எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Thursday, May 05, 2011
கல்யாணமாம், கல்யாணத்தில் கோல கலாட்டா!
கோலம் போடுதல் கல்யாணத்திற்கு என்பது தனிக்கலை. பெண்ணும், மாப்பிள்ளையும் கிழக்குப் பார்த்தே அமர வைக்கப் படுவார்கள். ஆகவே போடும் கோலமும் அதற்கேற்றாற்போல் இருக்க வேண்டும். மதுரைப் பக்கத்தில் இரட்டைக் கோலம் தான் போடுவார்கள். அதை மணைக்கோலம் என்றும் சொல்வார்கள். இரண்டு பெரிய சதுரங்களைப் போட்டு இரண்டையும் முக்கோணங்களால் இணைத்திருப்பார்கள். கணினியிலே முடிஞ்ச வரைக்கும் அந்த மாதிரியான மணைக்கோலம் போட்டுப் பார்த்தேன், சரியாக வரவில்லை. கூகிளாரைத் தான் கேட்டு வாங்கி இருக்கேன். இப்போ நாம ரெண்டு பக்கத்துக்கோலத்திலும் தூள் கிளப்பிட்டு இருக்கோமுல்ல? . தஞ்சைப் பக்கமோ இதோ இருக்கும் இந்தக் கோலம் மாதிரி ஒரே கோலம். ஒரே கோலத்தை எவ்வளவு பெரிதாகவோ, சின்னதாகவோ போட்டுக்கலாம். கல்யாணங்களில் பெரிய கோலமே போடுவார்கள். அநேகமாய் ஒரே கோலமே பலவிதமான அலங்கார வேலைப்பாடுகளுடனும், கிளி, அன்னம் போன்ற வரைவுகளுடனும் மேடையை நிறைத்திருக்கும். இங்கே அதெல்லாம் காண முடியாது. இரண்டு பெரிய கோலங்களை ஒன்றாய் இணைத்திருப்பார்கள். அருகருகே இரண்டு கோலங்கள் போடுவார்கள். அலங்காரங்கள் அதிகம் இருக்காது. ஆகவே விரதம் நடக்கும் இடத்திலும் அப்படித் தான் போடப் பட்டிருந்தது. கோலத்தைப் பார்த்ததுமே என் மாமியாருக்கு அப்செட். இதென்ன சின்னக் கோலமாய் இருக்கு? அதோட ரெண்டு கோலம் வேறே போட்டிருக்கீங்க? இதெல்லாம் வழக்கமே இல்லையே? னு கேட்க, கல்யாணத்துக்கு ரெண்டு கோலம் தான் அப்படினு எங்க வீட்டுப் பெரியவங்க சொல்ல, என் மாமனாரோ இதுக்குத் தான் தெரியாத இடத்தில் சம்பந்தம் வேண்டாம்னு சொன்னேன்னு சொல்ல, ஒரு சின்னக் களேபரம்.
அதற்குள்ளாக என் சித்தி, (அசோகமித்திரன் மனைவி) வந்து மதுரைப் பக்கம் ரெண்டு கோலம் தான் அதனால் என்ன?? சாயந்திரம் நிச்சயதார்த்தத்திலேயும், நாளைக் கல்யாணத்திலேயும் நீங்க சொல்றாப்போல் போட்டுடலாம்னு சமாதானம் செய்ய அப்போதைக்குப் பிரச்னை முடிந்தது. அதுக்கப்புறம் விரதம் முடிந்து நாங்கல்லாம் சாப்பிடும்போது ரெண்டு மணியோ என்னமோ, சரியாய் நினைவில் இல்லை. அப்பாவுக்குப் பசி ஜாஸ்தியாய் இருந்தது மட்டும் நினைப்பு இருக்கு. சாயந்திரம் நிச்சய தார்த்ததில் பெண்ணையும், பையரையும் சேர்த்து உட்கார வைக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொன்னார்கள். ஜானவாசத்துக்குக் காரா? இல்லைனா சாரட் வண்டியானு கேட்க, கார் தான் ஏற்பாடு பண்ணி இருப்பதாய் அப்பா சொல்லி இருக்கார். அதற்குள்ளாக எங்க ஆஸ்தான ஜோசியர் மாமா வர அவர் அறிமுகம் நடந்திருக்கிறது. அப்போத் தான் என் கணவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கார். தற்சமயம் புனாவில் இருப்பதால் அங்கே வீடு அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது என்றும், பகடி நிறையக் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் தான் புனேக்கு அருகிலுள்ள, தேசீய ராணுவ அகாடமிக்கு மாற்றல் கேட்டிருப்பதால், அங்கே மாற்றல் கிடைத்ததும், ராணுவக் குடியிருப்புக் கிடைக்கும் என்றும் சொல்லிட்டு, அதனால் தற்சமயம் என்னைப் புனேக்கு அழைத்துச் செல்லப் போவதில்லை என்றும் விட்டு விட்டுத் தான் போகப் போகிறேன் என்றும் சொல்லி இருக்கார்.
இது கொஞ்சம் என் அப்பா, அம்மாவுக்கு அப்செட் தான். மாற்றல் கிடைக்க எத்தனை மாசம் ஆகிறதோ? அது வரைக்கும் இங்கே மாமியார் வீட்டிலேயும், கொஞ்ச நாட்கள் எங்க வீட்டிலேயுமா இருக்கட்டும் என்றும் தீர்ப்பாகி இருக்கிறது. அதுக்குள்ளே எங்க மாமியார் கல்யாணம் ஆகி முதல் முதல் வரச்சே ரெண்டு பேரும் சேர்ந்து தான் வரணும், இப்போ லீவுக்குள்ளே எங்க பிள்ளைக்கு மறுவீடு வர முடியுமா தெரியலைனு சொல்லி இருக்காங்க. அப்போத் தான் நம்ம ஆஸ்தானம் போய்ச் சேர்ந்திருக்கார். அவர் பங்குக்கு அவரும் ஒரு குண்டைத் தூக்கிப் போட யாருமே நம்பவில்லையாம். என் கணவர் உட்பட கேலியாகச் சிரிச்சிருக்காங்க. அவர் சொன்னதும், மற்ற விபரங்களும் தொடரும். அதுக்குள்ளே போர்க்கொடி போர்க்கொடி தூக்கினாங்க இல்லை? ஏன் ரெண்டு பேரையும் சேர்த்து உட்கார வைக்கக் கூடாது என்று உரிமைப் போராட்டம் தொடங்கினாங்க இல்லை? அதைக் கவனிப்போமா?
நாந்தி ச்ராத்தம் பற்றி திவா விளக்கம் எழுதி உள்ளார். திரு நடராஜ தீக்ஷிதரும் எழுதி அனுப்பி இருந்திருக்கிறார். ஆனால் அது நீளம் அதிகம் என்பதால் பின்னூட்டத்தில் வரவில்லை. மீண்டும் அனுப்பச் சொல்லி உள்ளேன். திவாவின் பதிவுக்குச் சுட்டி கொடுக்கிறேன்.இங்கே
Subscribe to:
Post Comments (Atom)
ஒரு பதிவைப் போட்டு முடிக்கிறதுக்குள்ளாக முழி பிதுங்குது, நெட் அவ்வளவு வேகம். :P ஒரு வாரமா ஒரு அப்லோடும் ஆகலை. :(
ReplyDeleteமதுரைக்கு மாத்தல் வாங்கிக்குங்க!
ReplyDeleteஎன்ன சொல்லிருப்பார் ? பூனேல இருந்து மாறுதல் வந்திரும்னு சொல்லிருப்பார் சரியா
ReplyDelete//கோலத்தைப் பார்த்ததுமே என் மாமியாருக்கு அப்செட். இதென்ன சின்னக் கோலமாய் இருக்கு? அதோட ரெண்டு கோலம் வேறே போட்டிருக்கீங்க? இதெல்லாம் வழக்கமே இல்லையே? னு கேட்க, கல்யாணத்துக்கு ரெண்டு கோலம் தான் அப்படினு எங்க வீட்டுப் பெரியவங்க சொல்ல, என் மாமனாரோ இதுக்குத் தான் தெரியாத இடத்தில் சம்பந்தம் வேண்டாம்னு சொன்னேன்னு சொல்ல//
ReplyDeleteஐயப்பா.. ரொம்ப சோதிக்கிறியேப்பா..
//அதுக்குள்ளே போர்க்கொடி போர்க்கொடி தூக்கினாங்க இல்லை? ஏன் ரெண்டு பேரையும் சேர்த்து உட்கார வைக்கக் கூடாது என்று உரிமைப் போராட்டம் தொடங்கினாங்க இல்லை? அதைக் கவனிப்போமா?//
ReplyDeleteவயதானால் மறதி இருக்கலாம் அதுக்காக இப்படியா?! எங்க கவனிப்போம்னுட்டு ஒண்ணும் காணோம்? உடனே காக்காய் தூக்கிட்டு போய்டுச்சுன்னு பதில் வருமே? ;)
சேர்ந்து உக்கார வைக்கறது என்ன காரணத்துக்காக வேண்டாம்னு அந்த காலத்துல சொன்னாங்களோ, அது நியாயமாகவே இருந்துட்டு போகட்டும்.. என்னோட கல்யாணத்திலே அதெல்லாம் தெரிஞ்சு ஒண்ணும் சொல்லலை, அதனால இதுக்கு செல்லாது செல்லாது. :-)
துளசி டீச்சர் தான் 1.5 நாள் போயிட்டு வந்த கதையை 10 பாகமா எழுதுவாங்கன்னா நீங்க அதுக்கும் மேலே. எல்லாம் ஃப்ரீயா குடுக்கற இந்த ப்லாக்கரை சொல்லோணும். ம் சீக்கிரம் நெக்ஸ்ட் பார்ட்!
ReplyDeleteமாமி
ReplyDeleteகோலத்தில இவ்வளோ வித்யாசங்கள் இருக்கா? ஆஸ்தான ஜோசியர் சொன்னதை முன்பே எழுதி இருந்தேளே?
நாந்தி பற்றிய திரு திவா அவர்களோட பதிவு ரொம்ப அருமை.
உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_06.html
ReplyDeleteகோலத்தால் கூடவா சம்பந்திகள் முறுக்கிப்பாங்க!!!.. கஷ்டகாலமே :-))
ReplyDeleteஅந்த கால திருமணங்களில் சம்பந்தி சண்டை ஒரு அங்கம் ன்னு சொல்வாங்க. சாவி கூட வாஷிங்டனில்... கதையில் எழுதினார்.
ReplyDeleteசீக்கிரம் கலாட்டாவை தொடருங்கள் தலைவி ;)
ReplyDelete@திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அப்போ இருந்த மதுரையிலே இவரோட ஆபீஸ் மட்டும் இருந்திருந்தால் கட்டாயமாய் மாற்றல் வாங்கச் சொல்லி இருக்கலாம்/ :))))))))
ReplyDeleteஎல்கே, மாற்றல் வரும்னு சொல்லி இருப்பார், சரிதான் உங்கள் ஊகம். ஆனால்
ReplyDeleteபோர்க்கொடி, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு செண்டிமெண்ட். அதிலும் எங்க மாமியார், மாமனார் கும்பகோணம் சுற்றுவட்டாரம் தாண்டி வெளியே வந்ததே என் கல்யாணத்துக்குத் தான். :)))))) ஆகவே இதெல்லாம் ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை!
ReplyDeleteஇதோட போச்சா?? நான் போய் அங்கே சாதம் வடிச்ச கதை எல்லாம் தனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
ReplyDeleteஎன்னோட கல்யாணத்திலே அதெல்லாம் தெரிஞ்சு ஒண்ணும் சொல்லலை, அதனால இதுக்கு செல்லாது செல்லாது. :-)//
ReplyDeleteஹிஹிஹி, தெரியலைங்கறதுக்காகத் தானே பதிவே! :P
ஆமாம், ஸ்ரீநி, கோலத்திலே வித்தியாசம் இருக்கிறதோட மட்டும் இல்லை, ஸ்மார்த்தா கோலமும், வைஷ்ணவா கோலமும் கூட மாறும். :))))) இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியே பண்ணி இருக்கேனாக்கும்! :))))))
ReplyDeleteகோலத்தால் கூடவா சம்பந்திகள் முறுக்கிப்பாங்க!!!.. கஷ்டகாலமே :-))//
ReplyDeleteஅமைதி, அமைதி, ஒருத்தர் வீட்டு வழக்கமும், இன்னொருத்தர் வீட்டு வழக்கமும் மாறுமே.
வாஷிங்டனில் திருமணம் கலாட்டா தனி.
ReplyDeleteகோபி, வாங்க, வாங்க, இணையம் பண்ணற கலாட்டாவை விடவா இந்த கலாட்டா? :P
ReplyDeleteஎன்னென்ன கலாட்டா எல்லாம் வந்திடுமோ ...
ReplyDeleteகலாட்டாக் கல்யாணம் :)
கோலத்தில் இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கிறதா !
ReplyDeleteஅடடே ! போன பதிவில் தான் நீங்களும் கொடியும் ராசியாகிட்டதா
நினைத்தேனே !
வாங்க மாதேவி, கூர்ந்து கவனிச்சீங்கன்னா ஒவ்வொரு கல்யாணமுமே கலாட்டாவாய்த் தான் இருக்கும். :))))))
ReplyDeleteஆமாம் ப்ரியா, கோலம் ஊருக்கு ஊர் வித்தியாசப் படுகிறது. சென்னைக் கோலங்களின் வகை தனியாகத் தெரியும்! :)))))) கொஞ்சம் பட்டையாக, அடர்த்தியாகக் கல்லு மாவினால் போடப் படும், எங்க பக்கமெல்லாம் அரிசி மாவுக் கோலம் தான். இப்போல்லாம் தஞ்சை மாவட்டத்தின் சுற்று வட்டாரங்களிலேயே கல்லு மாவுக் கோலம் தான். அதிர்ச்சியாக இருந்தது. மதுரையில், கிராமங்களிலும் எப்போவோ வந்தாச்சு! :)))))
ReplyDeleteஇன்னிக்கு வரை நாங்க அரிசிமாவுக் கோலம் தான் போடறோம். அரிசிமாவைக் கோலத்துக்கு என்றே மிஷினில் சொல்லி அரைச்சு வைச்சுப்பேன். இந்த அரைக்கிறது என்ற பதமும் மதுரை போன்ற தென் மாவட்டங்களில் நீர் விட்டு அரைக்கிறதைத் தான் சொல்லுவாங்க. மெஷினில் செய்யப் படும் மாவைத் திரிக்கிறதுனு சொல்லுவாங்க! இப்படி எத்தனையோ! :)))))))
ReplyDelete