எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 26, 2011

நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க!

நாங்க ஊருக்குக் கிளம்பும் முன்னே கோயிலுக்குப் போனோம். கூட என் சித்தியும், மாமியார் விட்டுட்டுப் போயிருந்த என் நாத்தனாரும் வந்தாங்க. எங்க சித்தி முதல் முதல்லே ரெண்டு பேரும் சேர்ந்து கோயிலுக்கு வந்திருக்கிறதாலே ரோஜாப்பூ மாலை வாங்கி ஸ்வாமிக்கும், அம்மனுக்கும் சார்த்தச் சொல்ல, சரினு நம்ம ரங்க்ஸும் மாலை வாங்கிட்டு வா என என்னிடம் 100 ரூ பணத்தைக் கொடுக்க, எனக்கு மயக்கமே வந்துடுச்சு. சித்தியைப் பார்க்க, சித்தியும் போய் வாங்குனு சொல்லிட்டாங்க. கூட யாருமே வரலை. எனக்கென்ன தெரியும் அது எனக்கு வைச்ச முதல் தேர்வுனு! எங்க தெரிஞ்ச மாலைக்கடைக்கு, (எங்க வேலைக்கார அம்மாவின் கடைதான்)போகலாம்னு பார்த்தால் அன்னிக்குனு அது இல்லை. இன்னும் வரலையாம். சரினு பக்கத்துக்கடைக்குப் போய் வாங்கினேன். ஒரு மாலை ஐம்பது ரூபாய்னு கடைக்காரர் சொன்னார். ஏதோ சின்னக்கடைக்கோ, மதுரை வடக்காவணி மூலவீதி மார்க்கெட்டுக்கோ போயிருந்தால் தெரியும். ஒரு பூ வாங்கக் கூடப் போனதில்லை. மல்லிகைப் பூ காசு கொடுத்து வாங்கினதும் இல்லை. மல்லிகை சீசன் என்றால் மதுரையிலே வீட்டுக்கு வீடு லக்‌ஷம் மல்லிகை கொடுப்பாங்க. அதை வாங்கித் தொடுத்து வச்சுண்டாலே தினம் ஒரு மாலையே போட்டுக்கலாம். அந்தக் கடைக்காரரோட மீசை/தாடி?? ஏதோ ஒண்ணு. நான் சின்னப் பொண்ணுதானே! பயம்மா இருந்ததா! சரினு சொன்ன விலைக்கு ரெண்டு மாலை வாங்கிட்டு வந்துட்டேன்.

வந்து மாலையைக் கொடுத்தால் ஆயிரம் கேள்விகள், விசாரணைகள். Audit Objection Started. அன்னிலே இருந்து இன்னி வரைக்கும் அப்ஜெக்‌ஷனுக்கு பதில் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்து சே, பேசாமல் நான் சிதம்பரம் கட்சியிலே இருந்திருக்கலாம்! :P கடைசியிலே சித்திலே இருந்து எல்லாரும் பேரம் பேசி வாங்காதோ ஒரு பொண்ணுனு கிண்டல்! இந்த barter எல்லாம் அக்கவுன்டன்சியிலேயும், எகனாமிக்ஸிலேயும் படிச்சது தான். நம்மகிட்டே இருந்த பணத்தைக் கொடுத்து மாலைகளை வாங்கியாச்சு. அதோடு விட வேண்டியது தானே! அதான் இல்லையே! objection overruled னு அப்போவே சொல்லி இருக்கணுமோ? இதுக்குனு சித்தி தலைமேலே ஒரு நபர் விசாரணைக் கமிஷன் நியமிச்சுக் கேட்கச் சொன்னார். என் கட்சியிலே ஆட்களே இல்லாமல் தன்னந்தனியாக நான் இருக்க, எதிரிக்கட்சியிலே சேச்சே எதிர்க்கட்சியிலே என் கணவரும், என் நாத்தனாரும் வெற்றிப்புன்னகையோடு காட்சி அளிக்க, :P அப்புறம் கடையிலே போய்க் கேட்டதுக்குச் சின்னப் பொண்ணுனு ஒண்ணும் ஏமாத்தலைங்க, இன்னிக்கு ரோஜாப் பூ மாலையே விலை அதிகம், அதோடு முழுமாலை கேட்டது அந்தப்பாப்பா. (நான் பாப்பா தான் என்பதன் காரணம் புரிஞ்சிருக்குமே) என்று கடைக்காரர் சொன்னார். அப்பாடா! சாட்சியங்களை நான் கலைக்கவே இல்லை, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் விசாரணை முடிவடைந்தது. :)))))) உண்மையில் மாலை முழுமாலைதான். இரண்டு பக்கமும் நீஈஈஈஈஈஈஈளமாய் வரும். நுனியில் பட்டுக் குஞ்சலம் வைத்திருப்பாங்க. அப்படி ஒரு மாலையை இப்போல்லாம் பார்க்க முடியாது. கோயிலில் இருந்து மறுபடி டிவிஎஸ். நகர் வந்தோம். சாப்பாடு ஆச்சு. மதியம் இரண்டரைக்கு ஜனதா ரயில் மதுரையில் இருந்து சென்னை கிளம்புகிறது. மெயின் லைனில். இரவு பத்து மணி அளவில் கும்பகோணம் போகுமாம். இரவே கிராமம் போகிறோமோ என நினைத்துக்கொண்டேன். எனக்கு அப்போ கிராமம் போவதில் இருந்த கஷ்டங்கள் சரியாய்த் தெரியாது. அப்பா வந்து சொன்னப்போக் கூட விளையாட்டாய்க் கேட்டது தான். ஆகவே ராத்திரியே போயிடுவோம் போலனு நினைச்சேன். ஆனால் என் அம்மா அன்று செவ்வாய்க் கிழமை என்பதாலும், இரவு அகாலம் என்பதாலும் அன்றே புக்ககம் போக முடியாது என்றும் ஸ்டேஷனிலேயே தங்கிட்டுக் காலை தான் போவோம் என்றார். உள்ளூரிலேயே அவங்க அத்தை வீடு இருந்தாலும் முதலில் எங்க வீட்டுக்குத் தான் போகணும், ஒளபாசனப் பானையோட என்பதால் அங்கேயும் போகலை.

அப்போல்லாம் பாக்கிங் செய்வது பற்றிய அறிவும் கிடையாது. ஆகவே அம்மா, அப்பா, சாமான்களைப் பாக் செய்திருந்த விதமே இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது. ஒரு சாக்கில் பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள், இரும்பு அடுப்பு போன்றவற்றையும் ஒரு ஜாதிக்காய்ப் பெட்டியில் எவர்சில்வர் பாத்திரங்களும், அந்தக் காலம் ரொம்பவே பிரபலமாக இருந்த நாகப்பட்டினம் ஸ்டீல் ட்ரங்கில் என் புடைவைகளும், இன்னொன்றில் வெள்ளிப் பாத்திரங்களுமாக கம்பார்ட்மென்டையே அடைக்க, உட்கார இடம் இல்லாமல் நாங்க மட்டுமின்றி( ரிசர்வேஷன் எல்லாம் அப்போ ரொம்பவே லக்சுரி அதுவும் கும்பகோணம், இதோ இருக்கும்பார் அப்பா). எல்லாருமே தவிச்சோம். ஒரு மாதிரிச் சமாளிச்சுட்டு உட்கார்ந்தோம். கட்டுச் சாதக் கூடைச் சாப்பாடே கொண்டு வந்திருந்தது அன்று நாங்க மட்டுமின்றி அந்தப் பெட்டியில் வந்தவங்க எல்லாருக்கும் கொடுக்கிறாப்போல் இருந்தது. ஆகக் கூடி அந்த ரயிலே எங்க திருமணத்தைக் கொண்டாட நாங்க இரவு ஒன்பதரை அளவில் கும்பகோணம் போய்ச் சேர்ந்தோம்.

மாமனார் உதவி செய்ய வேண்டி நிறுத்தி வைத்திருந்த பண்ணை ஆள் ஒருத்தரும் எங்களோடு மதுரையிலிருந்து வந்திருந்தார். அவர் உதவியோடு சாமான்களை ப்ளாட்பார்மில் இறக்கிவிட்டு, நாங்களும் இறங்கினோம். இதற்கு முன்னால் கும்பகோணம் ஸ்டேஷன் வந்தது இல்லை. என் மாமாவுக்கு திருவலஞ்சுழியில் திருமணம் நடந்தப்போ கும்பகோணத்தை பிக்னிக் மாதிரி சுற்றிப் பார்த்திருக்கோம். அதுவேறே இது வேறேயே. இனி அடிக்கடி வரவேண்டி இருக்கும் இல்லையா? கல்யாணத்தின் போது இருந்தமாதிரியே நான் என்னிலிருந்து பிரிந்து நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு மொட்டை வண்டியில் சாமான்களை ஏற்றினார்கள். வண்டியோடு ஆட்களும் வந்திருந்தனர். மாடுகள் கொம்பில்லாமல் பார்க்கவே விநோதமாக இருந்தது. அத்தகைய வண்டி மாடுகளை மதுரைப்பக்கம் பார்த்ததே இல்லை. அந்த வண்டியில் சாமான்கள் ஏற்றப்பட்டு விடிய விடிய ஊர் போய்ச் சேரும் என்றார் என் கணவர். எனக்கு அதுவும் விநோதமாய்த் தான் இருந்தது. ஸ்டேஷனிலேயே தூங்கினோம். விடிகாலையில் முதல் பஸ்ஸில் போக வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். அம்மா நாலு மணிக்கு எழுப்ப எழுந்து கை,கால் முகம் கழுவிக்கொண்டு புக்ககம் செல்ல ஆயத்தமானேன். பேருந்து நிலையத்திற்கு அருகேயே பஸ் நிற்கும் என்று சொன்னதால் எல்லாரும் அங்கே சென்றோம். பஸ்ஸும் வந்தது. ஒளபாசனப் பானையை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறக் கஷ்டமாய் இருந்தாலும் ஏறிவிட்டேன். எல்லாரும் உட்கார்ந்ததும் பஸ் போக ஆரம்பித்தது.

குறுகிய பாதை. பஸ் வளைந்து வளைந்து வளைந்து சென்றது. அப்பா வந்தியத் தேவன் பிரயாணம் பண்ணியதை நினைத்து நினைத்துச் சொல்லிக் கொண்டு அநுபவித்துக் கொண்டு வந்தார். எனக்கோ இது என்ன இப்படிக் குறுகிய பாதையில் பஸ்ஸெல்லாம் எப்படிப் போகிறது என ஆச்சரியப் பட்டேன். அந்தப் பேருந்து கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் பேருந்து. வழியில் கூந்தலூர் என்னும் இடத்தில் பஸ் நிற்கையில் அங்கே இறங்கி அங்கிருந்து மறுபடி மாட்டு வண்டியில் ஊருக்குப் போக வேண்டும் என்றார்கள். கூந்தலூரில் பஸ்ஸும் நின்று நாங்களும் இறங்கினோம். மாட்டு வண்டிகளும் காத்திருந்தன. இன்னொரு மொட்டை வண்டியும் வந்திருந்தது. அதில் சாமான்களை ஏற்றிவிட்டு ஒளபாசனப் பானையும் நான், என் கணவர் மட்டும் மாட்டு வண்டியில் செல்வது எனவும், மற்றவர்கள் நடந்து வரலாம் எனவும் முடிவாகியது. ஆற்றில் வண்டியை இறக்குவது கஷ்டம் என்றும் எல்லாருமே நடக்கலாம் எனவும் மூங்கில் பாலம் தாண்டி ஏறலாம் என்றும் ஒளபாசனப் பானையைக் கையில் எடுத்து வரலாம் எனவும் என் கணவர் கூற எனக்குக் கொஞ்சம் குழப்பம்.

ஆனாலும் மாமனார் சொன்னதன் பேரில் வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். வண்டி நகர்ந்தது. அழகு அழகான சோலைகள் அடர்ந்த பாதையில் வண்டி செல்ல, விதவிதமான பக்‌ஷிகளின் கூச்சல் கேட்க, என் மனமோ அவற்றோடு ஆடத் துடிக்க வண்டி மெல்ல மெல்ல அரசலாற்றில் இறங்குவது எனக்குப் புரியவில்லை. திடீரெனப் பள்ளத்தில் இறங்கும் உணர்வு தோன்றச் சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரே வெண்மணல் பரப்பு. என் கணவர் கீழே இறங்கி இருக்க நான் மட்டும் வண்டியில் இருந்தேன். எனக்கும் வண்டியில் அமர்ந்து வர பயம்மா இருந்தது. கீழே இறங்கறேன் என்று சொல்ல, வேண்டாம், இந்த மணலில் உனக்கு நடக்க வராதுனு என் கணவர் சொல்லப் பிடிவாதமாய்க் கீழே இறங்கினேன். ஒளபாசனப் பானையைக் கையில் எடுத்துக்கொண்டு தான். காலைக்கீழே வைத்தேனோ இல்லையோ மணலில் கால் உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போயாச்சு. எங்கே இருக்கேன்??


ஹிஹிஹி, நேத்திக்கு சேமிச்சு வைச்சுட்டுப் போய்ப்படுத்துட்டேன். பார்த்தா அரைகுறையாக் காப்பி, பேஸ்ட் ஆகி பப்ளிஷும் ஆகி இருக்கு. ப்ளாகர் வேதாளம் வேலை போல! :P:P:P

27 comments:

  1. ம்ம்...அடுத்து ;)

    ReplyDelete
  2. மாமா பாவம் அவரை அன்னிக்கே கலட்டி விட்டுட்டீங்களே???

    ReplyDelete
  3. மதுரை டு கும்பகோணம் பிரயாண விவரிப்பு நல்லா இருக்கு.
    ஐம்பது ரூபாய்க்கு ரெண்டு ரோஜா மாலையா - இது உங்களுக்கு வைக்கப்பட்ட பரிட்சையா? அப்போலாம் பெண் பார்க்கற பொது பெண்ணிடம் ஒரு சொம்பு ஜலத்தை கொடுத்து கை கால் அலம்பச் சொல்லியோ இல்லை விளக்கேத்த சொல்லி எத்தனை தீக்குச்சி உபயோகப் படுத்தறானு பரிட்சித்து பாக்கறது தான் கேள்விப் பட்டுருக்கேன். உங்களுக்குக் கல்யாணத்துக்கு அப்புறம் தான் இந்த டெஸ்ட். அதுனால பாஸ்/பெயில் கவலை இல்லை.

    ReplyDelete
  4. வாங்க கோபி, என்ன ஆவல், என்ன ஆவல் எல்லாருக்கும், நன்றிப்பா. :D

    ReplyDelete
  5. எல்கே, கலட்டி=கழட்டி, முதல்லே இம்பொசிஷன் எழுதுங்க லக்ஷம் முறை.

    அப்புறம் நான் கழட்டி விடலை, அவர் தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  6. ஹிஹிஹி, ஸ்ரீநி, அதெல்லாம் மாமியார் டெஸ்ட் வைச்சதைப் பெண் பார்க்கும் படலத்திலே எழுதி இருக்கேன். திரும்ப ரிவிஷன் கொடுங்க. என்ன படிக்கிறீங்க?? தேர்வு வைச்சால் ஒருத்தர் கூடத் தேறாது போல! :)))))))))

    ReplyDelete
  7. அரைத் தூக்கத்தில் போட்ட கமென்ட் அது

    ReplyDelete
  8. எல்கே, அதுக்காக விட்டுடுவோமா என்ன?? எழுதுங்க இம்பொசிஷன், படிக்கிறச்சே தூங்கினதுக்கும் சேர்த்து. :D

    ReplyDelete
  9. படிக்கறச்சே தூங்கினேனா >? சுத்தம் தூங்கினப்பதான் படிச்சேன் . நள்ளிரவில்

    ReplyDelete
  10. அநியாயமா இருக்கே! குறிச்சு வைச்சுக்கிறேன். தலைமைக் கழகத்திலே இருந்து நோட்டீஸ் வரும் பாருங்க. :P

    ReplyDelete
  11. //காலைக்கீழே வைத்தேனோ இல்லையோ மணலில் கால் உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போயாச்சு. எங்கே இருக்கேன்??//

    அப்பவும் தெரியலை இப்பவும் தெரியலையா? போச்சு! :-)))


    // ஹிஹிஹி, நேத்திக்கு சேமிச்சு வைச்சுட்டுப் போய்ப்படுத்துட்டேன். பார்த்தா அரைகுறையாக் காப்பி, பேஸ்ட் ஆகி பப்ளிஷும் ஆகி இருக்கு. ப்ளாகர் வேதாளம் வேலை போல! :P:P:P//

    ஹாஹாஹ்ஹாஹ்ஹா!

    ReplyDelete
  12. //தேர்வு வைச்சால் ஒருத்தர் கூடத் தேறாது போல! :)))))))))//

    மாமாங்கத்துக்கு ஒரு போஸ்ட் போட்டா யாருக்கு நினைவிருக்கும்? :-)))

    ReplyDelete
  13. //அன்னிலே இருந்து இன்னி வரைக்கும் அப்ஜெக்‌ஷனுக்கு பதில் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்து சே, பேசாமல் நான் சிதம்பரம் கட்சியிலே இருந்திருக்கலாம்! :P //
    அப்போ மீனாட்சி கட்சின்னு ஒத்துகிறீங்க :P

    நகைச்சுவை இழையோட சொல்லிய விதம் ,எழுதிய பாணி
    மிகவும் நன்றாக இருக்கிறது
    எப்படி இவ்வளவும் நியாபகம் வைத்து இருந்து எழுத முடிகிறது
    என்ற ஆட்சிரியத்தையும் அளிக்கிறது கீதாம்மா
    இதை ஒரு புக்காக இருந்தால் படிக்க இன்னும் நன்றாக இருக்கும்
    என்பது எனது பணிவான கருத்து .

    எங்க லேடீஸ் யாரையும் காணலே
    அவங்க அவங்க கல்யாண நினைப்பில மூழ்கிட்டாங்க போல

    ReplyDelete
  14. படிக்கறச்சே தூங்கினேனா >? சுத்தம் தூங்கினப்பதான் படிச்சேன் . நள்ளிரவில்//
    இதை மட்டும் எதிரி கட்சி காரிகைகள் கேட்டால் தலைவி பத்தி என்ன நினைப்பாங்க LK
    தலைமை கழகத்தில் இருந்து எச்சரிக்கை அறிக்கை பெற்று கொண்டு தலைவியிடம் மன்னிப்பு கேட்கவும் !
    .
    .
    .
    .

    இருந்தாலும் உங்கள் நகைச்சுவை உணர்வை தலைமை கழகம் பாராட்ட கடமை பட்டு இருக்கிறது ஹ ஹா

    ReplyDelete
  15. அப்பவும் தெரியலை இப்பவும் தெரியலையா? போச்சு! :-)))//

    :)))))))))))))) நான் யார் நான் யார், நான் யார்???

    ReplyDelete
  16. ஹாஹாஹ்ஹாஹ்ஹா!//

    என்ன சிரிப்பு??க்ர்ர்ர்ர்ர் உங்க கிட்டேயும் வேலையைக் காட்டும், பாருங்க. :P

    ReplyDelete
  17. மாமாங்கத்துக்கு ஒரு போஸ்ட் போட்டா யாருக்கு நினைவிருக்கும்? :-)))//

    நேரம்! :(

    ReplyDelete
  18. வாங்க ப்ரியா, நினைவு எல்லாருக்குமே இருக்கும்னு தான் நினைக்கிறேன். தேவைப்படும்போது மேலே வரும். அது வரை மனதின் ஆழத்திலே மிதக்கும், மூழ்கிக் கிடக்கும்.

    ம்ம்ம்?? பெண்கள் யாருமே வரலை இல்லை?? எலலாரும் என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டாங்க! :))))) பிசியா இருப்பாங்களா இருக்கும். வரட்டும், வரட்டும் மெதுவா.

    ReplyDelete
  19. ப்ரியா, எல்கேவைப் பாராட்டினதுக்காக உங்களுக்கு ஷோ காஸ் நோட்டிஸ் வரும், காத்துட்டு இருங்க. :)))))

    ReplyDelete
  20. ப்ரியா, எண்ணங்கள் பதிவு முதல் முதல் நான் ஆரம்பிச்சது, முக்கியப் பதிவு எல்லாரும் இந்தப் பதிவுக்குத் தான் அதிகம் வராங்க. அதனால் இதற்கு பஸ்ஸில் விளம்பரம் தேவையில்லை. கண்ணன் பதிவை எந்தத் திரட்டிகளிலும் சேர்க்கவில்லை. ஒரு சில காரணங்களுக்காகக் கண்ணன் தொடரைத் தனியாகப் போடுகிறேன். திரட்டிகளில் சேர்க்கும் எண்ணம் இல்லை. அதனால் நண்பர்கள் அறிய வேண்டி பஸ்ஸில் விளம்பரம் செய்கிறேன். அம்புடுதேன்! :)))))))

    ReplyDelete
  21. >>>என்னிலிருந்து பிரிந்து நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்

    ரொம்ப பிடிச்சது.

    ReplyDelete
  22. மாட்டு வண்டியில் போறப்ப முன்பாரம் பின்பாரம்னு அட்ஜஸ்ட் செந்து முன்னயும் பின்னயும் நகர்ந்தே சின்னவயசுல கொஞ்சம் தேஞ்சு போன தேகம்.
    உங்க மா.வ பயண அனுபவம் நினைவுகளைக் கொண்டு வருது.

    ReplyDelete
  23. ரொம்ப பிடிச்சது.//

    தெரியலை அப்பாதுரை, இப்போவும் சில சமயம் நான் வெளியே வந்து வேடிக்கை பார்க்கிறேன் என்று பல சமயங்கள் தோன்றும். எங்கோ மிதக்கறாப்போல் இருக்கும். அப்புறமாத் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு நிஜத்துக்கு வருவேன். :)))))))

    ReplyDelete
  24. மாட்டு வண்டிப் பயணம் எனக்குப் புதுசுதான். குதிரை வண்டியிலே போயிருக்கேன்.

    ReplyDelete
  25. கட்டுச்சாதக் கூடை கட்டி பெண்ணை புக்ககம் அனுப்பும் போது அம்மா-அப்பா வரக்கூடாதுன்னு சொல்வாங்களே ? அந்தக் காலத்தில் அது இல்லையா? இல்லை உங்க ஊர்ப் பழக்கத்தில் வேற மாதிரியா?

    எங்க அப்பா தஞ்சாவூர்ப்பக்கம், மாமனார் வீடெல்லாம் திருச்சி பக்கம், ரெண்டு வீட்லயும் அம்மா-அப்பா பெண்ணைக் கொண்டுவிடுவது வழக்கமில்லையாமே?

    ReplyDelete
  26. அட?அட? அட? விவிஐபி எல்லாம் விஜயம் செய்திருக்காங்க நம்ம வலைப்பக்கத்துக்கு, வாங்க பொன்ஸக்கா, நலமா?? long time, no see??? :))))) இப்போ உங்க கேள்விக்கு பதில்,

    தெரியலை, அப்பா, அம்மா தான் வந்தாங்க, கூடவே என் தம்பியும் வந்தார். தொடர்ந்து நான்கு நாட்கள் திருமண நிகழ்ச்சி என்பதாலும், அதன் தொடர்ந்த வைதீக விசேஷங்களுக்கு அம்மா, அப்பா இருக்கணும் என்பதாலும் வந்திருக்கலாம்னு நினைக்கிறேன். இப்போல்லாம் கல்யாணத்தன்று காலையே ஷார்ட் கட்டில் எல்லாமும் முடித்து விடுகின்றனர். இங்கே அப்படி நடக்கவில்லை என்பதால் இருக்கலாமோ என்னமோ! 100/200 % என் அப்பா, அம்மா தான் வந்தாங்க, சந்தேகமே இல்லை. கிளம்பறச்சே கூட அப்பா, அம்மா, தம்பி விட்டுட்டுப் போறதுக்கு அழுதப்போ நான் ஜாலியா நின்னுட்டு இருந்தேன். :)))))))

    ReplyDelete
  27. இனிய நினைவுகள்.

    ReplyDelete