எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 07, 2011

என்ன சொன்னாலும் காதிலே போட்டுக்காதீங்க! :)


நம் வாழ்க்கையில் நமக்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒரு அனுபவ
பாடமாகவே அமைகிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்வு

என் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒரு தம்பதியர் புதிதாக
திருமணம் ஆனவர்கள், அவ்வப்போது எங்களுடன் வந்து மிக நல்லவிதமாக
பழகுவார்கள் ,

ஏற்கெனவே காதில் ஒரு தோடு அணிந்திருக்கிறாள், ஆனாலும் மிகவும்
ஆசைப்பட்டு மீண்டும் ஒரு முறை காதில் தோடணிந்திருக்கும் இடத்துக்கு
சற்று மேலாக இன்னொரு முறை துளையிட்டு அதிலொரு திருகாணி
போட்டுக்கொள்ளவேண்டும் என்னும் ஆசையால் நவீன முறைப்படி ( கன் ஷாட் )
மூலமாக துளையிட்டுக்கொண்டு அதில் போட்டுக்கொள்ள ஒரு காதணியைத்
தேர்ந்தெடுத்தார். அந்தக் காதணி அவருடைய அழகுக்கு மேலும் அழகு
சேர்த்தது.

இது இப்படி இருக்க ஒரு மாதம் கழித்து ஒருநாள் அந்தப் பெண் என்
வீட்டிற்கு வந்தார். அவர் முகம் வாடி இருந்தது. நான் அந்தப் பெண்ணிடம்
ஏன் வாட்டமுற்று இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அந்தப் பெண்
என்னவோ தெரியலை ரெண்டு மூணு நாளா கழுத்து வலி, அதுமட்டுமல்ல ஒரு பக்கம்
முழுவதுமே வலி இருக்கிறது என்றாள், நான் உடனே மருத்துவரிடம்
காண்பித்தீர்களா என்றேன்
ஆமாம் காண்பித்தேன் அவர் இந்தப் பனி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை
அதனால் கழுத்திலே நெறி கட்டி இருக்கிறது. அதனால் இந்த மாத்திரைகளை
உண்டுவாருங்கள் சரியாகி விடும் என்று ஏதோ மாத்திரைகளைக்
கொடுத்திருக்கிறார், இந்தப் பெண்மணியும் அந்த மாத்திரைகளை உண்டும்
இன்னமும் சரியாகாத நிலையில் இருக்கிறாள் என்பது புரிந்தது.

இந்த நிலையில் என் மனைவியும் அந்தப் பெண்ணும் பேசிக்கொண்டே சமையலறைக்கு
சென்றனர்.நானும் என்னுடைய வழக்கமான வேலையாக கணிணியில் வந்து
உட்கார்ந்தேன்.

திடீரென்று என் மனைவி என்னங்க இங்க வாங்க என்றாள் நானும் போனேன்.
அப்போது அந்தப் பெண்ணை அழைத்து அவளுடைய காதை என்னிடம் காட்டச்சொன்னாள்
என் மனைவி.அந்தப் பெண்ணும் அவளுடைய வலது காதை என்னிடம் காண்பித்தாள்.
நானும் நன்றாக இருக்கிறது திருகாணி புதிதா என்று பாராட்டிவிட்டு
நகர்ந்தேன். அது இல்லைங்க காதுக்கு பின்னால் பாருங்கள் என்றாள்.
பார்த்தேன் நிலைமையின் விபரீதம் புரிந்தது.

ஆமாம் அந்தப் பெண் நாகரீகம் கருதி மிக மெல்லியதான காதுத் திருகாணியை
அணிந்திருந்தாள். அந்தத் திருகாணியின் பின் புறம் இருக்கும் மடல் போன்ற
பகுதியும் மிகவும் சிறியது, அதனால் அந்த மடல் போன்ற பகுதியும் அவள்
காதின் திருகாணி போட துளைத்த ஓட்டை வழியாக காதில் முறம் போன்ற பகுதியின்
உள்ளே சென்று விட்டது. அது தெரியாமல் இந்தப் பெண்ணும் காதின் பின்பக்க
திருகாணி தொலைந்து விட்டதாகவும் ,முன்பக்க மிளகு வடிவம் கொண்ட கொண்டை
கழற்ற வரவில்லையென்றும் உதவி நாடி என் மனைவியிடம் வந்திருக்கிறாள்
என்பதும் புரிந்தது.ஆனால் அந்தப் பெண் நினைத்தாற்போல திருகாணி
தொலையவில்லை,அவள்காதின் உட்புறமாக சென்று
மாட்டிக்கொண்டிருக்கிறது.அதனால்தான் அவளுக்கு கழுத்தும் காதும்
வலியெடுத்து கழுத்தில் நெறி கட்டி எல்லா அவஸ்தையும் பட்டிருக்கிறாள்
எனபது புரிந்து போயிற்று. ஒன்று காதிலே அறுவை சிகிச்சை செய்துதான் அந்த
திருகாணியை எடுக்கவேண்டும் இல்லையென்றால் அந்தப் பெண்மணி
பொறுத்துக்கொள்ளும் தன்மை உடையவளாக இருந்தால் திருகாணி உள்ளே சென்ற
விதமாகவே அந்த ஓட்டையிலேயே பின்பக்கமாக அந்த திருகாணியை வெளியே தள்ளி
அதன் பிறகு அந்த முன்பக்க மிளகு வடிவத்தை பிடித்துக்கொண்டு பின்பக்க
திருகாணியைக் கழற்றவேண்டும்.

நான் அந்தப் பெண்ணிடம் ஒன்றும் சொல்லாமல் ஒன்றுமில்லையம்மா எல்லாம்
சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறிவிட்டு அவள் கணவனுக்கு
தொலைபேசி மூலமாக தகவல் சொன்னேன்.அவரும் வந்துவிட்டார்
அவரிடம் நான் இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லி விளக்கிவிட்டு
நானே எடுத்துவிடுகிறேன் ஆனால் நீங்கள் உங்கள் மனைவிக்கு விஷயத்தை
விளக்கிவிடுங்கள். பிறகு தைரியம் சொல்லுங்கள் என்று கூறினேன்.அவரும்
ஒப்புக்கொண்டார்.

பிறகு அந்தப் பெண்மணியிடம் நிலமையைக் கூறி என்னை நம்பி அவள் காதை
என்னிடம் காட்டுமாறு கூறினான் அவள் கணவன்.
நானும் இறைவனை வேண்டிக்கொண்டு முன் பக்க மிளகு போன்ற பகுதியை மெதுவாகப்
பிடித்து பின்பக்க ஓட்டையின் மையப்பகுதிக்கு பின்பக்க திருகாணி
வருமாறு செய்து வலித்தாலும் பரவாயில்லை என்று கூடியவரை நாசூக்காக
அழுத்தி ஓட்டை வழியே திருகாணியை வெளிவரச்செய்து பின்னர் முன் பக்க மிளகு
போன்ற பாகத்தை பிடித்துக்கொண்டு திருகாணியை இடப்புறமாக கழற்றி எடுத்து,
முன்பக்க மிளகையும் எடுத்தேன் காதிலிருந்து. அந்தப் பெண்மணி நான்
திருகாணியை எடுக்கும் போது கண்ணில் நீர்வரப் பொறுமையுடன் காண்பித்ததால்
எடுக்க முடிந்தது, இல்லையென்றால் அறுவை சிகிச்சைதான்.

அன்று சில மணித்துளிகளிலேயே அவளுடைய காது வலியும் ,கழுத்து வலியும்
மாயமாய் மறைந்தன,அவள் முகத்தில் புன் சிரிப்பையும் ஒரு நாணத்தையும்
அவளுடைய கணவன் முகத்தில் ஒரு நிம்மதியையும் கண்டு நானும் என் மனைவியும்
மகிழ்ந்தோம்.

காதில் ஓட்டைக்குத் தகுந்தவாறு பின்பக்கம் ஒரு வட்டமான தடுப்பு ஒன்று
முன்பெல்லாம் ;போட்டுக்கொள்வார்கள் ,இப்போதெல்லாம் நாகரீகம் கருதி
அதையெல்லாம் தவிர்த்துவிட்டார்கள், அது மட்டுமல்ல சிறிய அணிகலன்களை
அணிகிறார்கள்,அதனால் இப்படியெல்லாம் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.

நல்ல வேளை என் மனைவி கவனித்தாள், இந்த திருகாணி அவள் காதிலேயே
இருந்திருந்தால் காதில் புண் ஏற்பட்டு புறையோடி இருக்கும்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அதன் பின் விளைவாக அவதிகள்
பட நேரும், முக அழகு குன்றும். இதெல்லாம் தேவையா?

முன்பெல்லாம் புளியங்கொட்டையை தரையில் தட்டை வடிவில் நன்றாகத்
தேய்த்து சமனமாக்கி அதன்நடுவே துளையிட்டு காதணியை அணியும் போது
இவ்வாறு ஏற்படாத வண்ணம் தடுப்பாக அதை (Washer) உபயோகிப்பார்கள். நானே
பல முறை என் தாயாருக்கு, என் சகோதரிகளுக்கு தேய்த்து தடுப்பான் செய்து
கொடுத்திருக்கிறேன்

ஆகவே எப்போதுமே
” இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.”

என்னும் வள்ளுவன் வாக்குக்கொப்ப

”தடுப்பான் இல்லாத திருகாணி அவதி
கொடுப்பானாகி மிகுதி கெடும் ” என்று உணர்க

அன்புடன்
தமிழ்த்தேனீ

டிஸ்கி: நண்பர் தமிழ்த்தேனீயின் நண்பர் மனைவிக்கு நடந்ததை மேலே விவரித்திருக்கிறார். இன்று பல பெண்களும் காதின் மெல்லிய மடலைக் குத்திக்கொண்டு விதவிதமாய் மாட்டிக்கொள்ளும்போது கவனம் தேவை. தேவை இல்லாமல் வம்பை நாமே விலைக்கு வாங்கிக்கொள்ளவேண்டாமே?

38 comments:

  1. "Fantastic.

    ReplyDelete
  2. நாகரீகத்தை எப்படி நீங்க கண்டிக்கலாம் ? நீங்கள் பிற்போக்குவாதியா ??

    ReplyDelete
  3. நீங்கள் தான் எழுதினதாக்கும் என்று படித்துக் கொண்டே வந்து..பாதியில்
    'என் மனைவி' என்கிற வார்த்தையைப் பார்த்து, திடுக்கிட்டு, ''ஓகோ சாம்பசிவம் சாரும் 'எண்ணங்களி'ல் எழுத ஆரம்பித்து விட்டாரோ என்று நினைத்துப் படித்துக் கொண்டே வந்தால், கடைசியில் 'தமிழ்த்தேனி' என்று பார்த்ததும் தான் விஷயம் புரிந்தது.

    அதான் அவர் புகைப்படம் மேலேயே போட்டிருந்தேனே என்று சொல்வீர்கள் தான்.. எத்தனை பேருக்குத் தெரியும் சொல்லுங்கள்.. இந்த மாதிரி எடுத்துப் போடுவதெல்லாம் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டால் இன்னாருதுன்னு படிக்க ஆரம்பிக்கையிலேயே படிப்பவருக்குப் புரிந்து விடும் இல்லையா?..

    ReplyDelete
  4. வாங்க ஷிர்டி சாய்தாசன், நல்வரவு, பாராட்டுக்கு நன்றி. நண்பர் ஒருவரோட சொந்த அநுபவம், என்றாலும் இதைப் பத்தி ரொம்ப நாட்களா/மாசங்களா/வருஷங்களாச் சொல்லணும்னு! :)))))

    ReplyDelete
  5. வாங்க எல்கே, நாகரீகம்?? சரி! ஆனாலும் கொஞ்சமாவது கவனம் இருக்கணும் இல்லையா? இது தேனீ சொன்னது முதல்முறை அல்ல, நானும் பலரோட கஷ்டங்களைக் கண்டிருக்கிறேன்! அதான்! :(

    ReplyDelete
  6. வாங்க ஜீவி சார், அதிகமான வேலை, ஊரிலே இல்லை, உங்க பதிவுகளைப் படிச்சே பல நாட்கள் ஆகிறது. வரணும் ஒருநாள்.

    முதல்லேயே தேனீ எழுதினதுனு சொல்லிட்டா அப்புறம் சுவாரசியம் இருக்காதே! சீரியஸ் விஷயத்தைக் கூடக் கொஞ்சம் சுவை கூட்டிச் சொன்னால் தான் இளைஞர்கள் மட்டும் இல்லாமல் எல்லாருமே கவனிப்பாங்களோனு சில சமயம் தோணும்! இதையும் அப்படியே நினைச்சுட்டுப் போட்டேன். அதோட சஸ்பென்ஸ் வேண்டாமா? :))))))))

    ReplyDelete
  7. அப்புறம் சாம்பசிவம் சார் எழுதினதுனு நினைச்சீங்களா?/ ஹிஹிஹி, அவர் நான் எழுதினதையே படிச்சுக் காட்டினால் தான் உண்டு. சொல்லுவேன், கேட்டுப்பார்! அதோடு சரி! சில சமயம் ஆலோசனைகள் கொடுப்பார். படிச்சதே இல்லை இன்று வரை! :)

    ReplyDelete
  8. உலகத்துலே பாதிக்குமேலே, மனுஷங்க படற கஷ்டங்கள் அவங்க‌
    விலை கொடுத்து வாங்கினதுதான் எனவும் புரியவைக்கிறது
    இந்த நிகழ்வு.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  9. வாங்க சூரி சார், தஞ்சாவூருக்கு வந்திருந்தேன், வெள்ளியன்று. நேரம் இல்லை. ஆனால் உங்களைப் பத்தி விசாரிச்சேன். இப்போ பின்னூட்டம் பத்தி,

    நீங்க சொல்வது சரியே, எல்லாம் நாமே வரவழைத்துக்கொள்வதுதான். தீதும், நன்றும் பிறர் தர வாரா! எத்தனை உண்மை!

    ReplyDelete
  10. நல்ல பதிவு கீதாம்மா
    பயனுள்ள விசயங்களை தெரியபடுத்திய தமிழ் தேனி சாருக்கும்
    மறு பதிவாக வெளியிட்ட உங்களுக்கும் நன்றிகள்

    ReplyDelete
  11. //"என்ன சொன்னாலும் காதிலே போட்டுக்காதீங்க//
    தலைப்பை பார்த்ததும் ஒரு வேளை ரங்க்ஸ் என்ன சொன்னாலும் காதில் போட்டு கொள்ள கூடாது என்ற அர்த்தமோ என்று நினைத்து சிரிப்பு வந்தது ஹி ஹி
    இப்படி எல்லாம் சஸ்பென்ஸ் கொடுக்கறதுக்கு நீங்க இன்னொரு சஸ்பென்ஸ் தொடர் கதையை கொடுக்கலாம்..
    அந்த கதை கேசரி கட்சி கொடிக்கு சவால் விடும் வகையில் அமையட்டும் .,ஹ ஹா

    ReplyDelete
  12. அட , காதே.! தேவையா உனக்கு இந்தத் திருகு வலி?
    :)

    ReplyDelete
  13. \\"என்ன சொன்னாலும் காதிலே போட்டுக்காதீங்க! :)"\\

    அப்படியெல்லாம் இருக்க முடியாது. நீங்க சொல்றதைக் காதில் போட்டுக்கொண்டு விட்டேன்.

    அப்படியே இந்த வைர, தங்கத் தோடுகளிலும் பிரச்சனை இருக்குன்னு ஒரு பதிவு போடுங்க. புண்ணியமாப் போகும்:-)

    ReplyDelete
  14. வாங்க ப்ரியா, ரொம்ப நாட்களா இதைப் பத்திச் சொல்லணும்னு இருந்தது. ஆனால் கார்த்திக் சொல்றாப்போல் இன்றைய நாகரீகம் இதுனு ஆயிப் போச்சு! அதனால் யோசனை! இப்போ இதுக்கும் வரவேற்பு இருக்குனு தெரிஞ்சது. நன்றிம்மா.

    ReplyDelete
  15. அந்த கதை கேசரி கட்சி கொடிக்கு சவால் விடும் வகையில் அமையட்டும் .,ஹ ஹா//

    ஆமாம் இல்ல?? சரி, எழுதிடுவோம், இப்படியாச்சும் பயமுறுத்தி வைக்கலாம் எல்லாரையும்! :D

    ReplyDelete
  16. வாங்க கோபி ராமமூர்த்தி, காது குத்துவது முக்கியப்புள்ளியில் குத்துவது பத்தித் தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு. அந்த நாட்களில் ஓலையைத் தான் சுருட்டிப்ப் போட்டுப்பாங்களாம், அதுவே நீளமாய்த் தாடங்கம் என்று இருந்திருக்கிறது. அப்புறம் தோடு, கம்மல், ஜிமிக்கி, மாட்டல் எல்லாம் வந்திருக்குபோல. தங்கம் விக்கிற விலையிலே யாரு வாங்குவாங்கனு சொல்ல முடியலை! நகைக்கடைகளில் கூட்டம் நெரியுதுனு சொல்றாங்க. ஏதோ ஒண்ணு வைச்சுக்கலாம், விடுங்க, பாவம் உங்க தங்க்ஸ்! :)))))))))

    ReplyDelete
  17. வாங்க வல்லி, காது படுத்தற பாடு தேவையா! ம்ம்ம்ம்ம், ஆனால் இது முதல் முறை இல்லை. என் சொந்தக் காரங்க பெண் இப்படித் தான் குத்திப் போட்டுட்டு இருந்ததில் குழந்தை பால் குடிக்கும்போது குழந்தையைத் தூக்கி இருக்கா, கவனிக்காம, எப்படினே புரியலை, எப்படியோ அந்தத் தொங்கட்டான் வளையம் குழந்தையின் காதில் மாட்டிக்கொண்டு அம்மாவையும், பெண்ணையும்பிரிக்க முடியாமப் பட்ட கஷ்டம்! குழந்தை கத்திய கத்தல்! எப்படி மாட்டிண்டதுனு யோசிச்சும் புரியலை! :(

    ReplyDelete
  18. //படிச்சதே இல்லை இன்று வரை! :)//
    சார் கொடுத்து வைத்தவர்:)
    ஹ ஹா !

    ReplyDelete
  19. //ஆமாம் இல்ல?? சரி, எழுதிடுவோம், இப்படியாச்சும் பயமுறுத்தி வைக்கலாம் எல்லாரையும்!//
    தலைப்பு கூட ரெடி !
    பயப்பட வாங்க ...........
    எப்புடி :)
    ஆமாவா இல்லையா
    ஹ ஹா

    ReplyDelete
  20. வாங்க ப்ரியா, மறுவரவுக்கு நன்றி. ஹிஹிஹி, கொடுத்து வச்சவர்ங்கறீங்க! ஆமாம் இல்ல?? :P

    எங்கேயாவது நிஜம்ம்ம்மாவே கதையை ஆரம்பிச்சுடுவேன்.

    @போர்க்கொடி, அப்பாடா, இப்போவானும் உங்களைப் பயமுறுத்த முடிஞ்சதே! தமிழ்த் தேனீ சார், ரொம்ப தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  21. அப்பாடி! நினைச்சாலே பயம்மா இருக்கு. ஒரு பழமொழி சொல்வாங்க - 'கெடக்கிற கெடைய விட்டு...' அப்படின்னு ஆரம்பிக்கும் :) அந்த மாதிரி இருக்கு...

    பகிர்தலுக்கு நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  22. உபயோகமான பதிவு மாமி... கவனமாத்தான் இருக்கணும் நிச்சியமா...

    ReplyDelete
  23. chinna tirugaaniya kalattiteenga... :), aana anga ratha ottam palayamaadri ponaal thaan vali, veekamnu nilamai seeragum. sigichaikku piragu silar kaatugal kaaithatti siru oonam pola aagividugindrana. silar punnaana idathil marunthu iduvathum, silar kaiviralgalaal vothadam tharuvathumaaga kaayathai sari seithu kolgindranar.

    ReplyDelete
  24. வாங்க புதியன், முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. இந்த மாதிரிக் காதுப் புண்ணுக்குக் கடுக்காயைச் சந்தனக் கல்லில் இழைத்துப் போட்டால் ஒரே நாளில் சரியாகும். இறை அருளால் எங்க வீடுகளில் இன்னமும் இந்த வைத்தியம் தான். எங்க வீட்டு அமெரிக்கக் குடிகளான சின்னஞ்சிறு குழந்தைகள் உள்பட. இந்தக் காலத்தில் சந்தனக் கல்னா என்ன, கடுக்காய்னா என்னனு கேட்பாங்க, சாம்பாரோ, ரசமோ கொதிக்கும்போது மேலே வரும் நுரையையும் தடவலாம். விரைவில் புண் ஆறும். கொஞ்ச நேரம் எரிச்சல் இருக்கும், பொறுத்துக்கணும்!

    ReplyDelete
  25. //silar punnaana idathil marunthu iduvathum, silar kaiviralgalaal vothadam tharuvathumaaga kaayathai sari seithu kolgindranar.// இது நேரடி பதில் தான் சார். இதுல தப்பான ஒன்னும், உள்குத்து இல்லைங்க.

    //இந்த மாதிரிக் காதுப் புண்ணுக்குக் கடுக்காயைச் சந்தனக் கல்லில் இழைத்துப் போட்டால் ஒரே நாளில் சரியாகும். // உங்களின் பேச்சுக்கு அர்த்தம் தற்பொழுது புரியாமலில்லை. அனால் உங்களை போல எனக்கு பேச தெரியாது. நான் இவளோ விசயங்களை எதிர்பார்த்து படிக்கலை

    //சாம்பாரோ, ரசமோ கொதிக்கும்போது மேலே வரும் நுரையையும் தடவலாம்//

    :( வெளிப்படையான பேச்சு என்றாலும் தவறான/மட்டமான மருந்து.

    //உலகத்துலே பாதிக்குமேலே, மனுஷங்க படற கஷ்டங்கள் அவங்க‌
    விலை கொடுத்து வாங்கினதுதான் எனவும் புரியவைக்கிறது
    இந்த நிகழ்வு.//
    சுரி தாத்தா, சந்தர்ப்ப சூல்நிலையாள காதை குத்திக்கொள்ள விரும்பியது - மட்டும் தான் அந்த மாமி செஞ்ச பாவம், அது எல்லா பெண்களும் விரும்பர சாதாரண விஷயம்.

    ReplyDelete
  26. //தீதும், நன்றும் பிறர் தர வாரா! எத்தனை உண்மை!// சார் எந்த தவறுக்கும் குறைந்தது இருவர் உண்டு. இதில் எவர் தெரிந்தும் எவர் தெரியாமலும் பங்கேற்கின்றனர் என்பதை பொருத்து தான் அது விதியாவதும், பாவமாகிவிடுவதும்.

    தாங்களே நாகரீகம் கருதி என்று ஒரு வார்த்தை உபயூகபடுதியத்தை நான் நினைவு கூற விரும்புகின்றேன்.

    ReplyDelete
  27. நோ ஒர்ரீஸ்.......
    அப்படியெல்லாம் 'சட்' னு காதிலே போட்டுக் கொள்ள மாட்டோமாக்கும்.

    குட்டியா சின்னதா வளையம் ஓக்கேவா:-)))))))))))

    ReplyDelete
  28. அட! பதிவு போட இப்படி ஒரு சுலபமான வழி இருக்கா?!!!

    ReplyDelete
  29. வல்லியக்கா, ஏமி காது?

    ReplyDelete
  30. கடுக்கயிலே டேனின் நிறைய இருக்கு. அது ப்ரோட்டீனை பாதிச்சு ஒரு ப்ளக் பண்ணிடும். ரத்தம் வருவது நின்னுடும். அப்புறம் உடம்பு சரி செய்து கொள்ளும். உங்க ரசம், குழம்பு நுரையிலேயும் இதேதான், அளவு குறைச்சலா இருக்கும்.

    ReplyDelete
  31. வாங்க கவிநயா, எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கணும்னு தான் படிச்சதும் போஸ்டாப் போட்டேன்.

    ஏடிஎம், கவனம் காதிலே! :)))))

    ReplyDelete
  32. வாங்க புதியன், மறுவரவுக்கு நன்றிங்க. கடுக்காயின் மகத்துவம் உங்களுக்குத் தெரியலை. :( எங்கே நாம் தான் ஆங்கில மருத்துவ மோகத்தில் மூழ்கிப் பல நூற்றாண்டுகள் ஆகிறதே! ஆனால் எங்க வீடுகளிலே நீங்கல்லாம் என்ன சொன்னாலும் இந்த மாதிரியான சில்லறை விஷயங்களுக்கு இந்த மருத்துவம் தான். புண்ணாகி இருக்கும் காதிலோ, மூக்கிலோ போட்டாலே குளுமை உணரமுடியும். சீக்கிரம் ஆறிவிடும் ஆங்கில மருத்துவர்களே ஆச்சரியப்படும்படி. குழம்பு, ரசம் நுரை நானே போட்டிருக்கேன் எத்தனையோ முறை! ஒண்ணும் ஆகலை. மட்டமோ தவறோ எதுவும் இல்லை. முகத்திலே வந்த கறுப்புத் திட்டுகள் தோல் வியாதி நிபுணரைப் பார்த்தும் எனக்குச் சரியாகாமல் குப்பைமேனிக்கீரையை அரைச்சுத் தடவினதும் தான் நிறம் மாறியது. நம் மருந்துகள் ஒவ்வொன்றும் அற்புதம். அருமை தெரியாமல் ஒதுக்கி விடுகிறோம். :((((((((((

    ReplyDelete
  33. நிச்சயமா அந்தப் பெண் இந்த நோவை விலை கொடுத்துத் தான் வாங்கி இருக்காங்க. ரொம்பவே நுட்பமான இடத்திலே காதைக் குத்திக்கொண்டு வளையமோ, சின்னத் தோடோ மாட்டிக்கணும்னு யாரு சொன்னாங்க அவங்களுக்கு? அவங்க சொந்த ஆசைதானே இது?? பணம் கொடுத்து நோவையும், வலியையும் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆகையால் சூரி சார் சொன்னதிலே தப்பேதும் தெரியவில்லை. :)

    ReplyDelete
  34. இருவர் உண்டுனு சொல்றீங்க. இங்கே காதைக் குத்திக்கணும்னு முடிவு எடுத்தது அந்தப் பெண்ணாய்த் தான் இருக்கும். மற்றொருவர் எங்கிருந்து வந்தார்? முடிவே தப்பு. :(

    @துளசி, வாங்க ரொம்ப நாட்கள் ஆச்சு பார்த்து. வளையம் தான் சின்னதோ, பெரிசோ இன்னும் ஆபத்து. இந்த வளையம் தான் எங்க சொந்தக் காரப் பெண்ணின் , குழந்தையின் மெல்லிய விரலில் மாட்டிக்கொண்டு எடுக்க முடியாமல்........... :(

    ReplyDelete
  35. @திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    @திவா, நன்றி விளக்கத்துக்கு.


    @புதியன், திவா ஒரு ஆங்கில மருத்துவர். அவரும் நான் கூறிய மருத்துவ முறையை ஒத்துக்கொள்வதைக் கவனியுங்கள். நன்றி.

    ReplyDelete
  36. இதுக்குப் பேர்தான்...சொந்த செலவில்.....என்பதோ?

    அந்தக்காலத்திலெல்லாம் காது மடல் மேலே வரை சின்னச்சின்னதாய் குத்திக் கொண்டு பார்க்க கேள்விக் குறி போல் இருக்கும். எப்படித்தான் குத்திக் கொள்வார்களோ?

    நாகரீக நாரிமணிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறீர்கள்!!!

    ReplyDelete
  37. இனி எச்சரிக்கையாய் வாஷர் காதில் போட்டால் சரி. வேலியில் போகும் ஓணாணை காதில் விட்டுக் கொண்டு, டாக்டர் வீட்டுக்கும், தோழி வீட்டுக்கும் அலைந்து வலியால் துன்பப் பட்டிருக்கிறார்.
    வைரமூக்குத்தியை மூக்கில் போட்டு, வைரத்தின் ஒளி கண்ணில் பட்டு
    ஒற்றைத் தலை வலியால் அவதிப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete