எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 23, 2011

பெண் எழுத்தும் நானும் ! 1

எல்கே, பெண் எழுத்து குறித்த தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் சொன்னது தற்கால கட்டங்களில் வலைப்பூக்கள் வைத்திருக்கும் பெண்கள் என நினைக்கிறேன். ஆனால் நான் எழுதுவது பெண் எழுத்தாளர்கள் குறித்து. ஏற்கெனவே ஜீவி அவர்கள் எல்லா எழுத்தாளர்களையும் அவருக்கே உரித்தான பாணியில் அறிமுகம் செய்திருந்தாலும் இது என்னுடைய பார்வை. எனக்கு முதலில் அறிமுகம் ஆன புத்தகம் ஆனந்த விகடனும், கலைமகளும் தான். அதிலும் கலைமகள் புத்தகத்திற்கு அப்போது திரு கி.வா. ஜகந்நாதன் அவர்கள் ஆசிரியராக இருந்தார். கலைமகளும், மஞ்சரியும் விடாமல் பல வருடங்கள் படித்து வந்தேன். கலைமகளில் ராஜம் கிருஷ்ணன் எழுதிய பரிசு பெற்ற நாவலின் பைன்டிங் ஒன்று தான் நான் முதலில் படித்த ராஜம் கிருஷ்ணன் நாவல். அந்தக் காலகட்டத்தில் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்களும் கலைமகளில் எழுதினார்கள் என நினைக்கிறேன். வெற்றிலைச் சுருள் என்னும் ஒரு நாவல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொன்டிருந்தது. அது நான் படித்ததில்லை. என்றாலும் அதில் வரும் படங்கள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் ஆழ்ந்து போய்ப் படிக்கும் அம்மாவையும் நினைத்தால் யாரோ பிரபல எழுத்தாளரால் எழுதப் பட்டிருக்க வேண்டும். திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களின் எழுத்து எனக்கு முதலில் அறிமுகம் ஆனது டாக்டர் ரங்காச்சாரி புத்தகத்தால். மூன்றாம் வகுப்புப் படிக்கையில் உடல்நலக்குறைவோடு மாதக்கணக்காய்ப் படுக்கையில் இருக்க நேர்ந்தபோது அப்பா பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகங்களில் அதுவும் ஒன்று. அப்போவே அதைப் படித்திருக்கிறேன். அதன் பின்னரே அவருடைய மற்ற நாவல்களைப் படிக்க நேர்ந்தது. டாக்டர் ரங்காச்சாரியை எழுதும் முன்னர் அவர் மருத்துவம் செய்த அப்போது இருந்த எல்லா நபர்களையும் சந்தித்து விஷயங்கள் சேகரித்ததாய்ச் சொல்லுவார்கள். இப்படி எழுத்துக்காகப்பாடுபட்ட முதல் பெண் எழுத்தாளர் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களே.


பதினைந்து வயதில் திருமணம் ஆன திருமதி ராஜம் கிருஷ்ணன் பள்ளிப்படிப்பைக் கூடப் பூரணமாக முடிக்காதவர். முசிறியைச் சேர்ந்த இவர் தன் கணவர் கிருஷ்ணன் என்னும் பொறியாளரின் உதவியோடு எழுத ஆரம்பித்தார். எழுத ஆரம்பித்த சில காலத்திலேயே இவர் பெண்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தார். சாதாரணமாகப்பொழுது போக்குக்காக நாவல்கள் எழுதும் வகையான எழுத்தாளர் அல்ல இவர். எழுத ஆரம்பித்த புதிதில் பெண்களின் குடும்ப வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்தே அதிகம் எழுதினார். உதாரணம் பெண் என்னும் நாவல் கலைமகள் பத்திரிகையில் நாராயணசாமி ஐயர் பரிசு பெற்றது. அடுத்த நாவல் மலர்கள் உளவியல் ரீதியாக ஒரு பருவப் பெண்ணின் மனோநிலை குறித்த ஆய்வு எனச் சொல்லலாம். பதினைந்தில் இருந்து இருபது வயதுக்குள்ளாக தாய் இல்லாத அந்தப் பெண் எதிர்கொள்ளும் பிரச்னைகளும், அதிலிருந்து எவ்வாறு அவள் மீண்டு வருகிறாள் என்பதையும் சொல்லும் நாவல். ஆனந்த விகடன் வெள்ளிவிழாப் பரிசு பெற்ற நாவல். அதன் பின்னர் இவர் எழுதிய நாவல்களில் அப்போதைய அணைகட்டும் திட்டங்கள் பொறியாளர்களால் எவ்வாறு மிகுந்த சிரமத்துடன் நிறைவேற்றப் படுகிறது என்பதைச் சுட்டும் வண்ணம் அமைந்தது. அமுதமாகி வருக என்னும் அந்த நாவல் ஊட்டியின் மேலே பைகாரா என்னும் நீர் மின் திட்டம் செயல்படுத்தப் பட்டது குறித்தது.

அங்கே தன் கணவரோடு வாசம் செய்த இவர் அங்கேயும் சும்மா இருக்கவில்லை. மலைவாழ் மக்களின் வாழ்வைப் பற்றிக் கேட்டறிந்தார். மாடுகள் அதுவும் எருமை மாடுகள் அவர்களின் வாழ்வாதாரம் என்பதையும், அதைத் தொடர்ந்த அவர்களின் பழக்க வழக்கங்கள், திருமண நடைமுறைகள், அதைத் தொடர்ந்த நட்பு, பகை, மனச்சிக்கல்கள், உறவின் முறை போன்றவற்றைக் குறித்து நன்கு கேட்டு ஆய்ந்து குறிஞ்சித் தேன் என்னும் நாவலில் அவற்றை வாசகர்களுக்கு அறிமுகம் செய்தார். கோவா விடுதலைப் போராட்டம் குறித்து கோவாவுக்கே சென்று பலரையும் சந்தித்துப் பேட்டிகள் எடுத்து செய்திக்குறிப்புகளைத் தொகுத்து வளைக்கரத்தில் அறிமுகம் செய்தார். இதே போல் இவர் மீனவர்கள் பற்றி எழுதுகையிலும் தூத்துக்குடி சென்று அங்கிருந்த மீனவர்களின் நிலைமையை நேரில் ஆய்ந்து அறிந்தே எழுதினார். சம்பல் கொள்ளைக்காரன் மான்சிங் பற்றி எழுத இவர் சம்பல் பள்ளத்தாக்கு சென்றபோது இவர் கணவர் தன்னுடைய வேலையை ராஜிநாமா செய்துவிட்டு இவருடன் சென்றார். அங்கே மான்சிங்கின் மகனைச்சிரமத்துடன் பேட்டி கண்டு நான்கு மணி நேரம் அவனைப் பேசவிட்டுப்பின்னர் அதன் அடிப்படையில் முள்ளும் மலர்ந்தது நாவலை எழுதினார். இப்படி ஒவ்வொரு கருவை எடுத்துக்கொள்ளும்போதும் அதற்கெனப் பாடுபட்ட இவருக்கு உரிய அங்கீகாரம் இன்று வரை கிடைக்கவே இல்லை எனலாம். குழந்தைகள் இல்லாத இவருக்கு இவரின் அருமைத் துணையாக இருந்து வந்த நோய்வாய்ப்பட்ட கணவர் இறந்ததும் இவரின் உடன் பிறந்த சொந்தங்களே இவரை ஏமாற்றிச் சொத்தைப் பிடுங்கிக் கொன்டு இவரை நடுத்தெருவில் நிறுத்தினார்கள். ஒரே சகோதரர் கடும் முயற்சி செய்து இவரை விச்ராந்தி என்னும் முதியோர் காப்பகத்தில் சேர்த்தார்.

திருமதி திலகவதி ஐ.பி.எஸ் அவர்களின் கடும் முயற்சியினால் தமிழக அரசு இவரின் நூல்களை நாட்டுடமையாக்கி இவருக்கு உதவித் தொகையாக மூன்று லக்ஷம் கிடைக்க வழி செய்தது. ராஜம் கிருஷ்ணன் அவர்களின் எழுத்துக்கு மூன்று லக்ஷம் என்பது சிறிய தொகைதான். ராஜம் கிருஷ்ணன் தனது இந்தத் தள்ளாத இந்த வயதிலும் பிறரின் இரக்கத்தையும், அவர்கள் இலவசமாய்த் தனக்குக் கொடுப்பதையும் விரும்பாததால் எதையும் இலவசமாகப்பெற விரும்பாமல் இந்தத் தன்மான எழுத்தாளர் இப்போதும் பெண்களுக்காக வேண்டி பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார். உயிர் விளையும் நிலங்கள் என்னும் பெயரில் பெண்களின் குழந்தை பிறப்பு முதல் குடும்பக் கட்டுப்பாடு வரை எழுதிய இந்தப் புத்தகமே இவரின் கடைசி புத்தகம் எனப்படுகிறது.


அவ்வப்போது வந்து பயமுறுத்துவேன்.

13 comments:

  1. எனக்குத் தெரிஞ்சதை நான் எழுதினேன். உங்களை எழுத சொன்னதே , இந்த மாதிரி பழைய எழுத்தாளர்களை பற்றி தெரிந்து கொள்ளலாமே என்றுதான்.. தொடருங்கள்

    ReplyDelete
  2. ||
    திருமதி திலகவதி ஐ.பி.எஸ் அவர்களின் கடும் முயற்சியினால் தமிழக அரசு இவரின் நூல்களை நாட்டுடமையாக்கி இவருக்கு உதவித் தொகையாக மூன்று லக்ஷம் கிடைக்க வழி செய்தது. தள்ளாத இந்த வயதிலும் பிறரின் இரக்கத்தையும், அவர்கள் இலவசமாய்த் தனக்குக் கொடுப்பதையும் விரும்பாத இந்தத் தன்மான எழுத்தாளர்||

    ஏங்க கீதாம்மா,எழுதும் போது உங்க நினைவு வந்த தள்ளாத வயதுன்னு எழுதிட்டீங்களா? :))

    திலகவதி இன்னும் செர்வீஸில் ஏடிஜிபி எகனாமிக் விங்'ல இருக்காங்க..
    பதிவ படிச்சு உங்க மேல ஒரு எஃப் ஐ ஆர் போட்டுறப் போறாங்க..முதல்ல தள்ளாத வயதை' தள்ளுங்க பதிவிலருந்து..

    இன்னும் நிறைய(நிறைவா) எழுதியிருப்பீங்கன்னு நினைச்சேன்.

    எனக்கு இன்னும் ட்யூல இருக்கு,மைனர் இன்விடேஷன்ல..

    பாக்கலாம்,என்ன எழுதறதுன்னுதான் ஒண்ணும் பிரியல...

    ReplyDelete
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அறிவன், சொதப்பிட்டீங்களே, தள்ளாத வயது ராஜம் கிருஷ்ணனுக்கு. திலகவதியைச் சொல்லலை. அப்புறமா இன்னொரு விஷயம் அவங்க நடராஜன் ஐபிஎஸ் எல்லாரும் ரிடையர் ஆகியாச்சு. எலக்ஷன் என்பதாலே அவங்களுக்கு பிரிவுபசாரம் மட்டும் மே கடைசியிலே. ஹிஹிஹி. லேட்டஸ்ட் நியூஸ் வைச்சுப்போமாக்கும்.

    ReplyDelete
  4. ஏங்க கீதாம்மா,எழுதும் போது உங்க நினைவு வந்த தள்ளாத வயதுன்னு எழுதிட்டீங்களா? :))//

    அநியாயம், அக்கிரமம், அராஜகம், போர்க்கொடி, பொற்கேடி, உங்களாலே ஒரு நல்ல மனுஷன் எப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டார்! :)))))))))

    ReplyDelete
  5. அறிவன், திருத்திட்டேன். :)))))))))

    ReplyDelete
  6. நன்னி...

    ||ஹிஹிஹி. லேட்டஸ்ட் நியூஸ் வைச்சுப்போமாக்கும்.||

    நல்ல சமாளிபிகேஷன்ஸ்.

    ||அநியாயம், அக்கிரமம், அராஜகம், போர்க்கொடி, பொற்கேடி, உங்களாலே ஒரு நல்ல மனுஷன் எப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டார்! :)))))))))||

    :)))

    நாங்கல்லாம் சொந்தமாவே யோசிப்போம் !

    ReplyDelete
  7. //அநியாயம், அக்கிரமம், அராஜகம், போர்க்கொடி, பொற்கேடி, உங்களாலே ஒரு நல்ல மனுஷன் எப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டார்! :))))))))) //

    உண்மையை உரக்க பேசினா தப்பா? இது என்ன அநியாயமா இருக்கு.. :D

    ReplyDelete
  8. உங்களுக்கு அநுத்தமா அவர்களின் எழுத்துக்கள் பிடிக்காதா.அவரோட லக்ஷ்மி ,முத்துசிப்பி,மணல்வீடு ஏன் சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலக்ஷ்மியின் வரலாறும் நன்றாகவே இருக்கும்

    ReplyDelete
  9. நாங்கல்லாம் சொந்தமாவே யோசிப்போம் !//


    @அறிவன், நம்பிட்டோமுல்ல! :P:P

    ReplyDelete
  10. உண்மையை உரக்க பேசினா தப்பா? இது என்ன அநியாயமா இருக்கு.. :D//

    போர்க்கொடி, இருக்கு உங்களுக்கு! :P

    ReplyDelete
  11. ஜெயஸ்ரீ, அநுத்தமாவை ரொம்பவே பிடிக்கும். அவரோட நைந்த உள்ளம் நாவலும், கேட்டவரம் நாவலும் எத்தனை முறை படிச்சிருப்பேன் என்ற கணக்கே கிடையாது. அடுத்தது அவங்களைத் தான் குறிப்பிட்டிருக்கேன், நேரம் இருக்கையில் படிச்சுப் பாருங்க. நன்றி. :)))))

    ReplyDelete
  12. valliyasimhan amma blog-la unga penn ezhuththu pathivai mention panni irunthaanga... athaan aarvamaa vanthen, intha pakkam... avvalavaa enakku thamizh literature paththi gyaanam kidayaathu... ennaa naan padichchathilla. athanaala rombave swaarasyamaa irunthathu...

    prema nandhakumar- avargalai enakku chinna vayasilernthe theriyum... srirangam thaan avaa... naangallaam 'niraiyaa padichcha maami' nnu koopduvom... oru room full-aa books-aa irukkum avaaththula! amazing!

    aanaa naan avaa ezhuthina tamizh books padichchathilla... 'kumudhini'-yoda sila works, maami thaan enakku koduththaa. amazing! antha kaalaththula ippadi oru karpanai valam! romba haasyamaakavum irukkum... idumbi-yoda amma ava friend-ku idumbi paththi letter podaraapla... sita- ava amma ku letter ezhutharaala... mahaa sirippaa irukkum avanga ezhuththi... "raamarukku pattabishekam-- mithila lernthu enakku manja border pudavai anuppu.." nnu aarambichchu... "kaavi vasthrame anuppidu.. naanga kaattukku thaan porom.." nu romba azhagaa ezhuthi iruppaa... :D

    just felt like mentioning...

    totally enjoyed reading this!

    ReplyDelete
  13. வாங்க மாதங்கி மெளலி, நல்வரவு. பிரேமா நந்தகுமாரின் மாமியார் தானே குமுதினி அம்மாள்?? இரண்டு பேரின் எழுத்துமே நிறையப் படிச்சிருக்கேன். நீங்க சொல்வது போல் குமுதினி அம்மா சீதை தன் தாய்க்கு எழுதும் கடிதம் புடைவை வாங்கி அனுப்பச் சொல்றது, நிஜம்மாவே அனுபவிச்சுப் படிச்ச ஒண்ணு. அந்த நினைவிலே தான் இங்கே நானும் வலை உலக நண்பர்களிடம் தீபாவளிக்கு வஸ்த்ரகலா, பரம்பரா எனச் சீண்டிக்கொண்டிருப்பேன். :)))))))

    ReplyDelete