எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 06, 2011

போர்க்கொடிக்கு பதில் கல்யாணமாம், கல்யாணம்

இந்துத் திருமணங்களில் சப்தபதி தான் முக்கியம். அது முடிந்தாலே திருமணம் முடிவடைந்ததாக அர்த்தம். தாலி என்னும் மங்கல சூத்திரம் கட்டியதும் திருமணம் முடிந்துவிட்டதாய்க் கூறுவது முழுத் தவறு. இந்துத் திருமணச் சட்டம் சப்தபதி முடியாத திருமணத்தை அங்கீகாரம் செய்யாது. திருமணம் நடக்கவில்லை என்றே கருதப்படும். இப்போதெல்லாம் பதிவு முறை இருந்தாலும் சாஸ்திர ரீதியாகத் திருமணம் நடந்தால் பதிவு தேவையில்லை; தம்பதிகள் இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் பட்சத்தில், அதுவே போதுமானது. இப்போது தான் பதிவையும் கட்டாயமாக்கி இருக்கின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்வதால் பதிவு அவசியமான ஒன்றாகி விட்டது. ஆனால் முன்பெல்லாம் கிடையாது. ஆகவே ஒரு காலத்தில் (இப்போதும்) சப்தபதி முடியும் முன்னரே தாலி கட்டியும் கூட ஒரு சில திருமணங்கள் நின்றிருக்கின்றன. சில திருமணங்கள் மாலை மாற்றல், ஊஞ்சல் போன்றவற்றோடும் நின்றிருக்கின்றன. இதனால் அந்தப் பெண்ணிற்கும், பையருக்கும் ஏற்படும் மன உளைச்சல் அதிகமாய் இருக்கும். அதிலும் அருகருகே நின்று விட்டால் அதன் மூலம் ஏற்படும் ஈர்ப்பு இன்னமும் அதிகமாய் இருக்கும் அல்லவா? பொதுவாய்த் திருமணம் நடக்கும் முன்னர் பையரும், பெண்ணும் ஒருவரோடு ஒருவர் பேசக் கூடாது, பார்த்துக் கொள்ளக் கூடாது, கடிதம் எழுதிக் கொள்ளக் கூடாது என்று சொல்வதன் தாத்பரியமே இதுதான். ஒரு வேளை வேறு எந்தக் காரணத்தாலும் திருமணம் நிற்கலாம். விபத்துக்கள் நேரலாம். மனம் மாறலாம். மனித மனம் ஒரு குரங்கல்லவா? அல்லது பையரின் பெற்றோருக்கோ, பெண்ணின் பெற்றோருக்கோ இன்னும் சிறந்த மணமகனோ, மணமகளோ கிடைத்திருக்கலாம். அதனாலும் மனம் மாறலாம்.

அப்போது இம்மாதிரித் திருமணத்தில் பையரோடு சேர்ந்து நின்றது மனதைப் பாதிக்காமல் இருக்கவேண்டியே தடுக்கின்றனர். இது அந்தக் காலத்தில் சிறு வயது விவாகத்திலேயே தடுக்கப் பட்டது. இப்போதோ கேட்கவே வேண்டாம். குறைந்த பக்ஷமாக இருபத்தைந்து வயதாவது மணமகளுக்கு ஆகிவிடுகிறது அல்லவா? அப்போது திடீரெனத் திருமணம் நின்றால் மனதைக் கடுமையாகப் பாதிக்கும் அல்லவா? அதோடு அப்போதெல்லாம் இந்த ரிசப்ஷன் என்னும் சம்பிரதாயமே சுத்தமாய்க் கிடையாது. ரொம்ப அபூர்வமாகச் சில பணக்காரக் குடும்பங்களிலும், திரைப்பட நடிக, நடிகையர், தொழிலதிபர்கள் போன்றவர்கள் வீட்டுக் கல்யாணங்களிலேயே ரிசப்ஷனைப் பார்க்க முடியும். என்றாலும் என் கல்யாணத்தில் பெயருக்கு ரிசப்ஷன் இருந்தது. அப்பாவின் நண்பர்கள் கேட்டுக்கொண்டதாலும், மாமாவின் அலுவலக நண்பர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப் பட்டது. நலுங்கு முடிந்து ஐந்தரை மணியில் இருந்து ஆறரைக்குள்ளாக. அப்போது வரவங்க ரொம்பக் கொஞ்சம் பேர் தான் இருப்பாங்க. அதிகம் போனால் ஒரு ஐம்பது பேர். ரிசப்ஷனிலும் ஒரு ஸ்வீட், காரம், காபி, அல்லது ஜூஸ் ஏதேனும் தான் கொடுப்பாங்க. இப்போ மாதிரி விலாவரியாச் சாப்பாடெல்லாம் இருக்காது. அதோட அப்போ வைதீகச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் இருந்ததால் சரியாய் ஆறரைக்கெல்லாம் புரோகிதர் மணப்பெண்ணையும், பிள்ளையையும் சாஸ்திர ரீதியான சடங்குகளுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். அவரை மீறி யாரும் எதுவும் சொல்லவோ, செய்யவோ மாட்டாங்க. அது ஒரு காலம். இன்றைய திருமணம் போல் காலையிலேயே அவசரம் அவசரமா முடிக்கிறதெல்லாம் இல்லை. இந்த ரிசப்ஷன், நிச்சயதார்த்தம் போன்றவற்றில் ஏன் முதல்நாளே பெண்ணும், பிள்ளையும் சேர்ந்து அமருவது தடை செய்யப் பட்டது முன் காலங்களில் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா?? மேலும் ஒரு சின்ன உதாரணம், சமீபத்தில் ஐந்து வருடங்கள் முன் நடந்தது,

அனைவருக்கும் நினைவிருக்கலாம். சென்னை மேற்கு மாம்பலம் பாணிக்ரஹா என்னும் திருமண மண்டபத்தில் ஸ்ரீவித்யா என்னும் பெண்ணின் திருமணம் அந்தப் பெண்ணாலேயே திடீரென நிறுத்தப் பட்டது என்பது மறந்திருக்காது. இத்தனைக்கும் அந்தப் பெண் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பையரோடு பேசிப் பழகி இருக்கிறார். இருவருமே வேலைக்குச் செல்லும் நபர்கள். பையரின் அம்மா, ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை, அப்பா மத்திய அரசு ஊழியர்/??? ஆனால் ஏதோ பொறுப்பான பதவி என்ற வரையில் நினைவில் உள்ளது. பெண்ணின் அப்பாவும் நல்லதொரு வேலையில் இருந்தவரே. இந்தப் பெண்ணிற்கு அப்புறமும் அவருக்கு ஒன்றோ, இரண்டோ பெண்கள் இருந்தனர் என்று நினைவு. இப்போதைய வழக்கப்படி கல்யாணத்துக்கு முதல்நாள் மாலையே ரிசப்ஷன். மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. தன் நண்பர்கள் எல்லாருக்கும் அறிமுகம் எல்லாம் செய்து வைத்திருக்கிறார் அந்தப் பெண். அதே போல் பையரும் தன் நண்பர்களை அறிமுகம் செய்து வைக்கப் பரஸ்பர அறிமுகமும் நடந்திருக்கிறது. அதுக்கும் அப்புறம் தான் நடு இரவில் திடீரென எதிரே இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வரதக்ஷணை கேட்பதாய்ச் சொல்லிப் போலீஸை அழைத்து வந்து திருமணத்தை நிறுத்தி இருக்கிறார். கடைசியில் பார்த்தால் விஷயம் அவ்வளவு கடுமையாக எதுவுமே இல்லை. பையரோட வீட்டில் வரலக்ஷ்மி நோம்புக்கு அம்மனை அலங்கரித்துக் கூஜாவில் அம்மனைப் பிரதிஷ்டை செய்து வைக்கும் வழக்கம் இல்லையாம். சொம்பில் தான் வைப்பாங்களாம். பிள்ளை வீட்டார் பார்த்தப்போ இந்தப் பெண்ணிற்கு அவங்க வீட்டில் கூஜா வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆகவே, பெண்ணின் பெற்றோரிடம், பையரின் பெற்றோர் முடிஞ்சா மாத்திக் கொடுங்க இல்லைனா வெண்கலச் சொம்பில் வைச்சுக்கலாம்னு சொல்லி இருக்காங்க. இது தான் நடந்தது எனப் பெண்ணின் அப்பாவும், பையரின் வீட்டிலும் சொல்றாங்க. ஆனால் உண்மைக்காரணம் எதுவெனத் திருமணத்தை நிறுத்திய அந்தப் பெண்ணிற்குத் தான் தெரியும். தன் தோழிகளோடு எதிரே இருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துத் திருமணத்தை நிறுத்திட்டாங்க. பெண்ணின் பெற்றோரும் காரணம் புரியாமல் வருந்தி இருக்காங்க. பையரின் அலுவலகத்தில் சஸ்பென்ட் பண்ணி வைச்சு இருக்காங்க. அந்த அம்மாவும் பள்ளிக்குப் போக முடியாமல் லீவு போட்டுவிட்டு வீட்டில் இருக்கும்படியா ஆகிவிட்டது. எல்லாப் பத்திரிகைகளிலுமே காரணமே புரியவில்லை. ரிசப்ஷனில் பெண் சந்தோஷமாகத் தான் இருந்தாள் என்றே சொன்னார்கள். இப்படி ஏதேனும் நடக்கலாம், என்பதாலேயே முன்னாலெல்லாம் சேர்த்து நிறுத்தி வைப்பதையோ, அமர வைப்பதையோ கட்டாயமாய்த் தவிர்த்தனர். நெருப்பென்றால் வாய் ஒண்ணும் வெந்து போகப் போவதில்லை. கல்யாணம் முடியறவரையிலும், எதுவும் நிச்சயம் இல்லை. அதன் பின்னரும் சண்டைகள் வந்து பிரியறது தனி. அதைக் குறித்த பேச்சு இங்கே இல்லை.

27 comments:

  1. இதெல்லாம் தெரிந்த காரணம் தான், புதுசா என்ன காரணம் இருக்கும்னு யோசிச்சுட்டி இருந்தேன். சரி, தாலி கட்டினால் கூட கல்யாணம் நிக்குமேன்னா, சப்தபதி முடிஞ்சுட்டா மட்டும் எல்லாம் முடிஞ்சு போச்சா? ஏன் அப்ப கூட கருத்து வேறுபாடு வரலாமே. பேசிக்கறோமோ இல்லையோ பழகறோமோ இல்லையோ, ஓரளவு நிச்சயம் ஆன உடனேயே அவரவர் மனதில் எண்ண மாற்றம் வந்து விடும். இவர் தான் என் மறுபாதின்னு மனசார பொண்ணாலயும் பையனாலயும் நினைக்க முடியும்னா, ஏன் பெத்தவங்களும் அதே போல நினைக்க முடியாது? மனதால் நினைத்த உடனேயே தான் கல்யாணம் முடிஞ்சுடுச்சே. சப்தபதி முடிந்த பின் எல்லா விதமான விட்டுக் கொடுத்தலும் அட்ஜஸ்ட்மென்டும் செய்ய முடியும் என்றால், முன்னாடியும் முடியணுமே? கண்டிப்பா வெறும் நிச்சயம் லெவல்ல இருந்து கல்யாண மேடை வரை வந்து எங்க நின்னாலும் மனவருத்தம் மனவருத்தமே.

    அந்த காலத்தில், அரேஞ்ஜ்ட் மேரேஜ் என்பது ரொம்பவே அரேஞ்ஜ்ட். அதாவது பொண்ணையும் பையனையும் பத்தி பெரிதாக நினைக்க மாட்டார்கள், ஏன்னா அவங்க குழந்தைகள். ஆக குடும்பத்தினர் கருத்தும் ஒத்து போவதும் தான் பிரதானம் என்பதால் கல்யாணம் ஆன்னா ஊன்னா நிற்க வாய்ப்பு இருக்கிறது. ஆனா இந்த காலத்தில் இதை சொல்பவர்கள் பெரும்பாலும் பிள்ளை வீட்டார், காரணம், "நாங்க பிள்ளை வீடு" எனும் ஒரு ஏற்றம், "எங்களுக்கு ஏதாவது பிடிக்கலைன்னா, கண்டிப்பா கல்யாணம்லாம் நடக்காது" என்ற மறைமுக மிரட்டலும், "அப்படி நின்னா, வீணா ஃபோட்டோ ஆதாரம் எல்லாம் இல்லாம அடுத்த கல்யாணத்தை ஈஸியா செய்ய‌ பார்த்துக்கணும்" என்ற உயர்ந்த நல்லெண்ணமே. இதுக்கெல்லாம் ஆப்படிக்க தான் பேரிக்கா நாட்டுக்காரன் விசா வர நாள் ஆகும் என்றும் அதற்கு கல்யாணம் போஸ் எல்லாம் வேண்டும், ரெஜிஸ்டர் சர்ட்ஃபிகேட் வேண்டும் என்றும் செக் வைக்கிறான். நல்லா இருப்பான். இது எதுவும் வீண் வாதம் செய்யவோ நேரில் பார்க்காமலோ சொல்லவில்லை, எனக்கு வெறும்னே சொன்னார்கள் (நடக்கவில்லை) இன்னொரு தெரிந்த பெண்ணுக்கு நிறுத்தியே விட்டார்கள். அந்த பொண்ணு பையனுக்கு பிடிச்சுருக்கே, நாம தான் இதை ஆரம்பித்து வைத்தது, அந்த மாதிரி எண்ணம் இல்லவே இல்லை. வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. சொல்ல வந்ததை சரியா சொன்னேனான்னு டவுட்டு.

    நான் மெட்ராஸ்ல இருந்த போது எதிர் ஃப்ளாட் அக்காவோட பெரியம்மா பொண்ணோ சித்தி பொண்ணோ ஒருத்தர் கல்யாணம் நடந்தது. நாங்க கூட முதல் நாள் சாயங்காலம் ரிசப்ஷனுக்கு போயிட்டு வந்தோம். மறுநாள் கல்யாணத்துக்கு கிளம்பி அவங்கள்லாம் போனப்புறம் பேப்பரை பார்க்கிறோம், நேத்து பாத்த மாப்பிள்ளையும் அவங்க அப்பா அம்மாவும் ஏதோ அவசர வேலையாக ஆட்டோவில் சென்ற போது, எங்கோ ரோட்டில் ஒரு கடையில் தீப்பிடிக்க, அங்கிருந்து பறந்து வந்த இரும்பு ராட் சரியாக அந்த கணத்தில் தாண்டிக் கொண்டிருந்த ஆட்டோவில் இருந்த மாப்பிள்ளை மேல் மட்டும் பட்டு அவர் இற‌ந்துவிட்டார்!!!! இந்த கொடுமைக்கு, நேத்து ரிசப்ஷனோ ஃபோட்டோவோ எடுக்காம இருந்து இருந்தா, அந்த பொண்ணுக்கோ அவளை பெற்றவர்களுக்கோ மனசு சுலபமா சமாதானம் ஆகிருக்குமா? இல்லை சப்தபதி எல்லாம் முடிந்த பின் இந்த மாதிரி வேறு அசம்பாவிதம் நடந்திருந்தால் அவளோ/அவரோ வெகு காலம் விதவை போல எண்ணி மருக வேண்டுமா?

    (இந்த காலத்தில், மணமக்கள் 20களில் இருப்பவர்கள்) இதெல்லாமே ஆழ்மனசு சம்பந்த பட்ட விஷயமில்லையா. ஒருத்தருக்கு மறக்க முடியாமல் இருக்கலாம், இன்னொருவர் ப்ராக்டிகலாக சிந்தித்து தாண்டி செல்லலாம். அதுக்காக தீன்னா சொன்னா வெந்துடாது என்று கூறிக் கொண்டு, "ஏதேனும் நடந்து கல்யாணம் நின்று விட்டால்" என்று எண்ணியபடியே அனைத்தையும் செய்வது ரொம்பவும் கடுப்பாக இருக்கு. அதே சமயம், நிச்சயம் தான் ஆகிவிட்டதே என்பதற்காக ஒரேடியாகவும் கணவன் மனைவி போல இருப்பதும் எனக்கு சம்மதமில்லை. பேசிக் கொள்ளலாம், தொட வேண்டாம் அல்லது கை எல்லாம் குலுக்கி கொள்ளலாம், ஆனால் ஊர் சுற்ற வேண்டாம், இப்படி அவரவருக்கு ஏதேனும் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், அப்போது "எதேனும் நடக்க கூடாதது நடந்து" நின்று விட்டால், நாம் நம் மனசாட்சிக்கு நல்ல படியாக தான் நடந்து கொண்டோம் என்று திருப்தி இருக்கும். இவ்வளவு சொல்றேனே, ஊஞ்சலுக்கு முன்னர் வரை தொட்டுக் கொள்ள கூடாது என்றும் சொன்னார்கள், அதில் எனக்கு உடன்பாடு இருந்தது. நல்ல நேரம் பார்த்து எல்லாம் செய்யும் நாம், முதல் தொடுகை கண்டிப்பாக அவர்கள் சொல்லும் நல்ல நேரத்திலேயே நடக்கட்டுமே! இப்படி அவரவருக்கு ஒரு நியாயம். ஆனால், லட்சங்கள் செலவு செய்து கல்யாணம் செய்யும் போது, சில பழக்க வழக்கங்களுக்கு இந்த காலத்தில் அர்த்தமில்லை என்றானால், அதை விடுவது தான் சமர்த்துத்தனம். (எனக்கு நடந்த போது நான் இவ்வளவு எல்லாம் யோசிக்கவில்லை, என்னுடைய அளவுகோல், எந்த பையன் என்னை முதலில் வந்து பார்க்கிறானோ, அவனை தான் கல்யாணம் செய்ய போறேன்! இல்லேன்னா இல்லை!! பின்ன திருப்பி திருப்பி வர்றவனை எல்லாம் ஆசையா பார்க்க இது என்ன பிசினெசா?!! இப்ப காமெடியா தோணினாலும், அப்ப அப்படி தான் தீவிரமான எண்ணத்துலே இருந்தேன் ஹிஹி. நல்ல வேளை முதல்ல வந்ததோ கதை க்ளோஸ்.) நன்றி வணக்கம்.

    ReplyDelete
  3. //அதன் பின்னரும் சண்டைகள் வந்து பிரியறது தனி. அதைக் குறித்த பேச்சு இங்கே இல்லை. //

    க்ரேட் எஸ்கேப் கீது பாட்டீ.. ;)))

    ReplyDelete
  4. ம்க்கும். அதெப்படி நாங்க பார்த்து பேசி பழகினாத்தான் சரியா இருக்கும். பேசி பார்த்து பழகாட்டி வாழ்க்கையில் இறுதி வரப்போறவங்களை நாங்க எப்படி புரிஞ்சிக்கறது ?

    இப்படின்னு இந்த காலத்தில் கேக்கறாங்கா..

    ReplyDelete
  5. சப்தபதி என்றால் என்ன

    ReplyDelete
  6. அதேமாதிரி ரிசப்ஷன் , கல்யாணம் வெளியூரில் நடக்கும்பட்சதில் உள்ளூர் நண்பர்கள் வரமுடியாமா இருக்கலாம் அதனால கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளை வீட்டில் நடந்தது. அப்புறம் கொஞ்சம் மாத்தி , கல்யாணம் முடிந்தப்பின் நலங்குக்கு பதில் ரிஷப்ஷன்னு வெச்சாங்க .

    இப்ப ஜானவாசம் காலி. அதுக்குபதில் மூணு மணிநேரம் ஜவுளிக்கடை பொம்மையாட்டாம் நிக்கணும். எரிச்சலானா விஷயம்

    ReplyDelete
  7. திவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ உங்க சப்தபதி குறித்த பதிவுக்கு இந்தப் பதிவிலே கீழே லிங்க் கொடுங்க ப்ளீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னாலே வரமுடியலை, இணையம் படுத்தல்! :(((((((((

    போர்க்கொடி, பதில் அப்புறம்.

    ReplyDelete
  8. இந்த கமென்ட்ஸ் எனக்கு வரவே இல்லை. ப்ளாகர் பூதம் முழுங்கிடுத்து போல இருக்கு. சாரி!

    ReplyDelete
  9. எப்படி ஒரு கவர்மென்ட் ஆர்டர் அதிகாரி கையெழுத்து போட்டாத்தான் செயலுக்கு வருமோ, எப்ப்டி ஒரு வணிக அக்ர்மென்ட் இரண்டு பார்டியும் ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டாத்தான் செயலுக்கு வருமோ, அது போல ஏதோ ஒரு பாய்ன்ட் தான் ஒரு விஷயத்தை உறுதி செய்யணும். அதான் திருமணத்தில சப்தபதி.

    ReplyDelete
  10. எவ்வளவு நாள் பார்த்து பேசி பழகினா புரிஞ்சுடும் எல்கே? எனக்கென்னவோ ஒரு வாழ்கை காலம் கூட போறாதுன்னு தோணுது....

    ReplyDelete
  11. வாழ்கையில கருத்து வேறுபாடு வாராம இருக்காது. அதை எப்படி கையாளுகிறோம் என்பதே முக்கியம். ஈகோ பிரச்சினையாதான் இப்பல்லாம் போகிறது. அதனால்தான் நிறைய விவாகரத்துக்கள்; குடும்ப விடிசல்கள்.
    இதற்குத்தான் இப்போது திருமண வயது இளைஞர்கள் (இளைஞிகளும்தான்) அட்வைஸ் கேட்டா இப்படி சொல்கிறேன்: ஒரு பேப்பரில் எதெல்லாம் நிச்சயமா ஒத்து வராதுன்னு எழுது. உதாரணமா நான் வெஜ் சாப்பிடறது, புகைபிடிக்கிறது ... அடுத்து எதெல்லாம் ஒத்துவராது ஆனா கொஞ்சம் நீக்கு போக்கு இருக்கலாம்ன்னு எழுது. லிஸ்டை கொடுத்து லிஸ்டை வாங்கிக்க. படிச்சு பாத்து நிதானமா முடிவெடு.
    அப்படி செஞ்சாலும் ப்ரச்சினை வராம இருக்குமா ன்னு கேட்டா.. வரும்தான். ஆனா நான் அப்படின்னு நினைச்சேன், ஏமாந்துட்டேன் என்கிற அசம்ஷன்ஸ் பிரச்சினையா இராது.

    ReplyDelete
  12. போர்க்கொடி, நான் ஒண்ணும் எஸ்கேப் ஆகலை, நெட் சரியாய் இல்லை, அதோட கணினியைத் திறந்தாலே மாஜிக் மாதிரி மின்சாரம் போயிடுது! :)))))))))

    ReplyDelete
  13. எல்லாத்துக்கும் பதில் இருக்கு என் கிட்டே. :))))))

    ReplyDelete
  14. எல்கே,
    திவா, புரிஞ்சுக்கறதுங்கறது வேறே விட்டுக் கொடுக்கறது வேறேனு நினைக்கிறேன். விட்டுக்கொடுத்தல் தான் குடும்பவாழ்க்கைக்குத் தேவையான ஒன்று. என்னைப் பொறுத்த வரை தாழ்ந்து போவதற்குத் தயங்கவே மாட்டேன். அலுவலகத்திலே, காய்கறி மார்க்கெட்டிலே, இன்னும் வெளியே போகும்போது பல இடங்களில் பலரும் கருத்து வேறுபாடுகளில் பலவிதமாய்ப் பேசுகிறார்கள். மின் வாரியம், தொலைபேசி அலுவலகம்னு எல்லாத்துக்கும் obligation என்று போகும்போது பேச்சுக் கேட்டுக்கத் தான் வேண்டி இருக்கு. அப்படி இருக்கையில் குடும்பத்தில் கேட்டுண்டால் என்ன?? :)))))))

    ReplyDelete
  15. எல்கே,
    திவா, புரிஞ்சுக்கறதுங்கறது வேறே விட்டுக் கொடுக்கறது வேறேனு நினைக்கிறேன். விட்டுக்கொடுத்தல் தான் குடும்பவாழ்க்கைக்குத் தேவையான ஒன்று. என்னைப் பொறுத்த வரை தாழ்ந்து போவதற்குத் தயங்கவே மாட்டேன். அலுவலகத்திலே, காய்கறி மார்க்கெட்டிலே, இன்னும் வெளியே போகும்போது பல இடங்களில் பலரும் கருத்து வேறுபாடுகளில் பலவிதமாய்ப் பேசுகிறார்கள். மின் வாரியம், தொலைபேசி அலுவலகம்னு எல்லாத்துக்கும் obligation என்று போகும்போது பேச்சுக் கேட்டுக்கத் தான் வேண்டி இருக்கு. அப்படி இருக்கையில் குடும்பத்தில் கேட்டுண்டால் என்ன?? :)))))))

    ReplyDelete
  16. எல்கே, வெளியூரில் நடக்கும் திருமணங்களில் பிள்ளை வீட்டுக்கு வேண்டியவங்க வரமுடியலை என்பதற்காகவே அந்தக் காலங்களில் பிரவேச ஹோமம் எனப் பிள்ளை வீட்டிலேயே செய்துட்டு இருந்தாங்க. அதன்படி நான்கு நாட்கள், ஐந்து நாட்கள் திருமணம் நடக்கும். ஹிஹிஹி, எனக்கு அப்படித் தான் நடந்தது. முதல்லே மறுபடியும் மாலை மாற்றி, சுத்திக்கொட்டி அழைத்து கிரஹப்ரவேசம், அப்புறமா பிரவேச ஹோமம், ம்ம்ம்ம்?? அப்புறம் ஏதோ ஸ்தாலி??? அல்லது சாலிவாஹனம்???? அ.வ.சி. மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் அதுக்கப்புறமாத் தான் சேஷ ஹோமம் எல்லாம்! :))))))))))))))

    ReplyDelete
  17. எல்கே, வெளியூரில் நடக்கும் திருமணங்களில் பிள்ளை வீட்டுக்கு வேண்டியவங்க வரமுடியலை என்பதற்காகவே அந்தக் காலங்களில் பிரவேச ஹோமம் எனப் பிள்ளை வீட்டிலேயே செய்துட்டு இருந்தாங்க. அதன்படி நான்கு நாட்கள், ஐந்து நாட்கள் திருமணம் நடக்கும். ஹிஹிஹி, எனக்கு அப்படித் தான் நடந்தது. முதல்லே மறுபடியும் மாலை மாற்றி, சுத்திக்கொட்டி அழைத்து கிரஹப்ரவேசம், அப்புறமா பிரவேச ஹோமம், ம்ம்ம்ம்?? அப்புறம் ஏதோ ஸ்தாலி??? அல்லது சாலிவாஹனம்???? அ.வ.சி. மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் அதுக்கப்புறமாத் தான் சேஷ ஹோமம் எல்லாம்! :))))))))))))))

    ReplyDelete
  18. @திவா, சாரினு சொல்லி இருக்கீங்க இப்போத் தான் பார்த்தேன், பரம்பரா பட்டே வாங்கிடுங்க, இப்போதைக்குப் போதும்! மாதங்கியோட கமெண்டைப் படிச்சேனா, இது கேட்கலையேனு தோணித்து! :P

    ReplyDelete
  19. //எல்கே, வெளியூரில் நடக்கும் திருமணங்களில் பிள்ளை வீட்டுக்கு வேண்டியவங்க வரமுடியலை என்பதற்காகவே அந்தக் காலங்களில் பிரவேச ஹோமம் எனப் பிள்ளை வீட்டிலேயே செய்துட்டு இருந்தாங்க. அதன்படி நான்கு நாட்கள், ஐந்து நாட்கள் திருமணம் நடக்கும். //

    சாஸ்திரப்படிதான் நாலாவது நாள் சேஷ ஹோமம். பிள்ளைக்கு வேண்டப்பட்டவங்க வரத்துக்கா? என்ன புதுசா இருக்கு? :-))))))

    // ம்ம்ம்ம்?? அப்புறம் ஏதோ ஸ்தாலி??? அல்லது சாலிவாஹனம்???? அ.வ.சி. மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் அதுக்கப்புறமாத் தான் சேஷ ஹோமம் எல்லாம்! :))))))))))))))//

    ஹையோ கடவுளே அது ஸ்தாலீபாகம்.

    ReplyDelete
  20. சாஸ்திரப்படிதான் நாலாவது நாள் சேஷ ஹோமம். பிள்ளைக்கு வேண்டப்பட்டவங்க வரத்துக்கா? என்ன புதுசா இருக்கு? :-))))))//

    ஹிஹிஹி, உளறிட்டேனோ?? (வழக்கம்போல்??) பிள்ளை வீட்டுக்காரங்கள்ளே வராதவங்க அன்னிக்கு வந்து கலந்துக்கலாமேனு சொல்ல வந்துட்டு, உளறிக்கொட்டிக் கிளறி மூடி, எல்லாம் இந்த இணையத்தாலே வந்தது.

    ReplyDelete
  21. ஹையோ கடவுளே அது ஸ்தாலீபாகம்.//

    ஹிஹிஹி.அ.வ.சி. நீங்க சொன்னாச் சரியா இருக்கும், எனக்கு சாலிவாஹனமோனு ஒரு சந்தேகம், ஏன்னா அப்படி ஒரு பெயரிலே தான் ஒரு முக்கியமான நியமம் செய்யணும்னு என் மாமனார் பிடிவாதம் பிடிக்க, அதைத் தொடர்ந்து செய்யறாப்போல் இருக்கும், ஊருக்கு ஊர் மாத்திப் போற உங்க பிள்ளைக்குக் கஷ்டம்னு வாத்தியார் மறுக்க, ம்ம்ம்ம்?? அது என்ன?? ரங்க்ஸைக் கேட்கிறேனே! அப்போ ஸ்தாலீபாகம் செய்திருப்போம்னு நினைக்கிறேன். அன்னிக்கு என்னமோ நான் தான் ஹவிஸ் பண்ணணும்னுசொல்லிட்டு, விறகு அடுப்பிலே சாதம் வைச்சுட்டுக் கண்ணைக் கசக்கிட்டு இருந்தேன். நினைவு இருக்கு! :))))

    ReplyDelete
  22. கமெண்ட்ஸ் படித்த உடனே என்ன பதிவு படிசொம்ம்னு மறந்து விட்டது
    ஹி ஹீ திரும்பவும் ஒரு முறை பதிவை படித்தேன்
    கீதாம்மா நீங்க சொல்வதும் சரி
    கொடி சொல்வதும் சரி
    திவா சார் சொல்வதும் சரி
    காலங்கள் பல விசயங்களில் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது
    தாலி கட்டுதல் போன்ற விசயங்களில் உறுதியாக இருக்கிறது
    இங்கே பதிவில் உள்ள கேள்வி படிக்கும் எல்லோரையும் யோசிக்க வைக்கிறது !

    மொத்தத்தில் புரிந்து கொள்ளுதல் ,விட்டு கொடுத்தல் ,தியாகம் ,சகிப்பு தன்மை
    இவற்றால் தான் திருமண உறவு பலப்படுகிறது என்பது சான்றோர் கருத்து

    ReplyDelete
  23. குடந்தை அன்புமணி வரவுக்கு நன்றி

    ReplyDelete
  24. வாங்க ப்ரியா, விட்டுக்கொடுத்தல் தான் எல்லாத்திலேயும் முக்கியம், ஈகோ என்பதே கூடாது, நான் பெரியவனா, நீ பெரியவளா என்ற கேள்வி எழக் கூடாது, அதோடு அவங்க வாழ்க்கையை அவங்க ரெண்டு பேர் மட்டுமே தீர்மானிக்கணும், மூன்றாம் மனிதர் குறுக்கிடக் கூடாது. :)))))))))

    ReplyDelete
  25. சடங்கு சம்பிரதாயங்களை ஒப்பவில்லையென்றாலும் எடுத்துச் சொன்ன விதம் நன்றாக இருக்கிறது. எத்தனை படித்தாலும் பண்பூட்டினாலும் கூஜாக் கதைகள் மாறவே மாறாது - நீங்கள் சொல்வது போல் மனித மனம். என் பாட்டி சொல்வார். நாயை நீராட்டி நடுத்தெருவில் நிறுத்தினாலும்.. (நெல்லைத் தமிழில் எதுகையும் மோனையும் விளையாடும் அவர் திட்டும் பொழுது.. எங்களைத் திட்டித் தான் நினைவு :-)

    சமீபத்தில் என் தங்கை மகள் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். விருந்தில் கத்தரிக்காய் கறி போடவில்லை என்று என் பிள்ளை வீட்டார் என் மைத்துனரை பத்து பேர் முன்னால் மன்னிப்புக் கேட்கச் சொன்ன பிள்ளை வீட்டுப் பண்பாளர்களை என்ன சொல்வது! என்னை அப்படி மன்னிப்புக் கேட்கச் சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பேன் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

    திருமணம் சடங்குகளால் நிறைவதில்லை என்பது என் அபிப்பிராயம்.

    ReplyDelete