எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 16, 2011

ஆதார் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு செய்துவிட்டீர்களா?

ஆதார் அடையாள அட்டைக்கான பதிவுகள் செய்து விட்டீர்களா??? இல்லை எனில் உடனடியாகச் செய்துவிடவும். முக்கியமான அடையாளங்களாக ரேஷன் கார்டு, வாக்குப்பதிவு அடையாள அட்டை தேவை.

உங்கள் சரியான பிறந்த தேதி, தாய், தந்தையர் பெயர், பெண் எனில் கூடுதலாகக் கணவர் பெயர், குழந்தைகள் இருந்தால் அவர்களுக்குப் பெற்றோர் பெயர், அல்லது பொறுப்பாளர் பெயர், வங்கிக்கணக்கு விபரம், உங்களுக்கு இமெயில் கணக்கு இருந்தால் அதன் ஐடி, போன்றவற்றை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

அங்கே உங்கள் கண்விழிகளின் அடையாளங்கள் இரு கைவிரல்களின் அடையாளங்கள், உங்கள் கட்டை விரல்களின் அடையாளங்கள் எடுக்கப்படும். பின்னர் உங்கள் சரியான நிரந்தர விலாசம் சரிபார்த்துச் சேர்க்கப்பட்டு அதற்கு ஒரு அடையாளச் சீட்டுக் கொடுக்கப் படும். அதன் பின்னர் தொண்ணூறு நாட்களில் உங்கள் அடையாள அட்டை வந்து சேரும். இந்தியக் குடிமகன்/குடிமகள் அனைவரும் உடனடியாகப் பதிந்து கொண்டு உங்கள் தேசீய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஏதேனும் ஒன்றில் இதற்கான பதிவுகளைச் செய்கிறார்கள். அம்பத்தூருக்கு பாங்க் ஆஃப் பரோடா. இது போல் உங்கள் பகுதிக்கு எந்த வங்கி என்பதை உங்கள் பகுதியின் செய்திகளை அளிக்கும் தினசரிக்குறிப்புகளில் இருந்து அறியவும். இதற்குப் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படாததால் பலரும் அறியவில்லை. அரசு இதற்கு விளம்பரம் இயன்றால் முழுப்பக்க விளம்பரம் செய்ய வேண்டும்.


நாங்கள் பதிந்து விட்டோம்! அப்போ நீங்கள்???ஆதார் தளம்

13 comments:

 1. தகவலுக்கு நன்றி. அண்ணா நகரில்வசிப்பவர்களுக்கு, இரண்டாம் நிழற் சாலையில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வில் பதிவு செய்வதாக அறிகிறேன். நாங்களும் பதிவு செய்ய இருக்கிறோம்

  ReplyDelete
 2. ஆதார் அடையாள அட்டை என்றால் என்ன எதற்கு என்றும் சொல்லியிருக்கலாமே?

  ReplyDelete
 3. மிகவும் பயனுள்ள தகவலை கொடுத்துள்ளீர்கள் மாமி. நன்றி.

  ReplyDelete
 4. இன்று தான் அதற்காகப் போக வேண்டுமென்று எண்ணியுள்ளேன்.
  முன் கூட்டிய விவரங்களுடன் கூடிய தகவலுக்கு மிக்க னன்றி, கீதாம்மா!

  ReplyDelete
 5. நன்றி நடனசபாபதி அவர்களே, முதல்வரவுக்கும் நன்றி.

  ReplyDelete
 6. அப்பாதுரை! தலைப்பிலேயே உங்கள் கேள்விக்கான விடை உள்ளதே! :)))) இந்தியக் குடிமகன்/குடிமகள் என்பதற்கான ஐடி கார்ட். :)))))

  ReplyDelete
 7. விசாரிக்கணும் ஜெயஸ்ரீ, எங்க வீட்டிலும் இருக்காங்களே! நாங்க பதியப் போனபோது அந்தப் பெண்ணிற்குச் சரியாய்ச் சொல்லத் தெரியவில்லை. குறிப்பிட்ட தளத்தில் போய்ப் பார்க்கணும்; இல்லைனா, யாரையானும் கேட்கணும். கேட்டுச் சொல்கிறேன்.

  ReplyDelete
 8. http://uidcards.org/aadhaar-for-nri/

  ReplyDelete
 9. Aadhaar NRI

  A 16-digit Aadhaar Number/ UID would be issued to every individual above 15 years of age, including NRIs, and foreigners residing in India. There are millions of Indians residing abroad, for whom the physical presence in India for providing fingerprints etc may not be feasible.

  http://uidcards.org/aadhaar-for-nri/

  இந்த தளத்தில் தகவல்கள் முழுமையாக இல்லை..

  ReplyDelete
 10. பப்லூ, நீங்க சொல்லும் தளத்தில் விரிவான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இங்கே விசாரித்துக்கொண்டிருக்கிறோம்.

  ReplyDelete