எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Monday, May 09, 2011
ரஜினிகந்தா மலர்கள்
நேத்திக்கு ரொம்ப நாட்கள்/மாதங்கள்(???) கழிச்சு ரஜினிகந்தா படம் பார்த்தேன். வழக்கம்போலத் தான். படம் ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டிருந்தது, என்றாலும் ஏற்கெனவே பார்த்த படம் தான் என்பதால் புரியக் கஷ்டமாய் இல்லை. சுவாரசியமும் குறையவில்லை. பாசு சட்டர்ஜி எடுத்த படம். அமோல் பலேகரின் முதல் படம்?? ஆமாம்னு நினைக்கிறேன். வித்யா சின்ஹா மனச் சஞ்சலத்தை அருமையாக வெளிப்படுத்தி நடித்து இருந்தார். தடுமாற்றம் அவருக்கு வந்தால் நமக்குக் கோபம் வருகிறது என்பதில் இருந்தே அவரின் நடிப்பைப் புரிந்து கொள்ளலாம். இயல்பான செட்டிங்குகள். ஆரவாரமும், கூச்சலும் இல்லாத இனிமையான இசை! சலீல் செளத்ரி?? நிச்சயமாய் பர்மன்கள் இல்லை. இனிமையான சங்கீதம்! பின்னணி இசைக்கும்போது பல படங்களிலும் வசனங்கள் புரியாமல் குழப்பமாய் இருக்கும். இதிலே உச்சரிப்புச் சுத்தம்! ஹிந்தியில் வந்த கதையோ? வங்காளக் கதையா? நினைவில் இல்லை.
கடைசியில் முடிவைப் பார்த்ததும் தான் அப்பாடானு இருந்தது. சம்பவங்கள் கோர்க்கப் பட்டிருந்த விதமும் இயற்கையாக இயல்பாக, பக்கத்து வீட்டில் நடப்பனவற்றைக் காண்பது போல் இருந்தது. படத்தின் முக்கிய நடிகர் ஆரம்பம் முதல் முடிவு வரையிலும் ரஜினிகந்தா மலர்கள் தான். நம்ம ஊர் சம்மங்கிப் பூ??? பாதிரிப்பூ?? மரமல்லி?? மரமல்லியும், பாதிரிப்பூவும் ஒண்ணுனு யாரோ சொன்னாங்களே???
Subscribe to:
Post Comments (Atom)
நோ கமென்ட்ஸ்!
ReplyDeleteதிரை விமர்சன பதிவுக்கு நன்னி ஹை
ReplyDeleteஏதோ ரஜினி காந்த் பத்தி சொல்வீங்க ன்னு வந்தா
ரஜினி காந்த மலர்கை பத்தி சொல்றீங்களே கீதாம்மா :)
parthu rempa naal aana mathiri irugge
ReplyDeleteபார்த்து ரெம்ப நாள் ஆனா மாதிரி இருக்கே !
நானும் இந்தப்படம் பார்த்திருக்கேன்
ReplyDeleteகுத்துப்பாட்டோ, இரட்டை அர்த்தவசனங்களோ இல்லாத நல்ல படம்.பாட்டுக்கள் எல்லாமே இனிமை.
பகிர்ந்தமைக்கு நன்றி.
மேடம் நேத்திக்குதான் மாசாந்திர சாமான்ல ரஜினிகந்தா ஊதுபத்தி வாங்கினேன். என்னா மணம்! என்னா மணம்! என்ன மலரோ வாசனை ஆளை மயக்குது. ;-))
ReplyDeleteதிவா, ஏன், என்னாச்சு?? :))))))
ReplyDeleteஹிஹிஹி, வாங்க ப்ரியா, ரஜினிகந்தா என்ற இந்தப் பூக்கள் அதிகம் பூங்கொத்துப் பரிசுக்குப் பயன்பட்டாலும் இதன் மயக்கும் மணம் வங்காளப் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம், எதிலோ படிச்சேன், இணையத்திலும் பார்க்கணும்! :))))) நம்ம ஊர்ப்பன்னீர்ப் பூக்கள் தான்னு சிலர் சொல்றாங்க, பன்னீர்ப்பூக்களும் நல்ல மணத்தோடு இருக்குமே.
ReplyDeleteப்ரியா, யாரைப் பார்த்து ரொம்ப நாட்கள் ஆச்சு?? ரஜனிகந்தா படம்??? ஹிஹி, நேத்திக்குத் தான் தூர்தர்ஷனில் தேசீய சானலில் மத்தியானமாப் போட்டாங்க. :))))) பார்த்திருக்கலாமே! :P
ReplyDeleteவாங்க ஆர்விஎஸ், அப்படியா?? ஊதுபத்தி வாங்கியே பல வருஷங்கள் ஆச்சு! வீட்டில் ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவைகளுக்கு 144 தடை உத்தரவு போட்டிருக்கேன்! :))))))
ReplyDeleteஇப்படி ஒரு பூ பேரு இருக்கா? நான் கேள்விப்பட்டதே இல்ல நிஜமா... பாக்கறதுக்கு ஏதோ லில்லி பூ மாதிரி இருக்கே... நன்றி மாமி போட்டோவோட போட்டதுக்கு...:))
ReplyDeleteGeetha, Rajanigandha movie is a nice beautiful movie. emotions and expressions play the lead role. Rajinigandhaa...Panneerpushpam?
ReplyDeleteGeetha, Rajanigandha movie is a nice beautiful movie. emotions and expressions play the lead role. Rajinigandhaa...Panneerpushpam?
ReplyDeleteநமக்கு சம்பந்தம் இல்லாதா ஏரியா
ReplyDeleteசம்பங்கி பூ. ரெண்டு மூணு வகை இருக்கு இல்லியா கொடி சம்பங்கி மஞ்சளா இருக்கும் நல்ல வாசனை. எனக்கு இந்த வெள்ளை அடுக்கு சம்பங்கி வாஸனை ரொம்ப பிடிக்கும். பூனால வரலக்ஷ்மி பூஜையின் போது நிறைய கிடைக்கும் பன்னீர் பூ frangipani இல்லையா? நம்ப ஊர்ல உயரமா வளந்திருக்கற மரத்துல நீள stem மாதிரி பகுதியும் அழகா 5 petals ஓட வாஸனையா butter/ cream கலர்ல பூத்து கிடக்குமே அது என்ன பூ? அதை நான் இத்தனை நாளும் பன்னீர்ப்பூனு நினைச்சுண்டு இருந்தேன். காதுல டோலாக்கு மாதிரி போட்டுக்கலாம்னு ஆசையா இருக்கும் :)))
ReplyDeleteஏடிஎம்,ரஜனிகந்தா பூக்களைப் பத்தித் தெரியாட்டியும் படத்தைப் பத்தித் தெரிஞ்சிருக்கணுமே! எழுபதுகளில் ரொம்பவே பிரபலமான ஒரு படம், ஹூம் இது மாதிரி எல்லாம் இப்போ ஏது படம்?? :( லில்லிப் பூவாய்க் கூட இருக்கலாமோ? தெரியலை ஏடிஎம், எனக்கு என்னமோ பன்னீர்ப் பூக்கள் மாதிரித் தான் தெரியுது.
ReplyDeleteவாங்க வல்லி, அந்தப் படத்துக்கு இன்னொரு ரசிகையும் இருப்பது குறித்து சந்தோஷம். பன்னீர் புஷ்பங்கள்னு தான் நினைக்கிறேன்.
ReplyDeleteஎல்கே, எது பூக்களா? படமா? :)))))
ReplyDeleteவாங்க ஜெய்ஸ்ரீ, சம்மங்கிப் பூ திருவல்லிக்கேணியிலே நிறையக் கிடக்குது, சரம், சரமா வாங்கி வச்சுக்க ஆசைதான், மஞ்சள் சம்மங்கி தான் ரொம்பப் பிடிக்கும். அந்தக் கலர் காம்பினேஷன்! பிரமாதம் இல்லை?? ஆனால் அவருக்கு அந்த வாசனைக்குத் தலைவலி வந்துடுது, அதனால் ஜாஸ்தி வச்சுக்கறதில்லை. மல்லி, முல்லை, ஜாதியோடு சரி. :))))))
ReplyDeleteஎனக்கு என்னமோ பன்னீர்புஷ்பம்னு தான் தோணுது. ஒரு சிலர் மரமல்லினும் சொல்றாங்க,
ReplyDeleteவித்யா சின்ஹா - மறந்தே போன அழகும் திறமையும். சில ரி.மு படங்களை நினைவு படுத்தினீர்கள் - அடுத்த முறை இந்தியா போகும் பொழுது டிவிடி சுட வேண்டும்.
ReplyDeleteவாங்க அப்பாதுரை, ரொம்ப நாளாக் காணோமே?? எந்த ஊரில் இருக்கீங்க?? ரிஷிகேஷ் முகர்ஜி படங்கள் எனக்கும் பிடித்தவையே. ஆநந்த், பாவர்ச்சி இரண்டும் எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பே வராது. நல்ல படங்கள்.
ReplyDeleteஒரு மாசம் ஊர் சுற்றினதால் ப்லாக் பார்க்கமுடியவில்லை (பதிலுக்கு பராக் பார்த்தேன்). ஒரு வாரம் தான் சென்னை வர முடிந்தது. வருத்தம் (ஆனாலும் இப்போ வெய்யிலைப் பத்திப் படிச்சதுமே வேத்து கொட்டுதுங்க). இப்ப இருக்குறது சிகாகோ.
ReplyDelete