இந்தப் பிறந்த நாளிலே ஒரு வழியா உண்மையைச் சொல்லி எல்லாருடைய தலை போகிற சந்தேகத்தையும் தீர்த்து வைச்சுடலாம்னு இருந்தேன். ஆனால் திடீர்னு ஊருக்குப் போறாப்போல் ஆயிடுச்சு. அதனால் என்ன?? இந்த வருஷம் எப்படியும் ஸ்பெஷல் தான். இந்த மாசமே இரண்டு பிறந்த நாள், ஒண்ணு நக்ஷத்திரம், இன்னொண்ணு தேதி. அடுத்த (ஜூனிலே)மாசம் வேறே இன்னொரு நக்ஷத்திரப் பிறந்த நாள் வருது. ஆகக் கூடி நான் புதுசாய்ப் பிறந்து கொண்டே இருக்கேன். தற்செயலாக அமைந்ததுதான் என்னோட வயசைச் சொல்லாமல் இருந்தது. அப்படினு திட்டம் எல்லாம் போட்டுக்கலை. விளையாட்டாச் சொல்லாமல் இருந்தது, அப்படியே ஆறு வருஷமாக் காப்பாத்தினேன்.
ஆனால் பலருக்கும் எனக்குத் தொண்ணூறா, நூறா என்றெல்லாம் சந்தேகம் குழப்பிட்டு இருக்கிறதாலே சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். அறுபது வயசு ஆயிடுச்சு. உடனே தொண்டர்களும், குண்டர்களும் மண்சோறு சாப்பிடவோ, தீச்சட்டி எடுக்கவோ, அறுபது அலகு குத்திக்கவோ, அறுபது வகைக்காவடி எடுக்கவோ போகவேண்டாம். ஹிஹிஹி, வஸ்த்ரகலாவிலே அறுபது, பரம்பராவிலே அறுபதுனு எடுத்தா வேண்டாம்னு சொல்ல மாட்டேன். தாயுள்ளத்தோடு தொண்டர்கள், குண்டர்கள் மனம் நோகாமல் இருக்கறதுக்காக வாங்கிக்கிறேன். கலர் எல்லாம் இல்லாத கலரா இருக்கட்டும். ஒவ்வொரு ரத்தினமும் அறுபதுனு நவ ரத்தினத்திலேயும் அறுபது வாங்கிடாதீங்க. அறுநூறு இருந்தால் நல்லா இருக்குமோனு தோணுது. துலாபாரம் போடறவங்க எல்லாம் அறுநூறு வகைப் பொருட்களில் துலாபாரம் கொடுக்கணும்னு தலைமைக்கழகத்திலே இருந்து அறிவிப்பு வந்திருக்கு.
எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு முப்பெரும் விழா எடுக்கலாம்னு ஒரு எண்ணம். எண்ணம் எனக்கில்லை, தொண்டர்களுக்குத் தான். அவங்க அன்புத் தொல்லை தாங்காம ஒத்துக்கிட்டிருக்கேன். எனக்குத் தான் விளம்பரமே பிடிக்காதுனு எல்லாருக்கும் தெரியுமே! அதனால் சிம்பிளா, மலர்க்கிரீடம், ஆளுயுர மாலை, தோரண மேடைனு தொண்டர்கள் ஏற்பாடு பண்ணிடப் போறாங்க. ஹிஹி, எனக்குத் தெரியும், நீங்க நான் என்ன சொன்னாலும் அதெல்லாம் செய்யாமல் விடமாட்டீங்கனு. உங்க அன்புத் தொல்லைக்குக் கட்டுப்பட்டு எல்லாத்தையும் ஏத்துக்கறதா முடிவு பண்ணிட்டேன். இந்தப் பிறந்த நாளைக்கு எனக்கு நம்ம ரங்க்ஸ் கொடுத்த பரிசு ஆறு பலாச்சுளைகள். (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) கேட்டால் எனக்குப் பிடிச்சதைப் பிரசண்ட் பண்ணறாராம். கஞ்சூஸ் ரங்க்ஸை வன்மையாய்க் கண்டிக்கிறேன்.
ஆறு பலா சுளைகள் ஹஹஹஹஹா .. மாமா சூப்பர் பரிசு .. நான் அறுபது கடலை பர்பி கொடுக்கறேன்
ReplyDeleteமூணு பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள். Many more happy returns of the day. பல்லாண்டு வாழ்க வளமுடன்.
ReplyDeleteபலாச் சுளை வாங்கி கொடுத்ததால தான் மாமா அதை மட்டும் தான் கொடுத்தார்நு சொல்லி பதிவு போட்டுருக்கேள். வஸ்த்ரகலா வாங்கினா பதிவுல வந்திருக்குமா? :) gent's sentiment :)
முப்பெரும் விழா எடுக்கலாம்னு ஒரு எண்ணம். //
ReplyDeleteமுப்பெரும் விழா கொண்டாடும் தலைவிக்கு வாழ்த்துக்கள்.
நூறாண்டு காலம் வாழ்க!
நோய் நொடி இல்லாமல் மகிழ்க.!!
அம்மா, மதுரைக்கு எங்க வீட்டுக்கு வந்தா பலாப்பழங்களே கொடுத்திருப்பேனே! :)
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துகள் அம்மா. அப்படியே உங்க ஆசிகளையும் எங்களுக்கு அள்ளித் தந்துடுங்க!
எல்கே, துரோகி நம்பர் ஒண்ணு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஸ்ரீநி, துரோகி நம்பர் 2
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
வாங்க ராஜராஜேஸ்வரி, வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
ReplyDeleteகவிநயா, என்ன கொடுமைடா சரவணா இது??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாம் ஆளாளுக்குப் பலாப்பழமும், சுளைகளும், கடலைமிட்டாயும் கொடுத்து உங்க தங்க, தானை, மாட்சிமை பொருந்திய தலைவியை அவமதிக்கிறீங்களே! :P
ReplyDeleteவாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் மாமி
ReplyDeletevalthukkal
ReplyDeleteWow!!!! Grand Prime sixty!! very many happy returns Mrs Shivam :))))
ReplyDeleteதலைவிக்கு என்னோட பணிவான வணக்கங்கள் ;)
ReplyDelete\\இந்தப் பிறந்த நாளைக்கு எனக்கு நம்ம ரங்க்ஸ் கொடுத்த பரிசு ஆறு பலாச்சுளைகள். \\
சூப்பரு ;)
நல்வாழ்த்துக்கள். நலமுடன் வாழ்க.
ReplyDeleteராம்ஜி யாஹூ, நன்றிங்க.
ReplyDeleteபுதுகைத் தென்றல் நன்றிம்மா.
வாங்க ஜெயஸ்ரீ, ரொம்ப நாட்களாக் காணோமே?? வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
ReplyDeleteGrand Prime sixty!!//
ReplyDeletesweet sixty/ sweet sixteen தான் இருக்கணுமா என்ன?? :))))
நன்றி கோபி, வாழ்த்து மடலுக்கும் நன்றிப்பா. வருஷா வருஷம் நம்ம புலியோ இல்லைனா கைப்புள்ளயோ போடுவாங்க, அதை நினைச்சுட்டு இருந்தேன் இந்த வருஷம். புலியும் தனி மடல்லே வாழ்த்தி இருந்தார்.
ReplyDeleteநன்றிங்க மாதேவி.
ReplyDeleteஅறுபதுக்கு ஒரு முக்கிய இடம் மனித வாழ்க்கையில் இருக்கிறது...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
(கடோசிய பூனைக்குட்டி வெளியே வந்துருச்சே..எங்கப்பா பொற்கேடி..)
:))
அறிவன், எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம், போர்க்கொடி, பொற்கேடி பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும், சொல்லாதீங்க அவங்க கிட்டே, நமக்குள்ளே பேசிக்கலாம். :D
ReplyDeleteசீரக முட்டாய் ஆறுபது எண்ணி எடுத்து வெச்சு இருக்கேன். அனுப்பிடலாமா?
ReplyDeleteமுதலில் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருள் பேராற்றல் கருணையினால் நல்ல உடல் நலம் ,நீள் ஆயுள் ,நிறை செல்வம் ,உயர் புகழ் ,மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ
வாழ்த்துகிறோம் !
ஹி ஹீ கீதா பெரிம்மாஆஆ !
ReplyDeleteஇவ்வளோ சின்ன வயதா உங்களுக்கு !
சரி இருவது வயதில் 35 kg என்றால்
அறுவது வயதில் 105 kg இருக்குமா ஹ ஹா
சரி சரி
உங்க பிறந்த நாளை முன்னிட்டு
நானும் ATM ம் அறுபது டிசைனர் சாரீஸ்
எடுத்துட்டு உங்க பேரை சொல்லி அணிந்து கொள்கிறோம் :)
எதோ எங்களால முடிந்தது :)
ஆஹா! 60 பூங்கொத்து!!! வாழ்த்துகள்மா!!
ReplyDelete@திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சீரக முட்டாயா?? என்ன தம்பி நீங்க! ஒரு வஸ்த்ரகலாவோ, பரம்பராவோ தோணலையே!
ReplyDeleteப்ரியா, வாழ்த்துக்கு நன்றி.
ReplyDeleteசரி சரி
ReplyDeleteஉங்க பிறந்த நாளை முன்னிட்டு
நானும் ATM ம் அறுபது டிசைனர் சாரீஸ்
எடுத்துட்டு உங்க பேரை சொல்லி அணிந்து கொள்கிறோம் :)//
இது அநியாயமா இல்லை?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அறுபது டிசைனர் சாரீ??? க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எங்கெங்கு காணினும் ப்ரூட்டஸ்களடா!:P
அன்புடன் அருணா கொடுத்த 60 பூங்கொத்துக்கும் நன்றிங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteபலாச்சுளைக்குள்ளே ஏதாவது ப்ரசண்டு க்ர்சண்டு இருக்கா நல்லா பாருங்க..ரெண்டு ரூவா நோட்டாவது..ஹிஹி..
டிசைனர் சாரியா? இப்ப ATMல என்னல்லாம் கிடைக்குது பாருங்க!
ReplyDeleteஅப்பாதுரை. இங்க ATM என்றால் பணம் எடுக்கும் மெஷின் அல்ல. பதிவர் அப்பாவி தங்கமணியை குறிக்கும் .
ReplyDeleteஅப்பாதுரை, பலாச்சுளைக்குள்ளே ப்ரசண்டா?? சரியாப் போச்சு போங்க, அவ்வளவெல்லாம் தெரியாது! :))))) பலாச்சுளைக்குள்ளே கொட்டை தான் இருந்தது. கூட்டிலே போட்டேன். :P
ReplyDeleteஹிஹி ஏடிஎம் விளக்கம் எல்கே சொல்லிட்டார். :)))))
ReplyDeleteATMனா இதுவா விசயம்? ரொம்ப தேங்க்ஸ் எல்கே.
ReplyDeleteஅப்ப பலாக்கொட்டை கூட்டு தான் ப்ரசண்டுனு வைங்க. (எப்ப்ப்ப்ப்பவோ சாப்பிட்டது)
ReplyDeleteHAPPY BIRTHDAY AND BELATED BIRTHDAY WISHES GEETHA.
ReplyDeleteBUZZ LA SONNAALUM INGA EZHUTHINAA INNUM SANTHOSHAM:)