திவாகர் கேட்ட திராவிடச் சிசு குறித்து எழுத வேண்டுமெனில் முதலில் ஆசாரியர் காலம் கி.மு. என்று நாம் புரிந்து கொண்டால் தான் சரியாக இருக்கும். மேலும் ஆசாரியர் தமிழ் பேசும் பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும் தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் எடுத்துக் காட்டியுள்ளார். அனைவரும் நினைக்கும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியவர் அபிநவ சங்கரர். இவருக்கும் ஆதிசங்கரருக்கும் இருந்த நிறைய ஒற்றுமைகளால் ஏற்பட்ட குழப்பம் என்பதையும் அறிய முடியும் அனைவரும் நினைப்பது போல் சங்கரர் காலம் கி.பி. இல்லை, கி.மு. தான் இதை நம் பரமாசாரியாள் அவர்கள் தெளிவாக்கி இருக்கிறார்.
தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதியில் சங்கர சரிதம் என்னும் தலைப்பின் கீழ் வரும் அத்தியாயங்களில் ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-ல் இருந்து கி.மு 477 வரையானது என்பதைத் தெள்ளத் தெளிவாய்க் கூறி உள்ளார். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 38-வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீஅபிநவ சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பெரும்பாலும் ஆதிசங்கரரை ஒத்திருந்ததால் அநேகமான ஆய்வாளர்கள் இவர் தான் ஆதிசங்கரர் எனத் தவறாகக் குறிப்பிடுகின்றனர். ஆகவே படிக்கும் நேயர்கள் ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-கி.மு 477 என்பதை நினைவில் கொண்டு படிக்குமாறு வேண்டுகிறேன்.
இது குறித்து இங்கே சொல்லப் போவதில்லை; திராவிட சிசு எனத் தன்னைத் தானே ஆசாரியாள் கூறிக்கொண்டதை மட்டும் பார்க்கப் போகிறோம். ஜகத்குருவான சங்கராசாரியாரின் காலம் எப்போது என வரையறுக்கப் படாத காலத்திலே தோன்றினார் என்றே சொல்லப் படுகின்றது. அப்போது நம் தென் தமிழ்நாடு பூராவும் தமிழே பேசப் பட்டிருக்கின்றது. அதனாலேயே இவர் “தமிழ் சங்கரன்” எனப் பாடப் பட்டிருக்கின்றார். ஆசாரியாள் பேசியதும் அவருடைய தாய்மொழியும் தமிழே. சங்கரர் பிறந்த கதை அனைவரும் அறியலாம். சிவகுருநாதருக்கும் ஆர்யாம்பாளுக்கும் திருச்சூர் வடக்கு நாதர் அருளில் தோன்றிய சங்கரர் குழந்தையாக இருந்த போது ஒரு நாள் நடந்தது இது.
ஒருநாள் சிவகுருநாதன் அவர்களுக்கு அருகே இருக்கும் மாணிக்கமங்கலம் என்னும் ஊரில் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தவேண்டிய வேலை இருந்தது. ஆர்யாம்பாள் அக்கால வழக்கப்படி வீட்டுக்குள் வரமுடியாத மாதாந்திரத் தொல்லையில் இருந்தாள். ஆகையால் அவள் இல்லத்தின் கொல்லைப் புறத்திலே இருந்தாள். குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்ட படியால் சிவகுருநாதர் ஒரு கிண்ணம் நிறையப் பாலைக் குழந்தைக்கு எனக் குழந்தையின் அருகேயே வைத்திருந்தார். குழந்தை தன் மழலையிலே பாலைப் பின்னர் அருந்துவதாய்ச் சொல்ல அவரும் கோயிலுக்குச் சென்றுவிட்டார். குழந்தை விளையாட்டு மும்முரத்தில் பாலை மறக்க தாய் மறப்பாளா? ஆர்யாம்பாள் கொல்லைப் புறத்தில் இருந்து, “சங்கரா, பாலைக்குடித்தாயா அப்பா?” என ஆதூரம் மிகக் கேட்டாள். குழந்தைக்கும் அப்போதுதான் பாலின் நினைவே வந்தது.
கிண்ணத்தையே பார்த்தது குழந்தை. பால் தளும்பிற்று. கிண்ணத்தைக் கையில் எடுத்தது. சாப்பிடப் போன குழந்தைக்குத் தன் தந்தை எது சாப்பிட்டாலும் உம்மாச்சிக்குக் காட்டுவாரே என நினைப்பு வந்தது. உடனேயே தத்தக்கா பித்தக்கா எனத் தளிர் நடை நடந்து பூஜை அறைக்குச் சென்றது குழந்தை. பால் கிண்ணத்தைக் கீழே வைத்தது. அதன் எதிரே அன்னபூரணியின் உருவப் படம் மாட்டப் பட்டிருந்தது. அன்னபூரணியையே ஒரு கணம் உற்றுப் பார்த்தது. யார் கண்டார்கள்? அன்றொரு நாள் தான் பிரம்ம கபாலத்தை ஏந்தி பிக்ஷை எடுத்து வந்த நாட்கள் ஒன்றிலே சாட்சாத் அன்னபூரணியின் கை அன்னத்தால் தன் பிக்ஷைப் பாத்திரம் நிரம்பிய நினைவு மனதில் மோதிற்றோ?? குழந்தை தன்னிரு கண்களையும் மூடிக்கொண்டது. தகப்பன் அப்படித் தான் செய்வார், பார்த்திருக்கிறது. ஏதோ முணுமுணுப்பாரே? ம்ம்ம்?? சரி, நாம் இப்படிச் சொல்வோமே. “அம்மா, அன்னபூரணி, இந்தப் பாலை எடுத்துக்கோயேன்.” குழந்தை வேண்டியது. அப்பா செய்யறாப்போலே குஞ்சுக்கைகளால் நிவேதனமும் செய்தது. அடுத்த கணம் கிண்ணத்தில் இருந்த பாலைக் காணோம். குழந்தை திகைத்துப் போனது. இது என்ன? அப்பா நிவேதனம் செய்வார். அப்புறம் நாம் தானே சாப்பிடுவோம்? ஆனால் இப்போ?? பாலையே காணோமே? வெறும் கிண்ணமல்லவா இருக்கு??
கிண்ணத்தையும் பார்த்துவிட்டு அன்னபூரணியையும் பார்த்தது குழந்தை. பசி வேறு ஜாஸ்தியாகிவிட்டது. என்ன செய்யறதுனு புரியாமல் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, “அம்மாஆஆஆஆஆ, பால்” என்று அழ ஆரம்பித்தது. தன் பதியின் அவதாரமான இந்த ஞானக்குழந்தையோடு சற்று விளையாடுவோம் என எண்ணின அன்னபூரணி இப்போது பதறினாள். ஆஹா, குழந்தை அழுகிறானே? பசி பொறுக்க மாட்டானே? உடனே கிண்ணத்தில் பால் நிரம்பியது. குழந்தை சிரித்தது. (இதைப் பின்னர் செளந்தர்ய லஹரியில் குறிப்பிடப் போகிறார் சங்கரர். அதைப் பின்னால் பார்ப்போம்.) உமை அளித்த அந்த ஞானப்பாலைக் குழந்தை குடித்தது. பின்னால் வரப் போகும் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகளே இவை எல்லாமே.
அம்பாளைக் குறித்த கேசாதிபாத வர்ணனையில் சங்கரர் அம்பாளின் ஸ்தனங்களைக் குறித்தும் பாடி இருக்கிறார். அம்பாளின் மார்பகத்தில் ஊறும் ஞானப்பாலைக் குடித்தே தேவர்கள் நித்ய யெளவனமாய் இருக்கின்றனர் எனவும் அவர்கள் குமாரர்களையோ நித்ய இளைஞர்களாக என்றும் இளையோயாய் மாற்றிவிட்டது எனவும் கூறுகிறார். இதன் உள்ளார்ந்த கருத்து அம்பாளின் ஞானப்பாலை உண்டதால் காமமே என்னவெனத் தெரியாத ஞானமூர்த்திகளாக இருக்கின்றனர் என்று கூறுகிறார். இங்கே ஞானம் என்பதை பரப்ரும்மத்தை அறிவது என்ற கருத்தில் ஆசாரியார் கூறி இருக்கலாம். அம்பாளின் ஸ்தனங்களிலிருந்து ஞானம், கருணை, ஸெளந்தரியம், போன்ற அனைத்தும் அவள் இருதயத்திலிருந்து ஊறிப் பாலாகப் பெருகித் தன்னையும் அவளின் குழந்தையாக ஆக்கியது என்கிறார். இதை உண்டதாலேயே ஸாக்ஷாத் சரஸ்வதியின் சாரம் தமக்குள்ளே ஊறிக் கவிதை மழை பொழிய முடிந்தது எனவும் கூறுகிறார். இது சங்கரரே எழுதியதாய்ச் சொல்லப்படும் ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களில் ஒன்று.
முதல் நாற்பத்தி ஒன்று ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி எனப்படும். அடுத்த ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்கள் ஸெளந்தர்ய லஹரி எனப்படும். இவை அனைத்தும் சேர்ந்தே ஸெளந்தர்ய லஹரி என்று அழைக்கப்படுகிறது. அதன் எழுபத்தி ஐந்தாம் ஸ்லோகத்தில் இந்தக் குறிப்பிட த்ரவிட சிசு என்னும் வார்த்தை காணப்படும்.
தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ:
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானா-மஜனீ கமனீய: கவயிதா
இங்கே ஞானசம்பந்தரை ஆதிசங்கரர் குறிப்பிடக் காரணம் ஏதும் இருப்பதாய்த் தோன்றவில்லை. மேலும் மலையாள மொழியின் வரலாறு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதே. அதன் முன்னர் சேர, சோழ, பாண்டியர் காலங்களில் சேர நாட்டிலும் தமிழே மொழியாக இருந்தது என்பதையும் அறிவோம். ஆதிசங்கரரும் அப்படியான தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவரே என்பதால் தம்மைத் தானே இங்கே மூன்றாம் மனிதர் போல் பாவித்துக் குறிப்பிட்டிருக்கிறார். அம்பாளின் ஞானப்பாலைக் குடித்து சரஸ்வதியின் அருட்கடாக்ஷத்தைப் பெற்றதால் தம் வாக்வன்மை அதிகரித்துக் கவிஞர்களுக்கெல்லாம் கவியாகத் தம்மை ஆக்கிவிட்டது. இதுவும் அவள் அனுகிரஹமே என்கிறார் ஆசாரியார்.
இன்னும் வரும்.
உங்கள் ஆர்வத்தேடல் எனக்கு அதிகமாக துணை புரிகிறது. ஆதிசங்கரர் காலம், மகா பெரியவர் சொல்லியபடி கி.மு என்பதில் எனக்கு அதிகமாக உடன்பாடு உண்டு. ஏனெனில் புத்தரும் மகாவீரரும் ஒரே கால கட்டத்தில் தோன்றியதும் அவர்களுக்குப் பிறகு அவர்கள் சீடர்கள் அரசர்கள் துணையுடன் போர் புரிந்ததும் மிகவும் பிரசித்தம். புத்தமதக் கோட்பாடுகள் ஆதிசங்கரரல் இந்தக் கால கட்டத்தில்தான் மறுக்கப்பட்டன என்பதும் சரித்திரத்தைக் கொண்டே உறுதியாகக் கணிக்கலாம். அதிலும் எதையும் கூர்ந்து பார்த்து பதில் பேசும் நடமாடும் தெய்வமே அந்தக் கால கட்டத்தைப் பற்றி சரியாக சொல்லும்போது அதை ஏற்றுக் கொள்வதுதான் நல்லது. 8 ஆம் நூற்றாண்டில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்போது புத்தமதமும் பாரதத்தில் அத்தனை பெரிய மதமாக இல்லை.
ReplyDeleteதிராவிட சிசு என்பது தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லைதான். இத்தனை விவரம் கொடுத்ததற்கு மிக்க நன்றி கீதாம்மா
மிக்க நன்றி, பலவருஷங்களாக, செளந்தர்ய லஹரி எழுதும் போது முதலாக இதை எழுத நினைத்தேன்...நீங்கள் ஆரம்பித்தமைக்கு நன்றி...கடபயாதி சங்க்யை பற்றியும் சொல்லுங்கள்...அப்போதுதான் ஆதிசங்கரர் கி.மு என்பதற்கான விவரணம் கிடைக்கும்....
ReplyDeleteமாமி
ReplyDeleteஅடுத்து சௌந்தர்யா லஹரி ஆரம்பமா? நல்லது.
ஆதி சங்கரரின் காலம் குறித்து அபிப்ராய பேதம் காஞ்சி மடத்திற்கும், ஸ்ருங்கேரி மடத்திற்கும் இருக்கிறது. காஞ்சி மடம் கிமு என்றும் மற்றவை கிபி என்றும் கருதுகின்றன. ஸ்ருங்கேரி மட குரு பரம்பரையும் கிபி எட்டாம் நூற்றாண்டில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது.
திராவிட சிசு குறித்த வேறொரு விளக்கத்தை முன்பு tamilbrahmins.com இல் நடந்த ஒரு பதிவில் படித்த ஞாபகம். அதன் context -
ஆச்சார்யர் ஆதி சங்கரர் எப்படி அம்பாள், லக்ஷ்மி, சரஸ்வதி இவர்கள் மூவரையும் தன் வாழ்வில் சந்தித்தார் என்ற விளக்கம் குறித்து.
1. சிறு வயதில் அம்பாளுக்கு பால் நைவேத்யம் செய்யும் பொழுது அம்பாளே பாலை ஊட்டி விட்டதால் (ஞானப் பால்
என்றும் கொள்ளலாம்) தருணம் - உமையின் தரிசனம். அதனால் இவரே திராவிட சிசு என்று குறிக்கப்பட்டது.
2. கனகதாரா ஸ்தோத்ரம் நிகழ்ச்சியின் போது பிக்ஷை அளித்த பெண்ணின் ஏழ்மை குறித்து மகாலக்ஷ்மி விளக்கம் அளித்த தருணம் - லக்ஷ்மியின் தரிசனம்
3. மண்டன மிஷ்ரருடன் நடந்த வாதத்தின் நடுவராக இருந்த போதும், பின்னர் அவருடனேயே வாதம் செய்த தருணம் -மண்டன மிஷ்ராரின் மனைவி உபய பாரதியாக சரஸ்வதியின் தரிசனம்.
மேலும் தொடரவும்.
நான் சௌந்தர்ய லஹரி குறித்து எழுதிய போது
ReplyDeletehttp://srinivasgopalan.blogspot.com/2011/02/soundarya-lahari-75.html
75 வது ஸ்லோகத்தில் திராவிட சிசு திருஞான சம்பந்தர் என்றே எழுதி இருந்தேன். மூன்று வயதில் அம்பாள் பாலை இவருக்கு ஊட்டியதும், தோடுடைய செவியன் என்று இவர் பாடியதும் பற்றியே அவ்வாறு எழுதினேன்.
நீங்க ரொம்ப அழகா கதை சொல்றீங்க அம்மா. ஒரு முறை நேரில் வந்து கேட்கணும்.
ReplyDeleteசுவாரசியமான தகவல்களுக்கு நன்றி!! இன்னும் வரட்டும்....:)
ReplyDeleteதிவாகர் சார், புத்த மதத்திலும் பல புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். 29ம் புத்தரின் பெயரே கெளதம புத்தர் என்று படித்திருக்கிறேன்.
ReplyDeleteஸ்ரீநிவாஸ் கோபாலன் சார், காஞ்சி தவிர, துவாரகா மடத்தினரும் ஆதிசங்கரர் காலத்தை கி.மு என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்த இரண்டு மடத்து ஆசார்ய பரம்பரைத் தொடர் இதற்குச் சான்றாகவே இருக்கிறது.
இது பற்றி எழுதலாம், ஆனால் இத்தகவல்கள் தேவையற்ற சர்ச்சை மற்றும் மனத்தாங்கல்களை ஏற்படுத்தி ஏதோ நாம் ஒரு மடத்தினை ஏற்றியும், மற்றதைத் தாழ்த்தியும் சொல்வதாக ஆகிடக்கூடும் என்பதாலேயே நான் எழுதத் தயங்கிவந்தேன்..
என்ன தக்குடு, ஒரே சிரிப்பானுடன் பின்னூட்டம்? :-)
ReplyDeleteமிகவும் சுவரசியமான ஆரம்பம்.தொடருங்கள் மாமி.படிக்க மிக ஆர்வமாக இருக்கிறேன்.
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம்.
அபிநவ சங்கரரும் இந்த ஆச்சாரிய பரம்பரையில் வந்தவர்தானா?
பத்ரிநாராயண பெருமாளை ஜைனரிடமிருந்து மீட்டு இந்து மதத்திற்கு திரும்ப அளித்தவர்,ஆதி சங்கரரா? அல்லது அபிநவ சங்கரரா?
இவற்றை தெளி படுத்த முடியுமா?
கேள்விகளில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி.
@ மெளலி அண்ணா, நல்ல விஷயங்கள் வாசிக்கும் போது பிரசன்ன வதனமா வாசிக்கனும் இல்லையா அதான் சிரிப்பான். நீங்க கலகம் உண்டாக்க பாத்தா அப்புறம் 'கிர்ர்ர்ர்ர்ர்ர்' வரும் :)
ReplyDelete//இது பற்றி எழுதலாம், ஆனால் இத்தகவல்கள் தேவையற்ற சர்ச்சை மற்றும் மனத்தாங்கல்களை ஏற்படுத்தி ஏதோ நாம் ஒரு மடத்தினை ஏற்றியும், மற்றதைத் தாழ்த்தியும் சொல்வதாக ஆகிடக்கூடும் என்பதாலேயே நான் எழுதத் தயங்கிவந்தேன்..//
அதே அதே சபாபதே!! நமக்கு எதுக்கு வேண்டாத பொல்லாப்பு!!
ஜெயஸ்ரீ நீலகண்டன் மெயிலில் அனுப்பியது,
ReplyDeleteMrs Shivam
பழைய குருடி கதவைத்திறடி யாயிடுத்து மறுபடி!!!:(( ப்லொகர் அடம் !!
மழை ஓஞ்சதா? நீங்க எல்லாரும் சௌக்யமா?
அச்சா ! நவராத்ரிக்கா !! Good !மௌலியை முந்திண்டுட்டேளா? :)
பெரியவர் தெய்வத்தின் குரல் 5ல சொல்லியிருக்கார் .
509 BC னு நிறையபேர் ! ஸ்ருங்கேரி 4 வது monastry 44BC நு சொல்லறதா சில பேர்.
71-80 ஸ்லோகம் எல்லாமே அவளோட கருணாமுதம் பற்றியும் அதை பருகினவர்கள் பற்றியும் வரது
பிள்ளையாரப்பன் சுப்ரமணியன் நு.
அப்பேர்பட்ட அத்வைதி தன்னை physical ஆ உருவகிச்சுண்டு சொன்னாரா இல்லை metaphysical லா வானு அவருக்கு மட்டும் தான் தெரியும்.:))
ஒரு சின்ன thought !! அப்படி பாத்தா தமிழ் தெய்வம் முருகன் த்ராவிட சிசு தானே !! )) இதய குஹையில் வாஸம் செய்யும் அறிஞன், கவி , குஹன் . இதய குஹை திறந்தவர்கள் கவி பாடும் திறமை உடையவர்கள் creative skills ! . முருகனோட சக்தி வெளிப்படுத்துபவர்கள் .அவர்கள் எல்லாரும் த்ராவிட சிசுக்கள்தானே?:(( சங்கரர் ஞான சம்பந்தர் ரமணர் வள்ளலார் எல்லாரும்?? !!
நவராத்ரிக்குள்ள ஸ்லோகமும் சொல்லிகொடுக்கவும்.Kolu உண்டுதானே
jay
வாங்க திவாகர், உங்கள் தூண்டுதல் என்னைத் தேட வைக்கிறது. அதனால் நன்மை எனக்குத் தானே. சங்கரரின் காலம் குறித்துச் சில புத்தகங்களையும் படித்து வைத்திருக்கிறேன். பார்க்கலாம் நேரம் வந்தால் பகிர்ந்து கொள்ளலாம்.
ReplyDeleteவாங்க மெளலி, அம்பாள் அடியாரான நீங்க வந்தது குறித்து மகிழ்ச்சி.கடபயாதி சங்க்யை குறித்தா?? அவ்வளவு விபரமெல்லாம் எழுதினால் எல்லாருக்கும் புரிந்து கொள்ள முடியுமா?? முதலில் புரிஞ்சுக்கறாப்போல் எனக்கு எழுத வருமா?? எல்லாமும் யோசிக்கிறேன். ஊக்கத்துக்கு நன்றி.
ReplyDeleteஸ்ரீநி, உங்க செளந்தர்ய லஹரியை இன்னமும் நான் முடிக்க முடியவில்லை; :( ஏதேதோ பிரச்னைகள். சீக்கிரம் வரேன். கீதையும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது போலிருக்கு. வாழ்த்துகள்.
ReplyDeleteஆதிசங்கரர் ஞானசம்பந்தரை த்ரவிட சிசுனு சொல்லக் காரணம் என்ன?? எதுவும் தெரியவில்லையே?? மேலும் கி.பி. முதலாம் நூற்றாண்டிற்கு முன்னரே பெளத்தம் மற்ற மதங்கள் தலைதூக்கி சநாதன தர்மம் தாழ்ந்து இருந்தது என்பது சரித்திரபூர்வமாகவும் அறிவோம் இல்லையா! சிருங்கேரியில் எட்டாம் நூற்றாண்டு என எடுத்துக்கொண்டிருப்பதையும் அறிவேன். ஆனால் குரு ரத்ன மாலையில் பிரமேந்திராள் சொன்னதை ஒருத்தர் விளக்கம் கொடுத்துப் படிச்சேன். அதோடு சங்கரர் காலம் குறித்த சில புத்தகங்களும் தரவிறக்கிப் படித்தேன்.
http://easterntradition.org/original%20sankaracarya.pdf
ஜெயஸ்ரீ ஒருமுறை மேற்கண்ட புத்தகத்தின் சுட்டியும் கொடுத்தார்கள். அதையும் படிச்சேன். நீங்களும் படிச்சுப் பாருங்க. மற்றபடி கொஞ்சம் கொஞ்சமா செளந்தர்ய லஹரியை எழுத முயல்கிறேன். நன்றிப்பா.
வாங்க கவிநயா, அடுத்த அம்பாளடியாள். அம்பாளடியார்கள் அனைவரும் வந்து வாழ்த்தியது மகிழ்வாக உள்ளது. நன்றிங்க.
ReplyDeleteவாங்க தக்குடு, அடுத்த அம்பாள் உபாசகர். உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயல்கிறேன். வந்ததுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ராம்வி, அபிநவ சங்கரர் ஆதிசங்கரருக்குப் பின்னர் வந்த ஆசாரிய பரம்பரையில் எட்டாம் நூற்றாண்டில் தோன்றியவர். இவரைக் குறித்தும் எழுதுகிறேன். நீங்க கேட்டது தப்பே இல்லை. சரியே.
ReplyDeleteபத்ரிநாராயணரை மீட்டதும், கோவிலில் வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தியதும் ஆதிசங்கரரே. அவரால் நியமிக்கப்பட்டவர்களின் வம்சாவழியினரே இன்றும் பத்ரிநாராயணருக்கு வழிபாடுகள் செய்து வருகிறார்கள். உங்கள் மனதில் என்ன சந்தேகம் வந்தாலும் தாராளமாய்க் கேளுங்கள்.
ஜெயஸ்ரீ, மறுபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி விட்டதா??? சில சமயம் என்னையும் என்னோட பதிவிலேயே அனுமதிப்பதில்லை!
ReplyDeleteநவராத்ரிக்குனு ஆரம்பிக்கலை. திவாகர் கேட்டதும், வேறு இன்னும் சிலரும் மடல் அனுப்பிக் கேட்டிருந்தாங்க. அதான்! கூடியவரையிலும் தொடர முயல்கிறேன். ஸ்லோகம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குத் தகுதி எல்லாம் கிடையாது. முடிந்தவரையிலும் என் மனசுக்குப் பட்ட அர்த்தங்களைச் சொல்லப் பார்க்கிறேன். உங்களோட வரவுக்கு நன்றி. சிரமப்பட்டு ப்ளாகரோடு போராடி வர வேண்டி இருக்கு. என்னனு புரியலை.
மாமி
ReplyDeleteசுட்டி தந்தற்கு நன்றி. பொறுமையாகப் படிக்கின்றேன்.
ஒரு வேளை ஆதி சங்கரரின் காலம் 509 BC என்று வைத்துக் கொண்டால் எனக்கு இந்த விஷயம் புரிபடவில்லை - தெரிந்தால் விளக்கவும்:
1 கௌதம புத்தரின் காலம் 563 BC முதல் 400 BC வரை என்று பல கருத்து உள்ளது. ஒரு வேளை 509 BC என்பது ஆச்சர்யரின் காலம் என்றால் கிட்டத்தட்ட புத்தர் ஆச்சார்யரின் சம காலத்தவர் ஆகிறார். ஆதி சங்கரர் சனாதன தர்மத்தின் சாரமாக பூர்ணத்துவத்தை விளக்கியுள்ளார்.
பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஷிஸ்யதே
(பரமாத்மாவும் பூர்ணம், ஜீவாத்மாவும் பூர்ணம். அதில் இருந்து இது தோன்றியது. இருந்தும் ரெண்டும் பூர்ணத்துவத்தை கொண்டுள்ளன)
பௌத்தம் சூன்யத்தை விளக்குகிறது. ஒரு வேளை சம காலத்தவராக இருந்தால், அன்றைய தகவல் தொடர்பு அதிகம் இல்லாத காலத்தில் இந்த comparison எப்படி செய்திருக்க முடியும்?
2 மண்டன மிஷ்ரருடன் வாதம் புரிய ஆதி சங்கரரை அனுப்பியது குமாரில பட்டர். அவர் அக்னி தணலில் தன்னை வருத்திக்கொண்டு இருக்கும் போது ஆதி சங்கரர் வரவே, அவர் தனது சீடர் மண்டன மிஷ்ரரிடம் அனுப்பினார். குமாரில பட்டர் கற்றது புத்த பிக்குகளிடம் - புத்தரிடம் இல்லை - நாலந்தா பல்கலைக் கழகத்தில். புத்தரின் சம காலத்தவர் ஆதி சங்கரர் என்றால் எப்படி குமாரில பட்டர் புத்த பிக்குகளிடம் படித்திருக்க முடியும் இல்லையா?
மண்டன மிஸ்ரர் பின்னர் சுரேஸ்வரர் ஆனதும், அவரில் இருந்து sringeri குரு பரம்பரை தொடர்வதும் ஒரு வேளை ஸ்ருங்கேரி மடம் சங்கரரின் காலத்தை 8 ம் நூற்றாண்டு என்று கருதுவதாக இருக்கலாம்.
மௌலி சார் - நான் ஒரு மடத்தை உயர்த்தியும் மற்றொன்றை குறைவாகவும் சொல்லவில்லை. காஞ்சி மகா ஸ்வாமிகள் சொன்னால் ஒரு காரணம் இருக்கும் தான். எனக்கு தெரிந்த அளவில் ஆதி சங்கரர் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பதற்கான probability கூறுகிறேன். தவறு இருந்தால் தெரிவிக்கவும்.
கீதா மாமி - ஜெயஸ்ரீ மேடம் சொன்ன மாதிரி ஆச்சார்யர் தன்னையே திராவிட சிசு நு சொன்னாரா இல்லை முருகனைச் சொன்னாரா இல்லை சம்பந்தரைச் சொன்னாரா என்று சாதாரண மனுஷா நாம எப்படி சொல்ல முடியும்.
நல்லதொரு சிந்தனையை தூண்டும் பதிவு.
ஸ்ரீநி, ஆதிசங்கரர் ஸித்தி அடைந்த காலத்தைக் கூறும் ஸ்லோகம் ஒன்று புண்ய ஸ்லோக மஞ்சரி என உள்ளதில் இருந்து பரமாசாரியார் மேற்கோள் காட்டுகிறார். சிருங்கேரி விஷயம் தனியாக இருக்கட்டும். அதற்குப் பின்னர் வருவோம். நான் அனுப்பின சுட்டியிலும் படியுங்கள். தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகம் கிடைத்தால் அதில் சங்கரர் காலம் என்பதில் கடபயாதி சங்க்யை குறித்து வரும்; அதையும் படியுங்கள். சம்ஸ்கிருதம் எழுதப் படிக்க மட்டுமே தெரியும் எனக்கு.. இப்போ எழுதக் கூட வருமோ வராதோ! அதனால் கடபயாதி சங்க்யையை விளக்குவது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது. இலக்கணம் புரிந்தால் தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்.
ReplyDeleteமெளலி போன்றவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால் அவர்களால் சொல்ல இயலும்.
புத்த மதத்தில் பல புத்தர்கள், பல போதி சத்துவர்கள் உண்டு. ஆதிசங்கரர் புத்தரின் சமகாலம் எனச் சொல்ல முடியாது. அது குறித்தும் குறிப்புக்கள் தேடுகிறேன். அதற்கு முன்னால் குரு ரத்ன மாலையில் அபிநவ சங்கரர் குறித்த குறிப்புக்களைப் போடுவதற்கு முன்னால் ஒரு நண்பரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். வாங்கி விட்டு அபிநவ சங்கரர் குறித்தும் எழுதுகிறேன். ராம்வியின் சந்தேகம் தீரும்.
ReplyDelete//மௌலி சார் - நான் ஒரு மடத்தை உயர்த்தியும் மற்றொன்றை குறைவாகவும் சொல்லவில்லை. காஞ்சி மகா ஸ்வாமிகள் சொன்னால் ஒரு காரணம் இருக்கும் தான். எனக்கு தெரிந்த அளவில் ஆதி சங்கரர் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பதற்கான probability கூறுகிறேன். தவறு இருந்தால் தெரிவிக்கவும். //
ReplyDeleteஸ்ரீநிவாஸ் சார், நீங்க தவறாகச் சொல்லுகிறீர்கள் என்று நானும் சொல்லவில்லை...பொதுவாக இந்த விஷயம் பலருக்கும் அவரவர் சார்ந்த மடத்தை வைத்துப் பார்ப்பதால் நடக்கக் கூடியதைச் சுட்டினேன். நான் முன்னர் இட்ட பின்னூட்டம் உங்களை வருந்தச் செய்திருந்தால் மன்னிக்கவும்.
கீதாம்மா, கடபயாதி சங்க்யையையும் மஹா பெரியவா நன்றாக விளக்கியிருக்கிறார் தெய்வத்தின் குரலில் தெளிவாகவும் இருக்கிறது....
ReplyDeleteஇங்கு வரும் நண்பர்களுக்காகவே அதை எழுதக் கேட்டேன்....மற்றபடி அவர் சொன்னதைவிட நான் என்ன பெரிதாக விளக்கிவிட முடியும்?.
மெளலி, ஸ்ரீநி தப்பாய்ப் புரிந்து கொள்ளமாட்டார். கவலை வேண்டாம். மீண்டும் மீண்டும் இந்தப்பதிவின் மூலம் உங்களை இங்கே பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.
ReplyDeleteஸ்ரீமதி, ஆதிசங்கரரின் க்ருதிகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அவரின் காலம் கி.மு. என்றே அறுதியிடுகின்றனர். ஞானப்பால் அருந்தியது அவரே தான். ஆகையால் தான், அவர் தன்னைத் தானே தான் சொல்லிக்கொள்ள முடியும். ஞானசம்பந்தர் போன்ற அடியார்களின் பெருமை பிற்காலத்தில் தான் எடுபட்டிருக்கின்றது. அநேக காலம் அது காலத்தால் மறைக்கப்பட்டே இருந்துவிட்டது. அருமையான ஆய்வுக்கு அநேக நன்றிகள்.
ReplyDeleteஇந்தப் பதிவுத் தொடர்களின் நோக்கம் சௌந்தர்ய லகரியின் பாடபேதம் என்றால் நான் அதைப் பற்றி விவாத்திக்க வில்லை.
ReplyDeleteஆனால் சங்கரரின் காலம் பற்றியும் த்ரவிட சிசு என்ற சொல்லாக்கம் பற்றியும் இருப்பதால் எனது பார்வையைப் பகிர எண்ணம்.
அதற்கு முன் உங்களுக்கு இரு சுட்டிகளைப் பகிர்கிறேன்.
http://www.hindu-blog.com/2008/02/year-of-birth-of-adi-shankaracharya-509.html
http://www.sringeri.net/history/sri-adi-shankaracharya/biography/abridged-madhaviya-shankara-digvijayam/part-1
சங்கரர் தமிழராகத் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார் என்பதும் வடமொழியைக் கற்று வடமொழியில் பல ஆக்கங்கள் செய்தார் என்பதும் மறுக்க முடியாத சுவற்றில் எழுதப் பட்ட உண்மைகள்.
வடமொழியின் பல ஆக்கங்கள் தமிழில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டவை என்பது நான்கு வேதங்கள் உபநிடதங்கள் அவற்றின் பிற்பட்ட பல புராண பாஷ்யங்கள் ஆகியவற்றை வரிசையாகப் படிக்கும் போது புரிபட்டு விடும்.இவ்வாறு பெயர்க்கப்பட்ட பின்னர் பல மூலத் தமிழ் நூல்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டது ஒரு வரலாற்று அரசியல் சதி.
நான்கு வேதங்களில் பிரம்மம் பற்றிய அறிவு அலசப்படுவதை விட பின்வந்த உபநிடதங்கள் புராணங்கள் பாஷ்யங்கள் ஆகியவிற்றில் அது அலசப்பட்டதுதான் அதிகம்.
சம்த்கிருதத்தின் மூலப் பொருளே சேர்த்து அமைக்கப்பட்டது என்பதுதான்.நான்காம் நூற்றாண்டு தொடங்கி தென்னாட்டின் தமிழ் மொழியின் தத்துவப் புதையல்கள் மொழிமாற்றம் செய்யப்பட்ட அவை வடமொழியின் ஆக்கங்களாக மறுபிறப்புப் பெற்ற அதேவேளையில் மூலத் தமிழ் மொழியின் நூல்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இன்றைக்குத் தமிழில் அறியப்பட்ட முதல் நூலான அகத்தியமும் பரிபாடலும் வியப்புக்குரியதாக மொழிக் கட்டமைப்பு,இலக்கண விதிகள் பற்றிப் பேசுகின்றன.
ஏற்கனவே நன்கு செறிந்த ஒரு மொழியில்தான் இலக்கண,மொழி விதிகள் பற்றிய நூல்கள் வர முடியுமே தவிர ஒரு மொழி திடீரென்று இலக்கண விதிகள் வகுத்துக் கொண்டு பின்னர் மொழியாக வளர முடியாத்.
எனவே அகத்தியத்திற்கு முன்னான தமிழ் நூல்களின் கதி இயற்கை அழிவாலும் செயற்கையாக திட்டமிட்ட அழிப்பாலும் தான் மறைந்திருக்க முடியும்.
சங்கரரின் காலத்தை கிமு வுக்குக் கொண்டு செல்வதில் இந்த வரலாற்று மோசடியை மறைப்பதற்கான காரணம் இருக்கிறது.அவரது காலத்தை கிபி 7 ல் வைத்து ஆராயும் போது தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டதற்கான மோசடிக்கான வலுவான நிறுவல் காரணங்கள் புலப்பட்டு விடும்.
அதை வடமொழிக் காதலர்கள் எப்பொழுதும் விரும்புவதில்லை.
காஞ்சிபுரத்தின் மட அதிபர் இக்காரணம் பற்றியே சங்கரரை கிமு வுக்குக் கொண்டு செல்கிறார்..
அறிவன், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteமௌலி சார்
ReplyDeleteநான் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை, வருந்த வேண்டாம் :).