReplyDeleteஅட! டீடைம்ல டீ பற்றி படிக்கிறேன்!
ReplyDeleteஎனக்கும் பிஸ்கட் பிஸ்கட் தெரியும் எவ்வளவு நாள் விளையாண்டிருக்கேன்!
கடைசியில பொண்டாட்டீதான் இப்பவானா மசாலா டீன்னு சொல்லியி ருப்பேன் :))
கடைசியில சஞ்சீவினி கேபீன் சமாசாரமா? இருக்கலாம்.
ReplyDeleteஒரு கப் காபியோ டீயோ குடிக்கிறது நல்லதுனு நினைக்கிறேன். நாற்பது வயதுக்கு மேல் ஆனவர்கள் அவசியம் ஒரு கப் குடிக்கணும் - many health benefits of caffeine. பால் சர்க்கரை கலக்காம காபி டீ குடிச்சா இன்னும் நல்லது. தேவைப்பட்டா cinnamon (தமிழ்ல என்னனு தெரியலியே) சேத்து சாப்பிடலாம். வாசனையும் உண்டு; உடம்புக்கும் நல்லது.
வாங்க அஷ்வின் ஜி, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். தேநீர் குடிக்கிறதையே விட்டாச்சு. நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteவாங்க ப்ரியா, கொஞ்சம் தான் போட்டேன். :)))))
ReplyDeleteஹிஹிஹி, ப்ரியா, நீராவி எஞ்சின் இல்லை? அதனால் அப்படிச் சொல்லி இருக்கலாம்.
ReplyDeleteவாங்க ராம்ஜி யாஹூ, ஒருவழியா நீங்க லண்டன்லே இருக்கிறது தெரிஞ்சது! :)))) நன்றிங்க வரவுக்கும், கருத்துக்கும்.
ReplyDeleteகோமதி அரசு, வாங்க, ஜப்பானின் தேநீர் அருந்தும் வழக்கம் என்பது மிகவும் கெளரவமாகவும் கருதப்படும் இல்லையா? அதெல்லாமும் எழுத நினைச்சு, அப்புறம் வேண்டாம்னு விட்டுட்டேன். :)))))
ReplyDeleteகோபி, இணைய உலகிலே தான் இருக்கீங்கனு தெரிஞ்சது! :(
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, நிலைமை இப்போது எப்படி இருக்கு? புழுதிப் புயல் வேறே வந்திருக்கு போல? என்னவோ போங்க ஆண்டவன் சோதனைக்கு மேல் சோதனை செய்யறான். :(((((((
ReplyDeleteவாங்க கவிநயா, பிஸ்கட், பிஸ்கட் தெரியாமல் இருந்தால் தான் ஆச்சரியம்! :))))))
ReplyDeleteஅட, மீனா? சிங்கையிலே இருந்து ப்ளைட் கிடைச்சு வந்திருக்கீங்க?? நல்வரவு. உங்களுக்கு டீ டைமா படிக்கிறச்சே! சரிதான். டீ சுவை எப்படி?
ReplyDeleteஅப்பாதுரை, தேயிலைக்கும் சஞ்சீவனிக்கும் சம்பந்தம் இல்லைனு தான் சொல்றாங்க. வெளிநாடுகளில் காஃபி, டீ என்றால் பால் கலக்காமல் வெறும் டிகாக்ஷன் தான். நாம் தான் பால் விட்டுச் சர்க்கரை போட்டுச் சாப்பிடறோம். வரவுக்கு நன்றிங்க.
ReplyDelete