இப்போ சப்தபதின்னா என்னனு ராம்ஜி யாஹூ கேட்டதுக்கு ஒரு சின்ன விளக்கம். திவாவைக் கொடுக்கச் சொன்னேன். அவர் கண்டுக்கவே இல்லை. :P போகட்டும், சப்தபதி என்பது அக்னியை மணமகனும், மணமகளும் சுற்றி வருவது. வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகும் இருவரும் முதல்முதலாகச் சேர்ந்து நடப்பது என்றும் கூறலாம். ஒரு வித்தியாசம் என்னன்னா இங்கே மந்திரங்கள் சொல்லி மனைவியிடம் கணவன் அக்னி சாக்ஷியாகக் கொடுக்கும் உறுதி மொழிகள் என்றும் கூறலாம். எல்லா இந்துத் திருமணங்களிலும் பரதேசிக்கோலம் எனப்படும் சமாவர்த்தனமும், மாலைமாற்றலும், பாணி கிரஹணமும், சப்தபதியும் கட்டாயம் இருக்கும். இப்போ சப்தபதி என்றால் என்னனு பார்ப்போம். இப்போதெல்லாம் தாலி கட்டி முடிஞ்சதுமே ஒரு சின்ன அறிவிப்புக் கொடுப்பார் புரோகிதர்.
திருமணத்துக்கு வந்திருக்கும் மணமகன், மணமகள் ஆகியோரின் நண்பர் வட்டத்துக்கு முக்கியமாச் சொல்லப்படும். தாலி கட்டி முடிஞ்சது தயவு செய்து பரிசுகள் அளிப்பதையோ, கைகளைக் குலுக்குவதையோ வாழ்த்துகள் சொல்லுவதையோ தவிர்க்கவும். சப்தபதி முடிந்ததும், நாங்களே ஒரு அரைமணி நேரம் கொடுத்து மணமகன், மணமகள் இருவரையும் தனியாக அமர வைக்கிறோம். அப்போது உங்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என்று கூறுவார்கள். இந்த மாதிரி அறிவிப்பெல்லாம் சமீபமாய்ப் பத்து வருஷங்களுக்குள்ளாகவே அதிகம் காண முடிகிறது. பாணி கிரஹணம் என்பது மணமகள் கையை மணமகன் பிடிப்பது. இதற்கும் மந்திரம் உண்டு. இதைப் போன்றதொரு முக்கியமான நிகழ்ச்சியே சப்தபதியும். தம்பதியருக்குள் மன ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிக் கிழக்கு ,மேற்காக இருவரையும் ஏழடி நடக்க வைப்பார்கள். முதலில் பெண் அடியெடுத்து வைக்க அவள் கணவன் கைலாகு கொடுத்து உதவுவதோடு அவளுக்கு உறுதிமொழியும் கொடுக்கிறான். முதல் முதல் பெண்ணோடு நேருக்கு நேர் பேச வேண்டிய நேரமும் இதுதான் என்றே சொல்லலாம். தம்பதியருக்குள்ளாக கூச்சம், சங்கோஜம் போன்றவற்றைப் போக்கவும் உதவும் எனலாம். முதல் அடி எடுத்து வைக்கும்போது கணவன் கூறுவது:
மணமகள் மணமகன் வீட்டிற்கு வந்து புத்திரபாக்கியங்களைப் பெற்று குலவிருத்தி செய்து, அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கவேண்டும் எனவும், அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவை குறையாமல் இருக்க நாம் இருவரும் மஹாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வோம்.
இரண்டாவது அடி: மனைவியின் தேகவலிமைக்கு வேண்டிக்கொண்டும், அவள் ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்கவும், அவை பூர்த்தியடையவேண்டியும், அதற்கான உடல், மன வலிமையை அவள் பெற மஹாவிஷ்ணு தரவேண்டும் எனவும், கேட்டுக்கொள்வான்.
மூன்றாம் அடி:இருவரும் சேர்ந்து வாழப் போகும் புத்தம்புதிய வாழ்க்கையில் இல்லறத்தை நல்லறமாகச் செய்ய வேண்டிய கடவுள் ஒத்துழைக்கவேண்டும் எனவும், எடுக்கும் முயற்சிகளிலும் இருவருக்கும் நம்பிக்கையும், தர்மத்தை மீறாமலும் இருக்கவேண்டியும் விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வான்.
நான்காம் அடி: கணவன் கேட்டுக்கொள்வது தானும், தன் மனைவியும் பூவுலக இன்பங்களை எல்லாம் குறைவின்றி அனுபவிக்க வேண்டும் என்றும் அது முழுமையாகக் கிடைக்க மஹாவிஷ்ணு அருள் செய்யவேண்டும் எனவும் பிரார்த்தனை செய்வான்.
ஐந்தாம் அடி: இல்லற சுகம் என்பது வெறும் உடல் சுகம் மட்டுமில்லாமல், மற்ற சுகங்களான வீடு, வாசல், மற்றச் செல்வங்களையும் நீ என் மனைவியாய் வந்து அடைய அந்த மஹா விஷ்ணு அருள் புரியவேண்டும்.
ஆறாம் அடி: பருவ காலங்களின் தாக்கங்கள் நம்மைப் பெரிய அளவில் தாக்காதவாறும் அதன் மூலம் நம் இல்வாழ்க்கையின் சுகமோ, சுவையோ குறையாமலும் நம் இருவர் மனங்களும் அதற்கேற்ற வல்லமையோடு இருக்க மஹாவிஷ்ணுவைப் பிரார்த்திக்கிறேன்.
ஏழாம் அடி: மேலே சொல்லப் பட்ட வெறும் சுகங்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதால், நாம் அந்த சுகங்களைப் பெற வேண்டி இயற்கை வஞ்சிக்காமல் பருவகாலங்களில் தக்க மழை, கோடையில் நல்ல வெயில், பனிக்காலங்களில் பனி என அந்த அந்தக் காலங்களில் எப்படித் தானாகப் பருவம் கண்ணுக்குத் தெரியாததொரு ஆற்றல் படைத்த சக்தியால் மாறுகிறதோ, அந்தக் கண்ணுக்குத் தெரியாத வல்லமை உடைய மஹாசக்திக்குச் செய்ய வேண்டிய கடமைகளான அறம் அத்தனையையும் நாம் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும். அதற்கு அந்த மஹாவிஷ்ணு உதவட்டும். நான் செய்யப் போகும் வேள்விகள் அனைத்துக்கும் நீ உதவியாகவும் துணையாகவும் இருந்து என் மனதையும், உன் மனதையும் ஆன்மீகத்திலும் செலுத்த வேண்டியும் எல்லாக் கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றவும் வேண்டிய பலத்தை உனக்கு அந்த மஹாவிஷ்ணு கொடுக்கட்டும்.
இதன் பின்னர் இருவரும் எதிர் எதிரே அமர்ந்து, மணமகளுக்கு உறுதி மொழி கொடுப்பான். உன்னோடு சேர்ந்து நான் ஏழடி நடந்து, ஏழு வாசகங்கள் பேசி உன்னை என் நட்பாக்கிக்கொண்டு விட்டேன். இந்த நட்பு என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியது. நான் அந்த நட்பில் இருந்து வழுவ மாட்டேன். நீயும் வழுவக் கூடாது.
இதன் பின்னரே இருவரும் சட்டபூர்வமான கணவன், மனைவி ஆகின்றனர்.விவாஹம் குறிப்புகள் 2
கடவுளே! எப்ப சொன்னீங்க?
ReplyDeletethanks :)
ReplyDelete//கடவுளே! எப்ப சொன்னீங்க?//
ReplyDelete:D
திவா, இதுக்குத் தான் ஒழுங்கா க்ளாஸ் அட்டெண்ட் பண்ணணும்கிறது! உங்களுக்குப் பாஸ் மார்க்குக்குத் தேவையான அட்டெண்டன்ஸ் கூட இல்லை போங்க! :P:P:P:P:P
ReplyDeleteஎல்கே, நன்னிஹை,
ReplyDeleteபோர்க்கொடி, ஹிஹிஹி. நன்னிஹை
கல்யாணம் கட்டிகிட்டபோது தெரியாததை இப்போது தெரிந்துகொண்டேன்!! நன்றி. ;-)
ReplyDeleteஆர்விஎஸ், வரவுக்கு நன்றி.
ReplyDeleteஓஹோ இதுதான் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறதே,
ReplyDeleteசுக துக்கங்களில் பங்கேற்ப்போம், அக்னி சாட்சியாக என்று. ஜெயாதி ஹோமம், அவ்பாசானப் பானை , கல்யாணம் ஆனா அன்று நடக்கும் மாத்யாணிகம்..
மாத்யாநிஹம் என்பது தினமும் செய்யும் ஒன்று இல்லையா ராம்ஜி?? :D கல்யாணத்தன்று மட்டும் செய்வது அல்ல. நித்ய கர்மாநுஷ்டானங்களில் ஒன்று.
ReplyDeleteவிளக்கத்திற்கு நன்றி கீதாம்மா !
ReplyDeleteஒரு சின்ன சந்தேகம்
சிவ பெருமாளை வழிபடுபவர்களும்
மஹாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வோம் என்று தான் சொல்வார்களா !
ப்ரியா, நல்ல கேள்வி, பொதுவாக சிவனை வழிபடுபவர்களில் நம் பக்கம் வீர சைவர்கள்னு அதிகமாய்ப் பார்க்கலை, சிவனும், விஷ்ணுவும் சரிசமமாகவே பார்ப்பார்கள், இங்கே மந்திரங்களில் பொதுவாய் விஷ்ணுவையே குறிப்பிடும், ஏனெனில் அவர் தானே காக்கும் கடவுள்?? அதனால்னு நினைக்கிறேன், இது குறித்து மேலதிக விளக்கம் சொல்ல திவாவை மேடைக்கு அழைக்கிறேன், யாரது அங்கே?? ஒரு காஞ்சீபுரம் பன்னீர் ஜோடா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ReplyDelete/இங்கே மந்திரங்களில் பொதுவாய் விஷ்ணுவையே குறிப்பிடும், ஏனெனில் அவர் தானே காக்கும் கடவுள்?? அதனால்னு நினைக்கிறேன்,//
ReplyDeleteஇது சரிதான். ஜோடாவ மட்டும் நான் குடிச்சுக்குறேன்!
இத்தனை விவரங்களா! நுண்மைகளை விவாகம் என்ற சடங்குக்குள் சேர்க்காமல் முன்னாலேயே சொல்லிக்கொடுத்தால் உறவுகள் வித்தியாசமாக இருக்குமோ?
ReplyDelete6 poonal maadyaanigam i referred
ReplyDelete6 poonal maadyaanigam i referred
ReplyDelete