திவா விட்ட காத்தாடி இங்கே
ஒரு நாலைந்து நாள் இணையத்திலே இல்லைன்னது என்னல்லாம் நடக்குது பாருங்க! திவா காத்தாடி விட்டுட்டு இருந்திருக்கார். திடீர்னு காத்தாடி விட ஆரம்பிச்சுட்டாரே, என்னடா இதுனு போய்ப் பார்த்தேனா! உடனேயே எனக்கும் மலரும் நினைவுகள். பனை ஓலையிலேயும் காத்தாடி பண்ணியதுண்டு. அந்தக் காத்தாடியிலே ஒரு குண்டூசியைக் குத்திப் பூந்துடைப்பக் குச்சியின் உள்ளே வெண்மையாகச் சதைப்பற்றுத் தெரியும் இடத்திலே லேசாய்க் குத்திட்டு ஓடினோமானால் காத்தாடி உங்க ஓட்டத்தின் வேகத்துக்கு ஏற்றாற்போல் சுத்தும். நானெல்லாம் ஓட முடிஞ்சதில்லை. அப்பா விடமாட்டார். (க்ர்ர்ர்ர்ர்ர்) ஸ்கூல்லே ஓடினதோட சரி. திவா விட்ட இந்தக் காத்தாடியைப் போலக் கலர்பேப்பரிலே, ஜிகினா பேப்பரிலேனு பண்ணினதும் உண்டு. பள்ளியிலே படிக்கும்போது இந்தக் காத்தாடியைக் கையாலேயே அவங்க அவங்க தானே பண்ணி எடுத்துட்டுப் போகணும். அதோட டீச்சர் வேறே பேப்பர் எல்லாம் கொடுத்துக் கத்திரிக்கோலையும் கொடுத்துச் செய்து காட்டவும் சொல்வாங்க. அப்படி ஒரு சமயம் பண்ணின காத்தாடியைத் தம்பி விளையாடக் கேட்டான். நமக்குத் தான் எப்போவுமே தம்பினா ஒரு தனிப் பாசம் ஆச்சா! சரினு கொடுத்தேன்.
மேலாவணி மூலவீதியிலே ஏழாம் நம்பர் வீட்டிலே குடி இருந்தோம். அப்போத் தான் சிவாஜியோட படமான "பார்மகளே பார்!" அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடிட்டு இருந்தது. அப்பா சிவாஜி ரசிகர். படம் பார்த்துட்டு எங்களுக்கெல்லாம் கதை சொல்லி இருந்தார். நாங்கல்லாம் பார்க்கலை. அப்படி எல்லாம் உடனே அனுப்பிட மாட்டார். படத்தைத் தியேட்டரிலிருந்து தூக்கப் போறாங்கனு தெரிஞ்சதும் கடைசி நாள் போவோம். அதனால் நாங்க பார்க்க இன்னும் நிறைய நாட்கள் இருந்தன. ஆனால் பாட்டுக்கள் மதுரை முழுதும் ஒலித்துக்கொண்டிருந்தன. அதிலே அவள் பறந்து போனாளே! பாட்டு ரொம்பவே பிரபலம். அவள் எனக்கா மகளானாள், நான் அவளின் மகனானேன். அப்படினு டிஎம் எஸ். குரலிலே காட்டி இருக்கும் உருக்கம் கேட்கும்போதே உருக வைக்கும். பார்க்காத படம் வேறே, என்னதான் கதை தெரிஞ்சாலும் நிறையக் கற்பனைகள்.
அந்தப் பாடலைப் பாடிக்கொண்டு தம்பி நான் கொடுத்த காத்தாடியை வலக்கையில் வைத்துக்கொண்டு கையை நீட்டிய வண்ணம் முதல் நம்பர் வீட்டிலே இருந்து தெருவின் ஒரு பகுதிக் கடைசியில் இருக்கும் பிள்ளையார் கோயில் வரையிலும் போயிட்டுத் திரும்பி வடக்கே எங்க வீடு இருக்கும் பகுதிக்கு ஓடி வந்து கொண்டிருந்தான். மறுநாள் அவனுக்குத் தேர்வு ஏதோ இருந்தது. நான் வீட்டு வாசலில் நின்று கொண்டு தம்பி காத்தாடி விடும் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன். அப்பா மீனாக்ஷி கோயிலில் வழக்கமான தரிசனத்தின் பின் வந்து கொண்டிருந்தார. நடுவில் எதிர்சாரியில் இருந்த பெரியப்பா வீட்டுக்குப் போயிருந்ததால் எங்களுக்குத் தெரியவில்லை. இல்லைனா இந்தப் பூனையும் பாலைக்குடிக்குமானு வீட்டுக்குள்ளே இருந்திருப்போம். பெரியப்பா வீட்டு வாசலில் நின்னுட்டுத் தம்பி அங்கே உள்ளே இருக்கும் எங்க பெரியப்பா பொண்ணு கிட்டேக் காத்தாடியைக் காட்டி வம்பு பண்ண, அவளோ, (இப்போ அவ இல்லை) ஜாடை காட்டறா, எங்க அப்பா உள்ளே இருக்கார்னு, நாம தான் மு.மு. ஆச்சே புரியலை.
இன்னும் பாட்டு ஓங்கி வரத் தம்பியும் கிளம்ப, காத்தாடியும் கிளம்ப தம்பி குரலைக்கேட்டு அப்பாவும் கிளம்ப, பளாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆர் தம்பி முதுகு பழுக்க. ஆஹா, அவள் என்ன பறந்தா வந்து முதுகிலே அடிச்சுட்டா? திகைத்த தம்பி திரும்பிப் பார்க்க மாட்டிக்கப் போறோம்னு தெரிஞ்சு நான் உள்ளே போக முயல, அதைக் கவனிச்ச அப்பாவின் கழுகுக் கண்கள், தம்பியைப் படிக்க வைக்காமல் விளையாட விட்ட என்னைத் திட்டனு ஒரே அல்லோல கல்லோலம். ஹிஹி, எனக்குப் பரிக்ஷை எல்லாம் மார்ச் மாசமே முடிஞ்சுடும். சேதுபதி பள்ளியில் தான் ஏப்ரல் கடைசி வரை இழுத்தடிப்பாங்க. அதுக்கு நான் என்ன செய்யறது? :D ஆனால் அது ஒரு மறக்கமுடியா அநுபவம். இப்போவும் அவள் பறந்து போனாளே என்று பாட்டு கேட்கும்போது நினைவு வரதோடு இல்லாமல், நாங்க மூணு பேரும் சேர்ந்திருக்கும்ப்போதும் சொல்லிச் சொல்லிச் சிரிச்சுப்போம்.
டிஸ்கி: மறந்துட்டேனே, அப்புறம் எனக்குக் குழந்தைகள் பிறந்ததும் அவங்களுக்குக் காத்தாடியை என்னோட மாமனாரோ, மாமியாரோ செய்து கொடுப்பாங்க. அழகாயும் இருக்கும். நல்லாவும் சுத்தும்.
ஹிஹி அப்பவும் நீங்க அடி வாங்கலியோ ??
ReplyDeleteஎல்கே, என்ன ஒரு ஆவல், ஆர்வம்? அதுவும் எனக்குக் கிடைக்கலையேனு ஆதங்கம் வேறே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஅந்த நாளும் வந்திடாதோ ஓஓஓஓஒ:))
ReplyDeleteஇணையத்தை வெற்றி கண்ட இளவரசியே வருக .....
ReplyDeleteதங்கள் வரவு நல் வரவாகுக !
உங்கள் மலரும் நினைவுகளில் நாங்களும் பங்கெடுத்து மகிழ்ந்தோம்
//இன்னும் பாட்டு ஓங்கி வரத் தம்பியும் கிளம்ப, காத்தாடியும் கிளம்ப தம்பி குரலைக்கேட்டு அப்பாவும் கிளம்ப, பளாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆர் தம்பி முதுகு பழுக்க. ஆஹா, அவள் என்ன பறந்தா வந்து முதுகிலே அடிச்சுட்டா? திகைத்த தம்பி திரும்பிப் பார்க்க மாட்டிக்கப் போறோம்னு தெரிஞ்சு நான் உள்ளே போக முயல, அதைக் கவனிச்ச அப்பாவின் கழுகுக் கண்கள், தம்பியைப் படிக்க வைக்காமல் விளையாட விட்ட என்னைத் திட்டனு ஒரே அல்லோல கல்லோலம். //
ஹ ஹா ஹா ஹ ஹா இப்போதும் சிரிப்பு வருது ! அதுவும் அவ பறந்தா வந்து அடிச்சுட்டா ஹ ஹா
ரசித்து சிரித்தேன் என்று சொல்லவும் வேண்டுமா ! நீங்கள் முழு நீள ஹாஸ்ய கதை ஒன்று எழுதுங்களேன் கீதாம்மா
கீதாம்மா ! இந்த இணைய பிரச்னைக்கு நீங்க ஒன்னும் கேசரி கட்சி காரிகைகள் மேல சந்தேகபடலை தானே.,நானும் தான் !
@ LK
ReplyDeleteஅப்பாக்கள் எல்லாம் பெண் குழந்தைகளை அடிக்கவே மாட்டா ;அம்மாக்கள் தான் போட்டு சாத்துவா..
வாங்க வல்லி, கொசுவத்தி சுத்தினா உங்களைப் பார்க்க முடியுது! :)))))) உண்மையிலேயே நம்மோட இளமைப் பருவம் அருமையான நாட்களாய்த் தான் கழிஞ்சிருக்கு. இப்போதைய குழந்தைகளுக்கு அத்தனை கொடுப்பினை இல்லை தான்!:(
ReplyDeleteஹிஹிஹி, ப்ரியா, ரசனைக்கு நன்றி. அந்த நேரம் என்னோட தம்பியின் முகத்தைப் பார்த்திருந்தால் இன்னமும் சிரிப்பு வரும். அவ்வளவு ஈடுபாட்டோடு பாடிட்டு இருந்தான் பாவம்! அப்பாவுக்கு ரசனையே இல்லை! :)
ReplyDeleteஎல்கேக்கு பதில் சொன்னதுக்கு நன்னி. என்றாலும் என்னோட அப்பாவும் என்னை அடிச்சிருக்கார். வேறு காரணங்களுக்காக. சில அப்பாக்கள் பெண் குழந்தைகளை மட்டும் இல்லை, குழந்தைகளையே அடிக்கிறது இல்லை. அம்மாக்களும் சேர்த்துத் தான்.
ReplyDeleteகாத்தாடி மாதிரி பறந்துடுவோம்னு நினைச்சேன் இன்னிக்கு மிஸஸ் ஷிவம். மனசு சரியில்ல. நிலமை சரியில்ல .கடவுள் புண்ணியத்துல நாங்க இப்போதைக்கு safe மலைலேந்து போல்டர் மாதிரி பாறையெல்லாம் பறந்துவந்து பல வீட்டை நாசப்படுத்திடுத்து. சிடில பலத்த உயிர் சேதம் . இந்த தடவை க்ரைஸ்ட்சர்ச் அத்தனை லக்கி இல்லை . கனத்த உயிர்சேதம். OFFICIAL 65
ReplyDeleteUNOFFICIAL 200 TO 400. .பூமி தூளி ஆடறமாதிரி ஆட்டிண்டே இருக்கு .long day at work. LONG NIGHT AHEAD!! துக்கமா இருக்கு. எப்போ நிக்குமோ :((( ரொம்ப வருத்தத்துடன்
ஜயஸ்ரீ
அடடா, ஜெயஸ்ரீ, மத்தியானம் உங்களை ஆன்லைனில் பார்க்கும்போதே கேட்க நினைச்சேன். வேலையா இருப்பீங்களோனு தயக்கமா இருந்தது. ரொம்ப வருத்தமா இருக்கு. நிறையச் சேதம் என்றும் செய்திகளில் பார்த்தேன். இறைவன் சோதனை செய்கிறான் என்றாலும் பயங்கரமான சோதனையா இருக்கு. அமைதி நிலவப் பிரார்த்திக்கிறோம். :(((((((
ReplyDeleteகையாலாகாமல் இருக்கும்,
கீதா
//சேதுபதி பள்ளியில் தான் ஏப்ரல் கடைசி வரை இழுத்தடிப்பாங்க// இல்லையே ... நான் படிக்கர்செய்லாம் ரெண்டு மாசம் விடுமுறை விடுவாளே ....
ReplyDeleteநல்ல மலரும் நினைவுகள் மாமி... ரசிக்கும் படி அழகா எழுதி இருக்கீங்க...
ReplyDelete(அது சரி... நீங்க அடி வாங்கின மேட்டர் மட்டும் சென்சார் பண்ணிட்டீங்களா?...:))))
அப்பாவி, அப்படி கேள்வி கேளு!
ReplyDeleteபாலாஜி அங்கிள், அப்புறமா தலைமை ஆசிரியர் உங்க காலத்திலே மாறி இருக்கலாம். அதோட மானேஜ்மெண்டிலே இருந்து அரசு நிர்வாகத்துக்கும் வந்திருக்கலாம். இப்போதைய நிலைமை பத்தித் தெரியாது எனக்கு!
ReplyDelete(அது சரி... நீங்க அடி வாங்கின மேட்டர் மட்டும் சென்சார் பண்ணிட்டீங்களா?...:))))///
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏடி எம், நான் இதுக்கு அடி வாங்கலை, திட்டுக் கிடைச்சது, சந்தோஷமா இப்போ? :P
வாங்க திவா, கொல்லையிலே அத்தி பூத்திருந்ததேனு நினைச்சேன்! {வெட்டிட்டாங்க, தெரியாம மரத்தையே :(}
ReplyDeleteநான் சொன்னது நீங்க இந்தப் பக்கம் வந்ததுக்கு!, :P:P:P:P:P:Pகூட்டா சேர்ந்துக்கறீங்க, நான் அடி வாங்கறதிலே அப்படி என்ன சந்தோஷம்???? :P:P:P:P:P:Pக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீங்க அடி வாங்கரதிலே இவாளுக்கு என்ன அப்படி ஒரு சந்தோசம் ?!
ReplyDelete